🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜகோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை_தத்துவம்🍀
🍀#காவியம்🍀 : 27
*******************
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
🍀#ஸாரம்:🍀
***********
(பகவத்) கீதையை படி, (கீதாசார்யனின்) 1000 நாமத்தை சொல், லக்ஷ்மீபதியிலன் (விஷ்ணுவின்) ரூபத்தை மனதில் தியான்ம் செய், ஸத்துக்களுடன் (ஸஜ்ஜனங்களுட்ன்) கூட்டுறவு கொள், தீனஜன்ங்களூக்கு தனத்தை தானம் செய்.
🍀#விளக்கம்:🍀
**************
நம் ஆசாபாசத்தையும் துர்குணங்களையும் விட்டால் மட்டும் போதாது, ந்ல்ல காரியத்தில் ஈடுபடவேண்டும். அவை ஏவை? கீதை என்பதை ஸகல சாஸ்திரங்கள் என கொண்டு சாஸ்த்ர படனம் என இதர்க்கு அர்த்தம் கோள்ளவேண்டும். பகவான் நாமாவை உச்சரிப்பது.
பூசை செய்தல் என விஸ்தாரமாக எடுத்து கொள்ளவேண்டும். மந்தில் இறைவன் ஸ்வரூபம் காணுதல் தியானம் என கொள்ளவேண்டும். பிறகு ஸத்ஸ்ஸங்கம், தான தர்மாதிகள் செய்வது என இப்படி உட்ல், மனம், புத்தி மூன்றையும் நல் வழியில் செலுத்தல் வேண்டும்.
அதர்க்கு, பாராயணம், ஜபம், சத்ஸ்சங்கம், தந்தர்மாதிகள் என அழி வகுத்திருக்கிறார்கள் பெர்டியோர்கள். இப்படி செய்யும்போது, அஹ்ம்காரம், மமாகாரம் போய், எல்லொரும் ஒன்றே என்ற பாவம் வரும். இது ஆத்ம சிந்தனைக்கு உதவியாக அமையும்.
🍀#பஜகோவிந்தம்_
#தொடரும் ............. 🍀
🍀#தொகுப்பு : #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன். 🍀
No comments:
Post a Comment