Thursday, 12 November 2020

கோவத்ஸ_துவாதஸி

 *#கோவத்ஸ_துவாதஸி!*



*ஆஸ்வீஜ கிருஷ்ண பக்ஷ துவாதஸியை கோவத்ஸ துவாதஸி என்று கொண்டாடப்

படுகிறது!*


*திரு லஷ்மிபதி ராஜா அவர்களின் பிரவச்சனத்தின் எழுத்துப் பதிவு!*


*ஸ்தீரிகள் புருஷர்கள் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரும் அனுஷ்டிக்கலாம். செலவு ஏதுமில்லாமல் தெய்வ அனுக்ரஹத்தை பெறக்கூடிய வழிகளில் இதுவும் ஒன்று. அன்றைய தினம் முக்கியமாக யதா சக்தி கோவிற்கும் கன்றுக்குட்டிக்கும் ஆகாரம் கொடுப்பது விசேஷமானது. கோஸம்ரக்ஷணை என்பது விசேஷமானது!*


*கோவின் (பசுவின்) தேகத்தினுள் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸான்னித்தியம் கொண்டுள்ளனர். முக்கியமாக அதன் பின் பக்கம் மஹாலக்ஷ்மி ஸான்னித்தியம் கொண்டிருக்கிறாள்.   கோவினை ப்ரீதி செய்வதாலே (அந்தர்யாமியான ஸ்ரீ ஹரியை), கோதானம் செய்வதாலே, அதற்கு எத்தனை ரோமங்கள் உள்ளதோ அத்தனை ஆயிரம் வருஷங்கள் ஸ்வர்காதி லோகங்களில் வாசம் கிடைக்கிறது. ஆகவே கோசேவையானது எப்போதும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாக ஸாஸ்திரங்களில் உரைக்கப்

பட்டுள்ளது.  அதிலும் சில விஸேஷமான பர்வகாலங்களில், குறிப்பிட்ட தினங்களில், சுப காரியங்களின் அங்கமாக கோபூஜையானது வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் கோ பூஜைக்கு விசேஷமான ஒரு தினமாக சாஸ்திரம் குறிப்பிடுவது ஆஸ்வீஜ மாத (ஐப்பசி) கிருஷ்ண பக்ஷ துவாதஸி ஆகும். அதாவது தீபாவளிக்கு முன்னால் வரக்கூடிய துவாதஸி. வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. கோ - வத்ஸ என்றால்  கன்றுடன் கூடிய பசுவை குறிப்பதாகும். பசுவிற்கும் கன்றுக்குட்டிக்கும் சந்தனம் மஞ்சள் குங்குமம் பூசி புஷ்ப மாலையினால் அலங்காரம் செய்து அதன் வால் பகுதியிலோ எதிரிலோ அர்க்யம் கொடுத்து பூஜிக்க வேண்டும்.!*


*#அர்க்ய_ஸ்லோகம்:*


*"கோ ஷீரம் கோ க்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்"*


*தர்ம ஸிந்துவில் இந்த ஸ்லோகம் சொல்லப்பட்டு, அதன் 

அர்த்தமானது!*


*"பாற்கடலிலே பிறந்த என் தாயே, தேவர்களும் அசுரர்களும் உன்னை கொண்டாடு

கின்றனர். எல்லா தேவர்களும் உன்னுள்ளே இருப்பதினாலே, இந்த அர்க்யத்தை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்ய வேண்டும்!*


*என்ற விதத்திலே அர்க்யத்தை கொடுத்து, அந்த பசுவுக்கும் கன்றுக்குட்டிக்கும் புல், பழங்கள், அரிசி, வெல்லம் ஆகியவற்றைக் கொடுத்து கீழ்க்கண்டவாறு சொல்லி சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்!*


*ஸுரபி த்வம் ஜகந்மாதா தேவி விஷ்ணுபதே ஸ்திதா | ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்த ‌மிமம் க்ரஸ ||*


*ஸர்வதேவ மயே! தேவி! ஸர்வ தேவைஸ்ச  ஸத்க்ருதா !  மாதர் மமா(அ)பி லஷிதம் ஸபலம் குரு 

நந்தினி!*


*"மஹாவிஷ்ணுவுக்கு ப்ரியமாக பக்கத்தில் இருக்கும் ஜகன்மாதாவே, எல்லா தேவர்களுக்கும் இருப்பிடமாக இருக்கக்கூடிய தேவியே, என் மனோ இஷ்டங்களை பூர்த்தி செய்து பலன் தர வேண்டும் தாயே!"*


*என்று  கோவுக்கும் கன்றுகுட்டிக்கும் புஷ்பாஞ்சலி செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.!*


*ஸ்தீரிகள் புருஷர்கள் குழந்தைகள் என எல்லோரும் இந்த துவாதஸியில் கோபூஜை கோசேவை கோஸம்ரக்ஷனை செய்வதாலே ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ஞானம் பக்தி வைராக்கியம் இவற்றை அருளி பகவான் ரக்ஷனை செய்கிறார். கோ ஸம்ரக்ஷணையின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கவே  கோபாலகனாக கிருஷ்ண பகவான் அவதரித்தார் என்று பாகவதம் மகாபாரதம் போன்ற கிரந்தங்களில் நமக்கு உணர்த்துகின்றன. கிருஷ்ணனின் மகிமையை கொண்டாடும் விதத்தில் நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததை போற்றும் விதத்தில் நாம் செய்யும் தீபாவளி உற்சவத்திற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இந்த இந்த கோ பூஜை ஆனது உரைக்கப்பட்டுள்ளது மிகவும் விஸேஷமாகும்!*


*இந்த ஒரு சேவையை சத்காரியத்தை செய்து பகவானுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகுவோம்!*


*பாரதி ரமண முக்ய ப்ராண அந்தர்கத கோபால கிருஷ்ணருடைய பாதாரவிந்தங்களில் சமர்ப்பணம் செய்வோம்!*


*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*


*திரு லஷ்மிபதி ராஜா அவர்களின் பிரவச்சனத்தின் எழுத்துப் பதிவு!*


🙏🙏🙏

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...