Sunday, 29 November 2020

கார்த்திகைத்_தீபத்_திருவிழா_சொக்கப்பனை_வைபவம்

 #கார்த்திகைத்_தீபத்_திருவிழா_சொக்கப்பனை_வைபவம்



சொக்கப்பனை எரித்து, சாம்பலை வயலில் தூவி.... நினைவில் நிற்கும் அந்தக்கால கார்த்திகைத் திருநாள்! 


`தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து புரவி பூட்டிய தேரில் போருக்குச் செல்கிறான். தலைவனின் பிரிவைத் தாங்காத முடியாத தலைவியோ துயரத்துடன் அழுகிறாள். அவளது துயரைப் பார்த்த தோழி, தலைவன் மீது கோபப்படாமல் அவனை இழுத்துச் செல்லும் புரவியின் மீது கோபம் கொள்கிறாள். `நீதானே தலைவன் அமர்ந்திருக்கும் தேரை இழுத்துச் செல்கிறாய். குருவிப் பறையானது சிறுவர்களிடம் அடிவாங்குவதைப் போன்று நீயும் செமத்தியாக அடிவாங்குவாயாக’ என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறாள். போருக்குச் சென்ற தலைவன்(இறையருள் - Divine Power) வெற்றியுடன் திரும்புகிறான். அவன் திரும்பும் நாள்தான் கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள். 


#சங்க_இலக்கியமான_நற்றிணையானது அந்தக் காலத்தில் கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றும் நிகழ்வை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. தமிழர்களின் தொன்மையான பண்டிகைகளில் திருக்கார்த்திகை தீப விழாவும் ஒன்று. ஒளி வடிவில் இறைவனை வணங்கும் பெருவிழாவே கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா. சங்க இலக்கியங்களான #நற்றிணை, #பரிபாடல், #புறநானூறு போன்றவற்றில் பல்வேறு இடங்களில் கார்த்திகைத் தீபத்தன்று மக்கள் #விளக்கேற்றி வழிபட்ட காட்சிகள் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட பல்வேறு விழாக்கள் இன்று உருமாறிவிட்டன. அத்தகைய விழாக்களுள் ஒன்றுதான் `#கார்த்திகைத்_தீபத்_திருவிழா' எனப்படும் கார்த்திகை விளக்கீடு விழா.


பத்து வருடங்களுக்கு முன்  இறையருள் கொண்டாடப்பட்ட கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கும், இன்று கொண்டாடப்படும் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கும் ஏகப்பட்ட வேற்றுமைகளைக் கண்டறியலாம். அன்று குப்பைக் குழி, நன்செய் மற்றும் புன்செய் நிலங்களின் எல்லைகள், கொட்டகை, கூரை மற்றும் வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவோம். கார்த்திகைத் தீபத் திருநாளன்று மாலை நேரத்தில் ஊர் முழுவதும் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். எந்தத் திசையை நோக்கினாலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரிகளை வைத்து தீபம் ஏற்றிப் பிரகாசிப்பதைக் காணலாம். சுத்தமான விளக்

கெண்ணெயும், நல்லெண்ணெய்யும் எரிந்து வெளிப்படும் வாசனை மனதையும், கிராமத்தையும் நிறைக்கும்.


ஆனால், இன்றோ அகல் விளக்குகளுக்குப் பதில் மெழுகுவத்திகளும், மின் விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. கிராமங்களில்கூட மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. கார்த்திகை தீபம் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பே `மாவளி' செய்து கார்த்திகைச் சுளுந்தைக் கொளுத்தி வானத்தில் பூத்திருக்கும் விண்மீன்களுக்கு இணையாகத் தீப்பொறியைப் பறக்கவிடுவோம். இன்று இந்தப் பழக்கம் இறையருள். Divine Power. அருகிவிட்டது. சில பகுதிகளில் கார்த்திகை மாவளி விற்கப்படும் நிலையிலும் அவற்றை வாங்கிச் சுற்றுவதற்கு ஆளில்லை. தற்போதிருக்கும் இளம் தலைமுறையினருக்குக் கார்த்திகைத் தீப மாவளி என்றாலே என்னவென்று தெரியாது.


கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `#சொக்கப்பனை_வைபவம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், #பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `#பூலோக_கற்பக_விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன. பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக் காம்புகள் நார் எடுக்க, நுங்கு உணவாக, பனையின் பாளை பதநீர் தயாரிக்க, மரக்கட்டை அடுப்பு எரிக்க... என்று பனையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால்தான் இதை `பூலோகக் கற்பக விருட்சம்’ என்று கூறுவார்கள். பல்வேறு தலங்களில் பனைமரம் தலமரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தீபத் திருவிழா அன்று அதிகாலையில் #திருவண்ணாமலை_கோயிலில்_பரணி_தீபம்_ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து மாலையில் மலை மீது #மகாதீபம் ஏற்றுவார்கள். வீடுகளில் அகல் விளக்குகளும், மாவிளக்கு 

தீபமும் ஏற்றி வழிபடுவார்கள். சிறுவர்கள் #மாவளி_சுளுந்து_கொளுத்திச்_சுற்றி_விளையாடுவார்கள். கார்த்திகையன்று வேறொரு வழிபாடும் சிறப்பாகக் கிராமந்தோறும் நடக்கும். அதன் பெயர்தான் #சொக்கப்பனை வைபவம். திருக்கார்த்திகை தினத்தன்று பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பு வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றிலும் பனை ஓலைகளைப் பிணைத்துக்கட்டி, உயரமான #கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்புக்கு முன்பு சுவாமி எழுந்தருளுவார். அவருக்குத் தீபாராதனை காட்டி முடித்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும், அந்த ஜோதியையே கடவுளாக எண்ணி மக்கள் இறையருள் - Divine Power வழிபடுவார்கள். சுமார் முப்பது அடி உயரத்துக்குக் கூட சொக்கப்பனை செய்து கிராமங்களில் கொளுத்தப்படும். 


கிராமங்களில் சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அந்தக் கரியை உடலில் பூசிக்கொள்வார்கள். சொக்கப்பனை சாம்பலை இறைவனின் அம்சமாகக் கருதி வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து திருநீறாகப் பூசிக்கொள்வார்கள். சொக்கப்பனை சாம்பலை வயல், காடுகளுக்கு எடுத்துச் சென்று தூவும் நடைமுறை இன்றளவும் கிராமங்களில் உண்டு. இதனால் விளைச்சல் பெருகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. 


கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று `#பனையோலைக்_கொழுக்கட்டை' பிரசாதமும் சிறப்பானது. அதிலும் தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்!


#நன்றி : #விகடன்

தீபத்_திருநாளில்_அவசியம்_படிக்கவேண்டிய_அற்புதப்_பதிகங்கள்

 #தீபத்_திருநாளில்_அவசியம்_படிக்கவேண்டிய_அற்புதப்_பதிகங்கள்


!


மலை மீது ஏற்றபட்ட மகா தீபம்

பண்டிகை


ஒளி வடிவாக எழுந்த ஈசனை #தீபமேற்றி வழிபடும் திருநாளே கார்த்திகை தீபத் திருவிழா. இந்நாளில் புற இருள் அகற்றும் தீபங்களை மட்டுமின்றி அக இருள் அகற்றும் பஞ்சாட்சர மந்திரங்களையும் உச்சரித்து அருள் பெறுவது அவசியம். #பஞ்சாட்சரத்தை விடவும் மேலான புண்ணியம் தரும் நமது #திருமுறை_பதிகங்களைப்_பாடுவது_சாலச்_சிறந்தது. 

அதில் தீபத்தின்_பெருமை_சொல்லும்_3_பதிகங்களில் ஒவ்வொரு பாடலை மட்டுமே இங்கு பொருளோடு கவனிப்போம். #குறைந்த_பட்சம்_இந்த_3_பாடல்களை_மட்டுமாவது_தீப_நாளில்_படித்தோ_பாடியோ_ஈசனை_வழிபட்டால்_நிச்சயம்_உங்கள்_

#வாழ்வில்_சூழ்ந்துள்ள_இருள்_யாவும்_விலகும்_என்பது_நிச்சயம்.


#திருவண்ணாமலை_பதிகம் 


திருஞானசம்பந்தர் அருளியது.


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.


உண்ணாமுலை எனும் உமையம்மை

யாரோடு எழுந்தருளியவரும், தம் இடது பாகம் முழுவதும் பெண்ணுருவாகி நம் ஈசனது மலை முழுதும் அழகிய மணிகள் சுடர்விட, மலையிருந்து வீழும் அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும். இத்தனை சிறப்புமிக்க திருவண்ணாமலையைத் தொழுவார் வினைகள் தவறாமல் அறும் என்கிறார் சம்பந்தர் பெருமான்.


#நமசிவாய_பதிகம் 


திருநாவுக்கரசர் அருளியது.


இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.


இறையருள். Divine Power.


இல்லத்தினுள் ஏற்றும் விளக்கானது இருளைக் கெடுப்பது, அதாவது ஒளி கொடுப்பது. சொல்லினுள் உள்ள நல்ல கருத்தான விளக்கானது ஜோதி வடிவில் வழி கொடுப்பது. பல்லோரும் காணக்கூடிய வானக விளக்கானது காட்சியைக் கொடுப்பது. இந்த மூன்று விளக்குகளையும் விட சிறப்பான 'நமசிவாய' எனும் மந்திர விளக்கே ஈசனை அடைய உதவுவது. எனவே நமசிவாய என்று நாளும் பொழுதும் ஓதச் சொல்கிறார் அப்பர் பெருமான்.


#திருவிசைப்பா 


திருமாளிகைத் தேவர் அருளியது.


ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!

சித்தத்துள் தித்திக்கும் தேனே!

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!

அம்பலம் 

ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே.


இறையருள் - Divine Power


விளக்கமே சொல்ல வேண்டாதவாறு எளிமையாக ஈசனைப் போற்றும் இந்த பாடலில், ஈசன் ஒளி மிக்க விளக்காகவும், திரள் மணிக் குன்றாகவும், தேனாகவும், ஆனந்தக் தனியாகவும் விளங்குகின்றான். அவனை வியந்து போற்றும்படியான அறிவை அறிவாகிய நீயே அருள்வாய் என்கிறார் மாளிகைத் தேவர்.


#நன்றி  : #விகடன்

Thursday, 26 November 2020

கார்த்திகை_தீபத்_திருநாளில்_பொரி_பொரித்து_வழிபடுவது_ஏன்

 ☘#கார்த்திகை_தீபத்_திருநாளில்_பொரி_பொரித்து_வழிபடுவது_ஏன்?☘ 

--

  தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப்பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோடு தொடர்புடைய இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்டதை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம். 

--

கார்த்திகை

“நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட...’, `கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே….’ ஆகிய வரிகளின் மூலம் வீடுகளும் தெருக்களும் விளக்குகளால் நன்குஅலங்கரிக்கப்பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. பன்னிரு தமிழ் மாதங்களுள் ஒன்று கார்த்திகை, இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைதான் நாம் கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.

--

☘#விழா_பிறந்த_கதை☘


முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். `திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்மனை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர். `சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது’ என்றார் பிரம்மா. `அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது’ என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர். முப்புரங்களைப் பெற்றதால், அவர்களின் கர்வம் தலைக்கேறியது. திரிபுரங்களைக்கொண்டு நாடு, நகரம், பயிர், வயல், கோபுரம்... என்று பாராமல் அனைத்தையும் அழித்தனர். மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களைவதன்பொருட்டு, பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் ஈசன். திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அரக்கர்களும் கார்த்திகைப் பெளர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அந்த நாளே திருகார்த்திகை தீப நாளாகும்.

--

திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திரு விழா, பதினேழு நாள்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டது. #முதல்_மூன்று_நாள்கள் திருவண்ணாமலையின் காவல்தெய்வம் #துர்க்கையம்மன் திருவிழாவும், கோயில் உள்ள காவல்தெய்வமான #பிடாரியம்மனை, திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டுவதும், விநாயகரை வணங்கி, துன்பங்கள் களைந்து, விழா சிறப்புற வேண்டுவதும், இதுவே முதல் மூன்று நாள்கள் விழாவின் உட்பொருள். 

இந்த மூன்று நாள்கள் விழாவின்போது துர்க்கை, பிடாரி, விநாயகர் ஆகியோரின் திருவீதிஉலா நடைபெறுகிறது. கொடியேற்றம் திருவிழா நடைபெறுவதற்கு மங்கல ஆரம்பமாகும். அருணாச்சலேசுவரர் ஆலயத்தில் வருடத்துக்கு #நான்கு_முறை கொடியேற்றம் நடைபெறுகிறது. அவை தீபத் திருவிழா, தட்சாயண புண்ணியகாலம், உத்தராயணப் புண்ணியக்காலம் மற்றும் ஆடிப்பூரம் ஆகியவை.


☘#முதல்_நாள்_விழா☘:

>>>>>>>>>>>><<<<<<<<<<<<<

அழியும் தன்மைகொண்ட உடலைப் போற்றி பேணிகாத்து, நாள்களை வீணாகக் கழிக்காமல், உடலின் போலித் தன்மையை அறிந்து, நினைவில் கொண்டு, இறைவனை வேண்டி அறியாமையை நீக்கியருள வேண்டும் என்பதை அறிவுறுத்தும்விதமாக, அதாவது `நிலையாமை’ என்னும் தத்துவத்தை உணர்த்துவதே முதல் நாள் விழா.


☘#இரண்டாம்_நாள்_

#விழா☘:

>>>>>>>>>>>><<<<<<<<<<<<<

மனித உடல் ஐம்புலன்களின் தன்மையோடு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றோடு, `தான்’ என்னும் அகந்தையையும் கொண்டது. ஆன்மாவுக்கு வடிவமாக இறைவன் கொடுத்த உடலும் மனமும் உண்மைத் தன்மை அற்றவையே என்பதைப் புரிந்துகொண்டு, உலக மாயையிலிருந்து விடுபடுதல் இரண்டாம் நாள் விழாவின் நோக்கம்.


☘#மூன்றாம்_நாள்_விழா☘:

>>>>>>>>>>>>><<<<<<<<<<<<

மூவகைப் பற்றுகளான மண், பொன், பெண்ணாசை ஆகியவற்றை நீக்க வேண்டும் என்பதுதான் இந்த விழாவின் உட்பொருள். உலகிலுள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாக அமைவது இந்த மூன்று காரணிகளே. எனவே, இந்த மூன்று காரணிகளின் மீதுள்ள பற்றை நீக்கினால், மிகச் சிறப்பான நல்வாழ்வு அமையும் என்னும் எண்ணத்தை ஆழமாக, வலிமையாக விளக்கும் தன்மைகொண்டது மூன்றாம் நாள் விழா.


திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத்திருவிழா

☘#நான்காம்_நாள்_விழா☘:

>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<

ஆன்மா, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய தோற்றங்களை நீக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வதாக அமைகிறது. இந்த நான்கினது கூறுகளால் மனமானது ஆசைவழிபட்டுத் துன்பங்களை இன்பம் என நினைத்து, கடவுளை அடைதலை முக்கிய நோக்கமாகக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் பிறவி எய்தி உழல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது நான்காம் நாள் விழாவின் நோக்கம்.


☘#ஐந்தாம்_நாள்_விழா☘: 

>>>>>>>>>>>><<<<<<<<<<<<<

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பூதங்களும், சாக்கியம் முதலான ஐந்து தவத்தையும், ஆணவம், கன்மம், மாயை, வயிந்தவம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் அகல, இறைவனை வேண்டுவது இந்த ஐந்தாம் நாள் விழாவின் நோக்கம். மனத்தின்கண் உள்ள மாசுகளை நீக்கினால், மலங்கள் விலகி, உள்ளம் இறைவனை நாடும் என்பதை உட்பொருளாகக்கொண்டது.


☘#ஆறாம்_நாள்_விழா☘:

>>>>>>>>>>><<<<<<<<<<<<<

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகையாறும், கலாத்துவா முதலான ஆறு அத்துவாக்களும், இருத்தல் என்னும் கன்ம மல குணம் ஆறும் நிலையற்றவை என்று உணர்ந்து நீக்குவதால், இறைஞானம் பெற்று உய்வதே ஆறாம் நாள் விழாவின் நோக்கமாகும். இந்நாளில் ஆலயத்திலுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சின்னக்கடைத்தெருவில் உள்ள அறுபத்து மூவர் மண்டபத்தில் மண்டகப்படி நிகழ்த்தப்படுகிறது.


☘#ஏழாம்_நாள்_விழா☘:

>>>>>>>>>><<<<<<<<<<<<<

அருணாசலேசுவரர் ஆலயத்தில் இந்நாளில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. குற்றங்களைக் களைந்து, மனதினைத் தூய்மைப்படுத்தும்விதமாக ஏழாம் நாள் விழா கொண்டாடப்படுகிறது. தேரில் அமர்ந்த இறைவன் உயிரையும், தேரிலுள்ள சங்கிலிகள் மனித மூச்சுக் காற்றையும் குறிக்கின்றன. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், எந்தவொரு காரியத்தையும் சாதிக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களைத் தேரோட்டம் விளக்குகிறது. காலையில் தேர் வலம் வருவதற்கு தேரில் ஏற்றப்பட்ட திருவுருவங்கள், இரவு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்புதலோடு ஏழாம் நாள் விழா நிறைவடைகிறது.


திருவண்ணாமலை கொடிமரம்

☘#எட்டாம்_நாள்_விழா☘: 

>>>>>>>>>>>>><<<<<<<<<<<<

முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, இயல்பாகவே பாசங்களை நீக்குதல், தன்வயத்தனாதல், பேரருள் உடைமை... முதலான எட்டும் இறைவனுக்குரிய குணங்கள். இந்த எட்டுக் குணங்களையும் இறைவன் ஆன்மாக்களுக்கு அருளல் வேண்டி எட்டாம் நாள் விழா நடத்தப்படுகிறது. இத்தகைய குணங்களை உலக உயிர்கள் பெறுவதால், அவற்றின் தீய குணங்கள் நீங்கி, நற்குணங்கள் நிலைக்கும் என்று கற்பிக்கப்படுகிறது. மாலையில் தீபம் ஏற்றுவதற்காகச் சேகரிக்கப்பட்ட காடாத் திரிகளுக்குச் சம்பந்த விநாயகர் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.


☘#ஒன்பதாம்_நாள்_

#விழா☘:

>>>>>>>>>>>><<<<<<<<<<<<<

மூவகை வடிவங்களும், மூவகைத் தொழில்களும், மூவகை இடங்களில் உறைதலும் ஆகிய ஒன்பது நிலைகளும் நீங்கப் பெறல் என்பதைக் குறிப்பதே ஒன்பதாம் நாள் விழாவின் நோக்கம். மனித மனம் ஆசைவயப்படுதல் நிலையில் அனைத்தையும் துறந்து, உலக மாயைகளிலிருந்து வெளியேறி நற்கதி அடைவதே இந்த விழாவின் உட்பொருள். ஆறு மணியளவில் கொப்பரைக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, அந்தக் கொப்பரையின் இருபுறமும் மரம்வைத்துக் கட்டி, பக்தர்கள் பக்தியுடன் மலைக்குச் சுமந்து செல்கிறார்கள்.


☘#பத்தாம்_நாள்_விழா☘:

>>>>>>>>>>><<<<<<<<<<<<<<

ஒன்பது நாள்கள் திருவிழாவில் உயிர்களின் மலங்கள் நீங்கிட வேண்டி, மீண்டும் பிறவாத உயிர்நிலையான `வீடுபேறு’ என்னும் பேரின்பத்தைத் தந்தருள்வது பத்தாம் நாள் விழா கொண்டாட்டத்தின் உட்பொருள் உண்மை. அண்ணாமலையானை வணங்கிய பின், பர்வதராசகுல மரபினர் தீபமேற்றப்பெற்ற நெருப்பைப் பானையில் வைத்து, அது அணையாதவாறு மலைக்குக் கொண்டு செல்கின்றனர். அதிர்வேட்டுகளின் சத்தம் வானைப் பிளக்க, தீப்பந்த வளையங்கள் மலையை நோக்கிக் காட்டப்பட, பரணி தீபத்திலிருந்து நெருப்பைப் பெற்றுச் சென்ற பர்வதராசகுல பரம்பரையினர் மலை மேல் தீபம் ஏற்றுகின்றனர்.


திருவண்ணாமலை தீபம்

இறைவன், உலக மக்களுக்கு ஒளி வடிவில் காட்சிதருகிறார். மலை மேல் ஏற்றப்பட்ட மகா தீபம் பதினோரு நாள்கள் எரிகிறது. தீபம் எரியும் கொப்பரை ஆறடி உயரம் கொண்டது. சுமார் 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் துணி நாடா, ஐந்து கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான ஜோதி (அக்னி) வடிவாக எழுந்தருளி உலக உயிர்களைக் காக்கும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.


கார்த்திகை தீபத் திருவிழாவின் பின்வரும் மூன்று நாள்களில் பராசக்தி அம்மன் தெப்பத்திருவிழா, சுப்பிரமணியன் தெப்பத்திருவிழா, சண்டிகேசுவரர் தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. இறுதி நான்கு நாள்கள் இறையுருவங்களைப் புனித நீராட்டும் விழாக்களாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம் ஏற்றுவதால், பல அற்புத நன்மைகள் நடைபெறும் என்று நமது புராண, இதிகாசங்களின் வழி அறிய முடிகிறது. 


`ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள்’ என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான். 


திருவண்ணாமலை கோயில்

`திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது.


`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி


மலைநுனியிற் காட்ட நிற்போம்….


வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்

லாது உலகின் மன்னி வாழ்வார்

பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்

தவிரும் அது பணிந்தோர் கண்டோர்

கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு

முத்திவரம் கொடுப்போம்’


தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, `கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், `இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார். 


திருவண்ணாமலை கோயில்

மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி, பொரி பொரித்து வழிபடுவது சிறப்பு. அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோயில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம். திருவண்ணாமலையில் தீப தரிசனத்தைக் கண்ட பிறகே, அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகிறது. 


கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காலம் கார்காலம். இந்தக் காலத்தில் நடைபெறும் இந்த விழா, கார்காலத்தை முடித்துவைக்கும் விழாவாகவும் அமைகிறது. அறிவியல் நோக்கில் உற்றுநோக்கினால், பல பயன்களை உள்ளடக்கியதை அறியலாம். கார்த்திகை தீபத் திருவிழா வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தருகிறது. மேலும் விளக்கிலிருந்து கிளம்பி வான மண்டலத்தில் பரவும் கார்பன் வாயு மழை மேகங்களைக் கலைத்து, மழை பெய்வதைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது. 


திருவிழாக்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், நல்வாழ்வு வாழும் முறைகளையும், அறத்தையும் போதிப்பதாக உள்ளதை அருணாசலேசுவரர் ஆலய விழா உணர்த்துகிறது. இறைவன் தொடக்கமும் முடிவுமின்றி, தானே எல்லாவற்றையும் படைத்து, காத்து, ஒடுக்கி மீண்டும் படைத்து ஒளியாக நிற்கும் தத்துவத்தை திருவண்ணாமலைத் தலத்தில் ஏற்றப்படும் பரணிதீபம் உட்பொருளாகக் கொண்டிருக்கிறது. 

          

☘>>>>>>>><<<<<<<<☘

 

☘#THANKS : WWW.VIKATAN.COM☘


☘#தொகுப்பு  : ☘#திருமதி_லதா_வெங்கடேஷ்வரன்.☘


  ☘ஓம் நமச்சிவாய ஓம் ☘

 ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Wednesday, 25 November 2020

கீதை_ஜெயந்தி

 #கீதை_ஜெயந்தி


.

--

கார்த்திகை (மார்கசீர்ஷ‌) மாதம், வளர்பிறை ஏகாதசி,  #அர்ஜூனனுக்கு_பகவத்_கீதை_உபதேசிக்கப்பட்ட_புண்ணிய_தினம். ஒவ்வொரு வருடமும், இது  '#கீதா_ஜெயந்தி' தினமாகக் கொண்டாடப்

படுகின்றது.


இறைவனின் திருஅவதாரங்கள், #மஹான்கள்_தோன்றிய_தினத்தையே_ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், #ஒரு_புனித_நூலுக்கு_ஜெயந்தி_தினம்_கொண்டாடுவது_என்பது '#பகவத்_கீதை'க்கு மட்டுமே. வேறு எந்த நூலுக்கும் இந்தப் பெருமை கிடையாது.


26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், '#கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிப்பதாக இருக்கிறது.


முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது #சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும்  இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.


அலைகடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்த 'பகவத் கீதை' பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. '#உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை' இம்மூன்றும் பிரஸ்தானத்திரயம்.


கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா  - (மஹா. பீஷ்ம. 43/1)


என்று வியாஸமஹரிஷி, கீதையின் பெருமையைப் போற்றுகிறார்.


#வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை. 


கீதையென்னும் ஒப்பற்ற தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினரையும் ஆகர்ஷித்ததால், கீதா ஜெயந்தி, சிங்கப்பூர், மலேசியா, பாலி, கம்போடியா, ஆக்லாந்து, பெர்த், மெர்ல்போன், கேன்பரா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்

படுகின்றது.


பகவத் கீதையை உயிரென மதிப்பவர் பலர் வாழும் நம் நாட்டில், கீதா ஜெயந்தி, மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்

படுகின்றது.வடநாட்டின் பல மாநிலங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்

படுகின்றது. பக்தர்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், கீதை நூலுக்கும் பூஜைகள் செய்து, மலரிட்டு வணங்கி வழிபடுகிறார்கள்.


அன்றைய தினம் ஏகாதசி என்பதால், முழு உபவாசமிருக்

கிறார்கள். தனியாகவோ பலர் சேர்ந்தோ, கீதையின் 700 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறார்கள்.


அர்ஜூனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்த இடமாகிய குருக்ஷேத்திரத்தில், கீதா ஜெயந்தி, மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்

படுகின்றது. அங்கு இது ஐந்து நாள் திருவிழா. பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.


எத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் அமுதவாக்காக வெளிவந்த பகவத் கீதையை, இறைவனுக்குச் சமமாக வழிபடுகின்றோம். உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.


#கீதா_சாரம்:


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்,

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றோருவருடைய

தாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடைய

தாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.


#யோகமே உலகப் பொருட்கள் அனைத்தின் தோற்றமும் ஒடுங்குதலும் ஆகும் என்கிறார் ஸ்ரீஅரவிந்தர். கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் 'யோகம்' என்ற சொல்லுடனே வழங்கப்படுகின்றன. விஷாத யோகம்,சாங்கிய யோகம்,கர்மயோகம் என்ற பெயர்களுடன் தொடருகின்ற  இந்த அத்தியாயங்களின் உட்கருத்தை உண்மையாக அறிய விழைவோர் உண்மையில் பேறு பெற்றவர்களே!!.


கீதா ஜெயந்தி தினத்தன்று, நம்மால் இயன்றவரை, பகவத் கீதையைப் பாராயணம் செய்வோம். முடிந்தால், தினமும் தொடரலாம் இதை. உள்ளத்திருள் நீங்கி, தெள்ளத்தெளிவாக, உண்மைப் பொருள் தோன்றும் நிச்சயம். 


வெற்றி பெறுவோம்!!


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.

Tuesday, 24 November 2020

பாண்டுங்காஷ்டகம்

 *பாண்டுங்காஷ்டகம்


1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !

ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

2.தடித்வாஸஸம் நாலமேகாவபாஸம்

ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !

வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

மின்னலொத்த வஸ்திரம் தரித்தவளும், நீலமேகம் போன்று விளங்குபவளும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவளும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுவரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்

நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !

விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே

ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !

சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவளும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.

5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்

லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !

ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.

6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்

ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !

த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.

7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்

ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !

கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்

பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !

ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே

படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !

பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே

ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!

புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் தரித்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.


பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.

துளசி கல்யாணம்

 #பிருந்தாவன_துவாதசி_விரத‌ம். ..


#பகுதி :1


#Thanks : #AALOSANAI


அச்சுதன் அமலன் என்கோ!

அடியவர் வினை கெடுக்கும்

நச்சு மாமருந்தும் என்கோ!

நலங்கடல் அமுதம் என்கோ!

அச்சுவைக் கட்டி என்கோ!

அறுசுவை அடிசில் என்கோ!

நெய்ச் சுவை தேறல்  என்கோ!

கனிஎன்கோ! பால் என்கேனோ;


பிருந்தாவன துவாதசி விரதம் (துளசி பூஜை)யைப் பற்றி நாம் காணலாம்.


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்

படுகிறது. 

#ஸ்ரீ_கிருஷ்ணருக்கும், #துளசி_தேவிக்கும்_திருமணம்_நடந்த_தினமாக_கொண்டாடப்_படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, #கர்நாடகாவில், 

'#சிக்க_தீபாவளி'

(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கை

களுடன் சிறப்புறக் கொண்டாடு

கின்றனர்.


துளசிச்செடியின் பெருமைகள் நிறைய. துளசியின் மகிமைகள்  மிக மகிமை வாய்ந்த துளசி, தோன்றிய புராணக்கதையை இப்போது பார்க்கலாம்.


புராணக்கதை.

இது விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலிய பல நூல்களில் விரிவாக அமைந்துள்ளது.


#தர்மத்துவஜன் என்னும் அரசன், #மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, 

#கார்த்திகை_மாதம்_பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்

கிழமையன்று, 

ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு '#துளசி' என்று பெயரிட்டனர்.


துளசி, #பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள்.  ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள்(அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்). பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.


பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார். அவளிடம், இறைவனிடம் நீங்காத பக்தி, 

தாசத் தன்மை அல்லது மோக்ஷம் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்டார்.


ஆனால், துளசியோ அவரை வணங்கி, 'தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நான் சென்ற பிறவியில், #கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். 

ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், #ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, #பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். 

ஆகவே, 

ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்' என்று வேண்டிக்

கொண்டாள்.


பிரம்மன், '#துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, #சுதர்மன் என்ற #கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், '#சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான்.  அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும்,  விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்' என்று வரமருளினார்.


துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், #பதினாறு_அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள #ராதிகா_மந்திரத்தை_அவளுக்கு_உபதேசித்தார்.


துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, #ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட 

ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை #புஷ்கர_க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற #சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான்.


துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்த்தைக் கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, #காந்தர்வ_முறையில் அவளை மணந்து கொண்டான்.


துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் #பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான்.  அவன் கழுத்தில் அவனைக் காக்கும் #மந்திரக்_கவசம் மின்னியது.


மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் 

சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், #சங்கரர்_ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.


தேவர்கள்   சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார்.  சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார்.


#சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார்.


சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.


தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான்.


சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.


சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான்  விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள்.


சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும்  என்று  நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.


விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு, யுத்தத்திற்கு புறப்பட்டான்.


#சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.


சிவனார், 

அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கி

றீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.


பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது,  விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான்.


அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.


இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் காணலாம்.

Thursday, 12 November 2020

கோவத்ஸ_துவாதஸி

 *#கோவத்ஸ_துவாதஸி!*



*ஆஸ்வீஜ கிருஷ்ண பக்ஷ துவாதஸியை கோவத்ஸ துவாதஸி என்று கொண்டாடப்

படுகிறது!*


*திரு லஷ்மிபதி ராஜா அவர்களின் பிரவச்சனத்தின் எழுத்துப் பதிவு!*


*ஸ்தீரிகள் புருஷர்கள் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரும் அனுஷ்டிக்கலாம். செலவு ஏதுமில்லாமல் தெய்வ அனுக்ரஹத்தை பெறக்கூடிய வழிகளில் இதுவும் ஒன்று. அன்றைய தினம் முக்கியமாக யதா சக்தி கோவிற்கும் கன்றுக்குட்டிக்கும் ஆகாரம் கொடுப்பது விசேஷமானது. கோஸம்ரக்ஷணை என்பது விசேஷமானது!*


*கோவின் (பசுவின்) தேகத்தினுள் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸான்னித்தியம் கொண்டுள்ளனர். முக்கியமாக அதன் பின் பக்கம் மஹாலக்ஷ்மி ஸான்னித்தியம் கொண்டிருக்கிறாள்.   கோவினை ப்ரீதி செய்வதாலே (அந்தர்யாமியான ஸ்ரீ ஹரியை), கோதானம் செய்வதாலே, அதற்கு எத்தனை ரோமங்கள் உள்ளதோ அத்தனை ஆயிரம் வருஷங்கள் ஸ்வர்காதி லோகங்களில் வாசம் கிடைக்கிறது. ஆகவே கோசேவையானது எப்போதும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாக ஸாஸ்திரங்களில் உரைக்கப்

பட்டுள்ளது.  அதிலும் சில விஸேஷமான பர்வகாலங்களில், குறிப்பிட்ட தினங்களில், சுப காரியங்களின் அங்கமாக கோபூஜையானது வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் கோ பூஜைக்கு விசேஷமான ஒரு தினமாக சாஸ்திரம் குறிப்பிடுவது ஆஸ்வீஜ மாத (ஐப்பசி) கிருஷ்ண பக்ஷ துவாதஸி ஆகும். அதாவது தீபாவளிக்கு முன்னால் வரக்கூடிய துவாதஸி. வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. கோ - வத்ஸ என்றால்  கன்றுடன் கூடிய பசுவை குறிப்பதாகும். பசுவிற்கும் கன்றுக்குட்டிக்கும் சந்தனம் மஞ்சள் குங்குமம் பூசி புஷ்ப மாலையினால் அலங்காரம் செய்து அதன் வால் பகுதியிலோ எதிரிலோ அர்க்யம் கொடுத்து பூஜிக்க வேண்டும்.!*


*#அர்க்ய_ஸ்லோகம்:*


*"கோ ஷீரம் கோ க்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்"*


*தர்ம ஸிந்துவில் இந்த ஸ்லோகம் சொல்லப்பட்டு, அதன் 

அர்த்தமானது!*


*"பாற்கடலிலே பிறந்த என் தாயே, தேவர்களும் அசுரர்களும் உன்னை கொண்டாடு

கின்றனர். எல்லா தேவர்களும் உன்னுள்ளே இருப்பதினாலே, இந்த அர்க்யத்தை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்ய வேண்டும்!*


*என்ற விதத்திலே அர்க்யத்தை கொடுத்து, அந்த பசுவுக்கும் கன்றுக்குட்டிக்கும் புல், பழங்கள், அரிசி, வெல்லம் ஆகியவற்றைக் கொடுத்து கீழ்க்கண்டவாறு சொல்லி சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்!*


*ஸுரபி த்வம் ஜகந்மாதா தேவி விஷ்ணுபதே ஸ்திதா | ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்த ‌மிமம் க்ரஸ ||*


*ஸர்வதேவ மயே! தேவி! ஸர்வ தேவைஸ்ச  ஸத்க்ருதா !  மாதர் மமா(அ)பி லஷிதம் ஸபலம் குரு 

நந்தினி!*


*"மஹாவிஷ்ணுவுக்கு ப்ரியமாக பக்கத்தில் இருக்கும் ஜகன்மாதாவே, எல்லா தேவர்களுக்கும் இருப்பிடமாக இருக்கக்கூடிய தேவியே, என் மனோ இஷ்டங்களை பூர்த்தி செய்து பலன் தர வேண்டும் தாயே!"*


*என்று  கோவுக்கும் கன்றுகுட்டிக்கும் புஷ்பாஞ்சலி செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.!*


*ஸ்தீரிகள் புருஷர்கள் குழந்தைகள் என எல்லோரும் இந்த துவாதஸியில் கோபூஜை கோசேவை கோஸம்ரக்ஷனை செய்வதாலே ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ஞானம் பக்தி வைராக்கியம் இவற்றை அருளி பகவான் ரக்ஷனை செய்கிறார். கோ ஸம்ரக்ஷணையின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கவே  கோபாலகனாக கிருஷ்ண பகவான் அவதரித்தார் என்று பாகவதம் மகாபாரதம் போன்ற கிரந்தங்களில் நமக்கு உணர்த்துகின்றன. கிருஷ்ணனின் மகிமையை கொண்டாடும் விதத்தில் நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததை போற்றும் விதத்தில் நாம் செய்யும் தீபாவளி உற்சவத்திற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இந்த இந்த கோ பூஜை ஆனது உரைக்கப்பட்டுள்ளது மிகவும் விஸேஷமாகும்!*


*இந்த ஒரு சேவையை சத்காரியத்தை செய்து பகவானுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகுவோம்!*


*பாரதி ரமண முக்ய ப்ராண அந்தர்கத கோபால கிருஷ்ணருடைய பாதாரவிந்தங்களில் சமர்ப்பணம் செய்வோம்!*


*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*


*திரு லஷ்மிபதி ராஜா அவர்களின் பிரவச்சனத்தின் எழுத்துப் பதிவு!*


🙏🙏🙏

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...