🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்_பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்.🍀
🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀
🍀#காவியம்🍀 : 28
*******************
ஸுகத: க்ரியதே ராமாபோக:
பச்சாத்தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
தத்பி ந முஞ்ஞ்தி பாபா சரணம்
🍀#ஸாரம்:🍀
***********
இந்திரிய ஸுகத்தை நாடுகிறோம். அதன் விளைவாக உடல் ரோகத்தில் தத்த்ளிக்கிறது, மரணம்தான் எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி என்று அறிந்தும், (மனிதன்) பாப செயக்ளிலிருந்து விலகுவதில்லை.
#🍀விளக்கம்🍀:
**************
அஹோ என்ன பரிதாபநிலை! மனிதன் இந்திரியத்தால் கிடைக்கும் ஸுகங்களை அனுபவிக்கிறான். அதன் விளைவாக உடல் நலமற்று வியாதியில் உழலுகிறான். மரணம் இந்த உலக வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி என தெரிந்தும், தான்செய்யும் பாபச்செயல்களிலிருந்து விலகுவதில்லை.
இதை என்னவென்று சொல்வது. அஞ்ஞானம் என்றல்லாமல் வேறென்ன? ஒருபுறம் ஆத்மஞாந்த்திர்க்கு வழிகாட்டி இன்னொருபுறம் உலக் வாழ்க்கை தரத்தை சுட்டிக்காட்டுவதிலிருந்து ந்மக்கு நல்வஷி ஏது, ஆபத்தான வழி ஏது என்று இரண்டையும் எடுத்துரைக்கிறார் குருநாதர்.
மனித இயல்பு என்ன, அதை எப்படி ந்ல்வழியில் திருப்பவேண்டும் என இரண்டு பக்கத்தையும் புரட்டி பார்த்த பலன் கிடைக்கிறது.
#பஜகோவிந்தம் #தொடரும்...............
#தொகுப்பு : #திருமதி_லதாவெங்கடேஷ்வரன்.
No comments:
Post a Comment