Friday, 24 April 2020

ஸ்ரீமஹா #வித்யா #கவசம்...

#ஸ்ரீமஹா_வித்யா_கவசம்...

(காளீ, தாரா, காமாக்யா,  புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகளாமுகி, மாதங்கீ, கமலா என்ற இந்த பத்து தேவிகளையே மகா வித்யைகள் என்றழைப்பர். தாந்த்ரீக வழிபாடுகளில் இவர்களே முதன்மை பெற்று விளங்குகிறார்கள். இந்த கவசத்தை எவரொருவர் படித்து வருகிறாரோ, அவர்கள் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை)

ஸ்ரீ கணேச உவாச:

ச்ருணுதேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வ சித்திதம்
ஆத்யாயம் மஹா வித்யாயா சர்வாபீஷ்ட பலப்ரதம்||

பொருள்:

கணேசர் கூறுகிறார்:-

ஹே தேவி! அனைத்தையும் பூர்த்தி செய்யும் வழியைக் காட்டும் ஓர் கவசத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேள்!. அனைத்திற்கும் ஆதி தேவியாக விளங்கும் ஸ்ரீ மஹா வித்யையின் இக்கவசத்தை அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் பொருட்டு கூறுகிறேன்.

2). கவசஸ்ய ரிஷிர் தேவி சதாஷிவ இதீரித,
ச2ந்தோ அனுஷ்டுப், தேவதா ச மஹாவித்யா
ப்ரகீர்த்திதா, தர்ம அர்த்த காம
மோக்ஷானாம் விநியோகஸ்ச சாதனே

பொருள்:

இக்கவசத்தின் ரிஷி - தேவி மற்றும் சதாசிவர், சந்தம் - அநுஷ்டுப், உபாசனை தெய்வம் - மஹாவித்யை, உபாஸிக்கும் நோக்கம் - தர்மம் நிலைக்க, விருப்பங்கள் நிறைவேற மற்றும் முக்தி பெற.

3). ஐம் கர பாது சீர்ஷே மாம், காம பீஜம் தட ஹ்ருதி|
ரிமா பீஜம் சதா பாது நபௌ குஹ்யே ச பாடயோ||

பொருள்:

"ஐம்" என் சிரசைக் காக்கட்டும்.
"காம பீஜம்" என் ஹ்ருதயத்தைக் காக்கட்டும்.
"ரிமா பீஜம்" என் வயிறு, அந்தரங்கப் பகுதிகள் மற்றும் என் பாதத்தைக் காக்கட்டும்.

4). லலாதே சுந்தரீ பாது, உக்ரா மாம் கண்ட தேசதா,
பகமாலா சர்வ கேதர், லிங்கே சைதன்ய ரூபிணி

பொருள்:

பார்வைக்கு இனிமையான சுந்தர அழகுடையவள் என் நெற்றியைக் காக்கப்டும்.
உக்ர ரூப தேவதை என் கழுத்தைக் காக்கட்டும்.
பகமாலினி என் முழு உடலையும் காக்கட்டும்.
அறிவின் வடிவாக விளங்கும் சைதன்ய ரூப தேவி என் குறிகளைக் காக்கட்டும்.

5). பூர்வ மாம் பாது வாராஹி, பிரஹ்மாணி தக்ஷிணே ததா,
உத்தரே வைஷ்ணவீ பாது, வக்ஷ காருண்ய மானஸா

பொருள்:

கிழக்கில் என்னை வாராஹி காக்கட்டும்.
தெற்கில் என்னை பிரஹ்மாணி காக்கட்டும்.
வடக்கில் என்னை வைஷ்ணவீ காக்கட்டும்
சிந்தை முழுதும் இரக்கம் நிறைந்துள்ள தேவியானவள் என் மார்பைக் காக்கட்டும்.

6). மஹேஸ்வரீ ச ஆக்ஜ்ஞேயாம், நைர்ரிததி கமலா ததா,
வயவ்யாம் பாது கௌமாரி, சாமுண்டா ஹீசகீ ஆவது

பொருள்:

தென்கிழக்கில் அந்த மஹா தேவீ என்னைக் காக்கட்டும்.
தென்மேற்கில் மஹாலக்ஷ்மி என்னைக்  காக்கட்டும்.
வடமேற்கில் என்னை கௌமாரி காக்கட்டும்.
சாமுண்டி தேவி நான் களைப்படைந்த காலத்தில் என்னைக் காக்கட்டும்.

7). இதம் கவசம் ஆஜ்ஞத்வா, மஹா வித்யாம் யோ ஜபேத்,
ந ஃபஹ்லம் ஜாயதே தஸ்ய, கல்ப கோடி ஷதைரபி

பொருள்:

இக்கவசத்தை படிப்பவர்கள், இந்த "மகா வித்யை"யை ஜபிப்பவர்களுக்கு, நூறு கோடி வருடங்களானாலும் கிடைக்காதது எதுவுமில்லை.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...