#மணமேடை_ஏறிய_மகள்_கூந்தலைத்_தானமாகக்_கேட்ட_சிவனடியார்! --
#மானக்கஞ்சாற_நாயனார்_குருபூஜை
!
தன்னிடமிருக்கும் அனைத்தும் அந்த இறைவனின் அடியவர்களுக்கே உரியது என்று எண்ணி வாழ்ந்து அவற்றை வழங்கிய நாயன்மார்களில் முக்கியமானவர் மானகஞ்சாறார்.
சிவன்
அடியவர்க்குச் செய்யும் சேவையே ஆண்டவனுக்குச் செய்யும் சேவை என்பது ஆன்றோர் கருத்து. அப்படி அடியவர்களுக்குச் சேவை செய்து அமர வாழ்வினைப் பெற்ற அடியவர்களே #அறுபத்து_மூவர். தன்னிடமிருக்கும் அனைத்தும் அந்த இறைவனின் அடியவர்களுக்கே உரியது என்று எண்ணி வாழ்ந்து அவற்றை வழங்கிய #நாயன்மார்களில்_முக்கியமானவர்_மானகஞ்சாறார்.
கரும்பு அதிகம் விளைந்து கன்னல்சாறு மிகுந்திருந்ததால் அந்த ஊர் #கஞ்சாறூர் எனப்பட்டது. இந்த ஊர் தற்போது மயிலாடுதுறையருகே '#ஆனதாண்டவபுரம்' என வழங்கப்படுகிறது. திருநீறு அணிந்து எப்போதும் சிவ சிந்தனையில் திளைத்து வாழ்ந்தவர் மானக் கஞ்சாறார். இவர் தன் பொருள் அனைத்தும் இறைவனுக்கும் அடியவர்க்கும் உரியதே என்னும் எண்ணம் கொண்டவர்.
நீண்ட காலம் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த மானக் கஞ்சாறாருக்கு ஈசனின் அருளால் ஒரு பெண் குழந்தை பெறந்தது. பிறந்த நாள் முதல் பக்தியிலும் அழகிலும் சிறந்துவிளங்கிய அந்தப் பெண்ணின் பெருமைகளைக் கேள்விப்பட்ட #மன்னனான_கலிக்காமர், பெண்கேட்டு பெரியவர்களை அனுப்பிவைத்தார். இவரது தயாள குணத்தோடும் இறைபக்தியோடும் விளையாட விரும்பிய ஈசன், ஓர் அடியவர் உருக்கொண்டு மணமேடை வந்தார். அவரைக் கண்டதும் வணங்கி வரவேற்ற மானக் கஞ்சாறர் 'தாங்கள் வேண்டுவது என்ன?' என்று கேட்டார்.
மணவறையில் மணமகளுக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுருந்தன. சுருண்டு அழகாய் நீண்டிருந்த அவள்கூந்தல் பின்னப்பட்டு, மலர்க்கொத்துகள் சூட்டி தழையத் தழைய அலங்கரிக்கப் பட்டிருந்தது. இதைக் கண்ட சிவனடியார் '#இவளது_தலைமுடி_என்_பஞ்சவடிக்கு_உதவும்போலத்_தெரிகிறது_எனவே_அதை_எனக்குக்_கொடு' என்று கேட்டார்.
சிவனடியார் கேட்டதைச் சிவனே கேட்டதாகக் கருதும் கஞ்சாறர் சற்றும் தயங்காமல் கூராயுதம் எடுத்து மணக்கோலத்தில் இருந்த தன் புதல்வியின் தலைக்கூந்தல் அடியை நறுக்கியெடுத்தார். அடியவரின் இந்தச் செயலைக் கண்டு அனைவரும் திகைத்து நிற்கும் தருணம், #அங்கு_ஈசன்_இடப_வாகனனாய்_உமாதேவியோடு_காட்சிகொடுத்தார். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் ஈசனை வணங்கி அருள் பெற்றனர்.
இப்படிப்பட்ட பெருமைகளை உடைய மானக் கஞ்சாறார் #மார்கழி_மாதம்_சுவாதி_நட்சத்திரதினத்தில்_சிவனடி_சேர்ந்தார். எனவே ஒவ்வொரு மார்கழி சுவாதி நட்சத்திர தினத்திலும் மானக் கஞ்சாறரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை நேற்று ( 22.12.2019) இந்த நன்நாளில் சிவாலயம் சென்று ஈசனையும் நாயன்மார்களையும் வணங்கத் துன்பங்கள் தீரும் என்பது ஐதிகம். எனவே, தவறாமல் இந்த நாளில் சிவ வழிபாடு செய்யுங்கள்.
நன்றி : விகடன்.

No comments:
Post a Comment