Sunday, 1 April 2018

பஜகோவிந்தம் .

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம் 🍀 : 13
காதேகாந்தா தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்க்திரேகா
பவதி பவார்ணவ தரணே நௌகா

🍀#ஸாரம்🍀:
***************
எத்ர்க்காக மனைவி (கணவன்) தனம் இத்யாதிகளில் விசானம் கொள்கிறாய்? ஹே மதிஹீனனே! உன்னை பரிபாலிப்பவன் உனக்கு இல்லையா?  இந்த மூன்று உலகத்திலும் ஸ்ஜ்ஜனங்களுடைய குட்டுறவு மட்டும்தான் உனக்கு இந்த பிறப்பிரப்புடன் கூடின ஸம்ஸார ஸாகரத்தை கடக்க தோணியாக அமியய முடியும்.

#🍀விளக்கம்🍀:
******************
ஸத்ஸங்கத்தின் மஹிமையை இங்கு விளக்குகிறார்.  உலகில் நாம் உழல்வது, மனைவி, மக்கள், பந்துக்கள், தன ஸம்பாத்தியம், ஸுகலோலுபம் போன்ற ஆசாபாச பந்தத்தில் கிடந்து உழலுகிறோம். இந்த பந்தங்கள் சரிவர அமையவில்லையானால், நாம் கலங்குகிறோம். நான், எனது என்ற அஹ்ம்காரம் மமாகாரத்தில் உழல்வதால் ந்ம்மை காக்கும் ஒருவன் (கடவுள்) இருக்கிறான் என்ற பாவம் ந்மக்கு வருவதே இல்லை.

எல்லாம் நம்மால் இயங்குகிறது என்ற விசாரம் நமக்கு மேல் ஒருவன் நம்மை நடட்த்துகிறான் என்ற விசாரமே இல்லாமல் சைய்துவிடுகிறது.  மூன்று உலகம் எனப்படுவது, ஜாகர, ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தை.  நாம் சில சமய்ம் விழித்திருக்கிறோம், சில சமயம் ஸ்வப்ன உலகில் இருக்கிறோம், இன்னும் சில சமயம் உறக்கத்தில் போய்விடுகிறோம்.  இப்படி இந்த மூன்றும் மூன்று உலக வாஷ்க்கை என கூறப்படுகிறது. 

இந்த மூன்று நிலையிலியருந்தும் கடைத்தேற (அதாவது பிற்ப்பு இரப்பு என்ற நிலை இல்லாமலாக) ந்மக்கு உதவி புரிவது ஸ்த்ஸ்ஸ்ங்கம் ஒன்றுமட்டும்தான் என அறிய வேண்டும்.  அதாவது ஞானிகளின் கூட்டுறவு.  இது முன்பே சொன்னதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. உலகமே மாயம் என்று கூறும்போது, ஸத்ஸ்ஸங்கம் மாயை அல்லவா என்ற வினா எழலாம்.

இருட்டு அகலவேண்டுமானால், ஒளியை கொணரவேண்டும்.  ஒளி அநித்தியபாகுமா? ஆகாது.  ஏன்? ஓளியில்லயேல் இருட்டு.  அப்பொழுது ஒளி ந்ரந்தரமாக இருந்தால் இருட்டு என்பது வராதே.  ஆனாலும் அநித்திய அவஸ்தை மாற நித்திய அவஸ்தையை நாட வேண்டும். இருட்டு அஞ்ஞானம். 

ஒளி ஞானம்.  ஞானம் வந்தால் அஞ்ஞானம் அகலும் என்பது ந்மக்கு புரிந்ததே. ஒளியில் எல்லாம் விளங்கும்.  அதுபோல் ஸ்த்துக்களுடைய கூட்டுறவு ந்மக்கு ஞானத்தை தரும். இதுதான் இதன் தாத்பர்யம்.

#பஜகோவிந்தம் #தொடரும்...................

🍀#தொகுப்பு  :  #திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...