Monday, 31 May 2021

ஜெயதேவரின்_அஷ்டபதி_6

 *#கீதகோவிந்தம்_மஹாகாவ்யம்*...


*#ஜெயதேவரின்_அஷ்டபதி_6*


முந்தைய அஷ்டபதியில் ராதை கண்ணனின் அழகையும் செயல்களையும் நினைவு கூர்ந்து இந்த அஷ்டபதியில் அவனுடன்  சுகித்த அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள். 


ஜீவன் இறைவனிடம் இருந்து தன் அறியாமையினால் பிரிந்து வருந்துகிறான். அந்த அனுபவம் இன்னதென்று நினைவில்லாவிட்டாலும் அந்த ஆனந்தத்தை இழந்ததை உணர்கிறான். அவனுடன் சேர்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்பதை உணரும்போது ராதையின் சகியைப் போல் ஆசார்யரானவர் ஜீவனையும் பகவானையும் ஒன்று சேர்க்க முயற்சிப்பதுதான் சகி என்ற பாத்திரத்தின் உருவகம்.


*#ராதை_தான்_கண்ணனுடன்_இருந்ததை_விவரிக்கிறாள்*.


1.நிப்ருத நிகுஞ்ச கதயா நிசி ரஹஸி நிலீய வஸந்தம் 

சகித விலோகித ஸகலதிசா ரதி ரபஸபர பரணேன ஹஸந்தம்

 ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(த்ருவபதம்)


நிப்ர்தநிகுஞ்சகதயா ரஹஸி- ராதை கண்ணனை சந்திக்க யாரும் அறியாமல் லதாக்ருஹத்திற்கு செல்கிறாள். 

நிலீய வஸந்தம்- அங்கு மறைந்து கொண்டு 

சகிதவிலோகித ஸகலதிசா- அவனைக்காணாமல் பயத்துடன் எல்லா திசைகளிலும் பார்ப்பவளைக்கண்டு 

ரதிரபஸபரேண- காதல் மேலிட்டு

ஹஸந்தம்- சிரித்துக் கொண்டு நிற்பவனாய் 

கேசிமதனம் உதாரம் – கேசி என்ற அரக்கனைக் கொன்ற சிறந்த வீரனான் கண்ணனை

ஹே ஸகி-தோழி 

மதனமநோரதபாவிதயா – மன்மதனால் பீடிக்கப்பட்ட 

மயா ஸஹ- என்னுடன் 

ஸவிகாரம்- காதலோடு

ரமய – ரமிக்கச்செய்வாயாக 


இனி வரும் ஸ்லோகங்கள் ராதை- கண்ணன் சேர்க்கை அதாவது நாயக நாயகி பாவ பக்தியை விளக்குகின்றன. பகவான்தான் உயிர் இந்த உலகம் அவனுடைய சரீரம். பக்தி என்பது அந்த உயிரை உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணர்வது . இந்த பாவத்தில் பார்த்தால் நாயக நாயகி பாவம் பற்றி லோகாயதமான உணர்வு ஏற்படாது. சரீர சுகம் என்பது சரீர சரீரி சம்பந்தம். இதுதான் ஆண்டாளையும் மீராவையும் பாட வைத்தது.  


2.ப்ரதம ஸமாகம லஜ்ஜிதயா படுசாடுசதை: அனுகூலம்

ம்ருதுமதுரஸ்மிதபாஷிதயா சிதிலீக்ருதஜகனதுகூலம் 


.ப்ரதம ஸமாகம லஜ்ஜிதயா- முதல் முதலாக அவனுடன் சேர்கையில் உண்டான வெட்கத்துடன் கூடிய என்னை

 படுசாடுசதை: - திறமையான செயல்களாலும்  

ம்ருதுமதுரஸ்மிதபாஷிதயா- இனிமையான சொற்களாலும்  

அனுகூலம் – இயல்பான நிலை அடையச்செய்து

சிதிலீக்ருதஜகனதுகூலம் – ஆடையை நெகிழச்செய்த கண்ணனை


 முதல் முதலாக இறை உணர்வு ஏற்படும்போது நமக்கு இந்த சரீர உணர்வு தூக்கலாக இருக்கிறது. வெட்கம் என்பது நான் எங்கே அவன் எங்கே அவனுடன் என்னால் சேர முடியுமா என்ற நாணம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உணர்வு அற்று விடுகிறது.முதலில் அவன் ஒளிந்து கொண்டு நம்மைப் பார்த்து நகைக்கிறான். பிறகு நம் தயக்கத்தை அவனுடைய லீலைகள் மூலம் போக்கி விடுகிறான். 


ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்  (முன்னம் காண்க)


3.கிஸலய சயன நிவேசிதயா சிரம் உரஸி மமைவ சயானம்

க்ருதபரிரம்பணசும்பனயா பரிரப்ய க்ருதாதரபானம் 


கிஸலய சயன நிவேசிதயா- தளிர்களால் ஆன சயனத்தில் 

  சிரம் உரஸி மமைவ சயானம்- என்மேல் வைத்துக்கிடந்த  மலர் மார்பனை 

க்ருதபரிரம்பணசும்பனயா பரிரப்ய க்ருதாதரபானம் – என்னைத்தழுவி அதரபானம் செய்தவனை  


நமக்கு மிகவும் நெருங்கி வருபவன். நம்மை முழுதும் அறிந்தவன்.


ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)


4. அலஸநிமீலித லோசனயா புலகாவலிலலிதகபோலம்

ச்ரமஜஸகலகலேவரயா வரமதனமதாததிலோலம்


அலஸநிமீலித லோசனயா- மகிழ்வினால் என் கண்கள் மூடியிருக்க

 புலகாவலிலலிதகபோலம்- மலர்ந்த கன்னங்கள் உடையவனை

ச்ரமஜலஸகலகலேவரயா – என் உடல் வியர்த்திருக்க 

வரமதனமதாததிலோலம்-மன்மதனால் பீடிக்கப்பட்டவனை 

அவன் பெயரைக்கேட்டாலே புளகாங்கிதம் அடைந்து அவனை நேரில்கண்டது போல் கண்கள் மூடினாலும் உள்ளே தெரிபவனாக இருக்கிறான். அந்த நிலை அடைந்து விட்டால் அவன் நமக்கு ஒப்பான ஆனந்தம் அடைகிறான். 


ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )


5. கோகிலகலரவகூஜிதயா ஜிதமனஸிஜதந்த்ரவிசாரம் 

ச்லதகுஸுமாகுலகுந்தலயா நகலிகிதஸ்தனபாரம் 


. கோகிலகலரவகூஜிதயா- ஆனந்தம் மேலிட்டு குயில் போலக் கூவின என்னைக் கண்டு

 ஜிதமனஸிஜதந்த்ரவிசாரம் – காதல் மேலிட்டவனை

ச்லதகுஸுமாகுலகுந்தலயா-என் கூந்தல் அவிழ 

 நகலிகிதஸ்தனபாரம்- அவனுடைய நகங்கள் என் மார்பில் பதிய வைத்தவனை


கூஜ்ந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் என்று கூவின வால்மீகி முதலிய குயில்களைப்போல பக்தனும் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்று கூவும் போது அவனுக்கும் நம்மேல் காதல் மேலிடுகிறது. 


ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )


6.சரணரணிதமணிநூபுரயா பரிபூரிதஸுரதவிதானம் 

முகரவிச்ருங்கலமேகலயா ஸகசக்ரஹசும்பனதானம் 


சரணரணிதமணிநூபுரயா – என் பாதங்களில் உள்ள நூபுரம் சப்திக்க பரிபூரிதஸுரதவிதானம் – காதல் விளையாட்டில் மூழ்கியவனை 

முகரவிச்ருங்கலமேகலயா-என் இடை ஆபரணம் குலுங்க ஸகசக்ரஹசும்பனதானம்- என்மேல் இதழ்கள் பதித்தவனை 


காலில் சதங்கை ஒலிக்க இடையில் மணிமாலையுடன் நாம் சங்கீர்த்தனம் செய்யும் பக்தனை அவன் தழுவி முத்தம் இடாமல் வேறென்ன செய்வான்?


ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )


7. ரதிஸுகஸமயரஸாலஸயா தரமுகுளித நயனஸரோஜம் 

நிஸ்ஸஹநிபதிததனுலதயா மதுசூதனமுதிதமநோஜம்


ரதிஸுகஸமயரஸாலஸயா – என் மகிழ்ச்சியையும் களைப்பையும் பார்த்து

தரமுகுளித நயனஸரோஜம்- சிறிது மலர்ந்த தாமரைக் கண்களை உடையவனை 

நிஸ்ஸஹநிபதிததனுலதயா –மயங்கியதுபோன்ற உடலைக் கண்டு 

மதுசூதனமுதிதமநோஜம்- மனமகிழ்ந்தவனை


பக்தி மேலீட்டால் உடல் தளர்கிறது, உணர்வு நழுவி மயங்கியது போல் இவ்வுலக உணர்வின்றி இருப்பதைக்கண்டு அவன் மனமகிழ்ந்து தன்னுடன் 

சேர்த்துக் கொள்கிறான். அந்த நிலை வேண்டும் என்றால் குருக்ருபை வேண்டும். அதுதான்  சகியிடம் வேண்டுதல்.


ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )


8.ஸ்ரீஜயதேவபணிதம் இதம் அதிசய மதுரிபு நிதுவனசீலம் 

ஸுகம் உத்கண்டித கோபவதூகதிதம் விதநோது ஸலீலம்


ஸ்ரீஜயதேவபணிதம் இதம் – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த 

அதிசய மதுரிபு நிதுவனசீலம் –அதிசயமான கண்ணனின் காதலினால் 

ஸலீலம் – விளையாட்டாகச் செய்யப்பட்டதும்

உத்கண்டித கோபவதூகதிதம்- அதனால் மகிழ்வுற்ற ராதையால் சொல்லப்பட்டவையான இவை 

 ஸுகம் விதநோது – கேட்பவர்களுக்கு சுகத்தை அளிக்கட்டும்.


 எல்லாமே அவனுடைய் லீலா வினோதம் அதைக் கேட்பவர்க்கு எல்லா சுகங்களும் உண்டாகட்டும் என்கிறார் ஜெயதேவர்.

 

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 

ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க)


*#ஜெயதேவரின்_அஷ்டபதி_தொடரும்*...

ஜெயதேவரின்_அஷ்டபதி_3

 *#கீதகோவிந்தம்_மஹாகாவ்யம்*


*#ஜெயதேவரின்_அஷ்டபதி_3*


ராதை கண்ணன் மற்றவர்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ஆனால் அவனை மறக்க முடியாமல் அவனைத் தேடி அலைபவளிடம் அவளுடைய தோழி வந்து அவன் காட்டில் மற்ற கோபிகைகளுடன் வசந்த கால கேளிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதைச். சொல்கிறாள். அந்த அஷ்டபதியைக் கீழே காணலாம். 


அதற்கு முன் ஒரு சந்தேகம் எழுகிறது. ராதைக்கு அவள் அவனை எங்கு விட்டு வந்தாள் என்பது தெரியாதா? அவனைத் தேடி அலைவானேன்?


அவன்தான் மாயாவி ஆயிற்றே . திடீரென்று 

மறைந்து விடுவான். இந்த இடத்தில் பாகவதத்தில் காணப்படும் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. 


கோபியர் கண்ணன் தங்களுடன் இருப்பதால் கர்வம் கொள்ள அவன் ஒரு கோபியுடன் மறைந்து விடுகிறான். அவள் தன் மேல்தான் அவன் மிக அன்பு வைத்திருப்பதாக எண்ணி தன்னால் நடக்கமுடியவில்லை என்று கூறி தன்னை தூக்கிச்செல்லும்படி கூறுகிறாள். கண்ணன் “சரி, என் தோள் மீதுஏறிக்கொள் என்று கூறி மறைந்து விடுகிறான்.  அவன் அவனைத் தேடி அலைகிறாள். 


இந்த கோபியைத்தான் பிற்காலத்தில் ராதையாக சைதன்யர் முதலியவர்கள் உருவகப் படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பாகவதத்தில் ராதை என்ற பாத்திரமே இல்லை.


அஷ்டபதி முன்னுரையில் கூறியபடி ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது. ஆனால் உலக இன்பத்தில் ஈடுபட்டு அறியாமையினால் ஏற்பட்ட நான் என்ற உணர்வால் அவனைப் பிரிந்து வருந்துகிறது. ஆனாலும் அதன் காரணம் என்ன என்பதை அறியவில்லை. 


நாம் உலகில் நம் அறியாமையினால் அவனைப் பிரிந்து வருந்துகிறோம் ஆனாலும் அது அவனுடைய பிரிவினால்தான் என்பதை அறியாது அவனையே குறை கூறுகிறோம். 


இப்போது இந்த அஷ்டபதியைப் பார்க்கலாம்.இதில் உள்ள வசந்த கால வர்ணனை காளிதாசனின் குமாரசம்பவத்தில் சிவன் தவத்தைக் கலைக்க மன்மதன் வரும்போது சொல்லப்பட்ட வசந்த வர்ணனையை நினைவூட்டுகிறது. கவித்துவத்தில் காளிதாசனை ஒத்திருந்தாலும் கண்ணனின் ராசலீலையை சொல்வதால் அதை விட மேம்பட்டதாகிறது.


  *லலிதலவங்க லதா பரிசீலன என்ற அஷ்டபதி அடுத்த பதிவில்*.


1.லலிதலவங்க லதாபரிசீலன கோமள மலயசமீரே 

மதுகரநிகர கரம்பிதகோகில கூஜித குஞ்ச குடீரே 


லலிதலவங்க லதாபரிசீலன- அழகிய லவங்கக் கொடிகளை தழுவி வரும்

 கோமள மலயசமீரே – ம்ருதுவான மலய மாருதம் வீசும் 

மதுகரநிகர கரம்பித- வண்டுகள் இனிமையாக ரீங்கரிக்கும்

கோகில கூஜித குஞ்ச குடீரே- குயில்கள் கூவும் பூங்காவில்


விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே

( இந்த வரிகள் த்ருவபதம் என்று சொல்லப் படும் . இவை ஒவ்வொரு ஸ்லோகத்தின் கீழும் காணப்படும் பல்லவி போன்றது.)

ஹரி: - கிருஷ்ணன் 

இஹ- இங்கு 

விரஹிஜனஸ்ய- பிரிவுற்ற காதலர்களுக்கு

துரந்தே- துன்பத்தைத் தரும் 

ஸரஸவஸந்தே- இந்த அழகான வசந்தகாலத்தில் 

யுவதிஜனேன ஸமம் – கோபியருடன்

விஹரதி- விளையாடுகிறான் 

ஸகி- தோழி


மலையமாருதம் மெல்ல வீசுகிறது லவங்க கொடிகளைத் தழுவி வருவதால் சுகந்தம், வண்டுகளின் ரீங்காரம், குயில்களின் இசை , இவ்வாறு வசந்தம் வர்ணிக்கப படுகிறது. விஹரதி யுவதிஜனேன என்பதால் அவனுடன் இருக்கும் கோபியரின் ஆனந்தமும் விரஹி ஜனஸ்ய துரந்தே என்பதால் அவனைப் பிரிந்து இருக்கும் ராதையின்  துன்பமும் தெளிவாகிறது.


2.உன்மத மதன மனோரத பதிக வதூஜன ஜனித விலாபே

அலிகுலசங்குல குஸும ஸமூஹ நிராகுல வகுள கலாபே 

 விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே


உன்மத மதன மனோரத – மன்மதனால் உண்டான வேட்கையுடன் 

பதிகவதூஜன  - விட்டுப்பிரிந்த காதலரால் 

வதூஜன- பெண்களுக்கு

ஜனித விலாபே- துக்கத்தை ஏற்படுத்தும்,

அலிகுல சங்குல நிராகுல – வண்டுகளின் கூட்டத்தால் அல்லலுறும்

குஸுமஸமூஹ- புஷ்பகொத்துகளை உடைய 

வகுள கலாபே- வகுள மரங்களைக் கொண்ட,( வசந்த காலத்தில்)


வசந்த காலத்தில் காதல் வேட்கை எல்லை மீற வெளியூர் சென்றுள்ள காதலரை நினைத்து பெண்கள் ஏங்குகின்றனர்.  வகுள மரங்களில் ஏராளமான பூக்கள் பூக்க வண்டுகள் அவற்றை சுற்றி  கோலாஹலமாக இருக்கும் காட்சியை இந்தப் ஸ்லோகம் சித்தரிக்கிறது. பிரிந்துள்ள காதலரின் நினைத்த பெண்களின் ஏக்கம் ராதையின் மனதைப படம் பிடிக்கிறது.


3.மருகமத சௌரப ரபஸ வசம்வத நவ தள மால தமாலே 

யுவஜன ஹ்ருதய விதாரண மனஸிஜநகருசி கிம்சுக ஜாலே

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே


நவதளமால தமாலே- தமால மரங்களின் புத்தம்புதிய தளிர்களின் வரிசை மாலைகள் எனத் தோன்ற 

. ம்ருகமத சௌரப ரபஸ வசம்வத- அவைகளின் மணம் கஸ்தூரியை ஒத்து இருந்தது. 

கிம்சுக ஜாலே- கிம்சுக புஷ்பங்கள் (சிவப்பு நிறத்தில் வளைவாக இருப்பவை)

யுவ ஜன ஹ்ருதி விதாரண-  இளைஞர்களின் ஹ்ருதயத்தை பிளக்கும் 

மனஸிஜநகருசி- மன்மதனின் நகங்கள் போன்று இருந்த ( வசந்த காலத்தில்) 


4.மதனமஹீபதி கனகதண்டருசி கேஸரகுஸும விகாஸே

மிலித சிலீமுக பாடல படல க்ருதஸ்ம்ரதூண விலாஸே

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே


மதனமஹீபதி -மன்மதனாகிய அரசனின்

கனகதண்டருசி- பொன் தடியைப்போல் உள்ள

 கேஸரகுஸும விகாஸே- பொன்னிற கேசரி புஷ்பங்கள்

மிலித சிலீமுக- வண்டுகளுடன் கூடிய 

பாடல படல-பாடல புஷ்பங்கள் ( கிண்ணம் போன்றவை)

 க்ருதஸ்மரதூண விலாஸே- மன்மதனின் அம்பறாத்தூணி என பிரகாசிக்கும்,(வசந்த காலத்தில்)

பாடல புஷ்பங்கள் கிண்ணம் போல இருப்பதால் அம்பராத்தூணி என வர்ணிக்கப படுகின்றன. வண்டுகள் சரங்களாக உருவகப்படுத்தப் படுகின்றன . சிலீமுக என்றால், வண்டு , அம்பு என்று இரு பொருள்.


5.விகலித லஜ்ஜித  ஜகதவலோகன தருண கருண க்ருதஹாஸே

விரஹி நிக்ருந்தன குந்தமுகார்த்தி கேதகதந்துரிதாஸே

 விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே


விகலித லஜ்ஜித- வசந்த காலத்தில் மன்மத வேட்கையால் பீடிக்கப்பட்டு வெட்கத்தை விட்ட 

ஜகதவலோகன- ஜனங்களைப் பார்த்து

தருண கருண க்ருத ஹாஸே- சிரிப்பதைப்போன்று தோன்றும் வெண்மையான கருண மலர்கள் ,

விரஹிநிக்ருந்தன – விரகத்தால் வாடுபவர் ஹ்ருதயத்தை கிழிப்பதைப் போன்ற 

குந்த முகார்த்தி- ஈட்டி ஒத்த முட்களை உடைய 

கேதகதந்துரித ஆசே- தாழ்மபூக்களின் வாசத்தால் சூழப்பட்ட திசைகளை உடைய (வசந்த காலத்தில்) 


இந்த ஸ்லோகம் கண்ணனைக் குறிப்பதாக உள்ளது. கண்ணன் வெட்கத்தை விட்டு தன்னிடம் ஆசையைத் தெரிவிக்கும் பெண்களைப் பார்த்து கருணையுடன் சிரிக்கிறான் (தருண கருண க்ருத ஹாஸே) தன் ஸ்வரூபத்தை அறியாமல் சாதாரண மானுடன் என்று எண்ணுகிறார்களே என்று., 


6. மாதவிகாபரிமளலலிதே நவமாலிகயா அதிஸுகந்தௌ

முநிமானஸமபி மோஹன காரிணி தருண அகாரண பந்தௌ

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே

 மாதவிகாபரிமளலலிதே- மாதவிகொடியின் புஷ்பங்களால் பரிமளமானதும்

 நவமாலிகயா – மல்லிகையால்

அதிஸுகந்தௌ- மேலும் மணமூட்டப பட்டதும் 

முநிமானஸமபி- முனிவர்களின் மனதைக்கூட

 மோஹன காரிணி- மயக்கச்செய்வதும்

 தருண – இளைஞர்களுக்கு

அகாரண பந்தௌ-இயற்கையிலேயே இனியதும் ( ஆன வசந்த காலத்தில்)


7.ஸ்புரத் அதிமுக்த லதா பரிரம்பண முகுலித புலகித சூதே 

பிருந்தாவனவிபினே பரிஸரபரிகத யமுனாஜலபூதே

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே


ஸ்புரத் அதிமுக்த லதா- அசைகின்ற மாதவிக்கொடியால் 

 பரிரம்பண –தழுவப்பட்டு

முகுலித புலகித சூதே – மயிர்க்கூச்ச்சல் அடைந்தது போல மொட்டுக்கள் கொண்ட  மாமரங்கள் உடைய 

யமுனாஜலபூதே-யமுனையின் நீரால் புனிதமாக்கப்பட்ட 

பிருந்தாவனவிபினே – பிருந்தாவனமாகிய காட்டில்

பரிஸர பரிகத –அன்பு கொண்டவர்களால் சூழப்பட்டு ( வஸந்தகாலத்தில் கண்ணன் விளையாடுகிறான்) 


8. ஸ்ரீ ஜெயதேவ பணிதம் இதம் உதயதி ஹரிசரண ஸ்ம்ருதி ஸாரம்

 ஸரஸவஸந்தஸமயவரவர்ணனம் அனுகத மதன விகாரம்

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே 

ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி 

விரஹி ஜனஸ்ய துரந்தே


 . ஸ்ரீ ஜெயதேவ பணிதம் இதம்- ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட 

ஸரஸவஸந்தஸமயவரவர்ணனம்- ரஸமான வசந்த கால 

வர்ணனை 

அனுகத மதன விகாரம் – ராதையின் விரகத்தைக் கூறுவதாகவும் 

ஹரிசரணஸ்ம்ருதிஸாரம்- ஹரிசரணத்யானத்தின் சாரமாகவும்

உதயதி  - சிறப்புடன் விளங்குகின்றது.


*#ஜெயதேவரின்_அஷ்டபதி_தொடரும்*......

ஜெயதேவரின்_அஷ்டபதி 1

 *#கீதகோவிந்த_மஹாகாவியம்*


*#ஜெயதேவரின்_அஷ்டபதி 1*


*முதல் அஷ்டபதி* நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது. 

இதில் ஜெயதேவர் கிருஷ்ணவதாரத்திற்கு பதில் புத்த அவதாரத்தை சொல்கிறார். கேசவா என்று கிருஷ்ணனை அழைத்து இது எல்லாம் உன் அவதாரம் என்று சொல்வதனால் இது பொருத்தமே . ஆயினும் இந்த அஷ்டபதி முழுவதும் ஏன் கேசவா என்றே கூறுகிறார், மற்ற நாமங்களை என் கூறவில்லை என்று பார்த்தோமானால், இந்த நாமத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.


மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கேச என்றால் கேசம் அழகிய கேசத்தை உடையவன் என்று பொருள் கொள்ளலாம். அல்லது கேசி என்ற அசுரனை அழித்தவன் என்றும் பொருள் கூறலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டிய ஒரு உட்பொருள் இந்த நாமத்திற்கு உள்ளது.


‘க’  என்றால் அது பிரம்மனைக் குறிக்கும். ‘ஈஸ’ என்பது சிவனைக் குறிக்கும். ‘வ’ என்பதன் பொருள் இவர் இருவரையும் தன் வசம் கொண்டவன் என்று நாராயணனை பரப்ரமமாக சித்தரித்து திருமூர்த்திகளும்  பிரம்மத்தின் வெளிப்பாடு என்று கண்ணனே அந்த பரப்ரம்மச்வரூபம் என்பதுதான் இந்த நாமத்தின் உட்பொருள்.


*#இனி_முதல்_அஷ்டபதியைக்_காண்போம்*. 


1.பிரளய பயோதிஜலே   த்ருதவான் அஸி வேதம் 

விஹித வஹித்ர சரித்ரம் அகேதம் 

கேசவாத்ருத மீனசரீர

ஜெயஜகதீசஹரே 


பிரளயபயோதிஜலே- பிரளயகால வெள்ளத்தில்

மீன சரீர- மீன் உருக்கொண்டு

கேசவ- கிருஷ்ணா 

அகேதம்- சிரமம் இன்றி

விஹிதவஹித்ரசரித்ரம்- ஒரு ஓடத்தைப்போல சஞ்சரித்து

வேதம்-வேதங்களை 

த்ருதவான் அஸி- மீட்டாய்

ஜெய ஜகதீசஹரே – உலகநாயகனே , நாராயணா உனக்கு ஜெயம் உண்டாகட்டும்.(இது ஒரு மங்களாசாசனம் )


வேதங்கள் கடலினில் ஹயக்ரீவாசுரனால் மூழ்கடிக்கப் பட, ஞானம் தர்மம் இவை வேதத்தின் வழிகாட்டுதல் இன்றி அதர்மத்தில் மூழ்கின. மஹாமத்ஸ்யமாக நாராயணன் வேதங்களை வெளிக் கொணர்ந்தார் என்பது மத்ஸ்யாவதாரம். 


ஸர்வஞத்வம் ஸர்வவ்யாபித்வம் இவையே மஹாமத்ஸ்யம். இறைவன் அருளால் மட்டுமே இந்த சம்சாரத்தைக் கடக்க இயலும்.ஆகையால் இறைவனே துக்க சாகரத்தைக் கடக்கும் ஓடமாகி  துக்கமற்ற  (அகேதம் ) கரையில் நம்மை சேர்க்கிறான்

.

2. க்ஷிதிரதிவிபுலதரே தவ திஷ்டதி ப்ருஷ்டே 

தரணி தரண கிண சக்ரகரிஷ்டே 

கேசவத்ருத கச்சப ரூப

ஜய ஜகதீசஹரே 


க்ஷிதி: இந்த பூமி

விபுலதரே – விசாலமான 

தவ ப்ர்ஷ்டே – உன் முதுகில் 

திஷ்டதி – நிற்கிறது. 

தரணி தரண- பூமியை சுமப்பதால்  

கிணசக்ர கரிஷ்டே –உன் முதுகில் வட்ட வடிவமான வடுக்கள் அழகு செய்கின்றன.

கேசவ –கேசவா

த்ருதகச்சப ரூப- ஆமை உருக் கொண்டவனே 


இந்த ஸ்லோகம் கூர்மாவதாரத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால் மந்தரமலையைத் தாங்கியதைக் கூறாமல் கவி உலகத்தையே தாங்கும் ஆதி கூர்ம வடிவினையே குறிப்பிடுகிறார். இதன் சாராம்சம் என்ன வென்றால் இந்த உலகத்தையே தாங்குபவன் இந்த மந்தர மலையை முதுகில் தாங்கினான் என்பது ஒரு பொருட்டல்ல என்பது.


தேசிகர் தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். கூர்மாவதாரத்தில் தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை பகவான் முதிகில் ஏற்றிக் கடைந்தபோது அது அவருக்கு முதுகு சொரிவதைப்போல பரம சுகமாக இருக்க ஆனந்தமாகத் தூங்கினாராம். அவர் மூச்சுக்காற்று கடல் அலைகளை ஊஞ்சல் போல ஆடவைத்ததாம் . அது திருமகளுடன் அவர் ஊஞ்சலாடுவது போல இருந்ததாம். 


கூர்மாவதாரத்தில் பகவானுடைய முதுகு ஒரு லக்ஷ யோசனைகள் பரப்பைக் கொண்டதாக இருந்தது என்று பாகவதம் சொல்கிறது.


3.வஸதி தசன சிகரே தரணீ தவ லக்னா 

சசினி களங்க கலேவ நிமக்னா

கேசவ த்ருத சூகர ரூப

ஜெய ஜகதீச ஹரே 

கேசவ –கேசவா


த்ருத சூகர ரூப – வராக உருக் கொண்டவனே 

தவ தசன சிகரே- உன் கோரைப்பல்லின் நுனியில் 

வஸதி லக்னா- ஒட்டிக்கொண்டு இருந்த 

தரணீ- பூமியானது 

சசினி – சந்திரனில் 

நிமக்னா- உள்ளே ஒளிந்த 

களங்க கலா இவ – களங்கம் போல இருந்தது 


வராஹப் பெருமானின் கோரைப்பல் வளைந்து சந்திரன் பிறை போல இருந்தது, அதில் தாங்கிய பூமி பிறையினுள் களங்கம் போல் தெரிந்ப்தும் தெரியாமலும் இருந்தது,


தேசிகர் இதை வர்ணிக்கிறார் . வராஹப்பெருமான் மிக வேகத்துடன் வெளிக்கிளம்பின போது எல்லா  ஜீவராசிகளையும் தன்னுள் கொண்ட பூமி அவர் பல்லில் ஒட்டிக்கொண்ட கோரைக்கிழங்கு போல் இருந்ததாம்.


4. தவகரகமலவரே நகம் அத்புத ச்ருங்கம்

தலித ஹிரண்யகசிபு தனுப்ருங்கம்

 கேசவ த்ருத நரஹரிரூப

ஜெய ஜகதீச ஹரே  

கேசவ- கேசவா

த்ருத நரஹரி ரூப- நரசிங்க ரூபம் கொண்ட 

தவ கரகமலவரே –உன் தாமரைக்கரத்தில் 

அத்புத ச்ருங்கம் – மலைச் சிகரத்தைப்போன்ற

நகம் – நகம் 

தலித ஹிரண்ய கசிபுதனு – ஹிரண்யனின் உடலைக் கிழித்த 

ப்ருங்கம்- வண்டு ஆனது.


இந்த ச்லோகம் அத்புத ரசத்தைவெளிப்படுத்துகிறது. 

1. தாமரை போன்ற கைகளில் மலைச்சிகரத்தைப் போன்ற நகங்கள் ஒரு அத்புதம் 

2. சாதாரணமாக வந்துதான் தாமரை இதழ்களைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்லும். ஆனால் இங்கு தாமரையின் முனைகள் வண்டைத் துளைப்பது இன்னொரு அத்புதம் .

3. இது கவியின் கற்பனை வளத்தைக் காட்டும் அருமையான் வரிகள்.

 

5.ச்சலயஸி விக்ரமனே(णे) பலிம் அத்புத வாமன

பதநக நீரஜனிதஜனபாவன 

கேசவ த்ருதவாமன்ரூப

ஜெய ஜகதீச ஹரே 


கேசவ – கேசவா

த்ருதவாமன ரூப – வாமனன் உருக் கொண்டவனே 

விக்ரமனே(णे)-மூன்று அடிகள் எடுப்பதில்

ச்சலயஸி- பலியை வஞ்சித்தாய் 

பதநக நீர ஜனித ஜனபாவன- உன் நகத்திலிருந்து பெருகிய நீர் மக்களை புனிதப்படுத்தியது.


வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டு த்ரிவிக்ரமனாக்  வளர்ந்ததை வஞ்சித்தாய் என்று கூறுகிறார். த்ரிவிக்ரமனின் பாதம் பிரம்ம லோகத்தை அடைய பிரம்மா தன் கமண்டலுவில் இருந்து நீரைத் தெளித்து பாதத்தை அலம்புகிறார் . அந்த பாதத்தில் இருந்து  விழுந்த  நீரே கங்கை ஆயிற்று. பிறகு பகீரதன் மூலம் பூமிக்கு வந்து மக்களை புனிதப்படுத்துகிறது.


6.க்ஷத்ரிய ருதிரமயீ ஜகத் அபஹத பாபம் 

ஸ்னபயஸி பயஸி சமித பவதாபம் 

கேசவ த்ருத ப்ருகுபதிரூப 

ஜெயா ஜகதீசஹரே  


கேசவ – கேசவா

த்ருத ப்ருகுபதிரூப – பரசுராமனாக வந்து

க்ஷ்த்ரியருதிரமயீ-க்ஷத்ரியர்களின் உதிரமாகிய 

பயசி- நீரில் 

ஜகத் – உலகத்தை 

ஸ்னபயஸி- நீராட்டி

அபஹதபாபம்- அதன் பாவங்களைப் போக்கி

சமித பவதாபம்- சம்சார துக்கத்தைப் போக்கினாய் 


பரசுராமர் குருக்ஷேத்ரத்தில் கக்ஷத்ரியர்களின் குருதியால் ஒரு தடாகத்தை உண்டாக்கினார். அதில் ஸ்நானம் செய்தால்எல்லா பாவங்களும் தீரும் என்றும் சம்சார துக்கம் போகும் என்றும் சொல்லப்படுகிறது. இதைத்தான் கவி இங்கே குறிப்பிடுகிறார்.


7.விதரஸி திக்ஷு ரனே(णे) திக்பதிகமநீயம் 

தசமுக மௌலிமணிம் ரமணீயம்

கேசவ திருத்த ராம சரீர 

ஜெய ஜகதீச ஹரே 


கேசவ – கேசவா- 

த்ருத ராம சரீர – ராமனாக வந்து 

ரமணீயம்-அழகான

 தசமுகமௌலி மணிம் - ராவணனின் பத்து தலைகளிலும் இருந்த மணிகளை 

திக்பதி கமநீயம் –பத்து திக்பாலகர்களும் விரும்பும்படி

ததாஸி- - கொடுத்தாய் 


ராவணனைக் கொன்றபின் அவனுடைய பத்து தலைகளிலும் இருந்த மணி மகுடங்களை அவனால் துன்புறுத்தப்பட்ட திக்பாலகர்களுக்கு கொடுத்தான் என்று பொருள்.


8.வஹஸி வபுஷி விசதே வஸனம் ஜலதாபம் 

ஹலஹதிபீதி மிலித யமுனாபம்

கேசவ த்ருத ஹலதர ரூப 

ஜெய ஜகதீச ஹரே 


கேசவ – கேசவா

ஹலதரரூப – பலராமனாய் வந்து

விசதே – வெண்மையான

வபுஷி – உடலில் 

ஜலதாபம் – நீருண்ட மேகம்  போன்ற 

வசனம் – உடை 

வஹஸி- தரித்துள்ளாய்

ஹலஹதிபீதி- உன்னுடைய கலப்பைக்கு பயந்து 

மிலித யமுனாபம் – யமுனையே உன்னிடம் அடைக்கலம் புகுந்தது போல் இருக்கிறது.


பலராமர் வெண்மை நிறம் கொண்டவர் ( ஆதிசேஷனின் நிறம்).கருப்பு ஆடை அணிந்தவர் .கண்ணன் கருமை நிறம் . தங்க நிற ஆடை அணிந்தவன் . இங்கு ஒருசமயம் பலராமர்  மதுரையில் இருந்து கோகுலம் வருகிறார். அப்போது அவர் யமுனையில் ஜலக்ரீடை செய்ய ஆவல் கொண்டு யமுனையை தன் இருப்பிடத்திற்கு வரும்படி அழைக்க யமுனை வராததால் கோபம் கொண்டு கலப்பையால் யமுனையை இழுக்கிறார். இந்த சம்பவம் இங்கே நினைவுகூரப் படுகிறது.


9.நிந்தஸி யக்ஞவிதே: அஹஹ ஸ்ருதிஜாதம் 

ஸதய ஹ்ருதய தர்சித பசுகாதம் 

கேசவ த்ருத புத்த சரீர 

ஜெய ஜகதீச ஹரே 


கேசவ- கேசவா

சதய ஹ்ருதய- தயை உள்ளம் கொண்டவனே  

த்ருத புத்த சரீர- புத்தர் உருக்கொண்டு

ஸ்ருதிஜாதம் – வேத பிரமாணமான 

யக்ஞவிதே:-யக்ஞங்களில் 

தர்சித- காணப்பட்ட 

பசுகாதம் – பசுக்கொலையை

நிந்தஸி- நிந்தித்தாய்  


 புத்தர் வேதத்தின் விரோதி அல்ல. அஹிம்சை கொள்கை உள்ள  அவர் பசுக்கொலையை தான் கண்டித்தார். அவர் காலத்தில், வேதமுறைகள் சரியாக அனுஷ்டிக்கப் படவில்லை.,பேராசை கொண்ட பண்டிதர்கள் பசுக்கொலையை பெருவாரியாக மேற் கொண்டனர். புத்த அவதாரத்தின் மூலம் ,” எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்” என்று கூறிய கண்ணனின் தயை சொல்லப் படுகிறது .


10.ம்லேச்ச நிவஹ நிதனே கலயசி கரவாளம் 

தூமகேதும் இவ கிமபி கராளம்

கேசவ த்ருத கல்கி சரீர

ஜெயஜயதேவ ஹரே 


கேசவ – கேசவா

த்ருத கல்கி சரீர- கல்கி அவதாரத்தில் 

ம்லேச்ச நிவஹ நிதனே – துஷ்டர்களை அழிப்பதற்கு

கிமபி கராளம்- கடுமையான

தூமகேதும் இவ –தூமகேதுவைப் போல  

கலயஸி கரவாளம் – கத்தியை எடுக்கிறாய். 


ஸ்ரீஜயதேவகவேரிதம் உதிதம் உதாரம்

ச்ருணு ஸுகதம் சுபதம்  பவ சாரம் 

கேசவ த்ருத தச வித ரூப 

ஜய ஜகதீச ஹரே 


கேசவ- கேசவா

த்ருத தசவித ரூப – பத்து அவதாரம் எடுத்த வனே

ஸ்ரீஜயதேவகவே: ஜெயதேவகவியின் 

உதிதம் – படைப்பான

ஸுகதம் – சுபதம்- சுகத்தையும் நலனையும் அளிக்கும்

பவசாரம்- வாழ்க்கையின் சாரமாகவும் உள்ள


இதம் உதாரம் – இந்த துதியை

ச்ருணு- கேள் 

ஜெய ஜெகதீச  ஹரே – உலக நாயகனாகிய உனக்கு மங்களம் 


முடிவில் ஒரே ஸ்லோகத்தில் பத்து அவதாரத்தையும் வர்ணிக்கிறார் .

வேதான் உத்தரதே ஜகன்னிவஹதே பூகோளம் உத்பிப்ரதே

தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ரக்ஷயம் குர்வதே 

பௌலஸ்த்யம் ஜெயதே ஹலம் கலயதே காருண்யம் ஆதன்வதே 

ம்லேச்சான் மூர்ச்ச்யதே தசாக்ருதிர்க்ருதே க்ருஷ்ணாய தஸ்மை நம:


வேதான் உத்தரதே -வேதத்தைக் காத்து( மத்ஸ்யம்)

 ஜகன்னிவஹதே -உலகைத் தாங்கி( கூர்மம்) 

பூகோளம் உத்பிப்ரதே -பூமியை வெளிக் கொணர்ந்து ( வராஹம்)

 தைத்யம் தாரயதே -அசுரனை பிளந்து ( நரசிம்மம்) 

பலிம் சலயதே -பலியை வஞ்சித்து( (வாமனன்)

 க்ஷத்ரக்ஷயம் குர்வதே -க்ஷத்ரியர்களை அழித்து ( பரசுராமர்)

பௌலஸ்த்யம் ஜெயதே- ராவணனை வென்று( ராமர்)

ஹலம் கலயதே- கலப்பையைத் தாங்கி(பலராமர்)

காருண்யம் ஆதன்வதே- கருணை உருவாகி( புத்தர்)

ம்லேச்சான் மூர்ச்ச்சயதே –துஷ்டர்களை அழித்து

தசாக்ருதி: க்ருதே- இவ்வாறு பத்து அவதாரம் எடுத்த

க்ருஷ்ணாய தஸ்மை நம:- கிருஷ்ணனை வணங்குகிறேன்.


*ஜெயதேவரின் அஷ்டபதி தொடரும்*...

Sunday, 16 May 2021

மனீஷா_பஞ்சகம்

 #மனீஷா_பஞ்சகம்


ஆதி சங்கரரின் காலத்தில் , தீண்டாமை எனும் கொடுமை மிக அதிக அளவில் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் சம்மதம் இல்லை என்றாலும், வெறும் வாக்காக சொன்னால் யாரும் கேட்கப் போவது இல்லையே, எப்படி இவர்களை திருத்துவது என்ற எண்ணத்திலே காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. காசியிலே அவர் தனது அத்வைத கொள்கைளை மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அவர் மனதிலே தீண்டாமை இல்லை எனினும் ,அவரை சுற்றி இருந்தவர்கள் மனதில் ஆழ பதிந்திருந்தது அது. ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் குளிக்க சென்றுக் கொண்டிருந்தார். காசியின் வீதிகள் பொதுவாக மிகக் குறுகலாகத் தான் இருக்கும். அப்படி பட்ட ஒரு வீதியின் வழியே சென்றுக் கொண்டிருந்தபொழுது , 

எதிரே ஒரு சண்டாளன்,தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்

தான். அவன் மனைவியின் கையிலோ 

மதுக் குடம். 

அவனைக் கண்டவுடன், இவருடன் இருந்தவர்கள் முகம்  சுருங்கியது. சங்கரர்  அவனைப் பார்த்து 

“விலகிச் செல் சண்டாளனே! (தூரம் அபசரரே சண்டாள:) என்றுக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அந்த சண்டாளன் முகத்தில் புன்னகைப் பூக்க “யாரை விலகச் சொல்கிறீர்கள் ? இந்த உடலையா இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா ? எதை விலகச் சொல்கிறீர்கள்?”  என்றுப் பொருள்படும் வகையில் கேள்விக் கேட்கிறான்.


இதைக் கேட்டவுடன் , சங்கரர் அந்தச் சண்டாளனுக்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி “நீர் யார் அதை சொல்வீராக “என்றுக் கேட்க சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள்,

பார்வதி வைத்திருந்தது அமிர்தக் குடம். 


இதைத் தொடர்ந்து சங்கரர் இயற்றியதுதான் மனீஷா பஞ்சகம். மனிஷா என்றால் #ஒப்புதல் என்று அர்த்தம். பஞ்சகம் என்றால் ஐந்து. சண்டாள வடிவத்தில் வந்த சிவபெருமான் எழுப்பியக் கேள்விகளையும்,அவற்றில் பொதிந்துள்ள கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு சங்கரர் பாடியது. அந்த மனிஷா பஞ்சகம் கீழே. 


#Telegram_Group

https://t.me/joinchat/FUAmfLCiebsyNzdl


அன்னமயாத் அன்னமயம் அதவா

சைதன்யமேவ சைதன்யாத்|

யதிவர துரீக்ருதம் வாஞ்சஸி

கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி||


விலகுவில கென்னும் அறிஞர் தலைவ விருப்பமோ யாது மொழிக-உடலோ

உடலிடத்து அன்றி உயிரோ உயிரிடத்து சொல்வாய் உறவேண்டும் விலக்கு?


ஆதிசங்கரரைப் பார்த்து சண்டாளர் உருவில் வந்த சிவபெருமான் இவ்விதம் கேட்கிறார்; யதிகள் என்று அழைக்கப்படும் அறிஞர்கள், முனிவர்கள் ஆகியோருக் கெல்லாம் தலைவரைப் போன்று விளங்குபவரே! விலகிச் செல் என்று என்னை நோக்கிக் கூறினீரே? அன்னமயத்தால்ஆன இந்த உடல், மற்றொரு உடலில் இருந்து விலகிச்செல்ல வேண்டுமா? அன்றி அதனுள் உறைகின்ற அறிவு மயமாகிய (சைதன்ய ரூபமான) உயிர், அதாவது , ஜீவாத்மா மற்றொரு உயிரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டுமா? எந்த அர்த்தத்தில் விலகிச் செல் என்று கூறினீர்? அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம்

கொடுத்து, அதன் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பவன் ஆன்மீக வாதியாக மாட்டான். அப்படியானால், ஒரு ஜீவனை விட மற்றொரு ஜீவன் உயர்ந்தது என்று கூறமுடியுமா?

முடியாது. ஏனெனில் எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மாதான் (பரமாத்மா தான்

வீற்றுள்ளது. அதனால்தான் இந்த இடத்தில் உயிரினங்களில் உள்ள உயிர் என்ற கருத்தைக் குறிப்பிட ஆன்மா என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாமல் சைதன்யம் (அதாவது பிரக்ஞை, அறிவு) என்ற வார்த்தையை சிவபெருமான் உபயோகித்

துளார்.

ஏனெனில், அத்வைத சித்தாந்தப்படி, அனைத்து உயிரினங்

களிலும் உறைகின்ற 

ஏக பரமாத்மா, அதனதன் பிரகிருதிக்குத் தக்கபடி அதனதன் சைதன்யமாகப் பிரதிபலிக்கிறார். ஆகையால், ஓரே உயிரே அனைத்திலும் உறைவதால் அதனை விலகிச் செல் என்று எவ்விதம் கூற முடியும்? அடுத்ததாக, நேரடியாகவே அத்வைத சித்தாந்தத்தின்

அடிப்படையில் மேலும் சில கேள்விகளை அவர் எழுப்புகிறார்.


ப்ரத்யேக்வஸ்துனி நிஸ்தரங்க

ஸஹஜானந்தாவ போதாம்புதௌ|

விப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபி

மஹான்கோ அயம் விபேதப்ரம||


அலையில்லா நீர்நிலையில் ஆதவன் பிம்பம்போல் ஆனபொருள் யாவினிலும் ஆண்டவன் வீற்றுள்ளான் பார்ப்பானோ வேற்றானோ யாராம் உயர்வென்ற பாகுபாடும் ஐயமும் ஏன்? அலை அடிக்காததால், கலங்காமல் இருக்கும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரிகின்றது. அது போன்று உலகில் தோன்றியுள்ள அனைத்துப் பொருள்களிலும் அந்த ஏக இறைவனே (சிவபரமாத்மாவே)

வீற்றுள்ளார். இங்கு அலையில்லா நீர்நிலையென்று ஏன் சொல்ல வேண்டும்? அலையடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த நீரில் சூரியனின் பிம்பம் மூழுமையாக, சரிவரத் தோன்றாது. அது போல், பல சித்தாந்த குழப்பங்களும், சந்தேகங்களும்

எழுந்துகொண்டிருக்கும் மனத்தில் அந்த ஏக இறைவன் சரியாகத் தென்படமாட்டார். ஆகையால், கலங்காத நீரில் தெரியும் கதிரவன் பிம்பம் போல், அத்வைத சாதகன் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.அப்படியிருக்க, இவன் அறிவு நிறைந்த பிராமணன் (விப்ர) என்றும், இவன் ஒதுக்கதக்க வேறு ஆள் என்று பாகுபடுத்திப்

பார்ப்பதற்கும், இவர்களில் யார் உயர்ந்தவன், யார் தாழ்ந்தவன் என்று சந்தேகம்

கொண்டு நோக்குவதற்கும் என்ன அவசியம் நேர்ந்தது.?


கிம் கங்காம்புனி பிம்பிதே

அம்பரமணௌ சாண்டாள

வீதீபய:|

பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி

ம்ருத்கும்பயோர்வா அம்பரே||


கங்கையின் நீரினிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை

உண்டோ?பாத்திரம் மண்ணோ கனகமோ பிம்பத்தின் தோற்றத்தில் மாற்றமு

முண்டோ?

புனித நதி என்று போற்றப்

படுகின்ற கங்கை நதியின் நீராக இருந்தாலும் சரி அல்லது

சேரிகளில் தேங்கி நிற்கின்ற குட்டையில் உள்ள நீராக இருந்தாலும் சரி, அந்தத் தண்ணிரில் பிரதிபலிக்கின்ற சூரியனில் ஏதாவது வேற்றுமை தென்படுகிறதா? கங்கை

நதியில் தோற்றம் அளிக்கின்ற சூரியன் உய்ர்ந்தது என்றும்,சேரிப் புறத்து நீரில்

தெரிகின்ற சூரியன் தாழ்ந்தது என்றும் கூறமுடியுமா? மேலும், தண்ணீரைத் தாங்கி

நிற்பது மட்பாண்டமாக இருந்தாலும் சரி, பொற்குடமாக இருந்தாலும் சரி, அதில்

தெரியும் சூரியனின் பிம்பதில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அது

போல், எந்த உயிரினமாக இருந்தால் என்ன? எந்த மனிதராக இருந்தால் என்ன? அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே அன்றோ? என்று

சிவபெருமான் கேட்கின்றார்.


#Telegram_Group

https://t.me/joinchat/FUAmfLCiebsyNzdl


இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளின் உட்பொருளை உணர்ந்த ஆதிசங்கரர் தன் முன்னே சண்டாள வடிவிலே ஞானம் போதிக்கும் சிவபெருமானைச் சரணடைகிறார். எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த ஒருவர், எந்தச் சாதியை

சேர்ந்தவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை ஒப்புக் கொண்டு ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் போன்று

ஐந்து ஸ்லோகங்களை ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார். 


ஒப்புதல் ஐந்து.


ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு

ஸ்புடதரா யா

ஸம்விதுஜ்

ஜ்ரும்பதே

யா ப்ரஹ்மாதி

பிபிளிகாந்ததனுஷு ப்ரோதா

ஜகத்ஸாக்ஷிணி|

ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி

த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேச்

சண்டாளோ

ஸ்து ஸ து

த்விஜோஸ்துகுருரித்யேஷா:

மணீஷா மம ||


விழிப்பு கனவுதூக்கம் மூநிலையில் பத்மனாதி சிற்றெறும்பாய் விரிந்து தோற்றம்கொள்

பேரியக்கம் காணாமல் கண்டிருக்கும் பேருண்மை நானென்ற நம்பிக்கை கொண்டோன் பஞ்சமனோ பார்ப்பானோ ஒப்புகிறேன் எந்தன் குரு……………….(1)


விழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்பனம்), மற்றும் உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று

நிலைகளிலும் அந்த ஒரே ஆன்மாதான் (சிவ பரமாத்மன்) படைப்புக் கடவுள்ஆன பிரம்மா

முதல் (பத்மம் எனப்படும் தாமரையில் வீற்றிருப்பதால் பிரும்மாவுக்கு பதுமன், பத்மன் என்ற பெயர்கள் உண்டு.)சின்னஞ்சிறிய எறும்பு வரையான பல்வேறு உயிரினங்களாகத் தோற்றம் காண்கின்றன. அந்த ஏக ஆன்மாதான் பிரபஞ்சத்தின் இயக்கமாக விளங்குகிறது. (நம்மால்) அதனை நேரடியாகக் காணமுடியாது ஆனால், உலகின் செயல்பாடுகள்

அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற சாட்சியாக அந்த ஏக ஆன்மா

திகழ்கிறது. அப்படிப்பட்ட பேருண்மையான சிவமே (ஏக ஆன்மாவே) நான் என்பதில் (

அதாவது அந்தப் பரமாத்வே தன்னுள் உறைவதாக எவன் ஒருவன் நம்பிக்கை கொள்கிறானோ, அப்படிப்பட்டவன் சாதியில் பஞ்சமனாக இருந்தாலும்) சரி, அல்லது கற்பிதமான இந்தச் சாதிமுறையில் உயர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணனாக

இருந்தாலும் சரி, அவரை எனது குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்

ஸ்ரீஆதிசங்கரர்.


பிரஹ்மோவாஹமிதம் ஜக்ச்ச ஸகலம்

சின்மாத்ரவிஸ்தாரிதம்

ஸர்வம் சைததவித்யயா

திரிகுண்யாs சேஷம் மயா

கல்பிதம்|

இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே

நித்யேபரே நிர்மலே

சண்டாளோ ஸ்து ஸ து த்விஜோஸ்து

குருரித்யேஷா மனிஷா மம||


அறியாமை முக்குணத்தால்

வேற்றுமை தென்படினும்

ஆனதெல்லாம்

அஃதொன்றின் தோற்றங்களே அத்தகு

நித்ய நிர்மல

பேருண்மை நானென்ற நம்பிக்கை

கொண்டோன் பஞ்சமனோ

பார்ப்பானோ ஒப்புகிறேன்

எந்தன்குரு…… (2)


உலகில் தோன்றிய அனைத்துமே அந்த பரப்பிரம்மத்தின் பரிமாணங்களே. அதாவது உலகில் காணப்படும் அனைத்து வஸ்துகளும் உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின்

வெளிப்பாடுகளே. பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றேதான் வேறு வேறு அல்ல.

இதைத்தான் சின்முத்திரையாக (கட்டை விரலும் ஆட்காட்டிவிரலும் இணைந்த

வட்டமாக) இறைவன் உணர்த்துகிறார். ஆனால், சத்வம், ரஜோ, தமோ ஆகிய

முக்குணங்களால் தோன்றிய பிருகிருதியயின் கூட்டால், அந்த பரமபுருஷ தத்துவத்தை

உணர்ந்துகொள்ள முடியாத வேற்றுமைகள் தென்படு

கின்றன. அதாவது வெளிப் பார்வைக்கு நம்மால் பாகுபடுத்திப் பார்க்கப்படும் பல்வேறு உயிர் இனங்கள் மற்றும் பொருள்களின் அடிப்படையாகத் திகழும் ஜீவரசம் , ஆற்றல் ஒன்றுதான். ஆகவே பரபிரும்மம், சிவபரமாத்மா, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய நித்தியமாய், எவ்வித களங்கமோ குறைகளோ இல்லாத நிர்மலமாய் திகழ்கின்ற அந்தப் பேருண்மை

நான் என்பதை உணர்ந்து, அதில் திளைப்பவர் பஞ்சமரோ, பிராமணரோ அவரே எந்தன் குரு என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்


ச்சச்வன்ன ச்வரமேவ

விச்வமகிலம் நிச்சித்ய வாசா

குரோர்

நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம்

விம்ருசதா

நிர்வ்யாஜசாந்தாத்மனா|

பூதம் பாதி ச துஷ்க்ருதம்

ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே

ப்ராரப்தாய ஸமர்பிதம்

ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம||


நிலையில்லா மாயை பிரபஞ்சம்

வந்துற்ற பிறப்பும்

நிரந்தர நிச்சயத்தை எண்ணவாம்

ஐயமற-அத்தவமாம்

தீயில் பிறவித் துயர் பொசுக்க

என்றாசான் செப்பியதை

அப்படியே திண்னமுற

ஒப்புகிறேன் நான். …………(3)


விரிந்து பரந்துள்ள இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையில்லாத மாயை ஆகும். இங்கு

ஒரு விஷயத்தை விளக்க வேண்டியிருக்

கிறது. மாயை என்பது பொய்யன்று. உண்மையும் அன்று. குறிப்பிட்ட காலத்துக்கு உண்மை போலத் தோற்றம் அளிப்பதே மாயை. உண்மை என்பது ‘உள்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது.

அதாவது உள்ளதென்று பொருள். ஆக, உண்மை என்பது எக்காலத்திலும் உள்ளதாக

இருத்தல் வேண்டும். எல்லாம் வல்ல இறையாற்றல் ஒன்றுதான் எப்போதும் இருக்கக் கூடிய உண்மை. (சாஸ்வதமான சத்தியம்). ஆனால், இந்தப் பிரபஞ்சமானது குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே இருக்கக் கூடியது. ஆகையால், ஒருவகையில் உண்மை. ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்ததும் பிரபஞ்சம் அழிந்து, இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் பொய்யாகவும் முடிகிறது. அதே போல்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள

எல்லா வஸ்துகளும், குறிப்பிட்ட காலம் வரை இருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் மாயை. இதனை ‘கயற்றரவு’ என்ற வார்த்தையால் மகாகவி பாரதி விளக்குவார். அதாவது காற்றில் அசையும் கயறு, தூரத்தில் நின்று பார்க்கையில் அரவம்

போல்(பாம்பு) அசையும். அந்தக் காற்று நின்றுவிட்டால் அது வெறும் கயறு என்பது தெரியும். அதுபோல், பிராணன் என்று காற்று இருக்கும் வரை உயிரினங்கள் அசைகின்றன. பின்னர் மடிந்து விடுகின்றன. ஆகையால் இவையெல்லாம் மாயை.

நிரந்தனமான நிச்சயம் அந்த ஏக ஆத்மாவான சிவம் மட்டுமே. அந்த

உண்மையை ஐயமின்றி உணர்ந்து கொள்வதற்காகத்தான் மிக உயர்ந்த பிறப்பான மானுடப் பிறப்பு வாய்த்திருக்கிறது. ஆகையால், இப்பிறவியில் அந்த ஏக ஆன்ம

ரூபத்தை அறிந்து,

தியானித்து ஞான நிலைபெற்று, இனிமேலும் பிறவி எடுக்காமல்

இருக்கும் தவத்தை மேற்கொள்ளவேண்டும். தவம் என்பதற்கு ஒரு விஷயத்தில்

உறுதியாக நிற்றல், தொடர்ந்து மேற்கொள்ளுதல் என்று பொருள். ஆக, அழிவில்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றுமே மாறாத, எல்லாவற்றிலும் வியாபித்து நிற்கும் அந்த பரமாத்மாவே அனைத்து உயிரினங்களி

லும் உறைகிறார் என்ற இடைவிடாத எண்ணமே தவம் ஆகும். குருவாக வந்து அந்த இறைவனே உபதேசித்த இந்த அரிய தத்துவத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.


#Telegram_Group

https://t.me/joinchat/FUAmfLCiebsyNzdl


யா திர்யங்நர

தேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா

க்ருஹ்யதே யத்பாஸா

ஹ்ருதயாக்ஷதேகவிஷயா

பாந்தி ஸ்வதோs சேதனா:|


தாம் பாஸ்யை:

பிஹிதார்கமண்டலநிபாம்

ஸ்பூர்தி ஸதா பாவயன்

யோகீ நிவ்ருதமானஸோ ஹி

குருரித்யேஷா மணீஷா மம||


சூரியன் ஜோதியை மேகம்

மறைத்தாற்போல் உண்மையைச்

சூழ்ந்திடும் ஈனமதி நீங்கி

அனைத்தும் இயக்குகிற

ஆண்டவன் தன்னிருப்பும்

தன்மையும் தன்னுள் அறிபவர்

யோகியென்றே திண்ணமுற

ஒப்புகிறேன் நான்……(4).


ஆண்டவன் அனைத்திலும் வியாபித்

துள்ளார். அவர் இல்லாத வஸ்து என்று எதுவுமில்லை. அவரே அனைத்தின் இயங்கு சக்தியகவும் விளங்குகிறார்.

நம் மூலமாக அனைத்து செயல்களையும் செய்பவர் அவரே. ஆனால், சூரியனின் பிரகாசத்தை

மேகம் மறைப்பது போல, அந்த ஆண்டவன் குறித்த உண்மையை அறிய இயலாமல் நமது அறியாமை மறைத்துள்ளது. அந்த அவித்தை நீங்கி, ஆண்டவனின் இருப்பையும் தன்மையையும் தனக்குள்ளேயே உணர்ந்து அறிந்துகொள்பவர் மாபெரும் யோகி ஆவார். இதனை ஐயமின்றி, உறுதியுடன் நான் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.


யதிஸௌக்கியாம்புதிலேசலேதத

இமே சக்ரதயோ நிர்வ்ருதா

யச்சித்தே நிதராம்

ப்ரசாந்தகலனே லப்தவா

முனிர்நிர்வ்ருத: |

யஸ்மின்னித்யஸுகாம்புதௌ

கலிததீர்ப்ரஹ்மைவ ந

ப்ரம்ஹவித்

ய: கச்சித்ஸ

ஸுரேந்த்ரவந்திதபதோ நூனம்

மணீஷா மம ||


தேவர்கோ தெய்வங்கள் எல்லோரும்

பூசிக்கும் போதிலும்

தன்னுள் அமைதியாய்

தானிருக்கும் பேரொளியைத்

தன்னுள்

லயித்திடுவோன் தானறிவான்

அப்பிரும்மம் அம்மட்டோ

அப்பிரும்மம்

ஆயிடுவான் திண்ணமுற

ஒப்புகிறேன் நான்…..(5)


எவனொருவன், தேவர்களின் தலைவனான இந்திரனும், மற்ற தேவதைகளும் தனது தவ வலிமையால் தன்னைப் போற்றித் துதிக்கின்ற உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட

போதிலும், அதனால் மனம் பிசகாமல், ஆணவம் அடையாமல், ஆர்ப்பரிக்காமல், அமைதியாக இருந்து, தனக்குள் அமைதியாய், அன்பே வடிவாய் வீற்றிருக்கும் அந்தச் சிவப்பேரொளியில் லயித்து, அதனை தியானிக்கிறானோ அந்த மனிதன், பிரும்ம சொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மாவை முழுமையாக உணர்ந்து கொள்கிறான். அது மட்டுமின்றி, அந்த பிரும்மம் ஆகவும் அவன் ஆகிவிடுகிறான். அதாவது அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, மீண்டும் பிறந்திறவாத அமரத் தன்மையை அடைகிறான்

என்பதை உறுதியாக ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். எவ்வாறெனில்,

பிரும்மம் என்பது அனைத்திலும் ஆதாரசக்தி. அனைத்து வஸ்துக்களிலும் அந்த ஆதார

சக்தியே உறைகிறது. ஆக, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உயிர்சக்திதான் பிரும்மம்.

அது முழுமையானது. ஆகையால், அஹம்பிரும்

மாஸ்மி, த்வம்

பிரம்மாஸ்மி, சர்வம்

ப்ரும்மாம: அதாவது நானும் பிரும்மம், நீயும் பிரும்மம், யாவையும் பிரும்மம். இந்த

உண்மையை உணர்ந்து கொள்வதால்,அறிவு மயக்கம் அடைந்து

விடாமல் அமைதியாக

இருப்பவனே அந்த பிரும்மத்தில் ஐக்கியம் ஆகிறான்.


#Telegram_Group

https://t.me/joinchat/FUAmfLCiebsyNzdl


இவ்வாறு ஐந்து ஸ்லோகங்

களைக்கூறி, அனைத்திலும் ஆண்டவன் இருப்பதால்,

மனிதருக்குள் உயர்வு தாழ்வு இல்லை. பிரும்மத்தை உணர்ந்தவன் எந்தச் சாதியைச்

சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் வணக்கத்திற்

குரிய ஆசாரியான், அவன்

மதிப்பிற்குரிய யோகி, எல்லாவற்

றையும்விட போற்றுதலுக்

குரிய பிரும்மமாகவும் அவன்

ஆகிறான் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் அருமையாக எடுத்துரைத்

துள்ளார்.


#Telegram_Group

https://t.me/joinchat/FUAmfLCiebsyNzdl


நிறைவுச் செய்யுள்.

தாஸமஸ்தேs ஹம் தேஹத்ருஷ்யாs

ஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s ஸோ

ஜீவத்ருஷ்யா

த்ரித்ருஷ்டே|

ஸர்வஸ்யாs s

த்மன்னாத்மத்ருஷ்யா

த்வமேவேத்யேவம் மே

தீர்நிச்சிதா

ஸர்வசாஸ்த்ரை:||


நன்றி : (தமிழ் அர்த்தம்) http://detroit-satsangam.com/viewtopic.php?f=5&t=46

தோடகாஷ்டகம்

 இன்று #ஆதிசங்கரர் ஜெயந்தி 


#தோடகாஷ்டகம்


....

பொருளுறையுடன்....


ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.


அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.


ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும். 


விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 

என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.


பவதா ஜனதா ஸுகிதா பவிதா

நிஜபோதவிசாரண சாருமதே

கலயேச்வர ஜீவ விவேகவிதம்

பவ சங்கர தேசிகமே சரணம்!!


தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!


பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கெளதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!


ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்சன லாலஸதா

அதிதீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 

நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ

விசரந்தி மஹா மஹஸஸ்சலத:

அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ

பவசங்கர தேசிக மே சரணம்!!


குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


குருபுங்க புங்கவ கேதந தே

ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:

சரணாகத வத்ஸல தத்வநிதே

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


விகிதா ந மயா விசதைககலா

நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ

த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...