Saturday, 19 October 2024

சுதர்ஸன அஷ்டகம்

 (சுதர்ஸன அஷ்டகம்..)


(ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகத்தை அடியேன் அறிந்த வரையில், 

அந்த ஸ்லோகத்தின் மெட்டிலேயே மொழி பெயர்த்திருக்கிறேன்..


ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வதற்குச் சிலர் ஸ்ரமப்படக்கூடும் என்பதால் மேற்படி முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..


...இந்த சுதர்ஸன ஸ்லோகத்தை தினமும் பக்தி ஸ்ரத்தையோடு பாராயணம் செய்பவர்,


...வாழ்வில் உள்ள எல்லாத் தடைகளும் நீங்கப் பெற்று, சகல சம்பத்துக்களையும் அடைவர் என்பது ஸ்வாமியின் திருவாக்காகும்..)


 ப்ரதிப⁴டஶ்ரேணி பீ⁴ஷண வரகு³ணஸ்தோம பூ⁴ஷண

ஜநிப⁴யஸ்தா²ந தாரண ஜக³த³வஸ்தா²ந காரண ।

நிகி²லது³ஷ்கர்ம கர்ஶந நிக³மஸத்³த⁴ர்ம த³ர்ஶந

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (1)


அரிபடை அஞ்சவைப்பவன்;

அருங்குண அணியுமானவன்;

அதிபயம் ஆனபிறவியாம் 

ஆழ்கடல் தாண்டவைப்பவன்;


அண்டபகிரண்டம் அனைத்தையும்

அழகாய்நிலை நிறுத்தம்செய்பவன்;

அளவிலாபாவ மூடையை

அடிச்சுவடும் இன்றிஅழிப்பவன்;


அருமறைகாட்டும் வழியினில்

அழைத்துச்செல்லுமொரு வல்லவன்;

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!..


ஶுப⁴ஜக³த்³ரூப மண்ட³ந ஸுரக³ணத்ராஸ க²ண்ட³ந

ஶதமக²ப்³ரஹ்ம வந்தி³த ஶதபத²ப்³ரஹ்ம நந்தி³த ।

ப்ரதி²தவித்³வத் ஸபக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்ய லக்ஷித

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (2)


அண்டர்கோன் அணியும்ஆனவன்;

அமரர்தம் அச்சம்அழிப்பவன்;

அயன்முதலாதி தேவரும்

அடிபணிந்தேத்தும் தூயவன்;


அறநெறிவாழும் அந்தணர்

அகமகிழ்ந்தணுகும் பெரியவன்;

அண்டிவருகின்ற அன்பர்க்கே

அனைத்துவெற்றியும் அருள்பவன்;


அழிக்குமிறையான அரனவன்

அகமும்வியக்கின்ற அதிசயன்;

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!


ஸ்பு²டதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருʼது²தரஜ்வால பஞ்ஜர

பரிக³த ப்ரத்நவிக்³ரஹ பதுதரப்ரஜ்ஞ து³ர்க்³ரஹ ।

ப்ரஹரண க்³ராம மண்டி³த பரிஜந த்ராண பண்டி³த

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (3)


அண்டமிதனுடைய ஒளியெலாம்

அடர்ந்துவந்ததோர் வடிவினன்;

அகன்றுசூழ்ந்த தீநாக்கெலாம்

ஆனதேஉன் எழில்அரண்!


அரியின்வடிவங்கள் பலதுமே

ஆக்கிவைத்ததே உன்உரு!

அனைத்துமறிந்த நல்அறிஞரும்

அரிதாயுணருவர் உன்புகழ்!


ஆயுதம்பதினாறு தாங்கியே

அபயமளிக்கின்ற மூர்த்தியே!

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே உனக்குமங்களம்!


நிஜபத³ப்ரீத ஸத்³க³ண நிருபதி⁴ஸ்பீ²த ஷட்³கு³ண

நிக³ம நிர்வ்யூட⁴ வைப⁴வ நிஜபர வ்யூஹ வைப⁴வ ।

ஹரி ஹய த்³வேஷி தா³ரண ஹர புர ப்லோஷ காரண

ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீ ஸுத³ர்ஶந ॥ (4)


அறவழிவாழ்வர் மனதுமே

அடிஇணைஉனதை நாடுமே!

அறுகுணநிதிகள் அனைத்துமே

அண்டிஉன்னையே கூடுமே!


அருமறையின் அங்கம்யாவையும்

அருங்குணம்உனதைச் சொல்லுதே!

அரியவன்போல் பரவ்யூகமே

ஆழியான்உனக்கும் உள்ளதே!


அமரேசன்அச்சம் தொலைத்தநீ

அரனவன்போரில் உதவினை!

ஆழியான் உனக்குமங்களம்!

அரிநேமியே! உனக்குமங்களம்!


(வளரும்..)

தேவராஜாஜ அஷ்டகம்.

 திருக்கச்சி நம்பிகள்

இயற்றிய தேவராஜாஜ அஷ்டகம்.


திருக்கச்சி நம்பிகள் பெருந்தேவித் தாயாரின் ப்ரிய கேள்வனான வரதராஜப் பெருமாளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார்.


ஸ்லோகம் 1

நமஸ்தே ஹஸ்தி சைலேச! ஸ்ரீமன்! அம்புஜ லோசன! |

சரணம் த்வாம் பிரபன்னோஸ்மி ப்ரணதார்த்தி ஹராச்யுத! ||


ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம். தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.


ச்லோகம் 2


ஸமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண! கருணோல்பண! |

விலஸந்து கடாக்ஷாஸ்தே மய்யஸ்மின் ஜகதாம்பதே  ||


எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே! உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.


ச்லோகம் 3


நிந்திதாசார கரணம் நிவ்ருத்தம் க்ருத்ய கர்மண :  |

பாபீயாம்சம் அமர்யாதம் பாஹிமாம் வரத ப்ரபோ! ||


நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும், பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.


ச்லோகம் 4


ஸம்ஸார மருகாந்தாரே துர்வ்யாதி வயாக்ர பீஷணே |

விஷய க்ஷுத்ர குல்மாட்யே த்ருஷாபாதபசாலினி ||


ச்லோகம் 5


புத்ர தார க்ருஹ க்ஷேத்ர ம்ருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே |

க்ருத்யா க்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத: ||


ச்லோகம் 6


அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம் |

க்ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் க்லேச ஸம்ச்ரயம் ||


ச்லோகம் 7


ஸந்தப்தம் ​​விவிதைர் து:கை: துர்வசைரேவமாதிபி: | 

தேவராஜ! தயாஸிந்தோ!​ தேவதேவ ஜகத்பதே!  ||


ச்லோகம் 8


த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசி விக்ஷேபசீகரை: |

காருண்ய மாருதாநீதை: சீதலைரபிஷிஞ்சமாம் ||


4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி, தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.


ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள். பாலைவனத்தில் முட்புதர்கள்போல் அற்பசுகங்கள் நிறைந்திருக்கின்றன. ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும் இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும், திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும் க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத்தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான என்னை தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே! உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால் கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக. குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டுவந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால் ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக – குளிரக் கடாக்ஷிக்கவேணும் என்பது பொருள்.

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் அஷ்டகம்.....

 ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் அஷ்டகம்.....


ஆர்த்தானாம் து:கஸமனே தீக்ஷிதம் 

ப்ரபுமவ்யயம் |

அஸேஷ ஜகதாதாரம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


அபார கரூணாம்போதிம் 

ஆபத்பாந்தவமச்யுதம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


பக்தானாம் வத்ஸலம் 

பக்திகம்யம் ஸர்வகுணாகரம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம் 

ஸர்வ லக்ஷண ஸம்யுதம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் லக்ஷ்மீநாராயணம் பஜே || 


சிதசித் ஸர்வஜந்தூனாம் 

ஆதாரம் வரதம் பரம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ஸங்கசக்ர தரம் தேவம் 

லோகநாதம் 

தயாநிதிம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


பீதாம்பரதரம் விஷ்ணும் 

விலஸத் ஸூமுத்ரஸோபிதம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ஹஸ்தேன தக்ஷிணேநாஜம் அபயப்ரதமக்ஷரம் |

அஸேஷ துக்:க ஸாந்த்யர்த்தம் 

லக்ஷ்மீ நாராயணம் பஜே || 


ய​: படேத் ப்ராதரூத்தாய 

லக்ஷ்மீ நாராயணாஷ்டகம் |

விமுக்தஸ் ஸர்வபாபேப்ய​: 

விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||


ஆபதாமப ஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்ப்ரதாம |

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||


க்ருஷ்ணாய வாஸுதேவாய ஹரயே பரமாத்மனே |

ப்ரணத க்லேஸ நாஸாய கோவிந்தாய நமோ நம​: ||

ஆதானாம் துக்க ஷமனே

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்

 ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்

***************************************

1

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி

காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !

ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


2

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ

வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !

கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


3 மஞ்


அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ

ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !

வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


4

அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ

ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!

சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


5

அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ

வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !

மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


6

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா

காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !

ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


7

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா

யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !

யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


8

அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்

அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !

அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

ஸ்ரீ ராஜ் ராஜேக்ஷ்வரி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.🙏🙏🙏🙏

மஹாலட்சுமி அஷ்டகம்

 மஹாலட்சுமி அஷ்டகம் செல்வம் பெருக சொல்ல வேண்டிய மஹாலட்சுமி அஷ்டகம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |


சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||


நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |


சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||


சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |


சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||


சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |


மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி


யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||


ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |


மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |


பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |


ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||


பலஸ்ருதி:


மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |


ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |


த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||


திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |


மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||


|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம் ||🙏🙏

கிருஷ்ணாஷ்டகம்

 #கிருஷ்ணாஷ்டகம்


கோகுலாஷ்டமியில்... சகல ஐஸ்வரியம் தரும் கிருஷ்ணாஷ்டகம்! 

 

பகவான் கிருஷ்ணரை பூஜித்துப் போற்றும் கோகுலாஷ்டமி. கீதையின் நாயகனைக் கொண்டாடி வணங்கும் நன்னாள். புல்லாங்குழலோன் உதித்து, குழலின் இசையால் ஆவினங்களையும் நம்மையும் குளிர்வித்த புண்ணியத் திருநாள். இந்தநாளில், இல்லத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணரை வணங்குவோம். கண்ணனுக்குப் பிடித்த சீடை, அதிரசம், அவல் பாயசமெல்லாம் செய்து கண்ணனை அழைத்து ஆராதிப்போம்.


குழந்தை இல்லாத வீட்டில், கோகுலாஷ்டமி பூஜையைச் செய்தால், குழந்தையாக கிருஷ்ணனே வந்து பிறப்பான் என்பது ஐதீகம். குசேலருக்கு உதவியது போல் நமக்கும் அருள் மழை பொழிவான். சகல ஐஸ்வர்யமும் தந்து வாழச் செய்வான்.


முக்கியமாக... இந்த நன்னாளில், கோகுலாஷ்டமியில், #கிருஷ்ணாஷ்டகம்_பாராயணம்_செய்யுங்கள். தெய்வ கடாக்ஷம் இல்லத்தில் ஒளிரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும்.


அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். 

இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.


'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது. கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!


#கிருஷ்ணாஷ்டகம்


1. வசுதேவ ஸூதம் தேவம்


கம்ஸ சாணூர மர்த்தனம்


தேவகீ பரமானந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


2.அதஸீ புஷ்ப ஸங்காசம்


ஹாரநூபுர சோபிதம்


ரத்ன கங்கண கேயூரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


குடிலாலக ஸம்யுக்தம்


3.பூர்ண சந்த்ர நிபானனம்


விலஸத் குண்டல தரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


4.மந்தார கந்த ஸம்யுக்தம்


சாருஹாஸம் சதுர்ப்புஜம்


பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


5.உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்


நீல ஜீமூத ஸந்நிபம்


யாதவானாம் சிரோ ரத்னம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


6.ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்


பீதாம்பர ஸூசோபிதம்


அவாப்த துளசீ கந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


7.கோபிகாநாம் குசத்வந்த்வ


குங்குமாங்கித வக்ஷஸம்


ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


8.ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்


வநமாலா விராஜிதம்


சங்க சக்ரதரம் தேவம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


9.க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்


ப்ராதருத்தாய ய படேத்


கோடி ஜந்ம க்ருதம் பாபம்


ஸ்மரணேன விநச்யதி


#பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


நன்றி :  Hindutamil.in

தேவி_அஷ்டகம்

 #தேவி_அஷ்டகம்


அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. 


ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத் துதியை, தேவ்ய இஷ்டகம் எனப்போற்றுவர்.


குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும்.


நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதிப்பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்.


ஸ்ரீகணேஸாய நம:


1) மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம் பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்


கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.


2) பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்

பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்


கருத்து: பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


3)அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்

மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்


கருத்து: நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.


4)காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்

 ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்


கருத்து: பிரளயகால ராத்திரியாகவும் மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகியவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.


5) ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் 

  ஜகத்ஸம்ஹாரகாரிணீம்

  முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்


கருத்து: ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.


6)தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்

முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்


கருத்து: தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


7) த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்

மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்


கருத்து: முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.


8.) ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்

ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்


கருத்து: சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.


     . (இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)

தோடகாஷ்டகம்

 தோடகாஷ்டகம் !


ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.


அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.


ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும். 


விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 

என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.


பவதா ஜனதா ஸுகிதா பவிதா

நிஜபோதவிசாரண சாருமதே

கலயேச்வர ஜீவ விவேகவிதம்

பவ சங்கர தேசிகமே சரணம்!!


தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!


பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கெளதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!


ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்சன லாலஸதா

அதிதீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 

நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ

விசரந்தி மஹா மஹஸஸ்சலத:

அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ

பவசங்கர தேசிக மே சரணம்!!


குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


குருபுங்க புங்கவ கேதந தே

ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:

சரணாகத வத்ஸல தத்வநிதே

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


விகிதா ந மயா விசதைககலா

நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ

த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஶ்ரீ_ரங்கநாதர்_அஷ்டகம்

 #ஶ்ரீ_ரங்கநாதர்_அஷ்டகம்


ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் !


1. ஆனந்தரூபே நிஜபோதரூபே

ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே

சசாங்கரூபே ரமணீயரூபே

ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே.


பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.


2. காவேரிதீரேகருணா விலோலே

மந்தாரமூலே த்ருதசார கேலே

தைத்யாந்த காலே அகிலலோகலீலே

ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே.


பொருள்: காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என் மனம் ஈடுபடுகின்றது.


3. லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே

ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே

க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே

ஸ்ரீரங்க வாஸே ரமதாம் மனோ மே.


பொருள்: லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.


4. ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே

முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே

வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே

ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மனோ மே.


பொருள்: பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.


5. ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே

வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே

த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே

ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே.


பொருள்: பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.


6. அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே

ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே

ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே

ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மனோ மே.


பொருள்: உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், 

இறையருள் - Divine Power 

யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கல

மடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.


7. ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ

நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ

க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ

ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மனோ மே.


பொருள்: ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் 

மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப்  படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.


8. இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்

புனர் நாசங்கம் யதி சாங்க மேதி

பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்

யாநே விஹங்கம் சயனே புஜங்கம்.


பொருள்: இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்).


9. ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: யஹ் படேத்

ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்.


பொருள்: எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!


சரணம் சரணம் ஸ்ரீரங்கா !

திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி - அஷ்டகம் !

 தை வெள்ளி ஸ்பெஷல் !


ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி - அஷ்டகம் !


1.கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்

நிதம்பஜிதபூதராம் ஸுரநிதம்பிநீபூஜிதாம் I

நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.


2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்

மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்

தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸுந்தராமாச்ரயே II


கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.


3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா

குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I

மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா

கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II


கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.


4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்

ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்

விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்

த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.


5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்

குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !

மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்

மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II


மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.


6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்

க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I

கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸுந்தரீ மாச்ரயே II


மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.


7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I

அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்

ஜபாகுஸுப பாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II


ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.


8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்

பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I

முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்

பஜாமி புவம்பிகாம் ஸுரவதூடிகா சேடிகாம் II


தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.


ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி அஷ்டகம் முற்றிற்று.

நெல்லை காந்திமதீஸ்வரி அஷ்டகம்

 நெல்லை காந்திமதீஸ்வரி #அஷ்டகம்

மஹிமையும் பலனும்.


சிருங்ககிரி ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவந்ருஸிம்ஹ பாரதீ சுவாமிகள் அருளிச் செய்த அஷ்டகம் இது. இதைச் கொடு அதைக் கொடு, என்று கேட்காது போனால் கூட காந்திமதீயான ஸ்ரீராஜராஜேஸ்வரீ மனோபீஷ்டத்தைத் தருவாள். சுபமங்களங்களைக் கொடுப்பாள். ராஜஸன்மானங்கள் கிடைக்கும்படி அருள்பாலிப்பாள். குடும்ப ஸம்ருத்தியைக் கொடுப்பாள். ஆயுளும் ஆரோக்கியமும் அபிவிருத்தி அடையும்படிச் செய்வாள்.


அஷ்டகம்


ஸ்ரீமத் வேணுவநேச் வரஸ்ய ரமணீம்

சீ தாம்சு பிம்பானனாம்

ஸிஞ்ஜந்நூபுர கோமளாங்க்ரிகமலாம்

கேயூரஹாராந்விதாம்

ரத்நஸ்யூத கிரீட குண்டலதராம்

ஹேலாவிநோதப்ரியாம்

ஸ்ரீமத் காந்திமதீச் வரீம் ஹ்ருதி

பஜே ஸ்ரீ ராஜராஜேச்வரீம்


தத்வஞானி ஹ்ருதப்ஜமத்ய

நிலயாம் தாம்ராப காத்ரகாம்

காருண்யாம்நுபு நிதிம் தடித்

துலிதபாம் தாளிதலச்யாமலாம்

லீலா ச்ருஷ்டி விதாயிநீம்

தநுப்ருதாம் தாத்பர்ய போ தாப் தயே

தந்வீம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


ஸங்கீதாம்ருத பிந்து மத்ய

பவநாம் ஸாஹித்ய நித்யாதராம்

ஸ்வாரஸ்யாத்புத நாட்யவீக்ஷணபராம்

ஸாலோக்ய முக்த்யாதிதாம்

ஸாதுப்ய: ஸகலாம் ஆர்தித

மஹாஸாம்ராஜ்யலக்ஷ்மீ ப்ரதாம்

ஸாத்வீம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


கல்யாணீம் அகிலாண்டகோடி

ஜநநீம்கல்ஹார தாமோஜ்வலாம்

கஸ்தூரீ திலகா பிராமநிடிலாம்

கஞ்ஜாஸனாராதிதாம்

காமாரே: கனகாசலேந்த்ர

தநுஷ: காருண்யவாராம்நிதே

காந்தாம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


பக்தானாம் பயஜால பஞ்ஜநகரீம்

பாந்வப்ஜந் சுக்ரேக்ஷணாம்

பாக்யோதார குணாந்விதாம்

பகவதீம் பண்டரஸுர த்வம் ஸிநீம்

பாஸ்வத் ரத்ந கிரீடகுண்ட லதராம்

பத்ராஸநாத்யாஸிநீம்

பவ்யாம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


தேவாநாம் அபயப்ரதம் விதிநுதாம்

துஷ்டாபஹந்த்ரீம் சுகாம்

தேசாநேக திகந்த மத்யநிலயாம்

தேஹார்த தாஸ்யப்ரியாம்

மாதுர்யாகர சந்த்ரகண்ட மகுடாம்

தேவாங்கனாஸேவிதாம்

தேவீம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜராஜேச்வரீம்


துஷ்டாடோப விநாசனைக நிபுணாம்

தௌர்பாக்ய விச்சேதிநீம்

துர்மாத்ஸர்யமதாபி மாநமதிநீம்

து: காபஹாம் ப்ராணினாம்

துர்வாராமித தைத்யபஞ்ஜநகரீம்

துஸ்ஸ்வப்நஹந்த்ரீம் சிவாம்

துர்காம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜ ராஜேச்வரீம்


மந்தஸ்மேர முகாம்புஜாம் மரகத

ச்யாமாம் மஹாவைபவாம்

மாதங்கீம் மஹிஷாஸுரஸ்யசமநீம்

மாதங்க கும்பஸ்தநீம்

மந்தார த்ரும ஸந்நிபாம்

ஸூமதுராம் ஸிம்ஹாஸனாத் யாஸிதாம்

மாந்யாம் காந்திமதீச்வரீம்

ஹ்ருதி பஜே ஸ்ரீராஜரா

ஜேச்வரீம்


காந்திமதீச்வரீ அஷ்டகம் ஸம்பூர்ணம்.

கோமதி அம்பாள் அஷ்டகம்

 ஆடி தபசு ஸ்பெஷல் ! 


கோமதி அம்பாள் அஷ்டகம் !


      பூனகலாஸே மனோக்ஞே புவன வனவ்ருதே

              நாகதீர்த்தோபகண்டே

       ரத்னப்ராகார மத்யே ரவிசந்த்ர மஹாயோக

              பீடே நிஷண்ணம் |

       ஸம்ஸார வ்யாதி வைத்யம் ஸகலஜனநுதம்

         சங்கபத்மார்ச்சிதாங்க்ரிம்

       கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம்

              சங்கரேசம் நமாமி ||


பூசைலாசமெனப்படும் சங்கரநாராணர் கோவிலில் உலகமாகிற காட்டினால் சூழப்பெற்றதும், நாகதீர்த்த மெனப்படும் குளத்தின் அருகிலுள்ளதும், ரத்தினங்களாலான பிராகாரத்தின் நடுவில் உள்ளதுமான சூரிய, சந்திரராகிற யோகபீடத்தில் வீற்றிருப்பவரும், சங்கு, தாமரை முதலிய ரேகைகளைத் திருவடியில் கொண்டவரும், பிறப் பிறப்பு என்கிற நோய்க்கு வைத்தியராயும், கோமதி அம்பாளுடன் கூடியவரும், முக்கண்ணன், திருமால் இரண்டையும் ஒரே உருவத்தில் கொண்டவருமான ஶ்ரீ சங்கரேச்வரரான ஶ்ரீசங்கரலிங்கரை வணங்குகின்றேன்.


       லக்ஷ்மீ வாணீ நிஷேவிதாம்புஜ பதாம்

              லாவண்ய சோபாம் சிவாம்

       லக்ஷ்மீவல்லப பத்மஸம்பவநுதாம்

           லம்போதரோல்லாஸிநீம் |

       நித்யம் கெளசிகவந்த்யமான சரணாம்

              ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்  

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         1


லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியவர்களால் நன்கு தொழப்பட்ட திருவடித் தாமரைகளை உடையவளும், திருமால், நான்முகன் ஆகியோர்களால் துதிக்கப்பட்டவரும், தினமும் கெளசிகரால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும், “ஹ்ரீம்” என்னும் மந்திரத்தில் ஒளிவிட்டு விளங்குபவளும், புன்னாகவனத்தின் தலைவரின் மனைவியாய் விளங்குகிற ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       தேவீம் தானவராஜ தர்ப்பஹரிணீம்

              தேவேந்த்ர ஸம்பத்ப்ரதாம்

       கந்தர்வோரக யக்ஷ ஸேவிதபதாம்

              ஶ்ரீசைல மத்யஸ்திதாம் |

       ஜாதீ சம்பக மல்லிகாதி குஸுமை

              ஸம்சோபிதாங்க்ரி த்வயாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         2


பண்டன் முதலான அரக்கர் தலைவர்களின் கொழுப்பை அடக்கியவளும், மூவுலகத்துத் தலைவனான இந்திரனுக்கு ஒப்பான செல்வத்தைக் கொடுப்பவளும், கந்தர்வர், யக்ஷர், உரகர் முதலியவர்களால் தொழப்பட்ட திருவடிகளை உடையவளும், ஜாதி, சம்பகம், மல்லிகை ஆகிய மலர்களால் பூஜிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், புன்னாகவனத்தின் தலைவரின் மனைவியும் தேவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       உத்யத்கோடி விகர்த்தனத்யுதிநிபாம்

              மெளர்வீம் பவாம்போநிதே:

       உத்யத்தாரகநாத துல்யவதநாம்

              உத்யோதயந்தீம் ஜகத் |

       ஹஸ்தந்யஸ்த சுகப்ரணாள ஸஹிதாம்

              ஹர்ஷப்ரதாமம்பிகாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         3


உதயமாகிற கோடிக்கணக்கான சூரியர்களுக்கொப்பான ஒளியை உடையவளும், பிறவிக்கடலைத் தகர்த்தெறிபவளும், உதயமாய்க் கொண்டிருக்கின்ற நக்ஷத்திரக்கூட்டங்களின் தலைவனான சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், உலகத்தை விளங்கச் செய்பவளும், கிளியையும், தாமரைப் பூவையும் கையில் கொண்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிற புன்னாகவனத் தலைவரின் மனைவியான ஶ்ரீ கோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       கல்யாணீம் கமநீயமூர்த்திஸஹிதாம்

              கர்ப்பூர தீபோஜ்வலாம்

       கர்ணாந்தாயத லோசனாம் களரவாம்

              காமேச்வரீம் சங்கரீம் |

       கஸ்தூரீ திலகோஜ்வலாம் ஸகருணாம்

              கைவல்ய ஸெளக்யப்ரதாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         4


கல்யாணியாயும் மிகவும் அழகான திருமேனியைக் கொண்டவளும், கர்ப்பூர தீபங்களால் பிரகாசிக்கிறவளும் காது வரையில் நீண்ட கண்களை உடையவளும், இனிமையான குரலையுடையவளும், காமேச்வரியாயும், சங்கரியாயும், கஸ்தூரிப்பொட்டால் விளங்குகிறவளும், கருணையுடன் கூடியவளும் மோக்ஷம் என்னும் அழியாத ஸெளக்கியத்தைக் கொடுப்பவளும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       வைடூர்யாதி ஸமஸ்த ரத்னகசிதே

              கல்யாண ஸிம்ஹாஸனே

       ஸ்தித்வா (அ)சேஷஜனஸ்ய பாலனகரீம்

              ஶ்ரீராஜ ராஜேச்வரீம் |

       பக்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம்

              பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                         5


வைடூர்யம் முதலிய எல்லா ரத்தினங்களாலும் அமைக்கப்பட்ட ஸிம்மாஸனத்தில் அமர்ந்து உலக ஜனங்களைப் காப்பவளும், ராஜ ராஜர்களுக்குத் தலைவியாயும், பக்தர்களின் இஷ்டத்தைக் கொடுப்பவளும், பயத்தைப் போக்கடித்து பண்டன் என்னும் அரக்கனோடு போர்புரிவதில் ஆர்வமுள்ளவரும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       சைலாதீசஸுதாம் ஸரோஜநயனாம்

              ஸர்வாகவித்வம்ஸிநீம்

       ஸந்மார்க்கஸ்தித கோகரக்ஷணபராம்

              ஸர்வேச்வரீம் சாம்பவீம் |

       நித்யம் நாரத தும்புரு ப்ரப்ருதிபி:

              வீணாவிநோதஸ்திதாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம் ||                         6


மலையரசனின் மகளும், தாமரை போன்ற கண்களை உடையவளும், பாவக்கூட்டத்தை நாசம் செய்பவளும், நல்வழியில் உள்ள ஜனங்களைக் காப்பவளும் ஸர்வேச்வரியும், சம்புவின் மனைவியாயும், நாரதர், தும்புரு முதலிய தேவ முனிவர்களுடன், வீணை நாதம் செய்பவளும் புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       பாபாரண்ய தவாநலாம் ப்ரபஜதாம்

              பாக்யப்ரதாம் பக்திதாம்

       பக்தாபத்குலசைல பேதநபவிம்

              ப்ரத்யக்ஷமூர்த்திம் பராம் |

       மார்க்கண்டேய பராசராதி முநிபி:

              ஸம்ஸ்தூயமாநாம் உமாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                                7


தன்னை அண்டினவர்களின் பாவமாகிற காட்டிற்குத் தீயாயும், பாக்கியத்தையும் பக்தியையும் ஒருங்கே கொடுப்பவளும், பக்தர்களின் மலைபோன்ற ஆபத்துக்கு வஜ்ராயுதம் போன்றவளும், நேரில் காக்ஷி கொடுப்பவளும், மார்க்கண்டேயர், பராசரர் முதலிய முனிவர்களால் நன்கு துதிக்கப்படுபவளும், உமாதேவியும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.


       சேதாரண்யநிவாஸிநீம் ப்ரதிதினம்

              ஸ்தோத்ரேண பூர்ணாநநாம்

       த்வத்பாதாம்புஜ ஸக்தபூர்ண மனஸாம்

              ஸ்தோகேதரேஷ்ட ப்ரதாம் |

       நாநாவாத்யவைபவ சோபிதபதாம்

              நாராயணஸ்யாநுஜாம்

       ஶ்ரீபுன்னாகவனேச்வரஸ்ய மஹிஷீம்

              த்யாயேத் ஸதா கோமதீம்  ||                                8


மனதாகிற காட்டில் வஸிப்பவளும், தினமும் பக்தர்களின் துதியினால் மலர்ந்த முகமுடையவளும், தந்திருவடித்தாமரைகளில் எப்பொழுதும் மனதைச் செலுத்திய பக்தர்களுக்கு அளவற்ற வரங்களைக் கொடுப்பவளும், பலவிதமான வாத்தியங்களினால் விளங்குகிற திருவடிகளை உடையவளும், நாராயணனின் உடன் பிறந்தவளும், புன்னாகவனத் தலைவரின் மனைவியுமான ஶ்ரீகோமதி அம்பிகையை எப்பொழுதும் தியானிக்கின்றேன்.    

      ஶ்ரீ ஆதி சங்கரர் இயற்றியதாகக் கருதப்படுகிற ஶ்ரீ கோமதி அஷ்டகம் ஶ்ரீ பி. என். நாராயண சாஸ்திரிகள் எழுதிய தமிழுரையுடன் முற்றிற்று.


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஸ்ரீ_ராமர்_அஷ்டகம்

 #ஸ்ரீ_ராமர்_அஷ்டகம்


வேதவியாசர் அருளியது ஸ்ரீ ராமர் அஷ்டகம்


பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்

ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்


#பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்

ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்


#பொருள் : அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.


நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்

ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.


ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்

நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.


நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்

சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்

குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்


#பொருள்: சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.


மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை

பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்ப

வராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)


சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்

விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.


ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம் ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்


#பொருள்: வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!

ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்

 ☘#ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்☘

--

#அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. 

அந்த வகையில் *

--

#ஸ்ரீகிருஷ்ணனைத்_துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு - #கிருஷ்ணாஷ்டகம்.* ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த #கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது. இந்த  அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

--

☘#ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்☘


☘1. *வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘2. *அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘3. *குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘4. *மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘5 .*உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘6. *ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘7. *கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘8. *ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


☘9. *க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி*


*#பொருள்:* எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!


#Thanks  :  #kamakoti .#org

ஸ்ரீ_ஸ்ரீ_தாமோதராஷ்டகம்

 தாமோதர  மாதம் ஸ்பெஷல் !


#ஸ்ரீ_ஸ்ரீ_தாமோதராஷ்டகம்


நன்றி ! இணைய தளம் !


1.நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம்

லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்

யஷோதா-பியோலூகலாத் தாவமானம்

பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா


(1) பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுரா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்ட பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்துவிட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.


2. ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜந்தம்

கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம்

முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட-

ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்


(2) (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்ட) அவர் அழுதபடி தாமரைக் கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும் மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில் அவர் அணிந்திருக்கும் முத்து மணி மாலை, விம்மி அழுவதனால் அங்குமிங்கும் அசைகின்றது. கயிற்றினால் அல்ல, தனது அன்னையின் அன்பினால் வயிற்றில் கட்டப்பட்ட முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்

கின்றேன்.


3.இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்டே

ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்

ததீயேஷித-க்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்

புன: ப்ரேமதஸ் தம் ஷதாவ்ருத்தி வந்தே


(3) அத்தகு பால்ய லீலைகளினால் கோகுலவாசிகளை அவர் ஆனந்தக் கடலில் மூழ்கடிக்கின்றார். மதிப்பு மரியாதையைக் கடந்த நெருக்கமான தூய பக்தர்களால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்பதை, ஐஸ்வர்ய ஞானத்தில் மூழ்கியுள்ள தனது பக்தர்களுக்கு அவர் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன்.


4. வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா

ந சான்யம் வ்ருணே (அ)ஹம் வரேஷாத் அபீஹ

இதம் தே வபுர் நாத கோபால-பாலம்

ஸதா மே மனஸ்-யாவிராஸ்தாம் கிம் அன்யை:


(4) வரம் நல்குவோரில் சிறந்தவரான எம்பெருமானே, அரூபமான முக்தி, உயர்ந்த முக்தியான வைகுண்ட பிராப்தி, அல்லது வேறு எந்த வரத்தையும் நான் தங்களிடம் வேண்டுவதில்லை. பிரபுவே, விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபால ரூபம் என் மனதில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். இதை விட்டுவிட்டு வேறு வரத்தைப் பெறுவதால் என்ன பலன்?


5. இதம் தே முகாம்போஜம் அத்யந்த நீலைர்

வ்ருதம் குன்தலை: ஸ்னிக்த-ரக்தைஷ் ச கோப்யா

முஹுஷ் சும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே

மனஸ்-யாவிராஸ்தாம் அலம் லக்ஷ-லாபை:


(5)எம்பெருமானே, செம்மை கலந்த மிருதுவான கருமை நிற சுருள் கூந்தலால் சூழப்பட்டுள்ள தங்களின் தாமரைத் திருமுகம் மீண்டும் மீண்டும் அன்னை யசோதையினால் முத்தமிடப்படுகிறது; உதடுகள் கோவைப் பழம்போல சிவந்துள்ளன. இத்தாமரைத் திருமுகம் எப்போதும் என் மனதில் தோன்றுவதாக. இலட்சக்

கணக்கான இதர லாபங்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.


6.நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ

ப்ரஸீத ப்ரபோ து:க-ஜாலாப்தி-மக்னம்

க்ருபா-த்ருஷ்டி-வ்ருஷ்ட்யாதி-தீனம் பதானு-

க்ருஹாணேஷ மாம் அக்ஞம் ஏத்-யக்ஷி-த்ருஷ்ய:


(6) முழுமுதற் கடவுளே, தங்களுக்கு நான் எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன். ஓ தாமோதரா! ஓ அனந்தா! ஓ விஷ்ணு! ஓ பிரபுவே, என்மீது திருப்தியடைவீராக. கருணை மிகுந்த தங்களது பார்வையை என்மேல் பொழிந்து, பௌதிகத் துன்பக் கடலில் மூழ்கி முட்டாளாக இருக்கும் என்னை விடுவியுங்கள்; எனது கண்களுக்குக் காட்சியளி

யுங்கள்.


7.குவேராத்மஜௌ பத்த-மூர்த்யைவ யத்வத்

த்வயா மோசிதௌ பக்தி-பாஜௌ க்ருதௌ ச

ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச

ந மோக்ஷே க்ரஹோ மே (அ)ஸ்தி தாமோதரேஹ


7) ஓ தாமோதரா, மர உரலில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள தங்களால் குபேரனின் இரு மகன்களும் (மணிக்ரீவன், நளகூவரன்) நாரதரின் சாபத்திலிருந்து விடுபட்டு மாபெரும் பக்தர்களாயினர். அதுபோன்ற பிரேம பக்தியை எனக்கும் கொடுங்கள். நான் அதற்காகவே ஏங்குகிறேன், எந்தவித முக்தியிலும் எனக்கு ஆசையில்லை.


8. நமஸ் தே (அ)ஸ்து தாம்னே ஸ்புரத்-தீப்தி தாம்னே

த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே

நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை

நமோ (அ)னந்த-லீலாய தேவாய துப்யம்


(8) ஓ தாமோதரா, நான் எனது முதல் வணக்கங்களை உமது வயிற்றைக் கட்டியுள்ள அந்த ஒளிவிடும் கயிற்றுக்கு சமர்ப்பிக்கின்றேன். பின்னர், முழுப் பிரபஞ்சத்தின் இருப்பிடமான உம்முடைய வயிற்றிற்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீமதி ராதாராணிக்கும், அதன் பின்னர், அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எமது வணக்கங்களை சமர்ப்பிக்

கின்றேன்.


ஸ்ரீ  க்ருஷ்ணா உன் திருவடிகளே  சரணம்  !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...