Friday, 12 July 2019

காளிகாஷ்டகம்

#காளிகாஷ்டகம்

த்யானம்

களத்ரக்த முண்டாவலீ கண்டமாலா
மஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா

விவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீ
மஹாகாள காமகுலோ காளிகேயம்

புஜே வாம யுக்மே சிரோஸிம் ததானா,
வரம் தக்ஷயுக்மே பயம் வை ததைவ

ஸூமத்யாபி துங்கஸ்தனா பாரநம்ரா,
லஸத்ரக்த ஸ்ருக்த்வயா ஸூஸ்மிதாஸ்யா

சவத்வந்த்வ கர்ணாவதம்ஸா ஸூகேசீ,
லஸத்ப்ரேத பாணீம் ப்ரயுக்தைக காஞ்சீ

சவா காரமஞ்சாதிரூடா சிவாபிச்
சதுர்திக்ஷீ சப்தாய மானபிரேஜே

ஸ்துதி

1. விரஞ்சாதி தேவாஸ்த்ரயஸ்தே குணாஸ்த்ரீம்,
ஸமாராத்ய காளிம் ப்ரதானா வ பூவூ;
அனாதிம் ஸூராதிம் மகாதிம் பவாதிம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

2. ஜகன் மோஹனீயம் து வாக் வாதினீயம்,
ஸூஹ்ருத் போஷிணீ சத்ரு ஸம்ஹாரனீயம்
வசஸ்தம்பனீயம் கிமுச்சாடன்யம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா;

3. இயம் ஸ்வர்கதாத்ரீ புன: கல்பவல்லீ,
மனோ ஜாம்ஸ்து காமான்யயதார்த்தம்
ப்ரகுர்யாத்
ததாதே க்ருதார்த்தா பவந்தீதி நித்யம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

4. ஸூராபானமத்தா ஸபக்தானுரக்தா,
லஸத்பூதசித்தே ஸதாவிர்ப வஸ்தே
ஜபத்யான பூஜா ஸூதா கௌதபங்கா,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

5. சிதானந்த கந்தம் ஹஸன்மன் மந்தம்,
சரச்சந்த்ர கோடி ப்ரபாபுஞ்ஜ பிம்பம்
முனீனாம் கவீனாம் ஹ்ருதி த்யோதயந்தம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா:

6. மஹாமேக காளீ ஸூரக்தாபி சுப்ரா,
கதாசித்விசித்ரா க்ருதிர் யோகமாயா
ந பாலா ந வ்ருத்தா ந காமாதுராபி,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா;

7. க்ஷமஸ்வாபராதம் மஹாகுப்த பாவம்,
மயா லோகமத்யே ப்ரகாசாக்ருதம் யத்
தவ த்யான பூஜேன சாபல்ய பாவாத்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா;

8. யதி த்யானயுக்தம் படேத்யோ மனுஷ்யஸ்
ததா ஸர்வ லோகே விசாலோ பவேச்ச
ம்ருஹே சாஷ்டஸித்திர்ம்ருதே சாபி முக்திஸ்:
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா:

இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசிதம் ஸ்ரீகாளி காஷ்டகம்

கங்காஷ்டகம்

☘#கங்காஷ்டகம்☘


1.☘பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே
லுடந்தி!!☘

#பொருளுரை:
பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.☘ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷேணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!🍀

#பொருளுரை:
ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.☘மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II☘

#பொருளுரை:
யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை,
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.☘ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாதுமாம் !!☘

#பொருளுரை:
முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.☘சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி☘

#பொருளுரை:
காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.☘குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!☘

#பொருளுரை:
ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது.
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.☘பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!☘

#பொருளுரை:
ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.☘மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷேவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!☘

#பொருளுரை:
கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும்,
ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.☘கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ
கச்சதி !!☘
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

#பொருளுரை:
புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

நான் ஆட்சி செய்து வரும்

நான் ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
#மீனாட்சி என்ற பெயர் எனக்கு

நான் ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
#விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
#காமாட்சி என்ற பெயர் எனக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
#மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு...

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
#கரு_மாறி_உரு_மாறி
#ஒன்றே_ஓம்_சக்தி_என உரைக்கும்

     

பொம்ம_பொம்மதா_தைய

#பொம்ம_பொம்மதா_தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா (2)

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

Wednesday, 27 March 2019

கருடபஞ்சமி

கருட பஞ்சமி!

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு  மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை  அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து  நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.  போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன்  கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது  அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக்  கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன்,  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.  தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன்  வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும்  ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று  அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.  கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம்  இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு  பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள்  செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று  அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக  எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை  செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய்  கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை,  பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை  செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற  வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால்,  பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும்  இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப்  பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு  பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும்.  சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும்  பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு  அழைப்பு விடுத்தாள். அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம்  தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்... என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு...  என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு  அடிமையாக வேண்டும்... என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில்  கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்... என, உத்தரவு போட்டாள். பாம்புகளும்  அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.

வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை  செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே... என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச்  சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?  என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள  அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்... என்றாள்.  கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத்  தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து,  இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக்  கேட்கிறேன்... என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின்  வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம்  வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும்,  கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி  திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட  ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.

பன்னெடுங்காலமாகவே கருட உபாஸனை பாரத பூமி எங்கும் சிறந்து விளங்கி வந்திருப்பதைப் பண்டைய நூல்களும் சரித்திரச்  சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. கருட பகவானின் பெருமைகளாகவும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருட புராணம்  விரிவாகக் கூறுகிறது. கருட உபாசனை புரிவதில் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு அம்சமான கருடனை வழிபடுவதன் மூலம்  திருமாலின் அருள் கிடைக்கிறது. கருடன் திருமாலின் மெய்த் தொண்டர் என்று கூறப்படுபவர். விஷ்ணு பக்தர்கள் கருடோபாஸனையின்  மூலம் தாம் திருமாலின் தொண்டருக்கும் தொண்டர் என்பதை நிரூபிக்கின்றனர். வைணவக் கோயில் பலவற்றில் கருடனுக்குத் தனி  சன்னதிகள் உள்ளன. பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி பெற்றது.  அக்கருட மூர்த்தியை  வழிபட்டு விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர். தென்னகத்திலும் பல தலங்கள் கருடனின்  பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவகீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது.  இங்குதான் பகவானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற பெயர் கொண்ட கெடில நதியை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது.   கருடோபாஸனையின் மூலம் ஸ்ரீவேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகவும் கூறுவர்.

கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது  இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக்  காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய  வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில்  திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன் தருமானாலும் வியாழன் மாலையிலும் சனி  காலையிலும் கருட தரிசனம் மிகவும் சிறப்பானது என்று வசந்தராஜ சகுன விஸ்தரம் என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கருட  தரிசனத்தை விடக் கருடத்வனி மிகவும் மங்கலகரம். காருடம் தர்சனம் புண்யம் ததோபித்வனி ருச்யதே என்பது பெரியோர் வாக்கு.  பதினாறு வகையான மங்கள வாத்தியங்களின் பலன் கருடத்வனியில் உள்ளது சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும்  கும்பாபிஷேக சமயத்தில் விமான கலசாபிஷேகத்தின் போது இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது எனவும். கருட  தரிசனமும் கருடத்வனியுமே கங்காபிஷேகத்திற்கு முகூர்த்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பார்கள். கருடத்வனி கேட்கும்போது  மங்களானி பவந்து என்று சொல்வதும், கருட தரிசனத்தின்போது குங்குமாங் கித வர்ணாய குந்தேந்துதவளா யச விஷ்ணு வாஹ  நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம என்ற சுலோகத்தைச் சொல்வதும் வழக்கம்.

ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது இம்மை மறுமைப் பலன்களை  விரைவில் தரவல்லது. இதற்கு விசுவாமித்திரர் ரிஷி லக்ஷ்மி நாராயணனுடன் கூடிய கருட தேவதை என்பார்கள். கருட பஞ்சமி  நாளன்று கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபடலாம்.

கருட காயத்ரி

1. தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

2. ஓம் ககோத்தமாய வித்மஹே வைணதேயாய தீமஹி

தன்ன தார்ஷ்ய ப்ரசோதயாத்

(நாகர்களும், கருடனும் ஒரு தந்தை(தாய் வேறு வேறு) பிள்ளைகள், சகோதரர்கள் என்பதால் இவ்விரண்டு நாட்களும் சகோதரர்களுக்கான  பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகிறது)

கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான். அதனால் தான் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது. இவர் பரமபதத்தில் பெருமாளின் அருகே இருந்து சேவை செய்கின்ற நித்ய சூரிகளில் ஒருவர். இவர் பெரிய திருவடி என்றும், ஹனுமான் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றனர். கருடாழ்வாரின் அம்சமாகத் தோன்றியவர் ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்று சொல்லப்படும் பெரியாழ்வார்.

பிரம்மதேவன் மகன் கஷ்யபன் கஷ்யபருக்கு அநேக பத்தினிமார்கள் உண்டு. அவர்களுள் கத்ரு வினதை என்ற இரு சகோதரிகளும் அவரது பத்தினிகள் ஆவர். கத்ரு நாகர்களின் தாய். விநதை கருடனின் தாய். ஒரு முறை இந்த இரு சகோதரிகளிடையே விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து முடிந்தது. அந்த போட்டியில் இருவரும் ஜெயித்தவர்களுக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை வகுத்துக் கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்றாள். நிபந்தனைப்படி அவள் கத்ருவிற்கு அடிமையானாள். கத்ரு அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமையாயினர். கருடன், கத்ருவிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தினான். எப்படியும் தனது தாயை அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்ற சபதம் கொண்டான்.

அது சமயம் கத்ரு கருடனிடம் தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் அடிமைத் தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை அளிப்பதாகச் சொன்னாள். கருடன் மனமகிழ்ச்சிக் கொண்டான். அடிமøத் தனத்திலிருந்து விடுதலைப் பெற வழி பிறந்ததே என்று தனக்குள் மகிழ்ச்சி கொண்டான். அன்னையை நமஸ்கரித்து தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில் தேவர்களுக்கும் கருடனுக்கும் கடும்போர் மூண்டது. இறுதியில் கருடன் வெற்றி பெற்றான். கருடன் தேவேந்திரனை நமஸ்கரித்து தோத்திரம் செய்து தேவேந்திரனிடமிருந்து அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு வந்தான். கருடன் அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தான். அன்னைக்கும், தனக்கும், அருணனுக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி ஆனந்த வாழ்வு ஏற்படச் செய்தான் கருடன். பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது. எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

பெருமாளின் வாகனமாகவும் கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும் விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

கருடனைப்போல பலசாலியும் புத்திமானாகவும் வீரனாகவும் மைந்தர்கள் பிறக்க பெண்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

கருட தண்டகம்:

எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

கருட பகவானே! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர். உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது. அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன. அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்த மிகவும் விசையோடு பாம் என்ற பேரொலியை எழுப்புகின்றன. அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும்  திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து கோபத்தோடு எதிர்த்து வருகின்றன. அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கி விடுகிறீர்.

கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல அச்சமேற்படுகிறது. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதி கலங்கிப் பின் வாங்குகிறார்கள். இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன். வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும். மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் தேசிகர்.

இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர்.

கருடாழ்வாரை வணங்குவோம்!

இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது. எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

Wednesday, 20 March 2019

திருச்செந்தூர்_ஸ்ரீ_செந்திலாதிபன்_திருப்பள்ளி_எழுச்சி

#திருச்செந்தூர்_ஸ்ரீ_செந்திலாதிபன்_திருப்பள்ளி_எழுச்சி

☘வெற்றி வேற்கரமுடையாய் எமையுடையாய்
விடிந்ததுன் பூங்கழற்கிணை மலர்கொண்டு
சுற்றிய அடியேங்கள் தூய்மனத்துடனே
சொல்மகிழ்வுடன் நின்திருவடி தொழுவோம்
தெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்
திருச்செந்திலம்பதி வாழ் முருகோனே
எற்றுயர் சேவற் பதாகையையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

☘கீழ்திசை அருணணும் கிளரொளி வீச
கிளி மயில் குயில் காகம் சேவல்கள் கூவ
காரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்
கடிமா மலருடன் ஏந்திய கையார்
தாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்
தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்
ஏழிசை பரவும் நற்செந்திலம்பரனே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘வெண் சங்கமுழங்கின விசையொலி பேரி
விதவித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்
தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்
சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்
பண்ணிசை வேதியர் வேதமுழங்கி
பனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்
எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

☘பாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்
பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்
நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்
நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்
பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்
பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்
ஏற்குரும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘பஞ்சபூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்
பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்
எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்
என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்
தஞ்சமென்றடியவர்க்கருளும் செந்தூரா
சதுர்மறை யூடுறை ஷண்முகநாதா
எஞ்சிய பழவினை அறுத்தெமையாண்ட
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

☘செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்
செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்
ஒப்பரும் இருடிகள் தம்மனையோடும்
உவமையில் ஜெபத்தொடு ஒன்றியே அமர்ந்தார்
செய்ப்பெறும் நீள்வயல் சூழ்திருச்செந்தூர்
சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியா
எப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே
செப்புகின்ற அமுதம் இனிதென உணரார்
மானமர் திருவடி படிமிசை உறவே
வந்தெமை ஆண்டிட இங்கெழுந்தருளும்
மேல்நிமிர் சோலைசூழ் செந்திலம்பதிவாழ்
வேலனே சீலனே விஞ்சையர் கோனே
ஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே
நாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே...!☘

☘ஆதி நடுவும் அந்தம் ஆகியும் நின்றாய்
அரி அயன் அறியார் யாருனை அறிவார்
ஜோதி வடிவாம் இருதேவியும் நீயும்
தொல் புகழ் அடியார்க் கருள் செயும் பரனே
ஓதிய மறை புகழ் உருவினைக் காட்டி
உயர் திருசீரலைவாய் நகர் காட்டி
வேதியராவதும் காட்டி வந்தாண்டாய்
விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே...!☘

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

☘வானகத் தேவரும் வழிபடும் நின்னை
மாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்
மான இப்புவிதனில் வந்தமர் வாழ்வே
மன்னு செந்தூரா வழி வழியடியோம்
ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனே
ஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்
ஞான அகத்தினில் நன்றொளிரானாய்
நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே...!☘

☘அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா
ஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமே
சிவகுமரா யாங்கள் உய்ந்திட நினைத்து
சீரலைவாய் உறைவாய் அயன் மாலா
புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்
புண்ணியனே நின்கருணையும் நீயும்
தவமிலா சிறியெமை தடுத்தாள வல்லாய்
தயாபரனே பள்ளி எழுந்தருளாயே...!

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

           ☘ஓம் முருகா☘

Monday, 11 March 2019

சர்வ_மங்கலங்களும் #தரும்_மாவிளக்கு_வழிபாடு

#சர்வ_மங்கலங்களும்
#தரும்_மாவிளக்கு_வழிபாடு

மாவிளக்கு வழிபாடு என்பது இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று

.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..

ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.

இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன

.அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.

நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.

இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம்  ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.

மாவிளக்கு தத்துவம்

காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.

அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.

வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.

அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.

அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.

நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும்,அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வவழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது செய்ய வேண்டும்.

வீட்டில் மாவிளக்கு போடுதல்
பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை  வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.
கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

மாவிளக்கு செய்வது எப்படி

1.மாவிளக்கு ஒரு கிலோ அரிசி என்றால் அதனை களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம், வெல்லத்தை துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.

 அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம். ஒற்றை படை எண்ணிக்கையில் தான் மாவிளக்கு போடுவார்கள். ஒரளவு பெரிய உருண்டையாக தான் உருட்டுவார்கள்.

 உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் பொட்டு வைத்து நெய்விளக்குகேற்றி வைக்கவும்.

2.ஆடிவெள்ளி, மற்றும் தை வெள்ளிக்
கிழமைகளில் மாவிளக்கு போடுவார்கள். அரைக்கிலோ பச்சை அரிசியை
நன்கு அலம்பி ஒரு துணியில் உலர்த்தவும். நன்றாக உலர விட வேண்டாம்.

பாதி காய்ந்ததும் மிக்ஸியில் மாவாக பொடித்துக்கொள்ளவும். பொடித்த ஈரம்
இருக்கும்போதே கால் கிலோ வெல்லத்தையும் பொடித்து போட்டு மாவுடன்
நன்கு பிசையவும். வெல்லம் போட்டு பிசையும் போதே அதன் ஈரப்பதத்தால்
மாவு ஈசியாக திரண்டு வரும். மேலாக 2ஏலக்காய்களை பொடித்து தூவவும்.

விளக்குப் பிரை முன்பு கோலம் போட்டு ஒரு வாழை இலை விரிக்கவும்.
வெள்ளியில் பேசின் மாதிரி ஏதாவது பாத்திரம் இருந்தால் (இல்லைனா,இலையில்)
அதில் இந்த மாவை கைகளினாலே உருண்டையாக திரட்டவும்.

 நான்குபுரமும்
சந்தனம், குங்குமம் பொட்டு வக்கவும். நடுவில் ஒரு பெரிய கிண்ணம் அளவுக்கு
ஒரு குழி பண்ணி அது நிறைய நெய் ஊற்றவும். நாலு பக்கமும் திரியின் நுனி
வரும்படி போடவும்.

அப்படி இல்லைனா பஞ்சு ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி
நுனியில் கூர்ப்பாக திரித்து நெய்யின் நடுவில் வத்து நல்ல நேரம் பார்த்து
விளக்கு ஏற்றவும் குறைந்தது 2 மணி நேரங்களாவது மாவிளக்கு எரியனும்
அந்த நேரம் நீங்கள் விளக்கு முன்பு உக்காந்து ஸ்லோகங்களோ பாராயணங்களோ
சொல்லிண்டு இருக்கலாம்.( இது கம்பல்சரி இல்லை.)

விளக்கு மலை ஏரினதும்
வெத்திலை பாக்கு, பழம் தேன்காய் உடைத்து நைவேத்யம் செய்யனும்.
அந்த தேங்கா தண்ணியை மாவில் விட்டு கலந்து பிசைந்து எல்லாருக்கும்
பிரசாதமாக கொடுக்கலாம்.

வாழ்க வளமுடன் அன்பர்களே...

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...