Friday, 2 October 2020

ஸ்ரீமஹாகணபதி_மங்களமாலிகா_ஸ்தோத்திரம்

 #ஸ்ரீமஹாகணபதி_மங்களமாலிகா_ஸ்தோத்திரம்


1.   ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய கௌரீவாமாங்க வாஸிநே


த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.


#பொருள்_விளக்கம்:

ஸ்ரீநீலகண்டரின் பிரிய புத்திரனும், ஸ்ரீஅம்பாளின் இடது மடியில் வசிப்பவரும், முப்பத்திரண்டு ரூபங்கள் உள்ளவருமான ஸ்ரீமகாகணபதிக்கு மங்களம் உண்டாகட்டும்.


2. ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே!


வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.


#பொருள்_விளக்கம்:

முதலில் பூஜிக்கத் தகுந்தவரும், தேவரும், தந்தம், கொழுக்கட்டை ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டிருப்பவரும், ஸ்ரீவல்லபா தேவியின் நாதனுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


3. லம்போதராய ராந்தாய சந்திரகர்வாபஹாரிணே


கஜாநநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்!!


#பொருள்_விளக்கம்:

தொங்குகின்ற வயிற்றை உடையவரும், சாந்தமூர்த்தியும், சந்திரனின் கர்வத்தைப் போக்கியவரும், யானை முகத்தை உடையவரும், பிரபுவுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


4. பஞ்சஹஸ்தாய வந்திதாய பாராங்குபர தராயச


ஸ்ரீமதே கஜகர்ணாய ஸ்ரீகணேசாய மங்களம்!!


#பொருள்_விளக்கம்:

ஐந்து கைகளை உடையவரும், எல்லோராலும் நமஸ்கரிக்கத் தக்கவரும், பாசம்- அங்குசம் நன்றி விகடன் ஆகியவற்றைத் தரித்தவரும் ஸ்ரீமானும் யானையின் காதுகளை உடையவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


5. த்வை மாதுராய பாலாய ஹேரம்பாய மஹாத்மனே


விகடாயா குவாஹாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

துர்கை, சாமுண்டா தேவி இரண்டுபேரும் வளர்த்ததால், இரண்டு தாய்களை உடையவரும், சிறுவனும், ஹேரம்பனும் (ஹே- மஹேஸ்வரனின் அருகில், ரம்பதே - இருக்கிறார்) மஹாத்மாவும், விரிந்த கன்னத்தை உடையவரும், மூஞ்சூரை வாகனமாக கொண்டவருமான கணபதிக்கு மங்களம்.


6.ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே


ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்.


#பொருள்_விளக்கம்:

ஒளியுள்ள தந்தத்தை கொண்டவரும், ஒருவராலும் ஜெயிக்க படாதவரும், பிரார்த்தித்து வேண்டிக்கொண்ட பொருளை சீக்கிரம்


அளிப்பவரும், ஸித்தி- புத்தி என்ற இரண்டு மனைவிகளுக்கு சந்தோஷத்தை அளிப்பவருமான ஸ்ரீகணபதிக்கு  மங்களம்.


7.விலம்பியக்ஞஸுத்ராய ஸர்வ விக்னநிவாரிணே


தூர்வாதள ஸுபூஜ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

பூநூலை அணிந்தவரும், இடையூறுகளை நீக்குகிறவரும், அருகம்புல்லால் பூஜிக்கத் நன்றி விகடன் தக்கவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


8. மஹாகாயாய பீமாய மஹாஸேநாக்ரஜன்மனே


த்ரிபுராரிவோத் தர்த்ரே ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

பெரிய சரீரத்தை உடையவரும், பயங்கரமானவரும் சுப்ர மணியருக்கு முன்னதாகப் பிறந்தவரும், ஸ்ரீபரமசிவனிடம் வரம் பெற்றவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


9. ஸிந்தூர ரம்ய வர்ணாய நாகபத்தோ தராயச


ஆமோதாய ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

குங்குமப்பூவைப் போல் அழகிய நிறத்தை கொண்டவரும், நாகத்தை வயிற்றில் கட்டிக்கொண்டவரும், சந்தோஷ ரூபியும், ஆனந்தரூபியுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


10. விக்னகர்த்ரே துர்முகாய விக்னஹர்த்ரே பரிவாத்மனே


ஸுமுகாயைகதந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

மாறுபாடான முகம் கொண்டவரும், விக்னங்களை போக்கு கின்றவரும், சிவபுத்ரனும் மங்களமான முகத்தை உடையவரும், ஒரு தந்தத்தை உடையவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


11. ஸமஸ்த கணநாதாய விஷ்ணவே தூமகேதவே


த்ரியக்ஷாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

எல்லா கணங்களுக்கும் தலைவரும், எங்கும் வியாபித்தவரும், பாபிகளுக்கு இடையூறின் உருவமாக இருப்பவரும். முக்கண்ணனும் நெற்றியில் சந்திரனை தரித்தவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


12. சதூர்திபராய மான்யாய ஸர்வவித்யாப்ரதாயினே


வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

சதுர்த்தி திதிக்கு நாயகனும், பூஜிக்கத் தக்கவரும். எல்லா வித்தைகளையும் கொடுப்பவரும், வளைந்த நன்றி விகடன் துதிக்கையை உடைய வரும், குள்ளமாக இருப்பவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.


13. துண்டினே கபிலாக்யாய ஸ்ரேஷ்டாய ருணஹரிணே


உத்தண்டோத்தண்டரூபாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

நர்த்தனம் செய்கின்றவரும், கபில கணபதி என்ற பெயரை உடையவரும், கடனைப் போக்குகிறவரும், மிகப் பயங்கரமான ரூபமுடையவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


14. கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயினே


விநாயகாய விபவே ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

கஷ்டங்களைப் போக்குகின்றவரும், யானை, மனிதன் ஆகிய இரண்டு உருங்களாக இருப்பவரும், பக்தர்கள் கோரிய ஜயத்தை அளிப்பவரும், விநாயகரும், ப்ரபுவுமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


15. ஸச்சிதா நந்த ரூபாய நிர்குணாய குணாத்மனே


வடவே லோக குரவே ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

ஸத், சித், ஆனந்தம் இந்த உருவாக இருப்பவரும் முக்குணம் அற்றவரும், கல்யாண குணங்கள் நிரம்பியவரும், பிரும்மசாரி ரூபியும் உலகங்களுக்கு ஆசார்யருமான கணபதிக்கு மங்களம்.


16. ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய ப்ரஸன்னவதனாயச


ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

ஸ்ரீசாமுண்டா தேவியின் மங்கள புத்திரரும், யானை முகத்தை உடையவரும், ஸ்ரீ குபேரன் முதலியவர்களால் சேவிக்கத் தகுந்தவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


17. ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர ஸ்ரீக்ருஷ்ணேந்தர விநிர்மிதாம்


விபூதி மாத்ருகாரம்யாம் கல்யாணைஸ்வர்ய தாயி நீம்


18. ஸ்ரீமஹா கணநாதஸ்ய ஸ்ரீபாம் மங்கள மாலிகாம்


ய: படேக் ஸததம் வாணீம் லக்ஷ்மீம் ஸித்தி மவாப்நுயாத்


#பொருள்_விளக்கம்: 

17,18

ஸ்ரீதுர்காதேவியின் கருணைக்குப் பாத்திரமான...  ஸ்ரீக்ருஷ்ணேந்திந்ராள் என்ற ஸந்நியாஸியால் செய்யப்பட்டதும், அஷ்ட ஸித்திகள் மற்றும் சப்த மாத்ருகைகளின் பிரசாதத்தையும் அளிப்பதால் ரமணீயமாக உள்ளதும், கல்யாணங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடியதும், மங்களத்தை அளிக்கக் கூடியதுமான ஸ்ரீமஹா கணபதியின் மங்கள மாலிகா ஸ்தோத் திரத்தை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் சகல சௌபாக்கியங்

களையும் அடைவான்.


ஸ்ரீமஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


தொகுப்பு: எம்.ஆனந்த நாராயணன்


#நன்றி  :  #விகடன்.

Monday, 14 September 2020

அளவற்ற_செல்வம்_தரும்_ஆனித்_திருமஞ்சனம்

 #அளவற்ற_செல்வம்_தரும்_ஆனித்_திருமஞ்சனம்



ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு. இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்துகிறார்கள்.


இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக்கு ஒரு கால அளவாகவும், மனிதர்களுக்கு வேறு ஒரு கால அளவாகவும் இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளைத்தான் குறிக்கும். அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும்.


தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தை குறிக்கும். தேவர்களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தை குறிக்கும். அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தை குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தை குறிக்கும்.


இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள். 


மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.


இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள். அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஜூன் 21-ந்தேதி சிவாலயங்களில் ஆனி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.


திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது ஈசனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவ னையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை 3 மணியில் இருந்தே அபிஷேகம் தொடங்கி விடுவார்கள்.


சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள். ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணா மலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. 


ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு. அப்போது பலவகை அபிஷேகங்கள் செய்யப்படும்.


அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.


நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும். 


அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.


அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.


ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.


என்றாலும் மற்ற சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடத்தப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை தலத்தில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்துகிறார்கள்.


திருமஞ்சனம் தினத்துக்கு முந்தைய தினம், அதாவது 20-ந்தேதி புதன்கிழமை மாலை ஸ்ரீநடராஜ பெருமான் புறப்பாடாகி எழுந்தருள்வார். இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு வரும் அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தை கடந்து ஆயிரம் கால் மண்டபத்துக்கு வந்து சேருவார்.


ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஸ்ரீநடராஜ பெருமான் எழுந்தருள்வார். ஒன்று மார்கழி திருவாதிரை தினம். மற்றொன்று ஆனி திருமஞ்சனம் தினம்.


எனவே ஆனி திருமஞ்சன திருநாளில் ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம் கால் மண்டபத்துக்கு வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்ததும் வலது பக்கம் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.


அன்றிரவு முழுவதும் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருப்பார். மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அங்கு ஆனி திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இதுபற்றி திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யார்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் கூறுகை யில், “ஆனி திருமஞ்சனம் தினத்தன்று பள்ளியறை திறக்கப்பட்ட பிறகே ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கும். பொதுவாக பழமையான மற்ற சிவாலயங்களில் அதிகாலை 3 மணிக் கெல்லாம் நடராஜ பெருமானுக்கு அபி ஷேகம் தொடங்கி நடப்பதுண்டு.


ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அதிகாலை 5 மணிக்குத்தான் அபி ஷேகம் தொடங்கும். பழங்காலத்தில் இந்த அபிஷேகம் பல மணி நேரத்துக்கு நடந்துள்ளது.


60-க்கும் மேற்பட்ட வகை, வகையான அபிஷேகங்களை நடராஜருக்கு செய்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் அந்த அளவுக்கு அதிகமான அபிஷேகங்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே 16 வகை அபிஷேகம் நடத்தப்படுகிறது” என்றார்.


பொதுவாக இறைமூர்த்தங்களுக்கு நடத்தப்படும் சில அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்கக் கூடாது என்று சொல்லப் படுவதுண்டு. ஆனால் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடத்தப் படும் அனைத்து வகை அபிஷேகங் களையும் பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.


அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் ஸ்ரீநடராஜ பெருமான் அழகுப்படுத்தப்பட்டு, அலங்காரம் செய்யப் படுவார். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.


அதன் பிறகு ஸ்ரீநட ராஜ பெருமான், சிவகாம சுந்தரியுடன் நடனம் ஆடியபடி ஆயிரம் கால் மண்டபத்தின் படிகளில் இறங்கி வருவார். அந்த காட்சி கைலாயத்தில் சிவபெருமான் நடனம் ஆடிக் கொண்டு வருவது போன்று ஆனந்தமயமாக கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


நடராஜர் ஆடும் அந்த ஆனந்த நடனம், உண்மையிலேயே பக்தர்கள் மனதில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளித்தரும். மனம் எல்லாம் பூரிப்பால் நிறைந்து விடும்.


இதைத் தொடர்ந்து ஸ்ரீநடராஜ பெருமான் திருவீதி உலாவுக்கு புறப்படுவார். அதிலும் ஒரு வித்தியாசமான நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது.


பொதுவாக சிவாலயங்களில் திருவீதி உலாவுக்கு செல்லும் இறைமூர்த்தங்கள் ராஜகோபுரம் வழியாகவே சென்று திரும்பும். திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியாக உற்சவர்கள் சென்று வருகிறார்கள்.


ஸ்ரீநடராஜ பெருமான் அந்த திட்டிவாசல் வழியை பயன்படுத்த மாட்டார். அவர் திருமஞ்சனம் கோபுரவாசல் வழியையே பயன்படுத்துவார். ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் அவர் ராஜகோபுரத்துக்கு முன்னதாக உள்ள பிரகார நந்தவனம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழி யாக வீதி உலா செல்வார்.


(ஆலயத்துக்கு தினமும் அதிகாலை இந்த வாசல் வழியாகத்தான் திருமஞ்சன புனிதநீர் எடுத்து வரப்படுவதால், இந்த கோபுரத்துக்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது)


திருவண்ணாமலை ஆலய நடராஜர் உற்சவர் பிரமாண்ட உருவ அமைப்பு கொண்டவர். வீதி உலாவில் அவரைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.


வீதி உலா முடிந்த பிறகு ஸ்ரீநடராஜ பெருமான் அதே திருமஞ்சன கோபுரம் வழியாக ஆலயத்துக்கு திரும்புவார். திருவண்ணாமலை ஆலயத்தில் ஒருநாள் உற்சவமாக இந்த “ஆனித் திருமஞ்சன உற்சவம்” கொண்டாடப்படுகிறது.


ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். முதலாவது பலன்- நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். விவசாயம் செழித்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.


அடுத்து ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக கூறப்பட்டுள்ளது. 


சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். மொத்தத்தில் சிவ-சக்தி இருவரது பேரருளும் நமக்கு கிடைக்கும்.


ஆனி திருமஞ்சன உற்சவம் போலவே திருவண்ணாமலையில் நடக்கும் பஞ்ச பருவ உற்சவங்களும் அதிசயங்களால் நிறைந்தவை.


நன்றி  :  மாலை மலர்.

Saturday, 22 August 2020

ஸ்ரீ_ருணஹர_கணேச_ஸ்தோத்ரம்

 #ஸ்ரீ_ருணஹர_கணேச_ஸ்தோத்ரம்


ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேச’ம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம் |


ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம்ப்ரணமாமி 

தேவம்||1


ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பலஸித்தயே |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே|| 2


 த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் ச’ம்புனா ஸம்யகர்ச்சித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  3


மஹிஷஸ்ய வதே தேவ்யா கண நாத: பூஜித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  4


 ஹிரண்யகச்’யாபதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  5


தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  6


 பாஸ்கரேண கணேசோ’ஹி பூஜிதச்’சைவ 

ஸித்தயே |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  7


ச’சி’ நா காந்தி வ்ருத்யர்த்தம் பூஜிதோ கண நாயக: |


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  8


பால நாயச’ தபஸாம் விச்’வாமித்ரேண பூஜித:


ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  9


இதம் ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாச’னம் |


ஏகவாரம் படேந்நித்யம் வர்ஷமேகம் ஸமாஹித: || 10


தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத் |


படந்தோ(அ)யம் மஹா மந்த்ர: ஸார்த்த பஞ்சதசா’க்ஷர: ||  11


இதம் மந்த்ரம் படே ந் நித்யம் ததச்’ச சு’சிபாவன: |


ஏகவிம்சதி ஸங்க்யாபி: புரச்’சரண மீரிதம் ||  12


ஸஹஸ்ராவர்த்தனாத் ஸம்யக் ஷண்மாஸம்ப்ரியதாம் வ்ரஜேத் |


ப்ருஹஸ்பதி ஸமோஜ் ஞானே தனே தனபதிர் பவேத் ||  13


அஸ்யைவாயுத ஸங்க்யாபி: புரச்’சரண மீரிதம் |


வக்ஷ்யாம்யாவர்த்தனாத் ஸம்யக் வாஞ்சிதம் பலமாப்னுயாத் ||  14


பூதப்ரேத  பிசா’சானாம் நாச’நம் ஸ்ருதிமாத்ருத:

Monday, 3 August 2020

கைசிக_ஏகாதசி_விரத_கதை

#கைசிக_ஏகாதசி_விரத_கதை
--
எப்படிப்பட்ட பாவத்தையும் கைசிக ஏகாதசி விரதம் தொலைக்கும் என்பது ஐதீகம். கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதையை அறிந்து கொள்ளலாம்.

#கைசிக_ஏகாதசி_விரத_கதை

மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் என்னும் எளிய பக்தன். பெருமாளைப் பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன் நம்பாடுவான். வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள்.

இது நடந்த இடம் திருக்குருங்குடி என்ற திருத்தலம். அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. #பிரபோதின_ஏகாதசி என்று சொல்வார்கள். விரதமிருந்து பெருமாளைப் பாடக் கிளம்பினார் நம்பாடுவான். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் எனக்கு இன்று நீ உணவாக வேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.

நம்பாடுவான் சொன்னான், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.

பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவான், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி, பயங்கரமான சத்தியங்களைச் செய்கிறான். பிரம்ம ராட்சசன் விட்டு விட்டான்.

நம்பாடுவான் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று பாடுகிறான். அன்று மிக மிக உருக்கமாக ஒரு பண் பாடுகிறான். அது கைசிகப் பண். பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி இல்லை.எனவே நம்பாடுவானை உண்ணவில்லை. தன்னை சாபவிமோசனம் செய்ய வேண்டுகிறான். தான் பாடின கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்குகிறான் நம்பாடுவான்.

கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி. இந்தக் கதை வராகப் புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் இது இப்போதும் நாடகமாக நிகழ்த்தப் பெறுகிறது. மற்ற திவ்யதேசங்களில் பெருமாள் கோயிலில் கைசிக மகாத்மியம் படிக்கப்படுகிறது.

#நன்றி : #மாலைமலர்.

Sunday, 26 July 2020

ஸ்ரீ_மஹாலக்ஷ்மி_கவசம்

#ஸ்ரீ_மஹாலக்ஷ்மி_கவசம்

(இந்த கவசத்தை தினந்தோறும் ஜபம் செய்பவர்களுக்கு ஸகல காரியசித்தியும் ஸௌபாக்யங்களும் ஏற்படுகின்றன.)

#ஓம்

மஹாலக்ஷ்ம்யா: ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வகாமதம்

ஸர்வபாப ப்ரசமனம் ஸர்வவ்யாதி நிவாரணம்  1                               

துஷ்டம்ருத்யுப்ரசமனம் துஷ்ட்தாரித்ர்ய நாசனம்

க்ரஹபீடா ப்ரசமனம் அரிஷ்ட ப்ரவிபஞ்சனம்                                          2

புத்ரபௌத்ராதி ஜனகம் விவாஹப்ரத மிஷ்டதம்

சோராரிஹாரி ஜகதாம் அகிலேப்ஸித கல்பகம்                                      3

ஸாவதாநமநா பூத்வா ஸ்ருணு த்வம் சுகஸத்தம

அநேகஜந்மஸித்தி லப்யம் முக்திபலப்ரதம்                                                4

தநதாந்ய மஹாராஜ்ய ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஸக்ருத்படந மாத்ரேண மஹாலக்ஷ்மீ: ப்ரஸீததி                                       5

க்ஷீராப்திமத்யே பத்மாநாம் காநநே மணிமண்டபே

ரத்னஸிம்ஹாஸநே திவ்யே தந்மத்யே மணிபங்கஜே                             6

தந்மத்யே ஸுஸ்திதாம் தேவீம் மரீசிஜனஸேவிதாம்

ஸுஸ்நாதாம் புஷ்பஸுரபிம் குடிலாலக பந்தநாம்                                 7

பூர்ணேந்துபிம்பவதநாம் அர்த்தசந்த்ர லலாடிகாம்

இந்தீவரேக்ஷணாம் காமாம் ஸர்வாண்ட புவநேச்வரீம்                         8

திலப்ரஸவ ஸுஸ்நிக்த நாஸிகாலங்க்ருதாம் ஶ்ரியம்

குந்தாவதாதரஸநாம் பந்தூகாதர பல்லவாம்                                            9

தர்ப்பணாகார விமலாம் கபோலத்விதயோஜ்வலாம்

மாங்கல்யாபரணோபேதாம் கர்ணத்விதய ஸுந்தராம்                                    10

https://www.facebook.com/latha.venkteshwaran

கமலே ச ஸுபத்ராட்யே அபயம் தததீம் வரம்

ரோமராஜி லதாசாரு மக்நநாபி தலோதரீம்                                               11

பட்டவஸ்த்ர ஸமுத்பாஸாம் ஸுநிதம்பாதி லக்ஷணாம்

காஞ்சநஸ்தம்பவிப்ராஜத் வரஜாநூரு சோபிதாம்                                               12

ஸ்மரகாஹளிகாகர்வ ஹாரி ஜங்காம் ஹரிப்ரியாம்

கமடீப்ருஷ்டஸத்ருச பாதாப்ஜாம் சந்த்ரவந்நகாம்                                 13

பங்கஜோதர லாவண்யாம் ஸதலாங்க்ரி தலாச்ரயாம்

ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸர்வலக்ஷணலக்ஷிதாம்                               14

பிதாமஹ மஹாப்ரீதாம் நித்யத்ருப்தாம் ஹரிப்ரியாம்

நித்ய காருண்யலளிதாம் கஸ்தூரி லேபிதாங்கிகாம்                             15

ஸர்வமந்த்ரமயீம் லக்ஷ்மீம் ச்ருதிசாஸ்த்ர ஸ்வரூபிணீம்

பரப்ரஹ்மமயீம் தேவீம் பத்மநாப குடும்பினீம்                                         16

ஏவம் த்யாத்வா மஹால்க்ஷ்மீம் ய; படேத் கவசம் பரம்

மஹாலக்ஷ்மீ: சிர: பாது லலாடம் மம பங்கஜா                                           17

கர்ணத்வந்த்வம் ரமா பாது நயநே நளிநாலயா

நாஸிகாமவதாதம்பா வாசம் வாக்ரூபிணீ மம                                         18

தந்தாநவது ஜிஹ்வாம் ஸ்ரீ: அதரோஷ்டம் ஹரிப்ரியா

சிபுகம் பாது வரதா கண்டம் கந்தர்வஸேவிதா                                         19

வக்ஷ: குக்ஷிகரௌ பாயும் ப்ருஷ்டமவ்யாத் ரமா ஸ்வயம்

கட்யூருத்வயகம் ஜாநு ஜங்கே பாதத்வயம் சிவா                                      20

https://www.facebook.com/latha.venkteshwaran

ஸர்வாங்கமிந்த்ரியம் ப்ராணாந் பாயாதாயாஸஹாரிணீ

ஸப்ததாதூந் ஸ்வயஞ்ஜாதா ரக்தம் சுக்லம் மநோஸ்தி ச                      21

ஜ்ஞாநம் புத்தி மனோத்ஸாஹாந் ஸர்வம் மே பாது பத்மஜா

மயா க்ருதந்து யத் தத்வை தத்ஸர்வம் பாது மங்களா                            22

மமாயுரங்ககாந் லக்ஷ்மீ: பார்யாபுத்ராம்ஶ்ச புத்ரிகா:

மித்ராணி பாது ஸததம் அகிலம் மே வரப்ரதா                                          23

மமாரிநாசநார்த்தாய மாயாம்ருத்யுஞ்ஜயா பலம்

ஸர்வாபீஷ்டந்து மே தத்யாத் பாது மாம் கமலாலயா                             24

ஸஹஜாம் ஸோதரஞ்சைவ சத்ருஸம்ஹாரிணீ வதூ:

பந்துவர்க்கம் பராசக்தி: பாது மாம் ஸர்வமங்களா                                 25

#பலச்ருதி:

ய இதம் கவசம் திவ்யம் ரமாயா: ப்ரயத: படேத்

ஸர்வஸித்தி மவாப்நோதி ஸர்வரக்ஷாம் ச சாச்வதீம்                             26

தீர்க்காயுஷ்மாந் பவேந் நித்யம் ஸர்வஸௌபாக்யசோபித:

ஸர்வஞ்ஞ: ஸர்வதர்ஶீச ஸுகிதஶ்ச ஸுகோஜ்வல:                                27

ஸுபுத்ரோ கோபதி: ஸ்ரீமாந் பவிஷ்யதி ந ஸம்சய:

தத்க்ருஹே ந பவேத் ப்ரஹ்மந் தாரித்ர்ய துரிதாதிகம்                          28

நாக்நிநா தஹ்யதே கேஹம் ந சோராத்யைஶ்ச பீட்யதே

பூதப்ரேதபிஶாசாத்யா: த்ரஸ்தா தாவந்தி தூரத:                                      29

லிகித்வா ஸ்தாபிதம்யந்த்ரம் தத்ர வ்ருத்திர் பவேத் த்ருவம்

நாபம்ருத்யு மவாப்நோதி தேஹாந்தே முக்திமாந் பவேத்                    30

https://www.facebook.com/latha.venkteshwaran

ஸாயம் ப்ராத: படேத் யஸ்து மஹாதநபதிர் பவேத்

ஆயுஷ்யம் பௌஷ்டிகம் மேத்யம் பாபம் துஸ்வப்நநாசனம்                31

ப்ரஜ்ஞாகரம் பவித்ரஞ்ச துர்பிக்ஷாக்நி விநாசநம்

சிதப்ரஸாத ஜநகம் மஹாம்ருத்யு ப்ரஸாந்திதம்                                      32

மஹாரோக ஜ்வரஹரம் ப்ரஹ்மஹத்யாதி சோதகம்

மஹாஸுக ப்ரதஞ்சைவ படிதவ்யம் ஸுகார்த்திபி:                                33

தநார்த்தீ தநமாப்நோதி விவாஹார்த்தீ லபேத் வதூ:

வித்யார்த்தீ லபதே வித்யாம் புத்ரார்த்தீ குணவத்ஸுதாந்                   34

ராஜ்யார்த்தீ லபதே ராஜ்யம் ஸத்யமுக்தம் மயா சுக( இறையருள்)

மஹாலக்ஷ்ம்யா: மந்த்ரஸித்தி: ஜபாத் ஸத்ய: ப்ரஜாயதே                      35

https://www.facebook.com/latha.venkteshwaran

ஏவம் தேவ்யா: ப்ரஸாதேந சுக: கவசமாப்தவாந்

கவசாநுக்ரஹேணைவ ஸர்வாந் காமாநவாப்நுயாத்                            36

ஸர்வலக்ஷண ஸம்பந்நாம் லக்ஷ்மீம் ஸர்வேஶ்வரேஶ்வரீம்

ப்ரபத்யே ஶரணம் தேவீம் பத்ம பத்ராக்ஷ வல்லபாம்.                            37

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஶ்ரியை நம:

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கவசம் ஸம்பூர்ணம்

Thanks : nytanaya nytanaya

Tuesday, 21 July 2020

திருஞானசம்பந்தருடன் சிவனடி சேர்ந்த நாயன்மார்கள்... வைகாசி மூலத்திருநாளின் நெகிழ்ச்சி பின்னணி!

மு.ஹரி காமராஜ்
பண்டிகை
ன்று (31-5-18), வைகாசி மூல நட்சத்திரத் திருநாள். பெருமைமிக்க இந்த நாளில் சிவனின் புகழ்பாடி சீலம் கொண்ட நாயன்மார்கள் நால்வரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. ஈசனின் பிள்ளையாகவே வளர்ந்த ஞானக் குழந்தையாம் திருஞான சம்பந்தர்,  திருநீலநக்க நாயனார், இசையால் ஈசனை வசமாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்புகலூர் முருக நாயனார் ஆகிய நால்வரின் குருபூஜை தினம் இன்று. இவர்கள் நால்வருமே ஒரே நாளில்,  ஒரே ஊரில்,  ஜோதியில் கலந்தது அதிசயிக்கத்தக்க நிகழ்வு. மேலும் இந்தநாள், திருஞானசம்பந்தரின் திருமண நாளாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருஞானசம்பந்தமூர்த்தி : தேவார மூவரில் முதன்மையானவர். ஈசனின் அருளையும் அம்பிகையின் அருட்பாலையும் பெற்ற ஞானக்குழந்தை. பேசத் தொடங்கிய காலத்திலேயே ஈசனைப் பற்றி பாடத் தொடங்கியது. 'தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி தலம்தோறும் சென்று சைவ சமயத்தின் புகழைப் பரப்பினார். செல்லும் இடமெங்கும் ஈசனின் பெயரால் பல அற்புதங்களைச் செய்த அருளாளர் ஞானசம்பந்தப் பெருமான்.
திருநீலநக்க நாயனார் : சாத்தமங்கை என்ற திருத்தலத்தில் பிறந்த இந்த நாயனார்,  ஈசனையே எல்லாமுமாக எண்ணி வாழ்ந்தவர். ஒருமுறை சாத்தமங்கை அயவந்தீஸ்வரரின் திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று செல்ல, அதைக் கண்ட நீலநக்கரின் மனைவி விரைவாகத் தனது வாயால் ஊதி அந்த சிலந்தியை விரட்டினார். இதனால் பதறிப்போன நீலநக்க நாயனார், ஈசனை எச்சில் வாயால் ஊதி அவமதித்ததாகக் கூறி அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார். அன்றிரவே நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், 'நாயனாரின் மனைவி வாயால் ஊதிய இடம் தவிர மற்ற எல்லா இடங்களும் கொப்புளங்களால் வெம்மை பெற்றிருப்பதாகவும், தன்பால் கொண்டிருந்த அன்பின் காரணமாக அப்படிச் செய்த  மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறும்' கட்டளையிட்டார். இப்படி ஈசனிடம் மட்டற்ற பக்தியும் கனிவும் கொண்டவர் திருநீலநக்க நாயனார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் : திருஎருக்கத்தம்புலியூரில் பாணர் குலத்தில் பிறந்தவர். இசையால் ஈசனை மகிழ்விக்கும் திருப்பணியை செய்துவந்தவர். மதங்கசூளாமணி எனும் தனது மனைவியுடன் இணைந்து தலம்தோறும் சென்று இறைவனை இசையால் அர்ச்சித்து வந்தார். இவரது இசைக்கு மயங்கிய ஆலவாய் அண்ணல் சொக்கநாதர், இவரை கோயிலுக்குள் அழைத்து பொற்பலகையிட்டு இசைக்க வைத்தார். 'தரையில் இருந்து இசைத்தால் அவரது இசைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது  என்பதற்காகவே இந்தப் பொற்பலகையைக் கொடுத்தோம்' என்று அசரீரியாகத் தனது பக்தர்களுக்கும் எடுத்துச் சொல்லி, பாணரின் இசைத் திறமையை  புகழ்ந்தார் ஈசன். சீர்காழியில் திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கி, அவருடைய பாடல்களை இசைத்து இறைவனை வழிபட்டு வந்தார்.
முருக நாயனார் : சோழ நாட்டின் திருப்புகலூரில் அவதரித்த நாயனார் இவர். திருப்புகலூர் வர்த்தமானீச்சுரத் திருக்கோயில் நந்தவனத்தைப் பராமரித்து, அங்கு மலர்ந்த பூக்களைக் கொய்து, மலர் மாலைகளாக்கி ஈசனுக்கு அணிவித்து சேவை செய்து வந்தார் முருகனார். கோயிலின் திருமடத்தில் தங்கி சேவை செய்து வந்த இவரைக் காண திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும்  ஒருசேர வந்திருந்தார்கள். அவர்களைக் காண திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாரும் வந்து மடத்தில் தங்கி இருந்தார்கள். அவர்களோடு அன்பால் இணைந்த முருக நாயனார் பெரிதும் மகிழ்ந்தார்.  
இந்த நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதித்தார் ஞானசம்பந்தப் பெருமான். திருநல்லூர் பெருமணம் திருத்தலத்தில் ஞானசம்பந்தருக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது. இதில் சம்பந்தரின் உறவினர்களோடு முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் கலந்துகொண்டார்கள். அப்போது தனது அவதார நோக்கம் முடிவடைந்ததை உணர்ந்துகொண்ட சம்பந்தப் பெருமான், சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில் நெக்குருகி 'நமசிவாயத் திருப்பதிகம்' எனும் பாடல்களைப் பாடினார். 
``காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே'
என்று தொடங்கிய பதிகத்தின் முடிவில், பெரும் ஜோதிப் பிழம்பொன்று தோன்றியது. உடனே சம்பந்தரும் அவரோடு வந்த கூட்டத்தாரும் சிவனின் கருணையை எண்ணி வியந்து, பஞ்சாட்சரம் ஓதியவாறு ஜோதியில் கலந்தனர்.
அந்த நாள் வைகாசி மூலத்திருநாள்.  சம்பந்தருடன் இணைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நாயன்மார்கள் தனது குடும்பத்தாரோடு  ஒரே நாளில், ஒரே இடத்தில் ஈசனின் திருவடியை அடைந்தார்கள். அதனால் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரின் திருமண திருவிழா இந்த நாளில் நடைபெறுகிறது. 'இந்த திருமணத்துக்கு வந்திருந்து ஆசீர்வதித்து அம்பிகை திருநீறு அளித்தார்' என்ற ஐதீகத்தால் இன்றும் இந்த ஆலயத்தில் திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறே அளிக்கப்படுகிறது. இயன்றவர்கள் இன்று இந்த ஆலயத்துக்குச் சென்று இந்த நான்கு நாயன்மார்களோடு சிவசக்தி தம்பதியையும் தரிசித்து வாருங்கள். மங்கள வாழ்வும், முக்திக்கான வழியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Sunday, 19 July 2020

ஆடி அமாவாசை நாளை 20.07.2020
****************************************
🌷சற்று நீண்ட பதிவு🌷

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்:
**********************************************
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவா சையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமா ங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்க ளுக்குத் தெரியுமா?

அது என்ன கதை?:
********************
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோ டு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது.

அவனது மகன், இளமை பருவத்தை எட்டும் போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோ ரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவள து உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பா வியான அந்தப் பெண் கணவன் உறங்குவதா க நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள், அரற்றினாள், தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதி யோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே அன்று அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்க ளுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களு க்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது நம்பிக்கையாக உள்ளது. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்ட போது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல்  சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்து கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடு வோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களை செய்வதும் விசேஷமானது.

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்:
***********************************
ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. வேறெ ந்த தீர்த்த தலத்தில் குளிக்கா விட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்று கூற படுகிறது.

இங்கு ஆடிமாதத்தில் பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டும் அல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தல மாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணா யண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோ ரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசைய ன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைக ளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபா ராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன். போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்… எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி என்றார். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். நாங்கள் இருவரும் ஒன்றா க சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களா, இது முறையானதா என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார். சகாதேவன் சொன்ன படி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரில் இருந்து மயிலாடு துறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து, 4 கி.மீ., தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலு ம், அங்கிருந்து சற்று தூரத்தில், சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்க ளுக்கும் சென்று வாருங்கள்.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரி க்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசை யின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவே தான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே, ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமா வாசைக்குப் பிறகு சுப காரியங்கள் செய்யலா ம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனெ னில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையா கக் கொண்டு மாதத்தைக் கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட மாதம் முடிந்து அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப் படுகிறது. அப்போது நல்ல காரியங்களைச் செய்யலாம்.

ஆடி அமாவாசை அற்புதக்காட்சி:
***********************************
அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள் புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலு ம் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளை யிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவா சையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சி யின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கு ம் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவா சைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்து வம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவா சையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்க ளால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகி ன்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்ப ரையாக வாழ வழிவகுக்கின்றன.

அதிலும் ஆடி அமாவாசை அன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்க ளிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார் வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தி ல் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவது டன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.

இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொ ரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவா சையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு கேது தோஷம் சர்ப்ப தோ ஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாக கருதபடுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்த அன்ன தானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபட வேண்டும் என் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையி ல் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீயசக்தி இருந்தால்  விலகியோடும். இல்லத் தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களு டன் வாழ்வர்.

ஆடி அமாவாசை:
*******************
பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார் கட்ன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளா ன கடற்கரை, ஆற்றங்கரை, குளக் கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என ஞானநூல்கள் கூறுகின்றன

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்து குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத் தும் போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமா கும். பவுர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் அமை என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

பித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும் போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத் துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்க ளுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ஆகவே, ஆடி அமாவாசை நாளில், பித்ருக்க ளுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பண ம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.


ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...