Sunday, 16 April 2023

_பாண்டுங்காஷ்டகம்

 #ஆதிசங்கரின்_பாண்டுங்காஷ்டகம்


1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !

ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


2.தடித்வாஸஸம் நீலமேகாவபாஸம்

ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !

வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


மின்னலொத்த வஸ்திரம் தரித்தவரும், நீலமேகம் போன்று விளங்குபவரும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவரும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுடரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்

நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !

விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே

ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !

சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவரும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.


5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்

லஸத்குண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !

ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.


6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்

ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !

த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.


7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்

ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !

கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்

பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !

ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே

படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !

பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே

ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!


புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் கடந்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.


பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.


நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

Tuesday, 4 April 2023

ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :

 ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :


யத்ஸம்வாஹநலோபி⁴ந : ஶஶிகலாசூட ³ஸ்ய ஹஸ்தாம்பு ³ஜ-

ஸ்பர்ஶேநாபி ச லோஹிதாயதி முஹுஸ்த்வத்பாத ³பங்கேருஹம் ।

தேநைவோத் ³த⁴தகாஸராஸுரஶிரஶ்ஶ ்ரு ’ங்கா ³க்³ரஸஞ்சூர்ணந -

ப்ராசண்ட் ³யம் தத ³நுஷ்டி ²தம் கில கத ²ம் முக்திஸ்த ²லஸ்தே ²! ஶிவே ! ॥ 1॥

முக்தி ஸ்தலத்தில்* வாசம் செய்யும் மங்களாம்பிகயே ! சந்திரனை சிரசில் தரித்துள்ள ஸ்ரீ பரமேஸ்வரன் உன் ஸ்ரீ பாதாரவிந்ததைத் தாங்கப் பேராவல் கொண்டவராய் கமலம் போன்ற கையினால் உன் ஸ்ரீ பாதத்தை ஸ்பரிசிக்கும் போது உன் ஸ்ரீ பாதம் சிவந்து போகிறது.  அப்பேர்ப்பட்ட உன் ஸ்ரீ பாதமானது மலையை விடப் பெரிய சரீரங்கொண்ட மஹிஷாசுரனுடைய தலையைப் பொடி பொடியாக்கியது ப்ரசித்தம். இது எவ்வாறு?

· முக்தி ஸ்தலம் என்ற க்ஷேத்திரத்தில் ப்ரகாசிப்பவள்

· முக்திக்குத் தகுதி வாய்ந்த பெரியோர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவள்

· மாயையாகிற அவித்யையைப் போக்கும் ப்ரம்ம வித்யை சொரூபமாக இருப்பவள் என்று பல அர்த்தங்கள் கொள்ளலாம்.

த்வத்பாத ³ம் நிஜமஸ்தகே க⁴டயிதும் கே கே நு லோகே ஜநா :

கிம் கிம் நாரசயந்தி து³ஶ்சரதபஶ்சர்யாஸபர்யாதி ³கம் ।

மந்யே த⁴ந்யதமம் து தே ³வி ! மஹிஷம் வைரஸ்த ²யைவ த்வயா

யந்மூர்த்⁴நி ஸ்வயமேவ பாதகஹரம் பாதா ³ம்பு ³ஜம் பாதிதம் ॥ 2॥

தேவியே ! ஜனங்கள் உன்னுடைய ஸ்ரீ பாதார விந்தங்கள் தங்கள் சிரஸின் மீது தாங்கக் கிடைப்பதற்காக மிகக் கடுமையான தபஸ், பூஜை முதலிய என்னென்னவோ காரியங்களையெல்லாம் மேற்கொள்ளுகிறார்கள். ஆனால் மஹிஷாசுரனோ உன்னுடைய பரம விரோதியாக இருந்தான். இருந்தும் நீயோ சர்வ பாபங்களையும் போக்கும் உன் ஸ்ரீ பாத மலத்தை நீயாகவே அவனுடைய சிரஸின் மீது வைத்தாய். அந்த மஹிஷாசுரனல்லவோ மகா பாக்கிய சாலி.

இங்கு “கே கே ஜனா” என்று சொல்லியிருக்கிறபடியால் மனுஷ்யர்களைத் தவிர தேவர்கள், யக்ஷர்கள், கந்தவர்கள் முதலானவர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக ஆகும்.

த்வத்பாதா ³ம்பு ³ஜமர்பிதம் க்வ நு ஶிவே ! கிந்நு த்ரயீமஸ்தகே ?

நித்யம் தத்த்வவிசாரத ³த்தமநஸாம் சித்தாம்பு ³ஜாக் ³ரேஷு வா ? ।

கிம் வா த்வத்ப்ரணயப்ரகோபவிநமந்மாராரிமௌலிஸ்த ²லே ?

கிம் ப்ரோத்க ²ண்டி ³தகோ⁴ரஸைரிப⁴மஹாதை ³த்யேந்த் ³ரமூர்த் ³தா⁴ந்தரே ? ॥ 3॥

மங்களாம்பிகையே ! உன் ஸ்ரீ பாத கமலங்கள் எங்கு இருக்கின்றன? தேவர்களுடைய சிரஸாகிற உபநிஷத்துக்களிலா ? (வேதங்களுக்கு சிரஸாகிற ப்ரணவமாகிற ஓங்காரத்தையும் கொள்ளலாம்) அல்லது தத்வ ஆராய்ச்சியில் மனஸைப் பறி கொடுத்த யோகிகளின் ஹ்ருதய கமலங்களிலா ?

அல்லது மன்மதனைச் சாம்பலாக்கிய ஸ்ரீ பரமேஸ்வரன் பிரளய கலகத்தின் போது உன் ஸ்ரீ பதங்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது அந்த ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சிரஸின் மீதா ? அல்லது மகா பயங்கரமான மஹிஷாசுரனுடைய வெட்டப்பட்ட சிரசின் மீதா ?

த்வத்பாதா ³ஞ்சலரூபகல்பலதிகாபா ³லப்ரவாலத் ³வயம்

யே தாவத்கலயந்தி ஜாது ஶிரஸா நம்ரேண கம்ரோஜ்ஜ்வலம் ।

தேஷாமேவ ஹி தே ³வி ! நந்த ³நவநக்ரீடா ³ஸு லப்⁴யம் புந :

ஸ்வர்வல்லீதருணப்ரவாலப⁴ரணம் ஸேவாநுரூபம் ப²லம் ॥ 4॥

தேவியே ! உன் ஸ்ரீ பாதங்களின் முன் பாகம் அதிசுந்தரமாகவும், ப்ரகாசமாகவும், தேவலோகத்துக் கல்பகக் கொடியின் மொட்டுக்களைப் போன்று (மென்மையுடனும், வேண்டியவற்றைத் தரவல்லவையாகவும்) இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஸ்ரீ பாதங்களை வணக்கத்துடன் தங்கள் சிரஸின் மீது யார் தரிக்கின்றார்களோ அவர்கள் (ஸ்வர்க்கத்தை வேண்டுபவர்க்ளாயிருந்தால்) ஸ்வர்க்கத்தில் நந்தவனங்களளில் கல்பகக்கொடி போன்ற தேவ கன்னிகைகளுடன் ஆனந்திக்கிறார்கள். அதாவது, பக்திக்குத் தக்க பலனை உன் ஸ்ரீ பாத கமலம் அளிக்கிறது. (கல்பகக்கொடி போன்ற ஸ்ரீ பாதங்களை நமஸ்கரித்ததன் பலன், ஸ்வர்க்கத்திற்கே கொண்டு சென்று, கல்பகக் கொடி போன்ற கன்னிகைகளுடன் ஸ்வர்க்க ஆனந்தத்தை அளிக்கிறது.

மோக்ஷத்தை வேண்டுபவர்களுக்கு மோக்ஷம் சித்திக்கும். வேண்டுவது கிடைக்கும் என்பது தாத்பரியம்.

தா⁴வல்யம் பரிலால்யதே புரரிபோரங்கே ³ந துங்க ³ஶ்ரீயா

கிஞ்ச ஶ்யாமலிமாபி கோமலதரே பா⁴த்யேவ கா ³த்ரே ஹரே : ।

தத்தாத் ³ரு’க்பத ³வீம் மமாபி ஜநயேத்யஸ்தோகஸேவாரஸா -

தா ³ருண்யம் தவ லீயதே சரணயோ : காருண்யமூர்தே ! ஶிவே ! ॥ 5॥

கருணாமூர்த்தியே ! மங்களாம்பிகையே ! திரிபுராந்தகனான (முப்புரம் எரித்தவனான) ஸ்ரீ பரமேஸ்வரனின் சரீரத்தினுடைய உத்தமமான ஒளியினால் வெண்மை நிறமானது சோபையை அடைகிறது. ஸ்ரீ ஹரியினுடைய மிகவும் மிருதுவான சரீரதிலோ, நீல மேக ஸ்யாமள வர்ணமானது ப்ரகாசிக்கிறது.

சிவப்பு நிறமோ, உன் பாதங்களிலே மகத்தான சேவை செய்வதினால், எனக்கு சிவ விஷ்ணு போன்ற பதவியைத்ததந்துவிடத்தான் போகிறாய் என்று உன் பாதங்களிலேயே லயமாகி விடுகிறது.

உன் ஸ்ரீ பாதங்களை நான் இறுகப் பற்றிக் கொண்டிருப்பதினால் சிவப்பு நிறமானது மறைந்து விடுகிறது. காரணம், சிவப்பு நிறத்திறிகு தெரியும், நீ சிவ, விஷ்ணு போன்ற பதவியை எனக்குத் தரப் போகிறாய் என்று.


ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...