#உத்தான #துவாதசி #துளசிபூஜை
#துளசி செடி வளரும் இடத்தில் #மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம்.இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும் . துர்தேவதைகள்அண்டாது .
#சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாக தான் #ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று #துளசி #இராமாயணம் கூறுகிறது .துளசி செடியை #திருமாலின் #அம்சம் என்றும் #ஸ்ரீ #புராணம் கூறும் உண்மையாகும்.#பத்ம #புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது.
பௌர்ணமி ,ஞாயிற்றுக் கிழமை ,சங்கராந்தி தினம்,நடுப்பகல் இரவு,சூரியோதயதிற்கும் பிறகு,தீட்டு எச்சல் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்து உடம்புடனும் ,குளிக்காமலும் துளசி இலை பறிக்கக் கூடாது.பறித்த துளசி வாடினாலும் மூன்று நாள்கள் வரை பரிசுத்தமாக இருக்கும்.துளசியை நிர்மால்யமாக ஒதுக்கி வைத்திருந்தாலும் அது புனிதமானது ஆகும்.பெருமாள் கோயில்கள் பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தை பிரசாதமாகப் பெறுவது மிகவும் விஷேசமாகும்.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.
#கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
துளசி பூஜை செய்ய, துளசிச் செடியை பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை.
அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது.
பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம் ஆன நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம்.
துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.
துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.
துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். .
அவல் பாயசம் இனிப்புப் பண்டங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. . மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.
கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம். இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.
பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.
மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

No comments:
Post a Comment