Thursday, 7 March 2019

#தட்சிணாமூர்த்தி_அஷ்டகம்

#வ்ருஷ_தேவர்_அருளியது.

☘அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
எண்ணுதற்கரிய குணமுடையவரும், காட்சி முதலிய பிரமாணங்களால் அறியவொண்ணாதவரும், உலகங்களைப் படைத்து, காத்து, அழிக்கக் காரணமாயும், சாந்தமான யோகிகளினுள்ளத்தில் குடிகொண்டவரும், முதல்வருமான( நன்றி : தினமலர் )
 தக்ஷிணாமூர்த்தியை இடையறாது நான் துதிக்கின்றேன்.

☘நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
வரம்பிலாத இன்பமுடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின்
( நன்றி  :  தினமலர்)
 மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பதுபோலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
மூவுலகிற்கு குருவாயும், ஆகமங்களால் உணரப்படுபவரும், உலகங்களுக்குக் காரணமான யோகமாயையுடையவரும், நூறு சூரியன்போல் ஒளிர்பவரும், இஷ்டங்களை அளிப்பவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

#பொருளுரை :
உலக வாழ்க்கையை நினைப்பவர்கட்கு எட்டாதவரும், தாமரை அடியிணைகளை தியானிப்பவருக்கு அண்மையிலுள்ள பிறவிக் கடலைத் தாண்ட
( நன்றி  :  தினமலர்)
 கப்பல்போன்ற திருவடிகளை உடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
எப்போதும் ஆலமரத்தடியிலிருப்பவரும், உபநிடதங்களால் உணர்த்தப்பெறும் உடலுடையவரும், கைவிரலிலுள்ள சின் முத்திரையினால் மெய்ஞ்ஞானம் உணர்த்துபவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
பிரம்மபுத்திரனால் பூஜிக்கப்பட்ட திருவடித்தாமரைகளில் வணங்கியோர்களுக்கு வீடுபேறு அளிக்க வல்லமையுடையவரும், குருகுலவாசம் செய்த யோகிகளுக்கு நண்பருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
துறவிகளினுள்ளத்தில் விளங்குபவரும், கோடி மன்மதனை யொத்த அழகினை உடையவரும், பரோபகாரிகளுக்குச் சேவிக்கத்தக்க முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!☘

பொருளுரை :
புன்முறுவல் பூத்த மலர்ந்த முகமுடையவரும், மறைகளாலறியப்படுபவரும், விடையேறிய வெண்தாமரை போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

☘வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!☘

பொருளுரை :
விருஷபதேவரால் இயற்றப்பட்ட இஷ்டங்களை அளிக்கவல்ல இத்துதியைத் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியில் படிப்பவர் சகல துக்கங்களிலும் பாபங்களினும் விடுபட்டவராய் மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிவலோகத்தில் வாழ்வார்.

#நன்றி  :  #தினமலர்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...