Saturday, 12 May 2018

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம் 🍀 :   26
**************
காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா த்மானம் பாவய கோSஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே ந்ரக நிகூடா:

🍀#ஸாரம்:🍀
*********
காமம், க்ரோதம், லோபம், மோஹம் முதலிய (துர்குணங்களை) குணங்களை விட்டு உன்னுள் "நான் யார்" என்று விசரம் கொள். ஆத்மஞானம் இல்லாதவர்க்ள் மூடர்கள், அவர்க்ள் இவ் வுலகிலேயே ந்ரகவேதனைக்குள்ளாவார்கள்.

🍀#விளக்கம்:🍀
**************
ந்ம்மை ந்யிப்பது காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யம் என்ற 6 துர்குணங்கள்.  காமம் என்பது கீழ்த்தர ஆசை (EGOCENTRIC DESIRE), க்ரோதம் என்றால் கோபம் (ANGER), லோபம் என்பது கஞ்சத்தனம் (GREED),  மோஹம் என்பது அஞ்ஞானம் (DELUSION), மதம் என்றால் கர்வம் (SELF CONCEIT), மாத்ஸர்யம் என்பது விரோதம் (ENMITY)/ இப்படிப்பட்ட் துகுணங்கள் நம்மை ஆட்டி படைப்பதால் நாம் நம் சுய நிலையை மறந்து உலகத்தில் ஸுக துக்கதிகளில் நலிந்து நரகவேதனை படுகிறோம். 

இதிலிருந்து விமுக்தி வேண்டுமானால், இந்த குணங்களை விட்டு, முதலில் நான் யார் என்|ற் ய்ண்மையை அறியவேண்டும்.  அப்படி ஆத்ம ஞானம் அடையாதவர்கள் இந்த் உலகிலேயே ந்ரகவேதனை பட்டு உழ்லுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறார்.

 இப்படி அஞ்ஞானத்தில் மூழ்கி இந்த ஸமஸார ஸாகரத்தில் பல கஷ்டங்களும் படுபவர்கள் ஞனம் பெ|றாதவர்கள்.  இதிலிருந்து தப்ப, நம்முள் நான் யார் என்ற சிந்தனையில் மூழ்கி ஆத்மஸ்வரூப ஞானம் பெறவேண்டும்.. இதை ஸ்ரீ ரமண மஹருஷி "உன்னை நீயே உணர்ந்துகொள்" என சொல்லியிருக்கிறார்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்............🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன். 🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...