Saturday, 2 April 2022

 அனைவருக்கும்

யுகாதி திருநாள்/

குடிபாட்வா நல்வாழ்த்துக்கள்💐


#உகாதி_பச்சடி 

 

உகாதி தினத்தன்று செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு தான் உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது #அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும். இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக வாழ்ந்திட, #வாழ்க்கையின்_அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும். இப்போது அந்த உகாதி பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 


#தேவையானபொருட்கள்....


மாங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது) வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 1 கப் (தட்டியது) தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் புளி சாறு - 4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 3 கப் 


#செய்முறை.... 


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி!!!

🌹🌹🌹🌹🌹🌹🌹


#பேவு_பெல்லா_பச்சடி_பிரம்ம_தேவர்_வழிபாடு_வசந்தம்_வரவேற்கும்_சைத்ர_மாசம்_யுகாதி_பண்டிகையின்_சிறப்புகள்!


பா.விஜயலட்சுமி


யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர்.


யுகாதி

பச்சடி

ஹைதராபத்: ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மக்களின் புத்தாண்டு தினமான 

`#யுகாதி_பண்டிகை’  விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. யுகாதி அல்லது உகாதி என்று இருவகையாக சொல்லாடப்படுகிறது இந்த வருடப் பிறப்பு பண்டிகை.


மகாராஷ்டிரத்தில் இந்நாள் 

‘குடிபாட்வா’ 

எனவும், சிந்தி மக்கள் 

‘சேதி சந்த்’ எனவும் கொண்டாடு

கின்றனர்.  தெலுங்கு வருடப் பிறப்பன்று ஆதிக்கம் பெற்றுள்ள கிரகம் அந்த ஆண்டின் ராஜாவாகவும், தமிழ் வருடப் பிறப்பன்று அந்நாளின் அதிபதியான கிரகம் அவ்வருடத்தின் மந்திரியாகவும் கூறப்படுகின்றன. 


ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாசைக்கு மறுதினம் யுகாதிப் பண்டிகை கொண்டாடப்

படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்நாளில் தொடங்கியது என்பதைக் குறிக்கும் வகையில்  ‘யுகாதி’ என்பதாக பெயரிடப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.


சைத்ர மாதத்தின் முதல்நாளே உலகை பிரம்மன் படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. எனவே இந்நாளில் புதிய முயற்சிகள் மேற்கொள்வது கூடுதல் பலன்களைத் தரும்.  வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகவும் இது அமைகிறது. 


திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உற்சவாரம்பங்கள் அனைத்தும் யுகாதி முதல் நாளில்தான் சிறப்பாக துவங்கப்படும். ‘#யுகாதி_ஆஸ்தானம்’ என்கிற சிறப்பு வழிபாடும் நடைபெறும்.  


இதற்காக கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்படும். 

 யுகாதியன்று அதிகாலையே மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடைபெறும். பின்பு, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவரான மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். 


அன்றைய வருடத்தைய பஞ்சாங்கம் படிக்கப்பட்டு புத்தாண்டு பலன்கள் கூறப்படும். மேலும், அன்றைய தினத்தில் ராமாயண சொற்பொழிவு கேட்டால் வருடப்பிறப்பு சுபிச்சமாக அமையும் என்பது ஐதீகமாம்.


யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர். சிலர் வயல்களில் விளைந்த தானியங்களையும் வீட்டின் முகப்பில் கட்டுகின்றனர். அம்பிகைக்கான பூஜை இந்நாளில் விசேஷமானது. 


பின்னர், முதன்முதலாக ‘யுகாதி பச்சடி’ செய்யப்படுகிறது. அதில் 

வேப்பம்பூ, 

மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவை சேர்க்கப்படும். பிறக்கும் புத்தாண்டு இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி என அனைத்து குண நலன்களையும் ஒரு சேர உடையதாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது இந்த பச்சடி. இதற்கு கன்னட மொழியில் ‘பேவு பெல்லா’ 

என்று பெயர். பெரும்பாலனவர்கள் இதைப் பச்சைபச்சடி என்கின்றனர்.


ஒப்பட்லு, போளி, பாயசம், புளியோகரா என விருந்து உணவுகள் நெய்வேத்தியமாக படைக்கப்படுகின்றன. அந்த் ஆண்டை வரவேற்கும் வகையில் புதிய வருட பஞ்சாங்கம் மற்றும் பஞ்சகவ்யமும் பூஜையில் வைக்கப்படுகிறது. மாலையில் அந்த வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டு, இறைவனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. மாலையில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்நாளை ஆடல், பாடல் என கொண்டாடு

கின்றனர். மிகமுக்கியமாக பிரம்ம தேவரை இந்நாளில் வழிபடுவது எல்லா நலன்களையும் வாழ்க்கையில் உண்டாக்கும்!

🌹🌹🌹🌹🌹🌹🌹


#குடி_பாட்வா


சத்ரபதி சிவாஜி மஹராஜ் வெற்றிக்குமேல் வெற்றி பெற்று இந்த "குடிபாட்வா" தினத்தன்று

திரும்பி வந்தாராம்.


பிரும்மா இன்றுதான் எல்லா லோகங்களையும் சிருஷ்டித்தாராம். 


இதனால்தான் மகாராஷ்டிரா  மாநிலத்தில் ஒவ்வொரு

வீட்டு வாசலிலும் பால்கனியிலும் சன்னலிலும்

"குடி" {gudi} என்ற ஒரு அடையாளம் அமைக்கப்படுகிறது பிரும்மாவின் கொடி அது.


ஒரு மூங்கில் கம்பை எடுத்து அதை சிவப்பு ,பச்சை வர்ணப் பட்டுத்துணியால மூடி அதை ஒரு சொம்பால் மூடிவிடுகிறார்கள்.


அந்தப்பாத்திரம் வெள்ளியகாவோ செம்பாகவோ இருக்க வேண்டும்.


 பின் அந்தக்கம்பில் ஸ்வஸ்திக் சிம்பலை எழுதுகிறார்கள்.


பின் அதன் மேல் பெரிய மாலையும் மாட்டுகிறார்கள்.


 பின் அதை எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் வைக்கிறார்கள்.


இந்த "குடி" அடையாளம் பல தீய சக்திகளை விரட்டி வீட்டிற்கு வளத்தைத் தருகிறது என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது.


இந்த நன்நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலையும் "ரங்கோலி" என்ற கோலங்கள் பல வர்ணங்களுடன் அலங்கரிக்கின்றன.


அதில் புள்ளிக்கோலங்கள்,

கணபதி, சிவாஜி

போன்ற சித்திரங்கள், 

இயற்கைக்காட்சிகள்

என்று ஒன்றை ஒன்று சக்கைப்போடு போடுகின்றன.


இன்றுதான் மஹாவிஷ்ணு 'மத்ஸ்யாவதாரம்"

எடுத்தார் என்றும் கூறுகின்றனர்.


பூரண் போளி என்ற வெல்லப்போளியும் 'ஸ்ரீகண்ட்""என்ற இனிப்பும் அவர்களது புத்தாண்டு

ஸ்பெஷல் .

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...