Monday, 16 April 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம் :🍀  21
**********************
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

🍀#ஸாரம்:🍀
***************
மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்ப திரும்ப மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும். இந்த நிலையை(ஸம்ஸார ஸகர்த்தை) கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம். ஹே முரனை கொன்றவனே! தயைகூர்ந்து (என்னை இந்த ஸம்சாரஸாகரத்திலிருந்து) காப்பாற்று.

🍀#விளக்கம்:🍀
******************
உலக வாழ்க்கையின் நியதியை பற்றி விவரித்திருக்கிறார். 
ஜனன மரணம் என்பது ஒரு சக்கிரத்தின் இடைவிடாத சுழர்ச்சிபோல். திரும்ப திரும்ப வருகிறது.  ஜனனத்திர்க்கு முன் 10 மாதம் மாதாவின் கர்ப்ப பையில் கிணட்ந்துழலும் கஷ்டம் நாம் அறிந்ததே.  ஜனித்தால் மரிக்க வேண்டும்.

ஜனனம் மாதாவின் உதரத்திலிருந்தே என்ற நியதி மாறாது.  இப்படி ஜனனத்திர்க்கும் மரணத்திர்க்கும் இடையே உள்ள வாழ்க்கைதான் ஸம்ஸார ஸாகரம் எனப்படும். இதிலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தன் நிலை அடைய வேண்டுமானால், இறைவனுடியய க்ருபை அவசியம். 

ஆகையால் நித்திய ஆனந்தநிலையில் திகழும் ஸ்ரீ கிருஷ்ணனை பஜி என்று கருத்து.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்...........🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன் 🍀

Wednesday, 4 April 2018

பஜகோவிந்தம்


🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀

🍀வாழ்க்கை தத்துவம் 🍀

🍀காவியம் :🍀  20
*******************
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

🍀#ஸாரம்:🍀
*************
யாதொருவன் கொஞ்சமாவது பகவத்கீதயை ப்டித்து, ஒருதுளியாவது கங்கா ஜலத்தை பருகி, சிறிது நேரம் முராரியை (முரன் என்ற அஸுரனை கொன்றவன் – ஸ்ரீ கிருஷ்னன்) பஜித்துவருகிறானோ (அவனுக்கு) யமனுடன் வாதடி ஜ்யிக்கமுடுய்ம்,.


🍀விளக்கம்:🍀
***************
யேன் பகவத்கீதா படன்ம் என்|று சொல்கிறார்?  கீதை ஐந்தாவது வேதம் என கூறப்ப்டிகிறது.  அதில் வேதத்தில் சொன்ன எல்லா தர்மங்களும் அட்ங்கியிருக்கிறது.  அதை படித்தால் வேதத்தை படித்ததுபோல் ஆகும். 

அதே போல் ஏன் கங்காஜலபானம் ச்லாக்யம் என கூறுகிறார்?  ந்திகளில் முக்கியமானது கங்கை.  கங்காஜலம் முக்தியளிக்கும் என நமக்கு தெரியும்.  ஆகையால் கங்காஜல் பான்ம் உசிதம். முராரி என்ற அஸுரனை கொன்றவன் கிருஷ்ணன். அதுமட்டுமல்லாமல், எப்பொழுதும் நித்திய ஸுகத்தில் இருப்பவன் கோவிந்தன் (கிருஷ்ணன்).  ஆகையால் நித்திய ஸுகத்திர்க்கு அவனை பஜிக்கவேண்டும். 

இதிலிருந்து, நித்தியஸுகத்திர்க்கு என்ன வழி என விளங்குகிறது.  புண்ய ந்தி ஸ்னானம், பகவத்கீதா படனம், ஈறைவன் வழிபாடு இவை நிஷ்டையுடன் சய்துவந்தால் அவனுக்கு யெமனுடன்கூட சர்ச்சை சைய்து ஜெயிக்கமுடியும்.  அதாவது மரண பயம் சிறிதும் இராது என பொருள்.

🍀பஜகோவிந்தம் தொடரும் ........🍀

🍀தொகுப்பு  : 🍀 திருமதி லதா வெங்கடேஷ்வரன் .🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம் 🍀 : 19 
**********************
யோகரதோ வா போகரதோ வா
ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி ந்ந்தத்யேவ

🍀#ஸாரம்:🍀
***************
(ஏதொருவன்) தியானத்திலிருந்தாலும், இந்திரியானுபவங்களில் மூழ்கிய்ருந்தாலும், மற்ற்வருடன் கூடியிருந்தாலும் அல்லது தனந்தனியே (ஏகாக்ரமாய்) இருந்தாலும் சரி (அவன்) பிரஹ்ம் நிலையில் நிலைத்திருந்தால் ஸுகத்தை, ஸுகத்தை, ஸுகத்தையே அனுபவித்திருப்பான்.

#🍀விளக்கம்:🍀
******************
ஏது ஸுகம் என சென்ற ஸ்லோகத்தில் சொன்னார்.  இந்த் ஸ்லோகத்தில் அதை விரிவு படுத்துகிறார்.  இரண்டின் கருக்தும் ஒன்றுதான்.  அதாவது, ஒரு யோகி எந்த நிலையில் இருந்தாலும் (உலகவாழ்க்கையில்) ப்ரஹ்ம நிஷையில் இருந்தால் அவனுக்கு ஸுகமே கிடைக்கும். 

பிரஹ்ம நிஷ்டைக்கு போகுமுன் என்ன செய்ய வேண்டும்? எல்லா பொருளயும் அவைகளிலுள்ள எல்ல ஸுகங்களையும் துறந்து, கிடைத்த இடத்தில் வஸம் சைய்து, (கிடைத்ததை புஜித்து), ஸம்த்ருப்திய்டனும் ஸமபாவனையுட்னும் ப்ரஹ்மநிலையில் நிலைத்திருந்தால் கிடைக்கும் அனுபவமே ஸுகம் என பொருள். ஸுகம் வெளியில்ல்ல, நம் உள்ளில் உள்ளது என தெரிகிறது.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்................🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்.🍀

Tuesday, 3 April 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம் :🍀 - 18
ஸுர்மந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ பொகத்யாக:
கஸ்ய ஸுகம் ந்கரோதி விராக

🍀#ஸாரம்:🍀
***************
ஆலயங்களிலோ, மரத்தின் சுபட்டிலோ வெறும் நிலத்தில் மரவுரி கட்டி உற்ங்குபவனும் எல்லா உடமைகளையும் தியாகம் சைய்து   ஸமபாவனையுடன் கூடின ஒருவனுக்கு ஸுகம் எப்படி வராமலிருக்கும்?

🍀#விளக்கம்:🍀
******************
நமக்கு ஸுகம் உலகில் கிடைக்கும் வஸ்த்துக்களிலிருந்து வருகிறது என நினைக்கிறோம்.  ஆனால் உண்மையான் ஸுகம் எங்கிருக்கிறது?  இடுப்பில் மரவுரி கட்டி, தன்னுடைய எல்லா உடமைகளிலிருந்தும் கிடைக்கும் ஸுகத்தையும் அந்த உடமைகளையும் துற்ந்து, ஆலயங்களிலோ, மரச்சுவட்டிலோ வெறும் தறையில் ம்ரவுரிகெட்டி படுத்துற்ங்கும் வைராக்கியம் கொண்ட (ஸமபாவனனையயுட்ன்) ஒருவனுக்கு கிடைக்கும் ஸுகத்தை யாரால் தடய முடியும்? 

அதாவது உலகிலிலுள்ள எல்லா வஸுதுக்களிலும் உள்ள அசாபாசத்தை துறந்து எல்லா உடமைகளையும் துறந்து, சுக துக்கங்களில ஸமபாவனைகொண்டு திறந்த வெளியில் மரசசுவட்டில் வெறும் தறயில் வஸ்தரஹீனனாய் மரவுரி உடுத்துற்ங்கும் யோகிக்கு ஸுகம் இல்லை என்று யார் சொன்னது?

அவருக்கு உள்ள ஸுகத்தை யாரால் தடுக்கமுடியும்? அதாவது உடமையற்று நிச்சிந்தயாய், கவலையில்லாமல் இருக்கும் ஸுகமே ஸுகம் என்பது பொருள்.

🍀பஜகோவிந்தம் தொடரும்...........🍀

🍀#தொகுப்பு  :  #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்.🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத்ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம் :🍀  17
குருதே கங்கா ஸாகர கமனம்
வ்ருத பரிபாலனம் அதவா தானம்
ஞானவிஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மசதேன

🍀#ஸாரம்:🍀
***************
(ஓருவன்) கங்கா ந்தியில் ஸ்னனம் செயாலாம், வ்ருதங்கள் இருக்கலாம் நோம்புகள் நோக்கலாம் அல்லது நிறைய தான தர்மங்கள் பண்ணலாம், ஆனாலும் ஞான்ம் (ஆத்மக்னானம்) வரவில்லையேல், நூறு வருடங்கள் சென்றாலும் (அவனுக்கு) முக்தி (ஜீவன்முக்தி) கிடைக்காது.

🍀விளக்கம்:🍀
****************
ஆத்மஞானம் பெறவேண்டியது எவ்வள்வு முக்கியம் என்றூ த்ரிந்து கொள்ள வேண்டும். முதலில ஆசாபாசத்தை விட்வேண்டும் என்றூ பார்த்தோம்.  பிறகு ஆத்மஞானம் பெறவேண்டும்.  ஒருவன் எவ்வளவுதான் கங்காஸ்னானம் சைய்தாலும், வ்ருதங்கள் இருந்தாலும், நோம்புகள் நோற்றாலும், நிறைய தாந்தர்மங்கள் சைய்தாலும் ஆத்மஞனம் கிடைக்கவில்லையானால் நூறு வருடங்களானாலும் (அதாவது நூறு என்பது ஒரு கணக்கிர்க்கு சொன்னது.  இதல் பொருள் எவ்வள்வு வருடம் அல்லது காலம் என எடுத்துக் கொள்ள வேணடும்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்.................🍀

🍀#தொகுப்பு: #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்🍀

Sunday, 1 April 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம்🍀:    16
******************
அக்ரே வஹ்ன்னி: ப்ருஷ்டே பானூ
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ:
ததபின முஞ்சதி ஆசாபாச:

🍀#ஸாரம்🍀:
****************
முன்னால் அக்னியும் (தீயும்), பின்னால் ஸூர்யனும், இரவுனேரம் தன் கால்முட்டுகள் தாடியை தொடும்விதம் மரச்சுவட்டில் சுருங்கி உட்கார்ந்து, தன் இருகர்ங்க்ளையும் ஏந்தி பிக்ஷை வாங்கி சாப்பிடும் நிலையிலும் (அவன்) ஆசாபாசங்களை விடுவதில்லை.

🍀#விளக்கம்🍀:
****************
தள்ளாடி தத்தளிக்கும் முதியவரை பற்றி சொன்னார்.  ஆனால் முதியவர் மட்டுமல்லாமல், எவரும் தன் அனாத நிலையிலும் வைய்யிலில் அலைந்து, இரவு குளிரால் தாக்குண்டு தன் உடம்பை மூட கம்பிளி இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும், மரச்சுவட்டில் உடலை குறுக்கி உட்கார்ந்து இருகைகளையும் ஏந்தி பிச்சை எடுக்கும் ஒரு மனிதனும் தன ஆசாபாசங்களை விடுவதில்லை.  அதாவது மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தங்கள் உலக ஆசாபாசங்களை விட முயலுவதில்லை என பொருள். ஆசை யாரை விட்டது?

🍀#பஜகோவிந்தம் #தொடரும்.................🍀

🍀#தொகுப்பு  :  #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀  - 15
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆசாபிண்டம்

🍀#ஸாரம்🍀:
***************
உடல் நலிந்து (சோர்வடைந்து), வாயில் பல்கள் வீழ்ந்துபோய், தலைமுடி நரைத்துப்போய், கையில் ஊன்றுகோலுடன் இருக்கும் விருத்தன் (கிழவன்) அந்த நிலையிலும் ஆசைகள் எனும் மூட்டையை விடுவதில்லை.

🍀#விளக்கம்🍀:
******************
ஆசை யாரை விட்டது என கேட்ப்பதுண்டு.  ஆசை யாரையும் பிடிகூடுவதில்லை.  நாம் தான் அதை பிடிகூடுகிறோம் என்று மாத்திரமல்ல, உடல் தள்ளாடி, வாயில் பல்களெல்லாம் உதிர்ந்து, தலைமுடி முழுவதும் நரைத்து, நடப்பதர்க்கு ஊன்றுகோல் வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு கிழவன்கூட தன ஆசையெனும் மூட்டையை விடுவதில்லை.

 இதிலிருந்து நாம் உலக ஸுகத்தில் எவ்வளவு ஆசை வைக்கிறோம் என்று தெரிகிறது.  நாம் தள்ளாத நிலையிலும ஆசையை விடுவதில்லை..  எவ்வள்வு மூடத்தனம்! இது நம் அறிவீனம் என்றே சொல்லவேண்டும்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்🍀...............

#தொகுப்பு :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀.

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀 

🍀#காவியம்🍀  :  14
******************
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பஸ்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

🍀#ஸாரம்🍀:
****************
தாடி மீசை வைத்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலயில் ஜெடைகள் நிறைந்து, காஷாய வஸ்த்திரத்தை தரித்து இப்படி பல வேஷங்கள் போடுபவன் முடனேயாவான்.  அவன் பார்வை இருந்தும் குருடனாவான்..  ஏனென்றால் இவையெல்லாம் அவன் வயற்றுப்பாட்டிர்க்கே.

🍀#விளக்கம்🍀:
*******************
ஸன்யாஸம் என்ற ஓர் உன்ன நிலையை கள்ங்கப்படுத்தும் வகையில் தாடி மீசை வைய்த்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலையில் ஜெடையை வளர்த்தி, காஷாய வஸ்த்திரம் தரித்து தம்மை ஸன்யாஸி என்று கூறிக்கொள்பவர் மூடர்கள ஆவார்கள். அவர்கள் வயிற்றுப் பாட்டிர்க்காக போடப்பட்டவை இந்ததவேஷம்.

இவர்களை கண்ணிருந்தும் கானாதவர்கள் என் கூரும் மருத்து சிந்திக்க திராணி இருந்தும் ஞானமில்லதவர் என பொருள். வெறும் வேஷம் போட்டதால் ஒருவன் ஸன்யாஸி ஆகிவிட முடியாது.  ஸன்யாஸி வேஷம் போடவேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை இதுமூலம் தெளிவுபடுத்துகிறார்.

ஸன்யஸம் என்பது மனத்தளவில்.  ஆசாபாசத்தை துறந்து, உலக சிந்தனைய்ற்று மௌன்மாக தியானநிலையில் பிரஹ்மமானுபூதியில் எப்பொழுதும் நிலைத்திருப்பதுதான் ஒரு ஸன்யாஸியின் லக்ஷ்ணம்.  அல்லது வேஷம் போடுவதல்ல என பொருள்.

ஸன்யாஸிக்கே இயப்படியானால் நம் நிலை என்ன?  உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் அதில் வேஷதாரிகள் என சொல்லமல் சொல்வதுபோல் இருக்கிறது.

🍀#பஜகோவிந்தம்🍀#தொடரும்..................

🍀#தொகுப்பு : #திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀

பஜகோவிந்தம் .

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம் 🍀 : 13
காதேகாந்தா தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்க்திரேகா
பவதி பவார்ணவ தரணே நௌகா

🍀#ஸாரம்🍀:
***************
எத்ர்க்காக மனைவி (கணவன்) தனம் இத்யாதிகளில் விசானம் கொள்கிறாய்? ஹே மதிஹீனனே! உன்னை பரிபாலிப்பவன் உனக்கு இல்லையா?  இந்த மூன்று உலகத்திலும் ஸ்ஜ்ஜனங்களுடைய குட்டுறவு மட்டும்தான் உனக்கு இந்த பிறப்பிரப்புடன் கூடின ஸம்ஸார ஸாகரத்தை கடக்க தோணியாக அமியய முடியும்.

#🍀விளக்கம்🍀:
******************
ஸத்ஸங்கத்தின் மஹிமையை இங்கு விளக்குகிறார்.  உலகில் நாம் உழல்வது, மனைவி, மக்கள், பந்துக்கள், தன ஸம்பாத்தியம், ஸுகலோலுபம் போன்ற ஆசாபாச பந்தத்தில் கிடந்து உழலுகிறோம். இந்த பந்தங்கள் சரிவர அமையவில்லையானால், நாம் கலங்குகிறோம். நான், எனது என்ற அஹ்ம்காரம் மமாகாரத்தில் உழல்வதால் ந்ம்மை காக்கும் ஒருவன் (கடவுள்) இருக்கிறான் என்ற பாவம் ந்மக்கு வருவதே இல்லை.

எல்லாம் நம்மால் இயங்குகிறது என்ற விசாரம் நமக்கு மேல் ஒருவன் நம்மை நடட்த்துகிறான் என்ற விசாரமே இல்லாமல் சைய்துவிடுகிறது.  மூன்று உலகம் எனப்படுவது, ஜாகர, ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தை.  நாம் சில சமய்ம் விழித்திருக்கிறோம், சில சமயம் ஸ்வப்ன உலகில் இருக்கிறோம், இன்னும் சில சமயம் உறக்கத்தில் போய்விடுகிறோம்.  இப்படி இந்த மூன்றும் மூன்று உலக வாஷ்க்கை என கூறப்படுகிறது. 

இந்த மூன்று நிலையிலியருந்தும் கடைத்தேற (அதாவது பிற்ப்பு இரப்பு என்ற நிலை இல்லாமலாக) ந்மக்கு உதவி புரிவது ஸ்த்ஸ்ஸ்ங்கம் ஒன்றுமட்டும்தான் என அறிய வேண்டும்.  அதாவது ஞானிகளின் கூட்டுறவு.  இது முன்பே சொன்னதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. உலகமே மாயம் என்று கூறும்போது, ஸத்ஸ்ஸங்கம் மாயை அல்லவா என்ற வினா எழலாம்.

இருட்டு அகலவேண்டுமானால், ஒளியை கொணரவேண்டும்.  ஒளி அநித்தியபாகுமா? ஆகாது.  ஏன்? ஓளியில்லயேல் இருட்டு.  அப்பொழுது ஒளி ந்ரந்தரமாக இருந்தால் இருட்டு என்பது வராதே.  ஆனாலும் அநித்திய அவஸ்தை மாற நித்திய அவஸ்தையை நாட வேண்டும். இருட்டு அஞ்ஞானம். 

ஒளி ஞானம்.  ஞானம் வந்தால் அஞ்ஞானம் அகலும் என்பது ந்மக்கு புரிந்ததே. ஒளியில் எல்லாம் விளங்கும்.  அதுபோல் ஸ்த்துக்களுடைய கூட்டுறவு ந்மக்கு ஞானத்தை தரும். இதுதான் இதன் தாத்பர்யம்.

#பஜகோவிந்தம் #தொடரும்...................

🍀#தொகுப்பு  :  #திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம். 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀

🍀#காவியம்🍀  :  12

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு:
ததபின முஞ்சதி ஆசாவாயு:

🍀#ஸாரம்🍀:
***************
இரவும் பகலும், உதயாஸ்தமன்ங்களும், காற்றுக்காலமும் வஸ்நத காலமும் மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்கை ந்லிந்துகொண்டு வருகிறது, ஆனாலும் யாரும் ஆசையை விடுவதில்லை.

🍀#விளக்கம்🍀:
****************
நாம் உலகில் வாழ்ந்து வந்தாலும் உலக்நீதிக்குட்ப்பட்டு நடப்பதில்லை என்பதை தெளிவாக தந்துள்ளார்.  பார்ப்போம்.  இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம், வ்ஸந்தகாலம் முதலியவை மாறுகிறது.  iஇப்படி காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் ந்மது வாழ்க்கையும் மாறி மாறீ வருகிறது (அதாவது பால்யம், கௌமாரம், யௌவ்வனம், வார்த்தக்யம்) இது உலம நியதி (Natural Law).

சுருங்க சொன்னால் உலகிலுள்ள எல்லாமே மாறக்குடியவை.  இது நம் கையில் இல்லை, அது உலக நியதி.  அப்படி உலகமே மாறினாலும், அஹோ! நம் ஆசை மட்டும் ஏன் மாறுவதில்லை?  எப்பொழுதும் நாம ஆசாபாசத்தில் உழ்ன்றவண்ணம் இருக்கிறோம்.  இது மதியீனமல்லவா என சொல்லாமல் சொல்கிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..........

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...