Sunday, 1 April 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம். 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀

🍀#காவியம்🍀  :  12

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு:
ததபின முஞ்சதி ஆசாவாயு:

🍀#ஸாரம்🍀:
***************
இரவும் பகலும், உதயாஸ்தமன்ங்களும், காற்றுக்காலமும் வஸ்நத காலமும் மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்கை ந்லிந்துகொண்டு வருகிறது, ஆனாலும் யாரும் ஆசையை விடுவதில்லை.

🍀#விளக்கம்🍀:
****************
நாம் உலகில் வாழ்ந்து வந்தாலும் உலக்நீதிக்குட்ப்பட்டு நடப்பதில்லை என்பதை தெளிவாக தந்துள்ளார்.  பார்ப்போம்.  இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம், வ்ஸந்தகாலம் முதலியவை மாறுகிறது.  iஇப்படி காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் ந்மது வாழ்க்கையும் மாறி மாறீ வருகிறது (அதாவது பால்யம், கௌமாரம், யௌவ்வனம், வார்த்தக்யம்) இது உலம நியதி (Natural Law).

சுருங்க சொன்னால் உலகிலுள்ள எல்லாமே மாறக்குடியவை.  இது நம் கையில் இல்லை, அது உலக நியதி.  அப்படி உலகமே மாறினாலும், அஹோ! நம் ஆசை மட்டும் ஏன் மாறுவதில்லை?  எப்பொழுதும் நாம ஆசாபாசத்தில் உழ்ன்றவண்ணம் இருக்கிறோம்.  இது மதியீனமல்லவா என சொல்லாமல் சொல்கிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..........

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...