Friday, 26 May 2023

அபரா ஏகாதசி

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


இன்று ‌15.05.2023


திங்கட்கிழமை 


அபரா ஏகாதசி


விஷ்ணுபதி புண்ணிய காலம். 


விருஷப சங்கராந்தி


துவாபர யுகாந்தம்


சபரிமலை நடை திறப்பு 


காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி குதிரையில் திருவீதி உலா. 


திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் புறப்பாடு.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் விடையாற்று உற்சவம்


ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல் 


செய்துங்கநல்லூர் (தென்சிதம்பரம்) அருள்தரும் ஸ்ரீ சிவகாமிஅம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிசேகம்


சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.


ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.


வீரபாண்டி கௌமாரியம்மன் மேற்கு ரத வீதியிலிருந்து நிலைக்கு வருதல். இரவு மின்விளக்கு அலங்கார முத்து சப்பரத்தில் தேர்தடம் பார்த்தல்.


சென்னை சென்ன கேசவப்பெருமாள் விடையாற்று உற்சவம் 


🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏


இன்று அபரா ஏகாதசி


ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை இந்த அபரா ஏகாதசி ஏற்படுகிறது. 


`அபரா’ என்றால் மிகச்சிறந்த என்றும் அளவில்லாத பலனைக் கொடுப்பது என்றும் பொருள். எல்லாவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், நாம் கேட்கும் அனைத்து விதமான செல்வங்களையும் அளிக்க வல்லது என்று சொல்கின்றன புராணங்கள். 


இந்த ஏகாதசிக்கு அம்பரீஷன் கதை சொல்லப்படுகிறது. அம்பரீஷன் மிகச்சிறந்த திருமால் பக்தன். ஏகாதசியை தவறாமல் கடைப்பிடிப்பவன்.

எந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் மற்ற விரதங்கள் கடைப்பிடிக்க தேவையில்லாதபடிக்கு அத்தனை பலன்களையும் தருகிறதோ அந்த விரதம் ஏகாதசி விரதம்.  


அம்பரீஷன் தன்னுடைய நாட்டு மக்களையும் கடைபிடிக்க வைத்தான். அதனால், அந்த நாட்டில் செல்வமும் சிறப்பும் நாளுக்கு நாள் வளர்ந்தது.


ஒரு ஏகாதசி விரதத்தின் போது துர்வாச முனிவர் இவருடைய அரண்மனைக்கு வந்தார். முனிவரை வரவேற்றவர், தன்னோடு துவாதசி பாரணையைச் செய்ய வேண்டும் என்று முனிவரிடம் சொன்னார். 


முனிவரும், ‘‘நான் நீராடி விட்டு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய சீடர்கள் குழுவோடு நீராடச் சென்றுவிட்டார். ஏகாதசி விரதத்தின் முக்கியமான விஷயம் துவாதசி பாரணைதான் (காலையில் சீக்கிரமாக எழுந்து ஆண்டவனுக்கு நிவேதித்து அந்த உணவை உண்ண வேண்டும்).


துவாதசி பாரணை குறிப்பிட்ட நேரத்தில் கடைப் பிடிக்காவிட்டால் ஏகாதசி விரதத்தில் பலன் கிடைக்காது. நேரம் கடந்துகொண்டிருந்தது. அம்பரீசன் தவித்தான். 


முனிவர் வர வேண்டுமே என்று துடித்தான். ஆனால், நீராடச் சென்ற முனிவர் வரவில்லை. அப்பொழுது அவர் துவாதசி பாரணை காலத்துக்குள் துளசி தீர்த்தத்தை மட்டும் பருகினால் தோஷம் இல்லை என்று நினைத்து பூஜையில் இருந்த துளசி தீர்த்தத்தை உத்தரணியில் எடுத்து பருகியவுடன் துர்வாசர் வந்துவிட்டார்.


"என்னை விட்டுவிட்டு எப்படி நீ துவாதசி விரதத்தைத் செய்தாய்?’’ என்று சொல்லி கடும் கோபம் கொண்டார். அம்பரீசன் பணிவோடு சொன்ன சமாதானங்களை அவர் ஏற்கவில்லை. 


தன்னுடைய ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டு அதை கடுமையான ஒரு பூதமாக உருவாக்கி அம்பரீஷனை அழிப்பதற்காக அனுப்பினார். அம்பரீஷன் திருமாலிடம் சரணடைய, அவர் கரத்திலிருந்த சக்ராயுதம் புறப்பட்டு வந்து துர்வாசர் அனுப்பிய பூதத்தை அழித்தது.

துர்வாச முனிவரையும் துரத்தியது. 


முனிவர் அடைக்கலம் தேடி இந்திர லோகத்திற்குச் சென்றார். பிரம்ம லோகத்துக்குச் சென்றார். எங்கு சென்றும் அவருக்கு அடைக்கலம் கிடைக்கவில்லை. 


சக்கரத்தின் வேகத்தைப் பார்த்து அனைவரும் பயந்தனர். சக்கரபாணியான திருமாலிடமே செல்லலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்றவுடன் திருமால், ‘‘நீ பரந்தாமனை அவமதித்தால் என்னிடம் சரண் செய்து அடைக்கலம் கொள்ளலாம். ஆனால், நீ அவமதித்தது பரந்தாமன் பக்தனான அம்பரீஷனை.

அதற்கு பிராயச்சித்தம் செய்ய முடியாது. என்னுடைய சக்கரம் பாகவதனை காக்கும் பொருட்டு வந்ததால், அதனை நான் கட்டுப்படுத்த முடியாது. நீ அம்பரீஷனிடமே அடைக்கலம் தேடு’’ என்று சொன்னவுடன், அம்பரீசன் அரண்மனைக்கு வந்து துர்வாச முனிவர் அடைக்கலம் கேட்டார். 


அம்பரீசன் சக்கரத்தாயுதத்தை வேண்ட, சக்கரம் பழையபடி திருமாலின் திருக்கையை அடைந்தது. இன்றைய தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் சேரும். 


குறிப்பாக உலகளந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாளை வழிபட பூரணமான பலன் கிடைக்கும்.

ஸ்ரீ_ருத்ரம்

 🌹 🌿 #ஸ்ரீ_ருத்ரம்_தமிழில் 🌿🌹


🌹 🌿 ஓம் நமோ பகவதே ருத்ராய

நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து

தன்வனே பாஹுப்யா முத தே நம:


🌹 🌿 யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா

யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா


🌹 🌿 யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா

ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி


🌹 🌿 யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர

தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்


🌹 🌿 ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந:

ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்


🌹 🌿 அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச

ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:


🌹 🌿 அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே

சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா

ஹேட ஈமஹே


🌹 🌿 அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்

கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா

பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:


🌹 🌿 நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே

அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:


🌹 🌿 ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே

ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப


🌹 🌿 அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய

ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ


🌹 🌿 விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந்

நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:


🌹 🌿 யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா

ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ


🌹 🌿 நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத

தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே


🌹 🌿 பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய

இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்


🌹 🌿 நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய

த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன்

மஹாதேவாய நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – இரண்டாவது அனுவாகம்


🌹 🌿 நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே

திஸாம் ச பதயே நமோ நமோ

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:


நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ

நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ

நமோ ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ

நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ

நமோ ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ

நமோ ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ


நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ

நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ

புநமோ வந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:

நமோ உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:

நம: க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – மூன்றாவது அனுவாகம்


🌹 🌿 நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:

நம: ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ

நமோ நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ

நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ

நமோ நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:

நமோ ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ

நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:

நமோ உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:


🌹 🌿 நமோ இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம

நம: ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம

நம: ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம

நம: ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்

நமோ திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::

நம: ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – நான்காவது அனுவாகம்


🌹 🌿 நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம

நம உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ


🌹 🌿 நமோ ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:

நம: க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்

நம: தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:

நநம:குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம

நம: புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம

நம: இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:

நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – ஐந்தாவது அனுவாகம்


🌹 🌿 நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச

நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச


🌹 🌿 நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – ஆறாவது அனுவாகம்


🌹 🌿 நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச


🌹 🌿 நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச


🌹 🌿 ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றதுஸ்ரீ ருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். "ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும்- என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.


🌹🌿ஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தியடைகின்றார்கள் என்பதை சூதசம்ஹிதையில், "விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித" என்று கூறுகின்றது.


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ஹோமம் சிறப்பு :


🌹 🌿 ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல சிதிலமடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், பல அருட்ப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்தி அடையவும் ருத்ர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது என்பது நிதர்சன உண்மை.


🌹 🌿 ஸ்ரீ ருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். "ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும்- என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.


🌹 🌿 ஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தியடைகின்றார்கள் என்பதை சூதசம்ஹிதையில், "விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித" என்று கூறுகின்றது.


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவர்கள் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றனர். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம், குடும்பத்தில் தடைபெற்ற காரியங்கள் நிவர்த்தி பெறவும், சுப நிகழ்ச்சிகள், உத்தியோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மனைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம். ஸ்ரீ ருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று சூதசம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதி உன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ர ஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.


🌹 🌿 பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.


🌹 🌿 ஏகாதச ருத்ரம்


11 முறை ருத்ரம் சொல்வது, ஏகாதச ருத்ரம் எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை 11 நபர்கள் 11 முறை சொல்வது, 'லகு ருத்ரம். லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, 'அதிருத்ரம்' ஆகும்

Sunday, 14 May 2023

தேவி நவரத்ன மாலிகா ஸ்தோத்ரம்

 தேவி நவரத்ன மாலிகா ஸ்தோத்ரம்


1. ஹார நூபுர கிரீட குண்டல விபூஷிதாவயவ சோபினீம்

காரணேச வர மௌலிகோடி பரிகல்ப்யமான பத பீடிகாம்

காலகால பணி பாசபாண தநுரங்குசா மருண மேகலாம்

பாலபூதிலக லோசனாம் மநஸி பாவயாமி பரதேவதாம்


பொருள்: ஹாரம், கொலுசு, கிரீடம், குண்டலங்கள் அவயவங்களை அலங்கரிக்க பிரகாசிப்பவளும்; இந்திரன், பிரம்மா முதலிய தேவர்களின் கிரீடங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்; மிகக் கருத்த நாகங்கள், பாசம், வில், அங்குசம், சிவந்த ஒட்டியாணம் ஆகியவற்றைத் தரிப்பவளும்; திலகம் போன்ற நெற்றிக் கண்ணினை உடையவளுமான பர தேவதையை மனதால் வணங்குகிறேன்.


2. கந்தஸார கனஸார சாருநவ

நாகவல்லிரஸ வாஸிநீம்

ஸாந்த்யராக மதுராதராபரண

ஸுந்தரானன சுசிஸ்மிதம்

மந்தராயத விலோசனா மமலபால

சந்த்ர க்ருத சேகரீம்

இந்திரா ரமண ஸோதரீம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: மணமுள்ள வாசனைப் பாக்கு, கருப்பூரம் இவற்றுடன் கூடிய அழகானதும் துளிரானதுமான வெற்றிலையை போட்டுக் கொண்டதால் ஏற்படும் வாசனையை உடையவளும்; சந்தியா காலம் போன்ற அழகான சிவந்த உதடுகளை உடையவளும், நீண்ட கண்களை உடையவளும் களங்கமில்லாத இளம் பிறை சந்திரனை தலையில் அணிந்து கொண்டவளும், லக்ஷ்மி நாயகனான மஹாவிஷ்ணுவின் சகோதரியுமான பரதேவதையை மனதினால் தியானிக்கிறேன்.


3. ஸ்மேர சாரு முக மண்டலாம்

விமலகண்ட லம்பிமணி மண்டலாம்

ஹாரதாமபரி சோபமான

குசபார பீரு தனு மத்யமாம்

வீரகர்வஹர நூபுராம் விவித

காரணேச வர பீடிகாம்

மார வைரிஸஹ சாரிணீம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: புன்முறுவல் பூத்த வதனமும், மாசற்ற கன்னப்பிரதேசமும், அணிகலன்களாலும் ஹாரங்களாலும் அணி செய்யப்பட்டதும், மிகப் பருத்தவையுமான தனங்களின் பாரத்தினால் வருத்தப்படும் நூல் போன்ற இடையே உடையவளும், வீரர்களின் கர்வத்தை அடக்குவது போன்ற கொலுசுகளைத் தரித்தவளும், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியோரைத் தனது சிம்மாசனத்தின் கால்களாய்க் கொண்டவளும், மன்மதனுடைய விரோதியான பரமசிவனின் தர்மபத்தினியுமான பர

தேவதையை மனதார ஸ்மரிக்கிறேன்.


4. பூரி பார தர குண்டலீந்த்ரமணி

பத்த பூவலய பீடிகாம்

வாரிராசி மணி மேலாவலய

வஹ்னி மண்டல சரீரிணீம்

வாரிஸாரவஹ குண்டலாம்

ககனசேகரீஞ் ச பரமாத்மிகாம்

சாரு சந்த்ர ரவி லோசனாம்

மனஸி பாவயாமி பரரேதவதாம்


பொருள்: பூமி பாரத்தைச் சுமக்கும் ஆதிசேஷனின் மணிபதித்த உலக உருவான பீடத்தை உடையவளும், கடலில் உண்டாகும் விசேஷ மணிகளாலான ஒட்டியாணத்தை தரித்தவளும், அக்னி மண்டலத்தையே சரீரமாக கொண்டவளும், கடலின் சாரமான குண்டலத்தை அணிபவளும், ஆகாயமளாவிய சிரஸையுடையவளும், எங்கும் நிறைந்த பரமாத்மா (காற்று) எனப் போற்றப்படுபவளும், அழகிய சூரிய சந்திரர்களையே தன்னிரு விழிகளாகவுடையவளுமான பரதேவதையை மனதால் துதிக்கிறேன்.


5. குண்டல த்ரிவித கோண மண்டல

விஹார ஷட்தல ஸமுல்லஸத்

புண்டரீக முக பேதினீம் தருண

சண்ட பானு தடிதுஜ் ஜ்வலாம்

மண்டலேந்து பரிவாஹிதாம்ருத

தரங்கிணீ மருணரூபிணீம்

மண்டலாந்தமணி தீபிகாம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: ஸ்ரீசக்ரத்தில் பிந்துவான முக்கோணம், அதைச் சுற்றியுள்ள ஆறு இதழ்களில் பிரகாசிக்கிறவளும் தாமரையை நாணித்தலைகுனிய வைக்கும் முக வசீகரமும் ஒளியும் உடையவளும், சூரியனின் காந்திக்கும் மின்னலுக்கும் ஒப்பானவளும்,

சந்திர மண்டலத்திலிருந்து பீறிடும் அமிர்தமயமான கிரணங்களை நிகர்த்தவளும், சிவந்த உருவத்தை உடையவளும், வட்டமாய் மறைந்த தீப வரிசைகளைக் கொண்டவளுமான பர தேவதையை மனதில் தியானிக்கிறேன்.


6. வாரணானன மயூரவாஹமுக

தாஹவாரண பயோதராம்

சாரணாதி ஸுர ஸுந்தரீ சிகுர

சோகரீக்ருத் பதாம்புஜாம்

காரணாதிபதி பஞ்சக ப்ரக்ருதி

காரண ப்ரதம மாத்ருகாம்

வாரணாந்தமுக பாரணாம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: யானைமுகன், மயில் வாகனன் ஆகியோரின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஞானப் பால் கொடுத்த தனங்களை உடையவளும், தேவமகளிர் பாதத்தில் விழுந்து வணங்கும் போது அவர்களின் திரு முடிகளால் ஸ்பரிசம் செய்யப்பட்ட திருவடிகளை உடையவளும், பிரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் என ஐந்து சிருஷ்டித் தொழில்களை செய்வோரை இயக்கி வைப்பவளும், ஆதி மாதாவும் விநாயகரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றிடச் செய்பவளுமான பரதேவதையை மனதால் துதிக்கிறேன்.


7. பத்மகாந்தி பத பாணிபல்லவ

பயோதரானன ஸரோருஹாம்

பத்மராகமணி மேகலாவலய

நீவி சோபித நிதம்பினீம்

பத்மஸம்பவ ஸதாசிவாந்தமய

பஞ்சரத்ன பத பீடிகாம்

பத்மினீம் ப்ரணவருபிணீம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: தாமரையைப் போன்ற தளிர்க் கரங்களும் பாதங்களும் உடையவளும், பதுமராக மணியினாலான ஒட்டியாணம் அணிந்தவளும் புடவை முடிச்சுடன் கூடிய இடுப்பினை உடையவளும், பிரும்மா முதல் சதாசிவன் வரையான பஞ்ச மூர்த்திகள் தாங்கும் சிம்மாசனத்தை உடையவளும், லக்ஷ்மியும், ஓங்கார வடிவினளுமான பர தேவதையை மனதால் வணங்குகிறேன்.


8. ஆகம ப்ரணவ பீடிகா மமல

வர்ண மங்கல சரீரிணீம்

ஆகமாவயவ சோபினீ மகில

தேவஸாரக்ருத சேகரீம்

மூலமந்த்ர முகமண்டலாம் முதித

நாதபிந்து நவயௌவனாம்

மாத்ருகாம் த்ரிபுரஸுந்தரீம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: வேதத்தையும் பிரணவத்தையும் தனது பீடமாய் உடையவளும், அகரம் முதலான 51 எழுத்துகளையும் தனது மங்கள உருவாயுடையவளும், ஆகமங்களையே தன்னுடைய அவயவங்களாகக் கொண்டு ஒளியுடன் விளங்குபவளும், எல்லா வேதங்களில் முடிவுப் பொருளாக உருக்கொண்டவளும், மூல மந்திரமெனப்படும் ஸ்ரீ வித்யா மந்திரமே தனது முக மண்டலமாயுள்ளவளும், நாதம் பிந்து இரண்டும் இணைந்த நாதபிந்து வடிவமாயுள்ளவளும், தினம் தினம் புதிதாகத் தெரியும் யௌவனத்தையுடையவளும், அட்சரமாயும், திரிபுர சுந்தரி என பெயருள்ளவளாயும் உள்ள பரதேவதையை மனதால் நமஸ்கரிக்கிறேன். இந்த ஸ்லோகத்தில் அன்னையின் மந்திர மகிமை மிகவும் விசேஷமாகக் குறிப்பிடப்படுகிறது.


9. காலிகா திமிர குந்தலாந்த கன

ப்ருங்க மங்கல விராஜினீம்

சூலிகா சிகர மாலிகாவலய

மல்லிகா ஸுரபி ஸெளரபாம்

பாலிகா மதுரகண்ட மண்டல

மனோஹரானன ஸரோருஹாம்

காலிகா மகில நாயிகாம் மனஸி

பாவயாமி பரதேவதாம்


பொருள்: நெற்றிக்கு மேலே கருமேகத்தைப் போன்று வண்டுகளின் வரிசைகளைப் போல் விளங்கும் முன்நெற்றிக் கேசத்தையுடையவளும், மல்லிகை போன்ற மணமுள்ள மலர் மாலைகளை அணிந்தவளும், தாமரை மலர் போன்ற சிவந்த கன்னப்பிரதேசத்தையுடையவளும், சர்வலோக நாயகியான காளி என்ற பெயர் பெற்று விளங்குபவளுமான பரதேவதையை மனதால் வணங்குகிறேன்.


10. நித்யமேவ நியமேன ஜல்பதாம்

புக்தி முக்தி பலதா மபீஷ்டதாம்

சங்கரேண ரசிதாம் ஸதா ஜபேந்

நாம ரத்ன வர ரத்னமாலிகாம்


பொருள்: ஒன்பது துதிகளால் தேவியைப் பணிந்துவிட்டு நாம ரத்னமாகிய இந்த நவரத்ன மாலிகை என்கிற ஒன்பது சுலோகங்களையும் நாள்தோறும் படிப்பவர்கள் போகம், மோட்சம் என்ற இரண்டையும் அடைவர். அவர்களது ஆசைகள் நிறைவேறும் என்பதையே இந்தப் பத்தாவது ஸ்லோகத்தில் பலஸ்ருதியாக ஆதிசங்கரப்பெருமான் சொல்லியிருக்கிறார்.


அம்பிகையின் திருவடிகளில் சரணம்...

மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்

 மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்


1.கல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யே விராஜன்மணி


த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதேகாதம்ப வாட்யுஜ்வலேமி


ரத்னஸ்தம்ப ஸஹஸ்ரநிர்மித ஸபாமத்யே விமாநோத்தமே


சிந்தாரத்ன விநிர்மிதம் ஜநதி தே ஸிம்ஹாஸநம் பாவயேமிமி


அலை பொங்கும் அம்ருதக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில், கல்பகச்சோலை சூழ்ந்த கதம்ப மரத்தோப்பு விளங்குகிறது. அங்கு ஆயிரக்கணக்கில் ரத்னத்தூண்கள் அமைந்த ஸபையின் நடுவில் சீரியவிமானத்தின் சிந்தாமணியால் வடித்த ஸிம்மாஸனத்தை ஹேதாயே!மனதிற்பாவிக்கிறேன்.


2.ஏணாங்காநலபர்னு மண்டல லஸத் ஸ்ரீசர்கமத்யே ஸ்திதாம் I


பாலோர்கத்யுதிபாஸுராம கரதலை:பாசாங்குசௌபிப்ரதீம்


சாபம் பாணுமபி ப்ரஸந்நவதநாம் கௌஸும் பவஸ்த்ரான் விதாம்


தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம் பாவயே II


சந்த்ரன், அக்னி, சூர்யமண்டலங்கள் விளங்கும் ஸ்ரீசக்ரத்தின் நடுவில் அமர்ந்திருப்பவளும், இளம் சூர்யன் போன்று ஒளிர்பவளும், கைகளில் பாசம், அங்குசம், வில், அம்பு, இவற்றை வைத்திருப்பவளும், மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன், காவிவஸ்திரம் அணிந்தவளும், சந்த்ரபிறை கொண்ட கிரீடம் அணிந்தவளும், அழகிய புன்சிறிப்பு தவழும் அத்தகைய உன்னை மனதிற்காண்கிறேன்.


3.ஈசாநாதிபதம் சிவைகபலகம் ரத்னாஸனம் தே சுபம்


பாத்யம் குங்கும சந்தனாதிபரிதைரர்க்யம் ஸரத்னாக்ஷதை: I


சுத்தை ராச மநீயகம் தவஜலைர்பக்த்யா மயாகல்பிதம்


காருண்யாம்ருத வாரிதே ததகிலம் ஸந்து ஷ்டயே கல்பதாம் II


ஈசாநன், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் இவரால் தாங்கப்பட்டதும், சிவனொருவனை பலகையாகக் கொண்டதுமான நல்ல ரத்னமய ஆஸசனம், ஹே அன்னையே!உனது மகிழ்ச்சிக்காக அமையட்டும். குங்குமம், சந்தனம் இவை கலந்த பாத்தியமும், ரத்னமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும், சுத்த ஜலத்தால் ஆசம நீயகமும் நான் பக்தியுடன் ஸமர்ப்பிக்கிறேன். ஹே கருணைக் கடலே!இவையெல்லாம் உன் மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.


4.லக்ஷ்யே யோகிஜநஸ்ய ரக்ஷிதஜகத்ஜாலே விசாலே க்ஷணே


ப்ராலேயாம்பு படீரகுங்கும லஸத்கர்பூர மிச்ரோதகை:


கோக்ஷீரைரபி நாலிகேரஸலிலை:சுத்தோத கைர் மந்த்ரிதை:


ஸ்நானம் தேவி தியா மயைததகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II


ஹே தேவி, யோகிஜனங்களின் கடைசீ இலக்கானவளே. உலகத்தைக் காப்பவளே. பரந்த கண்ணுடையவளே பந்நீரும், சந்தனமும், குங்குமப்பூவும் பச்சைகற்பூரமும் கலந்த தண்ணீராலும், பசும்பால், உளநீர், மந்திரித்த சுத்த ஜலம் இவற்றாலும் மனதளவில் ஸ்நானம் செய்துவைக்கிறேன். இவையெல்லாம் உன் மகிழ்ச்சிக்கு ஹேதுவாகட்டும்.


5.ஹ்ரீங்காராங்கித மந்த்ரலக்ஷிததநோ ஹேமாசலாத் ஸஞ்சிதை:


ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம் கௌஸும்ப வர்ணாம் சுகம் I


முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ர மமலம் ஸெளவர்ண தந்தூத்பவம்


தத்தம் தேவி தியா மயைத்தகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II


ஹ்ரீங்காரத்தை உள்ளடக்கிய மந்த்ரத்தின் பொருளானவளே!தங்க மலையிலிருந்து சேகரித்த ரத்தினங்கள் இழைத்ததும், உதரீயத்துடன் கூடியதுமான ஆரஞ்சுக்கலர் துகிலையும் முத்துமணி கோவையான தூய யஞ்ஞோப வீதத்தையும் ஸமர்ப்பிக்கிறேன். இவை உனது ஸந்தோஷத்தை உண்டுபண்ணட்டுமே.


6.ஹம்ஸைரப்யதி லோபநீயகமநே ஹாராவ லீமுஜ்வலாம்


ஹிந்தோலத்யுதி ஹீரபூரிததரே ஹேமாங்கதே கங்கணே


மஞ்ஜீரௌ மணிகுண்டலே மகுடமப்யர்தேந்து சூடாமணிம்


நாஸாமெனக்திகம் அங்குலீயகடகௌ காஞ்சீமபிஸ்வீகுரு II


ஹே தேவி. ராஜ அன்னங்களே உன் நடைப்பழக ஏங்கி விரும்புகின்றனவே c, ஒளிரும் ஹாரத்தையும், அசைந்தாடும் ப்ரகாசமுள்ள வைரங்கள் பதித்த தங்க தோள்வளைகளையும், கைவளைகளையும், சதங்கைகளையும், குண்டலங்களையும் கிரீடம், அரைவிட்டப்பிறைசந்திர சிகை ஆபரணம், முத்து மூக்குத்தி, மோதிரம், கடகம், ஒட்டியானம் இவற்றையெல்லாம் ஸ்வீகரித்துக்கொள்.


7.ஸர்வாங்கே கனஸாரகுங்கும கனஸ்ரீகந்த பங்காங்கதிதம்


கஸ்தூரீதிலகம் ச பாலபலகே கோரோச நாபத்ரகம்மி


கண்டா கர்சனமண்டலே நயநயோர் த்வ்யாஞ்ஜநம் தேsரஞ்சிதம்


கண்டாப்ஜேம்ருகநாபி பங்கம் அமலம் த்வத்ப்ரீதயே கல்பதாம்


ஹேதேவி. உனது உடல் முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும், பளபளப்பான நெற்றியில் கஸ்தூரீ திலகமும், கண்ணாடி போன்று மழமழப்பும், பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைகோடும், கண்களில் திவ்யமான மையும், கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுதும் உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்.


8.கல்ஹாரோத்பல மல்லிகா மருவகை:ஸெளவர்ண பங்கேருனஹ:


ஜாதீசம்பகமாலதீவகுலகைர் மந்தார குந்தாதிபி:


கேதக்யா தரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜே மாலிகா:


ஸங்கல்பேந ஸமர்பயாமி வரதேஸந்து ஷ்டயே க்ருஹ்யதாம்மிமி


ஹே தேவி. வரங்களை கொடுத்தருள்பவளே. செந்தாமரை, உத்பலம், மல்லிகை, மருவகம், மஞ்சள் தாமரை, குந்தம், தாழை, அரளி ஆகிய பூக்களால் கட்டப்பட்ட மாலைகள், சரங்கள் மனதளவில் ஸமர்பிக்கப்படுகின்றன. இவை உனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.


9.ஹந்தாரம் மதநஸ்ய நந்தயஸி யைரங்கை ரநங்கோஜ்வலை:


பைர்ப்ருங்காவலி நீல குந்தலபரை:பத்நாஸி தஸ்யாசம் I


தாநீமாநி தவாம்ப கோமலதராண்யாமோதலீலாக்ருஹா-


ண்யாமோ தாய தசாங்க குக்குலுக்ருதைர் துபைரஹம் தூபயேமிமி


ஹே அன்னையே. உனது மிக மிருதுவான வாசனை மிக்க கேலீக்ருஹங்களை தசாங்கம், குக்குலு, பசுநெய் முதலியவற்றால் புகைத்து மணம் கமழ வைக்கிறேன். முதலாவதாக, மன்மதனையடக்கிய பரமேச்வரனுக்கே காம விகாரத்தையுண்டு பண்ணும் சில உடற்பாகங்கள், இரண்டாவதாக பரமேச்வரனின் புத்தியை ஸ்தம்பிக்கச்செய்யும் நீலமான சேங்கள் - மொய்க்கும் வண்டுக்கூட்ட மோவென விளங்குமவற்றையும் புகை போட்டு மணக்கவைக்கிறேன்.


10.லக்ஷ்மீ முஜ்வலயாமி ரத்னநிவஹோத் பாஸ்வந்தரே மந்திரே


மாலாரூப விலம்பிதைர்மணிமய ஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: I


சித்ரைர்ஹாடக புத்ரிகாகரத்ருதைர் கவ்யைர் க்ருதை: மிவர்திதை:


திவ்யைர்தீபகணை ர்தியா கிரிஸுதே ஸந்து ஷ்டயே கல்பதாம் II


ரத்ன கற்கள் இழைத்த உனது ஸ்ரீகோவிலில் மாலை போல் தொங்குகிறவையும், இரத்னமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றவையும், பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன். அது உன்னை மகிழ்விக்கட்டும்.


11.ஹ்ரீங்காரேச்வரி தப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸ ஹஸ்ரைர் ப்ருதம்,


திவ்யான்னம் க்ருதஸ¨பசாகபரிதம் சித்ரான்னபேதம்ததா I


துக்தான்னம் மதுசர்கரா ததியுதம் மாணிக்யயாத்ரே ஸ்திதம்


மாஷாபூப ஸஹஸ்ரமம்ப ஸகலம் நைவேத்யமாவேதயே II


ஹே ஹ்ரீங்காரேச்வரி! தாயே! உருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும் நிவேதனம் செய்கிறேன். நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும் சித்ரான்னங்களும், தயிர், தேன், சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம், ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.


12.ஸச்சாயைர்வரகேதகீதலருசா தாம்பூலவல்லீதலை:


பூகைர்பூரிகுணை:ஸுகந்தி மதுரை:கர்பூர கண்டோஜ்வலை: I


முக்தாசூர்ண விராஜிதைர் பகுவிதைர் வக்த்ராம் புஜா மோதனை:


பூரணா ரத்னகலாசிகா தவமுதே ந்யஸ்தா புரஸ்தாதுமே II


ஹே உமேமிஉனது எதிரில் இதோ ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன். அது உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் நல்ல தாழம்பூ போன்ற (நிறமான) வெற்றிலைகளும், இனிய மனம் கொண்ட பாக்குத் துகள்களும், பச்சை கற்பூரம், சுண்ணாம்பு கலந்து வாய்க்கு மணம் உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன.


13.கன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா


பாத்ரே மௌக்திக சித்ரபங்க்தி விலஸத்கர்பூர தீபாலிபி: I


தத்தத்தால ம்ருதங்க கீதஸஹிதம் ந்ருத்யத் பதாம்போருஹம்


மந்த்ராராதன பூர்வகம் ஸுவிஹிதம் நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி


அழகிய பெண்கள், அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துகேர்த்தாற்போல் கர்பூர தீபங்களை ஏந்தியவர்களாய், அந்தந்த தாள ஒலிக்கு ஏற்றார்போல் ஸங்கீதமும், நாட்டியமும் சேர்ந்து அப்யஸிக்கின்றவர்களாய், மந்திரங்களுடன் காட்டும் நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே!


14.லக்ஷ்மீர் மௌக்திக லக்ஷகல்பித ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்


இந்த்ராணீ ச ரதிஸ்ச சாமரவரே தத்தேஸ்வயம் பாரதீ I


வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம் ந்ருத்யந்திதத்ராகவத்


பாவை:ஆங்கிக ஸாத்விகை:ஸ்புடதரம் மாத ஸ்தாகர்ண்யதாம்மிமி


ஹே அன்னையே!லக்ஷ்மிதேவி, பல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள். இந்த்ராணியும், ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர். ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள். மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையட்டி கை கால் அசைவுகளாலும், ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர். இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!


15.ஹ்ரீங்காரத்ரயஸம்புடேந மனுநோபாஸ்யே த்ரியீமௌலிபி:


வாக்யைர்லக்ஷ்யதநோ தவஸ்துதிவிதௌ கோ வா க்ஷமேதாம்பிகே I


ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம் ஸஞ்சார ஏவாஸ்துதே


ஸம்வேசோ நமஸ:ஸஹஸ்ரமகிலம் த்வத்ப்ரீதயே கல்பதாம் II


ஹே அம்பிகே. மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் c. உபநிஷத்துக்களால் காணத்தக்கவளும் கூட. உன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்?ஆகவே, நான் பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும், நான் இக்குங்குமம் ஸஞ்சரிப்பதே உன்னை பிரக்ஷிணம் செய்வதாகவும், நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்து, உனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.


16.ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயா கிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா


ஸந்த்யாஸுப்ரதிவாஸரம் ஸுநியதஸ்தஸ்யாமலம் ஸ்யான்மந:


சித்தாம்போருஹ மண்டபே கிரிஸுதாந்ருத்தம் விதத்தே ரஸாத்


வாணீ வக்த்ரஸரோருஹே ஜலதிஜா கேஹேஜகன்மங்களா II


எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.


17.இதிகிரிவர புத்ரீ பாத ராஜீவ பூஷா


புவன மமலயந்தீ ஸ¨க்தி ஸெளரப்ய ஸாரை: I


சிவபத மகரந்த ஸ்யந்திநீயம் நிபந்தா


மதயது கவிப்ருங்கான் மாத்ருகா புஷ்பமாலைமிமி


என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலை, நல்ல வாஸனையால் உலகை தூய்மை பெறச் செய்து, அன்னையின் திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளது. சிவனின் பதங்களின் மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.


மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .

ஸ்ரீ_லட்சுமி_நரசிம்மர்_கவசம்

 #ஸ்ரீ_லட்சுமி_நரசிம்மர்_கவசம்


1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே

ப்ரஹ்லாதே னோதிதம் புரா

ஸர்வ ரக்ஷகரம் புண்யம்

ஸர்வோ பத்ரவ நாசனம்


2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ

ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்

த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்

ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம்


3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம்

சரதிந்து ஸமப்ரபம்

லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்

விபூதி பிருபாஸிதம்


4. சதுர்புஜம் கோமளாங்கம்

ஸ்வர்ணகுண்டல சோபிதம்

ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம்

ரத்ன கேயூர முத்ரிதம்


5. தப்த காஞ்சன ஸங்காசம்

பீத நிர்மல வாஸஸம்

இந்திராதி ஸுரமௌளிஸ்த

ஸ்புரன் மாணிக்ய தீம்திபி


6. விராஜித பத த்வந்த்வம்

சங்க சக்ராதி ஹோதிபி

கருத்மதாச வினயா

ஸ்தூயமானம் முதான்விதம்


7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்

க்ருத்வாது கவசம் படேத்

ந்ருஸிம்ஹோ மே சிர பாது

லோக ரக்ஷõத்ம ஸம்பவ


8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ

பாலம் மே ரக்ஷதுத்வனிம்

ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது

ஸோம ஸூர்யாக்னி லோசன


9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி

முனியாய் ஸ்துதி பிரிய

நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து

முகம் லக்ஷ்மீ முக ப்ரிய


10. ஸர்வ வித்யாதிப: பாது

ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம,

வக்த்ரம் பாத்விந்து வதன

ஸதா ப்ரஹ்லாத வந்தித


11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம்

ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்

திவ்யாஸ்த்ர சோபிதபுஜ

ந்ருஸிம்ஹ: பாதுமே புஜௌ


12. கரௌமே தேவ வரதோ

ந்ருஸிம் ஹ: பாது ஸர்வத

ஹ்ருதயம் யோகி ஸாத்யச்ச

நிவாஸம் பாதுமே ஹரி


13. மத்யம் பாது ஹிரண்யாக்ஷ

வக்ஷ: குக்ஷி விதாரண

நாபிம் மே பாது ந்ருஹரி

ஸ்வநாபி ப்ரம்ஹ ஸம்ஸ்துத


14. ப்ரம்ஹாண்ட கோடய கட்யாம்

யஸ்யாஸெள பாதுமே கடிம்

குஹ்யம் மே பாது குஹ்யானாம்

மந்த்ராணாம் குஹ்யரூப த்ருக்


15. ஊருமனோ பவ பாது

ஜானுனீ நரரூப த்ருத்

ஜங்கே பாது தரா பரா

ஹர்தா யோஸள ந்ருகேஸரீ


16. ஸூர ராஜ்ய ப்ரத பாது

பாதௌ மே ந்ருஹரீச்வர

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ

பாதுமே ஸர்வதஸ் தனும்


17. மஹோக்ர பூர்வத பாது

மஹா வீரா க்ரஜோக்னித

மஹாவிஷ்ணுர் தக்ஷிணேது

மஹா ஜ்வாலஸ்து நைருதௌ


18. பச்சிமே பாது ஸர்வேசோ

திசிமே ஸர்வதோ முக

ந்ருஸிம்ஹ பாது வாயவ்யாம்

ஸெளம்யாம் பூரண விக்ரஹ


19. ஈசான்யாம் பாது பத்ரோமே

ஸர்வ மங்கள தாயக

ஸம்ஸார பயத பாது

ம்ருத்யோர் ம்ருத்யுர் ந்ருகேஸரீ


20. இதம் ந்ருஸிம்ஹ கவசம்

ப்ரஹ்லாத முக மண்டிதம்

பத்திமான் ய படேந்நித்யம்

ஸர்வ பாபை ப்ரமுச்யதே


21. புத்ரவான் தனவாம் லோகே

திர்க்காயு ரூப ஜாயதே

யம் யம் காமயதே காமம்

தம் தம் ப்ராப்னோத்ய ளும்சயம்


22. ஸர்வத்ர ஜய மாப்னோதி

ஸர்வத்ர விஜயீ பவேத்

பூம்யந்தரிக்ஷ திவ்யானாம்

க்ரஹாணாம் வினிவாரணம்


23. வ்ருச்சிகோரக ஸம்பூத

விஷாப ஹரணம் பரம்

ப்ரம்ஹ ராக்ஷஸ யக்ஷணாம்

தூரோத்ஸாரண காரணம்


24. பூர்ஜே வா தாளபத் ரேவா

கவசம் லிகிதம் சுபம்

கரமூலே த்ருதம் யேன

ஸித்யேயு: கர்ம ஸித்தய


25. தேவாஸூ ரமனுஷ்யேஷூ

ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்

ஏக ஸந்த்யம் த்ரிஸந்த்யம்வா

ய: படேந் நியதோ நர


26. ஸர்வ மங்கள மாங்கல்யம்

புத்திம் முக்திஞ்ச விந்ததி

த்வாத்ரிம்சதி ஸஹஸ்ராணி

பவேச் சுத்தாத்மனாம் ந்ருணாம்


27. கவசஸ் யாஸ்ய மந்த்ரஸ்ய

மந்த்ர ஸித்தி: ப்ரஜாயதே

அனேன மந்த்ர ராஜேந

க்ருத்வா பஸ்மாபி மந்த்ரணம்


28. திலகம் வின்யஸேத் யஸ்ய

தஸ்ய க்ரஹ பயம் ஹரேத்

த்ரிவாரம் ஜபமானஸ்து

தத்தம் வார்யபி மந்த்ரியச


29. ப்ராசயேத்யோ நரம் மந்திரம்

ந்ருலிம் ஹ த்யானமா சரண்

தஸ்ய ரோகா ப்ரணச்யந்தி

யேசக்ஷü குக்ஷி ஸம்பவா


30. கிமத்ர பகுனோக்தேன

ந்ருஸிம்ஹ ஸத்ருசோ பவேத்

மனஸா சிந்திதம் யத்து

ஸதச் சாப்னோத்ய ஸம்சயம்


31. கர்ஜந்தம் கர்ஜயந்த நிஜ புஜ படலம்

ஸ்போடயந்தம் ஹஸந்தம்

ரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி

திதிஜம் க்ஷபயந்தம் க்ஷிபந்தம்


32. க்ரந்தந்தம் கோக்ஷயந்தம் திசி திசி

ஸததம் ஸம் ஹரந்தம் பரந்தம்

வீக்ஷந்தம் கூர்ணயந்தம் கர நிகர

சதை திவ்ய ஸிம்ஹம் நமாமி


#ஓம்நமோநாராயணாய!!

ஸ்ரீ_சீதாராம_ஸ்தோத்திரம்

 #ஸ்ரீ_சீதாராம_ஸ்தோத்திரம்.


அயோத்யா

புரநேதாரம் மிதிலாபுர நாயிகாம்

ராகவாணாம் அலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம்


ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்

ஸுர்யவம்ஸ

ஸமுத்பூதம் ஸோமவம்ஸ

ஸமுத்பவாம்


புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:

வஸிஷ்டா நுமதாசாரம் ஸதாநந்தமதாநுகாம்


கௌஸல்யா

கர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்

புண்டரீக

விஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவ

ரேக்ஷணாம்


சந்த்ரகாந்தாந நாம்போஜம் சந்த்ரபிம்போமாந

நாம்

மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்


சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ர

புஜஸ்தலீம்

சாபாலங்க்ருத

ஹஸ்தாப்ஜம் பத்மாலங்ருத

பாணிகாம்


ஸரணாகத

கோப்தாரம் ப்ரணிபாத

ப்ரஸாதிகாம்

காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வர

ஸமப்ரபாம்


திவ்யஸிம் ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்

அநுக்ஷணம் கடாக்ஷப்யாம் அந்யோந்யேக்ஷண காங்க்ஷிணௌ


அந்யோந்ய

ஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ

இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்


அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:

தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:


ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விஸேஷத:

க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்

ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமந்அவாப் நுயாத்


ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூரணம்

Tuesday, 9 May 2023

சியாமளா_தண்டகம்

 #கல்வியில்_சிறந்து_விளங்கச்_செய்யும்_சியாமளா_தண்டகம்_ஸ்லோகம்


#அபூர்வ_ஸ்லோகம் 


மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம், 


#சியாமளா_தண்டகம். 


தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம். 


பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் திறக்கவிருக்கும் இந்த காலகட்டத்தில் புது வகுப்புகளுக்குப் போகும் மாணவ, மாணவியருக்கு இந்தத் துதி அளப்பரிய நன்மைகளை வழங்கும். மாணவர்கள் என்று மட்டும் அல்லாமல் எல்லோருமே இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்; அனைத்து நலன்களையும் பெறலாம்.


மாணிக்யவீணா முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி


மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் 

பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், 

நீல மணியின் 

ஒளியுடன் கூடிய 

அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி

வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் 

தியானம் செய்கிறேன். 


சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே

குசோன்னதே குங்குமராகசோணே

புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண

ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:


நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.


மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப 

வனவாஸினீ

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே


ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியேஉலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. (கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).


ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த

ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட

பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப

காதம்ப காந்தார வாஸப்ரியே,

க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!


அம்ருதம் எனும் கடலின் மத்தியில், 

மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ

மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக 

விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே! 

யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே, 

அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே. 


ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல 

நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே

சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீநத்த 

ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக 

ஸம்பாவிதே!


நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின் புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே! 


காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப 

ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே 

சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே 

ஸூராமே ரமே


காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனு ப்ரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே! 


ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா 

சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்

தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த 

ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.


ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும், கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்

குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே. 

வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல 

தாளீ தளா பத்த 

தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.


திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு

ஜராந்தோலன 

ஸமாக்ஷிப்த கர்ணைக 

நீலோத்பலே, ச்யாமலே 

பூரிதா சேஷலோகாபிவாஞ்

சாபலே நிர்மலே.


சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.

ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த 


ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே 

ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே 

முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக  

கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே, 

ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !


நெற்றியில் காணும் வியர்வைத் துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை புஷ்பம் ஏந்தியவளே! 


குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ 

நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர  

சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே

முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் ப்ரகாசத்துடன்

 கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே. 


ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத  யோத்வேல லாவண்ய 

துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !

திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா 


ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே

துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்து உடையவளே, நளின நடையுடையவளே! சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே! 

ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:


விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் 

கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !

ரத்னங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!


வாஸராரம்பவேலா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த 

ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.

திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம 

ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே 

ஸன்னுதா (ஆ) 

கண்டலே, 

சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை 


புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே, எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் ரத்ன மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் ப்ரகாசமுடைய தளிர் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளி

யினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே. 


தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ 

வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர  கரே

ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே 

லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, 


மஞ்ஜூ ஸம்பாஷணே

நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான 

ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசை

யினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே. 


சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே 

பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.

விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு 

கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர 

மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.


மன்மதனின் வில்லின் நாணுக்கு ஒப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்ரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய இடையுடையவளே, பவுர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச புஷ்பம் போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் ப்ரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே. 


கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ 

ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!


அழகிய மென்மையான நீலத்தாமரை புஷ்பத்தினாலான மன்மதனின் அம்புறாத் தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும் 

சந்திரன் போன்ற மிகையான ப்ரகாசத்துடன் விளங்குபவளே. 


ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச 

தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச, 

கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர

ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.


ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, 

ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, 

சங்க்க பத்மத்வயோபாச்ரிதே வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு, 

சிவன், யமன், வருணன், குபேரன், ப்ரஹ்மா, 


நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே! நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே, அழிவற்றவளே. ரத்னம் போன்ற தாமரையில் ரத்ன 

ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து, சங்கு, தாமரை இரண்டாலும் சேவிக்கப்படுபவளே. 

தத்ரவிக்னேச துர்க்கா, வடுக்ஷேத்ர பாலையுதே 

மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, 

மஞ்ஜூளாமேனகாத்யங்க நாமானிதே, 


பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி 

வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, 

சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி 

சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !

பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங் கனா மண்டலை ரர்ச்சிதே


விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்ரபாலன் இவர்களுடன் கூடியவளே. ஆனந்தத்தில் திளைக்கும், மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே. மஞ்ஜுளா, மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே, எட்டு பைரவர்கள் எனும் தேவர்களால் சூழப்பட்டவளே. பூமி, லக்ஷ்மி முதலிய எட்டு சக்திகளுடன் கூடியவளே. ப்ராம்ஹீ முதலிய மாத்ருக்கள் எனும் எழுவரால் அலங்கரிக்கப்பட்டவளே. யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களின் 

ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுபவளே. 


பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யாச 

ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாபிநந்திதே

பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, 

யோகினாம் மானஸே, த்யோதஸே, 


சந்தஸாமோஜஸா ப்ராஜஸே 

கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன 

க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே 

பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, 

விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர்கீயஸே 


மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே, மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே, ப்ரியமுள்ள வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே, பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும் செய்கிறாய். யோகிகளின் மனதில் ப்ரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் ப்ரியமுள்ள க்ருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்

படுகிறாய். மனதைக் கவரும் வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய். 


ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.

யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே 

ஸர்வ ஸௌபாக்ய வாஞ்ச்சா வதூ

பீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.

ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு 

காதா ஸமுச்சாடனம் 

கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் 

ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகாபம் சுகம் லாலயந்தீ 

 பரிக்ரீடஸே.


செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ, கந்தர்வ, ஸித்தர்களின் ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். சகல வித்யைகளின் ஸாரமுடைய இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன் கூடிய மூக்குடையதும் ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய். 


பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம் 

ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்

பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய 

வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.

யேன வாயா வகாபாக்ருதிர் 

பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: 


யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.

கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத: 


தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம் 


செய்பவருக்கு எதுதான் கிட்டாது. 

தஸ்ய லீலாஸரோவாரித: 

தஸ்ய கேளீவனம் நந்தனம் 

தஸ்ய பத்ராஸனம் பூதலம், 

தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, 

தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்

ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்

மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, 


ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, 

ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, 

ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, 

ஸர்வவிச்வாத்மிகே, 

ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, 

ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், 


பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:


சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும் பணிப்பெண்ணாகிறாள். அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே! 


எல்லா ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக்காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.

Sunday, 7 May 2023

ஸ்ரீ_லக்ஷ்மி_நரசிம்மர் #ராஜ_மந்திரம்

 #ஸ்ரீ_லக்ஷ்மி_நரசிம்மர்

#ராஜ_மந்திரம்


திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. 


இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம். 


தினமும் மாலையில், லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை படைத்துல இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம். 


வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் 

விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!

நிநாத த்ரஸ்த விச்வாண்டம் 

விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!


பொருள்: பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.


ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் 

ஸபலௌகம் திதே ஸூதம்!

நகாக்ரை சகலீசக்ரே

யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!


பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.


பதா வஷ்டப்த பாதாளம் 

மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!

புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்

மஹா விஷ்ணும் நமாம்யஹம்!! 


பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.


ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர

ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய

தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!


பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 


ஸர்வேந்த்ரியை ரபி விநா

ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!

யோ ஜாநாதி நமாம் யாத்யம்

தமஹம் ஸர்வதோ முகம்!!


பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.


நரவத் ஸிம்ஹவச் சைவ

யஸ்ய ரூபம் மஹாத்மந!

மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்

தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!


பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன். 


யந்நாம ஸ்மரமணாத் பீதா

பூத வேதாள ராக்ஷஸா

ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி

பீஷணம் தம் நமாம்யஹம்!!


பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

.

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய

ஸகலம் பத்ர மச்நுதே!

ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட

யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!!


பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 


ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்

ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!

பக்தாநாம் நாசயேத் யஸ்து

ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!!


பொருள்: மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 


நமஸ்காரத்மகம் யஸ்மை

விதாய ஆத்ம நிவேதநம்!

த்யக்தது கோகிலாந் காமாந்

அச்நந்தம் தம் நமாம்யஹம்!!


பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

 

தாஸபூதா: ஸ்வத ஸர்வே 

ஹ்யாத்மாந பாமாத்மந!

அதோஹமபி தே தாஸ: 

இதி மத்வா நமாம்யஹம்!!


பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.


சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்

பதாநாம் தத்வ நிர்ணயம்!

த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய

ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!


பொருள்: ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.


உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!


பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன். 


ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நம;

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:

ஓம் பூம் பூம்யை நம:

ஓம் நீம் நீளாயை நம:


பொருள்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம். லட்சுமி தாயாருக்கு நமஸ்காரம். பூமாதேவிக்கு நமஸ்காரம். நீளாதேவிக்கு நமஸ்காரம்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...