Sunday, 11 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம் 🍀

🍀(வாழ்க்கை தத்துவம்) 🍀
*****************************

🍀#பாடல் #எண்🍀 :  2
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

🍀#ஸாரம்🍀:
~~~~~~~~~~
ஹே மூடா! திரவ்யத்தில் உள்ள பேராசையை (பணத்தாசை) விடு.  இந்த பேராசை ஒழிய மனதில் நல்ல் விசாரத்தை உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்மபலனை மிக சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி.

🍀#விளக்கம்🍀:
******************
மனித சுபாவம் ஸுகம் தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்து கொண்டது.. தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை பிடித்து அதன்மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம்.  அதனால் நம் மனம் சஞ்சலப்படும்.  ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம் கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மனம். 

இந்த த்னத்திலுள்ள (ஸுகங்களீலுள்ள) பேராசயை விடு என கூறுகிறார்.  ஆனால் நமக்கு தனம் இல்லாமல் வாழ்முடியாதே.  அதெப்படி பணத்தாசையை விடுவது என வினவலாம்.  கர்மம் பண்ணுவது நமது கடமை.  அதுவும் அதில் கிடைக்கும் பலனை கருதாது கர்மம் பண்ணவேண்டும் என கர்ம யோகத்தில் பார்த்தோம்.  அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள் என பொருள் கொளள்ளவேண்டும்.

"கர்மன்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன"

என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சொன்னதுபோல் "கர்மம் செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்" என கூறியிருக்கிறார்.  அதாவது, கர்மம் பண்ண நமக்கு அதிகாரம் உண்டு.  என்ன கர்மம் பண்ணவேண்டும், எப்ப்டி பண்ணவேண்டும் என தீர்மானிப்பது நம் கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நம்க்கு கிடைப்பதில்லை. 

இதிலிருந்து என்ன தெரிகிறது?  கர்மபலன் நாம் செய்யும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது.  அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ அவர் கூறவில்லை.

 நம் கர்மத்திர்க்கு ஏற்ப்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள் என பொருள் கொள்ள வேண்டும்..ஆனாலதான் மனச்சாந்தி ஏற்ப்படும்.

🍀#தொகுப்பு :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்.🍀

🍀#பஜகோவிந்தம் #தொடரும்...........🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...