Sunday, 29 December 2019

ஸ்ரீ_அபிராமி_ஸ்தோத்ரம்

#ஸ்ரீ_அபிராமி_ஸ்தோத்ரம்


நமஸ்தே   லலிதே!  தேவி  ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி
பக்தாநாம்   இஷ்டதே ! மாத:  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ரோதயம்  க்ருதவதி!  தாடங்கேந ,   மஹேச்வரி
ஆயுர்  தேஹி   ஜகத்மாத:   ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸுதாகடேச   ஸ்ரீ காந்தே!  சரணாகதவத்ஸலே .
ஆரோக்யம்  தேஹிமே  நித்யம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

கல்யாணி!  மங்களம் - தேஹி,  ஜகந்மங்கள்    காரிணி!
ஐச்வர்யம்  தேஹி-மே, நித்யம்.  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ர   மண்டலமத்யஸ்தே!   மஹாத்ரிபுரஸுந்தரி!
ஸ்ரீ  சக்ரராஜ  நிலயே  ஹி   ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ராஜீவலோசனே,  பூர்ணே!   பூர்ண   சந்த்ரவிதாயினி!
ஸௌபாக்யம்  தேஹிமே நித்யம். ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

கணேசஸ்கந்த   ஜநநி!   வேதரூபே!   தனேச்வரி!
வித்யாம்  ச  தேஹி  மே  கீர்த்திம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸுவாஸி   நீப்ரியே  மாத:  ஸௌமங்கல்ய   விவர்த்தினி!
மாங்கல்யம், தேஹிமே  நித்யம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

மார்க்கண்டேய   மஹாபக்த  ஸுப்ரஹ்மண்ய   ஸுபூஜிதே.
ஸ்ரீ  ராஜராஜேச்வரீ  த்வம்ஹி! ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸாந்நித்யம்  குரு  கல்யாணி  மம  பூஜா  க்ருஹே  சுபே
பிம்பே  தீபே  ததா புஷ்பே  ஹரித்ரா  குங்குமே  மம

ஸ்ரீ  அபிராம்யா  இதம்  ஸ்தோத்ரம்  ய: படேத்  சக்திஸந்நிதௌ
ஆயுர்  பலம்  யசோ  வர்ச்சோ  மங்களம்  ச  பவேத்  ஸுகம்.

Wednesday, 25 December 2019

கோளறு_பதிகம்

#கோளறு_பதிகம்
 
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய
நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போ
லொளிரும் ஊமத்தைமலர்களா
லான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

ஹனுமான்_புஜங்க_ஸ்தோத்திரம்

#ஹனுமான்_புஜங்க_ஸ்தோத்திரம்
.

1. ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

2. பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

3. பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

4. கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம் கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம் வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம் ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/?ti=as

5. சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

6. ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

7. கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

8. மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

9. ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

10. நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/?ti=as

11. ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

12. ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

13. மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

14. நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

15. நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

16.ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே
 ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய: 
படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால:
நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.

       #ஜெய்ஸ்ரீராம்

Monday, 23 December 2019

மானக்கஞ்சாற_நாயனார்_குருபூஜை

#மணமேடை_ஏறிய_மகள்_கூந்தலைத்_தானமாகக்_கேட்ட_சிவனடியார்! --
#மானக்கஞ்சாற_நாயனார்_குருபூஜை
!

தன்னிடமிருக்கும் அனைத்தும் அந்த இறைவனின் அடியவர்களுக்கே உரியது என்று எண்ணி வாழ்ந்து அவற்றை வழங்கிய நாயன்மார்களில் முக்கியமானவர் மானகஞ்சாறார்.

சிவன்
அடியவர்க்குச் செய்யும் சேவையே ஆண்டவனுக்குச் செய்யும் சேவை என்பது ஆன்றோர் கருத்து. அப்படி அடியவர்களுக்குச் சேவை செய்து அமர வாழ்வினைப் பெற்ற அடியவர்களே #அறுபத்து_மூவர். தன்னிடமிருக்கும் அனைத்தும் அந்த இறைவனின் அடியவர்களுக்கே உரியது என்று எண்ணி வாழ்ந்து அவற்றை வழங்கிய #நாயன்மார்களில்_முக்கியமானவர்_மானகஞ்சாறார்.

கரும்பு அதிகம் விளைந்து கன்னல்சாறு மிகுந்திருந்ததால் அந்த ஊர் #கஞ்சாறூர் எனப்பட்டது. இந்த ஊர் தற்போது மயிலாடுதுறையருகே '#ஆனதாண்டவபுரம்' என வழங்கப்படுகிறது. திருநீறு அணிந்து எப்போதும் சிவ சிந்தனையில் திளைத்து வாழ்ந்தவர் மானக் கஞ்சாறார். இவர் தன் பொருள் அனைத்தும் இறைவனுக்கும் அடியவர்க்கும் உரியதே என்னும் எண்ணம் கொண்டவர்.

நீண்ட காலம் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த மானக் கஞ்சாறாருக்கு ஈசனின் அருளால் ஒரு பெண் குழந்தை பெறந்தது. பிறந்த நாள் முதல் பக்தியிலும் அழகிலும் சிறந்துவிளங்கிய அந்தப் பெண்ணின் பெருமைகளைக் கேள்விப்பட்ட #மன்னனான_கலிக்காமர், பெண்கேட்டு பெரியவர்களை அனுப்பிவைத்தார். இவரது தயாள குணத்தோடும் இறைபக்தியோடும் விளையாட விரும்பிய ஈசன், ஓர் அடியவர் உருக்கொண்டு மணமேடை வந்தார். அவரைக் கண்டதும் வணங்கி வரவேற்ற மானக் கஞ்சாறர் 'தாங்கள் வேண்டுவது என்ன?' என்று கேட்டார்.

மணவறையில் மணமகளுக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுருந்தன. சுருண்டு அழகாய் நீண்டிருந்த அவள்கூந்தல் பின்னப்பட்டு, மலர்க்கொத்துகள் சூட்டி தழையத் தழைய அலங்கரிக்கப் பட்டிருந்தது. இதைக் கண்ட சிவனடியார் '#இவளது_தலைமுடி_என்_பஞ்சவடிக்கு_உதவும்போலத்_தெரிகிறது_எனவே_அதை_எனக்குக்_கொடு' என்று கேட்டார்.

சிவனடியார் கேட்டதைச் சிவனே கேட்டதாகக் கருதும் கஞ்சாறர் சற்றும் தயங்காமல் கூராயுதம் எடுத்து மணக்கோலத்தில் இருந்த தன் புதல்வியின் தலைக்கூந்தல் அடியை நறுக்கியெடுத்தார். அடியவரின் இந்தச் செயலைக் கண்டு அனைவரும் திகைத்து நிற்கும் தருணம், #அங்கு_ஈசன்_இடப_வாகனனாய்_உமாதேவியோடு_காட்சிகொடுத்தார். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் ஈசனை வணங்கி அருள் பெற்றனர்.

இப்படிப்பட்ட பெருமைகளை உடைய மானக் கஞ்சாறார் #மார்கழி_மாதம்_சுவாதி_நட்சத்திரதினத்தில்_சிவனடி_சேர்ந்தார். எனவே ஒவ்வொரு மார்கழி சுவாதி நட்சத்திர தினத்திலும் மானக் கஞ்சாறரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை நேற்று ( 22.12.2019)  இந்த நன்நாளில் சிவாலயம் சென்று ஈசனையும் நாயன்மார்களையும் வணங்கத் துன்பங்கள் தீரும் என்பது ஐதிகம். எனவே, தவறாமல் இந்த நாளில் சிவ வழிபாடு செய்யுங்கள்.

நன்றி : விகடன்.

Sunday, 22 December 2019

கோபூஜை

🌺#கோபூஜை 🌺

( பசுவிற்
கு செய்யும் பூஜை )
 
கன்றுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் பால் தருவதால் பசுவை கோமாதா என்று போற்றுகிறோம்.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால்  பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
 
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.  இது மிக புண்ணியமான காலமாகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது  8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

 " மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ருத்யு ,
( எமன்,எமதூதர்கள் ) பசுவிற்கு மட்டுமே தெரிவார்கள்.

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.  அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

இந்த நல்ல விஷயங்களை அனைவருக்கும் பகிர்ந்து செய்து கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்.

கோபூஜை செய்யமுடியவில்லை என்றால்  பூஜை செய்வதைப் பார்த்தாலே அந்த பலன் கிடைக்கும்.......

Saturday, 21 December 2019

ஸ்ரீருத்ர_மந்திரம்

நினைத்த காரியங்கள் நிறைவேற #ஸ்ரீருத்ர_மந்திரம்
.....

#ஸ்ரீருத்ரம் (நூல்)
#யசூர் வேதத்தின்தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமசுகிருதமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல் இராமகிருஷ்ண மடம், சென்னை, நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.

#ஸ்ரீருத்ரம்_நூலின்_சிறப்பு

ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது.

இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம் கொண்டிருப்பதால் ஆத்திகர்களால் ஸ்ரீ ருத்ரத்தை தினசரி பூசையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும், தியானத்திலும், பாராயணத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

#ஸ்ரீருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்றும் “சதருத்ரீயம்” என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்துமுக்திக்கு கருவியானதால் இதுஉபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீ ருத்திரனை இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனைசதருத்ரீயம் எனப்படுகிறது.

#ஸ்ரீருத்ரம்_நூலின்_உரையாசிரியர்கள்

ஸ்ரீ ருத்ரம் நூலுக்கு எழுதப்பட்ட உரைகளில் சாயாணாச்சாரியார், அபிநவ சங்கராச்சாரியார், பட்டபாஸ்கரர், விஷ்ணு சூரி ஆகியவர்கள் சமசுகிருத மொழியில் எழுதிய உரைகளே தற்பொழுது அச்சில் உள்ளது.

நூலின் அமைப்பு நமகம் (ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்); சமகம் (ருத்திரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்து வேண்டுதல்); லகுந்யாசம் (தன்னை ஸ்ரீருத்ர வடிவான சிவனாகவேதியானம் செய்தல்; ஸ்ரீமகாந்நியாசம்(தலை முதல் பாதம் வரை பஞ்சாங்க ருத்ரர்களுக்கு நியாஸ பூர்வகமாக ஜெபம், ஹோமம், அர்ச்சனை மற்றும் அபிசேகம் ஆகியவற்றின் முறை எடுத்துக் கூறல்), சிவ அஷ்ட தோத்திரம், ருத்ர விதான பூஜை, ருத்ர திரிசதீ செய்தல் போன்ற செய்யும் முறைகள் குறித்து வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

#ஸ்ரீருத்ரம்_நூலைப்_செபித்தலின்_பயன்

இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை செபித்தலின் பயன் கூறப்பட்டுள்ளது. யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் ஸ்ரீருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்து செபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும்.

ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது.

#ஸ்ரீருத்திரத்தின்_சிறப்பு_மந்திரம்

திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்|உர்வாருகமிவ பந்தனான் – ம்ருயோர் – முக்ஷீயமாம்ருதாத்|பொருள்: (சுகந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும் (புஷ்டிவர்த்தனம்) கருணையால் அடியார்களைக் காத்து வளர்ப்பவரும் ஆகிய (திரியம்பகம்) முக்கண்ணனை (யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம்.

(உர்வாருகம் இவ) வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுவது போல (ம்ருத்யோர்) இறப்பின் (பந்தனாத்) பிடிப்பிலிருந்து (முக்ஷீய) உமதருளால் விடுபடுவோமாக. (மா அம்ருதாத்) மோட்சமார்க்கத்திலிருந்து விலகாமலிருப்போமாக.

#ஸ்ரீருத்ரம்_பாராயணம்_எவ்வாறு_செய்வது

இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை எவ்வாறு பாராயணம் செய்வது குறித்து விளக்கப்படுகிறது. ஸ்ரீருத்ர மந்திரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவரனுடைய கட்டளையை மீறி நடந்தவர்களிடம் முன் கோபம் கொண்ட ருத்ரன் தோன்ற வேண்டுமென்ற பிரார்த்தனையும், இரண்டாவது அனுவாகம் முதல் ஒன்பதாவது அனுவாகம் வரை ருத்ரனின் சர்வேசுவர தத்துவம், சர்வ சரீர தத்துவம், சர்வ அந்தர்யாமி தத்துவம் முதலிய பெருமைகளை குறிக்கும் திருநாமங்களால் நமஸ்காரமும், பத்தாவது அனுவாகத்தில் நம்முன் தோன்றியருத்ரனிடம் நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும், நமக்கு வேண்டாதவற்றை நீக்கவும் பிரார்த்தனையும், பதினோராவது அனுவாகத்தில் ருத்ர கணங்களுக்கு நமஸ்காரமும் கூறப்படுகிறது.

முதலில் ருத்ரத்தை ஜெபித்து அதற்குப் பின் சமகத்தையும் ஜெபிப்பது செய்வது சாதாரணமான முறை. இதனை லகு ருத்ரம் என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை மகா ருத்ரம் என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு அதி ருத்ரம் ஆகும்

Friday, 20 December 2019

வைகுண்ட ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் !

#சொர்க்கவாசல்
#உருவான_கதை !

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள்.

அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.

இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள்.

அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார்.

ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள்.

தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.

“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .

அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.

ஓம் நமோ நாராயணாய  !

Thursday, 19 December 2019

வாழ்வை_வளமாக்கும்_அஷ்டமி_சப்பரம்!

#வாழ்வை_வளமாக்கும்_அஷ்டமி_சப்பரம்!

நாளைஅஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் #சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.

மதுரையில், கோயில்களுக்கும் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன்  படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான '#அஷ்டமி_சப்பரம்' என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்.. ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள். இந்நிகழ்ச்சி, நாளை அதிகாலை 5.30 மணிக்கு  கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வருவர்  அம்மன் சப்பரத்தை பெண்கள்  இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை  ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் . மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால், அள்ள அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்

Thanks : Newstm

மார்கழி_முதல்_புதன்கிழமை_குசேலர்_தினம்

#மார்கழி_முதல்_புதன்கிழமை_குசேலர்_தினம்
__
மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று #குருவாயூர் #கோவிலில்_குசேலர்_தினம்_கொண்டாடப்படுகிறது.

"#குசேலம்" என்றால் கிழிந்து நைந்துபோன துணியைக் குறிக்கும். ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், #சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து #குசேலர் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.

கண்ணன் சிறுவயதில் #சாந்தீபனி என்ற முனிவரின் குருகுலத்தில் வேதங்கள் பயின்றபோது, அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாமா. திருமணம் முடிந்து 27 குழந்தைகள் பெற்றெடுத்து மிகவும் வறுமையில் வாடினார் சுதாமா. இவரது மனைவி பெயர் "#க்ஷுத்க்ஷாமா(சுசீலை) என்பதாகும். பசியால் வருந்தி மெலிந்த தேகம் உடையவள் என்பது இப்பெயரின் பொருள். தங்கள் வறுமை நீங்கும் பொருட்டு சுதாமாவின் இளமைக்கால நண்பரான யாதவ குல அரசன் கண்ணனைப் போய் பார்த்து வரும்படி அவள் கேட்டுக் கொண்டு, கண்ணனுக்குக் கொடுக்கும் பொருட்டு பலரிடம் யாசகம் பெற்று நான்கு பிடி அவலை ஒரு கிழிந்த துணியில் முடிந்து தன் கணவனிடம் அளித்தாள் அவள்.

தன் இளமைக்கால நண்பனைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்து, தனது மனைவி ருக்மிணியுடன் பணிவிடைகள் புரிந்தார். குசேலர் கொடுக்கத் தயங்கிய அவலை அவரே கையிலிருந்து பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, அந்த நிமிடமே #குசேலரின்_வறுமை_அகன்று_குபேரனைப் போன்ற பெரிய செல்வத்தைப் பெற்றார் என்பது கதை.

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அவலே முக்கிய நிவேதனமாக அமைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.

குசேலர் தினமான மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று நம் வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது கிருஷ்ணர் படம் வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

#குசேல_சரித்திர_ஸ்லோகம்

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூ ரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?
ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந் தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘#லக்ஷ்மீபதியான கோபாலன்
தாங்களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்

குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர் கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண் டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா?

கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனயா து கிம் புன:

ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு
எல்லையே இல்லை. அப்படித்தானே?

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே
நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர்களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர் களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா?

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே

குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து
நிறுத்தினார்கள், இல்லையா?

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :

உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக் கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்ல
வா?

யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ
த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:
க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்

‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழ கிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா?
கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்

‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார். உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை
அப்போது அவர் உணர்ந்தாரல்லவா?

ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.

ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.
இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...

இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

நன்றி : ஆன்மீக தேடல்.

Tuesday, 17 December 2019

ஸ்ரீ_இந்த்ராக்ஷீ_ஸ்தோத்ரம்

#ஸ்ரீ_இந்த்ராக்ஷீ_ஸ்தோத்ரம்

அஸ்யஸ்ரீ  இந்த்ராக்ஷீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, சசீபுரந்தர ருஷி: அனுஷ்டுப்சந்த: இந்த்ராக்ஷீ துர்கா தேவதா

லக்ஷ்மீ: பீஜம் புவனேச்வரீ சக்தி: பவானீ கீலகம்

மம இந்த்ராக்ஷீ ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:

#கரந்யாஸம்

இந்த்ராக்ஷ்யை அங்குஷ்டாப்யாம் நம:

மஹாலக்ஷ்ம்யை தர்ஜனீப்யாம் நம:

மஹேச்வர்யை மத்யமாப்யாம் நம:

அம்புஜாக்ஷ்யை அநாமிகாப்யாம் நம:

காத்யாயன்யை கனிஷ்டிகாப்யாம் நம:

கௌமார்யை கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:

#அங்க_ந்யாஸம்

இந்த்ராக்ஷ்யை ஹ்ருதயாய நம:

மஹாலக்ஷ்ம்யை சிரஸே ஸ்வாஹா

மஹேச்வர்யை சிகாயை வஷட்

அம்புஜாக்ஷ்யை கவசாய ஹும்

காத்யாயன்யை நேத்ரத்ரயாய வௌஷட்

கௌமார்யை அஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த:

#த்யானம்

நேத்ராணாம் தசபி:சதை: ப்ரிவ்ருதாமத்யுக்ர சர்மாம்பராம்

ஹேமாபாம் மஹதீம் விலம்பித சிகாம் ஆமுக்தகேசாந்விதாம்

கண்டாமண்டித பாதபத்மயுகலாம் நாகேந்த்ர கும்பஸ்தனீம்

இந்த்ராக்ஷீம் பரிசிந்தயாமி மனஸா கல்போக்த ஸித்திப்ரதாம்

இந்த்ராக்ஷீம் த்விபுஜாம் தேவீம் பீதவஸ்த்ர த்வயான்விதாம்

வாமஹஸ்தே வஜ்ரதராம் தக்ஷிணேன வரப்ரதாம்

இந்த்ராக்ஷீம் நௌமியுவதீம் நானாலங்கார பூஷிதாம்

ப்ரஸன்னவதனாம்போஜாம் அப்ஸரோகணஸேவிதாம்

த்விபுஜாம் ஸௌம்யவதனாம் பாசாங்குசதராம் பராம்

த்ரைலோக்ய மோஹினீம் தேவீம் இந்த்ராக்ஷீ நாம கீர்த்திதாம்

பீதாம்பராம் வஜ்ரதரைக ஹஸ்தாம் நானாவிதாலங்கரணாம் ப்ரஸன்னாம்

த்வாமப்ஸரஸ் ஸேவித பாதபத்மாம் இந்த்ராக்ஷீம் வந்தேசிவ தர்மபத்னீம்

#பஞ்சபூஜை

லம் ப்ருதியாத்மிகாயை கந்தம் ஸ்மர்ப்பயாமி

ஹம் ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி

யம் வாய்வாத்மிகாயை தூபமாக்ராபயாமி

ரம் அக்ன்யாத்மிகாயை தீபம் தர்சயாமி

வம் அம்ருதாத்மிகாயை அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி

ஸம் ஸர்வாத்மிகாயை ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

திக்தேவதா ரக்ஷாமந்த்ரம்

#இந்த்ர_உவாச:

இந்த்ராக்ஷீ பூர்வத: பாது பாத்வாக்னேய்யாம் ததேச்வரீ

கௌமாரீ தக்ஷிணே பாது நைர்ருத்யாம் பாது பார்வதீ

வாராஹீ பச்சிமே பாது வாயவ்யே நாரஸிம்ஹ்யபி

உதீச்யாம் காலராத்ரீ மாம் ஐசா’ன்யாம் ஸர்வ சக்தய:

பைரவ்யூர்த்வம் ஸதாபாதுபாத்வதோ வைஷ்ணவீ ததா

ஏவம் தசதிசோ ரக்ஷேத் ஸர்வதா புவ நேச்வரீ

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் இந்த்ராக்ஷ்யை நம:

அத மந்த்ர:

இந்த்ராக்ஷீ நாம ஸா தேவீ தேவதை: ஸமுதாஹ்ருதா

கௌரீ சாகம்பரீ தேவீ துர்கா நாம்நீதி விச்ருதா                                   

 1.நித்யானந்தா நிராஹாரா நிஷ்கலாயை நமோ(அ)ஸ்து தே

காத்யாயநீ மஹாதேவீ சந்த்ரகண்டா மஹாதபா:                                  2

ஸாவித்ரீ ஸா ச காயத்ரீ ப்ரஹ்மாணீ ப்ரஹ்மவாதிநீ

நாராயணீ பத்ரகாளீ ருத்ராணீ க்ருஷ்ண பிங்களா                                3

அக்நிஜ்வாலா ரௌத்ரமுகீ காளராத்ரீ தபஸ்விநீ

மேகஸ்வனா ஸஹஸ்ராக்ஷீ விகடாங்கீ ஜடோதரீ                                   4



மஹோதரீ முக்தகேசீ கோரரூபா மஹாபலா

அஜிதா பத்ரதா(அ)நந்தா ரோக ஹந்த்ரீ சிவப்ரியா                              5

சிவதூதீ கராளீ ச ப்ரத்யக்ஷ பரமேச்வரீ

இந்த்ராணீ இந்த்ரரூபா ச இந்த்ரசக்தி: பராயணீ                                                6

 ஸதா ஸம்மோஹிநீ தேவீ ஸுந்தரீ புவனேச்வரீ

ஏகாக்ஷரீ பரப்ரஹ்மீ ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரவர்திநீ                                    7

ரக்ஷாகரீ ரக்த தந்தா ரக்தமால்யாம் பராபரா

மஹிஷாஸுரஸம்ஹர்த்ரீ சாமுண்டா ஸப்தமாத்ருகா              8

வாராஹீ நாரஸிம்ஹீ ச பீமா பைரவ நாதி நீ

ச்ருதி: ஸ்ம்ருதிர் த்ருதிர் மேதா வித்யா லக்ஷ்மீ: ஸரஸ்வதீ       9

அனந்தா விஜயா (அ)பர்ணா மாநஸ்தோகா (அ)பராஜிதா

பவானீ பார்வதீ துர்கா ஹைமவத் யம்பிகா சிவா                                 10

சிவா பவானீ ருத்ராணீ சங்கரார்த்த சரீரிணீ

ஐராவத கஜாரூடா வஜ்ரஹஸ்தா வரப்ரதா                                               11

தூர்ஜடீ விகடீ கோரீ ஹ்யஷ்டாங்கீ நரபோஜினீ

ப்ராமரீ காஞ்சி காமாக்ஷி க்வணன்மாணிக்ய நூபுரா                            12

ஹ்ரீங்காரீ ரௌத்ரபேதாளீ ஹ்ருங்கார்யம்ருதபாயி நீ

த்ரிபாத்பஸ்மப்ரஹரணா த்ரிசிரா ரக்தலோசனா                                             13

(நித்யா ஸகலகல்யாணீ ஸர்வைச்வர்ய ப்ரதாயினீ

தாக்ஷாயணீ பத்மஹஸ்தா பாரதீ ஸர்வமங்களா                                               14

கல்யாணீ ஜனனீ துர்கா ஸர்வதுக்க விநாசினீ

இந்த்ராக்ஷீ ஸர்வபூதேசீ ஸர்வரூபா மனோன்மணீ                                            15

மஹிஷமஸ்தக ந்ருத்ய விநோதன ஸ்புடரணன் மணி நூபுர பாதுகா

ஜனன ரக்ஷண மோக்ஷ விதாயினீ ஜயது சும்ப நிசும்ப நிஷூதினீ)  16

சிவா ச சிவரூபா ச சிவசக்தி பராயணீ

ம்ருத்யுஞ்ஜயீ மஹாமாயீ ஸர்வரோக நிவாரிணீ                                     17

ஐந்த்ரீ தேவீ ஸதா காலம் சாந்திம் ஆசுகரோது மே

ஈச்வரார்த்தாங்க நிலயா இந்து பிம்ப நிபானனா                                                         18

ஸர்வ ரோக ப்ரசமனீ ஸர்வ ம்ருத்யு நிவாரிணீ

அபவர்க்கப்ரதா ரம்யா ஆயுராரோக்யதாயினீ                                                   19

இந்த்ராதிதேவ ஸம்ஸ்துத்யா இஹாமுத்ர பலப்ரதா

இச்சா சக்தி: ஸ்வரூபா ச இபவக்த்ரா த்விஜன்மபூ:                                            20

“பஸ்மாயுதாய வித்மஹே, ரக்த நேத்ராய தீமஹி

தந்நோ ஜ்வரஹர: ப்ரசோதயாத்”

#மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் க்லூம் இந்த்ராக்ஷ்யை நம: ஓம் நமோ பகவதி இந்த்ராக்ஷி ஸர்வஜன ஸம்மோஹினி காலராத்ரி நாரஸிம்ஹி ஸர்வ சத்ரு ஸம்ஹாரிணி அனலே அபயே அபராஜிதே மஹாஸிம்ஹ வாஹினி மஹிஷாஸுர மர்த்தினீ ஹன ஹன மர்தய மர்தய மாரய மாரய சோஷய சோஷய தாஹய தாஹய மஹாக்ரஹான் ஸம்ஹர ஸம்ஹர

யக்ஷக்ரஹ ராக்ஷஸக்ரஹ ஸ்கந்தக்ரஹ விநாயகக்ரஹ பாலக்ரஹ குமாரக்ரஹ சோரக்ரஹ பூதக்ரஹ ப்ரேதக்ரஹ பிசாசக்ரஹ கூஷ்மாண்ட க்ரஹாதீன் மர்தய மர்தய நிக்ரஹ நிக்ரஹ தூமபூதான் ஸந்த்ராவய ஸந்த்ராவய

பூதஜ்வர ப்ரேதஜ்வர பிசாசஜ்வர உஷ்ணஜ்வர பித்தஜ்வர வாதஜ்வர ச்லேஷ்மஜ்வர கபஜ்வர ஆலாபஜ்வர ஸன்னிபாதஜ்வர மாஹேந்த்ரஜ்வர க்ருத்ரிமஜ்வர க்ருத்யாதிஜ்வர ஏகாஹிகஜ்வர த்வயாஹிகஜ்வர த்ரயாஹிகஜ்வர சாதுர்த்திகஜ்வர பஞ்சாஹிகஜ்வர பக்ஷஜ்வர மாஸஜ்வர ஷண்மாஸஜ்வர  ஸம்வத்ஸரஜ்வர ஜ்வராலாபஜ்வர ஸர்வஜ்வர ஸர்வாங்கஜ்வரான் நாசய நாசய ஹரஹர ஹனஹன தஹதஹ பசபச தாடய தாடய ஆகர்ஷய ஆகர்ஷய வித்வேஷய வித்வேஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய உச்சாடய உச்சாடய ஹூம் ஃபட் ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் ஓம் நமோ பகவதி த்ரைலோக்யலக்ஷ்மி, ஸர்வஜன வசங்கரி, ஸர்வதுஷ்ட க்ரஹ ஸ்தம்பினி கங்காளி காமரூபிணி காலரூபிணீ கோரரூபிணி பரமந்த்ர பரயந்த்ர ப்ரபேதினி ப்ரதிபடவித்வம்ஸினி பரபலதுரகவிமர்தினி சத்ரு கரச்சேதினி சத்ரு மாம்ஸ பக்ஷிணி ஸகல துஷ்ட ஜ்வர நிவாரிணீ பூத-ப்ரேத பிசாச ப்ரஹ்மராக்ஷஸ யக்ஷ யமதூத சாகினீ-டாகினீ-காமினீ ஸ்தம்பினீ மோஹிநீ வசங்கரி குக்ஷிரோக சிரோரோக நேத்ரரோக க்ஷய அபஸ்மார குஷ்டாதி மஹாரோக நிவாரிணி, மம ஸர்வரோகம் நாசய நாசய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஹ்ரூம்ஃபட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதீ மாஹேச்வரீ மஹா சிந்தாமணி துர்கே ஸகல ஸித்தேச்வரி சகல ஜனமநோஹாரிணி காலகாலராத்ரி மஹாகோரரூபே ப்ரதிஹதவிச்வரூபிணி மதுஸூதநி மஹாவிஷ்ணுஸ்வரூபிணி சிரச்சூல கடிசூல அங்கசூல பார்ச்வசூல நேத்ரசூல கர்ணசூல பக்ஷசூல பாண்டுரோக காமிலாதீன் நாசய நாசய

வைஷ்ணவீ ப்ரஹ்மாஸ்த்ரேண விஷ்ணுசக்ரேண ருத்ரசூலேன யமதண்டேன வருணபாசேன வாஸவ வஜ்ரேண ஸர்வான் அரீன் பஞ்ஜய பஞ்ஜய ராஜயக்ஷ்ம க்ஷயரோக தாபஜ்வர நிவாரிணீ மம ஸர்வஜ்வரம் நாசய நாசய

ய-ர-ல-வ-ச-ஷ-ஸ-ஹ- ஸர்வக்ரஹான் தாபய தாபய ஸம்ஹர ஸம்ஹர சேதய சேதய உச்சாடய உச்சாடய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்ஃபட் ஸ்வாஹா

#உத்தர_ந்யாஸம்

இந்த்ராக்ஷ்யை ஹ்ருதயாய நம:

மஹாலக்ஷ்ம்யை சிரஸே ஸ்வாஹா

மஹேச்வர்யை சிகாயை வஷட்

அம்புஜாக்ஷ்யை கவசாய ஹும்

காத்யாயன்யை நேத்ரத்ரயாய வௌஷட்

கௌமார்யை அஸ்த்ராய ஃபட்

பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக:

#த்யானம்

நேத்ராணாம் தசபி:சதை: ப்ரிவ்ருதாமத்யுக்ர சர்மாம்பராம்

ஹேமாபாம் மஹதீம் விலம்பித சிகாம் ஆமுக்தகேசாந்விதாம்

கண்டாமண்டித பாதபத்மயுகலாம் நாகேந்த்ர கும்பஸ்தனீம்

இந்த்ராக்ஷீம் பரிசிந்தயாமி மனஸா கல்போக்த ஸித்திப்ரதாம்



இந்த்ராக்ஷீம் த்விபுஜாம் தேவீம் பீதவஸ்த்ர த்வயான்விதாம்

வாமஹஸ்தே வஜ்ரதராம் தக்ஷிணேன வரப்ரதாம்

இந்த்ராக்ஷீம் நௌமியுவதீம் நானாலங்கார பூஷிதாம்

ப்ரஸன்னவதனாம்போஜாம் அப்ஸரோகணஸேவிதாம்

த்விபுஜாம் ஸௌம்யவதனாம் பாசாங்குசதராம் பராம்

த்ரைலோக்ய மோஹினீம் தேவீம் இந்த்ராக்ஷீ நாம கீர்த்திதாம்

பீதாம்பராம் வஜ்ரதரைக ஹஸ்தாம் நானாவிதாலங்கரணாம் ப்ரஸன்னாம்

த்வாமப்ஸரஸ் ஸேவித பாதபத்மாம் இந்த்ராக்ஷீம் வந்தேசிவ தர்மபத்னீம்

#பஞ்சபூஜை

லம் ப்ருதியாத்மிகாயை கந்தம் ஸ்மர்ப்பயாமி

ஹம் ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி

யம் வாய்வாத்மிகாயை தூபமாக்ராபயாமி

ரம் அக்ன்யாத்மிகாயை தீபம் தர்சயாமி

வம் அம்ருதாத்மிகாயை அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி

ஸம் ஸர்வாத்மிகாயை ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

#ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹாண அஸ்மத் க்ருதம் ஜபம்

ஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதாத் மயி ஸ்திரா

ஃபலச்ருதி:

ஏதைர் நாமசதைர் திவ்யை: ஸ்துதா சக்ரேண தீமதா

ஆயுராரோக்ய மைச்வர்யம் அபம்ருத்யு பயாபஹம்

க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபஜ்வர நிவாரணம்

சோரவ்யாக்ர பயம் தத்ர சீதஜ்வர நிவாரணம்

மாஹேச்வர மஹாமாரீ ஸர்வஜ்வர நிவாரணம்

சீத பைத்தக வாதாதி ஸர்வரோக நிவாரணம்

ஸந்நிஜ்வர நிவாரணம் ஸர்வ ஜ்வர நிவாரணம்

ஸர்வ ரோக நிவாரணம் ஸர்வ மங்கல வர்தனம்

சதமாவர்த்தயேத் யஸ்து முச்யதே வ்யாதிபந்தனாத்

ஆவர்தயன் ஸஹஸ்ராத்து லபதே வாஞ்சிதம் பலம்

ஏதத் ஸ்தோத்ரம் மஹா புண்யம் ஜபேத் ஆயுஷ்ய வர்தனம்

விநாசாய ரோகாணாம் அபம்ருத்யு ஹராய ச

த்விஜைர் நித்யம் இதம் ஜப்யம் பாக்யா ரோக்யாபீப்ஸுபி:

நாபிமாத்ரஜலே ஸ்தித்வா ஸஹஸ்ர பரிஸங்க்யயா

ஜபேத் ஸ்தோத்ரம் இமம் மந்த்ரம் வாசாம் ஸித்திர்பவேத் தத:

அனேன விதிநா பக்த்யா மந்த்ரஸித்திச்ச ஜாயதே

ஸந்துஷ்டா சபவேத் தேவீ பரத்யக்ஷா ஸம்ப்ரஜாயதே

ஸாயம் சதம் படேந் நித்யம் ஷண்மாஸாத் ஸித்திருச்யதே

சோரவ்யாதி பயஸ்தானே மநஸா ஹ்யநு சிந்தயன்

ஸம்வத்ஸரம் உபாச்ரித்ய ஸர்வ காமார்த்த ஸித்தயே

ராஜாநம் வச்யம் ஆப்நோதி ஷண்மாஸாந்நாத்ர ஸம்சய:

அஷ்டதோர்பி ஸமாயுக்தே நாநாயுத்த விசாரதே

பூதப்ரேத பிசாசேப்யோ ரோகாராதி முகைரபி

நாகேப்ய: விஷயந்த்ரேப்ய: ஆபிசாரை: மஹேச்வரி

ரக்ஷ மாம் ரக்ஷ மாம் நித்யம் ப்ரத்யஹம் பூஜிதாமயா

ஸர்வ மங்கள மாங்கல்யே  சிவே ஸர்வார்த்த ஸாதகே

சரண்யே த்ர்யம்பகே தேவி  நாராயணி நமோ(அ)ஸ்து தே

வரம் ப்ராதாத் மஹேந்த்ராய தேவராஜ்யஞ்ச சாச்வதம்

இந்த்ரஸ்தோத்ர மிதம் புண்யம் மஹதைச்வர்ய காரணம்

#ஸ்ரீ_இந்த்ராக்ஷீ_ஸ்தோத்ரம்_ஸம்பூர்ணம்.

ஓம்
க்ஷமா ப்ரார்த்தனா

யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீனம் து யத் பவேத்

தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே

விஸர்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச

ந்யூனானி ச அதிரிக்தானி க்ஷமஸ்வ பரமேச்வரி

அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம

தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ மஹேச்வரி:

Monday, 16 December 2019

ஸ்ரீமந்_நாராயணீய_தினம்

#ஸ்ரீமந்_நாராயணீய_தினம்
'. 14.12.2019

#நலம்_நல்கும்_நாராயணீயம்!

'#பரசுராம_சேஷத்திரம்' என்ற புராணப் பெருமையுடன் திகழும் #கேரள_மாநிலத்தில்_உள்ள_புகழ்பெற்ற_ஸ்ரீகுருவாயூரப்பன்_ஆலயத்தில்_நடைபெறும். #வருடாந்திர_உற்சவ_தினங்களில்_ஒவ்வொரு_ஆண்டும்_கார்த்திகை_மாதம்28ம்_தேதி  '#ஸ்ரீமந்_நாராயணீய_தினம்' என்று விசேஷமாக கொண்டாடப்
படுகின்றது.  இந்த நிகழ்வைப் பற்றிய சிறப்பினை தெரிந்துகொள்வோம்.
--
சுமார் 450 வருடங்களுக்கு முன் (1950-ல்) வாழ்ந்தவர் #மேப்பத்தூர்_நாராயண_நம்பூதிரி என்ற பெரும் பக்தர். பிற்காலத்தில் நாடெங்கும் போற்றப்பட்டு #நாராயண_பட்டத்திரி என்று அறியப்பட்டவர் இவரே. கேரளாவில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான '#திருநாவாய்' என்ற தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது மேப்பத்தூர் எனும் மேல்புதூர். பாரதப்புழை ஆற்றை ஒட்டியுள்ளது. 16 வயது பருவத்திலேயே இறையருளால் அனைவரும் அதிசயக்கும்படி அதிமேதாவியாக, தலைசிறந்த #சமஸ்கிருத_பண்டிதராகத் திகழ்ந்தார். தனக்கு #வியாகரணங்கள் (இலக்கணம்) கற்பிவித்த ஆசான் (#அச்சுத_பிஷரோடி_என்ற_குரு) வாதரோகம் என்ற நோயினால் அவதிப்படுவதைக் கண்டார். குருவிற்கு, குரு தட்சணை அளிக்கும் தருணம் வந்தது.
--
இறைவனிடம், நன்றிக்கடனாக குருவைப் பற்றியுள்ள நோய் அவரை விட்டு தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று மண்டாடி வேண்டிக்கொண்டு, அந்த நோயை வலிய வரவழைத்துக்
கொண்டார். இளமைப்பருவத்தில் இருந்த அவர் அந்த நோய் நீங்குவதற்காக பிரபல மலையாள கவிஞரும் பண்டிதருமான துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரை அணுகினார். அவர் அறிவுறுத்தலின்படி,
ஸ்ரீ குருவாயூர் தலத்திற்கு வந்து #ஸ்ரீ_குருவாயூரப்பன்_சந்நிதியில்_ஸ்ரீமத்_பாகவத_சரித்திரத்தை_வடமொழி_சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத்துதி செய்தார். அவரது பக்திக்கும் கட்டுண்ட #ஸ்ரீகுருவாயூரப்பன்_அவ்வப்போது_தன்_தலை_அசைப்பின்_மூலம்_அவரது_தோத்திரங்களை_அங்கீகாரம்_செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டத்திரி வர்ணிக்கும் போது குருவாயூரப்பன் மூலஸ்தானத்
திலிருந்து #சிம்ம_கர்ஜனைக்_கேட்டதாம். (நரசிம்மனாகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு)
--
நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி (சீடர்) ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளித்ததே
'ஸ்ரீ மந்நாராயணீயம்' ஆகும். 1034 வடமொழி சுலோகங்களால் ஆனது இந்நூல். நாராயண பட்டத்திரி குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் பத்துசுலோகங்கள் வீதம் (ஒரு தசகம்)
100 தசகங்களில் '#நாராயணீயத்தை' பாடி முடித்தார். அவ்வாறு #பாடி_பூர்த்தி_செய்து_குருவாயூர்_கிருஷ்ண_பகவான்_பாதத்தில்_சமர்ப்பித்தது_ஒரு_கார்த்திகை_மாதம் 28ம் #தேதி (#டிசம்பர் 1587ம் வருடம்). 100 வது தசக பாடல்களில், குருவாயூரப்பனின் தலை முதல் கால் வரை (#கேசாதி_பாதம்) வர்ணித்துள்ளார் பட்டத்திரி.
--
அப்போது #குருவாயூரப்பனே_அவருக்கு_நேரில்_தரிசனம்_அளித்தார். அன்று பட்டத்திரியை பிடித்து இருந்த #வாதரோகமும்_நீங்கியது. இந்த தினத்தைத்தான் குருவாயூரப்பன் ஆலயத்தில் #பிரதி_வருடம்_கார்த்திகை 28ம் தேதியன்று '#நாராயணீயதினம்' என்று தேவஸ்வம் சார்பில் கொண்டாடுகிறார்கள். அன்று ஆலயத்தில் பட்டத்திரி அமர்ந்து பாடிய இடத்தில் சிறப்பான கோலங்கள் இட்டு, விளக்கேற்றி,
ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்வார்கள். நாராயணீயத்தைப் பற்றி விளக்க உரை, சொற்பொழிவுகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முக்கியமாக நாள்பட்ட நோயினால் அவதிப்படுபவர்கள் ஆலயத்தில் கூடி #குருவாயூரப்_பனைதரிசனம் செய்து பலன் பெறுவார்கள். #பட்டத்திரி_வாழ்ந்த_மேல்பதூர் இல்லத்திலும் இந்நாள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அங்கு அவருடைய  பளிங்கு உருவச்சிலையும், மிகப்பெரிய ஆடிட்டோரியமும் (தியான மண்டபம் மாதிரி) உள்ளது. பக்தர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டும். இந்த நாராயணீய தினம் தமிழ்நாட்டில் திருச்சி அருகில் உள்ள பழூர் அக்ரஹாரத்தில்,
உள்ள ஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் அதிஷ்டானத்திலும் சிறப்பு பாராயணம், பூஜை போன்ற வைபவங்களுடன் கொண்டாடப்
படுகின்றது.

குருவாயூரப்பன் பெருமையைச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றிய பக்திக்காவியம் ஸ்ரீம் பாகவதத்தின் சாரம் எனப் புகழப்படும் நாராயணீயம் ஆகும். ஸ்ரீ காஞ்சிமகா சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீமந்நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருளாசி வழங்குவது வழக்கம். இந்த நாராயணீயம், ஸ்லோகத்தின் கடைசி வரியில் #பாராயண பலனாக நமக்கு உடல் நலத்தையும் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் கண்ட பரவசத்தில் பட்டத்திரி அறுதியிட்டு முடித்துள்ளார். எனவே இந்த தினத்தில் #ஆலயத்திலோ_அல்லது_இல்லத்திலோ_நாம்_நாராயணீயம்_பாராயண ஏற்பாடுகளைச் செய்தால் நலமுண்டாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

-எஸ்.வெங்கட்ராமன்

Sunday, 15 December 2019

ஸ்ரீபரசுராமர்_அவதார_தினம்

"#தந்தை_சொல்மிக்க_மந்திரமில்லை..!"

#ஸ்ரீபரசுராமர்_அவதார_தினம்

பகவான் மகாவிஷ்ணு துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக எடுத்த அவதாரங்களில் 6-வது அவதாரம் ஸ்ரீபரசுராம அவதாரம். ராமாயண காலத்திலும், மகாபாரத காலத்திலும் இருந்த ஒரே அவதாரம் என்ற சிறப்பு ஸ்ரீபரசுராமன் அவதாரத்துக்கு உண்டு.
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற தசரதராமனின் அவதாரம் என்றால், தந்தை சொல்லை விடவும் சிறந்த மந்திரம் இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துவதற்காக எடுத்த அவதாரம் ஸ்ரீபரசுராம அவதாரம்.

புரரூரவசுக்கும் தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி, அவனுடைய வம்சத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், அந்த வம்சத்தில் பிறந்தவர்கள் சந்திரவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்
படுகிறார்கள். இந்த காதிராஜனின் மகள் சத்தியவதி. அழகும் அறிவும் மிக்க அவளைத் திருமணம் செய்துகொள்ள பிருகுவின் பிள்ளையான ரிஷிகன் விரும்பினான். தன் விருப்பத்தை காதிராஜனிடம் தெரிவித்தான். ஆனால், அழகும் அறிவும் மிக்க தன் மகளை ரிஷிகனுக்கு திருமணம் செய்துகொடுக்க அவன் மனம் ஒப்பவில்லை. எனவே, காதுகளில் ஒன்று பச்சையாகவும் மற்ற அங்கங்கள் தூய வெண்மை நிறத்துடனும் இருக்கும் ஆயிரம் குதிரைகளை தட்சிணையாகத் தந்தால், சத்தியவதியை மணம் முடித்துத் தருவதாக நிபந்தனை விதித்தான்.

ரிஷிகன் வருணதேவனை பிரார்த்தித்து அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், தான் சாத்தியம் இல்லாதது என்று நினைத்த காரியத்தை செய்து  முடித்த ரிஷிகனுக்கு இனியும் தன் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்க
வில்லை என்றால் வார்த்தை தவறியதாகும் என்று நினைத்து, சத்தியவதியை ரிஷிகனுக்கு மணம் முடித்துத் தந்தான்.

சிலகாலம் சென்றதும் சத்தியவதிக்கு உத்தமமான தவத்தில் ஆர்வம் மிக்க மகன் பிறக்கவேண்டும் என்று விரும்பினாள். அதேசமயம் சத்தியவதியின் தாய்க்கும் தனக்கு பராக்கிரமம் நிறைந்த பிள்ளை பிறக்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், ஒரு யாகம் செய்தான். உத்தமமான பிள்ளை பிறக்க மந்திர உச்சாடனம் செய்து ஒரு கவளம் அன்னப் பிரசாதம் எடுத்துக்கொண்டான். பிறகு பராக்கிரமமான பிள்ளை  பிறக்கவேண்டும் என்று மந்திர உச்சாடனம் செய்து ஒரு கவளம் அன்ன பிரசாதம் எடுத்துக் கொண்டான். உத்தமமான பிள்ளை பிறக்கச் செய்யும் அன்ன பிரசாதத்தை தன் மனைவிக்கும், பராக்கிரமமான பிள்ளை பிறக்கச் செய்யும் அன்ன பிரசாதத்தை தன் மாமியாருக்கும் கொடுத்தான்.

தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான். #ரிஷிகனுக்குப் பிள்ளையாக #ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து #கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் #இருபத்தொரு_க்ஷத்திரியப்_பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் #பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன்.

ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் #சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்று போற்றி வணங்கும் கற்பரசி. தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும் என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவாள். அந்தத் தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

கேகய தேசத்து மன்னனான #கிருதவீர்யனின் மகன் #கார்த்தவீர்யாஜுனன். இவன் #ராவணனை மட்டுமேபோரில் வென்று சிறைப் பிடித்தவன். அவன் ஒருநாள் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான். திரும்பும்போது ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் அவர்களுக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்தார். காட்டில் வசிக்கும் முனிவருக்கு தெய்வப் பசுவான #காமதேனுவின் உதவியால்தான் அனைத்தும் அவருக்குக் கிடைக்கிறது என்று தெரிந்துகொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன்தான் அதைக் கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான #மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

அரசன் என்பவன் தெய்வத்துக்குச் சமம் என்பதால், கார்த்தவீரியன் செய்த தவற்றை மறந்து மன்னிக்காமல் கொன்ற பாவம் தீருவதற்காக திருத்தல யாத்திரை செல்லுமாறு கட்டளை இட்டார். பரசுராமரும் ஒரு வருடகாலம் தீர்த்த யாத்திரை சென்றார். அவர் பல புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்தார். பிள்ளை நல்லபடியாக தீர்த்த யாத்திரை செய்துவிட்டு வந்ததால் ஜமதக்னியும் ரேணுகா தேவியும் பரம திருப்தி அடைந்தனர்.

ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். அவ்வளவில் அவளுடைய கற்பு நெறி தவறியது. கையில் சேர்த்து பிசைந்த மண் குடமாக மாறவில்லை. நடந்ததை அறிந்த ஜமதக்னி முனிவர், தன் பிள்ளைகளை அழைத்தார். ரேணுகா தேவியை கொல்லும்படி சொன்னார். மற்ற பிள்ளைகள் தயங்கிய நிலையில் பரசுராமர்  தாயை கொன்றார்.  தாயின் தலையுடன் சகோதரர்களின் தலைகளும் பரசுவால் தாக்கப்பட்டு கீழே விழுந்தன.

தன் சொல்லை மந்திர வாக்காகக் கொண்டு காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டுப் பார்த்து, '' ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்னைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். ஜமதக்னியும் அப்படியே அருளினார். இந்நிலையில் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். ஜமதக்னி முனிவரின் சிரசை வெட்டி வீழ்த்தினர். நடந்ததை அறிந்த பரசுராமர், ''கொடிய குணம் கொண்ட க்ஷத்திரிய வம்சத்தை அடியோடு அழிப்பேன்'' என்று சபதம் செய்தார். அப்படியே கார்த்தவீர்யாஜுனனின் பிள்ளைகள் அனைவரையும் கொன்றார்.
தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்து ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி  திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த #அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரிய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், ராமரை ஆசிர்வதித்துவிட்டுச் செல்கிறார்.

மகாபாரதத்தில் பரசுராமர்:

பரசுராமர் கர்ணனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய தொடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே வேதனை. அவன் தொடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். நடந்ததைப் பார்த்து, ''வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு'' என்று வார்த்தைகளில் சினம் பொங்கக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குருக்ஷேத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான்.

#கோயில்கள்:

பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். #கேரளா_பரசுராம்_க்ஷேத்திரம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. #கர்நாடகாவில்_சிக்மகளூர்_அருகே_நஞ்சன்கட்_என்ற ஊர் உள்ளது. இங்குள்ள #கண்டேஸ்வரர்_கோயில்_பரசுராமர்_வழிபட்ட_தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய #சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் #சாஸ்னா_என்ற_கல்பீடம்_எழுப்பப்பட்டுள்ளதுபீடத்தில்_பரசுராமரின்_பாதம்_பொறிக்கப்பட்டுள்ளது. இந்த 8பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.

- க.புவனேஸ்வரி

நன்றி : விகடன்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...