ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
ஸ்ரீ ராமபிரானின் இந்த கதை கேட்கும் எல்லோருமே
இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே என்ற புகழ் பெற்ற பாடல் வரிகள் இன்று 10/3/2019 ஞாயிறு அன்று பதிவு செய்துள்ளோம். ஸ்ரீ ராமபிரானை வழிபட்டால் கோடி கோடி நன்மைகள் கிடைக்கும். உங்கள் மனக்குறை நீங்கும்.வாழ்க்கை சிறந்து விளங்கும் .ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே போற்றி ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு திருவடிகளே துணை ஸ்ரீ ராமஜெயம்
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவிகுளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..
இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும்போதிலே (2)
இணையே இல்லாத காவியமாகும்..(ஜெகம் புகழும்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
கருவினிலே உருவானார் ராமர், லஷ்மணர்
கனிவுள்ள பரதன், சத்ருக்னர் நால்வர்..
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தாரே..
காட்டில் கெளசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே..
தாடகை சுபாகுவை தரையில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே (2)
பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின் (2)
சீர்பெறும் மிதிலை நகர் நாடி சென்றனரே..
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையை கன்னி மாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தனர்(2)
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்..
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தன்னை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வனின் வீரத்தை கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையை கண்டான்...(ஜெகம் புகழும்)
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணி முடி சூட்டவே நாள் குறித்தானே(2)
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகரத் தோரணத்தால் அலங்கரித்தனரே..
மந்தரை போதனையால் மனம்மாறி கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள் வாழவும்
மன்னனிடம் வரமதைக் கேட்டாள்..
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உன்னை வனம் போக சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தை தந்தார் என்றாள்..
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கி சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே விலெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினார்..
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு (2)
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடன் எனப் போவதென்று தடுத்தனர் சென்று..
ஆறுதல் கூறியே கார்முகில் வந்தான்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்னதற்காகவே
அன்னலும் கானகத்தை நாடிச் சென்றானே...(ஜெகம் புகழும்)
கங்கைக் கரைஅதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான் (2)
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்(2)
அஞ்சக வண்ணன் அங்கு சென்று தங்கினான் (2)
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள் (2)
கோபம் கொண்ட இளையோன்
குரும்பால் அவளை மானபங்கம் செய்து விரட்டி விட்டன்..
தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்..(2)
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்..
வழியிலே ஜடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் ஹனுமனின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டி இலங்கை சென்ற ஹனுமான்
அன்னையை அசோக வனத்தில் கண்டான்..
"ராம சாமியின் தூதன் நானடா ராவணா" என்றான்
ஹனுமார் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
"கண்டேன் அன்னையை" என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அய்யன் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்..
விபீஷணனின் நட்பைக் கொண்டான்
விபீஷணனின் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியை தீக்குளிக்க செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டார்(2)
மக்கள் பலரும் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்...(ஜெகம் புகழும்)
ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே போற்றி
ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு திருவடிகளே துணை ஸ்ரீ ராமஜெயம்

No comments:
Post a Comment