Sunday, 29 September 2019

நவராத்திரி_சப்த_கன்னியர்களின்_அபூர்வ_ஸ்லோகம்

நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

#நவராத்திரி_சப்த_கன்னியர்களின்_அபூர்வ_ஸ்லோகம்

1. பிராம்ஹி த்யானம்:

தண்டம் கமண்டலும் கச்சாத் அக்ஷஸூத்ரமதாபயம்
பிப்ரதி கனகச்யா ப்ராம்ஹீ க்ருஷ்ணாஜினோஜ்வலா

மந்த்ரம்:

    ஓம் ப்ராம் ப்ராஹ்ம்யை நம:
    ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நமஹ

பிராம்ஹி காயத்ரி:

ஓம் ப்ரஹ்மசக்த்யை வித்மஹே பீதவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹீ ப்ரசோதயாத்

பூரண த்யானம்:
அக்ஷஸ்ரக் சுப குண்டி கேச தததீம்
ஹஸ்தைர் வரம் சாபயம்
தேவீ ஸௌம்ய முகோத்பவாம் ஸ்மிதமுகீம்
ஹம்ஸே ஸ்திதாம் வாஹனே
ப்ரம்ஹாணீம் ஜகதாம் சுபம் விதததீம்
ஆத்யாமஹம் மாதரம்
வந்தே ஸ்வர்ணஸமான காந்திருதிராம்
சக்திம் ப்ராம் ப்ரம்ஹணீ:
தேவி மஹாத்மியத்தில் ப்ராஹ்மி:
ஹம்ஸயுக்த விமானஸ்தே பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரிசாம்ப க்ஷரிகே தேவி நாராயணி நமோஸ்துதே.

பிராம்ஹி வடிவம் எடுத்து ஹம்ஸம் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்ப்பைப் புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு  நமஸ்காரம். அம்பிகையின் ஒரு அம்சம் பிரம்மசக்தி. சிருஷ்டி ஆற்றல் பெற்றது. ப்ராம்ஹணீ என்பதற்கு பரமசிவனின் பத்தினி என்றும் பெயர்.  தோலிற்குத் தலைவியானவள் இத்தேவி. சொறி, சிரங்கு நோய் ஏற்பட்டவர்கள் இத்தேவியை வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும்,  சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை நோயை தீர்ப்பாள். தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித்  தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

2. மாஹேஸ்வரி த்யானம்:

சூலம் பரச்வதம் க்ஷூத்ர தந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்தீ ஹிம சங்காசா த்யேயா மஹேச்வரி சுபா

மந்த்ரம்:

ஓம் மாம் மாஹேஸ்வர்யை நமஹ
ஓம் ஈளாம் மாஹேஸ்வரி கன்யகாயை நமஹ
மாஹேஸ்வரி காயத்ரி:
ஓம் ஸ்வேதவர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்.

தேவி மாஹாத்மியத்தில் மாஹேஸ்வரி:

த்ரிசூல சந்த்ரோ மஹாவ்ருக்ஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண நாராயணீ நமோஸ்துதே

மகேஸ்வரி வடிவம் கொண்டு, திரிசூலமும், பிறை மதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணீ உனக்கு நமஸ்காரம்.  பரமசிவனுடைய பத்தினி மாகேஸ்வரி. மஹேஸ்வரன் த்ரிகுணாதீதமானதும் நிர்குணமானதுமான வடிவமுடையவர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும்  அவரைப் போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிடமுடியாத பெரும் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம். இத்தேவி சர்வ  மங்களங்களையும் அருள்பவள்.

இவள் வாகனமான எருது, தர்மத்தின் உருவம். உழைப்பிற்குப் பெயர் பெற்றது. நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியானவள் இத்தேவி. வெட்டுக்காயம்  ஏற்பட்டவர்கள், இத்தேவியை குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் ஏழைகளுக்கு விநியோகம் செய்தால்  வெட்டுக்காயங்கள் ஆறும். இத்தேவதையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர்.

3 கௌமாரி த்யானம்:

அங்குசம் தண்ட கட்வாங்கௌ பாசாம்ச தததீகரை:
பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காமதாயினீ பந்தூக வர்ணாம் கிரிஜாம்சிவாயா மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டௌ
கட்வாங்கரா சொள சரணம் ப்ரபத்யே!

மந்த்ரம்:

ஓம் கௌம் கௌமார்யை நமஹ
ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நமஹ
கௌமாரி காயத்ரி:
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் கௌமாரி:
மயூர குக்குட வ்ருதே மஹா சக்தி தரேனகே
கௌமாரீ ரூப ஸம்ஸ்தானே நாராயணீ நமோஸ்துதே

மயில் வாகனம் மீது கோழிக்கொடி சூழ, மகா சக்தி ஆயுதத்தைத் தாங்கி பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணி உனக்கு நமஸ்காரம்.  தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும்  சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர் குமாரர் என வணங்கப்படுகிறார். அஹங்காரத்திற்கு தேவதையாக இவர் சொல்லப்படுகிறார்.  வராஹ புராண ஸ்லோகப்படி சிவன் புருஷனென்றும், உமாதேவி ஞானம் என்றும் இவ்விருவரின் சேர்க்கையால் உண்டான அஹங்காரமானது  சேனாதிபதியான குஹன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அஹங்காரத்தினுடைய கணங்களை நாதர்களாகக் கொண்டவர்களை அம்பிகை அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவளை ‘குமார கண நாதாம்பா’  என்றழைத்து வழிபடுகிறோம். வீரத்தை இவளே அருள வேண்டும். இவள் வாகனமான மயில் ஓங்கார வடிவத்தோடு விளங்குகிறது. ரத்தத்திற்குத்  தலைவி இவள். பசுக்களுக்கு தோன்றும் கோமாரி எனும் நோய் நீங்க இத்தேவியை  பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம் பழ சாதம்  நிவேதனம் செய்ய அவை நலம் பெறும்.

4 வைஷ்ணவி:த்யானம்:

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவீ விப்ரமோஜ்வகை

மந்த்ரம்:

ஓம் வைம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி காயத்ரி:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் வைஷ்ணவி:
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே நாராயணீ நமோஸ்துதே

வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் என்ற வில் இவற்றை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.  லக்ஷ்மி  வடிவாக இருப்பவள் என்று அர்த்தம். விஷ்ணுவின் சக்தியாய் பொலிபவள். சீழுக்கு அதிதேவதையானவள் இவள். விஷக்கடிகள் நீங்க இத்தேவியை  தென்னை ஓலையால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து, பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால்  நிவாரணம் பெறலாம்.

5. வாராஹி: த்யானம்:

முஸலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கரைர்சதுர்பிர் வாராஹி த்யேயாகா லகனச்சவி:

மந்த்ரம்:

ஓம் வாம் வாராஹ்யை நமஹ.
ஓம் ல்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நமஹ.

வாராஹி காயத்ரி:

ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

ஒப்பற்ற யக்ஞ வராஹ மூர்த்தியான விஷ்ணுவின் உருவத்துடன் வராஹ சரீரத்துடனும், உலக்கை, கத்தி, வலக்கீழ்க்கரங்களிலும், கேடயம், சங்கு  போன்றவற்றை இடக்கீழ்க்கரங்களிலும் தாங்கிய வாராஹியைத் துதிப்போமாக என்கிறது தேவி மஹாத்மியம். எலும்பிற்கு அதிதேவதை இவள். எலும்பு  நோய் கண்டவர்கள் இத்தேவியை விசிறியால் விசிறி, வெள்ளரிக்காய், முறுக்கு நிவேதித்து தானமளிக்க நோய் நீங்கும்.

6  இந்த்ராணீ (ஐந்த்ரீ):த்யானம்:

அங்குசம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீகரை
இந்திர நீல நிபேந்த்ராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர

மந்த்ரம்:

ஓம் ஈம் இந்த்ராண்யை நமஹ
ஓம் ஐம் சாம் இந்த்ராணி கன்யகாயை நமஹ்

ஐந்த்ரீ காயத்ரி:

ஓம் ச்யாமவர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்

பூரண த்யானம்:

அம்பாயா ஸ்தன மண்டலாத் ஸ்முதிதாம்
சுவேதே த்வீபே ஸுஸ்திதாம்
ஹஸ்தை: அங்குச தோமரே சதத்தீம்
பாசாம்ச வஜ்ராயுதம்
மாஹேந்த்ரோபல தேஹகாந்தி ருசிராம்
மாஹேந்த்ர சக்திம் பராம்
இந்த்ராணீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம்
ஸதபாதரு ஸௌபாக்யதாம்

தேவி மஹாத்மியத்தில் ஐந்த்ரீ:
 கிரீடினி மஹா வஜ்ரே ஸஹஸ்ரநயனே ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரீ நாராயணீ நமோஸ்துதே

கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே, விருத்தாசுரனின் பிராணனைப் போக்கியவளே.  உன்னை நமஸ்கரிக்கிறேன். சதையின் அதி தேவதை இவள். அம்மை நோய் ஏற்பட்டவர்கள் இத்தேவியை. வேப்பிலையால் விசிறி, சந்தனம் பூசி  பலாச்சுளை நிவேதித்து தானம் அளித்தால் நலம் உண்டாகும்.

7  சாமுண்டி: த்யானம்:

 சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டிதாத்யேயே சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தாம்புஜை
நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிஷண்னா சுபா!
ரக்தாபா கல சண்ட முண்ட தமணீ தேவி லலாபோத்பவா
சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ராணாசோத்யதா

மந்த்ரம்:

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஔம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி:

ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ:  சாமுண்டா ப்ரசோதயாத்
தேவி மஹாத்மியத்தில் சாமுண்டா:
தம்ஷ்ட்ரா கரால வதனே சிரோமாலா விபூஷணே
சாமுண்டே முண்ட மதனே நாராயணீ நமோஸ்துதே

தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம்  கொண்டவள். சண்டா என்று சங்கு புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள். நரம்பின் தலைவி இவள். ஊர் கலகம் உண்டாகும் போது  காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர் அபிஷேகம் செய்தும் அவல், சேமியா ஆகியவற்றாலான  திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் கலகம் நீங்கும். இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும்  எளிதில் தீரும்.
நன்றி.....
- ந.பரணிகுமார்

Monday, 23 September 2019

தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி

இராகம்: சுத்தசாவேரி

இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(தாயே திரிபுரசுந்தரி...)

."நவநாயகியர் நற்றமிழ்மாலை"

."நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே

புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே

மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே

வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!

ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே

சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே

மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே

நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்!

2. ப்ரஹ்மசாரிணி மாதா:

பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே

சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே

சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே

ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!

பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே

ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே

தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே

நவநாயகியரில் இரண்டாம்நாளின்று  ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்!

3.சந்த்ரகண்டா மாதா:

கொடுமைகள் புரிந்த அரக்கரைவென்றிட அமரர்கள் துதிக்க மகிழ்ந்தவளே

மாயையின் ஆணையால் மாதுயில் கொண்ட மாதவனை அன்று எழுப்பியவளே

மதுகை டபவதம் செய்திடவெண்ணி மஹா மாயையாய்த் திகழ்ந்தவளே

மன்னுயிர் போற்றிட விண்ணவர் வாழ்த்திட வெற்றியைக் கொடுத்திட்ட துர்க்கையளே!

மணிபோல் விளங்கும் சந்திரவடிவை நுதலில்கொண்ட சந்திரகண்டாஅன்னையளே

வில்லும் அம்பும் சூலமும் வாளும் கதையும் ஐங்கரம்கொண்ட தசக்கரளே

ஜெபமாலையுடன் தாமரை கமண்டலம் முக்கரம்கொண்டு அபயமும் அருளும் முக்கண்ணளே

நவநாயகியரில் மூன்றாம்நாளின்று சந்திரகண்டாமாதா தாள் பணிந்தேன்!

4. கூஷ்மாண்டா தேவி:

காரிருள்சூழ்ந்த அண்டத்துள்ளிருந்து பேரருள் கொண்ட திருமகளே

அண்டத்தைப் பிளந்து பிண்டத்தை அளித்து உலகினைப் படைத்திட்டப் பரம்பொருளே

பொன்னிறமேனியில் துலங்கிடும் முகவருள் கொண்டெனைக் காக்கும் தூயவளே

அண்டசராசரம் அனைத்துக்கும்காரணி ஆகியகோளமாம் துர்க்கையளே!

கூஷ்மாண்டா எனும் பெயரினைக் கொண்டு சிம்மத்தின் மீது அமர்பவளே

வில்லும் அம்பும் கதையும் சக்ரமும் நான்குகைகளினில் கொண்டவளே

கமலமும் மாலையும் கமண்டலமும்கொண்டு அமிர்தகலசம் கொள்ளும் அஷ்டபுஜளே

நவநாயகியரில் நான்காம்நாளின்று கூஷ்மாண்டாவின் தாள் பணிந்தேன்!

5. ஸ்கந்த மாதா:

பக்திசெய்தேவர் துயர்தீர்த்திடவே பரமனைவேண்டிடச் செய்தவளே

சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே

அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே

வீணரை வென்றிட சேயினைப்பணித்து வேலினைத்தந்திட்ட துர்க்கையளே!

ஸ்கந்தமாதாவெனச் சிம்மத்திலமர்ந்து குமரனைமடியினில் கொண்டவளே

மேல்வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே

மற்றிருகைகளில் தாமலைமலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜளே

நவநாயகியரில் ஐந்தாம்நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்தேன்! 

6. காத்யாயனி மாதா:

மாயாவுலகினில் மக்களைக் காத்திட மகிழ்வுடன் அருளிடும் மலைமகளே

ஓயாவுலகினில் நீயே இரங்கி மகளாய்ப் பிறந்திட வந்தவளே

தாயே தனக்கு மகளாய் வந்திடத் தவம்புரிந்தவர்க்கு அருளியவளே

காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே!

காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே

வாளும் கமலமும் இடக்கரம் தாங்கி சிம்மத்தில் அமர்ந்திடும் சூலியளே

அபயமும் அருளும் வலக்கரம் தாங்கி மூவரும் போற்றப்போர் புரிந்தவளே!

நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்!

7. காலராத்ரி மாதா:

கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே

தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே

கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே

விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!

காலராத்ரியெனும் பெயரினைக் கொண்டு காலத்தை வென்றிட்ட மாயவளே

முட்கதை, கத்தியை இடக்கைகள் கொண்டு அருளும் அபயமும் அளிப்பவளே

வெளிவிடும் மூச்சினில் தீச்சுவாலையுடன் கழுதையில் வலம்வரும் முக்கண்ணளே

நவநாயகியரில் ஏழாம்நாளின்று மஹாகாலராத்ரி தாள் பணிந்தேன்!

8. மஹாகௌரி மாதா:

சிவனைச்சேர்ந்திடச் சீரியதவம்செய்து ஊசிமுனையினில் நின்றவளே

தவத்தினில் மகிழ்ந்திட்ட சிவனைக் கண்டு களிப்புடன் சென்றே அணைத்தவளே

சிவனே நடுங்கிடும் கரியவுருவினை மேனியில்கொண்டு எழுந்தவளே

கங்கையின் புனிதம் கருநிறம்கரைத்திட பூரணவொளியான துர்க்கையளே!

எருதுமேலமர்ந்து சூலம் டமரு கைகளிலேந்தி வெண்ணிற ஆடை உடுத்தவளே

என்றுமிளமையாய் எட்டுவயதினளாய் இன்னல்கள் தீர்த்திடும் தூயவளே

அசுரரை அழித்திட அனைவர்க்கும் அருளிய அஷ்டமஹாதேவி துர்க்கையளே

நவநாயகியரில் எட்டாம்நாளின்று மஹாகௌரிமாதா தாள் பணிந்தேன்!

9. ஸித்திதாத்ரி தேவி:

சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே

அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே

அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே

அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும் துர்க்கையளே!

ஸித்திதாத்ரி எனப் பெருமைபெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே

தாமரைமலர்மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே

சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே

நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்!

ஸ்ரீ மஹா துர்கா!:

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே

நவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே

நவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான துர்க்கையளே!

நவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே

நவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே

நவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!
[10]

நாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்
சொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து
நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே
அன்னையுன்றன் அடிபணிந்தேன் தாழ்ந்து.

நவநாயகியர் நற்றமிழ்மாலை நிறைவுற்றது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !

Saturday, 21 September 2019

துன்பங்களை_நீக்கும்_விஷ்ணுபதி_புண்ணிய_காலம்

#துன்பங்களை_நீக்கும்_விஷ்ணுபதி_புண்ணிய_காலம்

ஒரு வருடத்தில் #நான்கு_நாட்கள் மட்டுமே வரக்கூடிய #விஷ்ணுபதி_புண்ணிய நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம்.

ஆவணி மாதப் பிறப்பன்று, காலண்டரில் ‘#விஷ்ணுபதி_புண்ணிய_காலம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருப்போம். ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய அந்த நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம்.

தமிழ் மாதக் கணக்கின்படி #வைகாசி, #ஆவணி, #கார்த்திகை மற்றும் #மாசி ஆகிய மாதங்களின் முதல் தேதி #விஷ்ணுபதி_புண்ணிய_காலம்_ஆகும். அது, ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அமைகிறது.

அதேபோல #சிவனுக்குரிய தமிழ் மாதங்களாக #ஆனி, #புரட்டாசி, #மார்கழி மற்றும் #பங்குனி ஆகிய மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அந்த மாதங் களின் முதல் நாள் ‘#ஷடசீதி’ புண்ணிய காலம் ஆகும். #ஷடங்கன் என்பது சிவனைக் குறிப்பதாகும். ஜோதிட ரீதியாக அந்த நான்கு மாதங்களும் சூரியனின் உபய ராசி சஞ்சார காலமாகவும் அமைகின்றன.

மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு உரியது ‘#விஷூ_புண்ணிய_காலம்’ ஆகும். அதாவது, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. அந்த மாதங்களின் முதல் நாள் விஷூ புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டு, தலை எழுத்தை மாற்றி எழுதக் கூடிய பிரம்மாவை வணங்கு வதற்குரிய நாட்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜோதிட ரீதியாக, அந்த காலகட்டம் சூரியனது சர ராசி சஞ்சார மாதங்களாகவும் அமைகிறது.

ஏகாதசி திதியை, மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாகவும், திதிகளில் சிறப்பான ஒன்றாகவும் சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி நாளில் செய்யக்கூடிய பூஜை மற்றும் விரதம் ஆகியவை சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். ஆனால், ஏகாதசியை விட, பல மடங்கு புண்ணிய பலன்களை விஷ்ணுபதி புண்ணிய காலம் அளிப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஒரு நாளில் மகாவிஷ்ணு மற்றும் தாயார் ஆகிய இருவரது அருளையும் பூரணமாக பெறலாம் என்றும் சான்றோர்கள் சொல்கின்றனர்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது #நரசிம்ம_அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்த நோக்கம் நிறைவேறிய பின்னரும் கூட நரசிம்மரின் கோபம் குறையவில்லை. அந்த கோபத்தை சமாளிக்க இயலாத அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், மகாலட்சுமியைச் சரணடைந்து நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்க வேண்டினார்கள்.

மகாலட்சுமியும் அவர்களது வேண்டுகோளை ஏற்று, உக்ர நரசிம்மர் அருகில் சென்றாள். அவளது நிழல் நரசிம்மர் மீது பட்டவுடன், நரசிம்மரும், மகாலட்சுமியும் இணைந்து, சாந்த சொரூபமான லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தனர். அவ்வாறு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மகாவிஷ்ணு, காட்சி கொடுத்த புனித நேரமே ‘#விஷ்ணுபதி_புண்ணிய_காலம்’ என்றும் சான்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வீட்டிலேயே பக்தியுடன் வழிபட்டு, தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம். அல்லது அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றும் வழிபடலாம். துளசி பூஜை, கோ பூஜை மற்றும் மகாலட்சுமிக்கு உரிய வழிபாடுகளையும் செய்து வரலாம். அன்றைய தினத்தில் விரத நாட்களில் தவிர்க்கக்கூடிய விஷயங்களை தவிர்த்துவிட வேண்டும். ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விரதத்தை கடைப் பிடித்து, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்று வளமான வாழ்வை அடைவதுடன், மோட்சத்தையும் பெறலாம்.

அன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கொடி மரத்தை வணங்கி, 27 தடவை பிரகாரத்தை வலம் வர வேண்டும். எண்ணிக்கைக்காக கைகளில் 27 பூக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்திற்கு முன் வைக்கலாம். வலம் வந்த பின்னர் மீண்டும் கொடி மரத்தை வணங்கி விட்டு, கோவிலில் அருள்பாலிக்கும் தாயார் மற்றும் பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதல்களை சமர்ப்பிக்கலாம். இறை சக்தியால் அடுத்து வரக்கூடிய மூன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் பூர்த்தி அடைவதற்குள்ளாக பக்தர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

#நன்றி  : #மாலை_மலர்.

நிர்வாணஷட்கம்

☘#நிர்வாணஷட்கம்☘
--
#நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
இது #ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.

ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.
ஆறு பாடல்களையும் "சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்" என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

1 .☘#மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!☘

☘#கருத்துரை☘ :
மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல; நான் என்ற அகங்காரமும் நானல்ல,
அறிவும் சக்தியும் நானல்ல. உடலின் அங்கங்களும் நானல்ல;
ஆகாயம், பூமியும் நானல்ல; ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான், நானே சிவன்.

2 . ☘ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச:
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!☘

☘#கருத்துரை☘ :
உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3 . ☘ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!☘

☘#கருத்துரை☘ :
துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4 . ☘ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!☘

☘#கருத்துரை☘ :
புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5 . ☘ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!☘

☘#கருத்துரை☘ :
மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. ☘அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!☘

☘#கருத்துரை☘ :
சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்;
இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்;
பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.
பந்தமோ விஷயமோ இல்லை.
ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன்.

சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.

#நன்றி  :
#SRINIVASAN

       ☘*ஓம் நமச்சிவாய *☘

விஷ்ணு_சஹஸ்ரநாமம்

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்


குருக்ஷேத்திரப் போரில் சிகண்டியால் வீழ்த்தப்படும் பீஷ்ம பிதாமகர், #உத்தராயண_புண்ணிய_காலத்தில் உடலைத் துறக்க விருப்பம் கொண்டவராக, #அர்ஜுனன்_தன்_கணைகளால் உருவாக்கிய அம்புப் படுக்கையில் படுத்துக்கொள்கிறார்.

போரின் இறுதியில் கௌரவர்கள் வீழ்த்தப்படுகின்றனர். வெற்றி பெற்ற பாண்டவர்கள், ஆசி பெறுவதற்காக பீஷ்ம பிதாமகரிடம் வருகின்றனர். பீஷ்மர் அவர்களை ஆசிர்வதிக்கிறார்.

#யுதிஷ்டிரர்_பீஷ்மரிடம், ‘’தங்கள் அன்பாலும் ஆசிகளாலும்தான் எங்களால் போரில் வெற்றி அடைய முடிந்தது. இனி ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகும் எங்களுக்கு தாங்கள்தான் தர்மநெறிகளை உபதேசிக்கவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.

யுதிஷ்டிரர் வேண்டிக் கொண்டபடியே பீஷ்மர் அவர்களுக்கு தர்ம நெறிகளை உபதேசிக்கத் தொடங்கியபோது, #திரௌபதி_சிரித்துவிட்டாள். அசந்தர்ப்பமான சூழலில் திரௌபதி அப்படி சிரித்ததைக் கேட்ட #யுதிஷ்டிரர், ‘‘எதற்காக சிரித்தாய்?’’ என்று கோபத்துடன் கேட்டார். யுதிஷ்டிரரை சாந்தப்படுத்திய பீஷ்மர்,  அதே கேள்வியை திரௌபதியிடம் கேட்டார்.

‘‘அன்று துரியோதனன் சபையில் நான் அவமானத்துக்கு உள்ளானபோது, அந்த அநியாயத்தைத் தடுக்காமல் இருந்த தங்களிடம் தர்ம நியாயங்களை உபதேசிக்குமாறு கேட்டதும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். அன்பு கூர்ந்து மன்னியுங்கள்’’ என்றாள் திரௌபதி.

பீஷ்மர், ‘‘#துருபதன்_மகளே, நீ அப்படி நினைத்துச் சிரித்ததில் தவறு இல்லை. இங்கே உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அன்று #துரியோதனன் சபையில் உனக்கு அநீதி இழைக்கப்பட்டபோது நான் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்ததற்குக் காரணம், அப்போது என்னுடைய உடலில் ஓடிய ரத்தம் #துரியோதனன்_தந்த_உணவால்_உண்டானது. அதனால்தான் என்னால் அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடிய வில்லை. ஆனால், இப்போது போர்க்களத்தில் #என்னுடைய_உடலில்_துளைத்த_அம்புகள்_அத்தனை_ரத்தத்தையும்_வெளியேற்றிவிட்டன. எனவே, இப்போது நான் தர்மநியாயங்களை உபதேசிப்பதில் தவறு இல்லைதானே?’’ என்று கேட்க, அவசரப்பட்டு சிரித்ததற்காக #பீஷ்மரிடம் மன்னிப்பு கேட்ட திரௌபதி,  தானும் அவருடைய உபதேசங்களைக் கேட்கக் காத்திருப்பதாக கூறினாள்.

பீஷ்மர், பாண்டவர்களுக்கு தர்மநியாயங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார்.  பின்னர் இறுதியாக, #கலியின்_துன்பங்களை எல்லாம் போக்கும் அதிஅற்புதமான #ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். அதுதான் #விஷ்ணுசஹஸ்ரநாம_ஸ்தோத்திரம். பகவானின் ஆயிரம் நாமங்களின் மகிமைகளை பாண்டவர்களுக்கு உபதேசித்த பீஷ்மர், "அந்த பகவான் வேறு யாரும் இல்லை. உங்களுக்கு சதாசர்வ காலமும் உற்ற துணையாக இருக்கும் #கிருஷ்ணரே..!" என்றும் விளக்கினார்.

நண்பர்களே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய... நமக்குத் தெரியாத மற்றுமொரு புண்ணிய கதையும்
உண்டு. அது...
***
#ஸ்படிக_மாலை_செய்த_அற்புதம்!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; பின் தர்மம் வெல்லும்’ என்ற உயரிய உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தமே குருக்ஷேத்திரப் போர். தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்கள் பக்கம் நின்று, தேரோட்டியாகப் பணி புரிந்து, தனது கடமையைச் செய்துகொண்டிருந்தான் அவதார புருஷனான #ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மர், துரோணர், கிருபர் முதலான பெரியோர்கள் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்காக, தீயோன் என்று தெரிந்தும் #துரியோதனன் பக்கம் நின்று, பாண்டவர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர்.

கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிய பீஷ்மர், 10-ம் நாள் போரில் #அர்ஜுனனின் அஸ்திரங்களால் வீழ்த்தப்பட்டார். தான் விரும்பியபோது மரணம் அடையலாம் என்று வரம் பெற்றிருந்த அவர், அம்புகளையே படுக்கையாக்கிக்கொண்டு, உத்தராயனம் வரும்வரை அதன்மீது படுத்திருந்தார். தீயவர்களின் உப்பைத் தின்று வளர்ந்த தன் உடம்பிலிருந்து உதிரத் துளிகள் மொத்தமாக பூமியில் சிந்தி, உடல் முழுவதும் புனிதப்படுவதற்காக, அவர் இந்த அஸ்திரப் படுக்கை எனும் சாதனையை மேற்கொண்டார். கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் #தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில்,  பகவான் #கிருஷ்ணனையும் அவர் கண்டார். #ஸ்ரீமந்_நாராயணனே பகவான் #ஸ்ரீகிருஷ்ணனாக_பூமியில்_அவதரித்திருந்த_உண்மையை_பீஷ்மர்_உணர்ந்திருந்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் #விஸ்வரூப_தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே '#ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ர_நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் போற்றிப் புகழ்ந்து பாடினார். சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால், #துரியோதனன் முதலான #கௌரவர்கள், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பீஷ்மர் பாட ஆரம்பித்ததுமே, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். பாண்டவர்கள் மட்டுமே அவர் கூறிய மந்திர சப்தங்களைக் கேட்டு, மெய்ம்மறந்து நின்றனர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவுற்றதும், தனது #விஸ்வரூப_தரிசனத்தால்_பீஷ்மருக்கு அருள்பாலித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், #பாண்டவர்களின்_கடைசி சகோதரனான #சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வரிகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

ஆனாலும், பீஷ்மர் கூறிய அனைத்து வாசகங்களும் அவனது நினைவுக்கு வரவில்லை. இதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன், ''இத்தனை அருமையான மந்திர தத்துவங்களை பீஷ்மர் எடுத்துக் கூறியபோது, அவற்றை உனது ஏடுகளில்
நீ குறித்துக் கொள்ளவில்லையா?'' என்று சகாதேவனிடம் கேட்டான்.

அவ்வாறு செய்யாமல் போனதற்குச் சகாதேவன் வருந்தினான். ஓர் உயர்ந்த பொக்கிஷத்தை- கடவுளைப் போற்றும் பாடல்களை எப்படி நினைவுகூர்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கான வழியை எடுத்துக் கூறினான் ஸ்ரீகிருஷ்ணன். ''சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!''

சகாதேவன் ஆச்சரியம் அடைந்தான். ''சாதாரண ஸ்படிக மணிகளுக்கு மந்திர ஸப்தங்களை ஈர்த்து, மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் சக்தி உண்டா?'' என்று கேட்டான். அப்போது, பீஷ்மருக்கு அந்த ஸ்படிக மணிகள் எவ்வாறு கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறி, அதன் பெருமையை விளக்கினான் ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மரின் இயற்பெயர் கங்காபுத்திரன். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் பிறந்தவர் அவர். சந்தனு ராஜன் ஒரு மீனவப் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டபடி, தான் திருமணமே செய்துகொள்வது இல்லை என்று சபதமேற்றார் கங்காபுத்திரன். வாழ்நாள் முழுவதும் பிரம்மசரிய விரதத்தை முழுமையாக அனுசரித்து வைராக்கியமாக வாழ்ந்ததால், சத்தியவிரதன் என்றும் பீஷ்மர் என்றும் பெயர் பெற்றார்.

இவ்வாறு தன் தந்தைக்காகச் சபதம் ஏற்றபோது, பீஷ்மரின் மனம் சற்றுக் கவலையுற்றது. வாழ்நாள் முழுவதும் சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அபார மனோபலமும், வைராக்கியமும் வேண்டும் என்பதற்காக,  தன் தாய் கங்காதேவியைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய கங்காதேவி, கங்கை நீரை எடுத்தாள். அப்போது, வானில் பிரகாசித்துக்கொண்டிருந்த சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள், அவள் கையிலிருந்த நீர்த்துளிகளில் விழுந்து, வைரம் போல் ஜொலித்தன.

தன் கையிலுள்ள கங்கா தீர்த்தத்தை வாங்கிக்கொள்ளும்படி மகனிடம் கூறினாள் கங்காதேவி. பீஷ்மர் தன் இரு கைகளையும் குவித்து, தாயின் முன்பு நீட்டினார். கங்காதேவியின் கரங்களிலிருந்து கங்கை நீர்த் துளிகள் ஸ்படிக மணிகளாக பீஷ்மரின் கைகளில் விழுந்தன. ''மகனே! இவை ஸ்படிக மணிகள். நீருக்குள் நிறைந்துள்ள நெருப்புத் துளிகள் இவை. பிரார்த்தனை செய்வதற்கும், வைராக்கியத்துடன் வாழ்வதற்கும், மந்திர சாதகங்கள் புரிவதற்கும் இவை உனக்குப் பெரிதும் உதவும். இந்த மணிகளை மாலையாக எப்போதும் அணிந்திரு. அவை உனக்குச் சத்திய விரதத்திலிருந்து தவறாத மன வலிமையையும் வைராக்கியத்தையும் தரும்'' என்று கூறி மறைந்தாள் கங்காதேவி.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறிய இந்த வரலாற்றைக் கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு ஸ்ரீமந் நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.

அதனால்தான் இன்றும் தெய்வீக மனிதர்களும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள். உயர்ந்த ஸ்படிக மணிகளை ஒன்றோடொன்று உரசினால், அவற்றிலிருந்து பிரகாசமான தீப்பொறி போன்ற ஒளி தோன்றும். ஸ்படிக மணிகளை உருட்டி மந்திர ஜபம் செய்த பின்பு இந்தப் பிரகாசம் அதிகமாகத் தெரியும்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்:
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம்,
ஸரஸீருஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்
கருத்து: ''சங்கு சக்கரம் தாங்கி, கிரீடமும் குண்டலமும் அணிந்து, பொன்னாடை தரித்த தாமரைக் கண்ணனாய், கௌஸ்துப மாலை பிரகாசிக்க, நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹா விஷ்ணுவை, தூய்மையான பக்தியுடன், தலை வணங்கி நமஸ்கரிக்கின்றேன்'' என்பது இதன் பொருள்.

கட்டுரை: எஸ்.கண்ணன் கோபாலன், டி.எஸ்.நாராயண ஸ்வாமி

நன்றி  :  விகடன்.

ஸ்ரீ வாராஹி மாலை

#ஸ்ரீ வாராஹி மாலை


1 வசீகரணம் (த்யானம்)

 இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்

குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்

திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி

மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

 2 காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

 தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து

ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே

ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்

வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே

 3 பகை தடுப்பு (பிரதாபம்)

 மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு

கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி

வச்சிரத் தந்த முகப் பணியாற் குத்தி வாய்கடித்துப்

பச்சிரத் தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே

4 மயக்கு (தண்டினி த்யானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி

குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்

நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே

5 வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

 நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்

கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்

டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்

தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே

6 உச்சாடனம் (ரோகஹரம்)

 வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை

நோய்க்குலம் என்ன இடும்பை செய்வார்தலை நொய்தழித்துப்

பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை

நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே

 7 எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

 நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்

வீசப்படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்

ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என ஏழை நெஞ்சே

வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

 8 பெரு வச்யம் (திரிகால ஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்

காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே

ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி

மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9 பகைமுடிப்பு (வித்வேஷணம்)

 வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்

சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்

கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்

பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

 10 வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

 பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்

பூப்பட்டதும் பொறிபட்டதோ ? நின்னை யேபுகழ்ந்து

கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ ? அண்ட கோளமட்டும்

தீப்பட்ட தோ ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே

 11 தேவி வருகை (பூத பந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்

அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து

பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்

சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே

 12 ஆத்ம பூஜை (மஹாமாரி பூஜனம்)

 சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்

குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே

இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே

நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

 13 தேவி தாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி

நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு

வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்

கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே

 14 மந்திர பூஜை (முனிமாரணம்)

 மதுமாம்ஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்

அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்

கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து

விதிர் நாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த்தெய்வமே

 15 வாராஹி அமர்தல் (மூர்த்தி த்யானம்)

 ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை

மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்

கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே

வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே

 16 வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

 தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்

மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்

கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்

வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே

17 வாழ்த்துதல் (உலக மாரணம்)

வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்

பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்

பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்

விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே

 18 நன்னீர் வழங்கல் (ஏவர் பந்தனம்)

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்

கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்

சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்

மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்கா தவர்க்கே

 19 புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

 பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்

கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்

ஆடகக் கும்ப இணைக் கொங்கயாள் எங்கள் அம்பிகையே

 20 மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்

சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்

வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து

தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

 21 தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்உடலும்

கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்

சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்

வாராஹி வந்து குடிஇருந்தாள் என்னை வாழ்விக்கவே

22 தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்

பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை

நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை

உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23  புகழ்சொற் பாமாலை (மௌனானந்த யோகம்)

 ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு

யாரா கிலும்நமக் காற்றுவரோ ? அடல் ஆழி உண்டு

காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு

வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே

24 படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஓளிவிடு வாள்கட காழிசங்கம்

வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்

இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்

விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

 25 பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்

வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை

நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)

அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26 படை நேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்

கொலைபட் டுலகம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்

தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்

நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே

27 அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

 சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே

அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்

நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்

புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே

 28 திருப்படை வந்தம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

நெருப்புக்கு வால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே

29 பாதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

நீறிட் டவர்க்கு வினைவரு மோ ? நின் அடியவர்பால்

மாரிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே

30 ஸித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

 நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே

ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர் தலையை வெட்டி

எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே

 31 நவகோண வந்தனம் ( நித்யானந்த யோகம்)

 வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று

காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்

பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்

கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

 32 நிறைமங்கலம் ( சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே

Friday, 20 September 2019

அஷ்டாம்ச_ஆஞ்சநேயர்

#ஆஞ்சநேயர்_எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் #அஷ்டாம்ச_ஆஞ்சநேயர்_எனப்படுகிறார்.
--
1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "#அஞ்சேல்' என்று #அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் #முதல்_சிறப்பு.
--
2.மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில்  கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் #கதாயுதம்_இரண்டாவது_சிறப்பு :
--
3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க #ஆஞ்சநேயர்_சஞ்சீவி_மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. மேற்கு நோக்கிய முகம் #மூன்றாவது_சிறப்பு :
--
4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் #மரணபயம்_நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் #நான்காவது_சிறப்பு :
--
5.ஆஞ்சநேயரது மிகவும் சிறப்புபெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ள . அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் #நவக்கிரக_தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. ""ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.ஐயம் போக்கும் #ஐந்தாவது_சிறப்பு :
--
6. ஆலவாயன் சிவனின் அம்சம் #ஆறாவது_சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் #சிவ_தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
--
ஏழுமலையானின் அனுக்கிரகம் #ஏழாவது_சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது #உள்ளங்கை மத்தியில்
மகாலட்சுமி
அமர்ந்திருக்கிறாள். இதனால் #அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
--
எரிகின்ற சூரியன் #எட்டாவது_சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.#ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது .. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி #அருள்_மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம் ..!

#தொகுப்பு : #திருமதி_லதா_வெங்கடேஸ்வரன்.

Wednesday, 18 September 2019

புரட்டாசி ஸ்பெஷல் !

புரட்டாசி ஸ்பெஷல் !

திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்..!

" கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் "

கோசலை குமரா! ஸ்ரீராமா! பொழுது புலர்கிறதே… தெய்விகத் திருச் சடங்குகள் செய்ய எழுந்தருள்வாய் புருஷோத்தமா!

ஆஹா! இனிய மெட்டு, செம்மையான பொருள், ஆழ்ந்த கருத்து, அழகிய ராகத்துடன், திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்விகப் பாடல் – ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன் குரலில் நம் செவிக்குள் பாய்ந்து, நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும் பக்தியையும் தட்டியெழுப்பிச் சிலிர்ப்பூட்டும் தெய்வப் பிரவாகம் – ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இறைவனைத் துயிலெழுப்பவே சுப்ரபாதம். தமிழில் ‘திருப்பள்ளி யெழுச்சி’ என்பார்கள்.
பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. ‘எல்லாம் அவன் செயல்’ என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம்.

ஆழ்வார்களில் தொண்டர டிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும்கூட சுப்ரபாதம் உண்டு.

இவை அனைத்துமே விசேஷமானவை. எனினும், ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.

ஸ்ரீராமபிரானின் பால பருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ஸ்ரீராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர், குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்ரீராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே, லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார்.

விஸ்வாமித்திரர்
வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும், மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ஸ்ரீராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன்  கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார்.

அடுத்தநாள் கார்த்தால,

“கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே. உத்திஷ்ட்ட நரஷார்தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம்”

அப்படின்னு சொல்லி, விஸ்வமித்ரர், இந்த மங்களாஸாஸனம் குழந்தைய எழுப்பறார்.

இந்த வரிக்கு அவவளவு மகிமை, ராமரை வந்து எழுப்பறார்,

 கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு எழுப்பறார்.

கௌசல்யையுடைய குழந்தையே அப்படின்னு. அதாவது இந்த ராமன் தூங்கற அழகை பார்த்து, தினம் இந்த மாதிரி தூங்கற அழகை பார்த்து, குழந்தைய எழுப்பற பாக்கியம் அந்த கௌசல்யைக்குதானே கிடைச்சதுன்னு, கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு சொல்றார். பூர்வா கிழக்கு திக்குல, சந்த்யா ப்ரவர்த்ததே சந்த்யா காலம் வருது அப்படின்னு.

உத்திஷ்ட்ட நரஷார் தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம்,

காரியங்களெல்லாம் பண்ணனும், சந்த்யவந்தனங்கள் பண்ணனும்ன்னு எழுப்பறார். அதாவது, நீ கௌசல்யைக்கு பிள்ளையா, பூமில அவதாரம் பண்ணியிருக்க இல்லையா, அதனால நீ என்ன பண்ணறயோ, அதை பாத்துண்டு தான்  எல்லாரும் பண்ணுவா, அதனால, நல்ல வழிய எல்லாருக்கும் காமின்னு சொல்லி எழுப்பறார். அப்புறம் எழுந்து சந்த்யவந்தனம் பண்றார்.

ஆக முதன்முதலில் இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது.

அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை, திருமகள் நாயகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

அனுதினமும் திருவேங்கடவனின் திருப்பள்ளியெழுச்சியை கேட்பதும் பாடுவதும் மிக்க புண்ணியம் !

ஓம் நமோ வேங்கடேசாய !

கோவிந்தா ஹரி கோவிந்தா !

நவதிருப்பதி - #நவகைலாசம்

#நவதிருப்பதி - #நவகைலாசம்

காணவேண்டிய நவத்திருப்பதிகள்

நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்கள் சைவ-வைணவ கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகும். வைணவர்கள் புண்ணிய தலங்களாக கருதும் 108 திவ்விய தேசங்களில் தலைசிறந்து விளங்கும் நவ திருப்பதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது அவற்றை பற்றிக் காண்போம்.

#ஸ்ரீவைகுண்டம் -சூரியன்
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாக விளங்குவது ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள மூலவர் பெருமாள் நின்ற கோலத்தில் வைகுண்ட நாதராக அருள்பாலிக்கிறார். உற்சவர்கள்ளபிரான். இந்த கோவில் நெல்லையில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ தூரத்திலும் உள்ளது.

#திருவரகுணமங்கை(நத்தம்) - சந்திரன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது திருவரகுணமங்கை என்னும் நத்தம் திருத்தலம். இங்குள்ள பெருமாள் விஜயாநன பெருமாள்.

#திருப்புளியங்குடி - புதன்
நத்தத்தில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புளியங்குடி. இங்குள்ள பெருமாள் காய்சினவேந்தன் என்று அழைக்கப்படுகிறார்.

#பெருங்குளம் - சனி
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெருங்குளம். இங்குள்ள மூலவர் வேங்கடவாணன் உற்சவர் மாயக்கூத்தர்.

#தொலைவில்லிமங்கலம் (இரட்டைதிருப்பதிதெற்குகோவில்) - ராகு
பெருங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கி.மீ மேற்கு நோக்கி வந்தால் இரட்டை திருப்பதி தலங்களை அடையலாம். இரட்டை திருப்பதியில் தெற்கு கோவிலில் மூலவர் தேவர்பிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன்.

#வடக்குகோவில் (இரட்டைதிருப்பதி) - கேது
தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. வடக்கு கோவில் இங்குள்ள மூலவர் அரவிந்த லோசனர். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்.

#தென்திருப்பேரை - சுக்கிரன்
நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் உள்ளது. இங்குள்ள மூலவர் மகரநெடுங்குழைக்காதன் உற்சவர் நிகரில் முகில்வண்ணன்.

#திருக்கோளுர் - செவ்வாய்
தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகாி செல்லும் வழியில் 3 கி.மீ. மேற்காக வந்து இடதுபுறம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ சென்றால் திருக்கோளுர் திருத்தலம் வரும். இங்குள்ள மூலவர் வைத்தமாநிதி பெருமாள். உற்சவர் நிச்சோபவிந்தன். இந்த தலம் மதுரகவி ஆழ்வார் அவதார தலமாகும்.

#ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) - குருவியாழன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்து உள்ளது. இங்குள்ள பெருமாள் ஆதிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.

#நவகைலாயக்கோவில்கள்

நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :-

#பாபநாசம் - சூரியன்
நவகைலாயங்களில் முதல் கைலாயமாக திகழ்வது பாபநாசம் பாவநாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர்.  அம்பாள் உலகாம்பிகை.

#சேரன்மாதேவி - சந்திரன்
2வது கைலாயமாக திகழ்வது சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவில். இந்த கோவில் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாள் ஆவுடைநாயகி.

#கோடகநல்லூர் - செவ்வாய்
இந்த தலம் 3-வது கைலாயமாக விளங்குகிறது.  இங்குள்ள இறைவன் பெயர் கைலாச நாதர். இறைவி பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவில் நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சேரன்மாதேவி ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

#குன்னத்தூர் - ராகு
நவகைலாயங்களில் 4-வது தலமாக திகழ்வது குன்னத்தூர் கோதபரமேசுவரர் கோவில் இந்த கோவில் நெல்லை பேட்டையில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள அன்னை சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். (இந்த 4 தலங்களும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது)

#முறப்பநாடு - குரு (வியாழன்)
5-வது தலம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நெல்லையில் இருந்து வல்லநாடு கொங்கராயகுறிச்சி கலியாவூர் உழக்குடி பூவாணி ஆழ்வார் கற்குளம் செல்லும் டவுன் பஸ்கள் இங்கு செல்லும். இது தவிர பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்கள் முறப்பநாட்டில் நின்று செல்லும்.

#ஸ்ரீவைகுண்டம் - சனி
நவகைலாயங்களில் 6-வது தலம் ஸ்ரீவைகுண்டம் கைலாயநாதர் கோவில். இது பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இது குமர குருபர சுவாமிகள் அவதரித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தென்திருப்பேரை - புதன்
இந்த தலங்களில் 7-வதாக இடம் பெறுவது தென்திருப்பேரை கைலாயநாதர் கோவில். இங்கு சுவாமி சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு. இக்கோவில் நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

ராஜபதி - கேது
நவகைலாயங்களில் 8-வது கைலாயமாக திகழ்வது ராஜபதி தலம் ஆகும். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டது. முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது. அதையே தற்போது பக்தர்கள் வணங்குகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்த மணத்தி கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் வடக்கே அமைந்து உள்ளது. இக்கோவிலில் இருந்ததாக கூறப்படும் நந்தி தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இந்த திருத்தலங்களில் 9-வது கைலாயமாக திகழ்வது சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவில். இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இந்த தலத்தின்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இந்த நவ தலங்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி அவைகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில்  திறப்பு நேரம் காலை மாலை
பாபநாசம்         6.30 மணி முதல் 12 மணி வரை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
சேரன்மாதேவி 9 மணி முதல் 10 மணி வரை 4 மணி முதல் மாலை 5 மணி வரை
கோடகநல்லூர் 9 மணி முதல் 10 மணி வரை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
குன்னத்தூர் 7 மணி முதல் 8 மணி வரை 5 மணி முதல் மாலை 6 மணி வரை
முறப்பநாடு 7 மணி முதல் 9 மணி வரை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
ஸ்ரீவைகுண்டம் 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
தென்திருப்பேரை 7 மணி முதல் 9 மணி வரை 5 மணி முதல் மாலை 6 மணி வரை
சேர்ந்தபூமங்கலம் 7மணிமுதல்9 மணி வரை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை

உவரிசுயம்புலிங்க சுவாமி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடல் ஓரம் இயற்கை எழில் சூழ அமைந்ததுதான் உரி கிராமம். இங்குள்ள கடற்கரையில் கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி இப்பூவுலக மக்களின் பிணி போக்கி அருள் செய்து கொண்டு இருக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
இயற்கையில் எழில் வாய்ந்த உவரி கிராமம் முன்பு கீழுர் மேலூர் என்று இரு பகுதிகளாக இருந்தது. இவ்விரு பகுதிகளையும் ஒற்றையடி பாதையே இருந்தது. இதன் வழியாகதான் யாதவர் குல பெண்கள் பால் தயிர் கொண்டு செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது அவ்வழியில் கிடந்த கடம்பக்கொடிகளில் ஒருவரது கால் தினமும் இடறி பால் தயிர் ஆகியவை பானையோடு தரையில் விழுந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே பானைகள் விழுந்து பால் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. தினமும் இவ்வாறு நடந்ததால் வருமன அந்த பெண்ணுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவளது கணவன் ஆத்திரமடைந்து நடந்ததை கேட்டான். அந்த பெண்ணும் உள்ளதை உள்ளபடியே கணவனிடம் கூறினாள். இதைக்கேட்ட இவளது கணவன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று அங்கிருந்த கடம்பப்கொடியை கோடாரியால் வேரோடு வெட்டினான். அப்போது அந்த கடம்பக்கொடியின் அடிப்பகுதியில் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கிடையே இந்த சம்பவம் காட்டு தீ போல் ஊருக்குள் பரவியதால் ஊர் பெரியவர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவருக்கு சுவாமியின் இருள் கிடைத்து அவர் மூலமாக இங்கு சிவபெருமாள் சுயம்புவாக தோன்றி இருப்பதும் ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை பூசினால் ரத்தம் வழிவது நின்றுவிடும் என்ற அருள்வாக்கு கிடைத்தது.
அடி முடி அறியா ஓங்கி உயர்ந்த சிவபெருமான் நம் ஊரில் தாமாகவே தோன்றியுள்ளான் என்ற விபரம் அறிந்த ஊர் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் பக்தி பரவசமடைந்தனர். இதையடுத்து வெட்டுண்ட இடதத்தில் சந்தனத்தை தடவ என்ன ஆச்சரியம் ரத்தம் வழிவது உடனடியாக நின்று விட்டது. அன்று முதல் இன்றுவரை சுவாமிக்கு தினமும் சந்தன காப்பு இடப்படுபிறது. மறுநாள் அபிஷேகத்துக்கு முன்பு அந்த சந்தன காப்பு பிரிக்கப்பட்டும் அந்த சந்தணமே அருமருந்தாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு மருத்தவ குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது.இங்குள்ள சுவாமியை இதய சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் கேட்வருக்கு கேட்ட வரமும் தீரா பிணி கொண்டவருக்கு பிணி தீர்த்தும் அருள் பாலித்து வருகிறார் சுயம்பு லிங்கசாமி. இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறதா? ஆம் இன்றும் உவரி கோவிலில் நோய் முற்றியவர்கள் 41 நாட்கள் தங்கியிருந்து நலம்பெற்று திரும்புவதை காணலாம். இக்கோவிலின் சிறப்புகளை அறிந்து நெல்லை தூத்துக்குடி குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் கடல் மண்ணை கடல் நீர் சொட்ட சொட்ட சுமந்து வந்து கடற்கரையில் குவித்து வைக்கும் நேர்ச்சைகளைச் செய்வது வேறு எங்கும் காண முடியாது. மார்கழி மாதம் 30 நாட்களும் சூரிய ஒளி சுவாமி மீது தினமும் படும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.இந்த கோவிலில் உயர்ந்த வாயிலைக் கொண்ட கல் மண்டப சுற்றுபிரகாரத்துடன் கூடியது. கோவிலின் உள்ளே சென்றதும் ஓங்கி உயர்ந்து இருக்கும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அதையடுத்து பலி பீடம் தொடர்ந்து மூலவர்க்கு முன் நந்தியும் உள்ளது.
உள்ளே சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதன் கீழ் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் இங்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மசக்திஅம்மன்
தந்தையுடன் தாயும் இருப்பதுதான் சிறந்தது. அதுபோல் இங்கு தாயாக இருந்து பக்தர்களை காப்பவள் பிரம்மசக்தி அம்மன். இந்த அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில்  வளாகத்தில் வினாயகர் மற்றும் பிற பரிவார தேவதைகளும் உள்ளனர். கோவிலின் உற்சவ மூர்த்தி சுப்பிமணியர் இக்கோவிலின் தல விருட்சம் கடம்பக்கொடி.

Thursday, 12 September 2019

ஸ்ரீ_ஹயக்ரீவர்_அஷ்டோத்ரம்

கல்வியில் மேம்பட உதவும் ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம் & சத நாமாவளி

#ஸ்ரீ_ஹயக்ரீவர்_அஷ்டோத்ரம்
........

ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு: கேஸவோ மதுஸூதந:
கோவிந்த: புண்டரீகாக்ஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி:

ஆதித்யஸ் ஸர்வவாகீஸ: ஸர்வாதாரஸ் ஸநாதந:
நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ:

நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:
ஸிதாநந்தமயஸ் ஸாக்ஷி ஸரண்ய: ஸர்வதாயக:

ஸ்ரீமான் லோகத்ரயாதீஸ: ஸிவஸ் ஸாரஸ்வதப்ரத:
வேதோத்தர்த்தா வேதநிதி: வேதவேத்ய: ப்ரபூதந:

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி பராத்பர:
பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேஸ: பாரக: பர:

ஸர்வவேதாத்மகோ வித்வான் வேதவேதாந்த பாரக:
ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வ ஸாஸ்த்ரக்ருத்

அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:
புராணபுருஷ: ஸ்ரேஷ்ட: ஸரண்ய: பரமேஸ்வர:

ஸாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய:
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநாஸந:

ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:
விமலோ விஸ்வரூபஸ்ச விஸ்வகோப்தா விதிஸ்துத:

விதிர்விஷ்ணுஸ் ஸிவஸ்துத்யோ ஸாந்தித: க்ஷாந்திபாரக:
ஸ்ரேய: ப்ரத: ஸ்ருதிமய: ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர:

அச்யுதோநந்த ரூபஸ்ச ப்ராணத ப்ருதிவீபதி:
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தாமோஹர:

அஜ்ஞாநநாஸகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:
ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத:

மஹாயோகி மஹாமௌநீ மௌநீஸ: ஸ்ரேயஸாம்பதி:
ஹம்ஸ: பரமஹம்ஸஸ்ச விஸ்வகோப்தா விராட் ஸ்வராட்:

ஸுத்தஸ்படிக ஸ்ங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீஸ்வரேஸ்வர:

*ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்*

ஓணம்_தொடங்கிய_ஆலயம்

#ஓணம்_தொடங்கிய_ஆலயம்

கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது.

#திருக்காட்கரை_அப்பன்

கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்த பெருமாளுக்கு, ‘திருக்காட்கரை அப்பன்’ என்பது திருநாமமாக உள்ளது.

தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்யவல்லி என்னும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும், மகாலட்சுமிக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த கோவிலின் விமானம் விருத்த விமானமாகும். இங்குள்ள சிவலிங்கத்தை, மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. முதன் முதலாக திருக்காட்கரை அப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம் திருவிழா தான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள வாமனப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைதான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் கூற்று நிலவுகிறது.

திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்தக் குலைகள் கோவில் முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. கேரள மக்களின் வீட்டிலும் ஓணப் பண்டிகை நாளன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

#நன்றி  :  #மாலை_மலர்.

Wednesday, 11 September 2019

மந்த்ர_மாத்ருகா_புஷ்பமாலா_ஸ்தவம்

🍀#மந்த்ர_மாத்ருகா_புஷ்பமாலா_ஸ்தவம்
🍀
-
🍀(ஆதி சங்கர பகவத் பாதர் அருளிச் செய்தது)🍀
-
🍀கல்லோலோல்லஸிதாம் ருதாப்தி-லஹரீ         (பீலஹரி)
மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக-வாடிகா-பரிவ்ருதே
காதம்பவாட் யுஜ்ஜ்வலே
ரத்னஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-
மத்யே விமானோத்தமே
சிந்தா ரத்ன-விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே🍀
-
🍀ஏணாங்கானல-பானுமண்டல-லஸச்          (தோடி)
ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
காலார்க்க-த்யுதி-பாஸூராம் கரதலை:
பாசாங்குசௌ பிப்ரதீம்
சாபம் பாணமபி ப்ரஸன்னவதனாம்
கௌஸூம்ப-வஸ்த்ரான்விதாம்
தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ஸ-மகுடாம்
சாருஸ்மிதாம் பாவயே🍀
-
🍀ஈசானாதிபதம்ஸி வைகபலகம்                (கேதாரகௌள)
ரத்னாஸனம் தே ஸுபம்
பாத்யம் குங்கும-சந்தனாதி-பரிதைர்-
அர்க்யம் ஸரத்னாஷதை:
ஸுத்தை-ராசமனீயகம் தவ ஜலைர்-
பக்த்யா மயா கல்பிதம்
காருண்யாம்ருத-வாரிதே ததகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்🍀
-
🍀லக்ஷ்யே யோகி-ஜனஸ்ய ரக்ஷித-ஜகத்-      (மோஹனம்)
ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு-படீர-கும்குக-லஸத்-
கர்ப்பூர-மிச்ரோதகை:
கோஷீரைரபி நாளிகேர-ஸலிலை:
ஸுத்தோதகைர்-மந்த்ரிதை:
ஸ்நானம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்🍀
-
🍀ஹ்ரீங்காராங்கித-மந்த்ர-லக்ஷிதே-தநோ     (ஆனந்தபைரவி)
ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னை-ருஜ்வல-முத்தரீய-ஸஹிதம்
கௌஸூம்ப-வர்ணாம்ஸுகம்
முக்தா-ஸந்ததி-யஜ்ஞஸூத்ர-மமலம்
ஸெளவர்ண-தந்தூத்பவம்
தத்தம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம் 🍀
-
🍀ஹம்ஸைரப்-யதிலோபனீய-கமனே          (ஹிந்தோளம்)
ஹாராவளீ-முஜ்ஜ்வலாம்
ஹிந்தோள-த்யுதிஹீர-பூரிததரே
ஹேமாங்கதே கங்கணே
மஞ்சீரௌ மணிகுண்டலே மகுடமப்-
யர்த்தேந்து-சூடாமணிம்
நாஸா-மௌக்திக-மங்குலீய-கடகௌ
காஞ்கீமபி ஸிவீகுரு🍀
-
🍀ஸர்வாங்கே கனஸார-குங்கும-கன-      (அடாணா)
ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோனாபத்ரகம்
கண்டாதர்ஸன-மண்டலே நயனயோர்-
திவ்யாஞ்ஜனம் தேஷஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க-மமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம்🍀
-
🍀கல்ஹாரோத்பல-மல்லிகா-மருவகை:       (ஸ்ரீராகம்)
ஸெளவர்ண-பங்கேருஹை:
ஜாதீ-சம்பக-மாலதீ-வகுலகைர்:
மந்தார குந்தாதிபி
கேதக்யா கரவீரகைர் பஹுவிதை :
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா :
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம்🍀
-
🍀ஹந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை-           (முகாரி)
ரங்கை-ரனங்கோ ஜ்ஜவலை:
யைர்-ப்ருங்காவலி-நீலகுந்தலபரைர்
பத்னாஸி தஸ்யாஸயம்
தானீமானி தவாம்ப கோமலதராண்-
யாமோத-லீலாக்ருஹாண்-
யாமோதாய தசாங்-குக்குலு-க்ருதைர்-
தூபை-ரஹம் தூபயே🍀
-
🍀லக்ஷ்மீ-முஜ்ஜ்வலயாமி ரத்ன-நிவஹோத்      (ஆரபி)
பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப-விலம்பிதைர்-மணிமய-
ஸ்தம்பேஷூ ஸம்பாவிதை :
சித்ரைர்-ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்-
கவ்யைர்-க்ருதைர்-வர்த்திதை:
திவ்யைர்-தீபகணைர்-தியா கிரிஸூதே
ஸந்துஷ்டயே கல்பதாம்🍀
-
🍀ஹ்ரீங்காரேஸ்வரி தப்த-ஹாடக-க்ருதை:      (பைரவி)
ஸ்தாலீ-ஸஹஸ்ரைர்-ப்ருதம்
திவ்யான்னம் க்ருத-ஸூப-ஸாக-பரிதம்
சித்ரான்ன-பேதம் ததா
துக்தான்னம் மதுஸர்க்கரா ததியுதம்
மாணிக்ய-பாத்ரே ஸ்திதம்
மாஷாபூப-ஸஹஸ்ர-மம்ப ஸபலம்
நைவேத்ய-மாவேதயே🍀
-
🍀ஸச்சாயைர்-வரகேதகீதல-ருசா                      (சஹாணா)
தாம்பூலவல்லீதலை:
பூகைர்-பூரிகுணை: ஸூகந்தி-மதுரை:
கர்ப்பூரகண்டோஜ்வலை:
முக்தாசூர்ண-விராஜிதைர்-பஹூவிதைர்-
வக்த்ராம்புஜமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ முதே
ந்யஸ்தா புரஸ்தா-துமே🍀
-
🍀கன்யாபி: கமனீய-காந்திபி-                (நாட்டை)
ரலங்காராமலாராத்ரிகா-
பாத்ரே மௌக்திக-சித்ர-
பங்க்தி-விலஸத்-கர்ப்பூரதீபாலிபி:
தத்தத்-தால-ம்ருதங்க-கீத ஸஹிதம்
ந்ருத்யத்-பதாம்போருஹம்
மந்த்ராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்🍀
-
🍀லக்ஷ்மீர்-மௌக்திக-லக்ஷ-கல்பித-        (கல்யாணி)
ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீசர திச்ச சாமரவரே
தத்தே ஸ்வயம் பாரதீ
வீணா-மேண-விலோசனா: ஸ்புடரஸம்
மாதஸ்-ததாலோக்யதாம்🍀
-
🍀ஹ்ரீங்காரத்ரய-ஸம்புடேன                      (சுரடி)
மனுனோபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யைர்-லக்ஷ்யதனோ தவ ஸ்துதிவிதௌ
கோ வா க்ஷமேதாம்பிகே
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி-ரகிலம்
த்வத்ப்ரீதயே கல்பதாம்🍀
-
🍀ஸ்ரீமந்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்           (மத்யமாவதி)
ய: பூஜயேச்-சேதஸா
ஸந்த்யா ஸுப்ரதிவாஸரம் ஸுநியதஸ்-
தஸ்யாமலம் ஸ்யான்மன:
சித்தாம்போருஹ-மண்டபே கிரிஸூதா
ந்ருத்தம் விதத்தே ரஸாத்-
வாணி வக்த்ர-ஸ்ரோருஹே ஜலதிஜா
கேஹே ஜன்மங்கலா🍀
-
🍀இதி கிரிவரபுத்ரீ-பாதராஜீவபூஷா
புவன-மமலயந்தீ ஸூக்தி-ஸெளரப்ய-ஸாரை
சிவபத-மகரந்த-ஸயந்தினீயம் நிபத்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்ப மாலா
இதி மந்த்ர-மாத்ருகா-புஷ்பமாலா-ஸ்தவ: ஸமாப்த :
ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ஸம்பூர்ணம்.🍀

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...