Saturday, 12 May 2018

பஜகோவிந்தம்


🍀#ஆதிசங்கர்_பகவத்_பாதரால் #இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  30
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம்
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம்
குர்வவதானம் மஹதவதானம்

🍀#ஸாரம்:🍀
*************
ப்ராணாயமம் செய்தல், இந்திரிய அடக்கம் கொள்தல், நித்திய அனித்திய வஸ்துக்களை வகைதிரித்து ஆறிதல், ஜபம்செய்து மனதை அடக்குதல்  இத்யாதிகளை மிக கவனமாக செய்.

🍀#விளக்கம்:🍀
****************
நல்லது கெட்டதுகளை சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும் தந்து, ஆத்ம விசாரம் செய்து கடைத்தேறு என்று சொன்னால் மட்டும் போதுமா?  ஆத்மவிசரம் எப்படி செய்யவேண்டும்?  ஆத்விசரத்திர்க்கு க்குன்னோடியாக நாம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாதன் விஷயங்களை அடுத்துரைத்ததொடு நில்லாமல், ஆத்கஞாந்த்திர்க்கு என்ன வழி என்றும் தெள்ள தெளிய தருகிறார்.

 ப்ராணாயமத்தால் விசாங்களை அடக்குவதும் (மனோ நியந்த்றணம்), ப்ரத்யாகாரத்தால் இந்திரியங்களை அட்க்குவதும் (உடலுருப்புகளை), நல்லது கெட்டது என வகைதிரித்தறிவதினால் விவேகம்டைவதும் (புத்தி ஸுக்ஷ்மதை), ஜபம் மூலம் ஏகாக்ரசித்த்த்துடன் இருப்பதும் (தியானம்) கடைசியில் ஆத்மஸாக்ஷாத்க்காரம் எனும் ஸமாதி நிலையில் கொண்டு சேர்க்கும்.  தியானம் நிலையாக எப்பொழுதும் இருப்பது ஸமாதி நிலை.  இந்த வழியை மிக கவனமாகவும் கருத்துடனும் செய்யவேண்டும்

🍀#தொகுப்பு  :  #🍀
திருமதி_லதா #வெங்கடேஷ்வரன் 🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...