Friday, 17 August 2018

நாராயணன் நாமம்

நாராயணன் நாமம் ஒரு முறை சொன்னாலே
நாடுமே நலம் யாவுமே( ஸ்ரீ மன் நாராயணா)

வாரணம் கூவிட ஓடி வந்தான்
ஆரணங்கின் மானம் காத்து நின்றான் (ஸ்ரீ மன்)

பார்த்தனுக்காகவே தேர் செலுத்தி தர்ம போரினில் கீதையும் பரிந்துரைத்தான் ( ஸ்ரீ மன் )

சிறுவன் துருவன் துதித்த நாமம்
பிரகலாதன் அனவரதமும் பஜீத்த நாமம்
அரிய அஷ்டாச்சர நாமம்- குருவாயூர் அப்பனால் கலியினில் காட்சி தந்திடும் ( ஸ்ரீ மன் )

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...