இடரினும் தளரினும்எனதுறுநோய்
தொடரினும் உனகழல்தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடுகலந்தநஞ்சை
மிடறினில் அடக்கியவேதியனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகையஅடியேனை நீ ஆட்கொள்ளும்தன்மை இதுவோ ?திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே (உலக நன்மையின்பொருட்டுத் தந்தை செய்யவிரும்புகின்ற வேள்விக்குத் )தேவைப்படுகின்ற பொருளைநீ எனக்குத்தரவில்லையானால் அஃதுஉன் திருவருளுக்குஅழகாகுமா ?
இதுவோ = இதுவா
எமை ஆளுமா = எம்மைஆட்கொள்ளும் அழகு
றீவதொன்றெமக்கில்லையேல் = எமக்குதருவதற்கு ஒன்று உன்னிடம்இல்லை என்றால்
அதுவோ = அதுவோ
வுன தின்னருள் = உனதுஇன்னருள்
ஆவடுதுறை அரனே. =திருவாவடுதுறை சிவனே
உன்னிடம் எல்லாம்இருக்கிறது. தருவதற்கு மனம்இல்லை….இதுவா நீ எனக்குஅருள் தரும் அழகு என்றுஇறைவனை ஒரு பிடிபிடிக்கிறார். நீ எனக்கு உதவிசெய்யாவிட்டாலும்பரவாயில்லை உன்னைவிடுவதாக இல்லை என்றுஒரு மிரட்டல் வேறு…..
வாழினும் சாவினும்வருந்தினும்போய்
வீழினும் உனகழல்விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல்தயங்குசென்னிப்
போழிள மதிவைத்தபுண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன்.
நனவினும் கனவினும்நம்பாஉன்னை
மனவினும் வழிபடல்மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப்போதணிந்த
கனல்எரி அனல்புல்குகையவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன்.
தும்மலொ டருந்துயர்தோன்றிடினும்
அம்மலர் அடியலால்அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக்கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழமுனிந்தவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே !
கையது வீழினும்
கழிவுறினும்
செய்கழல் அடியலால்சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர்குலாயசென்னி
மையணி மிடறுடைமறையவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! வெந்துயர் தோன்றியோர்
வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால்ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண்டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணிசங்கரனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால்அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை
உருவழிய
அப்படி அழலெழவிழித்தவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால்சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடியிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால்உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ்தாமரைமேல்
அண்ணலும் அளப்பரிதாயவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால்அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும்புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்துபயின்றவனே
இதுவோஎமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படையெம்இறையை
நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ்மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய்விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன்ஏறுவர்நிலமிசைநிலையிலரே.
பொருள் / விளக்கம் :
அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.
Thanks : http://Ananjanaeyan.wordpress.com

No comments:
Post a Comment