Wednesday, 6 March 2019

நரசிம்ம_ராஜ_மந்திரம்

#நரசிம்ம_ராஜ_மந்திரம்
!

திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே #ஸ்ரீ_மந்திரராஜபத_ஸ்தோத்திரம். தினமும் மாலையில், #லட்சுமி_நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை வைத்து  இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.

☘வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!☘

#பொருள்: பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்!
நகாக்ரை சகலீசக்ரே
யஸ்தம் வீரம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!! ☘

#பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

☘ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்!!☘

#பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நன்றி  : தினமலர்

☘நரவத் ஸிம்ஹவச் சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந!
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!☘

#பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.

☘யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி
பீஷணம் தம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

#நன்றி  :  #தினமலர்.

☘ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே!
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!!☘

#பொருள்: மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

☘நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்!
த்யக்தது கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம்
நமாம்யஹம்!!☘

#பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

☘தாஸபூதா: ஸ்வத ஸர்வே
ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ:
இதி மத்வா
 நமாம்யஹம்!!☘

#பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

☘சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச
வர்த்ததே!!☘

#பொருள்: ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

☘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!☘

#பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

☘ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நம;
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:
ஓம் பூம் பூம்யை நம:
ஓம் நீம் நீளாயை நம:☘

#பொருள்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம். லட்சுமி தாயாருக்கு நமஸ்காரம். பூமாதேவிக்கு நமஸ்காரம். நீளாதேவிக்கு நமஸ்காரம்.

☘#நன்றி  :  #தினமலர். ☘

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...