'#பாபஹர_தசமி'
"#தசஹரதசமி'
வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமிதிதி, "#தசஹரதசமி' என்றும், "#பாபஹர_தசமி' என்றும் கூறப்படுகிறது.
இந்நாளில்தான் #ஸ்ரீராமபிரான், இலங்கை வேந்தன் #ராவணனைக் கொன்ற பாபம் நீங்க, #மணலில்_லிங்கப்_பிரதிஷ்டை செய்து சேதுக்கரையில் வழிபட்டார் என்று "#ஸ்ரீ_காந்தம்' என்னும் நூல் கூறுகிறது.
#வைகாசி_சுக்லபட்ச_தசமி திதியானது பத்துவிதப் பாபங்களைப் போக்கும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோயிலுக்_
குள்ளிருக்கும் புனித நீர்நிலைகளிலும் நீராடினால் பாபங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
மறுபிறப்பு இல்லாத நிலைபெறுவதற்கு பாப புண்ணியங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பாபம் செய்தால் நரகம்; புண்ணியம் செய்தால் சொர்க்கம்; இந்த இரண்டும் வீடுபேற்றுக்கு முட்டுக்கட்டைகள் என்று கூறப்படுவதால், "#நல்லதை_நினை; #நல்லதைச்_செய்; #நல்லதே_நடக்கும்' என்று பகவான் #கிருஷ்ணன் கூறியதுபோல் தீவினைகள் செய்யாமல். நம்மால் முடிந்த அளவு அனைவருக்கும் நல்லது செய்தாலே மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.
இந்த காலகட்டத்தில் பூலோகத்தில் மானிடர்களாகப் பிறந்த ஜீவன்கள் துலாக்கோலின் சமநிலை போல வாழமுடியாது என்பதால்தான் இந்த #வைகாசி_சுக்லபட்ச_தசமியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகளைப் போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பினைத் தருகிறது. அதனால் தீவினைகள் அழியும் எனப்படுவதால் "#பாபஹர_தசமி' போற்றப்படுகிறது.
#அது_என்ன_பத்துப்_பாபங்கள்?
#வாக்கினால்_செய்வது_நான்கு;
#சரீரத்தால்_செய்வது_மூன்று;
#மனதால்_இழைப்பது_மூன்று.
ஆக, இந்தப் #பத்துப்_பாபங்களையும் போக்கிக் கொள்ள இந்தப் "பாபஹர தசமி' உதவுகிறது.
வாக்கினால் செய்வது நான்கு! அவை,கடுஞ்சொல்; உண்மையில்லாத பேச்சு; அவதூறாகப் பேசுவது; அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.
சரீரத்தால் செய்வது மூன்று: அவை, நமக்குக் கொடுக்கப்படாத பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர் மனைவி மீது ஆசைப்படுவது.
மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று: அவை, மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது; மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல்; மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.
இந்தப் பத்து பாபங்களும் குறிப்பிட்ட புண்ணியகாலமான வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.
ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே, அந்தப் புண்ணிய காலத்தில் தங்கள் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ, குளத்திலோ நீராடலாம். நதியிலும் ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும், சிவபெருமானையும், திருமாலையும் மனதில் நினைத்து இனிமேல் பாபங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாபங்கள் நீங்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமிதிதியில் #கங்காதேவி, #தேவலோகத்திலிருந்து_பகீரதன்_முயற்சியால்_பூலோகத்திற்கு_இறங்கி_வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று #கங்காதேவியை_நினைத்து_நீராடினாலும் நம்முடைய பாபங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
வைகாசி #அமாவாசைக்குப்பின்_பிரதமையிலிருந்து_தசமி வரை #கங்கை_நதியில்_நீராடினால்_பாபங்கள்_நீங்குவதுடன், #அஸ்வமேத_யாகம்_செய்த_பலன்_கிட்டும்' என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
இந்நாளில் முன்னோர்களுக்குப் பின் பிதுர்பூஜை செய்வது, போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேத நூல்கள் கூறுகின்றன.
நன்றி : தினமணி.
No comments:
Post a Comment