Friday, 11 May 2018

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்🍀 -

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம் : 🍀  25
*******************
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மாகுரு யத்னம் விக்ரஹஸந்தௌ
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ஞஸ்ய சிராததி விஷ்ணுத்வம்

🍀#ஸாரம்:🍀
***********
சத்ருக்களுடனும் மித்ரர்களிடமும், புத்திரனிடமும் பந்துக்களிடமும் (மற்றெல்லாரிடமும்) சத்ருதயோ, சினேகமோ கொள்ளாதே.  (உனக்கு) அதிவேகம் விஷ்ணுபதம் (ப்ரஹ்மதவம் அல்லது ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்) கிடைக்க வேண்டுமானால், எல்லவற்றிலும் இறைவனை காணும் ஸமபாவனை நிலையை அடைவாயாக.

🍀#விளக்கம்:🍀
**************
ஸத்திய நிலை பெற, ஆசாபாசத்தை விட்டால் மட்டும் போதாது, ஈல்லாற்றிலும் ஏக சக்தியாக விளங்கும் அந்த பரமாதம தத்துவத்தை உணரவேண்டும்.  இதற்க்கு சத்ருத்வம், மைத்ரி, ஸுகம், துக்கம், நான், நீ முதலிய த்வந்த்வ பாவம் போய எல்லாம் ப்ரஹ்ம மயம் என்ற ஸமபாவம் வரவேண்டும்.

அதத்தான் இங்கு வலியுறுத்துகிறார்.  இங்கு சத்ருக்கள், மித்ரர், புத்திரன், பந்துக்கள் என்று மட்டும் சொல்லவில்லை.  இப்படி சொல்வதிலிருந்து, எல்லா ஜீவராசிகளும் உள்படும்.  உதாரணத்திர்க்காக  இவை நாலை மட்டும் குறிப்பிடுகிறார்.  இதில் எல்லா வித பந்தங்களும் அடங்கிவிட்டன.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்...............🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் 🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...