Friday, 30 November 2018

அஷ்டலஷ்மி ஸ்தோத்ரம்

☘#அஷ்டலட்சுமி_ஸ்தோத்ரம்☘

☘#ஆதிலஷ்மி☘

ஸுமநஸ வந்தித ஸுந்தரி மாதவி, சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயனி, மம்ஜுள பாஷிணி வேதனநுதே |
பங்கஜ வாஸிநி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜயஜய ஹே மதுஸூதந காமிநி, ஆதிலக்ஷ்மி ஸதா பாலய மாம் || 1 ||

☘#தான்யலக்ஷ்மி☘

அயிகலி கல்மஷ நாசிநி காமிநி, வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி, மம்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
மங்கள தாயினி அம்புஜ வாஸிநி , தேவ கணாச்ரித பாதயுதே
ஜயஜய ஹே மதுஸூதந  காமிநி , தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம் || 2 ||

☘#தைர்யலக்ஷ்மி☘

ஜயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸிநி சாஸ்த்ரநுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாச்ரித பாதயுதே
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ ஸதா பாலயமாம் || 3 ||

☘#கஜலக்ஷ்மி☘

ஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மம்டித லோகனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப னிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||

☘#ஸம்தானலக்ஷ்மி☘

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5 ||

☘#விஜயலக்ஷ்மி☘

ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||

☘#வித்யாலக்ஷ்மி☘

ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாந்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
நவனிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||

☘#தனலக்ஷ்மி☘

திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, தும்துபி னாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும, சங்க நினாத ஸுவாத்யனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா
பாலய மாம் || 8 ||

☘#பலஶ்றுதி☘

ஶ்லோ|| அஷ்டலக்ஷ்மீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணி |
விஷ்ணுவக்ஷஃ ஸ்தலா ரூடே பக்த மோக்ஷ ப்ரதாயினி ||
ஶ்லோ|| ஶம்க சக்ரகதாஹஸ்தே விஶ்வரூபிணிதே ஜயஃ |
ஜகன்மாத்ரே ச மோஹின்யை ப்ரஹ்மண்ய ஸுப மங்களம்.

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

   <><><><><><><><><><><>

Tuesday, 20 November 2018

துளசி கல்யாணம் !

துளசி கல்யாணம் ! 

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியை "கைசிக ஏகாதசி' என்றும் "பிரபோதினி ஏகாதசி' என்றும் போற்றுவர். வைணவர்கள் போற்றும் ஏகாதசிகளுள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப் போன்று மகத்துவம் பெற்றது "கைசிக ஏகாதசி!'

ஏகாதசி விரதம் இருந்து, "கைசிகப் பண்'னால் பெருமாளைப் பாடிய நம்பாடுவான் பரந்தாமனின் அருள் பெற்ற திருநாள். இன்றைய நாளில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி தலத்தில் பாசுரங்கள் பாடி விசேஷ பூஜைகளோடு வழிபாடுகள் நடைபெறும். இன்று விரதம் கடைப்பிடிப்பவர்கள் ஆயிரம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு  துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் இருப்பார். தியானத்தில் இருக்கும் அவரை அன்று "உத்தீஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசி அன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, துளசி மாடம் சுற்றி மெழுகி, கோலமிட்டு, காவி இடுவார்கள். தினமும் பூஜை செய்யும் துளசி மாடத்தில் உள்ள துளசிச்செடிக்கு பஞ்சினால் ஆன மாலையும் வஸ்திரமும் அணிவிப்பார்கள். கருகமணி நகைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைப்பார்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வார்கள்.

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றினார் என்பதால் ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து, துளசி மாடத்தில் சொருகிச் சேர்த்து இரண்டிற்கும் பூஜை செய்வார்கள். அப்போது,
"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹாண துளஸீம் விவாஹ விதிநேச்வர
பயோக்ருதைஸ்ச ஸைவாபி: கன்யவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸீம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'
என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்து "நாமசங்கீர்த்தனம்' செய்வார்கள்.

துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும் மத்தியில் மகாவிஷ்ணுவும் நுனியில் பிரம்ம தேவரும் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அசுவினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.

பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் நலமுடன் வாழ தினமும் துளசிமாடத்திற்கு முன்போ அல்லது துளசிச் செடிக்கு முன்போ, கோலமிட்டு, விளக்கேற்றி சுத்தமான நீரை வேரில் ஊற்றி சந்தனம், குங்குமம் புஷ்பத்தால் அலங்கரித்து அர்ச்சித்து, தூபதீப, நிவேத்தியம் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்து மும்முறை வலம் வந்து வணங்கினால் சுகமான வாழ்வு கிட்டும்.

Saturday, 10 November 2018

ஸ்ரீ_நவக்ரஹ_மங்களாஷ்டகம்

☘#ஸ்ரீ_நவக்ரஹ_மங்களாஷ்டகம்

--
1.  ☘பாஸ்வானர்க்க சமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்’யப:
குர்விந்தோச்’ச குஜஸ்ய மித்ரமரிகத்ரிஸ்த்தச்’சுப: ப்ராங்முக:
ச’த்ருர் பார்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காளிங்கதேசா’திப:
மத்யே வர்த்துலமண்டலே ஸ்த்திதியுத: குர்யாத் ஸதா மங்களம் .☘   

2.  ☘சந்த்ர: கர்க்கடக ப்ரபுஸ்ஸித ருசிச்’சாத்ரேய கோத்ரோத்பவச்’
சாக்னயே சதுரச்’ரகோ(அ)பரமுக: கௌர்யர்சயா தர்ப்பித:
ஷட்ஸப்தாக்னி தசா’த்யசோ’பன பலோ(அ)ச’த்ருர் புதார்க்கப்ப்ரிய:
ஸௌம்யோ யாமுன தேச’பர்ணஜஸமித் குர்யாத் ஸதா மங்களம்.☘             

 3. ☘பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ(அ)வந்தீபதி காதிர
ப்ரீதோ வ்ருச்’சிக மேஷயோரதி பதிகுர்வர்க்க சந்த்ரப்ரிய:
ஜ்ஞாரி: ஷட்த்ரிசு’பப்ரதச்’ச வஸுதாதாதா குஹாதீச்’வர:
பாரத்வாஜ குலோத்பவோ(அ)ருண ருசி: குர்யாத் ஸதா
மங்களம் .☘             

 4.☘ ஸௌம்ய: பீத உதங்முகஸ்ஸமித பாமார்கோ (அ)த்ரிகோத்ரோதபவ:
பாணேசா’நகதஸ் ஸுஹ்ருத்ரவிஸிதோ வைரீக்ருதானுஷ்ணருக்
கன்யாயுக்ம பதிர்தசா’ஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரகச்’சோ’பன:
விஷ்ண்வாராதன தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதா மங்களம் .☘                 

5. ☘ஜீவச்’சோத்தர திங்முகோத்தரக்குப் ஜாதோ(அ)ங்கிரோ கோத்ரத:
பீதோ(அ)ச்’வத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதிச்’ சாபர்ஷ மீனாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரியஸ்ஸித புதாராதிஸ்ஸமோ பானுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தகச்’ சு’பகர: குர்யாத் ஸதா மங்களம். ☘                         

 6. ☘சு’க்ரோ பார்கவ கோத்ரஜஸ் ஸிதருசி: பூர்வானன: பூர்வதிக்
காம்போஜாதிபதிஸ் துலவ்ருஷபபச்’ சௌதும்பரைஸ்தர்ப்பித:
ஸௌம்யர்க்யோ: ஸுஹ்ருதம்பிகா ஸ்துதிவசா’த் ப்ரீதோ(அ)ர்க்கசந்த்ராஹித:
நாரீ போககர: ச’சு’போ ப்ருகுஸுத: குர்யாத் ஸதா மங்களம் . ☘                       

 7.☘ ஸௌரி: க்ருஷ்ணருசிச்’ச: பச்’சிமமுக: ஸௌராஷ்ட்ரப: காச்’யப:
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருச் சுக்ரஜ்ஞ யோர்க்குருத்ரக:
ஷட்திரிஸ்தச்’சு’பதோ(அ)சு’போ தனுகதிச்’ சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்ட்டன் சிரஜீவிதாதி ஃபலத: குர்யாத் ஸதா மங்களம். ☘                         

 8. ☘ராஹுர்பர்பரதேச’போ நிருருதௌ க்ருஷ்ணாங்க சூ’ர்பாஸன:
யாம்யாசா’பிமுகச்’ச சந்த்ரரவிருத் பைடீனஸி: க்ரௌர்யவான்
ஷட்த்ரிஸ்த்தச்’சு’பக்ருத் கராளவதன: ப்ரீதச்’ச தூர்வாஹுதௌ
துர்காபூஜனத: ப்ரஸன்னஹ்ருதய: குர்யாத் ஸதா
மங்களம்.☘                           

 9. ☘கேதுர்ஜைமினி கோத்ரஜ: குச’ஸமித்வாயவ்ய கோணேஸ்த்தித:
சித்ராங்கத் வஜலாஞ்சனோ ஹி பகவான் யாம்யானன: சோ’பன:
ஸந்துஷ்டோ கணநாத் பூஜனவசா’த் கங்காதி தீர்த்தப்ரத:
ஷட்த்ரிஸ்த்தச்’சு’பக்ருச்ச சித்ரிததனு: குர்யாத் ஸதா மங்களம். ☘                 
--
☘#ஸ்ரீ_நவக்ரஹ_மங்களாஷ்டகம்_ஸம்பூர்ணம்.☘

☘#Thanks  :  nytanaya.wordpress.com.☘

Thursday, 8 November 2018

சண்முக_கவசம்_

☘#சண்முக_கவசம்_


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் விளக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

☘#அண்டமாய் அவனி யாகி
அறியொணாப்
பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக்
காக்க. 1☘

☘விளக்கம்☘:

வானமாகியும் , மண்ணுலகமாகியும் , மனம் வாக்கு காயத்தால் அறிதற்கு இயலாத உண்மைப் பொருளாகியும் , அடியார்களுக்கு குருவாகியும் , களங்கம் இல்லாத கடவுளாகியும் , எட்டு திசைகளிலும் உள்ளவர் வணங்கிட விளங்கிய என் அருளுடைய இறைவனுமாகிய பேராற்றல் பொருந்திய சரவணப் பொய்கையில் முதற்காட்சி தந்த முருகப்பெருமான் நாள்தோறும் என் தலையைக் காப்பாராக !

☘#ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2☘

☘விளக்கம்☘:

ஆதிபரம்பொருளான கயிலை மலையின் திருவாளன் என் அழகிய நெற்றியைக் காப்பாராக ! மகரந்தம் பொருந்திய கடம்பு மலர் மாலையைச் சூடிய பெருமான் என் இரண்டு புருவங்களைக் காப்பாராக ! ஒளிவடிவமான தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமான் களங்கம் உண்டாகாதபடி விழிகளை காப்பாராக ! தலைவனான கார்த்திகேயன் என் மூக்கை விருப்புடன் காப்பாராக !

☘#இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன்
காக்க ! 3☘

☘விளக்கம்☘:

இரண்டு செவிகளையும் செவ்வேள் அவற்றின் இயல்பு குன்றாதபடி காப்பாராக ! வாயினை முருகப் பெருமான் காப்பாராக ! நாவினையும் பல்லினையும் நல்ல குமரன் காப்பாராக ! துதிக்கையையுடைய யானை முகம் வாய்ந்த கணபதிக்குத் தம்பி களங்கம் இல்லாத கன்னங்களைக் காப்பாராக ! பிடரியை ( பின் கழுத்தை ) ச் சிவ சுப்பிரமணியன் அழகுடன் விளங்கக் காப்பாராக !☘

☘#ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4☘

☘விளக்கம்☘ :

அருள் மிக்க கார்த்திக்கேயன் என் கழுத்தைக் காப்பாராக ! இலக்குமியின் மருமகன் என் ஒளியுடைய தோள்களையும் இரு விலாப்பக்கங்களையும் காப்பாராக ! பன்னிரண்டு ஆயுதங்களையுடைய இறைவன் பழுது இல்லாத என் மார்பைக் காப்பாராக ! வளரும் அழகுடைய குறிஞ்சி நிலா கடவுள் இகழ்வதற்கு இயலாத என் முழங்கையினைக் காப்பாராக !  ( வாகுலேயன்  - கார்த்திகேயன் )☘

☘#உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய்
காக்க. 5☘

☘விளக்கம்☘:

உமையம்மையாரின் இளைய மகன் என் முன்னங்கைகளை உறுதியாய் இருக்கும்படி காப்பாராக ! சிறந்த முருகப் பெருமான் என் கைகள் அஞ்சாமை மிகும்படி காப்பாராக ! வேலையுடைய முருகன் என் புறங்கைகளைக் காப்பாராக ! சிறந்து விளங்கும் திருமாலின் மருமகன் கருவியாய் அமைந்துள்ள என் பத்து விரல்களையும் காப்பாராக ! குழந்தைத் தெய்வம் என் பின்பக்க முதுகைக் காப்பாராக !☘

☘#ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக்
காக்க. 6☘

☘விளக்கம்☘:

மயில் ஊர்தியை உடையவன் உணவை இட்டு நிறைக்கும் வயிற்றைக் காப்பாராக ! புதுமை மணம் கமழும் நிமிர்ந்த தோள்களை உடைய தேவரின் தலைவன் வயிற்றில் உள்ள கொப்பூழ்ச் சுழியினைக் காப்பாராக ! அக்கினி கர்ப்பன் ஆன பார்வதியின் மைந்தன் நாணிபோன்ற ஆண் குறியைக் காப்பாராக ! கந்தப்பெருமான் விரைகளின் நடுவில் பொருந்தியுள்ள நரம்பைக் காப்பாராக ! ஆறுமுகப் பெருமான் எருவாயான குதத்தை ( மலவாயை ) க் காப்பாராக !☘

☘#எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7☘

☘விளக்கம் ☘:

வேலையுடைய இறைவர் தளர்ச்சி ஏற்படாதபடி எனது இடுப்பைக் காப்பாராக ! காப்பாராக ! அழகிய பிட்டங்கள் இரண்டையும் சிவபெருமானின் மகன் காப்பாராக ! காப்பாராக ! எல்லார்க்கும் மேலான மெய்ப்பொருளாக விளங்கும் கங்கையின் மகன் இரு அடித் தொடைகளைக் காப்பாராக ! சிவந்த திருவடிகளை உடைய அன்புடைய குருநாதன் முன்தொடைகளைக் காப்பாராக ! (அஞ்சகனம் -  அம் + சகனம் ; அழகிய பிட்டங்கள் )☘

☘#ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8☘

☘விளக்கம்☘ :

சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதன் என் கால்களில் உள்ள முழங்கால்கள் இரண்டையும் காப்பாராக ! திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற இறைவன் என் சிறந்த கணைக்கால் இரண்டையும் காப்பாராக ! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற முருகப்பெருமான் நேரான புறங்கால்கள் இரண்டையும் காப்பாராக !  பழமுதிர்ச்சோலை இறைவன் சிறந்த குதிக்கால்களைக் காப்பாராக !☘

☘#ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9☘

☘விளக்கம்☘ :

அழகு பொருந்திய குன்று தோறும் வீற்றிருக்கின்ற இறைவன் என் பாதங்களில் உள்ள பத்து விரல்களையும் காப்பாராக ! பசுமையுடைய பழநித் தலத்தில் வீற்றிருக்கின்ற ஆண்டவன் உள்ளங்கால்களைக் காப்பாராக ! எவருக்கும் முதல்வரான ஆறுமுகப் பெருமான் உடல் முழுமையும் காப்பாராக ! தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான விசாகன் நாள்தோறும் என் உள்ளத்தைக் காப்பாராக !☘

☘#ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10☘

☘விளக்கம்☘ :

பேரொலி உண்டாகும்படி பெருங் கூச்சலுடன் வரும் பூதம் , பிசாசு , பலி வாங்குகின்ற இராட்சதப் பேய் முதலிய கொடிய பலகணங்கள் எவையே யானாலும் , அவை யெல்லாம் என்னைக் கண்ட அளவில் அச்சம் கொள்ளும்படியாக , என்னை வேல் காப்பதாக ! தீயவர் செய்கின்ற சூனியம் வன்மை யுடைய மந்திர தந்திரங்கள் என்ற எவையும் என்னைத் துன்பப்படுத்தாத வண்ணம் வேல் காப்பதாகுக !☘

☘#ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க
 காக்க ! 11☘

☘விளக்கம்☘ :

மிக்க சினம் கொண்டு வாள் , வில் , சூலங்கள் , எடுத்திடும் தண்டாயுதம் , சக்கரம் , தடி , மழு , ஈட்டி முதலிய அழிக்கும் தன்மையுடைய கருவிகளைக்  என்மீது வீசினாலும் , அவை எனக்கு எந்த வகையிலும் துன்பம் செய்யாமல் இருக்குமாறு , முருகப் பெருமான் கையில் உள்ள வேல் என்னைக் காப்பதாக !
(உவணி - வாள் )☘

☘#ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க
காக்க ! 12☘

☘விளக்கம்☘ :

பொறாமை உடையவர் , ஊனை உண்பவர் , அசட்டுக்குணமுடைய மூடர் , பேயின் தன்மை உடையவர் , அரக்கர் , அற்பர் ,  பகைவர்  ஆகியவருள் எவரானாலும் உறுதியுடன் என்னுடன் மற்போர் செய்ய கட்டிப் பிடிக்கத் தாவி வருவாராயின் , அப்போது எல்லா உலகங்களையும் காத்தருளும் , உயிர்களை வருத்தும் சூரனுக்கு இயமனைப்போன்ற எம் முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வேல் என்னைக் காப்பதாக ! (தவ்வி - தாவி , கவ்வுதல் - கவர்தல் ; பிடித்தல் ) ☘

☘#கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல்
காக்க ! 13☘

☘விளக்கம்☘ :

மிக்க கொடிய நஞ்சுடைய பாம்புகள் , சிங்கங்கள் , கரடிகள் , நாய்கள் , புலிகள் , குதிரைகள் , யானைகள் , கொடுமை செய்யும் ஓநாய்கள் , குரங்குகள் , பலநிறப்
பூனைகள் , நரிகள் முதலிய இயங்கும் இயல்பு கொண்ட உயிர்கள் எதனாலும் நான் துன்பம் அடையாத வண்ணம் கூறிய வேல் விரைவாய் வந்து என்னைக் காப்பதாக ! கங்கையின் மகனான காங்கேயனின் வேல் என்னைக் காப்பதாகுக !☘

☘#ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல்
காக்க. 14☘

☘விளக்கம்☘ :

முருகப்பெருமானின் திருக்கையில் உள்ள ஞானவேல் ஙகர எழுத்தை போன்ற இனம் என்று என்னை அனைத்துக் காப்பதாக ! கொடிய பறவைகள் ,   எலிகள் , தேள்கள் , நண்டு காலிகள் , வன்மையுடைய செய்யான்கள் , நச்சுப் பல்லிகள் , நகத்தையுடைய ஓணான்கள் , பூரான்கள் , வண்டுகள் , சிலந்திகள் என்ற இவற்றால் இந்த உலகத்தில் எனக்கு இடையூறு ஏற்படாதபடி இறைவனின் கை அழகிய வேல் காப்பதாக ! (புலியின் பூச்சி - சிலந்தி ) ☘

☘#சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15☘

☘விளக்கம்☘ :

☘நீரிலே வாழும் வன்மைவாய்ந்த முதலை , நீண்ட கொம்பையுடைய திருக்கைமீன் , மற்றுமுள்ள நீர்வாழ் உயிர்கள் , நிலத்திலும் , நீரிலும் பெரிய துன்பத்தைத் தருவதற்கே பிறந்துள்ள மற்ற உயிர்கள் ஆகியவற்றால் நான் துன்பம் அடையாத வண்ணம் , அவ்வக் காலங்களில் , உறுதியுடன் இருந்து வேல் காப்பதாக ! தீப்பொறிகளின் மூலம் அமையப் பெற்ற உடலை உடைய முருகப்பெருமானின் கூறியவேல் காப்பதாக ! (பாவகி - அக்கினி ) ☘

☘ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல்
காக்க. 16☘

☘விளக்கம் ☘:

☘முருகபப்பெருமானின் அழகிய திருக்கை வேல் ஒன்பது கிரகங்களால் உண்டாகும் துன்பத்திலிருந்து என்னைக் காப்பதாக ! பூப்போன்ற கண்களினின்று உண்டாகும் நோய்கள் , பல்குத்தல் நோய் , மூக்கு நோய்கள் , திமிர் நோய் , வாதக் கால்நோய் , இரத்த சோகை நோய் , தலைவலி , தலைக்கு அடியில் உள்ள காது நோய் முதலியவை என்னை நெருங்கித் துன்புறுத்தாத வண்ணம் பன்னிரண்டு தோள்களையுடைய முருகப்பெருமானின் வெற்றி வாய்ந்த வேல் காப்பதாக ! (அம்பரியன் - ஊர்தியுடையவன் , சுமவிழி - மலர் போன்ற கண் )☘

☘டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17☘

☘விளக்கம்☘ :

☘உடுக்கையின் அடிபோல் துன்பப்படுத்தும் தலையிடி , கண்டமாலை , குமுறி மிக்க வலி உண்டாக்கும் சிலந்திப்புண் , வயிற்றுவலி , குடல் நோய் , கபநோய் , காசநோய் , நிமிர முடியாத வண்ணம் படுக்கையில் வருத்தும் வெப்பு நோய் , நீர் கோத்த மேக நோய்கள் என்னும் இவை எல்லாம் என்னை அடையாதவண்ணம் கிரவுஞ்ச மலையைப் பிளந்த முருகப்பெருமானின் கைவேல் காத்தருளுக . ☘

☘இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல்
 காக்க. 18☘

☘விளக்கம் ☘:

☘கட்டுப்பாடின்றிப் பெருகும் பித்த எரிச்சல் , பெரிய சுர நோய்கள் , கைகால்கள் , முடங்கும் படி செய்யும் தொழுநோய் , வெண்மையான மூலமுளை , பசியின்மை , கணப்போதில் இறப்பை ஏற்படுத்தும் சன்னிவகைகள் என்று சொல்லப்படும் இந்த நோய்க் கூட்டம் என்னை அடிப்படுத்தி ஆளாதபடி பெருஞ்சத்தி வேல் காப்பதாக .☘

☘தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல்
காக்க. 19☘

☘விளக்கம் ☘:

☘நாவரட்சியை உண்டாக்கும் நோய் , வாத நோய் , சீதள நோய் , உணவில் வெறுப்பு , உடலை வற்றிடச் செய்கின்ற மூலச்சூடு , இளைப்பு , வருத்தும் விக்கல் நோய் , துன்பப்படுத்தும்  பேதி , சீழ் உண்டாக்கும் நோய் , வாதத்தால் உண்டாகும் பீஜ நோய்கள் , சூலை நோய் ஆகிய எவையும் என்னிடம் வராமல் எம்பெருமானின் திண்மையான வேல் என்னைக் காப்பதாக . ☘

☘நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல்
காக்க. 20☘

☘விளக்கம்☘ :

☘நமைச்சல் உண்டாக்கும் கிரந்தி நோய் , உடலில் வீக்கத்தை விளைவிக்கும் பாண்டு நோய் , சோர்வை உண்டாக்கும் கருமை வெண்மை நிறமாக வரும் பலவிதமான தொழுநோய்கள் , வாந்தி , இமைப்பதற்கு முன் உண்டாகும் இழுப்பு நோயுடன் விம்மிக் குத்தி வலியை ஏற்படுத்தும் பவுத்திரம் முதலிய நோய்கள் ஆகியவை இமைப்பொழுதும் என்னை வந்து தாக்காத வண்ணம் இறைவரின் அருள்வேல் காப்பதாகுக.  (பகந்தராதி - பவுத்திர நோய்
முதலியன )☘

☘பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல்
காக்க ! 21☘

☘விளக்கம்☘ :

☘சினந்து பற்களைக் கடித்து மீசையானது படபட என்றே துடிக்கக் கல்லைக் காட்டிலும் வன்மை உடைய மனத்தைக் காட்டிக் கண்களை உருட்டிப் பார்த்து , இருளைவிட மிகவும் கரிய மேனியுடைய இயமதூதர் என்னிடம் வந்தாலும் , விரைவில் தாரகாசுரனை வென்ற இறைவனின் ஓம் ஐம் ரீம் என்ற மூன்று இயல்புடைய வேல் காப்பதாக ! (ஓம் - காப்பு , ஐம் - தலைமை , ரீம் - உக்கிரம் )☘

☘மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க
காக்க. 22☘

☘விளக்கம்☘ :

தரையிலும் , மரத்தின்மேலும் , மலையிலும் , தீயின் மீதும் , குளிர்ச்சி மிக்க நீரிலும் , எறிச் செலுத்தும் ஊர்திகளிலும் , வானத்திலும் , பாதளக் குகைகளிலும் , பிற எந்த இடத்திலும் , என்னை நெருங்கி வந்து அருள் நிறைந்த சஷ்டிநாதன் திருக்கை வேலானது காப்பதாக ! காப்பதாக ! ☘

☘யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல்
காக்க. 23☘

☘விளக்கம்☘ :

☘'ய' என்ற எழுத்தைப்போல் விளங்கும் மூன்று தலையுடைய சூலத்தை ஏந்தும் மணம் வீசும் திருபுயங்களைக் கொண்ட முருகப்பெருமானின் திருக்கைவேல் என் முன்பக்கத்தில் காப்பதாக ! 'அ' என்னும் எழுத்தை முதலாகக் கொண்ட உயிர் எழுத்துக்கள் போல் பன்னிரண்டு கண்ணுடைய பரமனின் வேல் என் பின்பக்கத்திலிருந்து காப்பதாக !  'ச' என்ற எழுத்துடன் கூடி ஆறு எழுத்தையும் தன் பெயராய்க்  கொண்ட பெருமானின் கைவேல் என் நடுப்பக்கத்தைக் காப்பதாக . சிகரம் போல் விளங்கும் தெய்வ முடியைப் பூண்ட இறைவரின் விளங்கும் தலைமையுடைய வேல் என்னை மேலும் கீழும் காப்பதாக ! ☘

☘ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல்
காக்க. 24☘

☘விளக்கம் ☘:

☘இனிய சொல்லைப் பேசும் தேவயானையின் கணவனாரும் வள்ளியின் கணவனாருமான முருகப்பெருமானின் செம்மையான வெற்றி வேல் கிழக்குத் திக்கில் ஆவலுடன் இருந்து காப்பதாக ! அக்கினியின் ஆட்சி மிகுந்த தென்கிழக்குத் திசையில் ஞானவீரன் வேல் காப்பதாக . குறைவில்லாத கதிர்காமத்தில் வீற்றிருப்பவனின் பகைவரை அழிக்கும் வேல் தென்திசையிலே இருந்து என்னைக் காப்பதாக . ☘

☘லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25☘

☘விளக்கம்☘ :

'ல' என்ற எழுத்தின் வடிவைப்போல் வளைந்து ஆரவாரம் செய்த காளிங்கன் என்ற பெரிய பாம்பின் நல்ல உடலானது நெளியுமாறு அதன் மேல் நின்று அதன் வன்மை அழியுமாறு நடனமாடிக் குடைந்த சக்கரத்தை உடைய திருமாலின் மருமகன் கையில் உள்ள வேல் , வழிபாடு செய்து கொண்டிருக்கும் என்னைத் தென்மேற்குத் திசையில் இருந்து காப்பதாக ! போர் வேல் மேற்குத் திசையில் என்னைக் காப்பதாக ! வாயுவின் திசையான வடமேற்குத் திசையில் இடையூறு ஏற்படாத வண்ணம் குகப்பெருமானின் திருக்கைவேல் காப்பதாக ! ☘

☘வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல்
காக்க. 26☘

☘விளக்கம்☘ :

வடக்கில் சிவபெருமானின் மைந்தனின் அருள்வடிவான செல்வ வேல் காப்பதாக . காளை ஊர்தியுடைய சிவபெருமானின் வடகீழ்த் திசையில் பிரணவ மந்திரப் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் வேல் காக்க . நடக்கின்ற போதும் , அமர்ந்து இருக்கும்போதும் , பேசும்போதும் , குனிந்து நிமிரும்போதும் , தரையில் படுத்திருக்கும்போதும் உறங்கும்போதும் கிரவுஞ்ச மலையைத் துளைத்த முருகப்பெருமானின் வேல் காப்பதாக .  ☘

☘இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும்
காக்க. 27☘

☘விளக்கம்☘ :

☘இழந்துபோகாத பேரின்பப் பெருவாழ்வை அருளுகின்ற முத்தையனின் திருக்கை வேல், உதவும் நல்ல உணவை நான் உண்ணும் போதும் , விருப்பத்துக்குரிய  விளையாட்டை விளையாடும்போதும் , பழைய தேவர்கள் வணங்கும் திருவடிகளைத் தொழுது உள்ளத்தை ஒன்றுபடுத்திக் கொணரும்போதும் அருட்குணத்துடன் இருந்து காப்பதாக ! உறுதியுடன் இருந்து அம்முத்தையனார் மயிலும் உதவுவதாக ! ☘

☘இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28☘

☘விளக்கம் ☘:

☘பாலப்பருவத்திலும் வாலிபப்பருவத்திலும் நரை முதலியவை முதிர்ந்து வரும் முதுமைப் பருவத்திலும் அருள் வளரும் ஆறுமுகமுடைய சிவனார் என் முன்பு எழுந்தருளி என்றும் காப்பாராக  ! கதிரவன் தோன்றும் காலையிலும் முற்பகலிலும் ஓம் என்பதன் பொருளான சிவசுவாமி காப்பாராக  . தெளிந்த நடுப்பகல், பிற்பகல் முதலிய காலங்களில் சிவகுருநாதன் காப்பாராக  !☘

☘இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29☘

☘விளக்கம்☘ :

இறகையுடைய சேவலுக்கும் மயிலுக்கும் தலைவன் முருகப்பெருமான் என்னை முன் இரவில் காப்பாராக  ! ஆற்றல் உடைய சூரபன் மனின் பகைவனான பெருமான் விளங்கும் பின் இரவில் காப்பாராக  ! தேன் பொருந்திய தாமரை போன்ற திருவடியை உடைய சிலம்பணிந்த இறைவன் நள்ளிரவில் என்னைக் காப்பாராக  ! வேதங்கள் துதிக்கும்படியான இளையவனான முருகன் மாற்றம் ஏதும் உண்டாகாத வண்ணம் எக்காலத்துக்கும் காப்பாராக  ! காப்பாராக  !☘

☘இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க
வந்தே. 30☘

☘விளக்கம் :☘

'நீ கூடி வாழத்தக்க இனம்' என அடியவருடன் என்னை கூட்டி வைக்கும் செட்டியான முருகன் என்னை காப்பாராக  ! நான் தனிமையில் இருக்கும்போதும் கூட்டத்தில் இருக்கும்போதும் சரவணபவன் என்னைக் காப்பாராக  ! சிறந்த கந்தர் அநுபூதி என்ற நூலைப் பாடியருளிய அருணகிரி நாதரை ஆட்கொண்ட முருகன் காப்பாராக  ! இந்தச் 'சண்முக கவசம்' என்ற நூலை மகிழ்வுடன் பாடிய 'குமரகுருதாசன்'  என்ற என்னுடைய இறைவனான ஆறுமுகப்பெருமான் அருளுடன் வந்து என்னைக் காப்பாராக  !

☘#Thanks  : kalaikumarBlogger.☘

☘#தொகுப்பு  : #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன்.☘

    ☘*ஓம் முருகா சரணம் *☘

சண்முக_கவச_ #மகிமை!☘

☘#சண்முக_கவச_
#மகிமை!☘

இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம்.
இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய், பாடங்களாய் மனிதர்களை உயர்த்தும் படிக்கட்டுகளாய் மிளிர்கின்றன.
சைவத்தில் உடற்பிணி கண்ட தருமசேனர் தமது தாய் சமயமாம் சைவத்திற்கு திரும்பி “கூற்றாயினவாறு”  என்னும் பதிகம் பாடி தமது சூளை நோய் நீங்க பெற்ற வரலாறு நமக்கு தெரியும். இழந்த கண்களை பெறுவதற்காக பல ஸ்தலங்களைப் பாடி காஞ்சியையும், திரு ஆருரை யும் பாடி பலன் பெற்றார் சுந்தரமூர்த்தி நாயனார். அந்த வகையில் பல ஆண்டுகட்கு முன்னால் “சஷ்டி கவசம்” என்ற மந்திர நூலை இந்த உலகிற்கு நல்கினார் தேவராய சுவாமிகள்.
ஆறுபடை வீடுகளில் அமர்ந்து ஆறு ஆதாரங் களில் நிறைந்து ஆட்சி செய்யும் நாயகனாக, அழகனாக, குழகனாக விளங்கும் முருகப்பெரு மானை வேண்டி ஆறு கவசங்களை ஆறுபடை வீடுகளுக்கு தந்தருளினார் தேவராய சுவாமிகள்.
இமயம் முதல் குமரி வரை ஏன் கடல் கடந்த நாடுகளிலும் கூட தேவராய சுவாமி களின் சஷ்டி கவசம் பாராயணம் செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எங்கே ஷஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறதோ. அங்கே ஷஷ்டி நாதன் சண்முகநாதன். சற்குருநாதனாக வந்து அருள் புரிவான்.
ஷஷ்டி கவசத்தின் மேன்மையை உணர்ந்த பாம்பன் சுவாமிகள் ஆறுபடை விட்டு சஷ்டி கவசத்தையும் முப்பத்தி ஆறு முறை இடைவிடாது ஓதி ஜபித்து வந்தார். சஷ்டி கவசத்தின் முழுபலனையும் முருக பக்தர்கள் எளிய முறையிலே பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்து “சண்முக கவசம்” என்னும் மா மந்திர நூலை அருளி செய்தார்.
ஆம்! சஷ்டி கவசம் ஆறு படை வீட்டு பாடல்களை யும் 36 முறை படிப்பதற்கு குறைந்த பட்சம் 1 மணி நேரம் ஆகும். ஆனால்  நம் போன்றோர் எளிய முறையில் பாராயணம் செய்வதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முக கவசத்தை பாராயணம் செய்வதற்கு மிக மிக குறைந்த நேரமே ஆகும்.
எவர் ஒருவர் சண்முக கவசத்தை முறையாக ஆறுமுறை பாராயணம் செய்கிறாரோ அவர் உடற்பிணி நீங்கி உளம் களிப்பது உறுதி. எனவே தான் குருநாதராகிய  நமது ‘பாம்பன் சுவாமிகள்’ என்னை ஆதரித்து அருள் பரம ரகசிய சக்தி எனை நம்பினாரை ஆதரியாது நிற்குமோ” ஐயம் வேண்டாம். என்று அருளிச் செய்தார்.
இத்தகைய மகிமை வாய்ந்த சண்முக கவசத்தை பற்றி பாம்பன் சுவாமிகள் குறிப் பிடுகையில் “பரிவிற் பெரியோய்” நீ, பாராய ணம் செய்கின்ற “சண்முக கவசம்” ஒன்றே உன்னை அத்தீவிரகதியில் சேர்க்கும் என்று சுப்பிரமணிய ஜோதிடருக்கு அருளினார்.
போர்க்காலங்களில் தம்மை காத்துக் கொள்வதற்காக வீரர்கள் இரும்பு கவசம் அணிந்து கொள்வார்கள். அது போல இந்த உலக வாழ்க்கையாகிய போரை எதிர்கொள் வதற்கு நாமும் இந்த சண்முக கவசம் அணி வோம். அதாவது பாராயணம் செய்வோம்.
இந்த சண்முக கவச பாராயணம் பேரழிவி லிருந்து பெரும் இன்னலிருந்து கொடிய துன்பத்திலிருந்து தீராதப் பிணியிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் தாய். எனவேதான் “சண்முக கவசமின்றி தரணியில்  மந்திரம் இல்லை” என்பார் உண்மை உணர்ந்த பெரியோர்கள்.
சண்முக கவசம் பாராயணம் செய்கின்ற போது பக்தி சிரத்தையுடன் பன்னிருகை பரமன் பாத மலர்களை பணிந்து பாராயணம் செய்தல் வேண்டும் சுவாமிகள் அருளியது போலவே பாடல்களை ஓதுதல் நலம் பயக்கும். சீர்களை பிரித்தோ, கூட்டியோ ஓதுதலை தவிர்ப்பது நலம். சண்முக கவசம் ராகத்துடன் பாடப்படுவதை தவிர்த்தல் நலம். ஈரேழு பதிநான்கு லோகங்களையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருளுகின்ற குமார பரமேஸ்வரை நமது குறைகள் தீர்க்க, குற்றம் ஒழிய, குணமடைய, நன்மை பெருக வேண்டும். பாவத்திலே ஓதுதல் வேண்டும்.
இந்த முறையில் ஓதி, நூலாசிரியராக விளங்கக்கூடிய பாம்பன் சுவாமிகளின் முறிந்த கால் எலும்பை இணைத்தற்கு உதவினர்.

சண்முகக் கவசத்தின் மகிமை
முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;
பாம்பன்சுவாமிகள்,
சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.
தமிழில் இருக்கும் #உயிர்_எழுத்துக்கள் 12 ஐயும்,#மெய்_எழுத்துக்கள் 18 ஐயும்,#முதல்_எழுத்தாகக்_கொண்டு 30 #பாடல்களுடன்_பாடப்பட்டது_சண்முக_கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

Friday, 2 November 2018

ஸ்ரீ_ஸ்துதி

☘#ஸ்ரீ_ஸ்துதி


☘#ஸ்ரீ_வேதாந்த_தேசிகர்_அருளியது ...☘

1. ☘ஸ்ரீமான் வேங்கடநா தார்ய: கவிதார்க்க கேஸரீ
வேதாந்தாசார்யவர்யே மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி:
மாநா தீதப்ரதி தவிபவாம் மங்களம் மங்களானாம்
வக்ஷிபிடீம் மதுவிஜயினோ புஷயந்தீம் ஸ்வாகாந்த்யா
ப்ரத்ய க்ஷõனுச்சவிக மஹிம ப்ராத்தனீனாம் ப்ராஜானாம்
ச்ரயோமூர்த்திம் ச்ரியமசரணஸ்த்வாம் சரண்யாம்ப்ரபத்யே☘

2. ☘ஆவிர்பாவ கலசஜல தாவத்ரே வாபி யஸ்யாஹ
ஸ்தானம் யஸ்யாஸ் ஸரஸிஜவநம் விஷ்ணுவக்ஷஸ்தலம்வா
பூமா யஸ்யா புவனமகிலம் தேவி திவ்யம் பதம் வா
ஸ்தோகப்ரக்ஞை ரநவதிகுணா ஸ்தூயஸேஸாதகம்த்வம்☘

3. ☘ஸ்தோதவ்யத்வம் திசதி பவதீ தேஹிபி-ஸ்தூயமானா
தாமேவ த்வாமநிதர கதி: ஸ்தோதுமாசம் ஸமாநஹ
ஸித்தாரம்பஸ் ஸகலபுவனச்லாக நீயோ பவேயம்
ஸேவாபேக்ஷõ தவ சரணயோ: ச்ரயஸே கஸ்யநஸ்யாத்☘

4. ☘யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹன்யமீஷாம்
ஜன்மஸ்தேம ப்ரளயரசனா ஜங்கமாஜங்கமானாம்
தக்கல்யாண் கிமபியமிநாமேக லக்ஷ்யம் ஸமாதௌ
பூர்ணம் தேஜஸ் ஸ்புரதி பவதீபாலாக்ஷரஸாங்கம்☘

5.நிஷ்ப்ரத்யூஹப்ரணயகடிதம் தம் தேவி நித்யாநபாயம்
விஷ்ணுஸ்த்வம் சேத்ய நவதிகுணம் தவந்த்வமன் யோன்ய லக்ஷ்யம்
சேஷச்சித்தம் விமலனஸாம் மௌளயச்ச ச்ருதீநாம்
ஸம்பத்யந்தே விஹரணவிதௌ யஸ்ய சய்யா விசேஷாஹ☘

6. ☘உச்தேச்யத்வம் ஜனனி பஜதோருஜ்ஜிதோபாதி
கந்தம்
ப்ரத்யக்ருபே ஹவிஷி யுவயோரேக கோஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ்தவச நிகமைர் நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயன் மாநஸம்நஹ☘

7. ☘பச்யந்தீஷுக்ருதீஷு பரிதஸ் ஸூரிப்ருந்தேந ஸார்த்தம்
மத்யேக்ருத்ய த்ரிகுணபலகம் நிர்மிதஸ்தானபேதம்
விச்வாதீ சப்ரணயினி ஸதா விப்ரமத்யூதவ்ருத்தௌ
ப்ரம்மேசாத்யா தததி யுவயோரக்ஷசார ப்ரசாரம்☘

8. ☘அஸ்யேசாநா த்வமஸி ஜகதஸ் ஸம்ச்ரயந் தீ முகுந்தம்
லக்ஷ்மி பத்மா ஜலதித நாயா விஷ்ணுபத்நீந்திரேதி
யந்தாமணி ச்ருதிபரிபணாந்யேவ மாவர் தயந்தஹ
நாவர்தந்தே துரிதபவனப்ரேரிதே ஜன்மசக்ரே☘

9. ☘த்வாமேவாஹு கதிசிதபரே த்வத்பிரியம் லோகநாதம்
கிம் தைரந்த கல ஹமலிநை ஹி கிஞ்சிதுத் தீர்யமக்நைஹி
த்வத்ஸம்ப்ரீத்யை விஹரதி ஹரௌ ஸம்முகீநாம் ச்ருதீநாம்
பாவாரூடௌ பகவதி யுவாம் தைவதம் தம்பதீ நஹ☘

10. ☘ஆபந்நார்த்திப் ப்ரசமன விதௌ பத்ததீக்ஷஸ்ய விஷ்ணோஹோ
ஆசக்யுஸ்த்வாம் ப்ரியஸஹசரீ மைகமத்யோப பந்நாம்
பராதுர் பாவைரபி ஸமதநு ப்ராத்வமந்வீயஸே த்வம்
தூரோக்ஷிப்தைரிவ மதுரதா துக்தராசேஸ் தரங்கை ஹி☘

11. ☘தத்தே சோபாம் ஹரிமரகதே தாவகீ மூர்த்திராத்யா
தந்வீ துங்கஸ் தநபரநதா தப்த ஜாம்பூ நதாபா
யஸ்யாம் கச்சந்யுதய விலயைர் நித்யமாநந்த ஸிந்தௌ
இச்சா வேகொல்லஸிதல ஹரீ விப்ரமம்
 வ்யக்தயஸ்தே☘

12. ☘ஆஸம்ஸாரம் விததமகிலம் வாங்மயம் யத்விபூதிர்
யத்ப் ரூபங்காத் குஸுமதனுஷ கிங்கரோ மேருதன்வா
யஸ்யாம் நித்யம் நயநசதகைரேகலக்ஷ்யே மஹேந்த்ரஹ
பத்மே தாஸாம் பரிணதிரஸெள பாவலேசைஸ்
த்வதீயைஹீ☘

13. ☘அக்ரேபர்த்துஸ் ஸரஸிஜமயே பத்ரபீடெ நிஷண்ணா
மம்போரா சேரதிகத ஸுதா ஸம்ப்லவாதுத்தி த்வாம்
புஷ்பாஸார ஸ்தகதிபுவனை புஷ்கலா வர்த்தகாத்யை
கல்ப்தாரம்பா: கனக கலசைரப்யஷிஞ்சன் கஜேந்திரஹ☘

14. ☘ஆலோக்ய த்வாமமிருத ஸஹஜே விஷ்ணுலக்ஷஸ் தலஸ்தாம்
சாபாக்ராந்தாஸ் சரணமகமந் ஸாவரோதாஸ் ஸுரேந்திராஹ
லப்த்வா பூயஸ்திரிபுவனமிதம் லக்ஷிதம் த்வத்கடாøக்ஷஹி
ஸர்வாகாரஸ்திர ஸமுதாயம் ஸம்பதம் நிர்விசந்தி☘

15. ☘ஆர்த்தி த்ராணவ்ரதி பிரமிரு தாஸாரநீலாம் புவாஹைஹி
ரம்போஜா நாமுஷஸி மிஷதாமந்தரங்கை ரபாங்கைஹி
யஸ்யாம் யஸ்யாம் திசி விஹாதே தேவி த்ருஷ்டிஸ்த் வதீயா
தஸ்யாம் தஸ்யாமஹமஹ மிகாம் தந்வதே ஸம்பதோகாஹ☘

16. ☘யோகாரம்ப த்வரித மனஸோ யுஷ்மதை காந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹயே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதிக்ருஹா தம்பராதம் புதோர்வா
தாரா நிர்யாந்த்யதிகமதிகம் வாஞ்சிதா வாம்
வஸூநாம்☘

17. ☘ச்ரேயஸ்காமா கமலநிலயே சித்ரமாம்நாய வாசாம்
சூடாபீடம் தவ பதயுகம் சேதஸா தாரயந்தஹை
சத்ரச்சாயா ஸுபகசிரஸ்ச் காமரஸ்மேர பார்ச்வாஹ
ச்லாகா சப்த ச்ரவண முதிதாஹ ஸ்ரக்விண ஸஞ்சரந்தி☘

18.☘ ஊரிகர்த்தும் குசலமகிலம் ஜேதுமாநீ நராதீந்
தூரீகர்த்தும் துரிதநிவஹம் த்யக்து மாத்யாம வித்யாம்
அம்ப ஸ்தம்பாவதிக ஜநந க்ராம ஸீமாந்தரேகாம்
ஆலம்பந்தே விமலமனஸோ விஷ்ணுகாந்தே தயாம்தே☘

19. ☘ஜாதாகாங்க்ஷõ ஜநதி யுவயோ ரேக ஸேவாதிகாரே
மாயாலீடம் விபவமகிலம் மன்யமா நாஸ் த்ருணாய
ப்ரீத்யை விஷ்ணோஸ்தவ ச க்ருதி நப்ரீமந்தோ பஜந்தே
வேலா பங்க ப்ரசமனபலம் வைதிகம் தர்மேஸேதும்☘

20. ☘ஸேவே தேவி த்ரிதசமஹிளா மௌனி மாலார்சிதம்தே
ஸித்தி÷க்ஷத்ரம் சமித விபதாம் ஸம்பதாம் பாதபத்மம்
யஸ்மிந் நீஷந் நமித சிரஸோ யாபயித்வா சரீரம்
வர் திஷ்யந்தே விதமஸி பாத வாஸுதேவஸ்யதன்
யாஹ☘

21. ☘ஸாநுப் ராஸப்ரகடித தயை ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தைஹீ
அம்ப ஸ்நிக்தைரமிருதலஹரீலப்த ஸ ப்ரம்ஹசர்யைஹி
கர்மே தாபத்ரயவிரசிதே காடதப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சந்ய க்லபிதநகை ராத்ரயேதா கடாக்ஷஹி☘

22. ☘ஸம்பத்யந்தே பவயதமீபாந வஸ்த்வத் ப்ரஸாதாத்
பாவாஸ்ஸர்வே பகவதி ஹரௌ பக்தி முத்வேலயந்தஹ
யாசே கிம் த்வாமஹமஹி யதஸ் சீதலோதாரசீலா
பூயோ பூயோ திசஸி மஹதாம் மங்களாநாம் ப்ரபந்தாந்☘

23. ☘மாதாதேவி த்வமணி பகவான் வாஸுதேவ பிதா மே
ஜாதஸ் ஸோ ஹம்ஜநநி யுவயோரே கலக்ஷ்யம் தயாயாஹ
தத்தோ யுஷ்மத் பரிஜநதயா தேசிகரப்யதஸ் த்வம்
கிம் தே பூய பிரியமிதி கில ஸமேரவக்த்ரா விபாஸி☘

24. ☘கல்யாணானாமவிகல நிதி காபி காருண்யாஸீமா
நித்யா மோதா நிகமவசஸாம் மௌலி மத்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயிநஸ் ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷாதேவீ ஸகலபுவந ப்ரார்த்தநா காமதேநுஹு☘

25. ☘உபசித குருபக்தே ருத்திதம் வேங்கடேசாத்
கலிகலுஷ நிவ்ருத்யை கல்பமானம் ப்ரஜா நாம்
ஸரஸிஜ விலயாயாஸ் ஸ்தோத்ர மேதத் படந்தஹ
ஸகலகுசந்ஸீமாஸ ஸார்வபௌமா பவந்தி.☘

#Courtesy  : #Latha_Venkateshwaran.
 

#நன்றி  :  #தினமலர்

☘புருஷ சூக்தம்☘:

☘புருஷ சூக்தம்☘:

#புருஷ_சூக்தம்_தமிழ்_பொருளுடன்

By செந்தமிழன் சீராமன் -

ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம்

ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .

புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி

முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் .

ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி

இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது .

த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன: ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி

பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார்.

தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர:

அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .
ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .
பிறகு அவர் பூமியைப் படைத்தார் .அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் .

யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோஅஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:

முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர். எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் .

ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும்

இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின . தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள்

தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத: தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்சயே

முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்ஸபசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார்

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே சந்தாக்ம் ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று .

தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய

அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின .

யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே

பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?
அவர் முகம் எதுவாயிற்று ?
கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?
தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ?

ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத

அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .
கைகள் சத்ரியன் ஆயிற்று .
தொடைகள் வைசியன் ஆயிற்று .
அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் .

சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத

மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது .

நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்ததபத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன்

தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன .

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே ஸர்வாணி ரூபாணி
விசித்ய தீர: நாமானிக்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே

எல்லா உருவங்களையும் தோற்றுவித்து
,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,

மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான்
அறிவேன் .

தாதா புரஸ்தாத்யமுதாஜஹார சக்ர: ப்ரவித்வான் ப்ரதிசச்சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா அயனாய வித்யதே

எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,

அவரை நான் இவ்வாறு அறிவபன்,

இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .

மோட்சத்திற்கு வேறு வழி இல்லை .

யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன் தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:

தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .
அவை முதன்மையான தர்மகள் ஆயின .
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப் பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் .

அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி தஸ்ய த்வஷ்ட்டா விததத்ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே

தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .

பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் . இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் . பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று .

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய

மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான் அறிவேன் .

அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .

முக்திக்கு வேறு வழி இல்லை .

ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ:

இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள்

யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோயோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே

யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,ஹெவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களக்கு முன்பே தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் .

ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன் யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே

பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அடாஹிப் பற்றி பின் வருமாறு கூறினார்கள் .

“யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம்

நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய லக்ஷ்மி தேவியும் உமது மனைவியர் .

பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .

அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் .

இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண

பரம் பொருளே !

நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .

இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,

இகத்திலும் , பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்
ஓம் தத் சத் !

Courtesy  : Latha venkateshwaran.

Thanks :  http://Dhinasari.com

கருட கமன தவ

மஹா விஷ்ணு க்ரிதி
(ஜகத் குரு பாரதிதீர்த்த ஸ்வாமிஜி,சிரிங்கேரி)


கருட கமன தவசரணகமல மிஹ, மனஸி லஸதுமம நித்யம் |மம தாபம பாகுரு தேவ, மமபாபம பாகுரு தேவ ||

ஜலஜ நயன விதிநமுசிஹரண முக, விபூத வினுதபத பத்ம |
மம தாபம பாகுரு தேவ, மமபாபம பாகுரு தேவ ||

புஜக ஷயன பவமதனஜனக மம, ஜனன மரணபய ஹாரி |
மம தாபம பாகுரு தேவ, மமபாபம பாகுரு தேவ ||

ஷங்க சக்ர தரதுஷ்டதைத்ய ஹர, ஸர்வ லோகசரண |
மம தாபம பாகுரு தேவ, மமபாபம பாகுரு தேவ ||

அகணித குண கண,அஷரண ஷரணத, விதலிதசுரரிபு ஜால |
மம தாபம பாகுரு தேவ, மமபாபம பாகுரு தேவ ||

பக்த வர்ய்ய மிஹபூரிகருணயா, பாஹி பாரதிதீர்த்தம் |
மம தாபம பாகுரு தேவ, மமபாபம பாகுரு தேவ ||

பலன்_தரும்_ஸ்லோகங்கள்

#பலன்_தரும்_ஸ்லோகங்க

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...