Saturday, 19 October 2024

சுதர்ஸன அஷ்டகம்

 (சுதர்ஸன அஷ்டகம்..)


(ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகத்தை அடியேன் அறிந்த வரையில், 

அந்த ஸ்லோகத்தின் மெட்டிலேயே மொழி பெயர்த்திருக்கிறேன்..


ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வதற்குச் சிலர் ஸ்ரமப்படக்கூடும் என்பதால் மேற்படி முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..


...இந்த சுதர்ஸன ஸ்லோகத்தை தினமும் பக்தி ஸ்ரத்தையோடு பாராயணம் செய்பவர்,


...வாழ்வில் உள்ள எல்லாத் தடைகளும் நீங்கப் பெற்று, சகல சம்பத்துக்களையும் அடைவர் என்பது ஸ்வாமியின் திருவாக்காகும்..)


 ப்ரதிப⁴டஶ்ரேணி பீ⁴ஷண வரகு³ணஸ்தோம பூ⁴ஷண

ஜநிப⁴யஸ்தா²ந தாரண ஜக³த³வஸ்தா²ந காரண ।

நிகி²லது³ஷ்கர்ம கர்ஶந நிக³மஸத்³த⁴ர்ம த³ர்ஶந

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (1)


அரிபடை அஞ்சவைப்பவன்;

அருங்குண அணியுமானவன்;

அதிபயம் ஆனபிறவியாம் 

ஆழ்கடல் தாண்டவைப்பவன்;


அண்டபகிரண்டம் அனைத்தையும்

அழகாய்நிலை நிறுத்தம்செய்பவன்;

அளவிலாபாவ மூடையை

அடிச்சுவடும் இன்றிஅழிப்பவன்;


அருமறைகாட்டும் வழியினில்

அழைத்துச்செல்லுமொரு வல்லவன்;

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!..


ஶுப⁴ஜக³த்³ரூப மண்ட³ந ஸுரக³ணத்ராஸ க²ண்ட³ந

ஶதமக²ப்³ரஹ்ம வந்தி³த ஶதபத²ப்³ரஹ்ம நந்தி³த ।

ப்ரதி²தவித்³வத் ஸபக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்ய லக்ஷித

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (2)


அண்டர்கோன் அணியும்ஆனவன்;

அமரர்தம் அச்சம்அழிப்பவன்;

அயன்முதலாதி தேவரும்

அடிபணிந்தேத்தும் தூயவன்;


அறநெறிவாழும் அந்தணர்

அகமகிழ்ந்தணுகும் பெரியவன்;

அண்டிவருகின்ற அன்பர்க்கே

அனைத்துவெற்றியும் அருள்பவன்;


அழிக்குமிறையான அரனவன்

அகமும்வியக்கின்ற அதிசயன்;

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!


ஸ்பு²டதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருʼது²தரஜ்வால பஞ்ஜர

பரிக³த ப்ரத்நவிக்³ரஹ பதுதரப்ரஜ்ஞ து³ர்க்³ரஹ ।

ப்ரஹரண க்³ராம மண்டி³த பரிஜந த்ராண பண்டி³த

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (3)


அண்டமிதனுடைய ஒளியெலாம்

அடர்ந்துவந்ததோர் வடிவினன்;

அகன்றுசூழ்ந்த தீநாக்கெலாம்

ஆனதேஉன் எழில்அரண்!


அரியின்வடிவங்கள் பலதுமே

ஆக்கிவைத்ததே உன்உரு!

அனைத்துமறிந்த நல்அறிஞரும்

அரிதாயுணருவர் உன்புகழ்!


ஆயுதம்பதினாறு தாங்கியே

அபயமளிக்கின்ற மூர்த்தியே!

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே உனக்குமங்களம்!


நிஜபத³ப்ரீத ஸத்³க³ண நிருபதி⁴ஸ்பீ²த ஷட்³கு³ண

நிக³ம நிர்வ்யூட⁴ வைப⁴வ நிஜபர வ்யூஹ வைப⁴வ ।

ஹரி ஹய த்³வேஷி தா³ரண ஹர புர ப்லோஷ காரண

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (4)


அறவழிவாழ்வர் மனதுமே

அடிஇணைஉனதை நாடுமே!

அறுகுணநிதிகள் அனைத்துமே

அண்டிஉன்னையே கூடுமே!


அருமறையின் அங்கம்யாவையும்

அருங்குணம்உனதைச் சொல்லுதே!

அரியவன்போல் பரவ்யூகமே

ஆழியான்உனக்கும் உள்ளதே!


அமரேசன்அச்சம் தொலைத்தநீ

அரனவன்போரில் உதவினை!

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!


(வளரும்..)

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...