Friday, 26 May 2023

அபரா ஏகாதசி

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


இன்று ‌15.05.2023


திங்கட்கிழமை 


அபரா ஏகாதசி


விஷ்ணுபதி புண்ணிய காலம். 


விருஷப சங்கராந்தி


துவாபர யுகாந்தம்


சபரிமலை நடை திறப்பு 


காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி குதிரையில் திருவீதி உலா. 


திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் புறப்பாடு.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் விடையாற்று உற்சவம்


ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல் 


செய்துங்கநல்லூர் (தென்சிதம்பரம்) அருள்தரும் ஸ்ரீ சிவகாமிஅம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிசேகம்


சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.


ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.


வீரபாண்டி கௌமாரியம்மன் மேற்கு ரத வீதியிலிருந்து நிலைக்கு வருதல். இரவு மின்விளக்கு அலங்கார முத்து சப்பரத்தில் தேர்தடம் பார்த்தல்.


சென்னை சென்ன கேசவப்பெருமாள் விடையாற்று உற்சவம் 


🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏


இன்று அபரா ஏகாதசி


ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை இந்த அபரா ஏகாதசி ஏற்படுகிறது. 


`அபரா’ என்றால் மிகச்சிறந்த என்றும் அளவில்லாத பலனைக் கொடுப்பது என்றும் பொருள். எல்லாவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், நாம் கேட்கும் அனைத்து விதமான செல்வங்களையும் அளிக்க வல்லது என்று சொல்கின்றன புராணங்கள். 


இந்த ஏகாதசிக்கு அம்பரீஷன் கதை சொல்லப்படுகிறது. அம்பரீஷன் மிகச்சிறந்த திருமால் பக்தன். ஏகாதசியை தவறாமல் கடைப்பிடிப்பவன்.

எந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் மற்ற விரதங்கள் கடைப்பிடிக்க தேவையில்லாதபடிக்கு அத்தனை பலன்களையும் தருகிறதோ அந்த விரதம் ஏகாதசி விரதம்.  


அம்பரீஷன் தன்னுடைய நாட்டு மக்களையும் கடைபிடிக்க வைத்தான். அதனால், அந்த நாட்டில் செல்வமும் சிறப்பும் நாளுக்கு நாள் வளர்ந்தது.


ஒரு ஏகாதசி விரதத்தின் போது துர்வாச முனிவர் இவருடைய அரண்மனைக்கு வந்தார். முனிவரை வரவேற்றவர், தன்னோடு துவாதசி பாரணையைச் செய்ய வேண்டும் என்று முனிவரிடம் சொன்னார். 


முனிவரும், ‘‘நான் நீராடி விட்டு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய சீடர்கள் குழுவோடு நீராடச் சென்றுவிட்டார். ஏகாதசி விரதத்தின் முக்கியமான விஷயம் துவாதசி பாரணைதான் (காலையில் சீக்கிரமாக எழுந்து ஆண்டவனுக்கு நிவேதித்து அந்த உணவை உண்ண வேண்டும்).


துவாதசி பாரணை குறிப்பிட்ட நேரத்தில் கடைப் பிடிக்காவிட்டால் ஏகாதசி விரதத்தில் பலன் கிடைக்காது. நேரம் கடந்துகொண்டிருந்தது. அம்பரீசன் தவித்தான். 


முனிவர் வர வேண்டுமே என்று துடித்தான். ஆனால், நீராடச் சென்ற முனிவர் வரவில்லை. அப்பொழுது அவர் துவாதசி பாரணை காலத்துக்குள் துளசி தீர்த்தத்தை மட்டும் பருகினால் தோஷம் இல்லை என்று நினைத்து பூஜையில் இருந்த துளசி தீர்த்தத்தை உத்தரணியில் எடுத்து பருகியவுடன் துர்வாசர் வந்துவிட்டார்.


"என்னை விட்டுவிட்டு எப்படி நீ துவாதசி விரதத்தைத் செய்தாய்?’’ என்று சொல்லி கடும் கோபம் கொண்டார். அம்பரீசன் பணிவோடு சொன்ன சமாதானங்களை அவர் ஏற்கவில்லை. 


தன்னுடைய ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டு அதை கடுமையான ஒரு பூதமாக உருவாக்கி அம்பரீஷனை அழிப்பதற்காக அனுப்பினார். அம்பரீஷன் திருமாலிடம் சரணடைய, அவர் கரத்திலிருந்த சக்ராயுதம் புறப்பட்டு வந்து துர்வாசர் அனுப்பிய பூதத்தை அழித்தது.

துர்வாச முனிவரையும் துரத்தியது. 


முனிவர் அடைக்கலம் தேடி இந்திர லோகத்திற்குச் சென்றார். பிரம்ம லோகத்துக்குச் சென்றார். எங்கு சென்றும் அவருக்கு அடைக்கலம் கிடைக்கவில்லை. 


சக்கரத்தின் வேகத்தைப் பார்த்து அனைவரும் பயந்தனர். சக்கரபாணியான திருமாலிடமே செல்லலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்றவுடன் திருமால், ‘‘நீ பரந்தாமனை அவமதித்தால் என்னிடம் சரண் செய்து அடைக்கலம் கொள்ளலாம். ஆனால், நீ அவமதித்தது பரந்தாமன் பக்தனான அம்பரீஷனை.

அதற்கு பிராயச்சித்தம் செய்ய முடியாது. என்னுடைய சக்கரம் பாகவதனை காக்கும் பொருட்டு வந்ததால், அதனை நான் கட்டுப்படுத்த முடியாது. நீ அம்பரீஷனிடமே அடைக்கலம் தேடு’’ என்று சொன்னவுடன், அம்பரீசன் அரண்மனைக்கு வந்து துர்வாச முனிவர் அடைக்கலம் கேட்டார். 


அம்பரீசன் சக்கரத்தாயுதத்தை வேண்ட, சக்கரம் பழையபடி திருமாலின் திருக்கையை அடைந்தது. இன்றைய தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் சேரும். 


குறிப்பாக உலகளந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாளை வழிபட பூரணமான பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...