Thursday, 31 May 2018

ஸ்ரீ_லலிதா_பஞ்சரத்னம்

☘#ஸ்ரீ_லலிதா_பஞ்சரத்னம்☘


1.ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்!
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம்

காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.

2.ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்!
மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்
புண்ட்ரேஷசாபகுஸுமேஷ
ஸ்ருணீர்ததாநாம்!!

காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும்
துளிர் போன்ற
விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.

3.ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம்
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்!
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்ச
நாட்யம் II

பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.

4.ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்!
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II

உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்

5.ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II

ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.

6.ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர் வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.

ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் முற்றிற்று.

☘#தொகுப்பு  :  #திருமதி #லதா_வெங்கடேஷ்வரன். ☘

Monday, 28 May 2018

தசாவதாரம்

☘#தசாவதாரம்☘

☘10 வது அவதாரம்
கல்கி அவதாரம்...☘

பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும்.

கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள்.

கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டாணம் அற்றுப் போவதால் வீடுகள் சூன்யப் பிரதேசம் ஆகும். மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் என ஆவார்கள். இப்படிக் கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார்.

சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.

அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.

அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.

சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும்.

ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் - 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் - 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் - 8, 64, 000 வருடங்களும், கலியுகம் - 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும்.

கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கல்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.) 60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.

 ◆ யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்.
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்.
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்.

சர்வம் ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பனம்..

தசாவதாரம் முற்றிற்று....

தசாவதாரம்

☘#தசாவதாரம் ☘

 ☘9 வது அவதாரம்
கிருஷ்ண அவதாரம்☘

அசுரர்களின் அக்கிரம செயலால் பாவங்கள் அதிகரித்து பாரம் தாங்காமல் பூமாதேவி பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டாள். அதற்கு பிரம்மாவோ, சிவன் மற்றும் தேவர்களையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.

மகாவிஷ்ணுவும் அவர்கள் குறையை தீர்த்து வைப்பதாக கூறினார்.

யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனனின் மகன் கம்சன். இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். இவனுக்கு கம்சை, தேவகி என இரண்டு சகோதரிகள். இதில் தேவகி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான் கம்சன். தேவகியை, சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

இவர்கள் இருவரையும், கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற போது, தீடிரென ஆகாயத்தில் இருந்து அசரீரி ஒன்று, ''கம்சா, தேவகியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய்'' என்று கூறியது.

இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட, வசுதேவர் தடுத்து, ''இவளால் உனது உயிருக்கு பிரச்சினை இல்லையே. எனவே இவளை விட்டு விடு.
இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு''. என்று கூற, அதனை ஏற்று தேவகியை உயிருடன் விட்டான். எனினும் அவர்கள் இருவரையும் சிறையுள் வைத்திருந்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.

எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.

தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார் மகாவிஷ்ணு.

அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.

கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. ''கம்சா!, நீ என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்''. என்று கூறி மறைந்தது.

கோகுலத்தில் பலராமனும், கிருஷ்னனும் ஒன்றாகவே வளர்ந்து கன்றுகளை மேய்த்து வந்தனர்.

கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை.
கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின.

ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான்.

இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமன், கிருஷ்ணன் இருவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் இருவரும் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத முயன்றான்.

இறுதியில் கிருஷ்ணன், கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான.

பின்னர் பலராமனும், கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய், தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.

இருவருக்கும் சாந்தீப முனிவர் கல்வி போதித்து வந்தார். குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை மீட்டு கொடுத்தார்கள்.

கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தினையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீண்டும் மீண்டும் வந்தான்.

யாதவ குலத்தினை காக்க, விஸ்வகர்மா மூலமாக துவாரகை எனும் பெரும் பட்டணத்தை நிருமானித்து அதில் யாதவர்களை குடியேற செய்தான் கிருஷ்ணன்.

விதர்ப்பராஜாவின் மகளான ருக்மிணி, தனது தந்தை தன்னை சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயத்திருப்பதனை அறிந்து, தன்னை காப்பாற்றும் மாறு கிருஷ்ணனிடம் தகவல் அனுப்ப அவளை மீட்டு பின்னர் மணந்து கொண்டான்.

உறவினரான குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார்.

அவளது பிள்ளைகளான பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும், துரியோதனன் வஞ்சகமாக, சூதாட்டம் மூலம் பறித்து கொண்டு, அவர்கள் மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.

அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு, நகரங்கள் எல்லாவற்றையும் திருப்பி கொடுப்பதாக சொன்ன  துரியோதனன் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக பேசினான்.

இதனால் பாரத போர் மூண்டது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து போரை நடத்தினான். ஒரு சமயம் தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, தன் விசுவரூபம் காட்டி பகவத் கீதையை உபதேசித்தார்.

பாரத போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்தனர்.

அதே வேளையில் துவாரகையில், கிருஷ்ணன், பலராமன் இருப்பதனால் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என யாதவர்கள் இறுமாப்பு அடைந்து பெரும் அக்கிரமங்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன், பலராமன் கூட அவர்களை அடக்க பெரும் சிரமப்பட்டனர்.

ஒருசமயம் துவாரகை வந்த முனிவர்கள் சிலரை ஏளனம் செய்து, ஒரு ஆடவனை கர்ப்பவதி போல காட்டி இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் 'இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே உங்கள் குலத்தினையே அழிக்கும்''. என சாபமிட்டனர்.

முனிவர்கள் கூறியவாறே இரும்பு உலக்கை அவன் வயிற்றில் இருப்பதை கண்டு பயந்து அதனை பொடிப் பொடியாக்கி கடல் நீரில் கரைத்தனர். எஞ்சிய சிறிய துண்டையும் நீரில் எறிந்தனர். அந்த துண்டை மீன் ஒன்று விழுங்கி விட்டது.

அந்த மீன் ஒரு மீனவன் கையில் சிக்கி விட்டது. மீனை வெட்டும் போது அதன் வயிற்றில் இருந்த இரும்பை வீசி எறிய அது ஒரு வேடன் கையில் கிடைத்தது. அதனை அவன் ஒரு அம்பு நுனியில் பொருத்தினான்.

கடல் நீரில் கரைந்த பொடிகள், கரையில் இரும்பு கோரைப் புற்களாக வளர்ந்து இருந்தன. ஒரு சமயத்தில் பெரும் போதை மயக்கத்தில் இருந்த யாதவர்கள் கோரைகளை பிடுங்கி தமக்கிடையே சண்டை இட்டு இறந்து போயினர். பலராமனும் அக்கடற்கரையினில் அமர்ந்து தன் சரீரத்தினை விடுத்தது வைகுண்டம் சென்றார்.

வேடன் மிருகம் ஒன்றுக்காக எய்த அம்பு பட்டு கிருஷ்ணன் தனது அவதாரப் பணியை முடித்து வைகுண்டம் சென்றார்...

இது தான் பெருமாளின் 9 வது அவதாரமான கிருஷ்ண அவதாரம் பற்றியது...

திருமாலின் 10 வது அவதாரம்... கல்கி அவதாரம்...  நாளை தொடரும்...........

தசாவதாரம்

☘#தசாவதாரம்☘

☘8 வது அவதாரம்
பலராமன் அவதாரம்..☘

பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்:

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார்.

அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர்.

 சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான்.

ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான்.

 அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர் பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டான்.
தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும்..நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர்.

நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான்.

அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான்.

 இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான். இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாடினார்கள். எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் பாடுவான். எல்லாரும் வில்வப்பழம் பறித்துப் பந்தாடுவார்கள். இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டான். கண்ணன் தன் சகாக்களை அழைத்துச் சொன்னான். நண்பர்களே! நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். ஒரு பந்தயம் கட்டி விளையாடுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். எல்லாரும் ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் ஓடிப் பிடித்த விளையாடினர். ஓடி விளையாடிய ஓட்டப் பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். அப்படி ஓடியவன், ஓர் எல்லைக்குள் வந்து அவனை இறக்கிவிட வேண்டியவன், பலராமனைக் கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் தொப் என்று கீழே போட்டான். தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். உடனே பலராமன் எகிறிக் குதித்து விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் நச் என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான். ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

மகாபாரதத்தில் பலராமன்: பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும், இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான்.

இந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி துவராரகைக்கு வரும் வழியில் துர்சகுனங்கள் தோன்றின. அவைகளைப் பொருட்படுத்தாமல் அவன் பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் இது பற்றித் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். அத்துடன், வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்றும் பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான். அப்போது கிருஷ்ணன், அண்ணா! தர்மத்தைப் பரிபாலிக்க சிம்மாசனமும் செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தைப் பரிபாலிக்காமல் கைவிட்டால் தர்மம் எப்படித் தழைத்து ஓங்கும்? நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்குக் கொண்டு வர வேண்டியவனாக இருக்கிறேன்.

முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நாம் எல்லோரும் அன்று அந்தி சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தைச் சுற்றி வந்தோம். அப்போது அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கண்ட சுபத்திரை அவர்கள் விளையாட்டின் விந்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். அப்போது நீ என்ன சொன்னாய்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ ஒன்றிரண்டு ஞாபத்திற்கு வருகிறது. இருந்தாலும் நான் என்ன சொன்னேன் என்பதை இப்போது நீதான் நினைவுபடுத்துவதில் என்ன தவறு? சும்மா சொல் என்றான் பலராமன். கிருஷ்ணன் தொடர்ந்து சொன்னான்,

அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்குக் கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.

அதைக் கேட்ட பலராமன், கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான். உடனே கிருஷ்ணன் சொன்னான்: அண்ணா! இனி உங்கள் இஷ்டம். அண்ணியும் இதற்கு சம்பதிக்கிறாள் என்னும் போது நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் பயன் இல்லை. எல்லாம் பகவத் சங்கற்பம் போல் நடக்கும் என்பதை மறந்துவிடாதே! என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் அந்தப்புரத்திற்குப் போய்விட்டான்.

சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அஸ்தினாபுரத்திற்குத் திரும்பி, நடந்த விவரங்களை துரியோதனிடம் சொன்னான் சகுனி. முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான்.

செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர். செல்லும் வழியில் கடோத்கஜன் அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் பராசக்தியின் கருணையால் கிடைத்த அமுத கலசத்தினால் அபிமன்யு உயிர் பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! நீங்கள் இரண்டு பேரும் என் அரிய பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி அபிமன்யூ-வத்ஸலா திருமணம் நடைபெற்றுவிடும். எனினும் அதை நீங்கள் தான் முன்னின்று செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்றார்.

 அவர்கள் தங்கள் கட்டளையை சிரம்மேல் தாங்கி செய்கிறோம்! என்று சொன்னார்கள். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் அருமைக் குழந்தை வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அண்ணா அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம் போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார்.

வாசுதேவர் கூறியபடி காரியங்களை நிறை வேற்றி விட முனைந்தனர். துரியோதனன் அவன் பட்ட மகிஷி பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் தாதியரைக் கண்டு, அவர்களைப் போல மாற்றுருக் கொண்டு நேரே பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அங்கு அவளைத் தட்டி எழுப்பினார்கள்.

அம்மா எஜமானி! நாங்கள் கௌரவ பட்டத்தரசி பானுமதி தேவியின் தாதிகள். அம்மா இதோ ஒரு சில நகைகளைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இதை பெண்ணுக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச் செய்து கல்யாண சாபக் கிரியத் திரவியத்திற்கும் தேவ துந்துபி முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார்.

அங்கே தன் தங்கை சுபத்திரா, மருமகன் அபிமன்யூ மற்றும் புதுப்பெண் வத்ஸலாவையும் கண்டு குசலம் விசாரித்தான் பகவான். பின்பு ஒரு சில நொடிகளில் வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார்.

பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமரிசையாக அழைத்து வந்தான். இவ்வாறு பலராமன் மகள் வத்ஸலா திருமணம் இனிதே நிறைவேறியது. இந்த வத்ஸலா திருமணக் கதையை கேட்போர், படிப்போர் அனைவருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும் சர்வமங்களமும் கிடைக்கும்.

சாம்பன்-லட்சுமளை திருமணம்: துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன். துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் படையுடன் அவனைத் துரத்தி வந்தார்கள். பின் அவனுடன் யுத்தம் செய்தனர்.

சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனைச் சிறைப் படுத்தினார்கள். இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் உத்தரவோடு அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! என்ன காரியம் செய்தாய்? தனி ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? நமக்குள் விரோதம் வேண்டாம் என்று நான் எத்தனையோ தடவை எடுத்து சொல்லியும் நீ பகைமைபாராட்டுகிறாய். ஆக நீ சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்து கொடு! என்று பலராமன் சொன்னான்.

அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களோடு சண்டை போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதோ பார் க்ஷண நேரத்தில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் பார்! என்று சொல்லித் தான். நொடிப் பொழுதில் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நகரம் மூழ்கிப் போகும் என்ற பயம் தோன்றியது.

உடனே துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படிவேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான். அவ்வாறு துரியோதனன் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்ததும் தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமன் நிலைப்படுத்தினான்.

இது தான் பெருமாளின் 8 வது அவதாரமான பலராமன் அவதாரம் பற்றியது...

திருமாலின் 9 வது அவதாரம்... கிருஷ்ண அவதாரம்... நாளை தொடரும்.

தசாவதாரம்

#தசாவதாரம் -

7 வது அவதாரம்

ராம அவதாரம்...

வைகுந்தத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன், விஜயர்கள் அடுத்த ஜென்மத்தில் இராவணன், கும்பகர்ணன் ஆக பூமியில் பிறந்தார்கள்.

விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பாளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனும் பிள்ளைகளாக பிறந்தனர்.

கேகயி, தன் மகன் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என நினைத்து மகனை அதற்காக தவம் செய்யுமாறு கூறினார். இராவணனும் கடும் தவம் புரிந்தான்.

தவத்தின் இறுதியாக, தனது தலையை திருகி, அக்கினியில் இட்டு, தவத்தினை பூர்த்தி செய்ய நினைத்து, தனது தலையை திருகப் போகும் போது பிரம்மன், அவன் முன் காட்சி அருளினார்.

இராவணன், அவரிடம் தனக்கு, தேவர்களாலோ, அரக்கர்களாலோ, விலங்குகளாலோ மரணம் நேர கூடாது என்ற வரத்தினை பெற்றுக்கொண்டான்.

இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட தவ வலிமையினால் தேவலோகத்தினை அதிரச் செய்தான். தேவேந்திரனை வென்று அமராவதியை கைப்பற்றினான்.

பூலோகத்தில், இலங்கை முதலில் குபேரனிடம் இருந்தது. குபேரன், தன் தம்பி இராவணன், இலங்கையை விரும்பி கேட்டு விட்டதால், அவனுக்கே அதனை கொடுத்து, இலங்கேசுவரன் என்ற பட்டத்தினையும் சூட்டினான்.

எனினும் பறக்கும் தன்மை கொண்ட புஷ்பக விமானத்தினை குபேரன் தனக்கு தராமல், தன்னுடன் கொண்டு சென்று விட்டான் என கோபம் அடைந்து, அண்ணன் என்று கூட பாராது, படை எடுத்து சென்று, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தினை கைப்பற்றினான்.

இராவணனின் செயல்கள் நாளுக்கு நாள் வரம்பு மீறி சென்று கொண்டிருந்ததால், தேவர்கள் வேறு வழி இன்றி பிரம்மாவிடம் சென்று முறையிட, வரம் அளித்த பிரம்மாவோ அவனை அளிக்க வழி தெரியாமல் சிவனிடம் சென்றார். சிவனோ அனைவரையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

இராவணன், பிரம்மனிடம் சாகாவரம் கேட்டு கொள்ளும் போது தனக்கு 'மனிதனால்' மரணம் நேர கூடாது என கேட்கவில்லை. இதனை கூறிய மகாவிஷ்ணு, தான் ராமவதாரம் எடுத்து இராவணனை அளிப்பதாக அறிவித்தார்.

பூமியிலே, சூரிய வம்சத்தினை சேர்ந்த தசரத சக்கரவர்த்தி என்பவர் அயோத்தியை ஆண்டு வந்தார். அவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேகி என மூன்று மனைவிகள்.

நீண்ட காலமாக மூன்று பேருக்கும் குழந்தைகள் இல்லாததால் புத்திர காமாட்சி யாகம் செய்து மூவரும் குழந்தை பாக்கியம் பெற்றுக்கொண்டனர்.

கோசலைக்கு மகாவிஷ்ணுவின் அம்சமாகிய ராமனும், சுபத்திரைக்கு சேஷசம்சமாக இலட்சுமணனும், சங்கின் அம்சமாக சத்துருக்கனும், கைகேயிக்கு சக்கரத்தாழ்வார் அம்சமாக பரதனும் பிறந்தனர்.



நால்வரும் வசிஷ்ட முனிவரிடம் கல்வி பயின்று வந்தனர். விசுவாமித்திரர் எனும் முனிவர், தாம் செய்ய விருக்கும் யாகத்திணை அசுரர்களிடம் இருந்து காக்க, இராமன், இலக்சுமன் ஆகியோரை அழைத்து சென்றார்.

அவர்களுக்கு சில மந்திரங்களையும் உபதேசித்தார். யாகம் முடிந்த பின், விசுவாமித்திரர் இரு இளவரசர்களையும் மிதிலைக்கு அழைத்து சென்றார். அங்கே ஜனகர் எனும் அரசர் வைத்திருந்த வில்லை ஒடித்து ஜானகியை திருமணம் செய்து கொண்டார் இராமன்.

மன்னர் தசரதர், இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய விரும்பி அதற்கான ஏற்பாட்டை செய்தார். அனால் கைகேகி, கூனி என்பாள் பேச்சினை கேட்டு தசரதர் இடம் தன் மகன் பரதனே நாட்டை ஆளவேண்டும், இராமன் காடு செல்ல வேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.

அதன் படியே இராமன், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசம் சென்றார்கள். பிள்ளைகள் காடு சென்ற அதிர்ச்சி தாங்காமல் தசரதர் உயிர் துறந்தார்.

இராமன் காட்டில், குகன் எனும் ஓடக்காரரின் உதவியுடன் பரந்துவாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றார். பின் சித்ரக்கூடத்தில் இராமன் தன் மனைவி தம்பியுடன் தங்கி இருந்தார்.

அண்ணனின் பட்டாபிசேக விழாவுக்கு, ஏனைய மன்னர்களை அழைக்க சென்று இருந்த பரதன் ஊர் திரும்பி தனது தாயின் இழி செயலை கண்டு குமுறி இராமனை அழைத்து வர சித்திர கூடம் சென்றான். அனால் இராமர், பதினான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தான் நாடு திரும்புவேன் என கூறி பரதனை அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் மூவரும் சித்திர கூடத்தில் இருந்து வெளியேறி தண்டகரன்யத்தில் முனிவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மோகம் கொண்டு அணுகியதால், மூக்கறுபட்டாள்.

இதனால் சூர்ப்பனகை தன் அரக்கர் கூட்டத்தினை அழைத்து வந்து இராமனுடன் போரிட, பல அரக்கர்கள் அழிந்தார்கள். இந்த நிகழ்வே இராவணன் அழிவுக்கு ஆரம்ப காரணமாக அமைந்து விட்டது.

மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை, இராமனை பழி வாங்கும் நோக்குடன் இலங்கை சென்று, சீதையின் பேரெழில் குறித்து, இராவணனிடம் வர்ணித்தாள்.

இது இராவணன் மனதில் ஆசையை தூண்ட, அவனும் வஞ்சகமாக சீதையினை கவர்ந்து வந்து இலங்கையிலே அசோகவனத்திலே சிறை வைத்தான்.

சீதையை மீட்க இராம, லட்சுமணருக்கு வாயு புத்திரன் ஆன அனுமன் உதவி கிடைத்தது. அனுமன் தன் ஆற்றலினால் இலங்கை சென்று சீதை இருக்குமிடத்தை அறிந்து வந்தார்.

அதன் பின் அனுமனின் உதவியுடன் கடலில் பாலம்அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் யுத்தம் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபிசணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.

இராவணன் சிறையில் இருந்த சீதை, தீக்குளித்து, தான் மாசற்றவள் என உலகிற்கு நிரூபித்த பின்னரே, இராமர், அயோத்தி திரும்பி பட்டாபிசேகம் செய்தார்.

எனினும் தன்னைப்பற்றி குடிமக்கள் சிலர் அவதூறாக பேசுவதை பொறுக்க முடியாமல், இராமன், கருவுற்று இருந்த சீதையினை காட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சீதை, வால்மீகி முனிவரது ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் லவ, குச எனும் இருவரை ஈன்றாள். அதன் பின் தன் வாழ்வு நீங்கி பூமியினுள் மறைந்தாள்.

இராமனும் இறுதியில் சரயு நதியில் இறங்கி தன் ராமாவதாரத்தினை முடித்து கொண்டு வைகுந்தம் சென்றார். வைகுந்தத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன், விஜயர்கள் அடுத்த ஜென்மத்தில் இராவணன், கும்பகர்ணன் ஆக பூமியில் பிறந்தார்கள்.

விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பாளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனும் பிள்ளைகளாக பிறந்தனர்.

கேகயி, தன் மகன் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என நினைத்து மகனை அதற்காக தவம் செய்யுமாறு கூறினார். இராவணனும் கடும் தவம் புரிந்தான்.

தவத்தின் இறுதியாக, தனது தலையை திருகி, அக்கினியில் இட்டு, தவத்தினை பூர்த்தி செய்ய நினைத்து, தனது தலையை திருகப் போகும் போது பிரம்மன், அவன் முன் காட்சி அருளினார்.

இராவணன், அவரிடம் தனக்கு, தேவர்களாலோ, அரக்கர்களாலோ, விலங்குகளாலோ மரணம் நேர கூடாது என்ற வரத்தினை பெற்றுக்கொண்டான்.

இவ்வாறு தான் பெற்றுக்கொண்ட தவ வலிமையினால் தேவலோகத்தினை அதிரச் செய்தான். தேவேந்திரனை வென்று அமராவதியை கைப்பற்றினான்.

பூலோகத்தில், இலங்கை முதலில் குபேரனிடம் இருந்தது. குபேரன், தன் தம்பி இராவணன், இலங்கையை விரும்பி கேட்டு விட்டதால், அவனுக்கே அதனை கொடுத்து, இலங்கேசுவரன் என்ற பட்டத்தினையும் சூட்டினான்.

எனினும் பறக்கும் தன்மை கொண்ட புஷ்பக விமானத்தினை குபேரன் தனக்கு தராமல், தன்னுடன் கொண்டு சென்று விட்டான் என கோபம் அடைந்து, அண்ணன் என்று கூட பாராது, படை எடுத்து சென்று, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தினை கைப்பற்றினான்.

இராவணனின் செயல்கள் நாளுக்கு நாள் வரம்பு மீறி சென்று கொண்டிருந்ததால், தேவர்கள் வேறு வழி இன்றி பிரம்மாவிடம் சென்று முறையிட, வரம் அளித்த பிரம்மாவோ அவனை அளிக்க வழி தெரியாமல் சிவனிடம் சென்றார். சிவனோ அனைவரையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

இராவணன், பிரம்மனிடம் சாகாவரம் கேட்டு கொள்ளும் போது தனக்கு 'மனிதனால்' மரணம் நேர கூடாது என கேட்கவில்லை. இதனை கூறிய மகாவிஷ்ணு, தான் ராமவதாரம் எடுத்து இராவணனை அளிப்பதாக அறிவித்தார்.

பூமியிலே, சூரிய வம்சத்தினை சேர்ந்த தசரத சக்கரவர்த்தி என்பவர் அயோத்தியை ஆண்டு வந்தார். அவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேகி என மூன்று மனைவிகள்.

நீண்ட காலமாக மூன்று பேருக்கும் குழந்தைகள் இல்லாததால் புத்திர காமாட்சி யாகம் செய்து மூவரும் குழந்தை பாக்கியம் பெற்றுக்கொண்டனர்.

கோசலைக்கு மகாவிஷ்ணுவின் அம்சமாகிய ராமனும், சுபத்திரைக்கு சேஷசம்சமாக இலட்சுமணனும், சங்கின் அம்சமாக சத்துருக்கனும், கைகேயிக்கு சக்கரத்தாழ்வார் அம்சமாக பரதனும் பிறந்தனர்.

நால்வரும் வசிஷ்ட முனிவரிடம் கல்வி பயின்று வந்தனர். விசுவாமித்திரர் எனும் முனிவர், தாம் செய்ய விருக்கும் யாகத்திணை அசுரர்களிடம் இருந்து காக்க, இராமன், இலக்சுமன் ஆகியோரை அழைத்து சென்றார்.

அவர்களுக்கு சில மந்திரங்களையும் உபதேசித்தார். யாகம் முடிந்த பின், விசுவாமித்திரர் இரு இளவரசர்களையும் மிதிலைக்கு அழைத்து சென்றார். அங்கே ஜனகர் எனும் அரசர் வைத்திருந்த வில்லை ஒடித்து ஜானகியை திருமணம் செய்து கொண்டார் இராமன்.

மன்னர் தசரதர், இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய விரும்பி அதற்கான ஏற்பாட்டை செய்தார். அனால் கைகேகி, கூனி என்பாள் பேச்சினை கேட்டு தசரதர் இடம் தன் மகன் பரதனே நாட்டை ஆளவேண்டும், இராமன் காடு செல்ல வேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றிக் கொண்டாள்.

அதன் படியே இராமன், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசம் சென்றார்கள். பிள்ளைகள் காடு சென்ற அதிர்ச்சி தாங்காமல் தசரதர் உயிர் துறந்தார்.

இராமன் காட்டில், குகன் எனும் ஓடக்காரரின் உதவியுடன் பரந்துவாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றார். பின் சித்ரக்கூடத்தில் இராமன் தன் மனைவி தம்பியுடன் தங்கி இருந்தார்.

அண்ணனின் பட்டாபிசேக விழாவுக்கு, ஏனைய மன்னர்களை அழைக்க சென்று இருந்த பரதன் ஊர் திரும்பி தனது தாயின் இழி செயலை கண்டு குமுறி இராமனை அழைத்து வர சித்திர கூடம் சென்றான். அனால் இராமர், பதினான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் தான் நாடு திரும்புவேன் என கூறி பரதனை அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் மூவரும் சித்திர கூடத்தில் இருந்து வெளியேறி தண்டகரன்யத்தில் முனிவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அப்பகுதிக்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மோகம் கொண்டு அணுகியதால், மூக்கறுபட்டாள்.

இதனால் சூர்ப்பனகை தன் அரக்கர் கூட்டத்தினை அழைத்து வந்து இராமனுடன் போரிட, பல அரக்கர்கள் அழிந்தார்கள். இந்த நிகழ்வே இராவணன் அழிவுக்கு ஆரம்ப காரணமாக அமைந்து விட்டது.

மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை, இராமனை பழி வாங்கும் நோக்குடன் இலங்கை சென்று, சீதையின் பேரெழில் குறித்து, இராவணனிடம் வர்ணித்தாள்.

இது இராவணன் மனதில் ஆசையை தூண்ட, அவனும் வஞ்சகமாக சீதையினை கவர்ந்து வந்து இலங்கையிலே அசோகவனத்திலே சிறை வைத்தான்.

சீதையை மீட்க இராம, லட்சுமணருக்கு வாயு புத்திரன் ஆன அனுமன் உதவி கிடைத்தது. அனுமன் தன் ஆற்றலினால் இலங்கை சென்று சீதை இருக்குமிடத்தை அறிந்து வந்தார்.

அதன் பின் அனுமனின் உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றனர். இராமனின் படைக்கும் இராவணன் படைக்கும் மிக கடும் யுத்தம் நடந்து இறுதியில் இராமன் இராவணனை அழித்து, அவனது தம்பி விபிசணனை, இலங்கை வேந்தனாக முடி சூட்டினார்.

இராவணன் சிறையில் இருந்த சீதை, தீக்குளித்து, தான் மாசற்றவள் என உலகிற்கு நிரூபித்த பின்னரே, இராமர், அயோத்தி திரும்பி பட்டாபிசேகம் செய்தார்.

எனினும் தன்னைப்பற்றி குடிமக்கள் சிலர் அவதூறாக பேசுவதை பொறுக்க முடியாமல், இராமன், கருவுற்று இருந்த சீதையினை காட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சீதை, வால்மீகி முனிவரது ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் லவ, குச எனும் இருவரை ஈன்றாள். அதன் பின் தன் வாழ்வு நீங்கி பூமியினுள் மறைந்தாள்.

இராமனும் இறுதியில் சரயு நதியில் இறங்கி தன் ராமாவதாரத்தினை முடித்து கொண்டு வைகுந்தம் சென்றார்...

இது தான் பெருமாளின் 7வது அவதாரமான ராம அவதாரம் பற்றியது...

திருமாலின் 8வது அவதாரம்... பலராமன் அவதாரம்... நாளை தொடரும்

Wednesday, 23 May 2018

தசாவதாரம்

#தசாவதாரம்

#ஆறாவது_அவதாரம்
#பரசுராம_அவதாரம்...

புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி.

காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள்.

அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், " ஒரு காது பச்சையாகவும், மற்ற அம்சங்கள் வெண்மையாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீ கொடுத்தால் என் மகளைக் கொடுக்கிறேன் " என்று சொன்னான்.

ரிஷிகனால் அதைக் கொண்டு வருவது முடியாத காரியம் என்று அரசன் நினைத்தான். ரிஷிகனோ, வருண பகவானை வேண்டி, அரசன் கேட்டவாறு ஆயிரம் குதிரைகளைப் பெற்று வந்து அரசனிடம் கொடுத்து சத்தியவதியைத் திருமணம் செய்து கொண்டான்.

சிறிது காலத்துக்குப் பிறகு, சத்தியவதிக்கு ஒரு பிள்ளை வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. சத்தியவதியின் தாய் தனக்கு ஒரு மகள் இல்லையே என்று கவலைப்பட்டாள்.

இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், விசேஷ சக்தி கொண்ட பால் சோறு தயாரித்து அதை இரண்டு பாகமாகப் பிரித்து முதல் பாகத்தைத் தன மனைவிக்கும், இரண்டாவது பாகத்தை அவள் தாய்க்கும் கொடுக்கும் படி வைத்து விட்டு, நீராடச் சென்று விட்டான்.

அச் சமயத்தில் சத்தியவதியின் தாய் அங்கே வந்து, இரண்டாம் பாகத்தைத் தன் மகளுக்குத் தந்து, முதல் பாகத்தைத் தானே உண்டு விட்டாள். சிறிது நேரம் கழித்து வந்த ரிஷிகன், நடந்ததை அறிந்து பதறினான்.

தன மனைவியிடம், " பிராமண மந்திரம் ஏற்றிய உணவை உன் தாய் அருந்தி விட்டாள். அவளுக்குப் பிறக்கும் மகன், பிரம்ம ஞானியாகப் பிறப்பான். க்ஷத்ரிய மந்திர உருவேற்றியதை நீ அருந்தியதால், உனக்குப் பிறக்கும் மகன் கொடிய அரச குணங்களோடு விளங்குவான் " என்று கூறி வருந்தினான்.

ரிஷிகனின் மனைவிக்கு ஜமதக்னி என்னும் மகன் பிறந்தான். அதன் பிறகு, ஜமதக்னி ரேணுகா தேவியை மணம் புரிந்து, அசுமணன் முதலிய பல புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் ஒருவன் தான் பரசுராமன். இவன் மகாவிஷ்ணுவின் அவதாரம்.

பரசுராமன் தன்னைப் பலம் மிக்கவனாகவும், தனக்கு நிகர் யாரும் இல்லை என்றும் எண்ணிப் பூமியை இருபத்தொரு முறை வலம் வந்தான். க்ஷத்ரியர்களக் கொன்று பழி தீர்த்தான்.

சூரிய வம்சத்தில் பிறந்தவனாகிய கேகய நாட்டு மன்னன் திருதவீரியனின் மகன் கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன்.

இவனுக்குப் பிறவியிலேயே கால்கள் இல்லை. பன்னிரண்டு வயதுக்கு மேல், தாத்தாத்ரேயரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தான்.

கார்த்தவீரியார்ச்சுனன் ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற போது, அவனுக்கும் அவனது படையினருக்கும் கடும் பசி உண்டானது.

அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவர்க்கும் அறுசுவை உணவளித்தார். மன்னன் என்ற திமிர் படைத்த கார்த்த வீரியார்ச்சுனன், " காட்டில் வாழும் முனிவருக்குக் காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கே கொடுங்கள்" என்று கேட்டான்.

முனிவர் மறுக்கவே, மன்னன் அந்தத் தேவ பசுவைப் பலவந்தமாகத் தன் நாட்டுக்குப் பிடித்துச் சென்றான்.

அதையறிந்து கோபம் கொண்ட ஜமதக்னியின் மகன் பரசுராமன், கவசம் அணிந்து, வில்லையும் கோடரியையும் ஏந்திக் கொண்டு விரைந்து சென்றான். தனியாகவே வீரத்துடன் போராடி, மன்னனின் தலையை வெட்டி வீழ்த்தி விட்டுக் காமதேனுவை மீட்டு வந்தான்.

இதையறிந்த ஜமதக்னி முனிவர், " அரசனைக் கொன்றது ஒரு பிராமணனைக் கொன்றதை விட அதிக பாவமான காரியமாகும். அதனால், அப்பாவம் தீர நீ யாத்திரை செய்து வருவாயாக " என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே, பரசுராமன் யாத்திரை சென்று வந்தான்.

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி ஒரு முறை மனச் சபலமுற்று, ஹோம காலத்துக்குள் தண்ணீர் கொண்டு வரத் தாமதமாகி விட்டதால், கடும் கோபம் கொண்ட முனிவர், " அவளைக் கொன்று விட்டு வா " என்று தன மகனிடம் ஆணையிட, பரசுராமன் தன கோடரியால் தன தாயை வெட்டி வீழ்த்தினான்.

"மகனே, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் " என்று தந்தை கூற, பரசுராமன் அதற்கு, " என் தாயாரும், சகோதரர்களும் பிழைத்து எழ வேண்டும் " என்று கேட்க, முனிவரும் அவ்வாறே அருள் செய்தார். தாயும், சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

தன்னுடைய தந்தைக்கு இவ்வளவு சக்தி அவரது தவ வலிமையால் தான் கிடைத்தது என்று எண்ணிய பரசுராமன் தானும் தவம் செய்யக் காட்டுக்குச் சென்றான்.

அந்நேரத்தில், கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்கள் பரசுராமனைப் பழி வாங்க நினைத்து, பரசுராமனின் தந்தை ஜமதக்னியின் தலையை வெட்டி விட்டனர். அதைப் பார்த்த ரேணுகாதேவி அலறினாள். அவளது அழுகையொலி கேட்டுப் பரசுராமன் கடும் கோபம் கொண்டு, கோடரியை ஏந்திக் கொண்டு, கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்களை வெட்டி வீழ்த்தினான்.

அத்தோடு கோபம் தீராமல், " இருபத்தொரு தலைமுறைகள் க்ஷத்ரியர் வம்சம் தழைக்காமல் இருக்க அவர்களை நாசம் செய்வேன்" என்று சபதம் ஏற்றான்.

பின், தந்தையின் தலையையும், உடலையும் ஒன்று சேர்த்து அக்கினியில் சம்ஸ்காரம் செய்தார். ஜமதக்னி முனிவர் சப்தரிஷி மண்டலத்தில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார்.

பரசுராமன் தான் செய்த சபதப்படி, இருபத்தொரு முறை உலகை வலம் வந்து க்ஷத்ரியர்களை வதம் செய்து, பூமியை முழுவதும் கைப்பற்றிக் காசிபர்க்குத் தானம் செய்து விட்டு, மகேந்திர பர்வதத்தை அடைந்து தவம் இயற்றிக் கொண்டு வருகிறார்.

அவர் இப்போதும் உயிர் வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவர் சாகாவரம் பெற்றவராகையால், அவர் சிரஞ்சீவிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்...

இது தான் பெருமாளின் 6 வது அவதாரமான பரசுராம அவதாரம் பற்றியது...

திருமாலின் 7வது அவதாரம்... ராம அவதாரம்... நாளை தொடரும்

Tuesday, 22 May 2018

தசாவதாரம்

☘#தசாவதாரம் ☘

☘#ஐந்தாவது_அவதாரம்
#வாமன_அவதாரம்...☘

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் பலி என்ற அசுரன் தாக்கப்பட்டான்.

மற்ற அசுரர்கள் அவனை உயிர் பிழைக்கச் செய்தார்கள். அசுர வம்சத்து முனிவர்களும், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியரும் அவனுக்குப் பழைய தேக பலத்தையும், சக்தியையும் அளித்தார்கள்.

அவனைப் பெரிய யாகம் ஒன்று செய்ய வைத்தார்கள். அந்த யாகத்திலிருந்து இரதம் ஒன்று வெளியே வர, அதன் மீதேறித் தேவ லோகம் சென்ற பலி, இந்திரனை விரட்டியடித்து தேவலோகத்தை கைப்பற்றினான். மகாபலி என்ற பெயருடன் சக்கரவர்த்தி ஆகினான்.

மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆட்சி மூன்று லோகங்களிலும் பரவியது. தேவர்கள் தேவலோகத்தைவிட்டு ஓடி மறைந்தார்கள்.

இதை அறிந்த தேவமாத அதிதி வேதனையுற்று கணவர் காசிபரிடம் முறையிட, அவர், விஷ்ணுவை நினைத்து விரதமிருக்கும்படி கூறினார். அவளும் பன்னிரண்டு நாட்கள் கடுமையான விரதமிருந்தாள்.

மகாவிஷ்ணு காட்சியளித்து, " தேவமாதாவே, மகாபலிச் சக்கரவர்த்தி பிராமணர்கள் செய்த யாகத்தினால் வலிமையடைந்திருக்கிறான்.
அதனால், அவனிடமிருந்து தேவலோகத்தை மீட்க, உனக்குப் புத்திரனாக நானே அவதரிப்பேன்." என்று அருளினார். அதன் படியே, அதிதியின் கருவில், வாமனமூர்த்தியாக அவதரித்தார், மகாவிஷ்ணு.

வாமனமூர்த்தி தம் குள்ளமான உடலுடன் மகாபலிச் சக்கரவர்த்தியின் அசுவமேத யாக சாலைககுச் சென்றார். மகாபலி அவரை வரவேற்று, உபசரித்து, உட்காரவைத்து அவருடைய பாதங்களைக் கழுவினான்.

கழுவிய நீரைத் தன தலைமேல் தெளித்துக் கொண்டான்.

பின் அவரிடம், தன்னை நாடி வந்த நோக்கம் என்ன என்று கேட்டான். எதுவாக இருந்தாலும் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தான்.

"மகாபலியே, கேட்பது எதுவாக இருந்தாலும் கொடுப்பதாக வாக்களித்து விட்டாய். எனக்கு வேண்டியது, என் கால்களால் அளந்த மூன்று அடி மண்தான். அதைக்கொடு " என்று கேட்டார்.

அதைக்கேட்ட மகாபலி மகிழ்ச்சியுடன், " மூன்று லோகங்களையோ, ஓர் இராஜ்யத்தையோ கேட்காமல், மூன்றடி நிலம் கேட்கிறீர்கள். அப்படியே தருகிறேன் " என்று கூறினான்.

அச் சமயத்தில் சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, " குள்ளமான உருவத்தில் வந்திருப்பது உன் குலவிரோதி மகாவிஷ்ணுதான் "என்று கூற, மகாபலி பதிலாக," என் குலவிரோதியானாலும், நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் " என்று கூறிவிட்டுத் தன மனைவி கொண்டுவந்த நீர் நிரம்பிய கெண்டியிலிருந்து தண்ணீரை ஊற்றி தாரை வார்க்க முயன்றார்.

உடனே சுக்கிராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, தண்ணீர் வெளியே வராமல் கெண்டியின் துவாரத்தை அடைத்து நின்றார்.

இதையறிந்த வாமனர், தன கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் துவாரத்தைக் குத்த, வண்டு ஒரு கண்ணை இழந்தது.

இதனால் சுக்கிராச்சாரியார் ஒற்றைக்கண் உடையவர் ஆனார். மகாபலி, கெண்டியிலிருந்து நீரைத் தாரை வார்த்துத் தானம் கொடுத்தவுடன், வாமனரின் உருவம் வளர்ந்தது, மிகவும் வளர்ந்து பிரம்மாண்டமானது. மகாபலி அவரை அண்ணாந்து பார்த்தான்.

வாமனர் வானத்தை ஓர் அடியாலும், நிலத்தை மறு அடியாலும் அளந்தார். பின், " ஓர் அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து விட்டேன்.மூன்றாவது அடியை எங்கே வைப்பது? " என்று கேட்டார்.

மகாபலி சற்றும் தயங்காமல், " ஸ்ரீ விஷ்ணுவே, தங்கள் மூன்றாவது அடியை என் தலைமேல் வையுங்கள் " என்று கூறித் தலை சாய்ந்து, வணங்கி நின்றார்.

மகாவிஷ்ணு தமது ஒரு பாதத்தை அவன் தலைமீது வைத்து அழுத்த, மகாபலியும், அவனைச் சேர்ந்த அசுரர்களும் பாதாள லோகத்தை அடைந்தார்கள்.

பிரம்மனும், பிரகலாதனும், மகாபலிககுத் துன்பம் நேராதவாறு காக்கும்படி மகா விஷ்ணுவை வேண்ட, "வரப்போகும் சாவர்ணி மனுயுகத்தில் மகாபலி இந்திரபதவியை அடைவான். அதுவரை, அவனை நானே காத்து வருவேன் " என்று கூறி, அனைவர்க்கும் அருள் புரிந்தார்....

இது தான் பெருமாளின் 5 வது அவதாரமான வாமன அவதாரம் பற்றியது...

6 வது அவதாரம்... 
பரசுராம அவதாரம்.. நாளை தொடரும்.....

தசாவதாரம்

#தசாவதாரம்

#நான்குகாவது_அவதாரம்
#நரசிம்ம_அவதாரம்...

பெருமாள் , வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது.

உடனே தன் அரக்கர் குலக் கூட்டததினரிடம் நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து  செயலாற்றுங்கள். என் தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே சென்று அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான்.

இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான்.

அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான்.

மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.

உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி சித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்க முடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவ பலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர்.

தேவர்கள் உடனே பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர்.

தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திர மலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான்.

அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்மனை வணங்கினான்.

" லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும்.  மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்."

யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் தேவர்கள் முறையிட்டார்கள்.

காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். எவன் தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான்.

இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான்.

ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான்.

கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன்.

பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள்.

ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான்.

பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள் கேட்டார்கள். அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர்.

நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.

மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.

ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹரியை புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர்.

உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான்.

இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன்.

ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.  அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர்.

தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர். அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார். நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே! அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.

அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.  இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர்.

இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார்.

அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள். ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன்.

எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தால், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும். நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர்.

கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன. தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.

தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல முடியும். இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான். தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன்.

இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா?  அதைப் பார்ப்போம். இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன். நீ சரண்புகுந்த அந்த ஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான்.

தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார்.

அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான்.

நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.

ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர்.

ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான். தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர்.

நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்..

இது தான் திருமாலின் 4வது அவதாரமான நரசிம்ம அவதாரம் பற்றியது...

5 வது அவதாரம்... 
வாமன அவதாரம்.. நாளை தொடரும்...

தசாவதாரம்

#தசாவதாரம்

#மூன்றாவது_அவதாரம்
#வராக_அவதாரம்...

ஒரு சமயம், மகரிஷிகள்  நால்வர் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம்  செல்லும்போது, ஏழாவது நுழை வாயிலில் காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் அந்த மகரிஷிகளைத் தடுத்தார்கள்.

எந்த நேரத்திலும் பகவானைத் தரிசிக்கும் அருளைப் பெற்ற அந்த ரிஷிகள் கோபம் அடைந்து, " நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்" என்று சாபமிட்டார்கள்.

ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, " உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும் " என்று கேட்டனர்.

விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம்,    "இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான்.இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து, பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள் " என்று கூறினார்.

அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.

அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து, ' எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது ' என்று வரம் பெற்று, மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.

இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களைப் பிடித்துக் கொன்று வந்தான்.

அவனுடைய கொடூரமான உருவத்தைப் பார்த்துத் தேவர்கள் அனைவரும் அவன் கண்ணில் படாமல் ஒளிந்து வாழ்ந்தார்கள்.

அவன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான். அதற்கு வருண பகவான், " அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம்  எடுத்து வருவார். அவரிடம் போராடு " என்று சொன்னார்.

அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.

பூலோகம் நீர்ப் பிரளயத்தில் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச் சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.

இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து, அசுர லோகத்தில் சுகமாக இருந்தான்.

அப்போது நாரதர் அங்கே தோன்றி, " இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும் பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார் " என்று சொன்னார். உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.

வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன கதாயுதத்தால் அடித்தான். இருவருக்கும் கடும் போர் உண்டானது.

இரண்யாட்சன் அடித்த அடியால், மகா விஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன கதாயுதத்தால் தாக்க, மகாவிஷ்ணு தம் இடக்காலால் அதை் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.

இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது. இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான்.

பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.

சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகா விஷ்ணு. அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத் தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான்.  அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்....

இது தான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது...

4 வது அவதாரம்...  நரசிம்ம அவதாரம்.. நாளை. தொடரும்..

Monday, 21 May 2018

தசாவதாரம்

தசாவதாரம் 2
கூர்ம அவதாரம் ...

பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.

ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்தில் இருந்து திரும்பி தேவலோகத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.  துர்வாசர் தேவலோகம் நோக்கி வரும்போது, அவர் கழுத்தில் பரமன் அளித்த மலர்மாலையை அணிந்திருந்தார். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துர்வாசர் பார்த்தார். முனிவர் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துர்வாசருக்கு கோபம் வந்தது.

இந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன.  துர்வாச முனிவர் இட்ட சாபத்தினால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவலோகத்திலிருந்த அனைவருக்கும், தேவேந்திரனால் சாபம் உண்டானது. தேவர்கள் அனைவரும் தமது பலம் முழுவதையும் இழந்தார்கள். அப்போது, அசுரர்களின் பலம் ஓங்கி, அவர்களின் அட்டகாசம் அதிகமாகி, தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். அதனால், தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர்.

பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை. அனைவரும், விமோசனம் வேண்டிப், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்கள். மகாவிஷ்ணு, ” தேவேந்திரா, அசுரர்களுடன் போரிட்டு அழிக்கும் சக்தி உங்களிடம் இல்லை. அதனால், நீங்கள் அசுரர்களுடன் சமாதானமாகி, திருப்பாற்கடலைக் கடைந்து, தேவ அமிர்தம் எடுத்து உண்டால் பலம் உண்டாகும். சாகா வரம் கிடைக்கும். பிறகு நீங்கள் இழந்ததைப் பெறலாம்” என்று கூறினார்.

இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்திரனிடம், இந்திரனே நீ உடனே அசுரர்களை நெருங்கி அமிர்தம் கடையும் காரியத்தில் அவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் போனார்.

எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பார்த்து அரக்கர் குலத்தினர் ஏளனம் செய்தனர். எனினும் அவன் வந்த காரியம் தம் குலத்திற்கு மிகவும் உயர்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிர்தம் கடையும் விஷயம் என்பது தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டனர். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காரியத்திற்கு உதவ சம்மதித்தான்.

நாராயணன் இட்ட கட்டளைப்படி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையைத் தூக்கிக் கொண்டு பாற்கடலை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் களைப்புற்ற இந்திரன், பலி முதலியோர் மந்திரமலையை பூமியில் வைத்து விட்டார்கள். கீழே விழுந்த மலை பலரைத் தாக்கிக் கொன்று விட்டது.

இதை அறிந்த ஸ்ரீஹரி கருடன் மீது ஏறி அங்கு வந்தார். வந்து தன் கருணைக் கடாட்சத்தால் காயம் அடைந்தவர்களைக் குணப்படுத்தினார். மலையைக் கருடன் மீது விளையாட்டாக தூக்கி வைத்துக் கொண்டு பாற்கடல் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினார். வாசுகி என்ற பாம்பிற்கு அமிர்தத்தில் பங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். தேவர், அசுரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு மந்திரகிரியைக் கடையும் கயிறாக மந்திர மலையை சுற்றி வளைத்துக் கொண்டது.

தேவர்கள் பாம்பின் தலையைப் பிடிக்க, அசுரர்கள், ” நாங்கள் கேவலமானவர்கள் இல்லை. பாம்பின் வாலை நாங்கள் பிடிக்க மாட்டோம். ” என்று வீரம் பேசினார்கள்.அவர்கள் விருப்பப்படி, தேவர்கள் பாம்பின் வாளையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தார மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது.

அச் சமயத்தில் மகாவிஷ்ணு ஒரு பெரிய ஆமை போன்ற கூர்ம அவதாரம் ( கூர்மம் = ஆமை ) எடுத்துக் கடலுக்குள் புகுந்து தன முதுகால் மலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். மீண்டும் பாற்கடலைக் கடைந்தபோது, பாம்பின் வாயிலிருந்து விஷக்காற்று வெளிப்பட்டது. அதனால், தலைப் பக்கத்திலிருந்த அசுரர்கள் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தை இழந்தார்கள்.

அப்போது மிகவும் கொடுமையான ஆலகால விஷம் பாற்கடலிலிருந்து வெளியே வந்தது. அதன் வேகத்தைப் பார்த்துப் பயந்த தேவர்களும், அசுரர்களும் மூளைக்கு ஒருவராக ஓடினார்கள். உடனே, தேவேந்திரன் சில தேவர்களுடன் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் அங்கே தோன்றிப் பாற்கடலிலிருந்த ஆலகால விஷத்தைத் தமது கையில் எடுத்துப் பருகினார். அதைக்கண்ட பார்வதிதேவி, ஆலகால விஷம் கீழே இறங்காதபடி சிவனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் கழுத்தளவிலேயே நின்று விட்டது. கழுத்து நீல நிறமானது. ( அதனால்தான் சிவபெருமானுக்குத் ‘ திருநீலகண்டன்’ என்ற பெயர் உண்டாகியது.)

மீண்டும் பாற்கடலைக் கடைந்தபோது, காமதேனு என்ற தேவ பசு தோன்ற, முனிவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்.  பிறகு, வெண்மையான குதிரை தோன்ற, அசுரர்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின், கற்பக மரம் தோன்றித் தேவலோகத்தை அடைந்தது. பிறகு, அப்சரஸ் என்ற நடனப் பெண்கள் தோன்றி, தேவலோகத்தில் நடனமாடச் சென்றார்கள். பிறகு, மகாலட்சுமி தோன்றி மகாவிஷ்ணுவுக்கு மாலை இட்டாள். பாற்கடலிலிருந்து வாருணி தேவி தோன்ற, அசுரர்கள் கைப்பற்றினர்.

இறுதியாக, மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி ஒரு தங்கக் கலசத்தில் தேவ அமிர்தத்தை ஏந்தியவாறு தோன்றினார். அசுரர்கள் வேகமாகச் சென்று, தேவர்களை முந்திக்கொண்டு அக் கலசத்தைப் பறித்துக் கொண்டார்கள். அப்போது, மகாவிஷ்ணு மோகினி என்ற அழகான பெண் உருவம் எடுத்து, அசுரர்களை மயக்கி, அமிர்தத்தைத் தேவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து, அசுரர்களை ஏமாற்றினார்.

அப்போது, ராகு என்னும் அசுரன் தந்திரமாகத் தேவர்களின் வரிசையில் சூரியன், சந்திரனுக்கு நடுவில் வந்து அமர்ந்து, அமிர்தத்தைப் பருகி விட்டான். அவன் அசுரன் என்பதை அறிந்து மகாவிஷ்ணு தன சக்கராயுதத்தால் ராகுவின் தலையை வெட்டினார். தேவ அமிர்தத்தை அருந்தியிருந்ததால், ராகு மரணம் அடையவில்லை. அப்போது, பிரம்மா ராகுவின் தலையுடன் ஒரு பாம்பின் உடலையும், அவன் உடலோடு பாம்பின் தலையையும் இணைத்து விட, ராகு, கேது என்று இரு கிரகங்கள் உண்டாயின.

அமிர்த பானத்தை அருந்திய தேவர்கள் புதிய பலமும் சாகாவரமும் பெற்று, அசுரர்களை வென்று அவர்களைப் பாதாள லோகத்துக்கு ஓடும்படி விரட்டிவிட்டு, மீண்டும் தேவ லோகத்தைக் கைப்பற்றினார்கள்.

இந்த கூர்மஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்...

குறிப்பு: கம்போடியா எனும் நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலான அங்கோர் வாட் எனும் விஷ்ணு பகவானுக்கான மிகப் பழமையான ஆலயத்தில், தென்புறத்தில், மூன்றாவது இணைப்பு பகுதியிலே, பாற்கடலில் அமிர்தம் எடுக்கும் காட்சி அழகாக விபரிக்கப் பட்டுள்ளது.

3 வது அவதாரம்... வராக அவதாரம்.. நாளை தொடரும்

தசாவதாரம்

இன்று முதல் 10 நாட்களுக்கு , திருமாலின் 10 அவதாரங்களை தினமும்  ஒன்று பதிவு செய்கிறேன் .. படித்து அருள் பெறுங்கள்...

#தசாவதாரம் - 1

#மச்சாவதாரம்...

இந்த புனிதமான மச்சாவதார கதையை கேட்பவர்கள், படிப்பவர்-களின் பாவங்கள் எல்லாம் நீங்கி அவர்கள் அபிலாஷைகள் நிறை-வேறும் என்பது உறுதி..

படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.

மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும். அவர் ஒரு சமயம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன.

அச் சமயத்தில், குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக்கொண்டான். வேதங்களின் உதவியால் தான் பிரம்மன் படைக்கும் தொழிலை் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான்.

அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும் போது, கையில் ஒரு சிறு மீன் காணப்பட்டது.

அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், அந்த மீனை மீண்டும் நீரில் விட முயலும் போது, அந்த மீன், " மகரிஷியே, என்னை நீரில் விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை இரையாக்கி விடும். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டியது.

அதன்படி முனிவர் அந்த மீனைத் தன கமண்டலத்தில் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் அக்கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. பிறகு, அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதனுள்ளும் பெரிதாக வளர்ந்து விட்டது. பிறகு குளத்திலும், பெரிய ஏரியிலும் விட்டார்.

அது மிகப் பெரிதாக வளர்ந்து விடவே, இறுதியில், சமுத்திரத்தில் கொண்டுபோய் விட முயலும்போது, " மகரிஷியே, இந்தச் சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே. அது என்னைத் தின்று விடுமே " என்று கேட்டது.

அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்துகொண்ட முனிவர்," தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன ? " என்று கேட்டார்.

"மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப் போகின்றன. அச் சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு  (சப்த ரிஷிகள் = முக்கியமான ஏழு முனிவர்கள்) , நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். அப்போது, பிரம்மனின் உறக்கம் முடியும்வரை என் வாயுவால் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்.

அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்" என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதன்பின்னர், மச்ச உருவில் தோன்றிய மகாவிஷ்ணுவை நோக்கி, சத்திய விரதன் தியானம் செய்து கொண்டிருந்தார். ஏழாவது நாளில், பெரிய பிரளயம் (பிரளயம் = மிகப் பெரிய வெள்ளம்) ஏற்பட்டது. அப்போது, பெரியதோர் ஓடம் அங்கே வந்தது.

மகாவிஷ்ணு கூறியவாறே, சப்த ரிஷிகளோடு மூலிகை வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் போது, வாயுவால் அலைக்கழிக்கப்பட்டது.

அப்போது மச்சமூர்த்தி தோன்றிப் படகைத் தன் கொம்புடன் சேர்த்து ஒரு பாம்பால் இறுகக் கட்டி ஓடம் கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார். பிறகு, மகாவிஷ்ணு மச்ச புராணத்தை உபதேசித்தார். பிரம்மனும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.

அடுத்து சிருஷ்டித் தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேதங்கள் காணாமல் போனது பிரம்மனுக்குத் தெரிந்தது. அதன்பின், ஹயக்கிரீவன் வேதங்களைக் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.

பிரம்மனும், தடங்கலின்றித் தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார்...

தசாவதாரம் - 2. கூர்ம அவதாரம்.....

☘தொகுப்பு  : திருமதி லதா வெங்கடேஷ்வரன்.

Tuesday, 15 May 2018

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்

(இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)
 
ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஸைல விமர்தனம்
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும் தேவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

தாரகாஸூர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்திதம்
ஸக்திபாணிஞ்ச தேவேஸம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வரதநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும் தேவனும் ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும் மனதைக் கவருகின்றவனும் ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

 குமாரம் முநிஸார் தூலமாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(குமரக் கடவுளும் சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும் வள்ளியின் கணவனும் உலகங்களுக்கு காரணமானவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

ப்ரளயஸ்திதி கர்தாரம் ஆதிகர்தாரமீஸ்வரம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும் முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும் ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸூதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும் எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும் ஜடையை தரித்தவனுமான சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரமிதம் ய: படேத் ஸ்ருணுயாந்நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் லபேத்

(எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்தோத்திரத்தை படிப்பானோ அவன் கோரிய பொருளை உடன் அடைவான். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பான்.)

|| இதி ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

Sunday, 13 May 2018

லிங்காஷ்டகம்

#லிங்காஷ்டகம்

1.ப்ரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

2.தேவ முனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷக லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

3.சர்வ சுகந்த சுலேபித லிங்கம்
புத்தி விவார்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

4.கனக மஹாமணி பூஷித லிங்கம்
பனிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ன வினாஷன லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

5.குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹாரசு சோபித லிங்கம்
சஞ்சித பாப விநாஷன லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

6.தேவ கணார்ச்சித சேவித லிங்கம்
பாவயிற் பக்தி பீரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

7.அஷ்ட  தளோபரி வேஷ்டித லிங்கம்
சர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாஷன லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

8.சுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பரம பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யஹ் படேத் சிவ சன்னிதௌ
சிவலோக மவாப்னோதி
சிவேன சஹ மோததே.

#ஸ்ரீ_ஸுக்தம்

#ஸ்ரீ_ஸுக்தம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா

பொருள் : விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்

பொருள் : அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.

அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

பொருள் : குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்

பொருள் : மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம்
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

பொருள் : பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.

ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ

பொருள் : சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.

உபைது மாம் தேவஸக கீர்த்தஸ்ச மணிநா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே

பொருள் : நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.

க்ஷúத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்

பொருள் : உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.

கந்த - த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீகும் ஸர்வ - பூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்

பொருள் : வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.

மனஸாகாமமாஹுதிம் வாஸ: ஸத்ய மசீமஹி
பசூநாம்ரூபமந்தஸ்ய மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா

பொருள் : மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.

கர்த்தமேந ப்ரஜாபூதா மயிஸம்பவ கர்தம
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்

பொருள் : கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்துகொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.

ஆபஸ் ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே
நிக தேவீம் மாதரம்ச்ரியம் வாஸயமே குலே

பொருள் : ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸ்வர்ணாம் ஹேமமாலினீம்
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ மமாவஹ

பொருள் : கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.

ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ

பொருள் : பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !

மாம் ம ஆவஹக ஜாதவேதோ லக்ஷ்மி மநமகாமினிம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோதாஸ் யோஸ் வாநீவிந்தேயம் புருஷனாநஹம்

பொருள் : ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.

பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்மதளாய தாக்ஷி
விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ

பொருள் : தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.

ஸ்ரியே ஜாத ஸ்ரியே ஆநிர்யாய
ஸ்ரியம் வயோஜநித்ருப்யோ ததாது
ஸ்ரியம் வசாநாம் அம்ருத த்வமாயன்
பஜந்தி சத்யஸ் சவிதா விதத்யூன்

பொருள் : லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.

ச்ரிய ஏவைனம் தச்ச்ரியா மாததாதி ஸந்ததம்
ருசாவஷட்கரத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபிஹி.

பொருள் : எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

பொருள் : இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும். (இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)

Saturday, 12 May 2018

பஜகோவிந்தம்









🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் பாதரால்_இயற்றப்பட்ட_#பஜ கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀காவியம்🍀  : 31
குரு சரம்ணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாரத்Sசிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

🍀#ஸாரம்:🍀
*************
குருவின் சரணாரவிந்தத்தை நிரந்தர பக்திச்ரத்தையுடன் இறுக பற்றி (மேல்சொன்ன படி) மனோநியந்த்ரணம், இந்திரிய தமனம் முதலிய வ்ழி (பின்பற்றி) இந்த (ஜனன மரண) ஸம்சாரத்திலிருந்து ஈடுபட்டுஉன் இதயத்துள் நிரந்தரமாக பிரகாசிக்கும் அந்த இறைவனை (ஆத்மஸ்வரூபத்தை – SELF) அடைய்வாயாக.

🍀#விளக்கம்:🍀
****************
நாம் ஏதொரு காரியம் செய்யும்போதும் குருவின் அருள் கிடைக்க வேண்டும்.  அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும்.  குரு க்ருபை இல்லயேல் நம் பிரய்த்னம் பலம் தராது.  ந்ம்மால் இறைவனை காணமுடியாது (ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்).  அதர்க்கு குரு வழிகாட்ட்வேண்டும். "குருவருள் இல்லயேல் திருவருள் இல்லை" என்ற மகாவாக்கியம் இங்கு கவனத்திர்க்கு வரவேண்டும்.

அந்த குருவிர்க்கு நாம் கடமை பட்டிருக்கிறோம்.  அவர் சொல்லில் ந்ம்பிககை வைத்து, அவ்ர் சொல்படி இயங்கினால் அவர் அருள் கிடைக்கும்.  அப்புறம் நமக்கு வெற்றிதான்.  இந்த மஹா தத்துவத்தை கடைசியில் வைத்திருக்கிறார்.  நம்பிக்கையுட்ன் குருவின் பாதகமலத்தை பிடித்து அவர் காண்பித்தபடி மனோலயம், இந்திரிய அடக்கம், ஜபம் வழி தியானம் இப்படி செய்தால் ஸமாதி நிலை கிடைக்கும்.

இப்படி தியான் நிலை நீடித்திருந்தால் அதாவது உலக நினைப்பு இல்லாமல் எப்பொழுதும ஆத்ம ஸ்வரூப அனுபூதி நிலையில் இருந்தால் அது தான் ஸமாதி எனப்படும்.  இது தான் ஆத்ம ஸாக்ஷாத்க்காரம் அன்ப்படும் நிலை.  இது தான் மனித ஜாதியின் வாழ்வின் நோக்கம்.  இதுவேதான் வாழ்வின் ரகசியம் கூட.

🍀#முடிவுரை:🍀
*****************
பவகத்கீதை எப்படி ஐந்தாவது வேதமென்று கொண்டாடுகிறோமொ அதேபொல் பஜகோவிந்தம் அத்வைத ஸிந்த்தாந்தத்தின் ஸாரம் முழுவதும் அட்ங்கியிருக்கும் ஒரு திவ்ய காடியம்.  ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் இதை தன் ஸ்வானுபத்திலிருந்து கடைந்தெடுத்து தந்திருக்கிறார்.  இதை படித்து அதன் படி வாழ்க்கை வாழ்ந்தால் ஆதமானுபூதி கிடைக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.

🍀இன்றுடன் பஜகோவிந்தம் நிறைவு பெற்றது .🍀

#தொகுப்பு  : 🍀 #திருமதி_லதா வெங்கடேஷ்வரன்.🍀

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...