Sunday, 16 April 2023

_பாண்டுங்காஷ்டகம்

 #ஆதிசங்கரின்_பாண்டுங்காஷ்டகம்


1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !

ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


2.தடித்வாஸஸம் நீலமேகாவபாஸம்

ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !

வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


மின்னலொத்த வஸ்திரம் தரித்தவரும், நீலமேகம் போன்று விளங்குபவரும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவரும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுடரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்

நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !

விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே

ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !

சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவரும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.


5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்

லஸத்குண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !

ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.


6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்

ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !

த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.


7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்

ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !

கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்

பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !

ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே

படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !

பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே

ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!


புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் கடந்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.


பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.


நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

Tuesday, 4 April 2023

ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :

 ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :


யத்ஸம்வாஹநலோபி⁴ந : ஶஶிகலாசூட ³ஸ்ய ஹஸ்தாம்பு ³ஜ-

ஸ்பர்ஶேநாபி ச லோஹிதாயதி முஹுஸ்த்வத்பாத ³பங்கேருஹம் ।

தேநைவோத் ³த⁴தகாஸராஸுரஶிரஶ்ஶ ்ரு ’ங்கா ³க்³ரஸஞ்சூர்ணந -

ப்ராசண்ட் ³யம் தத ³நுஷ்டி ²தம் கில கத ²ம் முக்திஸ்த ²லஸ்தே ²! ஶிவே ! ॥ 1॥

முக்தி ஸ்தலத்தில்* வாசம் செய்யும் மங்களாம்பிகயே ! சந்திரனை சிரசில் தரித்துள்ள ஸ்ரீ பரமேஸ்வரன் உன் ஸ்ரீ பாதாரவிந்ததைத் தாங்கப் பேராவல் கொண்டவராய் கமலம் போன்ற கையினால் உன் ஸ்ரீ பாதத்தை ஸ்பரிசிக்கும் போது உன் ஸ்ரீ பாதம் சிவந்து போகிறது.  அப்பேர்ப்பட்ட உன் ஸ்ரீ பாதமானது மலையை விடப் பெரிய சரீரங்கொண்ட மஹிஷாசுரனுடைய தலையைப் பொடி பொடியாக்கியது ப்ரசித்தம். இது எவ்வாறு?

· முக்தி ஸ்தலம் என்ற க்ஷேத்திரத்தில் ப்ரகாசிப்பவள்

· முக்திக்குத் தகுதி வாய்ந்த பெரியோர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவள்

· மாயையாகிற அவித்யையைப் போக்கும் ப்ரம்ம வித்யை சொரூபமாக இருப்பவள் என்று பல அர்த்தங்கள் கொள்ளலாம்.

த்வத்பாத ³ம் நிஜமஸ்தகே க⁴டயிதும் கே கே நு லோகே ஜநா :

கிம் கிம் நாரசயந்தி து³ஶ்சரதபஶ்சர்யாஸபர்யாதி ³கம் ।

மந்யே த⁴ந்யதமம் து தே ³வி ! மஹிஷம் வைரஸ்த ²யைவ த்வயா

யந்மூர்த்⁴நி ஸ்வயமேவ பாதகஹரம் பாதா ³ம்பு ³ஜம் பாதிதம் ॥ 2॥

தேவியே ! ஜனங்கள் உன்னுடைய ஸ்ரீ பாதார விந்தங்கள் தங்கள் சிரஸின் மீது தாங்கக் கிடைப்பதற்காக மிகக் கடுமையான தபஸ், பூஜை முதலிய என்னென்னவோ காரியங்களையெல்லாம் மேற்கொள்ளுகிறார்கள். ஆனால் மஹிஷாசுரனோ உன்னுடைய பரம விரோதியாக இருந்தான். இருந்தும் நீயோ சர்வ பாபங்களையும் போக்கும் உன் ஸ்ரீ பாத மலத்தை நீயாகவே அவனுடைய சிரஸின் மீது வைத்தாய். அந்த மஹிஷாசுரனல்லவோ மகா பாக்கிய சாலி.

இங்கு “கே கே ஜனா” என்று சொல்லியிருக்கிறபடியால் மனுஷ்யர்களைத் தவிர தேவர்கள், யக்ஷர்கள், கந்தவர்கள் முதலானவர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக ஆகும்.

த்வத்பாதா ³ம்பு ³ஜமர்பிதம் க்வ நு ஶிவே ! கிந்நு த்ரயீமஸ்தகே ?

நித்யம் தத்த்வவிசாரத ³த்தமநஸாம் சித்தாம்பு ³ஜாக் ³ரேஷு வா ? ।

கிம் வா த்வத்ப்ரணயப்ரகோபவிநமந்மாராரிமௌலிஸ்த ²லே ?

கிம் ப்ரோத்க ²ண்டி ³தகோ⁴ரஸைரிப⁴மஹாதை ³த்யேந்த் ³ரமூர்த் ³தா⁴ந்தரே ? ॥ 3॥

மங்களாம்பிகையே ! உன் ஸ்ரீ பாத கமலங்கள் எங்கு இருக்கின்றன? தேவர்களுடைய சிரஸாகிற உபநிஷத்துக்களிலா ? (வேதங்களுக்கு சிரஸாகிற ப்ரணவமாகிற ஓங்காரத்தையும் கொள்ளலாம்) அல்லது தத்வ ஆராய்ச்சியில் மனஸைப் பறி கொடுத்த யோகிகளின் ஹ்ருதய கமலங்களிலா ?

அல்லது மன்மதனைச் சாம்பலாக்கிய ஸ்ரீ பரமேஸ்வரன் பிரளய கலகத்தின் போது உன் ஸ்ரீ பதங்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது அந்த ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சிரஸின் மீதா ? அல்லது மகா பயங்கரமான மஹிஷாசுரனுடைய வெட்டப்பட்ட சிரசின் மீதா ?

த்வத்பாதா ³ஞ்சலரூபகல்பலதிகாபா ³லப்ரவாலத் ³வயம்

யே தாவத்கலயந்தி ஜாது ஶிரஸா நம்ரேண கம்ரோஜ்ஜ்வலம் ।

தேஷாமேவ ஹி தே ³வி ! நந்த ³நவநக்ரீடா ³ஸு லப்⁴யம் புந :

ஸ்வர்வல்லீதருணப்ரவாலப⁴ரணம் ஸேவாநுரூபம் ப²லம் ॥ 4॥

தேவியே ! உன் ஸ்ரீ பாதங்களின் முன் பாகம் அதிசுந்தரமாகவும், ப்ரகாசமாகவும், தேவலோகத்துக் கல்பகக் கொடியின் மொட்டுக்களைப் போன்று (மென்மையுடனும், வேண்டியவற்றைத் தரவல்லவையாகவும்) இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஸ்ரீ பாதங்களை வணக்கத்துடன் தங்கள் சிரஸின் மீது யார் தரிக்கின்றார்களோ அவர்கள் (ஸ்வர்க்கத்தை வேண்டுபவர்க்ளாயிருந்தால்) ஸ்வர்க்கத்தில் நந்தவனங்களளில் கல்பகக்கொடி போன்ற தேவ கன்னிகைகளுடன் ஆனந்திக்கிறார்கள். அதாவது, பக்திக்குத் தக்க பலனை உன் ஸ்ரீ பாத கமலம் அளிக்கிறது. (கல்பகக்கொடி போன்ற ஸ்ரீ பாதங்களை நமஸ்கரித்ததன் பலன், ஸ்வர்க்கத்திற்கே கொண்டு சென்று, கல்பகக் கொடி போன்ற கன்னிகைகளுடன் ஸ்வர்க்க ஆனந்தத்தை அளிக்கிறது.

மோக்ஷத்தை வேண்டுபவர்களுக்கு மோக்ஷம் சித்திக்கும். வேண்டுவது கிடைக்கும் என்பது தாத்பரியம்.

தா⁴வல்யம் பரிலால்யதே புரரிபோரங்கே ³ந துங்க ³ஶ்ரீயா

கிஞ்ச ஶ்யாமலிமாபி கோமலதரே பா⁴த்யேவ கா ³த்ரே ஹரே : ।

தத்தாத் ³ரு’க்பத ³வீம் மமாபி ஜநயேத்யஸ்தோகஸேவாரஸா -

தா ³ருண்யம் தவ லீயதே சரணயோ : காருண்யமூர்தே ! ஶிவே ! ॥ 5॥

கருணாமூர்த்தியே ! மங்களாம்பிகையே ! திரிபுராந்தகனான (முப்புரம் எரித்தவனான) ஸ்ரீ பரமேஸ்வரனின் சரீரத்தினுடைய உத்தமமான ஒளியினால் வெண்மை நிறமானது சோபையை அடைகிறது. ஸ்ரீ ஹரியினுடைய மிகவும் மிருதுவான சரீரதிலோ, நீல மேக ஸ்யாமள வர்ணமானது ப்ரகாசிக்கிறது.

சிவப்பு நிறமோ, உன் பாதங்களிலே மகத்தான சேவை செய்வதினால், எனக்கு சிவ விஷ்ணு போன்ற பதவியைத்ததந்துவிடத்தான் போகிறாய் என்று உன் பாதங்களிலேயே லயமாகி விடுகிறது.

உன் ஸ்ரீ பாதங்களை நான் இறுகப் பற்றிக் கொண்டிருப்பதினால் சிவப்பு நிறமானது மறைந்து விடுகிறது. காரணம், சிவப்பு நிறத்திறிகு தெரியும், நீ சிவ, விஷ்ணு போன்ற பதவியை எனக்குத் தரப் போகிறாய் என்று.


Saturday, 18 March 2023

கந்தர் அனுபூதி

 #கந்தர் அனுபூதி

காப்பு


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே

பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


நூல்

ஆடும் பணிவே லணிசே வலெனப்

பாடும் பணியே பணியா யருள்வாய்

தேடுங் கயமா முகனைச் செருவிற்

சாடுந் தனியா னைசகோ தரனே.


உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனு நீயலையோ

எல்லாமற என்னை யிழந்த நலஞ்

சொல்லாய் முருகா சுரபூ பதியே.


வானோ புனல்பார் கனல்மா ருதமோ

ஞானோ தயமோ நவில்நான் மறையோ

யானோ மனமோ எனையாண் டவிடந்

தானோ பொருளா வதுசண்முகனே.


வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந்

தளைபட் டழியத் தகுமோ தகுமோ

கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந்

தொளைபட் டுருவத் தொடுவே லவனே.


மகமாயை களைந்திட வல்ல பிரான்

முகமாறு மொழிந்து மொழிந் திலனே

அகமாடை மடந்தை யரென் றயருஞ்

சகமாயையுள் நின்று தயங் குவதே.


திணியா னமனோ சிலைமீ துனதாள்

அணியா ரரவிந்த மரும்பு மதோ

பணியா வென வள்ளி பதம் பணியுந்

தணியா வதிமோக தயா பரனே.


கெடுவாய் மனனே கதிகேள் கரவா

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடுவே தனைதூள் படவே

விடுவாய் விடுவாய் வினையா வையுமே.


அமரும் பதிகே ளகமா மெனுமிப்

பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம் பொரு தானவ நாசகனே.


மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்

தட்டூ டறவேல் சயிலத் தெறியும்

நிட்டூர நிராகுல நிர்ப் பயனே.


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே.


கூகா வெனவென் கிளைகூ டியழப்

போகா வகைமெய்ப் பொருள்பே சியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகா மணியே.


செம்மான் மகளைத் திருடுந் திருடன்

பெம்மான் முருகன் பிறவா னிறவான்

சும்மா இருசொல் லறவென் றலுமே

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.


முருகன் தனிவேல் முனிநங் குருவென்

றருள்கொண் டறியா ரறியுந் தரமோ

உருவன் றருவன் றுளதன் றிலதன்

றிருளன் றொளியன் றெனநின் றதுவே.


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்

றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்

ஐவாய் வழி செல்லு மவாவினையே.


முருகன் குமரன் குகனென்று மொழிந்

துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

பொருபுங் கவரும் புவியும் பரவுங்

குருபுங் கவஎண் குணபஞ் சரனே.


பேராசை யெனும் பிணியிற் பிணிபட்

டோரா வினையே னுழலத் தகுமோ

வீரா முதுசூர் படவே லெறியுஞ்

சூரா சுரலோ கதுரந் தரனே.


யாமோ தியகல் வியுமெம் மறிவுந்

தாமே பெறவே லவர்தந் ததனாற்

பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீ ரினியே.


உதியா மரியா வுணரா மறவா

விதிமா லறியா விமலன் புதல்வா

அதிகா வநகா வபயா வமரா

பதிகா வலசூர பயங் கரனே.


வடிவுந் தனமும் மனமுங் குணமுங்

குடியுங் குலமுங் குடிபோ கியவா

அடியந் தமிலா அயில்வே லரசே

மிடி யென்றொரு பாவி வெளிப் படினே.


அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்

உரிதா வுபதேச முணர்த் தியவா

விரிதா ரணவிக் ரமவே ளி மையோர்

புரிதா ரகநா கபுரந் தரனே.


கருதா மறவா நெறிகா ணஎனக்

கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்

வரதா முருகா மயில்வா கனனே

விரதா சுரசூர விபாட ணனே.


காளைக் குமரே சனெனக் கருதித்

தாளைப் பணியத் தவமெய் தியவா

பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்

வேளைச் சுரபூபதி மேருவையே.


அடியைக் குறியா தறியா மையினால்

முடியக் கெடவோ முறையோ முறையோ

வடிவிக் ரமமேல் மகிபா குறமின்

கொடியைப் புணருங் குணபூத ரனே.


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ

சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்

போர்வேல புரந்தர பூப தியே.


மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்

தையோ அடியே னலையத் தகுமோ

கையோ அயிலோ கழலோ முழுதுஞ்

செய்யோய் மயிலே றியசே வகனே.


ஆதா ரமிலே னருளைப் பெறவே

நீதா னொருசற் றுநினைந் திலையே

வேதா கமஞா னவிநோ தமனோ

கீதா சுரலோ கசிகா மணியே.


மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்

என்னே விதியின் பயனிங் கிதுவோ

பொன்னே மணியே பொருளே யருளே

மன்னே மயிலேறிய வானவனே.


ஆனா அமுதே அயில்வே லரசே

ஞானா கரனே நவிலத் தகுமோ

யானாகிய வென்னை விழுங்கி வெறுந்

தானாய் நிலைநின் றதுதற் பரமே.


இல்லே யெனுமா யையி லிட்டனைநீ

பொல்லே னறியாமை பொறுத் திலையே

மல்லே புரிபன் னிருவா குவிலென்

சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.


செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்

றொவ்வா ததென வுணர்வித் ததுதான்

அவ்வா றறிவா ரறிகின் றதலால்

எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.


பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே

வீழ்வா யென என்னை விதித்தனையே

தாழ்வா னவைசெய் தனதா முளவோ

வாழ்வா யினிநீ மயில்வா கனனே.


கலையே பதறிக் கதறிக் தலையூ

டலையே படுமா றதுவாய் விடவோ

கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்

மலையே மலை கூறிடு வாகையனே.


சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்

விந்தா டவியென்று விடப் பெறுவேன்

மந்தா கினிதந்த வரோ தயனே

கந்தா முருகா கருணா கரனே.


சிங்கார மடந்தையர் தீநெறி போய்

மங்காம லெனக்கு வரந்தருவாய்

சங்க்ராம சிகா வலசண் முகனே

கங்கா நதி பால க்ருபாகரனே.


விதிகாணு முடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்

மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்

துதியா விரதா சுரபூ பதியே.


நாதா குமரா நமவென் றரனார்

ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்

பாதா குறமின் பதசே கரனே.


கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்

பரிவா ரமெனும் பதமே வலையே

புரிவாய் மனனே பொறையா மறிவால்

அரிவா யடியொடு மகந் தையையே.


ஆதாளியை யொன் றறியே னையறத்

தீதாளியை யாண் டதுசெப் புமதோ

கூதாள கிராத குலிக் கிறைவா

வேதாள கணம் புகழ்வே லவனே.


மாவேழ் சனனங் கெடமா யைவிடா

மூவேடணை யென்று முடிந் திடுமோ

கோவே குறமின் கொடிதோள் புணருந்

தேவே சிவ சங்கர தேசிகனே.


வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்

மனையோடு தியங்கி மயங் கிடவோ

சுனையோ டருவித் துறையோடு பசுந்

தினையோ டிதணோடு திரிந் தவனே.


சாகா தெனையே சரணங் களிலே

காகா நமனார் கலகஞ் செயுநாள்

வாகா முருகா மயில்வா கனனே

யோகா சிவஞா னொபதே சிகனே.


குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைக் தனிவேல் நிகழ்த் திடலுஞ்

செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்

றறிவற் றறியா மையு மற்றதுவே.


தூசா மணியுந் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளந் துகளா யின்பின்

பேசா அநுபூதி பிறந் ததுவே.


சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்

சூடும் படிதந் ததுசொல் லுமதோ

வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்

காடும் புனமுங் கமழுங் கழலே.


கரவா கியகல்வி யுளார் கடைசென்

றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ

குரவா குமரா குலிசா யுதகுஞ்

சரவா சிவயோக தயா பரனே.


எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ

சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்

கந்தா கதிர்வே லவனே யுமையாள்

மைந்தா குமரா மறைநா யகனே.


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்

பேறா வடியேன் பெறுமா றுளதோ

சீறா வருசூர் சிதைவித் திமையோர்

கூறா வுலகங் குளிர்வித் தவனே.


அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்

பிறிவொன் றறநின் றபிரா னலையோ

செறிவொன் றறவந் திருளே சிதைய

வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.


தன்னந் தனிநின் றதுதா னறிய

இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ

மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்

கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.


மதிகெட்டறவா டிமயங் கியறக்

கதிகெட்டவமே கெடவோ கடவேன்

நதிபுத்திர ஞான சுகா திபவத்

திதிபுத் திரர்வீ றடுசே வகனே.


உருவா யருவா யுளதா யிலதாய்

மருவாய் மலராய் மணியா யொளியாய்

கருவா யுயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவா யருள்வாய் குகனே.


-- அருணகிரி நாதர்

Friday, 3 March 2023

பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்

 #பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்:


ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்


#பொருள் :


பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.


1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம

நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்

சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ

ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி

முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்

பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த

வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)


#பொருள் :


பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


3.லோகாவனாயாத்தலீலம் பூஜி

தானேக தேவேந்த்ர லோகைக பாலம்

ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு

தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்


#பொருள் :


உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.


4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச

ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்

ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர

பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)


#பொருள் :


இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


5. வாமேகரே சாருசக்ரம்-வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்

காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய

ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க

நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய

பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)


#பொருள் :

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி

தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை

நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு

தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)


#பொருள் :


விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


#ஸ்ரீ_பார்த்தசாரதி_சுவாமி_பெருமை:


மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். *


இங்கு உற்சவ மூர்த்தி தன் #கதாயுதம்_இல்லாமல் #செங்கோலுடன்_காட்சி_தருகிறார்.


🙏#ஸ்ரீ_பார்த்தசாரதி_உன்_திருவடிகளே_சரணம்".🙏


*ஓம் நமோநாராயணா*

Tuesday, 28 February 2023

ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரம்

 ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரம்



1) ககாரரூபா கல்யாணீ கல்யாணகுணஶாலிநீ


கல்யாணஶைலநிலயா கமநீயா கலாவதீ



2) கமலாக்ஷீ க‍ந்மஷக்நீ கருணாம்ருத ஸாகரா


கதம்பகாநநாவாஸா கதம்ப குஸுமப்ரியா



3) கந்தர்‍ப்பவித்யா கந்தர்‍ப்ப ஜநகாபாம்க வீக்ஷணா


கர்‍ப்பூரவீடீஸௌரப்ய கல்லோலிதககுப்தடா



4) கலிதோஷஹரா கஞ்ஜலோசநா கம்ரவிக்ரஹா


கர்‍ம்மாதிஸாக்ஷிணீ காரயித்ரீ கர்‍ம்மபலப்ரதா



5) ஏகாரரூபா சைகாக்ஷர்யேகாநேகாக்ஷராக்ருதிஃ


ஏதத்ததித்யநிர்‍தேஶ்யா சைகாநந்த சிதாக்ருதிஃ



6) ஏவமித்யாகமாபோத்யா சைகபக்தி மதர்‍ச்சிதா


ஏகாக்ரசித்த நிர்‍த்த்யாத்யாதா சைஷணா ரஹிதாத்த்ருதா



7) ஏலாஸுகந்திசிகுரா சைநஃ கூட விநாஶிநீ


ஏகபோகா சைகரஸா சைகைஶ்வர்ய ப்ரதாயிநீ



8) ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய ப்ரதா சைகாந்தபூஜிதா


ஏதமாநப்ரபா சைஜதநேகஜகதீஶ்வரீ



9) ஏகவீராதி ஸம்ஸேவ்யா சைகப்ராபவ ஶாலிநீ


ஈகாரரூபா சேஶித்ரீ சேப்ஸிதார்‍த்த ப்ரதாயிநீ



10) ஈத்த்ருகித்ய விநிர்‍தே്தஶ்யா சேஶ்வரத்வ விதாயிநீ


ஈஶாநாதி ப்ரஹ்மமயீ சேஶித்வாத்யஷ்ட ஸித்திதா



11) ஈக்ஷித்ரீக்ஷண ஸ்ருஷ்டாண்ட கோடிரீஶ்வர வல்லபா


ஈடிதா சேஶ்வரார்‍தாம்க ஶரீரேஶாதி தேவதா



12) ஈஶ்வர ப்ரேரணகரீ சேஶதாண்டவ ஸாக்ஷிணீ


ஈஶ்வரோத்ஸம்க நிலயா சேதிபாதா விநாஶிநீ



13) ஈஹாவிராஹிதா சேஶ ஶக்தி ரீஷல்‍ ஸ்மிதாநநா


லகாரரூபா லளிதா லக்ஷ்மீ வாணீ நிஷேவிதா



14) லாகிநீ லலநாரூபா லஸத்தாடிம பாடலா


லலந்திகாலஸத்பாலா லலாட நயநார்‍ச்சிதா



15) லக்ஷணோஜ்ஜ்வல திவ்யாம்கீ லக்ஷகோட்யண்ட நாயிகா


லக்ஷ்யார்‍த்தா லக்ஷணாகம்யா லப்தகாமா லதாதநுஃ



16) லலாமராஜதளிகா லம்பிமுக்தாலதாஞ்சிதா


லம்போதர ப்ரஸூர்லப்யா லஜ்ஜாட்யா லயவர்‍ஜ்ஜிதா



17) ஹ்ரீங்கார ரூபா ஹ்ரீங்கார நிலயா ஹ்ரீம்பதப்ரியா


ஹ்ரீங்கார பீஜா ஹ்ரீங்காரமந்த்ரா ஹ்ரீங்காரலக்ஷணா



18) ஹ்ரீங்காரஜப ஸுப்ரீதா ஹ்ரீம்மதீ ஹ்ரீம்விபூஷணா


ஹ்ரீம்ஶீலா ஹ்ரீம்பதாராத்யா ஹ்ரீம்கர்‍பா ஹ்ரீம்பதாபிதா



19) ஹ்ரீங்காரவாச்யா ஹ்ரீங்கார பூஜ்யா ஹ்ரீங்கார

பீடிகா


ஹ்ரீங்காரவேத்யா ஹ்ரீங்காரசிந்த்யா ஹ்ரீம் ஹ்ரீம்ஶரீரிணீ



20) ஹகாரரூபா ஹலத்ருத்பூஜிதா ஹரிணேக்ஷணா


ஹரப்ரியா ஹராராத்யா ஹரிப்ரஹ்மேந்த்ர வந்திதா



21) ஹயாரூடா ஸேவிதாம்க்ரிர்‍ஹயமேத ஸமர்‍ச்சிதா


ஹர்யக்ஷவாஹநா ஹம்ஸவாஹநா ஹததாநவா



22) ஹத்யாதிபாபஶமநீ ஹரிதஶ்வாதி ஸேவிதா


ஹஸ்திகும்போத்துங்க குசா ஹஸ்திக்ருத்தி ப்ரியாம்கநா



23) ஹரித்ராகுங்குமா திக்த்தா ஹர்யஶ்வாத்யமரார்‍ச்சிதா


ஹரிகேஶஸகீ ஹாதிவித்யா ஹல்லாமதாலஸா



24) ஸகாரரூபா ஸர்‍வ்வஜ்ஞா ஸர்‍வ்வேஶீ ஸர்‍வமம்களா


ஸர்‍வ்வகர்‍த்ரீ ஸர்‍வ்வபர்‍த்ரீ ஸர்‍வ்வஹந்த்ரீ

ஸநாதநா



25) ஸர்‍வ்வாநவத்யா ஸர்‍வ்வாம்க ஸுந்தரீ ஸர்‍வ்வஸாக்ஷிணீ


ஸர்‍வ்வாத்மிகா ஸர்‍வஸௌக்ய தாத்ரீ ஸர்‍வ்வவிமோஹிநீ



26) ஸர்‍வ்வாதாரா ஸர்‍வ்வகதா ஸர்‍வ்வாவகுணவர்‍ஜ்ஜிதா


ஸர்‍வ்வாருணா ஸர்‍வ்வமாதா ஸர்‍வ்வபூஷண பூஷிதா



27) ககாரார்‍த்தா காலஹந்த்ரீ காமேஶீ காமிதார்‍த்ததா


காமஸஞ்ஜீவிநீ கல்யா கடிநஸ்தநமண்டலா



28) கரபோருஃ கலாநாதமுகீ கசஜிதாம்புதா


கடாக்ஷஸ்யந்தி கருணா கபாலி ப்ராணநாயிகா



29) காருண்ய விக்ரஹா காந்தா காந்திபூத ஜபாவலிஃ


கலாலாபா கம்புகண்டீ கரநிர்‍ஜ்ஜித பல்லவா



30) கல்‍பவல்லீ ஸமபுஜா கஸ்தூரீ திலகாஞ்சிதா


ஹகாரார்‍த்தா ஹம்ஸகதிர்‍ஹாடகாபரணோஜ்ஜ்வலா



31) ஹாரஹாரி குசாபோகா ஹாகிநீ ஹல்யவர்‍ஜ்ஜிதா


ஹரில்பதி ஸமாராத்யா ஹடால்‍கார ஹதாஸுரா



32) ஹர்‍ஷப்ரதா ஹவிர்‍போக்த்ரீ ஹார்‍த்த ஸந்தமஸாபஹா


ஹல்லீஸலாஸ்ய ஸந்துஷ்டா ஹம்ஸமந்த்ரார்‍த்த ரூபிணீ



33) ஹாநோபாதாந நிர்‍ம்முக்தா ஹர்‍ஷிணீ ஹரிஸோதரீ


ஹாஹாஹூஹூ முக ஸ்துத்யா ஹாநி வ்ருத்தி விவர்‍ஜ்ஜிதா



34) ஹய்யம்கவீந ஹ்ருதயா ஹரிகோபாருணாம்ஶுகா


லகாராக்யா லதாபூஜ்யா லயஸ்தித்யுத்பவேஶ்வரீ



35) லாஸ்ய தர்‍ஶந ஸந்துஷ்டா லாபாலாப விவர்‍ஜ்ஜிதா


லம்க்யேதராஜ்ஞா லாவண்ய ஶாலிநீ லகு ஸித்திதா



36) லாக்ஷாரஸ ஸவர்‍ண்ணாபா லக்ஷ்மணாக்ரஜ பூஜிதா


லப்யேதரா லப்த பக்தி ஸுலபா லாம்கலாயுதா



37) லக்நசாமர ஹஸ்த ஶ்ரீஶாரதா பரிவீஜிதா


லஜ்ஜாபத ஸமாராத்யா லம்படா லகுளேஶ்வரீ



38) லப்தமாநா லப்தரஸா லப்த ஸம்பத்ஸமுந்நதிஃ


ஹ்ரீங்காரிணீ ச ஹ்ரீங்கரி ஹ்ரீமத்த்யா ஹ்ரீம்ஶிகாமணிஃ



39) ஹ்ரீங்காரகுண்டாக்நி ஶிகா ஹ்ரீங்காரஶஶிசந்த்ரிகா


ஹ்ரீங்கார பாஸ்கரருசிர்‍ஹ்ரீங்காராம்போதசஞ்சலா



40) ஹ்ரீங்காரகந்தாங்குரிகா ஹ்ரீங்காரைகபராயணாம்


ஹ்ரீங்காரதீர்‍கிகாஹம்ஸீ ஹ்ரீங்காரோத்யாநகேகிநீ



41) ஹ்ரீங்காராரண்ய ஹரிணீ ஹ்ரீங்காராவால வல்லரீ


ஹ்ரீங்கார பஞ்ஜரஶுகீ ஹ்ரீங்காராங்கண தீபிகா



42) ஹ்ரீங்காரகந்தரா ஸிம்ஹீ ஹ்ரீங்காராம்போஜ ப்ரும்கிகா


ஹ்ரீங்காரஸுமநோ மாத்வீ ஹ்ரீங்காரதருமஞ்ஜரீ



43) ஸகாராக்யா ஸமரஸா ஸகலாகமஸம்ஸ்துதா


ஸர்‍வ்வவேதாந்த தாத்பர்யபூமிஃ ஸதஸதாஶ்ரயா



44) ஸகலா ஸச்சிதாநந்தா ஸாத்யா ஸத்கதிதாயிநீ


ஸநகாதிமுநித்யேயா ஸதாஶிவ குடும்பிநீ



45) ஸகாலாதிஷ்டாந ரூபா ஸத்யரூபா ஸமாக்ருதிஃ


ஸர்‍வ்வப்ரபஞ்ச நிர்‍ம்மாத்ரீ ஸமநாதிக வர்‍ஜ்ஜிதா



46) ஸர்‍வ்வோத்தும்கா ஸம்கஹீநா ஸகுணா ஸகலேஶ்வரீ


ககாரிணீ காவ்யலோலா காமேஶ்வரமநோஹரா



47) காமேஶ்வரப்ரணாநாடீ காமேஶோத்ஸம்கவாஸிநீ


காமேஶ்வராலிம்கிதாம்கீ கமேஶ்வரஸுகப்ரதா



48) காமேஶ்வரப்ரணயிநீ காமேஶ்வரவிலாஸிநீ


காமேஶ்வரதபஃஸித்திஃ காமேஶ்வரமநஃப்ரியா



49) காமேஶ்வரப்ராணநாதா காமேஶ்வரவிமோஹிநீ


காமேஶ்வரப்ரஹ்மவித்யா காமேஶ்வரக்ருஹேஶ்வரீ



50) காமேஶ்வராஹ்லாதகரீ காமேஶ்வரமஹேஶ்வரீ


காமேஶ்வரீ காமகோடிநிலயா காம்க்ஷிதார்‍தததா



51) லகாரிணீ லப்தரூபா லப்ததீர்லப்த வாஞ்சிதா


லப்தபாப மநோதூரா லப்தாஹங்கார துர்‍க்கமா



52) லப்தஶக்திர்லப்த தேஹா லப்தைஶ்வர்ய ஸமுந்நதிஃ


லப்த வ்ருத்திர்லப்த லீலா லப்தயௌவந ஶாலிநீ



53) லப்தாதிஶய ஸர்‍வ்வாம்க ஸௌந்தர்யா லப்த விப்ரமா


லப்தராகா லப்தபதிர்லப்த நாநாகமஸ்திதிஃ



54) லப்த போகா லப்த ஸுகா லப்த ஹர்‍ஷாபி பூஜிதா


ஹ்ரீங்கார மூர்‍த்திர்‍ஹ்ரீண்‍கார ஸௌதஶ்ரும்க

கபோதிகா



55) ஹ்ரீங்கார துக்தாப்தி ஸுதா ஹ்ரீங்கார கமலேந்திரா


ஹ்ரீங்காரமணி தீபார்‍ச்சிர்‍ஹ்ரீங்கார தருஶாரிகா



56) ஹ்ரீங்கார பேடக மணிர்‍ஹ்ரீங்காரதர்‍ஶ பிம்பிதா


ஹ்ரீங்கார கோஶாஸிலதா ஹ்ரீங்காராஸ்தாந நர்‍த்தகீ



57) ஹ்ரீங்கார ஶுக்திகா முக்தாமணிர்‍ஹ்ரீங்கார போதிதா


ஹ்ரீங்காரமய ஸௌவர்‍ண்ணஸ்தம்ப வித்ரும புத்ரிகா



58) ஹ்ரீங்கார வேதோபநிஷத் ஹ்ரீங்காராத்வர தக்ஷிணா


ஹ்ரீங்கார நந்தநாராம நவகல்‍பக வல்லரீ



59) ஹ்ரீங்கார ஹிமவல்‍கம்க்கா ஹ்ரீங்காரார்‍ண்ணவ

கௌஸ்துபா


ஹ்ரீங்கார மந்த்ர ஸர்‍வ்வஸ்வா ஹ்ரீங்காரபர ஸௌக்யதா



இதி ஶ்ரீ ப்ரஹ்மாண்டபுராணே உத்தராகண்டே


ஶ்ரீ ஹயக்ரீவாகஸ்த்யஸம்வாதே


ஶ்ரீலளிதாத்ரிஶதீ ஸ்தோத்ர கதநம் ஸம்பூர்‍ணம்



தோடகாஷ்டகம்

 தோடகாஷ்டகம் !


ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.


அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.


ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும். 


விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 

என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.


பவதா ஜனதா ஸுகிதா பவிதா

நிஜபோதவிசாரண சாருமதே

கலயேச்வர ஜீவ விவேகவிதம்

பவ சங்கர தேசிகமே சரணம்!!


தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!


பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கெளதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!


ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்சன லாலஸதா

அதிதீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 

நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ

விசரந்தி மஹா மஹஸஸ்சலத:

அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ

பவசங்கர தேசிக மே சரணம்!!


குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


குருபுங்க புங்கவ கேதந தே

ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:

சரணாகத வத்ஸல தத்வநிதே

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


விகிதா ந மயா விசதைககலா

நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ

த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...