Monday, 16 March 2020

ஶ்ரீசக்கரம்

அம்பிகையை #ஶ்ரீசக்கரம்
என்ற யந்திரத்தின் நடுவில் #பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியி
ருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.

பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

அடுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.

உடம்பில் #மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கர பூஜையினுள் நுழைகிறார்.

ஸ்ரீ சக்கரம் யந்திரங்களின் ராஜா எனப்படுகிறது. பிரபஞ்சம், குரு, தனிமனிதனின் உடல் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் ஸ்ரீ சக்கரத்தின் வழிபாடு பிறவித்தளையை அறுக்கும் ஸ்ரீ வித்யை எனப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் சிவ சக்தி ஐக்கியம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ வித்யையும் வேதாந்தம் கூறும் பிரம்மவித்தையும் ஒன்றே என்றும் கருதப்படுகிறது. முப்பரிமாணத்தில் ஸ்ரீ சக்கர ராஜம் நவாவரண பூஜையால் வழிபடப்படுகிறது. தாந்ரீக முறையான ஸ்ரீ வித்யாவை வேதாந்தமான அத்வைதத்துடன் இணைத்த மாபெரும் சாதனையாளர் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆவார்.

ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “#ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.

ஆக, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.

“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே
 – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”

அறுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.

சீதளாஷ்டமி



125
பனிக்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பிகின்ற சமயத்தில் கொண்டாடப்படுகிற வைபவம் சீதளாஷ்டமி. சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.
இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.
கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.123
ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.  மாட்டுப்பொங்கல்
சமயத்தில் நாம் மாடுகளை குளிப்பாட்டி பொட்டிட்டு அலங்கரிப்பது போல் கழுதையை அலங்கரித்து பொட்டிட்டு கொண்டாடுகிறார்கள்.
இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து சீதளாதேவியை வேண்டி நோன்பிருப்பார்கள். இதை பசோடா என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். அன்று பொதுவாக எந்த வீட்டிலும் சமைப்பதில்லை. ஒரு நாள் முன்பாகவே சமைத்து வைத்த உணவையே சாப்பிடுவார்கள்.  ‘ BASI ‘ என்ற வடமொழி சொல்லுக்கு முந்தைய இரவு உணவு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் பசோடா. அதாவது குளிர்ந்த சூடுல்லாத உணவை சாப்பிடுதல் என்று பொருள்படும்.
ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சகஷூ [ CHAKSHU ] என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மானிலங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது. இதை முன்னிட்டு இந்த மானிலங்களில் சந்தைகள் கூடும். சந்தைகளில் எல்லாவிதமான விவசாய உபகரணங்களும் பெண்களுக்கான வளையல் போன்ற ஆபரணங்களும் விற்பனைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்கவும் அரிய பொருட்களை சந்தையில் வாங்கவும் குவிகிறார்கள்.

திதி நித்யா

#திதி நித்யா 
நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை.

அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது.

அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா 2. துவதியை –பகமாலினி நித்யா  3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா 4. சதுர்த்தி – பேருண்டா நித்யா 5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா 6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா 7. ஸப்தமி – சிவதூதி நித்யா 8. அஷ்டமி – த்வரிதா நித்யா 9. நவமி – குலசுந்தரி நித்யா 10. தசமி – நித்ய நித்யா 11. ஏகாதசி – நீலபதாகா நித்யா 12. துவாதசி – விஜயா நித்யா 13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா 14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா 15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.

ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள். திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள். அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி, திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் 15 தேவியர் தான் இந்த திதி நித்யா.

நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும் வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும் ஸ்ரீ காமேச்வரி நித்யா வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும் ஸ்ரீ பகமாலினி நித்யா வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும் ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும் ஸ்ரீ பேருண்டா நித்யா வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும் ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும் மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும் ஸ்ரீ சிவதூதி நித்யா வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...