Friday, 16 February 2024

சூர்யாஷ்டகம்

 சூர்யாஷ்டகம்....!


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||


ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய்.

பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.


ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|

ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


வானவில்லின் வண்ணம் போல் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே! வெப்பம் நிறைந்தவரே!

ரிஷி கச்யபரின் குமாரரே! வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே! அனைத்து உலகங்களுக்கும் தந்தையே!

எம் பாவத்தை அறுத்து பாவனம் ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


சத்வ, ரஜோ, தமோ என முக்குணங்களை உடையவரே! பலம் பொருந்திய மஹாசூரரே! ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே!

எம் பாவத்தை அறுத்து தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|

ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸாகிய ஒளி கொண்டவரே! வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே!

உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே! மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே!

ஒரே சக்கரத்தைக் கொண்டவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே! தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே!

எம் பாவத்தை அறுத்து என்னைத் தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


உலகின் நாதனே! ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே!

எம் பாவத்தை அறுத்து தூயவன் ஆக்குபவரே! ஹே சூரிய தேவனே! உம்மை வணங்குகிறேன்!


இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்||

இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...