Sunday, 16 December 2018

திருப்பாவை_விளக்கம்

#திருப்பாவை_விளக்கம்

#முன்னுரை

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள அனைத்துப் பாசுரங்களிலும் மிகவும் அதிகமாக பிரபலம் ஆனது திருப்பாவை என்றால் மிகையாகாது. நாச்சியார் திருமொழி என்ற பெயரில் ஆண்டாள் அருளிய பாசுரங்கள் தொகுக்கப்பட்டு இருப்பதை அறியாத பலரும் திருப்பாவையின் ஆசிரியர் யார் என்று கேட்டால், உடனே ஆண்டாள் என்று பதில் சொல்லும் அளவுக்கு திருப்பாவை பிரபலம். சைவம், வைணவம் ஆகிய இரண்டு பிரிவினரும் அனுபவிக்கும் பாடல்கள் நிறைந்த தொகுப்பு திருப்பாவை.
ஆண்டாள் அருளியுள்ள #முப்பது_பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள் என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பல பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இன்று தொலைக்காட்சி பெட்டிகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாக மாறிய பின்னர், ஏறக்குறைய எல்லா தமிழ் சேனல்களும், மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை ஒளிபரப்புகின்றன.

இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒரு நாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்து விடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக் கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம், திருப்பாவை ஆகும்.

நன்றி  :  தினமணி.

திருப்பாவை பாசுரம்

☘#ஸ்ரீ_ஆண்டாள்_அருளிய_திருப்பாவை☘

☘#திருப்பாவை_பாசுரம்
☘: 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

☘#பொருள்☘: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான
நன்றி தினமலர்  முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

☘#விளக்கம்☘: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

☘#நன்றி  :  #தினமலர்☘.

☘#தொகுப்பு  :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் .☘


#ஸ்ரீ_ஆண்டாள்_அருளிய_திருப்பாவை_பாசுரம்_தொடரும்............☘

Friday, 30 November 2018

அஷ்டலஷ்மி ஸ்தோத்ரம்

☘#அஷ்டலட்சுமி_ஸ்தோத்ரம்☘

☘#ஆதிலஷ்மி☘

ஸுமநஸ வந்தித ஸுந்தரி மாதவி, சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயனி, மம்ஜுள பாஷிணி வேதனநுதே |
பங்கஜ வாஸிநி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜயஜய ஹே மதுஸூதந காமிநி, ஆதிலக்ஷ்மி ஸதா பாலய மாம் || 1 ||

☘#தான்யலக்ஷ்மி☘

அயிகலி கல்மஷ நாசிநி காமிநி, வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி, மம்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
மங்கள தாயினி அம்புஜ வாஸிநி , தேவ கணாச்ரித பாதயுதே
ஜயஜய ஹே மதுஸூதந  காமிநி , தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம் || 2 ||

☘#தைர்யலக்ஷ்மி☘

ஜயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸிநி சாஸ்த்ரநுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாச்ரித பாதயுதே
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ ஸதா பாலயமாம் || 3 ||

☘#கஜலக்ஷ்மி☘

ஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மம்டித லோகனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப னிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||

☘#ஸம்தானலக்ஷ்மி☘

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5 ||

☘#விஜயலக்ஷ்மி☘

ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||

☘#வித்யாலக்ஷ்மி☘

ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாந்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
நவனிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||

☘#தனலக்ஷ்மி☘

திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, தும்துபி னாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும, சங்க நினாத ஸுவாத்யனுதே |
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா
பாலய மாம் || 8 ||

☘#பலஶ்றுதி☘

ஶ்லோ|| அஷ்டலக்ஷ்மீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணி |
விஷ்ணுவக்ஷஃ ஸ்தலா ரூடே பக்த மோக்ஷ ப்ரதாயினி ||
ஶ்லோ|| ஶம்க சக்ரகதாஹஸ்தே விஶ்வரூபிணிதே ஜயஃ |
ஜகன்மாத்ரே ச மோஹின்யை ப்ரஹ்மண்ய ஸுப மங்களம்.

https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

   <><><><><><><><><><><>

Tuesday, 20 November 2018

துளசி கல்யாணம் !

துளசி கல்யாணம் ! 

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியை "கைசிக ஏகாதசி' என்றும் "பிரபோதினி ஏகாதசி' என்றும் போற்றுவர். வைணவர்கள் போற்றும் ஏகாதசிகளுள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப் போன்று மகத்துவம் பெற்றது "கைசிக ஏகாதசி!'

ஏகாதசி விரதம் இருந்து, "கைசிகப் பண்'னால் பெருமாளைப் பாடிய நம்பாடுவான் பரந்தாமனின் அருள் பெற்ற திருநாள். இன்றைய நாளில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி தலத்தில் பாசுரங்கள் பாடி விசேஷ பூஜைகளோடு வழிபாடுகள் நடைபெறும். இன்று விரதம் கடைப்பிடிப்பவர்கள் ஆயிரம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு  துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் இருப்பார். தியானத்தில் இருக்கும் அவரை அன்று "உத்தீஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசி அன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, துளசி மாடம் சுற்றி மெழுகி, கோலமிட்டு, காவி இடுவார்கள். தினமும் பூஜை செய்யும் துளசி மாடத்தில் உள்ள துளசிச்செடிக்கு பஞ்சினால் ஆன மாலையும் வஸ்திரமும் அணிவிப்பார்கள். கருகமணி நகைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைப்பார்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வார்கள்.

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றினார் என்பதால் ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து, துளசி மாடத்தில் சொருகிச் சேர்த்து இரண்டிற்கும் பூஜை செய்வார்கள். அப்போது,
"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹாண துளஸீம் விவாஹ விதிநேச்வர
பயோக்ருதைஸ்ச ஸைவாபி: கன்யவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸீம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'
என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்து "நாமசங்கீர்த்தனம்' செய்வார்கள்.

துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும் மத்தியில் மகாவிஷ்ணுவும் நுனியில் பிரம்ம தேவரும் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அசுவினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.

பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் நலமுடன் வாழ தினமும் துளசிமாடத்திற்கு முன்போ அல்லது துளசிச் செடிக்கு முன்போ, கோலமிட்டு, விளக்கேற்றி சுத்தமான நீரை வேரில் ஊற்றி சந்தனம், குங்குமம் புஷ்பத்தால் அலங்கரித்து அர்ச்சித்து, தூபதீப, நிவேத்தியம் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்து மும்முறை வலம் வந்து வணங்கினால் சுகமான வாழ்வு கிட்டும்.

Saturday, 10 November 2018

ஸ்ரீ_நவக்ரஹ_மங்களாஷ்டகம்

☘#ஸ்ரீ_நவக்ரஹ_மங்களாஷ்டகம்

--
1.  ☘பாஸ்வானர்க்க சமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்’யப:
குர்விந்தோச்’ச குஜஸ்ய மித்ரமரிகத்ரிஸ்த்தச்’சுப: ப்ராங்முக:
ச’த்ருர் பார்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காளிங்கதேசா’திப:
மத்யே வர்த்துலமண்டலே ஸ்த்திதியுத: குர்யாத் ஸதா மங்களம் .☘   

2.  ☘சந்த்ர: கர்க்கடக ப்ரபுஸ்ஸித ருசிச்’சாத்ரேய கோத்ரோத்பவச்’
சாக்னயே சதுரச்’ரகோ(அ)பரமுக: கௌர்யர்சயா தர்ப்பித:
ஷட்ஸப்தாக்னி தசா’த்யசோ’பன பலோ(அ)ச’த்ருர் புதார்க்கப்ப்ரிய:
ஸௌம்யோ யாமுன தேச’பர்ணஜஸமித் குர்யாத் ஸதா மங்களம்.☘             

 3. ☘பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ(அ)வந்தீபதி காதிர
ப்ரீதோ வ்ருச்’சிக மேஷயோரதி பதிகுர்வர்க்க சந்த்ரப்ரிய:
ஜ்ஞாரி: ஷட்த்ரிசு’பப்ரதச்’ச வஸுதாதாதா குஹாதீச்’வர:
பாரத்வாஜ குலோத்பவோ(அ)ருண ருசி: குர்யாத் ஸதா
மங்களம் .☘             

 4.☘ ஸௌம்ய: பீத உதங்முகஸ்ஸமித பாமார்கோ (அ)த்ரிகோத்ரோதபவ:
பாணேசா’நகதஸ் ஸுஹ்ருத்ரவிஸிதோ வைரீக்ருதானுஷ்ணருக்
கன்யாயுக்ம பதிர்தசா’ஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரகச்’சோ’பன:
விஷ்ண்வாராதன தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதா மங்களம் .☘                 

5. ☘ஜீவச்’சோத்தர திங்முகோத்தரக்குப் ஜாதோ(அ)ங்கிரோ கோத்ரத:
பீதோ(அ)ச்’வத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதிச்’ சாபர்ஷ மீனாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரியஸ்ஸித புதாராதிஸ்ஸமோ பானுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தகச்’ சு’பகர: குர்யாத் ஸதா மங்களம். ☘                         

 6. ☘சு’க்ரோ பார்கவ கோத்ரஜஸ் ஸிதருசி: பூர்வானன: பூர்வதிக்
காம்போஜாதிபதிஸ் துலவ்ருஷபபச்’ சௌதும்பரைஸ்தர்ப்பித:
ஸௌம்யர்க்யோ: ஸுஹ்ருதம்பிகா ஸ்துதிவசா’த் ப்ரீதோ(அ)ர்க்கசந்த்ராஹித:
நாரீ போககர: ச’சு’போ ப்ருகுஸுத: குர்யாத் ஸதா மங்களம் . ☘                       

 7.☘ ஸௌரி: க்ருஷ்ணருசிச்’ச: பச்’சிமமுக: ஸௌராஷ்ட்ரப: காச்’யப:
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருச் சுக்ரஜ்ஞ யோர்க்குருத்ரக:
ஷட்திரிஸ்தச்’சு’பதோ(அ)சு’போ தனுகதிச்’ சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்ட்டன் சிரஜீவிதாதி ஃபலத: குர்யாத் ஸதா மங்களம். ☘                         

 8. ☘ராஹுர்பர்பரதேச’போ நிருருதௌ க்ருஷ்ணாங்க சூ’ர்பாஸன:
யாம்யாசா’பிமுகச்’ச சந்த்ரரவிருத் பைடீனஸி: க்ரௌர்யவான்
ஷட்த்ரிஸ்த்தச்’சு’பக்ருத் கராளவதன: ப்ரீதச்’ச தூர்வாஹுதௌ
துர்காபூஜனத: ப்ரஸன்னஹ்ருதய: குர்யாத் ஸதா
மங்களம்.☘                           

 9. ☘கேதுர்ஜைமினி கோத்ரஜ: குச’ஸமித்வாயவ்ய கோணேஸ்த்தித:
சித்ராங்கத் வஜலாஞ்சனோ ஹி பகவான் யாம்யானன: சோ’பன:
ஸந்துஷ்டோ கணநாத் பூஜனவசா’த் கங்காதி தீர்த்தப்ரத:
ஷட்த்ரிஸ்த்தச்’சு’பக்ருச்ச சித்ரிததனு: குர்யாத் ஸதா மங்களம். ☘                 
--
☘#ஸ்ரீ_நவக்ரஹ_மங்களாஷ்டகம்_ஸம்பூர்ணம்.☘

☘#Thanks  :  nytanaya.wordpress.com.☘

Thursday, 8 November 2018

சண்முக_கவசம்_

☘#சண்முக_கவசம்_


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் விளக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

☘#அண்டமாய் அவனி யாகி
அறியொணாப்
பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக்
காக்க. 1☘

☘விளக்கம்☘:

வானமாகியும் , மண்ணுலகமாகியும் , மனம் வாக்கு காயத்தால் அறிதற்கு இயலாத உண்மைப் பொருளாகியும் , அடியார்களுக்கு குருவாகியும் , களங்கம் இல்லாத கடவுளாகியும் , எட்டு திசைகளிலும் உள்ளவர் வணங்கிட விளங்கிய என் அருளுடைய இறைவனுமாகிய பேராற்றல் பொருந்திய சரவணப் பொய்கையில் முதற்காட்சி தந்த முருகப்பெருமான் நாள்தோறும் என் தலையைக் காப்பாராக !

☘#ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2☘

☘விளக்கம்☘:

ஆதிபரம்பொருளான கயிலை மலையின் திருவாளன் என் அழகிய நெற்றியைக் காப்பாராக ! மகரந்தம் பொருந்திய கடம்பு மலர் மாலையைச் சூடிய பெருமான் என் இரண்டு புருவங்களைக் காப்பாராக ! ஒளிவடிவமான தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமான் களங்கம் உண்டாகாதபடி விழிகளை காப்பாராக ! தலைவனான கார்த்திகேயன் என் மூக்கை விருப்புடன் காப்பாராக !

☘#இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன்
காக்க ! 3☘

☘விளக்கம்☘:

இரண்டு செவிகளையும் செவ்வேள் அவற்றின் இயல்பு குன்றாதபடி காப்பாராக ! வாயினை முருகப் பெருமான் காப்பாராக ! நாவினையும் பல்லினையும் நல்ல குமரன் காப்பாராக ! துதிக்கையையுடைய யானை முகம் வாய்ந்த கணபதிக்குத் தம்பி களங்கம் இல்லாத கன்னங்களைக் காப்பாராக ! பிடரியை ( பின் கழுத்தை ) ச் சிவ சுப்பிரமணியன் அழகுடன் விளங்கக் காப்பாராக !☘

☘#ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4☘

☘விளக்கம்☘ :

அருள் மிக்க கார்த்திக்கேயன் என் கழுத்தைக் காப்பாராக ! இலக்குமியின் மருமகன் என் ஒளியுடைய தோள்களையும் இரு விலாப்பக்கங்களையும் காப்பாராக ! பன்னிரண்டு ஆயுதங்களையுடைய இறைவன் பழுது இல்லாத என் மார்பைக் காப்பாராக ! வளரும் அழகுடைய குறிஞ்சி நிலா கடவுள் இகழ்வதற்கு இயலாத என் முழங்கையினைக் காப்பாராக !  ( வாகுலேயன்  - கார்த்திகேயன் )☘

☘#உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய்
காக்க. 5☘

☘விளக்கம்☘:

உமையம்மையாரின் இளைய மகன் என் முன்னங்கைகளை உறுதியாய் இருக்கும்படி காப்பாராக ! சிறந்த முருகப் பெருமான் என் கைகள் அஞ்சாமை மிகும்படி காப்பாராக ! வேலையுடைய முருகன் என் புறங்கைகளைக் காப்பாராக ! சிறந்து விளங்கும் திருமாலின் மருமகன் கருவியாய் அமைந்துள்ள என் பத்து விரல்களையும் காப்பாராக ! குழந்தைத் தெய்வம் என் பின்பக்க முதுகைக் காப்பாராக !☘

☘#ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக்
காக்க. 6☘

☘விளக்கம்☘:

மயில் ஊர்தியை உடையவன் உணவை இட்டு நிறைக்கும் வயிற்றைக் காப்பாராக ! புதுமை மணம் கமழும் நிமிர்ந்த தோள்களை உடைய தேவரின் தலைவன் வயிற்றில் உள்ள கொப்பூழ்ச் சுழியினைக் காப்பாராக ! அக்கினி கர்ப்பன் ஆன பார்வதியின் மைந்தன் நாணிபோன்ற ஆண் குறியைக் காப்பாராக ! கந்தப்பெருமான் விரைகளின் நடுவில் பொருந்தியுள்ள நரம்பைக் காப்பாராக ! ஆறுமுகப் பெருமான் எருவாயான குதத்தை ( மலவாயை ) க் காப்பாராக !☘

☘#எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7☘

☘விளக்கம் ☘:

வேலையுடைய இறைவர் தளர்ச்சி ஏற்படாதபடி எனது இடுப்பைக் காப்பாராக ! காப்பாராக ! அழகிய பிட்டங்கள் இரண்டையும் சிவபெருமானின் மகன் காப்பாராக ! காப்பாராக ! எல்லார்க்கும் மேலான மெய்ப்பொருளாக விளங்கும் கங்கையின் மகன் இரு அடித் தொடைகளைக் காப்பாராக ! சிவந்த திருவடிகளை உடைய அன்புடைய குருநாதன் முன்தொடைகளைக் காப்பாராக ! (அஞ்சகனம் -  அம் + சகனம் ; அழகிய பிட்டங்கள் )☘

☘#ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8☘

☘விளக்கம்☘ :

சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதன் என் கால்களில் உள்ள முழங்கால்கள் இரண்டையும் காப்பாராக ! திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற இறைவன் என் சிறந்த கணைக்கால் இரண்டையும் காப்பாராக ! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற முருகப்பெருமான் நேரான புறங்கால்கள் இரண்டையும் காப்பாராக !  பழமுதிர்ச்சோலை இறைவன் சிறந்த குதிக்கால்களைக் காப்பாராக !☘

☘#ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9☘

☘விளக்கம்☘ :

அழகு பொருந்திய குன்று தோறும் வீற்றிருக்கின்ற இறைவன் என் பாதங்களில் உள்ள பத்து விரல்களையும் காப்பாராக ! பசுமையுடைய பழநித் தலத்தில் வீற்றிருக்கின்ற ஆண்டவன் உள்ளங்கால்களைக் காப்பாராக ! எவருக்கும் முதல்வரான ஆறுமுகப் பெருமான் உடல் முழுமையும் காப்பாராக ! தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான விசாகன் நாள்தோறும் என் உள்ளத்தைக் காப்பாராக !☘

☘#ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10☘

☘விளக்கம்☘ :

பேரொலி உண்டாகும்படி பெருங் கூச்சலுடன் வரும் பூதம் , பிசாசு , பலி வாங்குகின்ற இராட்சதப் பேய் முதலிய கொடிய பலகணங்கள் எவையே யானாலும் , அவை யெல்லாம் என்னைக் கண்ட அளவில் அச்சம் கொள்ளும்படியாக , என்னை வேல் காப்பதாக ! தீயவர் செய்கின்ற சூனியம் வன்மை யுடைய மந்திர தந்திரங்கள் என்ற எவையும் என்னைத் துன்பப்படுத்தாத வண்ணம் வேல் காப்பதாகுக !☘

☘#ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க
 காக்க ! 11☘

☘விளக்கம்☘ :

மிக்க சினம் கொண்டு வாள் , வில் , சூலங்கள் , எடுத்திடும் தண்டாயுதம் , சக்கரம் , தடி , மழு , ஈட்டி முதலிய அழிக்கும் தன்மையுடைய கருவிகளைக்  என்மீது வீசினாலும் , அவை எனக்கு எந்த வகையிலும் துன்பம் செய்யாமல் இருக்குமாறு , முருகப் பெருமான் கையில் உள்ள வேல் என்னைக் காப்பதாக !
(உவணி - வாள் )☘

☘#ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க
காக்க ! 12☘

☘விளக்கம்☘ :

பொறாமை உடையவர் , ஊனை உண்பவர் , அசட்டுக்குணமுடைய மூடர் , பேயின் தன்மை உடையவர் , அரக்கர் , அற்பர் ,  பகைவர்  ஆகியவருள் எவரானாலும் உறுதியுடன் என்னுடன் மற்போர் செய்ய கட்டிப் பிடிக்கத் தாவி வருவாராயின் , அப்போது எல்லா உலகங்களையும் காத்தருளும் , உயிர்களை வருத்தும் சூரனுக்கு இயமனைப்போன்ற எம் முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வேல் என்னைக் காப்பதாக ! (தவ்வி - தாவி , கவ்வுதல் - கவர்தல் ; பிடித்தல் ) ☘

☘#கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல்
காக்க ! 13☘

☘விளக்கம்☘ :

மிக்க கொடிய நஞ்சுடைய பாம்புகள் , சிங்கங்கள் , கரடிகள் , நாய்கள் , புலிகள் , குதிரைகள் , யானைகள் , கொடுமை செய்யும் ஓநாய்கள் , குரங்குகள் , பலநிறப்
பூனைகள் , நரிகள் முதலிய இயங்கும் இயல்பு கொண்ட உயிர்கள் எதனாலும் நான் துன்பம் அடையாத வண்ணம் கூறிய வேல் விரைவாய் வந்து என்னைக் காப்பதாக ! கங்கையின் மகனான காங்கேயனின் வேல் என்னைக் காப்பதாகுக !☘

☘#ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல்
காக்க. 14☘

☘விளக்கம்☘ :

முருகப்பெருமானின் திருக்கையில் உள்ள ஞானவேல் ஙகர எழுத்தை போன்ற இனம் என்று என்னை அனைத்துக் காப்பதாக ! கொடிய பறவைகள் ,   எலிகள் , தேள்கள் , நண்டு காலிகள் , வன்மையுடைய செய்யான்கள் , நச்சுப் பல்லிகள் , நகத்தையுடைய ஓணான்கள் , பூரான்கள் , வண்டுகள் , சிலந்திகள் என்ற இவற்றால் இந்த உலகத்தில் எனக்கு இடையூறு ஏற்படாதபடி இறைவனின் கை அழகிய வேல் காப்பதாக ! (புலியின் பூச்சி - சிலந்தி ) ☘

☘#சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15☘

☘விளக்கம்☘ :

☘நீரிலே வாழும் வன்மைவாய்ந்த முதலை , நீண்ட கொம்பையுடைய திருக்கைமீன் , மற்றுமுள்ள நீர்வாழ் உயிர்கள் , நிலத்திலும் , நீரிலும் பெரிய துன்பத்தைத் தருவதற்கே பிறந்துள்ள மற்ற உயிர்கள் ஆகியவற்றால் நான் துன்பம் அடையாத வண்ணம் , அவ்வக் காலங்களில் , உறுதியுடன் இருந்து வேல் காப்பதாக ! தீப்பொறிகளின் மூலம் அமையப் பெற்ற உடலை உடைய முருகப்பெருமானின் கூறியவேல் காப்பதாக ! (பாவகி - அக்கினி ) ☘

☘ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல்
காக்க. 16☘

☘விளக்கம் ☘:

☘முருகபப்பெருமானின் அழகிய திருக்கை வேல் ஒன்பது கிரகங்களால் உண்டாகும் துன்பத்திலிருந்து என்னைக் காப்பதாக ! பூப்போன்ற கண்களினின்று உண்டாகும் நோய்கள் , பல்குத்தல் நோய் , மூக்கு நோய்கள் , திமிர் நோய் , வாதக் கால்நோய் , இரத்த சோகை நோய் , தலைவலி , தலைக்கு அடியில் உள்ள காது நோய் முதலியவை என்னை நெருங்கித் துன்புறுத்தாத வண்ணம் பன்னிரண்டு தோள்களையுடைய முருகப்பெருமானின் வெற்றி வாய்ந்த வேல் காப்பதாக ! (அம்பரியன் - ஊர்தியுடையவன் , சுமவிழி - மலர் போன்ற கண் )☘

☘டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17☘

☘விளக்கம்☘ :

☘உடுக்கையின் அடிபோல் துன்பப்படுத்தும் தலையிடி , கண்டமாலை , குமுறி மிக்க வலி உண்டாக்கும் சிலந்திப்புண் , வயிற்றுவலி , குடல் நோய் , கபநோய் , காசநோய் , நிமிர முடியாத வண்ணம் படுக்கையில் வருத்தும் வெப்பு நோய் , நீர் கோத்த மேக நோய்கள் என்னும் இவை எல்லாம் என்னை அடையாதவண்ணம் கிரவுஞ்ச மலையைப் பிளந்த முருகப்பெருமானின் கைவேல் காத்தருளுக . ☘

☘இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல்
 காக்க. 18☘

☘விளக்கம் ☘:

☘கட்டுப்பாடின்றிப் பெருகும் பித்த எரிச்சல் , பெரிய சுர நோய்கள் , கைகால்கள் , முடங்கும் படி செய்யும் தொழுநோய் , வெண்மையான மூலமுளை , பசியின்மை , கணப்போதில் இறப்பை ஏற்படுத்தும் சன்னிவகைகள் என்று சொல்லப்படும் இந்த நோய்க் கூட்டம் என்னை அடிப்படுத்தி ஆளாதபடி பெருஞ்சத்தி வேல் காப்பதாக .☘

☘தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல்
காக்க. 19☘

☘விளக்கம் ☘:

☘நாவரட்சியை உண்டாக்கும் நோய் , வாத நோய் , சீதள நோய் , உணவில் வெறுப்பு , உடலை வற்றிடச் செய்கின்ற மூலச்சூடு , இளைப்பு , வருத்தும் விக்கல் நோய் , துன்பப்படுத்தும்  பேதி , சீழ் உண்டாக்கும் நோய் , வாதத்தால் உண்டாகும் பீஜ நோய்கள் , சூலை நோய் ஆகிய எவையும் என்னிடம் வராமல் எம்பெருமானின் திண்மையான வேல் என்னைக் காப்பதாக . ☘

☘நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல்
காக்க. 20☘

☘விளக்கம்☘ :

☘நமைச்சல் உண்டாக்கும் கிரந்தி நோய் , உடலில் வீக்கத்தை விளைவிக்கும் பாண்டு நோய் , சோர்வை உண்டாக்கும் கருமை வெண்மை நிறமாக வரும் பலவிதமான தொழுநோய்கள் , வாந்தி , இமைப்பதற்கு முன் உண்டாகும் இழுப்பு நோயுடன் விம்மிக் குத்தி வலியை ஏற்படுத்தும் பவுத்திரம் முதலிய நோய்கள் ஆகியவை இமைப்பொழுதும் என்னை வந்து தாக்காத வண்ணம் இறைவரின் அருள்வேல் காப்பதாகுக.  (பகந்தராதி - பவுத்திர நோய்
முதலியன )☘

☘பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல்
காக்க ! 21☘

☘விளக்கம்☘ :

☘சினந்து பற்களைக் கடித்து மீசையானது படபட என்றே துடிக்கக் கல்லைக் காட்டிலும் வன்மை உடைய மனத்தைக் காட்டிக் கண்களை உருட்டிப் பார்த்து , இருளைவிட மிகவும் கரிய மேனியுடைய இயமதூதர் என்னிடம் வந்தாலும் , விரைவில் தாரகாசுரனை வென்ற இறைவனின் ஓம் ஐம் ரீம் என்ற மூன்று இயல்புடைய வேல் காப்பதாக ! (ஓம் - காப்பு , ஐம் - தலைமை , ரீம் - உக்கிரம் )☘

☘மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க
காக்க. 22☘

☘விளக்கம்☘ :

தரையிலும் , மரத்தின்மேலும் , மலையிலும் , தீயின் மீதும் , குளிர்ச்சி மிக்க நீரிலும் , எறிச் செலுத்தும் ஊர்திகளிலும் , வானத்திலும் , பாதளக் குகைகளிலும் , பிற எந்த இடத்திலும் , என்னை நெருங்கி வந்து அருள் நிறைந்த சஷ்டிநாதன் திருக்கை வேலானது காப்பதாக ! காப்பதாக ! ☘

☘யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல்
காக்க. 23☘

☘விளக்கம்☘ :

☘'ய' என்ற எழுத்தைப்போல் விளங்கும் மூன்று தலையுடைய சூலத்தை ஏந்தும் மணம் வீசும் திருபுயங்களைக் கொண்ட முருகப்பெருமானின் திருக்கைவேல் என் முன்பக்கத்தில் காப்பதாக ! 'அ' என்னும் எழுத்தை முதலாகக் கொண்ட உயிர் எழுத்துக்கள் போல் பன்னிரண்டு கண்ணுடைய பரமனின் வேல் என் பின்பக்கத்திலிருந்து காப்பதாக !  'ச' என்ற எழுத்துடன் கூடி ஆறு எழுத்தையும் தன் பெயராய்க்  கொண்ட பெருமானின் கைவேல் என் நடுப்பக்கத்தைக் காப்பதாக . சிகரம் போல் விளங்கும் தெய்வ முடியைப் பூண்ட இறைவரின் விளங்கும் தலைமையுடைய வேல் என்னை மேலும் கீழும் காப்பதாக ! ☘

☘ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல்
காக்க. 24☘

☘விளக்கம் ☘:

☘இனிய சொல்லைப் பேசும் தேவயானையின் கணவனாரும் வள்ளியின் கணவனாருமான முருகப்பெருமானின் செம்மையான வெற்றி வேல் கிழக்குத் திக்கில் ஆவலுடன் இருந்து காப்பதாக ! அக்கினியின் ஆட்சி மிகுந்த தென்கிழக்குத் திசையில் ஞானவீரன் வேல் காப்பதாக . குறைவில்லாத கதிர்காமத்தில் வீற்றிருப்பவனின் பகைவரை அழிக்கும் வேல் தென்திசையிலே இருந்து என்னைக் காப்பதாக . ☘

☘லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25☘

☘விளக்கம்☘ :

'ல' என்ற எழுத்தின் வடிவைப்போல் வளைந்து ஆரவாரம் செய்த காளிங்கன் என்ற பெரிய பாம்பின் நல்ல உடலானது நெளியுமாறு அதன் மேல் நின்று அதன் வன்மை அழியுமாறு நடனமாடிக் குடைந்த சக்கரத்தை உடைய திருமாலின் மருமகன் கையில் உள்ள வேல் , வழிபாடு செய்து கொண்டிருக்கும் என்னைத் தென்மேற்குத் திசையில் இருந்து காப்பதாக ! போர் வேல் மேற்குத் திசையில் என்னைக் காப்பதாக ! வாயுவின் திசையான வடமேற்குத் திசையில் இடையூறு ஏற்படாத வண்ணம் குகப்பெருமானின் திருக்கைவேல் காப்பதாக ! ☘

☘வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல்
காக்க. 26☘

☘விளக்கம்☘ :

வடக்கில் சிவபெருமானின் மைந்தனின் அருள்வடிவான செல்வ வேல் காப்பதாக . காளை ஊர்தியுடைய சிவபெருமானின் வடகீழ்த் திசையில் பிரணவ மந்திரப் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் வேல் காக்க . நடக்கின்ற போதும் , அமர்ந்து இருக்கும்போதும் , பேசும்போதும் , குனிந்து நிமிரும்போதும் , தரையில் படுத்திருக்கும்போதும் உறங்கும்போதும் கிரவுஞ்ச மலையைத் துளைத்த முருகப்பெருமானின் வேல் காப்பதாக .  ☘

☘இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும்
காக்க. 27☘

☘விளக்கம்☘ :

☘இழந்துபோகாத பேரின்பப் பெருவாழ்வை அருளுகின்ற முத்தையனின் திருக்கை வேல், உதவும் நல்ல உணவை நான் உண்ணும் போதும் , விருப்பத்துக்குரிய  விளையாட்டை விளையாடும்போதும் , பழைய தேவர்கள் வணங்கும் திருவடிகளைத் தொழுது உள்ளத்தை ஒன்றுபடுத்திக் கொணரும்போதும் அருட்குணத்துடன் இருந்து காப்பதாக ! உறுதியுடன் இருந்து அம்முத்தையனார் மயிலும் உதவுவதாக ! ☘

☘இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28☘

☘விளக்கம் ☘:

☘பாலப்பருவத்திலும் வாலிபப்பருவத்திலும் நரை முதலியவை முதிர்ந்து வரும் முதுமைப் பருவத்திலும் அருள் வளரும் ஆறுமுகமுடைய சிவனார் என் முன்பு எழுந்தருளி என்றும் காப்பாராக  ! கதிரவன் தோன்றும் காலையிலும் முற்பகலிலும் ஓம் என்பதன் பொருளான சிவசுவாமி காப்பாராக  . தெளிந்த நடுப்பகல், பிற்பகல் முதலிய காலங்களில் சிவகுருநாதன் காப்பாராக  !☘

☘இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29☘

☘விளக்கம்☘ :

இறகையுடைய சேவலுக்கும் மயிலுக்கும் தலைவன் முருகப்பெருமான் என்னை முன் இரவில் காப்பாராக  ! ஆற்றல் உடைய சூரபன் மனின் பகைவனான பெருமான் விளங்கும் பின் இரவில் காப்பாராக  ! தேன் பொருந்திய தாமரை போன்ற திருவடியை உடைய சிலம்பணிந்த இறைவன் நள்ளிரவில் என்னைக் காப்பாராக  ! வேதங்கள் துதிக்கும்படியான இளையவனான முருகன் மாற்றம் ஏதும் உண்டாகாத வண்ணம் எக்காலத்துக்கும் காப்பாராக  ! காப்பாராக  !☘

☘இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க
வந்தே. 30☘

☘விளக்கம் :☘

'நீ கூடி வாழத்தக்க இனம்' என அடியவருடன் என்னை கூட்டி வைக்கும் செட்டியான முருகன் என்னை காப்பாராக  ! நான் தனிமையில் இருக்கும்போதும் கூட்டத்தில் இருக்கும்போதும் சரவணபவன் என்னைக் காப்பாராக  ! சிறந்த கந்தர் அநுபூதி என்ற நூலைப் பாடியருளிய அருணகிரி நாதரை ஆட்கொண்ட முருகன் காப்பாராக  ! இந்தச் 'சண்முக கவசம்' என்ற நூலை மகிழ்வுடன் பாடிய 'குமரகுருதாசன்'  என்ற என்னுடைய இறைவனான ஆறுமுகப்பெருமான் அருளுடன் வந்து என்னைக் காப்பாராக  !

☘#Thanks  : kalaikumarBlogger.☘

☘#தொகுப்பு  : #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன்.☘

    ☘*ஓம் முருகா சரணம் *☘

சண்முக_கவச_ #மகிமை!☘

☘#சண்முக_கவச_
#மகிமை!☘

இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம்.
இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய், பாடங்களாய் மனிதர்களை உயர்த்தும் படிக்கட்டுகளாய் மிளிர்கின்றன.
சைவத்தில் உடற்பிணி கண்ட தருமசேனர் தமது தாய் சமயமாம் சைவத்திற்கு திரும்பி “கூற்றாயினவாறு”  என்னும் பதிகம் பாடி தமது சூளை நோய் நீங்க பெற்ற வரலாறு நமக்கு தெரியும். இழந்த கண்களை பெறுவதற்காக பல ஸ்தலங்களைப் பாடி காஞ்சியையும், திரு ஆருரை யும் பாடி பலன் பெற்றார் சுந்தரமூர்த்தி நாயனார். அந்த வகையில் பல ஆண்டுகட்கு முன்னால் “சஷ்டி கவசம்” என்ற மந்திர நூலை இந்த உலகிற்கு நல்கினார் தேவராய சுவாமிகள்.
ஆறுபடை வீடுகளில் அமர்ந்து ஆறு ஆதாரங் களில் நிறைந்து ஆட்சி செய்யும் நாயகனாக, அழகனாக, குழகனாக விளங்கும் முருகப்பெரு மானை வேண்டி ஆறு கவசங்களை ஆறுபடை வீடுகளுக்கு தந்தருளினார் தேவராய சுவாமிகள்.
இமயம் முதல் குமரி வரை ஏன் கடல் கடந்த நாடுகளிலும் கூட தேவராய சுவாமி களின் சஷ்டி கவசம் பாராயணம் செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எங்கே ஷஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறதோ. அங்கே ஷஷ்டி நாதன் சண்முகநாதன். சற்குருநாதனாக வந்து அருள் புரிவான்.
ஷஷ்டி கவசத்தின் மேன்மையை உணர்ந்த பாம்பன் சுவாமிகள் ஆறுபடை விட்டு சஷ்டி கவசத்தையும் முப்பத்தி ஆறு முறை இடைவிடாது ஓதி ஜபித்து வந்தார். சஷ்டி கவசத்தின் முழுபலனையும் முருக பக்தர்கள் எளிய முறையிலே பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்து “சண்முக கவசம்” என்னும் மா மந்திர நூலை அருளி செய்தார்.
ஆம்! சஷ்டி கவசம் ஆறு படை வீட்டு பாடல்களை யும் 36 முறை படிப்பதற்கு குறைந்த பட்சம் 1 மணி நேரம் ஆகும். ஆனால்  நம் போன்றோர் எளிய முறையில் பாராயணம் செய்வதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முக கவசத்தை பாராயணம் செய்வதற்கு மிக மிக குறைந்த நேரமே ஆகும்.
எவர் ஒருவர் சண்முக கவசத்தை முறையாக ஆறுமுறை பாராயணம் செய்கிறாரோ அவர் உடற்பிணி நீங்கி உளம் களிப்பது உறுதி. எனவே தான் குருநாதராகிய  நமது ‘பாம்பன் சுவாமிகள்’ என்னை ஆதரித்து அருள் பரம ரகசிய சக்தி எனை நம்பினாரை ஆதரியாது நிற்குமோ” ஐயம் வேண்டாம். என்று அருளிச் செய்தார்.
இத்தகைய மகிமை வாய்ந்த சண்முக கவசத்தை பற்றி பாம்பன் சுவாமிகள் குறிப் பிடுகையில் “பரிவிற் பெரியோய்” நீ, பாராய ணம் செய்கின்ற “சண்முக கவசம்” ஒன்றே உன்னை அத்தீவிரகதியில் சேர்க்கும் என்று சுப்பிரமணிய ஜோதிடருக்கு அருளினார்.
போர்க்காலங்களில் தம்மை காத்துக் கொள்வதற்காக வீரர்கள் இரும்பு கவசம் அணிந்து கொள்வார்கள். அது போல இந்த உலக வாழ்க்கையாகிய போரை எதிர்கொள் வதற்கு நாமும் இந்த சண்முக கவசம் அணி வோம். அதாவது பாராயணம் செய்வோம்.
இந்த சண்முக கவச பாராயணம் பேரழிவி லிருந்து பெரும் இன்னலிருந்து கொடிய துன்பத்திலிருந்து தீராதப் பிணியிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் தாய். எனவேதான் “சண்முக கவசமின்றி தரணியில்  மந்திரம் இல்லை” என்பார் உண்மை உணர்ந்த பெரியோர்கள்.
சண்முக கவசம் பாராயணம் செய்கின்ற போது பக்தி சிரத்தையுடன் பன்னிருகை பரமன் பாத மலர்களை பணிந்து பாராயணம் செய்தல் வேண்டும் சுவாமிகள் அருளியது போலவே பாடல்களை ஓதுதல் நலம் பயக்கும். சீர்களை பிரித்தோ, கூட்டியோ ஓதுதலை தவிர்ப்பது நலம். சண்முக கவசம் ராகத்துடன் பாடப்படுவதை தவிர்த்தல் நலம். ஈரேழு பதிநான்கு லோகங்களையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருளுகின்ற குமார பரமேஸ்வரை நமது குறைகள் தீர்க்க, குற்றம் ஒழிய, குணமடைய, நன்மை பெருக வேண்டும். பாவத்திலே ஓதுதல் வேண்டும்.
இந்த முறையில் ஓதி, நூலாசிரியராக விளங்கக்கூடிய பாம்பன் சுவாமிகளின் முறிந்த கால் எலும்பை இணைத்தற்கு உதவினர்.

சண்முகக் கவசத்தின் மகிமை
முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;
பாம்பன்சுவாமிகள்,
சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.
தமிழில் இருக்கும் #உயிர்_எழுத்துக்கள் 12 ஐயும்,#மெய்_எழுத்துக்கள் 18 ஐயும்,#முதல்_எழுத்தாகக்_கொண்டு 30 #பாடல்களுடன்_பாடப்பட்டது_சண்முக_கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...