Saturday, 12 May 2018

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜகோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம்🍀 :  29
******************
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

🍀#ஸாரம்:🍀
**********
ஸொத்து (இருப்பது) நல்லதல்ல. இதை எப்பொழுதும் நினை. அதிலிருந்து ஸுகம் கிடைப்பதில்லை, இதுதான் சத்தியம்.   தன்வான்கள் தங்கள்புத்திரர்களால் பீதி அடைகிறார்கள். இதுதான் உலகத்தில் உள்ள நியதி.

🍀#விளக்கம்🍀:
**************
என்ன ஒரு ங்க்னகான சத்தியம்!  ஸொத்திருந்தால் குடவே பயம் வரும்.  அதை கட்டிக்காக்க வேண்டும்.  யாரும் திருடக்கூடாது.  அது குறையாமல் இருக்க வேண்டும் என்ற பேராசை வரும்.  அதிலிருந்து ஏக்கம், பயம், அனுமித்தனம் முதலிய குணங்கள் வந்து சேரும். 

மன நிம்மதி இராது.  ஸொத்திருந்தால் ஸுகம் வரும் என்று இப்போ சொல்ல முடியுமா?  இல்லை.  துக்கம் தான் வரும் இல்லயா?  தன்வான்கள் தங்கள் பிள்ளைகளையே பயப்பட வேண்டியதாகும். ஏனென்றால் அவர்களுக்கு தனம் தரவில்ல்யேல் அவ்ர்கள் தொல்லை செய்வார்கள், சண்டை சச்சரவு எழும்.  அவர்களுக்குள் மோதல் வரும்.   கூடாது அவர்களிடமிருந்து தன்வான்களுக்கு மரணபயம் கூட வரும். 

இதை நாம் பத்திரிகை வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொண்டுள்ளோம்.  "பணம் ஆளை கொல்லும்" என்ற பழமொழி சரியாகிவிட்டது.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்..................🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் 🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...