Wednesday, 4 April 2018

பஜகோவிந்தம்


🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀

🍀வாழ்க்கை தத்துவம் 🍀

🍀காவியம் :🍀  20
*******************
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

🍀#ஸாரம்:🍀
*************
யாதொருவன் கொஞ்சமாவது பகவத்கீதயை ப்டித்து, ஒருதுளியாவது கங்கா ஜலத்தை பருகி, சிறிது நேரம் முராரியை (முரன் என்ற அஸுரனை கொன்றவன் – ஸ்ரீ கிருஷ்னன்) பஜித்துவருகிறானோ (அவனுக்கு) யமனுடன் வாதடி ஜ்யிக்கமுடுய்ம்,.


🍀விளக்கம்:🍀
***************
யேன் பகவத்கீதா படன்ம் என்|று சொல்கிறார்?  கீதை ஐந்தாவது வேதம் என கூறப்ப்டிகிறது.  அதில் வேதத்தில் சொன்ன எல்லா தர்மங்களும் அட்ங்கியிருக்கிறது.  அதை படித்தால் வேதத்தை படித்ததுபோல் ஆகும். 

அதே போல் ஏன் கங்காஜலபானம் ச்லாக்யம் என கூறுகிறார்?  ந்திகளில் முக்கியமானது கங்கை.  கங்காஜலம் முக்தியளிக்கும் என நமக்கு தெரியும்.  ஆகையால் கங்காஜல் பான்ம் உசிதம். முராரி என்ற அஸுரனை கொன்றவன் கிருஷ்ணன். அதுமட்டுமல்லாமல், எப்பொழுதும் நித்திய ஸுகத்தில் இருப்பவன் கோவிந்தன் (கிருஷ்ணன்).  ஆகையால் நித்திய ஸுகத்திர்க்கு அவனை பஜிக்கவேண்டும். 

இதிலிருந்து, நித்தியஸுகத்திர்க்கு என்ன வழி என விளங்குகிறது.  புண்ய ந்தி ஸ்னானம், பகவத்கீதா படனம், ஈறைவன் வழிபாடு இவை நிஷ்டையுடன் சய்துவந்தால் அவனுக்கு யெமனுடன்கூட சர்ச்சை சைய்து ஜெயிக்கமுடியும்.  அதாவது மரண பயம் சிறிதும் இராது என பொருள்.

🍀பஜகோவிந்தம் தொடரும் ........🍀

🍀தொகுப்பு  : 🍀 திருமதி லதா வெங்கடேஷ்வரன் .🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...