🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் பாதரால்_இயற்றப்பட்ட_#பஜ கோவிந்தம் 🍀
🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀
🍀காவியம்🍀 : 31
குரு சரம்ணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாரத்Sசிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
🍀#ஸாரம்:🍀
*************
குருவின் சரணாரவிந்தத்தை நிரந்தர பக்திச்ரத்தையுடன் இறுக பற்றி (மேல்சொன்ன படி) மனோநியந்த்ரணம், இந்திரிய தமனம் முதலிய வ்ழி (பின்பற்றி) இந்த (ஜனன மரண) ஸம்சாரத்திலிருந்து ஈடுபட்டுஉன் இதயத்துள் நிரந்தரமாக பிரகாசிக்கும் அந்த இறைவனை (ஆத்மஸ்வரூபத்தை – SELF) அடைய்வாயாக.
🍀#விளக்கம்:🍀
****************
நாம் ஏதொரு காரியம் செய்யும்போதும் குருவின் அருள் கிடைக்க வேண்டும். அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். குரு க்ருபை இல்லயேல் நம் பிரய்த்னம் பலம் தராது. ந்ம்மால் இறைவனை காணமுடியாது (ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்). அதர்க்கு குரு வழிகாட்ட்வேண்டும். "குருவருள் இல்லயேல் திருவருள் இல்லை" என்ற மகாவாக்கியம் இங்கு கவனத்திர்க்கு வரவேண்டும்.
அந்த குருவிர்க்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அவர் சொல்லில் ந்ம்பிககை வைத்து, அவ்ர் சொல்படி இயங்கினால் அவர் அருள் கிடைக்கும். அப்புறம் நமக்கு வெற்றிதான். இந்த மஹா தத்துவத்தை கடைசியில் வைத்திருக்கிறார். நம்பிக்கையுட்ன் குருவின் பாதகமலத்தை பிடித்து அவர் காண்பித்தபடி மனோலயம், இந்திரிய அடக்கம், ஜபம் வழி தியானம் இப்படி செய்தால் ஸமாதி நிலை கிடைக்கும்.
இப்படி தியான் நிலை நீடித்திருந்தால் அதாவது உலக நினைப்பு இல்லாமல் எப்பொழுதும ஆத்ம ஸ்வரூப அனுபூதி நிலையில் இருந்தால் அது தான் ஸமாதி எனப்படும். இது தான் ஆத்ம ஸாக்ஷாத்க்காரம் அன்ப்படும் நிலை. இது தான் மனித ஜாதியின் வாழ்வின் நோக்கம். இதுவேதான் வாழ்வின் ரகசியம் கூட.
🍀#முடிவுரை:🍀
*****************
பவகத்கீதை எப்படி ஐந்தாவது வேதமென்று கொண்டாடுகிறோமொ அதேபொல் பஜகோவிந்தம் அத்வைத ஸிந்த்தாந்தத்தின் ஸாரம் முழுவதும் அட்ங்கியிருக்கும் ஒரு திவ்ய காடியம். ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் இதை தன் ஸ்வானுபத்திலிருந்து கடைந்தெடுத்து தந்திருக்கிறார். இதை படித்து அதன் படி வாழ்க்கை வாழ்ந்தால் ஆதமானுபூதி கிடைக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.
🍀இன்றுடன் பஜகோவிந்தம் நிறைவு பெற்றது .🍀
#தொகுப்பு : 🍀 #திருமதி_லதா வெங்கடேஷ்வரன்.🍀
No comments:
Post a Comment