#ஸ்ரீமந்_நாராயணீய_தினம்
'. 14.12.2019
#நலம்_நல்கும்_நாராயணீயம்!
'#பரசுராம_சேஷத்திரம்' என்ற புராணப் பெருமையுடன் திகழும் #கேரள_மாநிலத்தில்_உள்ள_புகழ்பெற்ற_ஸ்ரீகுருவாயூரப்பன்_ஆலயத்தில்_நடைபெறும். #வருடாந்திர_உற்சவ_தினங்களில்_ஒவ்வொரு_ஆண்டும்_கார்த்திகை_மாதம்28ம்_தேதி '#ஸ்ரீமந்_நாராயணீய_தினம்' என்று விசேஷமாக கொண்டாடப்
படுகின்றது. இந்த நிகழ்வைப் பற்றிய சிறப்பினை தெரிந்துகொள்வோம்.
--
சுமார் 450 வருடங்களுக்கு முன் (1950-ல்) வாழ்ந்தவர் #மேப்பத்தூர்_நாராயண_நம்பூதிரி என்ற பெரும் பக்தர். பிற்காலத்தில் நாடெங்கும் போற்றப்பட்டு #நாராயண_பட்டத்திரி என்று அறியப்பட்டவர் இவரே. கேரளாவில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான '#திருநாவாய்' என்ற தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது மேப்பத்தூர் எனும் மேல்புதூர். பாரதப்புழை ஆற்றை ஒட்டியுள்ளது. 16 வயது பருவத்திலேயே இறையருளால் அனைவரும் அதிசயக்கும்படி அதிமேதாவியாக, தலைசிறந்த #சமஸ்கிருத_பண்டிதராகத் திகழ்ந்தார். தனக்கு #வியாகரணங்கள் (இலக்கணம்) கற்பிவித்த ஆசான் (#அச்சுத_பிஷரோடி_என்ற_குரு) வாதரோகம் என்ற நோயினால் அவதிப்படுவதைக் கண்டார். குருவிற்கு, குரு தட்சணை அளிக்கும் தருணம் வந்தது.
--
இறைவனிடம், நன்றிக்கடனாக குருவைப் பற்றியுள்ள நோய் அவரை விட்டு தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று மண்டாடி வேண்டிக்கொண்டு, அந்த நோயை வலிய வரவழைத்துக்
கொண்டார். இளமைப்பருவத்தில் இருந்த அவர் அந்த நோய் நீங்குவதற்காக பிரபல மலையாள கவிஞரும் பண்டிதருமான துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரை அணுகினார். அவர் அறிவுறுத்தலின்படி,
ஸ்ரீ குருவாயூர் தலத்திற்கு வந்து #ஸ்ரீ_குருவாயூரப்பன்_சந்நிதியில்_ஸ்ரீமத்_பாகவத_சரித்திரத்தை_வடமொழி_சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத்துதி செய்தார். அவரது பக்திக்கும் கட்டுண்ட #ஸ்ரீகுருவாயூரப்பன்_அவ்வப்போது_தன்_தலை_அசைப்பின்_மூலம்_அவரது_தோத்திரங்களை_அங்கீகாரம்_செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டத்திரி வர்ணிக்கும் போது குருவாயூரப்பன் மூலஸ்தானத்
திலிருந்து #சிம்ம_கர்ஜனைக்_கேட்டதாம். (நரசிம்மனாகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு)
--
நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி (சீடர்) ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளித்ததே
'ஸ்ரீ மந்நாராயணீயம்' ஆகும். 1034 வடமொழி சுலோகங்களால் ஆனது இந்நூல். நாராயண பட்டத்திரி குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் பத்துசுலோகங்கள் வீதம் (ஒரு தசகம்)
100 தசகங்களில் '#நாராயணீயத்தை' பாடி முடித்தார். அவ்வாறு #பாடி_பூர்த்தி_செய்து_குருவாயூர்_கிருஷ்ண_பகவான்_பாதத்தில்_சமர்ப்பித்தது_ஒரு_கார்த்திகை_மாதம் 28ம் #தேதி (#டிசம்பர் 1587ம் வருடம்). 100 வது தசக பாடல்களில், குருவாயூரப்பனின் தலை முதல் கால் வரை (#கேசாதி_பாதம்) வர்ணித்துள்ளார் பட்டத்திரி.
--
அப்போது #குருவாயூரப்பனே_அவருக்கு_நேரில்_தரிசனம்_அளித்தார். அன்று பட்டத்திரியை பிடித்து இருந்த #வாதரோகமும்_நீங்கியது. இந்த தினத்தைத்தான் குருவாயூரப்பன் ஆலயத்தில் #பிரதி_வருடம்_கார்த்திகை 28ம் தேதியன்று '#நாராயணீயதினம்' என்று தேவஸ்வம் சார்பில் கொண்டாடுகிறார்கள். அன்று ஆலயத்தில் பட்டத்திரி அமர்ந்து பாடிய இடத்தில் சிறப்பான கோலங்கள் இட்டு, விளக்கேற்றி,
ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்வார்கள். நாராயணீயத்தைப் பற்றி விளக்க உரை, சொற்பொழிவுகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முக்கியமாக நாள்பட்ட நோயினால் அவதிப்படுபவர்கள் ஆலயத்தில் கூடி #குருவாயூரப்_பனைதரிசனம் செய்து பலன் பெறுவார்கள். #பட்டத்திரி_வாழ்ந்த_மேல்பதூர் இல்லத்திலும் இந்நாள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அங்கு அவருடைய பளிங்கு உருவச்சிலையும், மிகப்பெரிய ஆடிட்டோரியமும் (தியான மண்டபம் மாதிரி) உள்ளது. பக்தர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டும். இந்த நாராயணீய தினம் தமிழ்நாட்டில் திருச்சி அருகில் உள்ள பழூர் அக்ரஹாரத்தில்,
உள்ள ஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் அதிஷ்டானத்திலும் சிறப்பு பாராயணம், பூஜை போன்ற வைபவங்களுடன் கொண்டாடப்
படுகின்றது.
குருவாயூரப்பன் பெருமையைச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றிய பக்திக்காவியம் ஸ்ரீம் பாகவதத்தின் சாரம் எனப் புகழப்படும் நாராயணீயம் ஆகும். ஸ்ரீ காஞ்சிமகா சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீமந்நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருளாசி வழங்குவது வழக்கம். இந்த நாராயணீயம், ஸ்லோகத்தின் கடைசி வரியில் #பாராயண பலனாக நமக்கு உடல் நலத்தையும் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் கண்ட பரவசத்தில் பட்டத்திரி அறுதியிட்டு முடித்துள்ளார். எனவே இந்த தினத்தில் #ஆலயத்திலோ_அல்லது_இல்லத்திலோ_நாம்_நாராயணீயம்_பாராயண ஏற்பாடுகளைச் செய்தால் நலமுண்டாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
-எஸ்.வெங்கட்ராமன்

No comments:
Post a Comment