Friday, 11 May 2018

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  24
*******************
த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணூ:
ஸர்வஸ்மின் அபி ப்ச்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்

🍀#ஸாரம்:🍀
**********
உன்னிலும், என்னிலும், எலலாற்றிலும் ஒரே சக்தியாக விஷ்ணு (இறைவன்) வீற்றிருக்கிறார்.  பொறுமையிழந்து நீ எனனிடம் கோபம் கொள்கிறாய். எல்லாற்றிலும், எல்லோரிலும் நீ அந்த இறைவனை (SELF).பாற்.  வ்ய்கதி பேதங்களை உருவக்கும் அந்த அஞ்ஞானத்தை துற

#🍀விளக்கம்:🍀
**************
ஸமபாவனை வருவத்ர்க்கு வஷி காட்டுகிறார்.  நாம் எல்லோரிலும், உலகிலுள்ளா எல்லா வஸ்துக்களிலும் உயிராக ஓர்சக்தி திகழ்கிறது. அதைத்தான் இறைவன் என கூறுகிறோம்.  அப்ப்டியானால் ஒருவன் மற்றொருவன் பால் காண்பிக்கும் க்ரோதம் (கோப்ம்) சரியல்லவே.  கோபம் ஏன் வருகிறது?  பொறுமை இல்லாததால்.  பொறுமை ஏன் இல்லாதாகிறது? நான் வேறு, நீ வேறு, மற்றவைகள் தனிதனி என அஞ்ஞானத்தால் உண்டாகும் வ்யக்தி பேதமே.

 உலகில் எல்லா வஸ்துக்களிலும்  திகழும் சக்தி (இறைவன்) ஒன்றேதான்.  அப்ப்டியானால் இந்த வ்யக்தி பேதம் ஏன் மருகிறது?  அதுதான் அஞ்ஞானம் (அறிவீனம்) எனப்படுவது.  இந்த அஞ்ஞானம் அக்ன்றால் இந்த வ்யக்தி பேதமும் அகலும்.  மேலே சொன்ன உண்மை புரியும்.  அப்படி புரிந்தால் எல்லாற்றிலும் இறைவனை காண்முடியும்.  இந்த நிலைக்கு ஸமபாவனை என பேர். 

இந்த நிலையயைத்தான் ஸ்ரீ கிருஷ்னன் யுத்த்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஞானக்கண் தந்து தன் விஸ்வரூப  தரிசனத்தில் கண்கூடாக காண்பித்தாற்.  அங்கு அர்ஜுனன் இந்த உலகம் முழுவதும், அதிலுள்ள சராசரங்கள், தான், கிருஷ்னன், ய்த்த்க்களம், அதில் நிரந்ததுநிற்க்கும் வீரர்கள் எல்லாவற்றையும் கண்டான்.  பிறகு அவனுக்கு ஞானோதயம் வந்தது.

ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்ம்மேந்த்ர ஸ்வாமிகள் தான் இயற்றிய ப்ஜனை பாடல்கள் ஒன்றில் இதை "ஸ்ர்வம் ப்ரஹ்ம மயம்" என எடுத்துரரைத்திருக்கிறார்.

அவர் பெரிய ஞானி. ஸ்ரீ தியாகராஜ ஸ்வமிகள் தன் க்ருதிகளில் இதைத்தான் "எல்லாம் ரமமயம்" என பாடினார்.  அவர் பக்திமான்.  எல்லாவற்றிலும் அவர் இறைவன் ராமனையே கண்டார். ஞான மார்கம் பக்தி மார்கம் இரண்டிலும் இதைத்தான் தந்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்............🍀

🍀#தொகுப்பு  : #திருமதி #லதாவெங்கடேஷ்வரன் 🍀

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...