Wednesday, 31 October 2018

உத்தான #துவாதசி #துளசிபூஜை

#உத்தான #துவாதசி #துளசிபூஜை

#துளசி செடி வளரும் இடத்தில் #மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும்  வாசம் செய்வதாக ஐதீகம்.இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும் . துர்தேவதைகள்அண்டாது .
#சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாக தான் #ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று #துளசி #இராமாயணம் கூறுகிறது .துளசி செடியை #திருமாலின்  #அம்சம் என்றும் #ஸ்ரீ #புராணம் கூறும் உண்மையாகும்.#பத்ம #புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது.

பௌர்ணமி ,ஞாயிற்றுக் கிழமை ,சங்கராந்தி தினம்,நடுப்பகல் இரவு,சூரியோதயதிற்கும் பிறகு,தீட்டு எச்சல் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்து உடம்புடனும் ,குளிக்காமலும் துளசி இலை பறிக்கக் கூடாது.பறித்த துளசி வாடினாலும் மூன்று நாள்கள் வரை பரிசுத்தமாக இருக்கும்.துளசியை நிர்மால்யமாக ஒதுக்கி வைத்திருந்தாலும் அது புனிதமானது ஆகும்.பெருமாள் கோயில்கள் பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தை பிரசாதமாகப் பெறுவது மிகவும் விஷேசமாகும்.

 துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

 கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.

#கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

துளசி பூஜை செய்ய, துளசிச் செடியை பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை.
அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது.

பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம் ஆன நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம்.

 துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.

துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.

காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள். 
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். .

அவல் பாயசம் இனிப்புப் பண்டங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது.  . மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.

கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.

மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

Sunday, 28 October 2018

ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்

☘#ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்

--
☘#ஸ்ரீ_கணபதி_த்யானம்☘
--
ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
--
அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய,
அகோர ருஷி:   அனுஷ்டுப் சந்த:
ஸங்கர்ஷண - மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா
நம: ஸிவாயேதி பீஜம்:
ஸிவதராயேதி ஸக்தி:  மஹா-தேவாயேதி கீலகம்:   ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:
--
#சாந்தி_பாடம்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,
ஸெளமன ஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,
யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,
தர்தா ச மே, க்ஷேமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே,

மஹஸ்ச மே, ஸம்விச்ச மே,  ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே,

யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே,  தீர்காயுத்வஞ்ச மே,
நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: 
ஓம் நமோ பகவதே ருத்ராய
ஓம் நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம:
நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:

யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு:
ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா

யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோர பாப காஸினீ
தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி
யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே
ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிஹிம் ஸீ: புருஷம் ஜகது

ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி
யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்மகம் ஸுமனா அஸது

அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷகு
அஹீஸ்ச ஸர்வாAAன் ஜம்பயன்த்-ஸர்வாAAஸ்ச யாது தான்ய:
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:

யே சேமாஹும் ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷாஹும்  ஹேட ஈமஹே

அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:
உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:

உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:
நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷேAA

அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்

யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
அவதத்ய தனுஸ்த்வஹம் ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே
நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ
விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ
பாணவாஹம் உத

அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:
யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:

தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ
நமஸ்தே அஸ்த்வாயு தாயானா ததாய த்ருஷ்ணவேAA
உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே
பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:
அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்
சம்பவே நம:
நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய
ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:
இரண்டாவது அனுவாகம்
நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ
நமோ வ்ரு க்ஷேப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ

நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ
நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ

நமோ ஹரிகேஸாயோ பவீ திநே புஷ்டானாம் பதயே நமோ
நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ
நமோ ருத்ராயா ததாவிநே க்ஷேத்ராணாம் பதயே நமோ
நமோ ஸூதாயா ஹந்த்யாய வனானாம் பதயே நமோ

நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம் பதயே நமோ
நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ
நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ
நம: உச்சைர் கோஷாயா க்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ
நம: க்ருத்ஸ்ன வீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:
மூன்றாவது அனுவாகம்
நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதி நீனாம் பதயே நமோ
நம: ககுபாய நிஷங்கிணே AA ஸ்தேநானாம் பதயே நமோ

நமோ நிஷங்கிண இஷுதி மதே தஸ்கராணாம் பதயே நமோ
நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ

நமோ நிசேரவே பரிசராயா ரண்யானாம் பதயே நமோ
நம: ஸ்ரு காவிப்யோ ஜிகாஹும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ
நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ
நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ

நம: இஷுமத்ப்யோ தன் வாவிப்யஸ்ச வோ நமோ
நம ஆதன்வானேப்ய: ப்ரதித தானேப்யஸ்ச வோ நமோ
நம ஆயச்சத்ப்யோ விஸ்ரு ஜத்ப்யஸ்ச வோ நமோ
நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ

நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ
நமஸ் ஸ்வபத்யோ ஜாக்ரத் ப்யஸ்ச வோ நமோ
நம திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ
நம: ஸபாப்ய: ஸபா பதிப்யஸ்ச வோ நமோ
நமோ அஸ்வேப்யோ ஸ்வ பதிப்யஸ்ச வோ நம:
நான்காவது அனுவாகம்
நம ஆவ்யாதினீAAப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ
நம உகணாப்யஸ்-த்ரு ஹம்தீப்யஸ்ச வோ நமோ

நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ
நமோ வ்ராதேAAப்யோ வ்ராத பதிப்யஸ்ச வோ நமோ

நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ
நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ
நமோ மஹத்ப்ய: க்ஷúல்ல கேப்யஸ்ச வோ நமோ
நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ

நமோ ரதேAAப்யோ ரதபதிப்யஸ்ச வோ நமோ
நமோ ஸேநாப்AAய: ஸேநானிப்யஸ்ச வோ
நமோ க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ
நமஸ் தக்ஷப்யோ ரதகாரேAAப்யஸ்ச வோ நமோ
நம: குலாலேப்ய: கர்மாரேAAப்யஸ்ச வோ நமோ
நம புஞ்ஜிஷ்டேAAப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ
நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ

நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ
நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:
ஐந்தாவது அனுவாகம்
நமோ பவாய ச ருத்ராய ச
நம: ஸர்வாய ச பஸுபதயே ச
நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச
நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச
நம: ஸஹஸ்ராக்ஷாய ச ஸததன்வனே ச
நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச
நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச
நமோ ஒ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச
நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச
நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச
நம ஆஸவே சாஜிராய ச
நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச
நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச
நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச
ஆறாவது அனுவாகம்
நமோ ஒ  ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாய ச
நமோ மத்யமாய சாபகல்பாய ச
நமோ ஜகன்யாய ச புத்னியாய ச
நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச
நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச
நம உர்வர்யாய ச கல்யாய ச
நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச
நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச
நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச
நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச
நம: ஸூராய சாவபிந்ததே ச
நமோ வர்மிணே ச வரூதினே ச
நமோ பில்மினே ச கவசினே ச
நமஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச
ஏழாவது அனுவாகம்
நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச
நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச
நமோ தூதாய ச ப்ரஹிதாய ச
நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச
நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச
நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச
நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச
நம: காட்யாய ச நீப்யாய ச
நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச
நமோ நாத்யாய ச வைஸந்தாய ச
நம: கூப்யாய சாவட்யாய ச
நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச
நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச
நம ஈத்ரியாய சாதப்யாய ச
நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச
நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

எட்டாவது அனுவாகம்
நம: ஸோமாய ச ருத்ராய ச
நம: தாம்ராய சாருணாய ச
நம: ஸங்காய ச பஸுபதயே ச
நம உக்ராய ச பீமாய ச
நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச
நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ
நமஸ்தாராய
நம: ஸம்பவே ச மயோபவே ச
நம: ஸங்கராய ச மயஸ்கராய ச
நம: ஸிவாய ச ஸிவதராய ச
நம: தீர்த்யாய ச கூல்யாய ச
நம: பார்யாய சாவார்யாய ச
நம: ப்ரதரணாய சோத்தரனாய ச
நம ஆதார்யாய சாலாத்யாய ச
நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச
நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச
ஒன்பதாவது அனுவாகம்
நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச
நம: கிகிம்ஸிலாய ச க்ஷயணாய ச
நம: கபர்திநே ச புலஸ்தயே ச
நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச
நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச
நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச
நமோ  ஒ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச
நம: பாகம்ஸவ்யாய ச ரஜஸ்யாய ச
நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச
நமோ லோப்யாய சோலப்யாய ச
நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச
நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச
நமோ பகுரமாணாய சாபிக்நதே ச
நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச
நமோ வ: கிரி கேப்யோ தேவானா ஹ்ம்ருதயேப்யோ
நமோ விக்ஷீண கேப்யோ,
நமோ விசின்வத் கேப்யோ
நம ஆநிர்ஹதேப்யோ
நம ஆமீவத்கேப்யஹ

பத்தவாது அனுவாகம்
த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித
ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர் மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமது
யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ
ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே AA
இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினே AA க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம்
யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்
ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே
யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ
மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம்
மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:
மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ:
வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே
ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து
ரக்ஷா ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா: AA
ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம்
ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: AA
பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: ஹோ
அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய
மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ
பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி,  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ:
யாஸ்தே ஸஹஸ்ரஹ்ம் ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஹா
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி
பதினொன்றாவது அனுவாகம்
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாAAம்
தேஷாஹும் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

அஸ்மின் மஹத்யர்ணவேAA ந்தரிக்ஷேபவா அதி
நீலக்ரீவா: ஸிதிகண்டா: AA ஸர்வா  அத: க்ஷமாசரா: ஹா

நீலக்ரீவா: ஸிதிகண்டா திவஹும் ருத்ரா உபஸ்ரிதா: ஹா
யே வ்ருக்ஷேக்ஷு ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலோஹிதா: ஹா
யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனானு

யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:

ய ஏதாவந்தஸ்ச பூயாஹ்ம் ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷாஹ்ம் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே AAந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ

தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ

த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி
எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்
த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோர் - முக்ஷீய – மாம்ருதாAAது
யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு
யோ ருத்ர விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய
யக்ஷ்வாAAமஹே ஸெளஹுமனஸாய ருத்ரம் நமோAAபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய
அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர:
அயம் மேAA விஸ்வ பேAAஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:

யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே
 தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே

ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹாAA
ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி
ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான் னேனாAAப்யாயஸ்வ; சதாசிவோம்
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ரம் சமக ப்ரச்னம்
(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை) சமகம் - முதல் அனுவாகம்
அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்
ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜே பிராகதம்
இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்
வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே,
ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே,
ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே,
ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே,

ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே,
ஸுஸ்ச மே, சித்தஞ்சம ஆதிதஞ்ச மே, வாக்ச மே,

மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே,
தக்ஷஸ்ச மே, பலஞ்சம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே,
ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே,
வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே,
பரூஹும் ஷி ச மே, ஸரீராணி ச மே

சமகம் - இரண்டாவது அனுவாகம்
செல்வச் செழிப்பு வேண்டுதல்

ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே,
பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே,

ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே,
ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே,

வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே,
ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே,
வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே,
மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே,

ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே,
வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே,

ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச மருத்தஞ்ச மருத்திஸ்ச மே,
க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே
சமகம் - மூன்றாவது அனுவாகம் - இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே,
னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,

பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே,
பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே,

÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே,
ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே,
ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே,

ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே,
பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
சமகம் - நான்காவது அனுவாகம் உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்

ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே,
க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே,

ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே,
ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே,

புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே,
பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே ,
பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே,
ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே,

யவாAAஸ்ச மே, மாஷாAAஸ்ச மே, திலாAAஸ்ச மே,
முத்காஸ்ச மே, கல்வாAAஸ்ச மே, கோதூமாAAஸ்ச மே,

மஸுராAAஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே,
ஸ்யாமாகாAAஸ்ச மே, நீவாராAAஸ்ச மே
சமகம் - ஐந்தாவது அனுவாகம்
அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே,
பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே,

ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே,
த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே,

க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே,
க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே,
க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம்,
வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே,

பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே,
கர்ம ச மே, ஸக்திஸ்ச மே,

ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே

சமகம் - ஆறாவது அனுவாகம் புற வாழ்க்கைக்கு தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே,
ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே,

பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே,
மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே,

த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே,
விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே,
மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே,
தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே,

ந்தரிக்ஷஞ்ச ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம இந்தரஸ்ச மே,
திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே,
ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே

சமகம் - ஏழாவது அனுவாகம் இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அகும்ஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாAAப்யஸ்ச மே,
திபதிஸ்ச ம உபாஹும்ஸுஸ்ச மே,

ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே,
மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே,

ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே,
வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே,
வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே, 
திக்ராஹ்யாAAஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே,

மருத்வதீயாAAஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே,
ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே,

பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே
சமகம் - எட்டாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்
இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே,
திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே,

க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே,
திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே,
பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீAAத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாAAஸ்ச மே,
பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகா காரஸ்ச மே
சமகம் - ஒன்பதாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்
அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே,
ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே,

ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே,
த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே,

யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே, ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷஆ  ச மே,
தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே,
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ர தந்தரே ச மே,
யஜ்ஞேன கல்பேதாம்
சமகம் - பத்தாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்

கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே,
த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே,

பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே,
த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே,

பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே,
வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே,
தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம்,
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம்,

வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம்,
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம்,

வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம்,
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்
சமகம் - பதினொன்றாவது அனுவாகம்
ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச ச மே, ஸப்த ச மே,
நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,

ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவிஹும் ஸதிஸ்ச மே,
த்ரயோவிஹும் ஸதிஸ்ச மே, பஞ்சவிஹும் ஸதிஸ்ச மே,

ஸப்தவிஹும் ஸதிஸ்ச மே, நவவிஹும் ஸதிஸ்ச ம ஏகத்ரிஹும்  ஸச்ச மே,
த்ரயஸ்த்ரிஹும் ஸச்ச மே சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே,
த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, விஹும் ஸதிஸ்ச மே,
சதுர்விஹும் ஸதிஸ்ச மே, ஷ்டாவிஹும் ஸதிஸ்ச மே, த்வாத்ரிஹும் ஸச்ச மே,

ஷட்த்ரிஹும் ஸச்ச மே, சத்வாரிஹும் ஸச்ச மே, சதுஸ்சத்வாரிஹும் ஸச்ச மே, ஷ்டாசத்வாரிஹும் ஸச்ச மே,
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச
சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல
இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
சஹும்ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூAAக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹிஹிகிம் ஸீர்-மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி மது மதீம்;   தேவேப்யோ வாசமுத்யாஸகும் ஸுஸ்ரூஷேண்யாAAம்;   மனுஷ்யேAAப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து

#நன்றி :  #ஸ்ரீ_ருத்ரம்_நமகம்_சமகம்_தமிழ்.

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

திதி_என்பது - பஞ்சாங்கத்தில்

#திதி_என்பது - பஞ்சாங்கத்தில்



திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

திதி   -    தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!

பிரதமை -  முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.

துவிதியை - இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.

திருதியை - கெளரிமாதாவுக்கு உகந்த நாள். சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.

சதுர்த்தி  -  நான்காம் நாள் எமன் மற்றும் விநாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.

பஞ்சமி - இது நாகதேவனின் நாள், விஷம் முறித்தல், மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.

சஷ்டி - நாளின் தெய்வம் முருகன். புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.

சப்தமி - சூரியனின் நாள். பிரயாணம் தொடங்குதல், பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மந்தமான காரியங்கள் கைகூடும்.

அஷ்டமி - இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரன் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகந்தது.

நவமி - அம்பிகையின் நாள். எதிரிகளை கொல்லுதல், வினாசம் செய்தல்.

தசமி - தர்மராஜாவின் நாள். மதவிழாக்கள், ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.

ஏகாதசி - மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.

துவாதசி - மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள். விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள், பணிகள் செய்தல்.

திரயோதசி - மன்மதனின் நாள். அன்பு செலுத்துதல், நட்பு வளர்தல்.

சதுர்த்தசி - காளியின் ஆதிக்கமுடய நாள். விஷத்தை கைய்யாளுதல், தேவதைகளை அழைத்தல்.

அமாவாசை - அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.

பௌர்ணமி - பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.

Saturday, 27 October 2018

ஸ்ரீ_விநாயகர்அஷ்டோத்தரம்

☘#ஸ்ரீ_விநாயகர்அஷ்டோத்தரம்

--
ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம :
ஓம் கெளரீபுத்ராய நம :
ஓம் கணேஸ்வரா நம :
ஓம் ஸ்கந்தாக்ராஜாய
நம : ll 5

ஓம் அவ்யாய நம :
ஓம் பூதாய நம :
ஓம் தக்ஷாய நம :
ஓம் அத்யக்ஷாய நம :
ஓம் த்விஜப்ரியாய நம : ll 10

ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம :
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம :
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யாய நம :
ஓம் ஸர்வஸித்திப்ரதாய
நம : ll 15

ஓம் ஸர்வதனயாய நம :
ஓம் ஸர்வரீப்ரியாய நம :
ஓம் ஸர்வாத்மகாய நம :
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம :
ஓம் தேவாய நம : ll 20

ஓம் அநேகார்ச்சிதாய நம :
ஓம் ஸிவாய நம :
ஓம் ஸுத்தாய நம :
ஓம் புத்திப்ரியாய நம :
ஓம் ஸாந்தாய நம : ll 25

ஓம் ப்ரஹ்மசாரிணே நம :
ஓம் கஜானனாய நம :
ஓம் த்வைமாத்ரேயாய நம :
ஓம் முனிஸ்துத்யாய நம :
ஓம் பக்தவிக்ன வினாஸனாய நம : ll 30

ஓம் ஏகதந்தாய நம :
ஓம் சதுர்பாஹவே நம :
ஓம் சதுராய நம :
ஓம் ஸக்திஸம்யுதாய நம :
ஓம் லம்போதராய நம : ll 35

ஓம் ஸூர்ப்பகர்ணாய நம :
ஓம் ஹரயே நம :
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம :
ஓம் காலாய நம :
ஓம் க்ரஹபதயே நம : ll 40

ஓம் காமிநே நம:
ஓம் ஸோமஸூர்யாகநிலோசனாயநம :
ஓம் பாஸாங்குஸதராய நம :
ஓம் சண்டாய நம :
ஓம் குணாதீதாய நம : ll 45

ஓம் நிரஞ்ஜனாய நம :
ஓம் அகல்மஷாய நம :
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம :
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம :
ஓம் பீஜபூரபலாஸக்தாய
நம : ll 50

ஓம் வரதாய நம :
ஓம் ஸாஸ்வதாய நம :
ஓம் க்ருதிநே நம :
ஓம் த்விஜயப்ரியாய நம :
ஓம் வீத பயாய நம : ll 55

ஓம் கதிநே நம :
ஓம் சக்ரிணே நம :
ஓம் இக்ஷுசாபத்தே நம :
ஓம் ஸ்ரீதாய நம :
ஓம் அஜாய நம : ll 60

ஓம் உத்பலகராய நம :
ஓம் ஸ்ரீபதயே நம :
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம :
ஓம் குலாத்ரிபேத்ரே நம :
ஓம் ஜடிலாய நம : ll 65

ஓம் கலிகல்மஷநாஸநாய நம :
ஓம் சந்த்ரசூடாமணயே நம :
ஓம் காந்தாய நம :ஓம் பரஸ்மை நம :
ஓம் ஸ்தூலதுண்டாய
 நம :ll 70

ஓம் அக்ரண்யை நம :
ஓம் தீராய நம :
ஓம் வாகீஸாய நம :
ஓம் ஸித்திதாயகாய நம :
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம :ll 75

ஓம் அவ்யக் தமூர்த்தயே நம :
ஓம் அத்புதமூர்த்திமதே நம :
ஓம் பாபஹாரிணே நம :
ஓம் ஸமாஹிதாய நம :
ஓம் ஆஸ்ரிதாய நம : ll 80

ஓம் ஸ்ரீகராய நம :
ஓம் ஸெளம்யாய நம :
ஓம் பக்தவாஞ்சிததாயகாய நம :
ஓம் ஸாந்தாய நம :
ஓம் கைவல்யஸுகதாய
 நம : ll 85

ஓம் ஸச்சி தானந்தவிக்ரஹாய நம :
ஓம் ஜ்ஞானினே நம :
ஓம் தயாயுதாய நம :
ஓம் தாந்தாய நம :
ஓம் ப்ரஹ்மத்வேஷிவிவர்ஜி தாய நம : ll 90

ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம :
ஓம் விபுதேஸ்வராய நம :
ஓம் ரமார்சிதாய நம :
ஓம் விதயே நம : ll 95

ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம :
ஓம் ஸ்தூலகண்ட்டாய நம :
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம :
ஓம் ஸாமகோஷ
ப்ரியாய நம :
ஸைலேந்த்ர தனுஜோத் ஸங்க கேலனோத்ஸுகமானாஸாய நம: ll 100

ஓம் ஸ்வலாவண்ய ஸுதாஸாரா ஜித மன்மத விக்ரஹாய நம :
ஓம் ஸமஸ்தஜகதாதாராய நம :
ஓம் மாயினே நம :
ஓம் மூஷிகவாஹனாய நம :
ஓம் ஹருஷ்டாய நம : ll 105

ஓம் துஷ்டாய நம :
ஓம் ப்ரஸன்னாத்மனே நம :
ஓம் ஸர்வஸித்திரதாயகாய நம : ll 108

ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

☘ஸ்ரீ சங்கட நாசன கணபதி த்வாதச நாம ஸ்தோத்ரம்☘

☘ஸ்ரீ சங்கட நாசன கணபதி த்வாதச நாம ஸ்தோத்ரம்☘

☘ஸ்ரீ நாரத உவாச:☘

☘ப்ரணம் ய ஸிரச தேவம் கௌரி புத்ரம் விநாயகம்
பக்தா  வாஸ ஸ்மரேந் நித்யம் ஆயுஷ் கமார்த்த சித்தயே.☘

☘ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம் 
த்ரிதீயம் க்ருஷ்ண பிங்காஷம் கஜவக்த்ரம் சதுர்தகம்.☘

☘லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டமம் விகடமேவ ச
சப்தமம் விக்நராஜம் ச தூம்ரா வர்ணம்
ததாஷ்டகம்.☘

☘நவமம் பால சந்த்ரம் ச தசமம் து விநாயகம் 
ஏகாதசம் கணபதிம் த்வாதஷம் து கஜானனம்.☘

☘த்வாதஷை தானி நாமானி த்ரி சந்த்யம் ய: படேந் நர: 
ந ச விக்ன பயம் தஸ்ய சர்வ சித்தி கரம் பரம்.☘

☘வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தீ
லபதே தனம்
புத்ரார்த்தி லபதே புத்ரான் மோக்ஷார்த்தி லபதே
கதிம்.☘

☘ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பீர் மானஸை: பலம் லபேத்
ஸம்வத் சரேன சித்திம் ச லபதே நாத்ர சம்ஷய:☘

☘அஷ்டப்யோ  ப்ரஹ்மனோப் யச்ச லிகித்வா ய: சமர்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஷஷ்ய ப்ரசாதத:☘

☘||இதி ஸ்ரீ நாரத புரானே சங்கட நாசன நாம: கணேஷ த்வாதச
நாம ஸ்தோத்ரம்
  சம்பூர்ணம் ||☘

Friday, 26 October 2018

ஐந்தெழுத்து மகா மந்திரம்

ஐந்தெழுத்து மகா மந்திரம்

உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது காயத்ரி மந்திரம் . இரண்டாம் நிலை சிவாயநமஎனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது . இனி ஐந்தெழுத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள் .!!!

(சி) — சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை , தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது . யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம் தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும்.

(வா)— வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி .உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.

(ய)– ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது , உடலில் உயிர் , சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம் , ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது , பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .

(ந)— பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது , மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,

(ம)— நீர் — ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் , ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி , ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது , பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது .

— இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல் படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர், மூவுலகும் உங்களை பின் பற்றும் உன்னத நிலை அடையலாம் !!

சரஸ்வதி_அந்தாதி

☘#சரஸ்வதி_அந்தாதி

--
☘#காப்புச்_செய்யுள்☘
--
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி. 

நூல்- கலித்துறை

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூரிருட் கோர்
வெயிலே நிலவெழுமேனி மின்னே யினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே. .. 6

பாதாம்புயத்தில் பணிவார் தமக்குப் பல கலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரிதாவது எனக்கினியே. .. 7

இனி நான் உணர்வது எண்ணெண் கலையாளை இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமல அயன்
தனிநாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம் விதியின் முதிய
நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப்
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ
அந்தியில் தோன்றிய தீபமென்கோ நல அருமறையோர்
சந்தியில் தோன்றும் தபமென்கோ மணித்தாமமென்கோ
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10

ஒருத்தியை ஒன்றும் இலாளன் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை வெண்கமலத்திருப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம்
திருத்தியை யான்மறவேன் திசைநான்முகன் தேவியையே. .. 11

தேவரும் தெய்வப்பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவர் ஆகியுள்ளோரும் முனிவரரும்
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. .. 12

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே. .. 13

வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போத உருவாகி ஏங்கும் பொதிந்த விந்து
நாதமும் நாத வண்டார்க்கும் வெண்டாமரை நாயகியே. .. 14

நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞான இன்பச்
சேயகம் ஆன மலரகம் ஆவதும்  தீவினையா
லே அகம் மாறிவிடும் அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே. .. 15

சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாளிணையும்
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்
ஒரோருகம் ஈரரை மாத்திரையான உரை மகட்கே. .. 16

கருந்தாமரை மலர் கண்தாமரை மலர் காமருதாள்
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர்  ஆலயமாத்
தருந்தாமரை மலர் வெண்டாமரை மலர் தாவிலெழில்
பெருந்தாமரை மணக்குங் கலை கூட்டப் பிணை தனக்கே. .. 17

தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்  இமையவர் தாம்
மனக்கே தம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்
கணக்கேச பந்திக் கலை மங்கை பாத கமலங்களே. .. 18

கமலந்தனிலிருப்பாள் விருப்போடங் கரங்குவித்துக்
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந் தனைக் கொண்டு கண்டொருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே. .. 19

காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே. .. 20

அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே தவன முளரிமின்னே முடியா இரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21

வேறிலை என்றுன் அடியாரிற் கூடி விளங்கு நின்பேர்
கூறிலையானும் குறித்து நின்றேன் ஐம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்கால் நின் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்டாமரை மலர்ச் சேயிழையே. .. 22

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலாமுறப் போதிக்கலாம் சொன்னதே துணிந்து
சாதிக்கலாமிகப் பேதிக்கலாம் முத்தி தானெய்தலாம்
ஆதிக்கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவரே. .. 23

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றிலர் யாரைத் தொழுவதுவே. .. 24

தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகித்து
அழுவார் இனுங் கண்ணீர் மல்குவார் என் கண்ணின் ஆவதென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே. .. 25

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமாது உணர்த்தும் உரைப்பொருளே. .. 26

பொருளால் இரண்டும் பெறலாகும்  என்ற பொருள் பொருளோ
மருளாத சொற்கலைவான் பொருளோ பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு
இருளாய் விளங்கு நலங்கிளர்மேனி இலங்கிழையே. .. 27

இலங்கும் திருமுகம் மெய்யிற்புளகம் எழும் விழிநீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே
துலங்கும் முறுவல் செயக்களிகூரும் சுழல்புனல் போல்
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல்மானைக் கருதினர்க்கே. .. 28

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும்
புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும்
பிரியாவென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29

பெருந்திருவும் சயமங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும் 
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ் சீர் தருமே. .. 30

ஸ்ரீ_தேவி_அஷ்டகம்

☘#ஸ்ரீ_தேவி_அஷ்டகம்

--
அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. ஸ்ரீஆதிசங் கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் துதியை, 'தேவ்ய இஷ்டகம்’ எனப் போற்றுவர்.

குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத் தில் தினமும் இந்த துதிப் பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடு வதால் சகல நன்மைகளும் கைகூடும்.
--
  ☘#ஸ்ரீகணேஸாய_நம:☘

மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்

☘#கருத்து:☘ தேவியே, மஹாதேவனின் மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும், உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.

பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்

☘#கருத்து:☘ பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும், பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு கொண்டவளும், பதிவிரதையும், பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்

☘#கருத்து:☘ நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக  போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும், பௌர்ணமி முதலிய பர்வ தினங்களில் பூஜிக்கப்பட்டவளும், மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.

காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்

☘#கருத்து:☘ பிரளயகால ராத்திரியாகவும், மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி, நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத் தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகியவற்றை அளித்து அன்பு காட்டுகிற வளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.

ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்
வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

☘#கருத்து: ☘ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும், உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும், மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும், மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.

தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்

☘#கருத்து:☘ தேவர்களின் துயரங்களைப் போக்கு பவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப வளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக் கத் தகுந்தவளும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்

☘#கருத்து: ☘முக்கண்கள் கொண்டவளும், பக்தர் களுக்கு மங்களம் அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும், போகங்களையும், மோக்ஷங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்ப வளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும், உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.

ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்

☘(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)☘

☘#கருத்து: ☘சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.

#ஸ்ரீதேவி_அஷ்டகம்_முற்றிற்று.

#THANKS  : VIKATAN.COM

#தொகுப்பு  :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் .

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?*

*அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?*
***********************************

கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் *ஐப்பசி மாத பௌர்ணமி* நாளில் எல்லா சிவாலயங்களிலம் *அன்னாபிஷேகம்* நடத்தப்படுகிறது.

சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

*அன்னத்தின் பெருமை*
***************************

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

*“அன்னம் பரப்பிரம்மம்"* என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை *“ப்ர+சாதம்"* என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.

முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.

அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் .

“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே…

அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான். *“பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…"* என்றார் முனிவர்.

*“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…"* என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.

*அது என்ன சாபம்?*
********************

தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.

சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

*அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:*
*************************************

அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.

அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

*அன்னாபிஷேகம் செய்யும் முறை:*
*************************************

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.

நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.

அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.

பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

*சோற்றுக்குள் சொக்கன்*
****************************

'சோறுதான் சொக்கநாதர்' 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.

சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை    பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.

ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிக்ஷாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும். சற்றுமுன் கோயிலில் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தேன்.

*"ஊனுடம்பில் குடிகொண்டவனே*
 *ஊழ்வினை பாராது படியளந்திடு"*

மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது.

*சமையல் ஒரு தவம்!*
**********************

*24 அக்டோபர் புதன்கிழமை - மகா அன்னாபிஷேகம்*

சிவாலயங்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக?

மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. 'ப்ர' என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.

ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.

அப்போது ஒருவன் ஓடி வந்து, 'ஐயா... உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்...' என்றான்.
உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார்.

'துறவியான உமக்கு இது அழகா... அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?' என்று கேட்டார்.

அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்.

'ஏன் அழுகிறீர்...' என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, 'ஐயையோ... இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே... இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது...' என்றார்.

உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள்.

உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.

இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள். 'டிவி'யில் கண்ட கண்ட தொடர்களை பார்த்துக் கொண்டே சமைக்காதீர்கள். இதனால், உடலும், மனமும் கெட்டுப் போகும். இன்று மனிதர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு காரணமே, சமையல் செய்யும் போது, எரிச்சலுடனும், பொறுமையில்லாமலும் சமைப்பதுதான்.

*சமையல் ஒரு தபஸ்(தவம்).* இதனால் தான் சமையல் செய்பவரை, *'தவசுப்பிள்ளை'* என்று சொல்வர். மனதை ஒருநிலைப்படுத்தி சமையல் செய்வதால் தான் சமையல் தவம் ஆகிறது. இதன் காரணமாகவே, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை முன்னோர் ஏற்படுத்தினர்.

அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்.

        - *சித்தர்களின் குரல் shiva shangar*

Sunday, 21 October 2018

#ஸ்ரீ_துர்கா_ஸப்தச்லோகீ

#ஸ்ரீ_துர்கா_ஸப்தச்லோகீ
--
ஸ்ரீ சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதும், 700 மந்திரங்களாக கருதப்படுவதும் ஸப்தசதீ அழைக்கப்படுவதுமான தேவீ மஹாத்மியம் மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. இது உலக நன்மையை வேண்டி பாராயணத்திற்கும் சண்டீ ஹோமத்திற்கும் கையாளப்படுகின்றது. அவரவர்களுக்கு ஏற்ற முறைப்படி ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணம் செய்தும் அதனால் ஹோமத்தை செய்வதும் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், அந்த தேவியின் அருளையும் அடைவர் என்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். தேவி மஹாத்மியத்தின் சாரமாகக் கருதபப்டும் ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படும் ஏழு ஸ்லோகங்களை ஜபிப்பது ஸ்ரீதேவி மஹாத்மிய பாராயணத்திற்கு இனையாக கருதப்படுகின்றது. அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.
--
இந்த ஸப்தச்லோகீ பாராயணத்தாலேயே ஸப்த சதீ பாராயண பலத்தை உறுதியாகப் பெறக்கூடும். கலியில் "கீதை", "விஷ்ணு சகஸ்ரநாமம்", "தேவி மஹாத்மியம்", "லலிதா ஸகஸ்ரநாமம்" இந்நான்கும் பலன் தரும் ஸ்தோத்திரங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தேவி மஹாத்மிய பலச்ருதியில் இதைப் படித்தாலும் கேட்பதாலும் கன்னிகை கணவனை அடைவாள் இந்த மஹாத்மியத்தை கேட்டு ஸ்திரீ ஸ”மங்கலித் தன்மையைப் பெறுவாள். மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைவான் என்று கூறப்பட்டுள்ளது. தேவியின் மஹ’மையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெறட்டும் என்று எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாய அருள் புரியட்டும்.
--
☘ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)☘

ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜ“வன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

☘துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி
தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா (2)☘

ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.

சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலும் நற்காரியங்களிலே ஈடுபடும்படி செய்கின்றாய். வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் அபகரிக்கும் ஏ தேவி! உன்னைத் தவிர வேறு யார் தான் எல்லாவித காரியங்களையும் செய்வதற்காக தயாரஸம் ததும்பும் மனத்துடன் கூடியவனாக இருக்கின்றார்? ( வேறு ஒருவருமில்லை)

இந்த ஸ்லோக பராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி வறுமைப்பிணியும் நீங்கி விடும்.

☘ஸர்வ மங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி(தேவி) நாராயணி நமோஸ்து தே (3)☘

எல்லா மங்களகரமான வஸ்துக்களுக்கும் மங்கள ஸ்வரூபத்தை அளித்தவளும், ஸ்வயம் மங்கள ஸ்வரூபிணியும் எல்லாவற்றையும் ஸாதிக்கக் கூடியவளும், அனைவராலும் ஆச்ரயிக்க தகுந்தவளும் மூன்று கண்களை உடையவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

சரணாகத-தீநார்த்த-பரித்ராண-பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்து தே (4)

தன்னை சரணமாக அடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களைக் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டவளும், அனைவருடைய துன்பங்களையும் அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

மேலே கண்ட இரண்டு ஸ்லோகங்களின் பாராயணத்தினால் சகல காரியசித்தியும் பரிபூரணமாகஉண்டாகும்.

☘ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமந்விதே
பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே (5)☘

அனைத்து சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும் எல்லாவற்றுக்கும் ஈசுவரியாயும் ஸமஸ்த சக்திகளுடன் கூடியவளுமான ஏ தேவி துர்கே! எங்களை பலவித பாவங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ தேவி! உனக்கு நமஸ்காரம்.

ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா
ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்
த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்
த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம்
ப்ரயாந்தி (6)☘

உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் அழித்து விடுகின்றாய்! கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் உண்டாகும்.

☘ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரி
ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-☘

விநாசனம்எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய பயன்கள் எல்லாம் அவசியமானதால் ஸர்வேஸ்வரியின் திருவருளால் அவற்றைப் பெற இந்த ☘"#ஸ்ரீ_துர்காஸப்தச்லோகியின்" ☘பாராயணம் அனைவருக்கும் மிக அவசியம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

☘#தொகுப்பு  :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் .☘

#Thanks  :
http://navarathrii.blogspot.com/2013/10/blog-post.html?m=1

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம்

#அன்னாபிஷேகம்

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம்
சிறப்பு
கட்டுரை :

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது,

அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.

உலக வாழ்கைக்கு அச்சாணி.

அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே
காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க
மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள்.

ஐப்பசி பௌர்ணமி நாள்.

அன்னாபிஷேக பொருள் விளக்கம்:

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது
படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்
அன்று அவனது கலை அமிர்த கலையாகும்.

அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

*சிவன் பிம்பரூபி*

அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள்.

பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும்.

அனைவருக்கும்
அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு
பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.

இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேக தரிசன பலன்:

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு
பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி
சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

சிவன் அபிஷேகப்பிரியர்.
மொத்தம் 16
பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம்.

அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம்.

சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்பு உடையதாகும்.

ஆகமத்தில் அன்னாபிஷேகம்:

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க  உரிய பொருளால் சிவபெருமானை
வழிபடுவது விஷேமானதாகும்.
ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய
அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.

முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும்.

இரண்டும் வேறல்ல.

அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு :

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது.

நிலத்தில் விளைந்த நெல்
அரிசியாகின்றது.

அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது.
எனவே அன்னமும்
பஞ்ச பூதங்களின் சேர்க்கை.

இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி
முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி அடைக்கலமாகின்றது.

அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.

எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

முக்கிய குறிப்பு :

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை
பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்
உண்டு என்பது ஐதீகம்.

அன்னாபிஷேக மஹத்வம் :

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம்
செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த
பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய
பலன்கள் சேர்கின்றன.

சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில்
வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும்.

அந்த
அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து,ஆனந்தம் அடைவோமாக.

ஓம் நமச்சிவாய


Saturday, 20 October 2018

ஸ்ரீ குருவாயூரப்பன் .

ஸ்ரீ குருவாயூரப்பன் .
நமஸ்காரம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜன்மம் பாபம் தீர
குருவாயூரப்பா!நம்ஸ்காரம் செய்கின்றோம்.

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தன காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்

எண்ணைய் ஸ்நானம் செய்து கையில் வாழைபழத்தோடு நிற்கும்
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு
குழல் ஊதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னைநமஸ்காரம் செய்கின்றோம் !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...