Tuesday, 13 March 2018

பஜகோவிந்தம்

🍀#ஸ்ரீ  #ஆதிசங்கர #பகவத்பாதரால்  #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம் 🍀-
--
🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
--
🍀#காவியம்🍀  :  7 பாலஸ்தாவத் க்ரீடாsஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோsபினஸக்த:

🍀ஸாரம்🍀:
**************
பால்ய வயது விளையாட்டில் செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லபத்தில் மூழ்கிவிடுகிறது,, முதிர்ச்சிகாலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்) ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை

🍀விளக்கம்🍀:
*****************
வாழ்க்கை எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிக தெளிவாக சித்ரீகரித்திருக்கிறார். குழந்தை பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம்.  அப்பொழுது சிந்தித்து வேலை செய்ய இயலாது.  குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகி விடுகிறது. 

பௌரனானால் ஸ்த்ரீசுகத்தில் காலம் ஓட்டுகிறோம்.  ஸ்த்ரீ ஸுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா வித ஸுகங்களையும் அது குறிக்கிறது;  இப்படி உலக்த்திலுள்ள ஸகல சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது.  அப்பொழுதும் நம் சத்திய நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை.

முதிர்ச்சியடைந்தால் நாம் தனித்துவிடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில ஆழ்ந்துவிடுகிறோம்.  நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேட்த்தி முதலியவர்கள் நலனுக்காக கவலைப்படுதல், ந்ம்மை யாரும் கவனிக்கவில்லையே என்ற கவலை, நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வநேரமும் கவலைப்படுவதிலேயே நம் சமயத்தை கழிக்கிறோம். 

அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை (நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை.  ஆத்மஞானம் பெற பாடுபடுவதில்லை.  இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாக கழித்துவிடுகிறோம்.  பகவத் சிந்தனை (ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை.  பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது?  எப்படி ஜீவன்முக்தன் நிலையை ஏய்வது.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்.............

🍀#தொகுப்பு  :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...