Sunday, 20 February 2022

காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


காப்பு


மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்

துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்

புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்

கயமுகவைங் கரனிருதாள் காப்பு.


நூல்


சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியா நின்ற வுமையே.

சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

துன்பத்தை நீக்கி விடுவாய்.

சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்

துயரத்தை மாற்றி விடுவாய்

ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ

சிறியனால் முடிந்திராது

சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்

சிறிய கடனுன்னதம்மா.

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி

சிரோன்மணி மனோன்மணியு நீ.

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

யனாத ரட்சகியும் நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அன்னை காமாட்சி உமையே.


பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட

- பாதச் சிலம்பி னொலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும் ;

முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும் ,

சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையில் பொன்கங்கணம்,

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பி னழகும்,

அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை

அடியனாற் சொல்லத் திறமோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்

குறைகளைச் சொல்லி நின்றும்,

கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ

குழப்பமா யிருப்ப தேனோ

விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்

சதமாக நம்பி னேனே

சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க

சாதக முனக் கிலையோ

மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய

மதகஜனை யீன்ற தாயே.

மாயனிட தங்கையே பரமனது மங்கையே

மயானத்தில் நின்ற வுமையே

அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்

அன்பு வைத்தென்னை யாள்வாய்,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்

பேரான ஸ்தலமு மறியேன்

பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்

போற்றிக் கொண்டாடி யறியேன்,

வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,

வாயினாற் பாடியறியேன்,

மாதா பிதாவினது பாதத்தை நானுமே

வணங்கியொரு நாளுமறியேன்,

சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்

சரணங்கள் செய்து மறியேன்,

சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,

சாஷ்டாங்க தெண்ட னறியேன்,

ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்

ஆச்சி நீ கண்ட துண்டோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்

பிரியமாயிருந்த னம்மா,

மெத்தனம் உடையை என்றறியாது நானுன்

புருஷனை மறந்தனம்மா,

பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்

பராமுகம் பார்த்திருந்தால்,

பாலன் யானெப்படி விசனமில்லாமலே

பாங்குட னிருப்பதம்மா,

இத்தனை மோசங்களாகாது ஆகாது

இது தர்மமல்ல வம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ

யிதுநீதி யல்லவம்மா,

அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ

அதை யெனக்கருள் புரிகுவாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ

மணி மந்தர காரிநீயே

மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ

மலையரையன் மகளானநீ,

தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,

தயாநிதி விசாலாட்சி நீ

தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ

சரவணனை யீன்ற வளும் நீ,

பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்

பேர்பெற வளர்த்தவளும் நீ,

பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ

பிரிய வுண்ணாமுலையு நீ

ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ

அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்

புத்திகளைச் சொல்லவில்லையோ,

பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை

பிரியமாய் வளர்க்க வில்லையோ,

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்

கதறி நானழுத குரலில்,

கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்

காதினுள் நுழைந்த தில்லையோ

இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா

இனி விடுவதில்லை சும்மா,

இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்

இதுதரும மல்ல வம்மா,

எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்

ஏதும் நீதியல்ல வம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்

மூடனான் செய்த னம்மா

மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு

மோசங்கள் பண்ணி னேனோ

என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே

இக்கட்டு வந்த தம்மா

ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து

என்கவலை தீரு மம்மா

சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே

சிறுநாணமாகு தம்மா,

சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்

சிவசக்தி காமாட்சி நீ

அன்னவாகனமேறி யானந்தமாக உன்

அடியன் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க

ளின்பமாய் வாழ்ந் திருக்க,

யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்

உன்னடியேன் தவிப்பதம்மா,

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்

உன் பாதஞ் சாட்சியாக

உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்

உலகந்தனி லெந்தனுக்கு

பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை

போக்கடித் தென்னை ரட்சி

பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்

பிரியமாய்க் காத்திடம்மா

அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க

அட்டி செய்யா தேயம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்

பாங்குடனி ரட்சிக்கவும்,

பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த

பாலருக் கருள் புரியவும்

சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்

செங்கலிய ளணு காமலும்,

சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்

பிரியமாய்ச் காத்திடம்மா.

பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி

பிழைகளைப் பொறுத்து ரட்சி.

ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

னம்மை யேகாம்பரி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது

இப்பூமி தன்னி லம்மா,

இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்

இனிஜெனன மெடுத்திடாமல்,

முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்

முக்காலும் நம்பினேனே,

முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ

முழித்திருக்காதே யம்மா,

வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன

விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை

விமலனாரேசப் போறார்,

அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்

அருங்குறை யைத் தீருமம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஸ்ரீ காமாக்ஷி அகவல்

 காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


ஸ்ரீ காமாக்ஷி அகவல்


#காப்பு:


ஜகத்திருள் நீக்கும் காஞ்சி க்ஷேத்ரம் தனில்

மகத்துவம் மிகுந்த சக்தி மனோன்மனீ காமாக்ஷி தன்மேல்

அகத்திருள் நீங்கும் வண்ணம் ஓர் அகவற் பாமலை ஓத

முகத்திருள் நீக்கும் யானை முளரி மாமலர்த்தாள் காப்பே


#அகவல்:


ஓம் நமோ பகவதி உத்தமி கவுரி

சாம்பவி மனோன்மனீ சங்கரி பயங்கரி

வெண்தலை மாலை விமலி எண்தோளி

பஞ்சாக்ஷரத்தி பரப்ரம்மசொரூபீ

எஞ்சாகரத்தி இன்பத் தாண்டவீ

ப்ரணவ சொரூபம் பெற்றிடும் வீரி

சரணாம்புயத்தி ஸர்வஸம்ஹாரி

தத்துவப் பொருளாய் தழைத்த நன்மணி

அத்தி முகவனை அளித்த கண்மணி

சிறுவிதி மகவாய் சிறந்த சிவமணி


ஒருதனி முதலாய் ஓங்கும் தவமணி

வரைமகள் எனவே வளர்ந்த நவமணி

பரையென நாமம் பகர்ந்தவர் பவப்பிணி

அகற்றி ஆட்கொள்ளும் அற்புத ஒளியே

சிவ சிவ சிவ சிவ சிவசங்கரியே

நவவடிவாகிய நாராயணியே

ஆதிஅனாதியும் அந்தமும் நீயே

ஜோதி சுடராய் சூழ்ந்தவள் நீயே

தந்தை தாயுமாய் தழைத்தவள் நீயே

இடை பிங்கலையில் இருப்பவள் நீயே


கடை சுழுமுனையில் கலப்பவள் நீயே

முச்சுடராகி முளைத்தவள் நீயே

உச்சுக்கு வெளியில் உலவுபவள் நீயே

மூலத்தில் நின்ற முதல்வியும் நீயே

ஜாலங்கள் புரியும் சமர்த்தியும் நீயே

ஓரெழுத்தான் ஒலிவெளி நீயே

ஈரெழுத்தான் ஈச்வரி நீயே

மூவெழுத்தான முக்கண்ணி நீயே

நாலெழுத்தான நாயகி நீயே

அஞ்செழுத்தான அம்மணி நீயே


பஞ்சக்ருத்தியம் படைத்தவள் நீயே

ஐவராம் கர்த்தர்கு அன்னையும் நீயே

ஐயாறு மூவேழு அக்ஷரீ நீயே

அருவுருவான அற்புதம் நீயே

குருவாய் விளங்கும் கோலமும் நீயே

சின்மயமாக செறிந்தவள் நீயே

தன்மயமாக தனித்தவள் நீயே

வேதாந்தமான விளைவும் நீயே

நாதாந்தமான நவரசம் நீயே

வேற்றுமை இல்லா வித்தகி நீயே


நாற்பத்து முக்கோண நாயகி நீயே

அரனொடு அரியாய் அமர்ந்தவள் நீயே

பரனொடு பரையாய் பதிந்தவள் நீயே

மோன பாத்திர முடிவும் நீயே

ஞான க்ஷேத்திர நவநிதி நீயே

நடுநிலையான நாயகம் நீயே

கொடுவினை மாற்றும் குண்டலி நீயே

சுத்த சிவமாய் ஜொலிப்பவள் நீயே

சத்தி சிவமாய் சார்ந்தவள் நீயே

சுகஸ்வரூபீ சூட்சியும் நீயே


அகண்டபூரணம் ஆனவள் நீயே

வேலனை ஈன்ற விளக்கொளி நீயே

வாலைத் திருமகள் வாணியும் நீயே

கன்னிகையாம் சிவகாமியும் நீயே

அன்னையாம் வடிவம்மையும் நீயே

ஆட்சி நீலாயதாக்ஷியும் நீயே

சூட்சி சிவகமலாக்ஷியும் நீயே

நாரணியாம் மீனாக்ஷியும் நீயே

ஆரணியாம் விசாலாக்ஷியும் நீயே

கன்னிகள் பத்திரகாளியும் நீயே


மன்னும் துர்கை மாரியும் நீயே

எந்திர வித்தைகள் எல்லாம் நீயே

மந்திர ஸ்வரூப மௌலியும் நீயே

மாய குண்டலி மனோன்மனீ நீயே

ஆயிரம் நாமம் ஆனவள் நீயே

ஆனந்த வடிவாய் அமைந்தவள் நீயே

மனவாக்கடங்கா மகமாயி நீயே

ஸர்வ ஸம்ஹார சக்தியும் நீயே

ஸர்வானுக்ரஹ ஸமர்த்தியும் நீயே

எண்ணும் மனதில் இருப்பவள் நீயே


மண்ணுயிர்க்குயிராய் மருவிய தாயே

அகிலாண்டவல்லி அம்பிகையாளே

மஹிமே சேர் கச்சி மாநகராளே

கனகம் பொழி திருக்காமக்கோட்டத்தி

மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தி

ஓங்கார கோணத்தில் ஒளிர் பத்மாஸனத்தி

நீங்காத நீல நிறத்தி சதுர்புஜத்தி

காணரும் பிலாகாச பீடத்தி கன்னி

சேனுயர் துவஜ சிகர கோபுரத்தி

தகவுறு தர்ம ஸந்தான ஸ்தம்பத்தி


திகழறத்தி பஞ்ச தீர்த்த பூதத்தி

வெற்றி ஸ்தம்பம் விளங்குமாலயத்தி

பற்றற்றவர் பணி பொற்பதத்தி

தலம் புகழ் சங்கராசாரியர் என்னும்

வலம் புரிந்தேத்தி வன்மையோ இன்னும்

ஒருபுடை மருவ உளம் மகிழ் நீலி

திருமகள் கலைமகள் தினம் தொழும் சூலி

காமக்கண்ணி கவுரி கமலாக்ஷி

தாமதமின்றி தந்தருள் காக்ஷி

ஆதரவின்ற அம்மணி உன்றன்


பாதக் கமலம் பணிந்தனன் என்றன்

வேதனை தீர்த்து இவ்வேளை வந்தாதரி

மாதரி வீரி மயான ருத்ரி

சகலரும் போற்றி சந்தோஷமுற்று

சகல சித்தியும் சக்தியும் பெற்று

பக்குவமாக நின் பதமலர் போற்றிட

சக்ரேச்வரியே ஸந்ததம் காப்பாய்

போற்றி போற்றி பொன்னடி போற்றி

ஏத்தி ஏத்தி இறையடி தொழுவாம்

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம்!

Wednesday, 9 February 2022

ஸ்ரீ சூர்யாஷ்டகம் !

 ரத ஸப்தமி ஸ்பெஷல் ! 


ஸ்ரீ சூர்யாஷ்டகம் !


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||


(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)


ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|

ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே... வெப்பம் நிறைந்தவரே... ரிஷி கச்யபரின் குமாரரே... வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே... அனைத்து உலகங்களுக்கும் தந்தையே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே... பலம் பொருந்திய மஹாசூரரே... ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  


ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|

ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே... வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே... உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே... மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே... ஒரே சக்கரத்தைக் கொண்டவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே... தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே... எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)


தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


(உலகின் நாதனே... ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... ஹே சூரிய தேவனே... உம்மை வணங்குகிறேன்)


இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்


(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)

-----------------------------------------------------

சூர்ய கவசம் !

 ரத ஸப்தமி ஸ்பெஷல் !


சூர்ய கவசம் !


சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.


ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்


ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும், 

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.


தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்


மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும், 

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான 

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.


ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே 

வாஸரேஸ்வர: 


என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன் 

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே 

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.


க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித: 


என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட 

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.


ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:


என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும். 

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு 

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும். 

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.


ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:


யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ 

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்.


ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம்  ச விந்ததி.


யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார். 


இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும் 

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி 

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:


சூர்ய மங்கள ஸ்லோகம் !


பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்


பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !


சூரிய பகவான் !

 

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும் 

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும் 

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த 

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி


சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்


சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்


சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி !

Friday, 21 January 2022

ஸ்ரீ_ஸுக்தம்

 #ஸ்ரீ_ஸுக்தம் 

#அர்த்தம்_புரிந்து_படிப்போம்


ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா


#பொருள் விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.


தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்

யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்


#பொருள்

அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.


அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்

ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்


#பொருள் : குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.


காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா

மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்

பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


#பொருள் மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.


சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்

ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம்

தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே

லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே


#பொருள்  பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.


ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ

வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:

தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த

ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ


#பொருள்  சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.


உபைது மாம் தேவஸக கீர்த்தஸ்ச மணிநா ஸஹ

ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே


#பொருள் 

 நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.


க்ஷúத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்

அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்


#பொருள்  

உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.


கந்த - த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்

ஈஸ்வரீகும் ஸர்வ - பூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


#பொருள்  வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.


மனஸாகாமமாஹுதிம் வாஸ: ஸத்ய மசீமஹி

பசூநாம்ரூபமந்தஸ்ய மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா


#பொருள்  மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.


கர்த்தமேந ப்ரஜாபூதா மயிஸம்பவ கர்தம

ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்


#பொருள்  கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்துகொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.


ஆபஸ் ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே

நிக தேவீம் மாதரம்ச்ரியம் வாஸயமே குலே


#பொருள் 

 ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.


ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸ்வர்ணாம் ஹேமமாலினீம்

சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ மமாவஹ


#பொருள்  கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.


ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ


#பொருள்  பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !


மாம் ம ஆவஹக ஜாதவேதோ லக்ஷ்மி மநமகாமினிம்

யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோதாஸ் யோஸ் வாநீவிந்தேயம் புருஷனாநஹம்


#பொருள் 

 ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.


பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே

பத்மாலயே பத்மதளாய தாக்ஷி

விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே

த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ


#பொருள்  தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.


ஸ்ரியே ஜாத ஸ்ரியே ஆநிர்யாய

ஸ்ரியம் வயோஜநித்ருப்யோ ததாது

ஸ்ரியம் வசாநாம் அம்ருத த்வமாயன்

பஜந்தி சத்யஸ் சவிதா விதத்யூன்


#பொருள்  லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.


ச்ரிய ஏவைனம் தச்ச்ரியா மாததாதி ஸந்ததம்

ருசாவஷட்கரத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபிஹி.


#பொருள்  எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே 

விஷ்ணு பத்ன்யை ச தீமஹி

தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்


#பொருள்  

இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும். (இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)


சுபம்.🙏🌹

Friday, 31 December 2021

ஸ்ரீ_ராம_ரக்க்ஷா_ஸ்தோத்ரம்

 #ஸ்ரீ_ராம_ரக்க்ஷா_ஸ்தோத்ரம் .


வினியோக:

ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ர மந்த்ரஸ்ய புதகௌசிக ரிஷி:

ஸ்ரீ சீதாராம சந்த்ரோ தேவதா அனுஷ்டுப் சந்தக: சீதா சக்தி: ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்

ஸ்ரீராமசந்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ர ஜபே வினியோக:


த்யானம்

த்யாயேதாஜானுபாஹும் த்ருதஷர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்

பீதம் வாஸோ வஸானம் நவகமலதள ஸ்பர்தி நேத்ரம் ப்ரஸன்னம்

வாமாங்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் நீரதாபம்

நானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமண்டலம் ராமசந்த்ரம்


ஸ்தோத்ரம்

சரிதம் ரகுனாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம்

ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்                1


த்யாத்வா நீலோத்பல ஷ்யாமம் ராமம் ராஜீவலோசனம்

ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டிதம்            2


ஸாஸிதூண தனுர்பாண பாணிம் நக்தம் சராந்தகம்

ஸ்வலீலயா ஜகத் த்ராது மாவிர்பூதமஜம் விபும்                3


ராமரக்ஷாம் படேத்ப்ராக்ஞ: பாபக்னீம் ஸர்வகாமதாம்

ஸிரோ மே ராகவ பாதுபாலம் தசரதாத்மஜ:                    4


கௌஸல்யேயோ த்ருஷௌ பாது விஸ்வாமித்ர ப்ரிய: ஸ்ருதீ

க்ராணம் பாது மக்த்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸல:            5


ஜிஹ்வாம் வித்யாநிதி: பாது கண்டம் பரத வந்தித:

ஸ்கந்தௌ திவ்யாயுத: பாது புஜௌ பக்னேஷாகார்முக:            6

[30/12, 4:05 pm] Lathvenktesh: கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருதயம் ஜாமதக்ன்யஜித்

மத்யம் பாது கரத்வம்ஸீ நாபிம் ஜாம்பவதாக்ஷரய:                7


சுக்ரீவேஷ: கடீ பாது ஸக்தினீ ஹனுமத்-பிரபு:

ஊரூ ரகூத்தம: பாது ராக்க்ஷ: குல வினாசக்ருத்                8


ஜானுனீ சேதுக்ருத் பாது ஜண்கே தசமுகாந்தக:

பாதௌ விபீஷண ஸ்ரீத: பாது ராமோ அகிலம் வபு:            9


ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் ய: ஸூக்ருதீ படேத்

ஸ சிராயூ: ஸூகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்                10


பாதாள பூதல வ்யோம சாரிணஷ் ச்சத்ம சாரிண:

ந த்ரஷ்டுமபி சக்தாஸ்தே ரக்ஷிதம் ராம நாமபி:                11


ராமேதி ராமபத்ரேதி ராமசந்த்ரேதி வா ஸ்மரன்

நரோ ந லிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விந்ததி            12


ஜகஜ்ஜை த்ரைக மந்த்ரேண ராமநாம்னாபி ரக்ஷிதம்

ய: கண்டே தாரயேத்தஸ்ய கரஸ்தா: ஸர்வ ஸித்தய:            13


வஜ்ரபஞ்ஜர நாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்

அவ்யாஹதாக்ஞ: ஸர்வத்ர லபதே ஜய மங்களம்                14


ஆதிஷ்டவான்யதா ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர:

ததா லிகிதவான் ப்ராத: ப்ரபுத்தௌ புதகௌசிக:                15


ஆ ராம: கல்பவ்ருக்ஷாணாம் வி ராம: ஸகலாபதாம்

அபிராம ஸ்த்ரிலோகானாம் ராம: ஸ்ரீமான்ஸ ந: ப்ரபு:            16  


தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ

புண்டரீக விஷாலாக்ஷௌ சீர க்ருஷ்ணா ஜினாம்பரௌ        17  


ஃப்லமூலாஸினௌ தாந்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ

புத்ரௌ தசரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ        18


சரண்யௌ ஸர்வஸத்வானாம் ஸ்ரேஷ்டௌ ஸர்வ தனுஷ்மதாம்

ராக்க்ஷ: குல நிஹந்தாரௌ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ        19  


ஆத்தஸஜ்ஜதனுஷா விஷுஸ்ப்ருஷாவக்ஷயா சுகானிஷங்க ஸங்கினௌ

ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்ரத: பதி ஸதைவ கச்சதாம்        20


ஸன்னத்த: கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா

கச்சன் மனோரதான்னஷ்ச ராம்: பாது ஸலக்ஷ்மண்:            21


ராமோ தாசரதி ஷூரோ லக்ஷ்மணானுசரோ பலீ

காகுத்ஸ்ய: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூத்தம்:            22


வேதாந்த வேத்யோ யக்ஞேஷ்: புராண புருஷோத்தம்:

ஜானகீ வல்லப: ஸ்ரீமானப்ரமேய பராக்ரம்:                    23


இத்யேதானி ஜபேந்நித்யம் மத்தக்த: ஸ்ரேத்தயான்

வித:

அஸ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்சய:            24  


ராமம் தூர்வாதள ஷ்யாமம் பத்மாக்ஷம் பீதவாஸஸம்

ஸ்துவந்தி நாமபிர்-திவ்யைர்-நதே ஸம்ஸாரிணோ நரா:            25


ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் சுந்தரம்

காகுத்ஸ்தம் கருணார்ணவம் குணநிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்    26  

 

ராஜேந்த்ரம் ஸத்யஸந்தம் தசரததனயம் ச்யாமளம் சாந்தமூர்த்திம்

வந்தே லோகாபிராமம் ரகுகுலதிலகம் ராகவம் ராவணாரிம்        27


ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே

ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:                    28


ஸ்ரீராம் ராம் ரகுநந்தன ராம் ராம் ஸ்ரீராம் ராம் பரதாக்ரஜ ராம் ராம்

ஸ்ரீராம் ராம் ரணகர்கஷ் ராம் ராம் ஸ்ரீராம் ராம் சரணம் பவ ராம் ராம்    29


ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி

ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ வசஸா க்ருணாமி                  

ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ ஸிரஸா நமாமி

ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ சரணம் ப்ரபத்யே                    30


மாதா ராமோ மத்-பிதா ராமசந்த்ர:

ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசந்த்ர:

ஸர்வஸ்வம் மே ராமசந்த்ரோ தயாளு:

நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே                    31


தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா

புரதோ மாருதிர்-யஸ்ய தம் வந்தே ரகுநந்தனம்                32


லோகாபிராமம் ரணரங்கதீரம் ராஜீவனேத்ரம் ரகுவம்சநாதம்

காருண்யரூபம் கருணாகரம் தம் ஸ்ரீராமசந்த்ரம் சரணம் ப்ரபத்யே    33  


மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே    34


கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்

ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்            35  


ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்            36


பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்

தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்                37


ராமோ ராஜமணி: ஸதா விஜயதே ராமம் ரமேசம் பஜே

ராமேணாபிஹதா நிஷாசரசமூ ராமாய தஸ்மை நம:            38


ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோ (அ) ஸ்ம்யஹம்

ராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்த்ரனாம தத்துல்யம் ராம நாம வரானனே


|| இதி ஸ்ரீ புதகௌசிகமுனி விரசிதம் ஸ்ரீராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

 யோகம் தரும் மாருதி வழிபாடு


#வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.


#வெற்றி(லை) மாலை: அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கும் பக்தர்களில் சிலருக்கே இதன் பொருள் புரிந்திருக்கிறது. சீதாபிராட்டியை அனுமன் அசோக வனத்தில் ராமதூதனாகச் சந்தித்தபோது, சீதை அனுமனின் தலையில் வெற்றிலையை வைத்து 'எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!’ என்று ஆசி அருளினார்.  இதனால், வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் வளம் பெறலாம் என்பது ஐதீகம்!


#வடைமாலை_வழிபாடு: நவதான்யங்களில், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சக்தியைக் கொடுப்பது உளுந்து. அனுமனின் தாயார் அஞ்சனாதேவி உளுந்து வடையைச் செய்து கொடுத்ததால், ஸ்ரீஅனுமன் ஆரோக்கியமாகவும் திடமாகவும் திகழ்ந்தாராம். எனவே, அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால், நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.


#வெண்ணெய்க்_காப்பு: ராவணனுக்கும் ஸ்ரீராமனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள். ஸ்ரீஅனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும் தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார்.  அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு. அதன்படியே செய்தார் அனுமன். காரியங்களில் வெற்றி கிடைத்திட, தேக ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபடலாம்.


#செந்தூரக்_காப்பு_வழிபாடு: அசோகவனத்தில் சீதையிடம் ராமதூதனாக வந்து சந்தித்த அனுமன் சொன்னதைக் கேட்டு, நெற்றியில் செந்தூரம் வைத்துக்கொண்டு, மகிழ்ந்து சிரித்தாளாம் சீதாதேவி. இதைக் கண்ட அனுமனும் மகிழ்ந்து, செந்தூரத்தை உடலெங்கும் பூசிக்கொண்டாராம். எனவே, செந்தூரக் காப்பு செய்து ஸ்ரீஅனுமனை வழிபட்டால், வீட்டிலும் மனத்திலும் எப்போதும் மகிழ்ச்சி தங்கும்.


#வாலில்_பொட்டிட்டுப்_பிரார்த்தனை: பாண்டவர்களில் பராக்கிரமசாலியாக விளங்கிய பீமன், திரௌபதி விரும்பிய பாரிஜாத மலரைத் தேடிக் கானகம் சென்றான். வழியில் கிழக் குரங்கு ஒன்று, நடுவில் வாலை நீட்டிப் படுத்திருந்தது. அதைத் தாண்டிப்போக விரும்பாமல், வாலைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள்ளும்படி சொல்ல, 'நான் மிகவும் களைப்புடன் படுத்திருக்கிறேன். முடிந்தால், நீயே என் வாலை தள்ளி வைத்துவிட்டுச் செல்’ என்றது குரங்கு. அதன்படியே, அதன் வாலை பீமன் அலட்சியமாக நகர்த்த முயன்றபோது, ஒரு துளிகூட அதை அசைக்க முடியாமல் போகவே, அதிர்ந்து போனான் பீமன். கர்வம் அடங்கினான். பின்பு, அந்தக் குரங்குதான் ஸ்ரீஅனுமன் என்பதை அறிந்து, 'நான் அனுமனின் பக்தன். என்னால் முடியும்’ என்று சொல்லியபடி வாலை நகர்த்த முயல, அனுமன் மகிழ்ந்து அவனுக்குத் தன் வாலை நகர்த்தி உதவினார்.


'அனுமனின் வாலுக்கே இத்தனைச் சக்தி இருக்கிறதே! இதை வணங்கினாலே அருள் பெறலாமே’ என்று எண்ணினான் பீமன்.எனவே, வால் வழிபாடு விசேஷம்!  


அனுமனின் அருளை எளிதில் பெற, வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். அதேபோல், மங்கல வடிவான மணியைக் கட்டி வழிபடும் வழக்கமும் உண்டு. அனுமனின் வாலில் நவகிரகங்கள் சேர்ந்திருப்பதாக அவரது வழிபாட்டுக் கல்பம் கூறுகிறது. ஏழரைச் சனி காலங்களில் அனுமன் வழிபாடு, நம்மை அரணெனக் காக்கும்.


பூஜை அறையில் மாருதி கோலமிட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.


'அஸ்யஸ்ரீ ஹனுமான் மகா மந்த்ரஸ்ய

ஸ்ரீராமச்சந்திரோ பகவான் ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஹனுமான் தேவதா

ஹ்ரீம் பீஜம் - ஸ்ரீம் சக்தி: கில - கில - பூ - பூ காரிணே இதி கீலகம்

சர்வ அரிஷ்ட சர்வானுகூலே, கிரஹ தோஷ நிவாரண ஜபே விநியோக:

ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம். ஹ்ரீம் ஹ்ரூம் இதி கரந்யாச அங்கந்யாஸ பூர்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:’


- என்று கை கூப்பியபடி சொல்லுங்கள்.


தியானம்


'வந்தே வித்யுத் ஜ்வலன விலஸத் ப்ரம்ம சூத்ரோஜ் வலந்தம்

கர்ணத்வந்த்வே கனக ரசிதே குண்டலே தாரயந்தம்

ஸத்கௌபீனம் கபிலாங்ருதம் காமரூபம் கபீந்த்ரம்

புத்ரம் வாயோ நினசுத சுகதம் வஜ்ர தேஹம் வரேண்யம்’


- என்று தியானித்து, கோலத்தில் இந்த ஸ்ரீஅனுமன் நாமார்ச்சனையைச் சொல்லி, துளசியால் அர்ச்சிக்க வேண்டும்.


'ஓம் ஸ்ரீம் கௌண்டின்ய கோத்ர ஜாதாய நம: ஓம் ஸ்ரீ கேசரீ சுதாய நம:

ஓம் ஸ்ரீ அஞ்சநா கர்ப்ப நம: ஓம் ஸ்ரீ அனுமதே நம: ஓம் ஸ்ரீ சிரஞ்சீவனே நம:

ஓம் ஸ்ரீ பஞ்சவஜ்த்ராய நம: ஓம் ஸ்ரீ சர்வ மந்த்ர ஸ்வரூபவதே நம:

ஓம் ஸ்ரீ சர்வ தந்த்ர ஸ்வரூபினே நம: ஓம் ஸ்ரீ சர்வ ரோக ஹராய நம:

ஓம் ஸ்ரீ சர்வ துக்க ஹராய நம: ஓம் ஸ்ரீ சர்வ க்ரஹ விநாசினே நம:

ஓம் ஸ்ரீ சர்வ மாயா விபஞ்சநாய நம: ஓம் ஸ்ரீ சர்வ வித்யா சம்பத் ப்ரதாயகாய நம:

ஓம் ஸ்ரீ சீதாசமேத ஸ்ரீராமபாத ஸேவா துரந்தராய நம:’


தூபம் தீபம், நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி செய்த பிறகு குங்குமம், செந்தூரம், சந்தனம், துளசி இட்டுக்கொண்டு, மும்முறை ஆத்ம பிரதட்சிணம் செய்து, வரைந்துள்ள கோலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்’ என்று கூறி துளசியும் குங்குமமும் போடவும். பிறகு, மூல மந்திரத்தை 21 தடவை கூறவேண்டும்.


'ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராமதூதாய லங்கா வித்வம்சனாய

அஞ்சனா கர்ப்ப சம்பூதாய சாகினீ டாகினீ வித்வம்சனாய, கிலகில பூ பூ காரிணே

விபீஷணாய ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹ்ரூம் பட்   ஸ்வாஹா’


படத்தில், அனுமனுடைய வால் பகுதியில் சந்தனம் குங்குமம் வைத்து, மூன்று முறை ஜெய

பஞ்சகத்தைப் படிக்கவேண்டும். இப்படி 47 நாட்கள் படித்து, பொட்டு வைத்து வந்தால், நினைத்ததெல்லாம் நடந்தேறும்; ஞானமும் யோகமும் பெறலாம்.


ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம், சாதனை, யோகம் இவற்றில் உச்சத்தில் இருக்கும் அனுமனைத் தோத்திரம் செய்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்!


- வழிபடுவோம்...


நன்றி : விகடன்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...