Tuesday, 20 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀
--
🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀

🍀#காவியம்🍀  :  11
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

🍀#ஸாரம்🍀:
***************
தனத்திலோ (ஸுகம்), குழந்தை பருவத்திலோ, யௌவ்வன் பருவத்திலோ அபிமானம் கொள்ளாதே, ஏனென்றால் காலம் இப்பருவங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது.
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
மாயையால் உண்டான இந்த உலகவாழ்வை விட்டு (என்றேன்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்தை அறிந்து அதில் மூழ்குவாயாம.

🍀#விளக்கம்🍀:
******************
உலகஸுகம் தனத்தால் கிடைப்பது.  தனம் சாச்வதமல்ல. அதேபோள் குழந்தை/யௌவன பருவவங்கள் சாச்வதமல்ல. ஏனெனில் அவை காலப்போக்கில் மாறக்குடியவை, அழியக் கூடியவை.. ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன.
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
அவை இரண்டும் அனித்தியம். பால்யம், கௌமாரம், யௌவ்வனனம், வார்த்தக்யம் என நாலு நிலைகள் நம் ஜீவித்தத்தில் வருகிறது.  ஆகயால், இந்த ஒரு நிலையும் சாச்வதமல்ல். என தெளிவாகிறது.
--
 ஆதலால் இதன்மேல் அபிமானம் அல்லது நாட்டம் கொள்வது மூடத்தனம்.  அதேபோல் இந்த உலகத்திலுள்ள எல்லா வஸ்த்துக்களும் மாறக்குடியவை, கிரமேண அழியக்குடியவை.
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
ஏது சாச்வதமல்லவோ அது மாயாஸவரூபம் என அறிந்துகொள்ள வேண்டும். இந்த மாயா வடிவான உலகை துறந்து (விட்டு) நித்திய வஸ்துவான ப்ரஹம்த்தை உண்ர்ந்து அதாகவை பரிணமிக்க வேண்டும். 
--
ஆனால்தான் நாம் ஜீவன்முக்தர்களாவோம் என கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு "ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா" (ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யநிலை, நித்தியம், சாஸ்வதம், உலகம் அநித்தியம் அல்லது மாயை என்ற தத்தவத்தை நிலை நாட்டுகிறார். 
(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
அப்படி ப்ரஹ்ம்நிலை ஏயதி விட்டால் அதில்தானே திடமாக இருக்கவேண்டும்.  அதைத்தான் "ஆதம ஸாக்ஷாத்க்காரரம்" என குறிப்பிடுகிறார்கள் பெரியோர்கள். ப்ரஹ்மத்தை அறிவது என்பத்ர்க்கு பதிலாக ப்ரஹ்மநிலையில் திகழ்வது என்பது மிக பொருத்தமான விளக்கமாகும்.

#பஜகோவிந்தம் #தொடரும்..........

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம் 🍀 :10
~~~~~~~~~~~~~~
வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:

🍀#ஸாரம்🍀:
***************
முதிர்ச்சி அடையும்போது (அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின் பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?

🍀#விளக்கம்🍀:
******************
உலக பந்தம் பலனில் அடங்கியது.  ந்மக்கு பலன் இல்லையேல் நாம் யாருடனும் குட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது நம்க்கு காம விசாரங்கள் அடங்கிவிடுகிறது.  முதியோர்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை.

ஒரு தடாகத்தில் (ஏரி) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதர்க்கு தடாகம் என்ற பேர் போய்விடுகிறது. அதேபோல் ந்ம்மிடம் தனமில்லையேல் ந்ம உறவினர்கள் ந்ம்மை நாடி வரமாட்டார்கள்.  அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டாள் சுற்றத்தார் விலகிவிடுவார்கள்.

ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை நமக்கு கிடையாது முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியை காண்பித்தார்.  எதர்க்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.

#பஜகோவிந்தம்
#தொடரும்...............

🍀#தொகுப்பு : 🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

Tuesday, 13 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  9
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

🍀#ஸாரம்🍀:
****************
ஸத்துக்களுடைய (புண்ணியாதமாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.  பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட செய்யும்.  மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும்.  ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.

🍀#விளக்கம்🍀:
******************
ஆத்ம விசாரம் செய்ய ந்மக்கு வ்ழிகாட்டி வேண்டும்.  அதுதான் ஸத்துக்களுடைய சங்கம்.  அதாவது ந்ல் வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு.  அப்படி அவர்களிடம் உறவு கொண்டால் அவர்கள் நம்க்கு வழிகாட்டுவார்கள்.  அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். 

எப்படி?  மேலே சொன்ன ஆத்ம விசார பாதயில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள்.  அப்படி ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Deluision) அக்லும். அதாவது மாயை அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF)  ந்மக்கு புலப்படும். 

அப்படி புலப்பட்டால் அதுவே ந்மக்கு மன அமைய்தியை தந்து இந்த உடலில் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையை தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி "Self Realization"  என கூறியிருக்கிறார்.

 திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர் "ஸ்வானுபூதி" என குறிப்பிட்டுள்ளாற். இதைத்தான் ஆட்ம ஸாக்ஷாத்க்காரம் என்று கூறுகிறார்கள்.  அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது.  இதுதான் நம் வாழ்க்கை லக்ஷியம்.

#பஜகோவிந்தம் #தொடரும்...................

#தொகுப்பு :🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀  :  8
காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரொயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத:
த்த்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:

🍀#ஸாரம்🍀:
***************
உன்னுடய ப்ரியதமன் அல்லது ப்ரியதமை யார்? யார் உன்னுடய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகர்ம் (குடும்பஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது.  நீ யாருடையவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இப்படி (வழ்க்கை) தத்துவத்தை பற்றி சிந்தனை செய் சகோதரா!

🍀விளக்கம்🍀:
*****************
இந்த ஸ்லோகம் மூலம் நம்மை ஆத்ம சிந்தனையில் ஈடுபட சொல்கிறார்.  யார் மனைவி அல்லது பர்த்தா?  யார் புத்திரன்? நான் யாருடையவன்?  நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்ற தத்வார்த்தமாக சிந்தனை செய் என பொருள்.

 ஸ்ரீ ரமண மஹர்ஷியின் "நான் யார்" என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் ந்ம்மை அறிந்துகொள்ள வேண்டும்.  இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது.  உலகத்தை அறிவதர்க்கு முன் யார் அறிகிறார்கள் என பார்க்க வேண்டும்.

(Know the Knower).  அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பாற்ப்பதை (Object)  அறிய இயலாது.  அந்த ஞான்ம் பூர்த்தியாகாது.. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்க சொல்கிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..................

#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ  #ஆதிசங்கர #பகவத்பாதரால்  #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம் 🍀-
--
🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
--
🍀#காவியம்🍀  :  7 பாலஸ்தாவத் க்ரீடாsஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோsபினஸக்த:

🍀ஸாரம்🍀:
**************
பால்ய வயது விளையாட்டில் செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லபத்தில் மூழ்கிவிடுகிறது,, முதிர்ச்சிகாலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்) ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை

🍀விளக்கம்🍀:
*****************
வாழ்க்கை எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிக தெளிவாக சித்ரீகரித்திருக்கிறார். குழந்தை பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம்.  அப்பொழுது சிந்தித்து வேலை செய்ய இயலாது.  குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகி விடுகிறது. 

பௌரனானால் ஸ்த்ரீசுகத்தில் காலம் ஓட்டுகிறோம்.  ஸ்த்ரீ ஸுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா வித ஸுகங்களையும் அது குறிக்கிறது;  இப்படி உலக்த்திலுள்ள ஸகல சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது.  அப்பொழுதும் நம் சத்திய நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை.

முதிர்ச்சியடைந்தால் நாம் தனித்துவிடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில ஆழ்ந்துவிடுகிறோம்.  நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேட்த்தி முதலியவர்கள் நலனுக்காக கவலைப்படுதல், ந்ம்மை யாரும் கவனிக்கவில்லையே என்ற கவலை, நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வநேரமும் கவலைப்படுவதிலேயே நம் சமயத்தை கழிக்கிறோம். 

அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை (நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை.  ஆத்மஞானம் பெற பாடுபடுவதில்லை.  இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாக கழித்துவிடுகிறோம்.  பகவத் சிந்தனை (ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை.  பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது?  எப்படி ஜீவன்முக்தன் நிலையை ஏய்வது.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்.............

🍀#தொகுப்பு  :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀

🍀#காவியம்🍀  :  6
யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாsபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே

🍀ஸாரம்🍀:
*************
(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள்.  தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு நடுங்குவாள்.

🍀விளக்கம்🍀:
*****************
பந்தம் பாசம் என்பது உடலில் உயிர் உள்ளதுவரை தான்.  உயிர் போய் தேஹம் சடலமாகிவிட்டால், அதர்க்கு பெயர் பிணம்.  பிணத்ததை பார்த்து யார்தான் பயப்படமாட்டார்கள்.  அப்பொழுது மனைவிகூட அந்த சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று குறிப்பாக சொல்லணும்?  ஏற்றவும் பாஸ்த்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி தானே.

 ஸ்த்ரீகளை கருதும்போது, இங்கு மனைவி என்பதை கணவன் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பாதகமான தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்!  வாழும்போது, இந்த உடலை நாம் போற்றீ கோண்டாடுகிறோம்.

அதர்க்கு எல்லா ஸௌகரியங்களையும் சைய்துகொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம்.  இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற உண்மை ந்மக்கு தெரிவதில்லை. மரணத்திர்க்கு பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது என்ற உண்மையை விளக்குகிறார்.

#பஜகோவிந்தம் #தொடரும்..........

🍀#தொகுப்பு  :  🍀#திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால்இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
 
🍀#காவியம்🍀 : 5
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோsபின ப்ருச்சதி கேஹே
ஸாரம்:

உன்னால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுமோ, அது நாள் வரை உன்னை சார்ந்தவர்கள் உன்னிடம் நெருங்கி பழகுவார்கள்.எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்துபோகிறதோ அப்பொழுது யாரும்–உன் குடும்பத்தார் கூட-உன்னிடம் பேசமாட்டார்கள்

🍀விளக்கம்🍀:
****************
நாம் கண்கூடாக பார்க்கும் ஓர் சத்தியநிலையை எவ்வள்வு ஸுலபமாக சித்ரீகரித்திருக்கிறார்! நம்மால் எவ்வள்வு நாள் ஸம்பாதித்து பண் உதவி பண்ண இயலுகிறதோ அதாவது மற்றவருக்கு எவ்வளவு காலம் ந்ம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மை சார்ந்தவர்கள் ந்ம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள்.

 உலக நியதிப்படி பார்த்தால், எல்லோரும் மற்றவ்ரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள்.  நமக்கு வயதாகி வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி ந்ம்மால் மற்றவருக்கு உபயோகமில்லாமல ஆகிவிடும்பொழுது, நம் சொந்த குடும்பத்தினரும் கூட ந்ம்மிடம் ஒட்டி உற்வாட தயங்குவார்கள்.

 பேசுவதர்க்கு கூட அருகில் வர மாடார்கள்.  இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற தத்துவத்தை மிக எளிதாக சுட்டிகாட்டியிருக்கிறார்.
--
#பஜகோவிந்தம் #தொடரும்.........
--
🍀#தொகுப்பு  :🍀 #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀

(வாழ்க்கை தத்துவம்)

🍀#காவியம் 🍀:  4
நளினீதள கத ஜலமதிதரளம்
தத்வஜ்ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம்ச ஸ்மஸ்தம்

🍀ஸாரம்🍀:
*************
தாமரை இலயில் தத்தளிக்கும் ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வ்யாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை உடையவைகளாகவும் அமைந்துள்ளது என ஆறிவாய். .

🍀#விளக்கம்🍀:
****************
நமது ஜீவதம் அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை ஒரு உவமையுடன் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர். 
--
தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கிநிற்க்கும் ஜெலபிந்துக்கள் எப்படி அந்த தாமஇலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் ஜீவிதமும். எந்த நேரமும் அந்த ஜெல பிந்துக்கள் தடாகத்தில் விழ்நேரிடலாம். 
--
அதுபோல் நம் ஜீவிதம் எந்த நேரத்திலும் தத்தளித்துக்கோண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம்.  சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என் பொருள். இதைவிட வேறு உகந்த உபமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போகதிக்க இந்த உவமையை கையாண்டிருக்கிறார்!

#பஜகோவிந்தம் #தொடரும்..........

🍀#தொகுப்பு :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

பஜகோவிந்தம்

🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால்  #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀
--
(வாழ்க்கை தத்துவம்)
--
🍀#காவியம்🍀 : 3
நாரீ ஸ்தனபர நாபி தேசம்
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்தய வாரம் வாரம்
--
🍀#ஸாரம்🍀:
***************
ஸ்த்ரீகளுடைய மார்பக்கத்தயும் நாபிதேசத்தையும் பார்த்து அதி மோஹம் கொள்ளாதே.  அதெல்லாம் வெறும் மாமிசத்தின் விகாரத்தால் தோன்றும் (அநித்திய) தோற்ற்ம மட்டுமே என்று மனதில் தினம் தினம் (எப்பொழுதும்) சிந்தனை கொள்..
--
🍀#விளக்கம்🍀:
******************
முதல் ஸ்லோகத்தில் "ஆசையை (மோஹம்)" விடு என கூறினார்.  இதில் "காமத்தை" (பாசம்) விடு என உபதேசிக்கிறார்.  ஏன் ஸ்த்ரரீகளின் மாற்பிடத்தையும் நாபி தேசத்தையும் குறிப்பாக சொல்லவேண்டும்?  இவைதான் நம் காம உணர்ச்சியை. தூண்டுகிறது. வாக்யார்த்தத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் கருத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
--
இது புருஷர்களுக்கு மட்டும் தந்த உபதேசமல்ல.  ஸ்த்ரீகளை பொறுத்தமட்டில் புருஷர்களுடைய மயிர்கூபத்துடன் கூடின் மார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியவையும் கூட மாமிசத்தின் தோற்றமே தவிர சாச்வதமல்ல என பொருள் கொள்ளணும்.
--
ஆக, ஏதொரு வஸ்து நமக்கு காமத்தை ஊட்டுகிறதோ அவையெல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்தை கொள்ளவேண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்லோகங்களினால் ஆசா பாசத்தை துற என கூறுகிறார்.
--
அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம்.  என்ன மனோ நிலயில் நாம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அடுத்த ஸ்லோகத்தில் தந்துள்ளார்.
--
#பஜகோவிந்தம் #தொடரும்.............

🍀#தொகுப்பு : 🍀 #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

Sunday, 11 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀(வாழ்க்கை தத்துவம்) 🍀
*****************************

🍀#பாடல் #எண்🍀 :  2
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

🍀#ஸாரம்🍀:
~~~~~~~~~~
ஹே மூடா! திரவ்யத்தில் உள்ள பேராசையை (பணத்தாசை) விடு.  இந்த பேராசை ஒழிய மனதில் நல்ல் விசாரத்தை உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்மபலனை மிக சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி.

🍀#விளக்கம்🍀:
******************
மனித சுபாவம் ஸுகம் தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்து கொண்டது.. தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை பிடித்து அதன்மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம்.  அதனால் நம் மனம் சஞ்சலப்படும்.  ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம் கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மனம். 

இந்த த்னத்திலுள்ள (ஸுகங்களீலுள்ள) பேராசயை விடு என கூறுகிறார்.  ஆனால் நமக்கு தனம் இல்லாமல் வாழ்முடியாதே.  அதெப்படி பணத்தாசையை விடுவது என வினவலாம்.  கர்மம் பண்ணுவது நமது கடமை.  அதுவும் அதில் கிடைக்கும் பலனை கருதாது கர்மம் பண்ணவேண்டும் என கர்ம யோகத்தில் பார்த்தோம்.  அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள் என பொருள் கொளள்ளவேண்டும்.

"கர்மன்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன"

என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சொன்னதுபோல் "கர்மம் செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்" என கூறியிருக்கிறார்.  அதாவது, கர்மம் பண்ண நமக்கு அதிகாரம் உண்டு.  என்ன கர்மம் பண்ணவேண்டும், எப்ப்டி பண்ணவேண்டும் என தீர்மானிப்பது நம் கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நம்க்கு கிடைப்பதில்லை. 

இதிலிருந்து என்ன தெரிகிறது?  கர்மபலன் நாம் செய்யும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது.  அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ அவர் கூறவில்லை.

 நம் கர்மத்திர்க்கு ஏற்ப்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள் என பொருள் கொள்ள வேண்டும்..ஆனாலதான் மனச்சாந்தி ஏற்ப்படும்.

🍀#தொகுப்பு :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்.🍀

🍀#பஜகோவிந்தம் #தொடரும்...........🍀
🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றபட்ட
#பஜ #கோவிந்தம்🍀

(வாழ்க்கை தத்துவம்)
************************

🍀#முகவுரை🍀:
******************
    சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி  அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வஞ்பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்ததை (HINDUISM) உலகிர்க்கு தந்து, நாலு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து ஸனாதன தர்மத்தை காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய
#ஸ்ரீ #ஆதி #சங்கர #பகவத்பாதாள் அவர்கள் நமக்கு தொகுத்தளித்த இந்த "பஜ கோவிந்தம்" என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாக பின்பற்றக்குடிய சான்றிதழ் வெறுண்டோ?  ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிக தெளிவாகவும், ந்ளினமாகவும் இதில் தந்துள்ளார்.
--
நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை ஏவன, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்கணம் அமைய வேண்டும் எனக்கூடிய தத்துவங்களை தெள்ள தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களை சரிவர கிரஹித்து அவைகளை அய்ராது சரிவர நாம் பின் பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிக சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்ற்லுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் அய்யபில்லை.  அதில் தந்துள்ள ததுவங்கள் ஏவை என பார்ப்போமா?
--
🍀#காவியம்🍀  : 1
********************
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

🍀#ஸாரம்🍀:
**************
கோவிந்தனை பஜி, கோவிந்தனை பஜி, கோவிந்தனையே பஜி ஹே! தெளிவில்லாத புத்திஹீனனே.. உனது கடைசி காலம் (மரணம்) உன்னை நெருங்கும்போது, உனது இலக்கணம், வ்யாகரணம் (முதலிய ஞானம்) உன்னை காப்பாற்றாது. அதனால் (நித்திய ஆனந்த நிலையில் இருக்கும்( கோவிந்தனை என்னேரமும் பஜி.

🍀#விளக்கம்🍀 :
*******************
பஜ என்பத்ர்க்கு பஜிப்பது அல்லது, ஜெபிப்பது அல்லது பாடுவது அல்லது தியானிப்பது என்று பொருள். நித்திய சுத்த ஆனந்த நிலைக்கு பெயர் கோவிந்தம்.  எப்பொழுதும் அந்த நிலையில் இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் அவர் கோவிந்தன் எனப்படுவார். மனித ஜென்மம் வேண்டுவது என்ன? ஆனந்தம்.  அந்த நிலைக்கு உடமை யார்? ஸ்ரீ கிருஷ்னன்.  ஆகயால் எப்பொழுதும் அவனை நினை அல்லது பஜி என்று ஸ்ரீ ஆதி சங்கரர் புத்திகெட்டு உழலும் மனித ஜாதிக்கு உபதேசம் சைய்கிறார்.  அவர் க்ஷேத்திராடன்ம் செல்லும்பொழுது ஒரு மஹா வித்வான் சாஸ்த்ர கிரந்தங்களை வைத்துக்கொண்டு அதன் இலக்கணத்தை (வியாகரணம்) வாய்ப்பாடம் சைய்வதை கண்டார்.
--
 அதை சுட்டிக்காட்டி எழுதினது இந்த ஸ்லோகம்.  ஏனென்றால், நாம் எல்லோரும் நம் புஸ்த்தக ஞானத்தில் மிகவும் சமயம் கட்த்துகிறோம்.  தைவ சிந்தனயோ நம் சுய நிலை சிந்தனையோ இல்லாமல் எப்பொழுதும் உலக சம்பந்தப்பட்ட காரியங்களில் நம்து நேரத்தை சிலவிடுகிறோம்.  சிறிதளவாவது ஆத்ம சிந்தனை தேவை என கூறுவதாக அமைய்துள்ளது இந்த உபதேசம்.
--
நாம் மரணத்தை அணுகும்போது நாம் படித்த விஷயங்கள் (உலகஞானம்) நம்மை காப்பாற்றாது.  ஆத்மஞானம் ஒன்றுதான் அதர்க்கு மருந்து என பொருள். அதை அறிய எந்த புஸ்தகமும் உதவாது. மஹாஞானிகள் அவர்கள் தபோ நிலையிலிருந்து தெரிந்துகொண்ட ஆத்ம ஞானத்தை நமக்கு பலகிரந்தகள் மூலமாக தந்துள்ளார்கள். அதன் ஸாரம்தான் பஜ கோவிந்தம்.
--
🍀#தொகுப்பு : #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀
--
🍀#பஜகோவிந்தம் #தொடரும்..........🍀

Saturday, 3 March 2018

நாம் ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியும்மா

நாம் ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியும்மா

 நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும்(வலம்புரி
விநாயகர்,இடம்புரி விநாயகர்)
மற்றும் விநாயகரைப்பற்றி தெரியாத ரகசியமும் தொடர்பான அரிய பதிவு:

ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.

நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம்.

இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம்.

இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது.

உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.

 அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.

நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம்.

இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்

இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.

 விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.

வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம்.

வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால்  தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.

பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும்  அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.

விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .

அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை.

விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!

ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.

எனவே வாருங்கள்! விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும்  ஆற்றல் இருப்பதால்  அவரை வணங்கி  ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

விநாயகரின்_அறுபடை_வீடுகள்

#விநாயகரின்_அறுபடை_வீடுகள்!!!

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

* #முதல்படை_வீடு :-திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

* #இரண்டாம்_படைவீடு :-விருத்தாசலம்

விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

* #மூன்றாவது_படைவீடு :-திருக்கடவூர்

திருக்கடவூர் எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

* #நான்காம்படை_வீடு :-மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

* #ஐந்தாவது_படைவீடு :-பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

* #ஆறாம்படை_வீடு :-திருநாரையுர்

திருநாரையுரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் அற்புதத் தோற்றங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

விநாயகப் பெருமான் பல கோவில்களில் கருமை நிறத்தில் அருள்புரிந்தாலும், சில தலங்களில் வெண்மை, மஞ்சள், சிவப்பு, சந்தனம், பச்சை ஆகிய வண்ணங்களில் எழுந்தருளியுள்ளார்.

விநாயகர் பற்றிய அரிய தகவல்கள்

விநாயகர் பற்றிய  அரிய தகவல்கள்

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். விநாயகர் பற்றிய அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந் தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.

10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனா லேயே மீண்டும் விண் ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

33. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com
whats app 0091-8939791843

50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2Ð லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.

88. விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.

89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

91. நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

92. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

95. நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

96. மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

97. திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

98. ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.

99. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களை தான் அவர் வணங்கி வந்தார்.

100. புண்ணியத்தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள  ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.

இந்திரன்_வழிபட்ட_வெள்ளை_விநாயகர்

#இந்திரன்_வழிபட்ட_வெள்ளை_விநாயகர்
.
திருவலஞ்சுழியில் உள்ள வெள்ளை விநாயகர்.

ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில். இந்திரன், அனைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு, விநாயகரை வணங்க மறந்துவிட்டதால் நேரடியாக வந்து வழிபட்ட இடம் இது என்று கூறப்படுகிறது.

கடல் நுரையால் ஆன வெள்ளை விநாயகர் என்பது இதன் சிறப்பம்சம். மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டிதிதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.

ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஒன்றரை அடி உயரமுள்ள இந்த வெள்ளை விநாயகர் கடல் நுரையால் ஆனதால், எப்போதும் அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டும்தான் உண்டு.

இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்துவருகிறார். இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன.

இத்தலம் கும்பகோணம் - தஞ்சை சாலையில் திருவலஞ்சுழியில் அமைந்துள்ளது.

விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வனங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.

1. விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

2. விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3. விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

4. விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

5. விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

6. விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

7. விநாயகர் ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

விநாயகர் முன் வணங்கும்போது தலையில் குட்டி வழிப்படுவது ஏன்?

விநாயகர் முன் வணங்கும்போது தலையில் குட்டி வழிப்படுவது ஏன்?

விநாயகரை வழிப்படும்போது தலையில் குட்டி கொள்ளும் பழக்கம் ஏன் வந்தது தெரியுமா?

சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிய அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வந்தபோது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தார்.   மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிப்பட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய காமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல், அங்கும் இங்குமாக ஓடினார்.

அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்காக கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும், சீரிய நிதியும் பெறுவார்கள் என்று அருளினார்.

இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

Friday, 2 March 2018

கணேச பஞ்சரத்தினம்

🍀#ஸ்ரீ #கணேச #பஞ்சரத்தினம்🍀
-
#முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்  |
அநாயகைக நாயகம் வினாசஸிதேப தைத்யகம்
நதாஸுபாஸு நாஸகம் நமாமி தம் விநாயகம் || -1🍀
-
🍀மாதுமை பெற்ற மகிழ்வதனால்
மழகளிராக வந்தவனே!
மோதகம் கரத்தில் ஏந்தியதால்
மோனமும் மகிழ்வுங் கொண்டவனே!
போதகத் திருமாமுகத்தவனே!
பூசைகள் புரிவோர் யாவருக்கும்
நாதனே துதிக்கை தூக்கித்தான்
நாளும் முக்தியருள்பவனே! சந்திரக் கலையைத் தரித்தவனே!
சந்ததம் உந்தன் சரிதமதை
வந்திவண் கூறும் அடியவரை
வாழ்த்தி வாழ வைப்பவனே!
சிந்தா குலங்கள் தீர்த்திடவே
சீர்மிகு தலைவன் தானாகி
அந்தமில் அரசே கஜாகரன்தன்
அந்தகன் ஆனாய் கணபதியே!🍀

🍀#நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் |
 ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்  ||🍀
-
🍀தன்னை வணங்கும் தரமறியார்
தம்மைப் பயத்தால் தானழுத்திப்
பின்னர் வணங்கும் பேறளித்தே,
பிழைகள் போக்கும் பெருமனத்தோய்
என்றும் ஏத்தும் அமரரையே
எதிர்க்கும் அசுரர் குலமழிய
வென்றாய் வெற்றி விநாயகனே
விளங்கு தேவர்க் கதிபதியே!
எதையும் வேண்டா எளியோர்க்கும்
எதையும் அளிக்கும் ஏரம்பா
புதையல் போன்ற பொருள்சேரப்
புகலும் அதிதே வதைநீயே
புதைகொள் மதத்த, வேதகணம்
போற்றி வணங்கப் பெறுவாயே?
இதையிவன் எழுத இவன்முன்னோர்
எழுதிய கருத்தும் இதுதானே?
சண்டிகே சுரரும் அவர்மேலாய்ச்
சர்வே சுரர்க்கும் மேலாக
உண்டெனக் கூறும் உயர்பொருளாய்
உலகின் மூல காரணனே!
பண்டுளோர் புரமே மாயமென்பர்
புரத்தின் மேலாம் பரம்பொருளே
அண்டி னோர்க்கே அபயகரம்
அளித்தே காக்குங் கணபதியே!🍀
-
🍀#ஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||🍀
-
🍀ஈரேழ் உலக மக்களுக்கும்
இன்பம் அளிக்க வல்லவனே!
சீரே துமிலா கஜாசுரனைச்
சீறிப் பாய்ந்தே வதஞ்செய்தாய்!
பேரா தரிக்கும் பெருமானே
பேருல கைநின் பெருவயிற்றுள்
தீரா இன்பப் பெருக்குடனே
தினமும் தாங்கிக் காப்பவனே! அழகிய ஐரா வதம்போன்றே
அமைந்த முகத்தோய் அனுதினமும்
பொழியுங் கருணை மாமுகிலே
பொலிவார் புகழ்சேர் பூங்கரத்தோய்
மொழியிற் செயலில் முறையறியா
மூடர் தமக்கும் முன்னிற்பாய்
தொழுவோர்க் கிரங்கி மனமகிழத்
துணையாய் வருவாய் கணபதியே!🍀
-
🍀அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்சநாஸபீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம் ||🍀
-
🍀#வணங்கும் அடியார் தமைவாட்டும்
வறுமை, துன்பம் வேரறுப்பாய்!
மணக்கும் மறையின் மாறாத
மகத்துவம் அறிந்தே துதி செய்வோர்
இணக்கத் திற்கே இயல்புடனே
இன்பம் அளிக்கும் இளங்களிறே!
கணமும் பூத கணங்களையே
காக்குங் காரார் கணபதியே!
திரிபுர மெரித்த திறனுடையான்
தினமகிழ் வறுநல் திருமகனே!
புரிபெரும் போரில் புல்லசுரர்
புலம், குலம் அழித்த போர்க்களிறே!
கரிபோல் எருமை தனிலூரும்
காலன் கணக்கைக் கடந்தடியார்
புரியும் பூசை ஏற்றிந்த
பூதலம் காக்கும் புண்ணியனே!
விளங்கு விசையன் போன்றோர்தம்
வில்லின் ஆற்றல் விரிவு பெறக்
களத்திற் காட்டுந் திறனுக்கே
காரணனான கணபதியே!
அளக்க லாகா மதநீரை
அருவியாக நிதம் பொழிந்தே
களகம் ஊர்ந்த கணபதியே!
களிக்கும் நெஞ்சிற் கதிபதியே!🍀
-
#நிதாந்த காந்த தந்த காந்தி
மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்
தமேக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ||🍀
-
🍀தந்தத் தழகே தனியழகு
தகுபல் வரிசை மிகஅழகாம்
அந்தகனுக்கும் அந்தகனாம்
அரந்திரு மகனே அகத்தினிலே
சிந்தித் தறிய இயலாத
சீராம் வடிவச் செந்தூரமே!
வந்த வினையும் வருவினையும்
வாடிப் போக வந்தருளே! பிறப்பிறாப் பற்ற பெருமானே
பிழையறி யாத ஞானியரின்
அறந்தளிர் தருவாம் இதயமதில்
அறிந்தினி தமர்வாய்! அறியதொரு
குறிநெறி காட்டுங் குணக்குன்றே!
கொம்பில் ஒன்றைக் கொம்பொடித்தே
அறத்தின் சாறாம் பாரதத்தை
அளித்தனை வாழ்த்தி வணங்குவனே!
நூற்பயன்🍀
-
🍀மஹா கணேஸ பஞ்சரத்ன மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம்ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் ||🍀
-
🍀காலை எழுந்து கருத்துடனே கணேச பஞ்ச ரத்தினத்தைச்
சீலஞ் சிறக்கச் செயல்சிறக்க சிந்தித் துரைத்துத் தியானிக்கக்
காலம் மாறுங் கடுந்துயரம் கணத்தில் மாறும் கனுவுறுநல்
மூலப் பொருளாங் கணநாதன் முன்னின் றருள்வான் முயல்வீரே!🍀

🍀#தொகுப்பு :  🍀#திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்.🍀 

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் - ஔவையார் அருளிச் செய்தவை::-

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...