Sunday, 1 April 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀  - 15
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆசாபிண்டம்

🍀#ஸாரம்🍀:
***************
உடல் நலிந்து (சோர்வடைந்து), வாயில் பல்கள் வீழ்ந்துபோய், தலைமுடி நரைத்துப்போய், கையில் ஊன்றுகோலுடன் இருக்கும் விருத்தன் (கிழவன்) அந்த நிலையிலும் ஆசைகள் எனும் மூட்டையை விடுவதில்லை.

🍀#விளக்கம்🍀:
******************
ஆசை யாரை விட்டது என கேட்ப்பதுண்டு.  ஆசை யாரையும் பிடிகூடுவதில்லை.  நாம் தான் அதை பிடிகூடுகிறோம் என்று மாத்திரமல்ல, உடல் தள்ளாடி, வாயில் பல்களெல்லாம் உதிர்ந்து, தலைமுடி முழுவதும் நரைத்து, நடப்பதர்க்கு ஊன்றுகோல் வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு கிழவன்கூட தன ஆசையெனும் மூட்டையை விடுவதில்லை.

 இதிலிருந்து நாம் உலக ஸுகத்தில் எவ்வளவு ஆசை வைக்கிறோம் என்று தெரிகிறது.  நாம் தள்ளாத நிலையிலும ஆசையை விடுவதில்லை..  எவ்வள்வு மூடத்தனம்! இது நம் அறிவீனம் என்றே சொல்லவேண்டும்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்🍀...............

#தொகுப்பு :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...