Friday, 21 February 2020

#சிவபெருமான்_அறுபத்தி_நான்கு_திருமேனி கொண்டு திருவிளையாடல்
களைப் புரிந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவை,

1. சந்திரசேகரம்
சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது. அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான். இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சி அளித்த திருக்கோலம் சந்திரசேகரம்.

2. அர்த்தநாரீசுரம்
ஆணும் பெண்ணும் சரிசமம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம்.

3. சக்கரபிரதானம்
ஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம். அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான். முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது.

மகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார். திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார்.

மகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்.

4. தட்சிணாமூர்த்தம்
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி. இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை. சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்.

5. லிங்கஸ்வரூபம்
பிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்.

6. லிங்கோற்பவம்
பிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர். தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே லிங்கோற்பவம்.

7. தட்சயக்ஞ பங்கம்
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் தட்சயக்ஞ பங்கம்.

8. சந்தத நிர்த்தனம்
படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் சந்தத நிர்த்தனம்.

9. சண்டே சாதுக்ரகம்
தன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் சண்டே சாதுக்ரகம்.

10. சலந்தரவதம்
சக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் சலந்தரவதம்.

11. அகோராஸ்திரம்
சப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான். அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார். அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் அகோராஸ்திரம்.

12. ஏகபதம்
இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி ஏகபதம்.

13. அச்வாருடம்
மாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் அச்வாருடம்.

14. சத்ய சதாசிவம்
சத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.

15. மிக்க சதாசிவம்
இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.

16. தகுல குளேசுவரம்
உலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல குளேசுவரம்.

17. சகஜ சுகாசனம்
ஆறு திருக்கரத்துடன் பார்வதி தேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் சகஜ சுகாசனம்.

18. கூர்ம சங்காரம்
பாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார். கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது. அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் கூர்ம சங்காரம்.

19. மச்சாரி
சோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார். திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார். சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் மச்சார்.

20. வராஹரி
மகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார். பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது. அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் வராஹரி.

21. சற்குரு மூர்த்தம்
மனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் சற்குரு மூர்த்தம்.

22. உமேசம்
பார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் உமேசம்.

23. உமாபதி
சிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய கோலம் உமாபதி.

24. ஐயபுஜங்கத்ராசம்
பரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர். மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் ஐயபுஜங்கத்ராசம்.

25. சார்த்தூரஹரி
மீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் சார்த்தூரஹரி.

26. பைரவம்
அந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார். அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் பைரவம்.

27. கல்யாணசுந்தரம்
தட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள். மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் கல்யாண சுந்தரம்.

28. வடுகம்
துந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் வடுகம்.

29. கிராதம்
அரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன். அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் கிராதம்.

30. சுந்தர விருஷப ஊர்தி
சிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர விருஷப ஊர்தி.

31. விஷாபஹரணம்
பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் விஷாபஹரணம்.

32. சுவராபக்ஞம்
தேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார். அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் சுவராபக்ஞம்.

33. துகளறு க்ஷேத்திரபாலகம்
பிரளயம் நிகழ்ந்தது. அக்னி சர்வலோகங்களையும் அழித்தது. பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் துகளறு க்ஷேத்திர பாலகம்.

34. தொல்கருடாந்திகம்
சிவன் வழிபாட்டில் மெய்மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார். அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது. சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார். அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் தொல் கருடாந்திகம்.

35. முகலிங்கம்
சகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் முகலிங்கம்.

36. துங்க கங்காதரம்
கைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள். எங்கும் இருள் சூழ்ந்தது. பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது. அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார். கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் துங்க காங்காதரம்.

37. கங்கா விசர்ஜனம்
பகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான். சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன். வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான். பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக்கோலம் கங்கா விசர்ஜனம்.

38. சுப சோமஸ்கந்தம்
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன. அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் சுப சோமஸ்கந்தம்.

39. சூரசிம்ஹாரி
மகாவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார். அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் சூரசிம்ஹாரி.

40. கமாரி
சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கோலம்.

41. யமாந்தகம்
பதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான். அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் யமகாந்தகம்.

ஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் கவலை யுத்தாரணம்.

57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்

பிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்.

58. கவுரி விலாசமந்விதம்

பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்.

59. எழிலரியர்த்தம்

மகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் எழிலரியர்த்தம்.

60. வீரபத்திரம்

வீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் வீரபத்திரம்.

61. திரிமூர்த்தி முப்பாதம்

பிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் திரிமூர்த்தி முப்பாதம்.

62. மகாவேதாளி நடம்

கண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் மகாவேதாளி நடம்.

63. வெருவரு மேகபதத்திருவரு

பிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் வெருவரு மேகபதத்திருவரு.

64. சிவலிங்கம்

ஆகம வேத முதற் பொருளானவன். மங்களமானவன். பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் சிவலிங்கம்.

ஓம் நமசிவாய.

Friday, 31 January 2020

பஞ்சாங்கம் என்றால் என்ன?
*******************************

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.
அவையாவன :

(1) வாரம்
(2) நட்சத்திரம்
(3) திதி
(4) யோகம்
(5) கரணம்

இனி இவைகளைப் பற்றி விளக்கமாக காண்போம்.

(1) வாரம் : என்பது ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7 ஐக் குறிக்கும்.

(2) நட்சத்திரம் : என்பது அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.

(3) திதி : என்பது ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.

(4) யோகம்: வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

(5) கரணம்: என்பது திதியில் பாதியாகும்.

பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது எப்படி?
********************************************

உதாரணத்திற்கு பஞ்சாங்கத்தில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருந்தால், அதனை எப்படி புரிந்து கொள்வது என பார்க்கலாம். 3 ஏப்ரல் 2011 அன்றைய பஞ்சாங்க விவரத்தை வாசன் பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்து தருகிறோம். ஆங்கிலம் ஏப் 3 தமிழ் பங் 20 கிழ ஞா
திதி அமா 20 33 (நா,வி) நட்சத்திரம் உத்ரட்டாதி 34 44 (நா,வி) யோகம் பிராம்யம் 8 32 (நா,வி) கரணம் சதுஷ்பாதம் 1 40 (நா,வி)

முதல் நிரலில் (அதாம்பா first column) வருவது ஆங்கில தேதி, 2 வது நிரலில் வருவது அதற்கு இணையான தமிழ் தேதி, 3 வது நிரலில் வருவது அன்றைய கிழமை (ஞாயிறு), 4 வது நிரலில் வருவது அன்றைய திதி அமாவாசை (அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும்), அடுத்து வருவது நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவைகளும் அன்றைய சூரிய உதயத்தில் இருந்து எவ்வளவு நாழிகை இருக்கும் என்ற விவரங்களை நமக்கு மிகவும் எளிமையாகத் தருகிறது. அன்றைய தினத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாழிகைக்கு பிறகு அடுத்தது தொடங்கும் என்று பொருள். அதாவது, நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால், உத்திரட்டாதி 34-44 நாழிகைக்கு பிறகு, அடுத்த நட்சத்திரமான ரேவதி தொடங்கும் என்று பொருள். இப்படியே திதி, யோகம், கரணம் போன்றவைகளையும் கண்டு கொள்ள வேண்டும்.
இடத்தை மிச்சப் படுத்துவதற்காக சுருக்கமாக கொடுத்திருப்பார்கள். அஸ்வினி என்பதற்கு பதில் அஸ் என்று கொடுத்திருப்பார்கள். அமாவாசை என்பதற்கு பதிலாக அமா என்றும் கொடுத்திருப்பார்கள். இதன் விரிவை புதியவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பஞ்சாங்கத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் கொடுத்து இருப்பார்கள். வாசன் பஞ்சாங்கத்தில், 79ஆம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்.

முக்கியக் குறிப்புகள் :
************************
(அ) ஜோதிட ரீதியாக ஒரு நாளின் தொடக்கம் என்பது அன்றைய தினத்தின் சூரிய உதய நேரமேயாகும்.

(ஆ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் யாவும் அன்றைய சூரிய உதய நேரத்தில் இருக்கும் ஆகாயக் காட்சியாகும்.

(இ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கால அளவு (நாழிகை, வினாடி அல்லது மணி, நிமிஷம்) அன்றைய சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

(ஈ) மிக முக்கிய குறிப்பு என்னவெனில், மணி, நிமிஷம் என்பது நள்ளிரவு 00.00 வில் தொடங்குகிறது. ஆனால், நாழிகைகள் அன்றைய காலை சூரிய உதயத்தில்தான் தொடங்குகிறது. சூரிய உதயம் ஆண்டு முழுமைக்கும், எல்லா நாட்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

பெரும்பாலான பஞ்சாங்கங்கள் மணி, நிமிஷ அளவுகளிலேயே, இப்பொழுது கிடைக்கிறது. இருப்பினும், தெரிந்து கொள்ளுங்கள் 1 நாழிகை = 24 நிமிஷங்கள் ஆகும். மேற்கொண்டு உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால், எம்மை தொடர்பு கொள்ளவும்.

பஞ்சாங்க விளக்கம்:
**********************

பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன:

1. திதி, 2.வாரம், 3.நக்ஷ்த்திரம், 4.யோகம், 5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன.
ஒன்று “திருகணித பஞ்சாங்கம்”, மற்றது “வாக்கிய பஞ்சாங்கம்”.

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப்பெற்றன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது வாக்கிய முறை எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் “வாக்கிய பஞ்சங்கம்” எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் “திருகணித பஞ்சாங்கம்” எனப்படும்.

ஓம்...

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களை ஆராச்சி செய்து அறிவதற்கு பல தொழில் நுட்ப உபகரணங்கள் உள்ளன. அவைகள் மூலம் நுட்பமாக கிரகங்களின் வேகம், அவற்றின் நிலைகளைக் கண்டறியக் கூடியதாக உள்ளது. தற்போதுள்ள வான வியல் முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமையானது என்று பாவிப்பாரும் உளர்.

திதி:
*****

அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக (“0” டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.

விளக்கமாக கூறுவதாயின்; சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பூர்வபக்க பிரதமை முதல் அமாவாசை வரையான 30 திதிகளாகும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரைன காலத்தில் வரும்) 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும்; தேய் பிறை காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும்

சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய “பிரதமையும்”. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள்.

அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் (தேய்-பிறைத் திதிகள்) கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள். .

புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் (கனத்த நாட்களில்) மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிகள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.

வாரம்:
*******

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகள் வாரம் எனப்படும். இவை கிரகங்களின் பெயர்களில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. (ராகு, கேது கிரகங்களிற்கு சொந்த கிழமையும் இல்லை, சொந்த வீடும் இல்லை).

நட்ஷத்திரம்:
**************

சந்திரன் இராசி மண்டல வலயத்தை சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் எந்த நட்சத்திரத்தின் மேல் நகர்கின்றதோ அப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது.

கரணம்:
**********

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
**********

இரு வகையான யோகங்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுகின்றன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை ” நாம யோகம்” என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம், 2.ப்ரீதி, 3.ஆயுஷ்மான், 4.சௌபாக்யம், 5.சோபனம், 6.அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9.சூலம், 10.கண்டம், 11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம், 4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான், 19.பரீகம், 20. சசிவம், 21. சித்தம், 22. சாத்தீயம், 23. சுபம், 24.சுப்ரம், 25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.

மற்ற யோகம் சுபாசுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

சோதிட காலவாய்பாடு
*************************

60 தற்பரை = 1 வினாடி

60 வினாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்

60 வினாடி = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
2 1/2 நாழிகை = 1 மணி
2 1/2 வினாடி = 1 நிமிஷம்

ஒரு நாள் : 60 நாழிகை (24 மணி)
ஒரு நாழிகை : 60 விநாழிகை
ஒரு விநாழிகை :60 லிப்தம்
ஒரு லிப்தம் : 60 விலிப்தம்
ஒரு விலிப்தம் : 60 பரா
ஒரு பரா : 60 தத்பரா

ஜோதிட விளக்கம்:
*********************

பஞ்சாங்க குறிப்பு:

சௌர வருஷம்: சூரியன் மேடராசியின் ஆரம்ப நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முதல் மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதியை விட்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் (Sidereal revolution of Earth round the Sun). இக்காலப்பகுதி; சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலத்தைக் குறிப்பதாகும் Tropical revolution of Earth round the Sun. இக் காலப்பகுதி; 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாந்திர வருஷம்: சௌரவருஷப்பிறபிற்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வபக்கப் பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறபுக்கு முன் நிகழும் அமாவாசை முடியவுள்ள காலத்தைக் குறிப்பது. இக் காலப் பகுதி சுமார் 354 நாட்கள் கொண்டது.

சௌர மாதங்கள்: மேடம் முதல் மீனம் ஈறாகவுள்ள பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரை முதல் பங்குனி வரையான 12 காலப் பிரிவுகளாகும். பகல் மானத்துள் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றும்; இரவு நிகழுமாயின் மறுநாளும் மாதப்பிறப்பாக கொள்ளப்படும்.

சாந்திர மாதங்கள்: பூர்வப்க்க பிரதமை தொடக்கம் அமாவாசைமுடியும்வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகளாகும். மூன்று சௌர வருஷத்தில் 37 சாந்திர மாதங்கள் நிகழும். அதனால் சௌரமானத்துடன் சாந்திரமானம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஓர் சௌரமாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திரமாதம் “அதிகமாதம்” என் நீக்கப்படும்.

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

இஸ்லாமிய தேதி: சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலப் பகுதியாகும்.

“அவமா” : ஒரு தினத்தில் மூன்று திதிகள் சம்பந்தப்பட்டால் அன்று “அவமா” அழைக்கப்படும்.

திரிதினஸ்புருக்: ஒரு திதி மூன்று நாட்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அது “திரிதினஸ்புருக்” என்று அழைக்கப்படும்.

இராசிகள்-12:

1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,
4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,
7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,
10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.

வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.

நட்சத்திரங்கள் – 27:
1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,
4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,
13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,
19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,
25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.

நட்சத்திரங்களும் ராசிகளும்:
********************************

சோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.

Zodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.

பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது

ஓம்...

நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.

அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.

ஓம்...

விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.

மேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.

அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.

கிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.

“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.

இராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.

சூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.
சந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.
செவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
புதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.
குரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.
சுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.
சனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.

ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.

ஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன்.

முதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;
இரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை);
மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
பிற பஞ்சாங்க முறைகள்
திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் அனுஷ்டிக்கப் படுவது.

சக வருஷ பஞ்சாங்கம்:

ஓம்...இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைபிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை.

பசலி வருஷ பஞ்சாங்கம்:
வட இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆண்டுக் கணக்கு. முகலாயர் காலத்தில் அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை நிர்வாகிக்க எதுவாக தோற்றுவிக்கப்பட்டது.

கலியுகாப்தம் பஞ்சாங்கம்
கலியுகம் தோன்றிய நாள் முதல் கணக்கிட்டு வரப்படுகிறது.
மகா வீரர் வருஷம்
விக்கிரம வருஷம்

பஞ்சாங்க வகைகள்
**********************

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கம்
***************************

திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.

திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்
***********************

வாக்கிய பஞ்சாங்கம் ஒன்றின் முகப்பு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.

தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.

இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

ஓம்...

.- 🌷#நன்றிஓம்ரவிக்குமார்🌎

🌎அன்பு முகநூல் நண்பர்களே ,

 "#ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய 45 ஆயிரம் பெயர்கள் நண்பர்களாகவும் 60 ஆயிரம் பெயர்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.

 நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,

சித்தர்கள் பாடல்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் ,

 சித்தர்கள் யோகாசனம் முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் .

என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும்.

 வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .

அதை நீங்கள் கிளிக் செய்தால் "#ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும்.

 நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் .

#சர்வம் #சிவார்ப்பணம்🌏

🌎https://www.facebook.com/om14422019/

பகிர்தலை தவிர இந்த உலகத்தில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை,ஒ

இது குடும்பமாக இருந்தாலும் சரி,

உறவுகளாக இருந்தாலும் சரி,

நட்பாக இருந்தாலும் சரி,

தொழிலாக இருந்தாலும் சரி அல்லது இன்ன பிற வேறு எதுவாக இருந்தாலும் சரி,

பகிர்தலே வெற்றிக்கான மிக முக்கியமான சூத்திரம்!

🌎நன்றி ஓம்🍓

Sunday, 26 January 2020

சிவநாமவல்யஷ்டகம்

#சிவநாமவல்யஷ்டகம்

ஹே சந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ |
பூதேச பீதபயஸூதன மாமநாதம்
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
 ரக்ஷ || 1

ஹே பார்வதீ ஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப |
ஹே வாமதேவ பவ ருத்ர பிநாகபாணே
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
 ரக்ஷ || 2

ஹே நீலகண்ட வ்ருஷபத்வஜ பஞ்சவக்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ |
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸார து:க கஹநாத்ஜகத்ச
ரக்ஷ || 3

ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச |
பாணேச்வராந்தரிபோ ஹரலோக நாத
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
ரக்ஷ || 4

வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
வீரேச தக்ஷமககால விபோ கணேச |
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைக நிவாஸ நாத
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
 ரக்ஷ || 5

ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
ஹேவ்யோமகேச சிதிகண்ட
 கணாதிநாத |
பஸ்மாங்கராக ந்ருகபாலகபாலமால
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
ரக்ஷ || 6

கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ |
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
 ரக்ஷ || 7

விச்வேச விச்வபவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச |
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸார து:க கஹநாத்ஜகதீச
ரக்ஷ || 8

கௌரீவிலாஸபவனாய மஹேச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய |
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்ய து:க தஹநாய
 நம:சிவாய || 9

Thursday, 2 January 2020

ஐந்து_வகை_ஸ்நானம்

ஶ்ரீகுருப்யோ நமஹ
ஶ்ரீகுருபாதுகா சரணம்

#ஐந்து_வகை_ஸ்நானம்

ஸ்நானத்தில் ஐந்து தினுசு சொல்லியிருக்கிறது. இவற்றில்

'ஸ்நானம்' என்றவுடன் நாம் நினைக்கிறபடி ஜலத்தை மட்டும் கொண்டு குளிப்பது 'வாருணம்'- வருண பகவான் சம்பந்தமுள்ளது.

இதை 'அவகாஹ'மாக, அதாவது நாம் ஜலத்திக்குள் இறங்கி, முழுகிப் பண்ணினால் தான்

'முக்ய' ஸ்நானம் பண்ணினதாக ஆகும். பாத்திரத்தில் வைத்துக்கொண்டு மொண்டு தலையில் விட்டுக் கொள்வது கூட இரண்டாம் பக்ஷம்தான்.

அதற்கப்புறந்தான் 'கௌண' மாக கழுத்துவரை, இடுப்புவரை என்பதெல்லாம். ஆக ஐந்து ஸ்நானங்களில் ஜலத்தால் செய்கிற வாருணம் ஒன்று.

விபூதி ஸ்நானம் என்று இப்போது சொன்னதற்கு 'ஆக்நேயம்' என்று பேர். அக்னி சம்பந்தமுடையது என்று அர்த்தம். அக்னியில் பஸ்மமாக்கித்தான் விபூதி கிடைப்பதால் அதற்கு பஸ்மா என்றே பெயரிருக்கிறது.

ஜலம் விட்டுக் குழைக்காமல் விபூதியை வாரிப் பூசிக் கொள்வதை 'பஸ்மோத்தூளனம்' என்றே சொல்கிறோம்.

பசுக்கள் செல்கிறபோது கிளம்புகிற அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கிறது. அதற்கு 'கோ தூளி' என்று பெயர்.

பாலகிருஷ்ணனே இப்படித்தான் நீல மேக சியாமள காத்திரத்தில் பசுக்களின் தூள் சந்தனப் பொடி தூவினாற் போலப் படிந்து “கோதூளீ தூஸரித” னாக இருந்தானாம்.

ஒரு பசு மந்தை போகிறபோது, அவை கூட்டமாகப் போவதாலேயே காற்றின் சலனம் அங்கே ஜாஸ்தியாகி, குளம்படி மண் நிறையக் கிளம்பும். இந்த கோதூளி நம்மை அபிஷேகம் பண்ணும்படியாக அங்கே போய் நின்று கொண்டால்

அதுவும் ஐந்தில் ஒருவகை ஸ்நானமாகும்.

இதற்கு 'வாயவ்யம்' என்று பெயர் - வாயு என்கிற காற்றின் சம்பந்தமுடையது என்று அர்த்தம். காற்றால்தானே தூளி பறக்கிறது?

அபூர்வமாக வெய்யில் அடிக்கும்போதே மழையும் பெய்வதுண்டல்லவா?அந்த மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்கே சமானம்.

அதனால் அந்த ஜலத்தில் குளிப்பதற்கு

'திவ்யஸ்நானம்' என்று பெயர். எப்போதாவது இப்படி வெய்யிலோடு மழை பெய்துவிட்டால் உடனே நாம் அதில் போய் நின்றுவிட வேண்டும்.

மந்திர ஜலத்தைப் புரோக்ஷித்துக் கொள்கிறோம். தலையோடு கால் விட்டுக் கொள்ளாமல் அதை விரலால்தான் தெளித்துக் கொள்கிறோம்.

 “ஆபோ ஹிஷ்டா” என்று சந்த்யா வந்தனத்தின்போது, அதாவது முக்கிய ஸ்நானமாக நன்றாகக் குளித்துவிட்டே செய்கிற சந்த்யாவந்தனத்தின்போது, இப்படி மந்திரஜல ப்ரரோக்ஷணமும் செய்து கொள்கிறோம்.

பூஜை, ஹோமம், யாகம் முதலானவற்றிலும் கலசம் வைத்து அதிலுள்ள ஜலத்தை அபிமந்திரித்துக் கடைசியில் வாத்தியார் (புரோஹிதர்) தர்ப்பைக் கட்டால் அதை எல்லாருக்கும் தெளிக்கிறார். இதுவும் ஐந்து ஸ்நானங்களில் ஒன்று.

இதற்கு 'ப்ராஹ்மம்' என்று பெயர்.

“ப்ரம்மம்” என்றால் வேதம், வேத மந்திரம் என்பது ஒரு அர்த்தம். அதனால் அபிமந்திரிக்கப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு

 “ப்ராஹ்ம ஸ்நானம்” என்று பெயர் கொடுத்திருக்கிறது. மந்திரம் சொல்லக் கூடாதவர்களுக்கு பகவந்நாமா இருக்கிறது என்று முன்னேயே சொன்னேன். நாமமெல்லாமே மந்திரந்தான்.பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான்.

எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈஸ்வர ஸ்மரணையோடு, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகத்தானே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன? அவற்றிலே சிறப்பாக வருணனையோ, வேறு ஒரு தேவதையையோ மந்திரபூர்வமாக ஒரு கும்பத்தில் ஆவாஹனம் பண்ணிப் பிறகு அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்வது 'ப்ராஹ்மம்' என்று பெயர் பெற்றிருக்கிறது.

உடம்பு அசக்தமாய் எந்த விதத்திலும்

வாருண ஸ்நானம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த மந்திர தீர்த்த ப்ரோக்ஷணமே அதனிடத்தில் 'கௌண' ஸ்நானமாகிறது.

பஞ்சபூதங்கள் என்னும் ஐம்பூதங்கள் - ஐந்து ஸ்நானங்கள் என்று பார்க்கிறபோது, வாருணம்தான் அப்பு. ஆக்நேயம் (விபூதி) என்பது தேயு. கோதூளி என்கிற வாயவ்யம் வாயு. இவை தவிர ப்ராஹமம், திவ்யம் என்று இரண்டு சொன்னேன். பஞ்ச பூதங்களில் பிருத்வியும் ஆகாசமும் விட்டுப் போயிருக்கின்றன.

மந்தரங்களெல்லாம் ஆகாசத்தில்தான் சப்த தன்மாத்ரையாக வியாபித்திருக்கின்றன. அவற்றையே ரிஷிகள், யோக சக்தியால் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களை பஞ்சபூதங்களில் ஒவ்வொன்று ஆச்சிரயித்திருப்பதாகச் சொல்லும்போது சப்தத்துக்குத்தான் ஆகாசம். இங்கே சப்தம் என்பது வேத மந்திரமே. ஆனதால் மந்திர தீர்த்தப் புரோக்ஷணமான

'ப்ராஹ்ம ஸ்நானம்'ஆகாச சம்பந்தமானது எனலாம்.

வெய்யிலின்போது பெய்யும் மழையான 'திவ்ய'மும் வானுலகிலிருந்து - தேவலோகத்திலிருந்து - வருவதாகக் கருதப்படுவதால் ஒருவகையில் ஆகாச பூதத்தின் சம்பந்தமுடையதே. பிருத்வி பாக்கி இருக்கிறது.

'வாயவ்யம்` என்று சொன்னதில் கோதூளியில் தானே நிற்கிறோம்? காற்றினால் எழுப்பப்பட்டு அந்தத் தூளி நம்மேல் படிவதால் அதற்கு 'வாயவ்யம்' என்று பேர் இருந்தாலும். வாஸ்தவத்தில் நம்மை அபிஷேகிக்கிற வஸ்துவான குளம்படி மண் என்பது பிருத்விதான்.

ஜெனரல் ரூலான வாருண ஸ்நானத்திலும் சுத்திக்காகத் தேய்த்துக் கொள்ளும் மிருத்திகை (புற்றுமண்) பிருத்விதான்.

இப்படியாக ஐம்பூதங்களுக்காக ஐந்து ஸ்நான வகைகள்.

முடிவில் எதுவானாலும் ஆத்மாவைப் பாபம் போகக் குளிப்பாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

Sunday, 29 December 2019

ஸ்ரீ_அபிராமி_ஸ்தோத்ரம்

#ஸ்ரீ_அபிராமி_ஸ்தோத்ரம்


நமஸ்தே   லலிதே!  தேவி  ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி
பக்தாநாம்   இஷ்டதே ! மாத:  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ரோதயம்  க்ருதவதி!  தாடங்கேந ,   மஹேச்வரி
ஆயுர்  தேஹி   ஜகத்மாத:   ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸுதாகடேச   ஸ்ரீ காந்தே!  சரணாகதவத்ஸலே .
ஆரோக்யம்  தேஹிமே  நித்யம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

கல்யாணி!  மங்களம் - தேஹி,  ஜகந்மங்கள்    காரிணி!
ஐச்வர்யம்  தேஹி-மே, நித்யம்.  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ர   மண்டலமத்யஸ்தே!   மஹாத்ரிபுரஸுந்தரி!
ஸ்ரீ  சக்ரராஜ  நிலயே  ஹி   ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ராஜீவலோசனே,  பூர்ணே!   பூர்ண   சந்த்ரவிதாயினி!
ஸௌபாக்யம்  தேஹிமே நித்யம். ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

கணேசஸ்கந்த   ஜநநி!   வேதரூபே!   தனேச்வரி!
வித்யாம்  ச  தேஹி  மே  கீர்த்திம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸுவாஸி   நீப்ரியே  மாத:  ஸௌமங்கல்ய   விவர்த்தினி!
மாங்கல்யம், தேஹிமே  நித்யம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

மார்க்கண்டேய   மஹாபக்த  ஸுப்ரஹ்மண்ய   ஸுபூஜிதே.
ஸ்ரீ  ராஜராஜேச்வரீ  த்வம்ஹி! ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸாந்நித்யம்  குரு  கல்யாணி  மம  பூஜா  க்ருஹே  சுபே
பிம்பே  தீபே  ததா புஷ்பே  ஹரித்ரா  குங்குமே  மம

ஸ்ரீ  அபிராம்யா  இதம்  ஸ்தோத்ரம்  ய: படேத்  சக்திஸந்நிதௌ
ஆயுர்  பலம்  யசோ  வர்ச்சோ  மங்களம்  ச  பவேத்  ஸுகம்.

Wednesday, 25 December 2019

கோளறு_பதிகம்

#கோளறு_பதிகம்
 
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய
நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போ
லொளிரும் ஊமத்தைமலர்களா
லான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

ஹனுமான்_புஜங்க_ஸ்தோத்திரம்

#ஹனுமான்_புஜங்க_ஸ்தோத்திரம்
.

1. ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

2. பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

3. பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

4. கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம் கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம் வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம் ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/?ti=as

5. சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

6. ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

7. கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

8. மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

9. ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

10. நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/?ti=as

11. ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

12. ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

13. மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

14. நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

15. நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

16.ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே
 ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய: 
படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால:
நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.

       #ஜெய்ஸ்ரீராம்

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...