Wednesday, 6 June 2018

🍀#ஸ்ரீ #லலிதா #நவரத்தின #மாலை🍀

🍀#ஸ்ரீ #லலிதா #நவரத்தின #மாலை🍀
--
லலிதா அன்னையை போற்றி புகழும் அற்புதமான பாட்டு.
--
அம்மனை 9 #நவரத்தினங்களாக வர்ணித்து, பிறகு இந்த பாடலின் #பயனையும் குறிக்கிறது. இந்த பாடலை தினமும் வீட்டில் பாடினால் அவ்வளவு நல்லது.
சகல விதமான #சந்தோஷங்கள்,சம்பத்துகள் கிடைப்பது உறுதி.
--
ஞான கணேசா சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்
--
🍀#காப்பு🍀
ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே
--
ஐந்து அறங்களையும் நன்கு புரியும் நலம் பூக்கும் சிரிப்பினையுடைய புவனேஸ்வரியின் மேல் இயற்றப்படும் இந்த நவரத்தின மாலை நூல் நன்கு அமைய கணநாயகனான யானை காக்குமே.
--
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. 🍀#வைரம்🍀
கற்றும் தெளியார் காடேகதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கற்க வேண்டிய நூற்கள் பலவும் கசடறக் கற்றப் பின்னும் அப்படிக் கற்றவர் தெளிவு பெறவில்லையாம். உலக
இன்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று அதுவே கதியாய் இருந்து கண் மூடி நீண்ட நாட்கள் பெருந்தவம் செய்து தவவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லையாம்.
திருநெறிய தமிழேசை -(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்)
அவர்கள் நிலையே அப்படி இருக்க மிகத் தாழ்ந்த பிழைகள் பலவும் புரியும் ஏதாவது பேசவும் முடியுமோ? வயிரத்தால் செய்த படைவாளினை மிக வலிமை மிக்க பகைவர்களுக்கு எமனாகப் பற்றி எடுத்தவளே. அடியவர்களுக்கு என்றும் வற்றாத சுனையைப் போல் அருள் புரிபவளே. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
--
2. 🍀#நீலம்🍀
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மூலாதாரமெனும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி எனும் தீயே சரணம் சரணம். முடிவும் முதலும் ஆனவளே; முடிவும் முதலும் அற்றவளே சரணம் சரணம். அழகிய கிளியே சரணம் சரணம். என்றும் குறையாத ஒளிக்கூட்டமே சரணம்.
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
உன்னுடைய நீலத் திருமேனியையே தியானித்து மற்ற நினைவுகளே இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரியே என் முன் வருவாய் வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
--
3. 🍀#முத்து🍀
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முப்பெரும் தேவர்களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களும் குறைவறச் செய்யும் வண்ணம் அவர்களுக்கு அருளும் முதல்வியே சரணம். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் விதையானவளே; அந்த விதையிலிருந்து விளைந்த எல்லாமும் எல்லாரும் ஆனவளே; சரணம் சரணம். வேதங்களின் முடிவான வேதாந்தமாம் உபநிடதங்களில் நிலைத்து வாழ்பவளே.
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
உன்னிடம் தஞ்சம் என்று அடைந்த நான் உன் மகன்; நீ என் தாய். என்றும் அழியாத வரத்தை எனக்கருளவே வருவாய். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் நான் அங்கும் இங்குமாக அலையும் வாழ்வை அடையாமல் என்றும் அழியாத வாழ்வை அருள்வாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

தத்தேறிய நான் - உன்னிடம் தத்தாக வந்த நான்; தஞ்சமாக வந்த நான்.
--
4. 🍀#பவளம்🍀
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அந்தி வானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. சிந்தை நிரம்பும்படி, மகிழும் படி வளம் பொழிந்து இந்த உலகத்தை (பாரை) ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ? அன்னையே! என் தந்தையாம் இறைவரின் இடப்பாகத்திலும் அவர் தம் மனத்திலும் / என் மனத்திலும் இருப்பாள்.
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
அவளை எப்போதும் எண்ணுபவர்க்களுக்கு என்றும் அருளும் எண்ணம் மிகுதியாகக் கொண்டாள். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளாவாள். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
--
5. 🍀#மாணிக்கம்🍀
காணக் கிடையா கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எளிதில் காணக்கிடைக்காத நற்கதியானவளே! எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலை வடிவானவளே! அணிவதற்கு அரிதான அழகு அணியானவளே! கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே!
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
இவற்றை எல்லாம் செய்ய முயன்று முடியாமல் தம் குறைப்பாட்டை எண்ணி நாணி உன் திருநாமங்களையும் உன் துதிகளையும் யார் நவிலவில்லையோ அவர்களை நாடாதவளே! மாணிக்கத்தின் ஒளிக்கதிரானவளே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
--
6. 🍀#மரகதம்🍀
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பச்சை மரகத உருவையுடையவளே சரணம் சரணம். தேன் பொழியும் திருவடிகளை உடையவளே சரணம் சரணம். தேவர் தலைவன் உன் பாதங்களைப் பணிய திகழ்ந்திருப்பாய் சரணம் சரணம். சுதி, ஜதி, லயம் போன்ற இசை உறுப்புகளாய் இசைவடிவானவளே சரணம்.
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
ஹர ஹர சிவ என்று அடியவர் பாடிக் கொண்டு குழும அவர்கள் இறைவரின் அருள் பெறும் படி அருள் புரியும் அமுதமானவளே சரணம். ஒன்பது வித செல்வங்களானவளே சரணம் சரணம். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
--
7. 🍀#கோமேதகம்🍀
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பூமியில் பிறந்த நான் புரியும் எல்லா செயல்களும் எந்த வித குறைகளும் இல்லாமல் எல்லா பயன்களும் குறைவின்றி கிடைக்கும் வரமும், தியிலிட்டுப் பொசுக்கினாலும் 'ஜெய சக்தி' என்று உன் அருளில் உறுதி கொண்டு அடியேன் சொல்லும் வீரமும், தாயே நீ வந்து தருவாய்.
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
மோமேதகமே! குளிர் வான் நிலவே! குழலைப் போல் இனிய வாய்மொழியைக் கொண்டவளே! மாமேரு மலையில் வாழும் கிளியே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
--
🍀8. #பத்மராகம்🍀 (புஷ்பராகம் )

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இன்பம் அருள்பவளே! இன்ப வடிவே! அழகிய கண்கள் உடையவளே! பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே! அம்மா! நிலையில்லா மன நோய்களை நீக்குபவளே!
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
அனைத்துக் கலைகளையும் அறிந்தவளே! சம்புவின் சக்தியே! நிலவை அணிந்தவளே! தலைவியே! கருநிறத் திருமேனியைக் கொண்டவளே! எல்லா வித அணிகலன்களும் அணிந்திருப்பவளே! மரணமிலா பெருவாழ்வின் உருவே! என்றும் மங்கலகரமானவளே! அழகிய மேருமலை சிகரத்தில் நிலைத்து வசிப்பவளே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
--
🍀9. #வைடூர்யம்🍀
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நான் செய்த முன்வினைப்பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும் படி அறையும் பறை போன்றவை உலக இன்ப துன்பங்கள். இப்படி வினை வயப்பட்டு இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு மானைப் போல் என் மனம் நிலையற்று எளியேன் அழிந்துப் போகலாமோ? இது தகுமோ? இவையெல்லாம் தூளாகப் போகும் படி வரம் தருவாய்.
(திருநெறிய தமிழேசை -சைவமும் தமிழும்)
அலைவற்று அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியார்களின் திருமுடியில் வாழும் வைடூரியமே! மலையத்துவச பாண்டியன் மகளே! மீனாட்சியே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
--
#பயன்
எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வா ரவரே.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

🍀#தொகுப்பு :  #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

#ஸ்ரீ_காலபைரவாஷ்டகம் :

#ஸ்ரீ_காலபைரவாஷ்டகம் :

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸுத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்/
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( தேவேந்திரனால் வணங்கப்படுபவரும் புனிதமான திருவடித் தாமரையை உடையவரும் அரவத்தை பூணூலாக அணிந்தவரும் சந்திரனை சிரசில் சூடிக் கொண்டவரும் கருணையுள்ளவரும் நாரதர் முதலான யோகிகளால் வணங்கப்படுபவரும் திசைகளையே ஆடையாக தரித்தவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்/
காலகால மம்புஜாக்ஷ மஸ்தஸுன்மக்ஷரம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலில் இருந்து கரையேற்றுபவரும் முதல்வரும் நீலகண்டத்தை உடையவரும் அடியவர்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் மூன்று கண்களைக் கொண்டு காலனுக்கு காலனாக விளங்குபவரும் தாமரைமலரை போன்ற கண்களை உடையவரும் சொக்கட்டான் விளையாடுவதில் சூரரும் குறைவற்றவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

ஸூலடங்க பாஸ தண்ட பாணிமாதி காரணம்
ஸ்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்/
பீம விக்ரமம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( சூலம் மழு பாசம் தண்டம் இவைகளில் கையில் ஏந்தியவரும் முதல் காரணரும் கரிய திருமேனியைக் கொண்டவரும் முதல் கடவுளும் அழிவற்றவரும் பிணியற்றவரும் பயமுறுத்தும் பராக்கிரம் வாய்ந்தவரும் முக்திச் செல்வரும் அற்புத ஆட்டங்களில் ஆவல் கொண்டவரும் ஆன காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

பக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்/
நிக்வணந் மநோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( போகம் மோட்சம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றவரும் அழகிய வடிவமுடையவரும் அடியவர்களிடம் அன்புள்ளவரும் காக்கும் கடவுளாக இருப்பவரும் எல்லா உலகங்களையும் தன் வடிவமாக கொண்டவரும் நன்கு ஒலி எழுப்பும் மனதை கவரும் சலங்கைகளால் பிரகாசிக்கும் இடையை உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

தர்மஸேது பாலகம் த்வதர்ம மார்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுஸர்ம தாயகம் விபும்/
ஸ்வர்ண வர்ண கேஸபாஸ ஸோபிதாங்க நிர்மலம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( தர்மம் ஆகிய அணையை பாதுகாப்பவரும் அதர்ம வழியை அழிப்பவரும் கர்மமயமான மலங்களை போக்குபவரும் நற்சுகம் அளிப்பவரும் எங்கும் நிறைந்தவரும் பொன்மயமான சடைகற்றைகளால் ஆன திருமேனியைக் கொண்டவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
நித்யமத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்/
ம்ருத்யு தர்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( ரத்ன பாதுகைகளால் அழகுபெற்று ஒளிரும் இரு திருவடிகளை உடையவரும் நித்யரும் இரண்டற்றவரும் இஷ்டதெய்வமாக உள்ளவரும் குற்றமற்றவரும் மறிலியின் கர்வத்தை அடக்குபவரும் கூரிய அகன்ற பற்களினால் பயமுற செய்பவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

அட்டஹாஸபின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ர ஸாஸனம்/
அஷ்டஸித்தி தாயகம் கபாலமாலி காதரம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( அட்டகாசமான ஒலியுடன் தாமரை மலரில் தோன்றிய அண்டகோசங்களாக விளங்குபவரும் கண்விழிகளால் பாபக் குவியல்களை அழிப்பவரும் பாவம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை தருபவரும் அஷ்ட சித்திகளை அள்ளித் தருபவரும் கபால மாலைகளுடன் விளங்கும் கழுத்தினை உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

பூதஸங்க நாயகம் விஸாலகீர்த்தி தாயகம்
காஸிவாஸிலோக புண்யபாப ஸோதகம் விபும்/
நீதிமார்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஸிகாபுராதி நாத காலபைரவம் பஜே//

( பூதகண கூட்டங்களுக்கு தலைவராக இருப்பவரும் விரிந்த புகழை அளிப்பவரும் காசியம்பதியில் வசித்து வரும் மக்களின் பாவ புண்ணியங்களை பரிசோதிப்பவரும் எங்கும் நிறைந்தவரும் நீதி வழியில் கை தேர்ந்தவரும் பழமை வாய்ந்தவரும் உலகை காக்க வந்த கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் காலபைரவ மூர்த்தியை வழிபடுகின்றேன் )

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதன கம்விஸித்ர புண்ய வர்த்தனம்/
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப நாஸனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்//

- இதி ஸ்ரீ காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் -

( மனதிற்கு குதூகலத்தையும் ஞானம் முக்தி சாதகத்தையும் பலவகைப்பட்ட புண்ணிய விருத்திகளையும் வருத்தம் மயக்கம் ஏழ்மை பேராசை கோபம் தாபம் ஆகியவற்றின் நீக்கங்களையும் அளிக்கவல்லதாகிய இந்த காலபைரவ அஷ்டகத்தை பக்தி சிரத்தையோடு படிப்பவர்கள் காலபைரவ மூர்த்தியின் திருவருளை பெறுகின்றார்கள் )

- காலபைரவ அஷ்டகம் நிறைவுற்றது -

#கணேச_பஞ்சரத்னம்

#கணேச_பஞ்சரத்னம்

1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.

மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக்காப்பவர்.

2.நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிரளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங் களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

3.ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொருமையானவர். மகிழ்ச்சி, தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.

4.அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்

ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர்.பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

5.நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

6.மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்

.....கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம்

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவன் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறானோ, அவன் நோயின்றி
குறை யேதுமின்றி,
நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.


Thursday, 31 May 2018

ஸ்ரீ_லலிதா_பஞ்சரத்னம்

☘#ஸ்ரீ_லலிதா_பஞ்சரத்னம்☘


1.ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்!
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம்

காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.

2.ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்!
மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்
புண்ட்ரேஷசாபகுஸுமேஷ
ஸ்ருணீர்ததாநாம்!!

காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும்
துளிர் போன்ற
விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.

3.ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம்
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்!
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்ச
நாட்யம் II

பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.

4.ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்!
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II

உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்

5.ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II

ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.

6.ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர் வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.

ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் முற்றிற்று.

☘#தொகுப்பு  :  #திருமதி #லதா_வெங்கடேஷ்வரன். ☘

Monday, 28 May 2018

தசாவதாரம்

☘#தசாவதாரம்☘

☘10 வது அவதாரம்
கல்கி அவதாரம்...☘

பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும்.

கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள்.

கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டாணம் அற்றுப் போவதால் வீடுகள் சூன்யப் பிரதேசம் ஆகும். மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் என ஆவார்கள். இப்படிக் கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார்.

சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.

அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.

அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.

சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும்.

ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் - 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் - 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் - 8, 64, 000 வருடங்களும், கலியுகம் - 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும்.

கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கல்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.) 60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.

 ◆ யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்.
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்.
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்.

சர்வம் ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பனம்..

தசாவதாரம் முற்றிற்று....

தசாவதாரம்

☘#தசாவதாரம் ☘

 ☘9 வது அவதாரம்
கிருஷ்ண அவதாரம்☘

அசுரர்களின் அக்கிரம செயலால் பாவங்கள் அதிகரித்து பாரம் தாங்காமல் பூமாதேவி பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டாள். அதற்கு பிரம்மாவோ, சிவன் மற்றும் தேவர்களையும் அழைத்து கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.

மகாவிஷ்ணுவும் அவர்கள் குறையை தீர்த்து வைப்பதாக கூறினார்.

யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனனின் மகன் கம்சன். இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். இவனுக்கு கம்சை, தேவகி என இரண்டு சகோதரிகள். இதில் தேவகி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான் கம்சன். தேவகியை, சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

இவர்கள் இருவரையும், கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற போது, தீடிரென ஆகாயத்தில் இருந்து அசரீரி ஒன்று, ''கம்சா, தேவகியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய்'' என்று கூறியது.

இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட, வசுதேவர் தடுத்து, ''இவளால் உனது உயிருக்கு பிரச்சினை இல்லையே. எனவே இவளை விட்டு விடு.
இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு''. என்று கூற, அதனை ஏற்று தேவகியை உயிருடன் விட்டான். எனினும் அவர்கள் இருவரையும் சிறையுள் வைத்திருந்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.

எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.

தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். எட்டாவது குழந்தையாக அவதரித்தார் மகாவிஷ்ணு.

அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.

கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. ''கம்சா!, நீ என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்''. என்று கூறி மறைந்தது.

கோகுலத்தில் பலராமனும், கிருஷ்னனும் ஒன்றாகவே வளர்ந்து கன்றுகளை மேய்த்து வந்தனர்.

கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை.
கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின.

ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான்.

இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமன், கிருஷ்ணன் இருவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் இருவரும் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத முயன்றான்.

இறுதியில் கிருஷ்ணன், கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான.

பின்னர் பலராமனும், கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய், தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.

இருவருக்கும் சாந்தீப முனிவர் கல்வி போதித்து வந்தார். குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை மீட்டு கொடுத்தார்கள்.

கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தினையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீண்டும் மீண்டும் வந்தான்.

யாதவ குலத்தினை காக்க, விஸ்வகர்மா மூலமாக துவாரகை எனும் பெரும் பட்டணத்தை நிருமானித்து அதில் யாதவர்களை குடியேற செய்தான் கிருஷ்ணன்.

விதர்ப்பராஜாவின் மகளான ருக்மிணி, தனது தந்தை தன்னை சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயத்திருப்பதனை அறிந்து, தன்னை காப்பாற்றும் மாறு கிருஷ்ணனிடம் தகவல் அனுப்ப அவளை மீட்டு பின்னர் மணந்து கொண்டான்.

உறவினரான குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார்.

அவளது பிள்ளைகளான பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும், துரியோதனன் வஞ்சகமாக, சூதாட்டம் மூலம் பறித்து கொண்டு, அவர்கள் மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.

அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு, நகரங்கள் எல்லாவற்றையும் திருப்பி கொடுப்பதாக சொன்ன  துரியோதனன் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக பேசினான்.

இதனால் பாரத போர் மூண்டது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து போரை நடத்தினான். ஒரு சமயம் தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, தன் விசுவரூபம் காட்டி பகவத் கீதையை உபதேசித்தார்.

பாரத போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்தனர்.

அதே வேளையில் துவாரகையில், கிருஷ்ணன், பலராமன் இருப்பதனால் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என யாதவர்கள் இறுமாப்பு அடைந்து பெரும் அக்கிரமங்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன், பலராமன் கூட அவர்களை அடக்க பெரும் சிரமப்பட்டனர்.

ஒருசமயம் துவாரகை வந்த முனிவர்கள் சிலரை ஏளனம் செய்து, ஒரு ஆடவனை கர்ப்பவதி போல காட்டி இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் 'இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே உங்கள் குலத்தினையே அழிக்கும்''. என சாபமிட்டனர்.

முனிவர்கள் கூறியவாறே இரும்பு உலக்கை அவன் வயிற்றில் இருப்பதை கண்டு பயந்து அதனை பொடிப் பொடியாக்கி கடல் நீரில் கரைத்தனர். எஞ்சிய சிறிய துண்டையும் நீரில் எறிந்தனர். அந்த துண்டை மீன் ஒன்று விழுங்கி விட்டது.

அந்த மீன் ஒரு மீனவன் கையில் சிக்கி விட்டது. மீனை வெட்டும் போது அதன் வயிற்றில் இருந்த இரும்பை வீசி எறிய அது ஒரு வேடன் கையில் கிடைத்தது. அதனை அவன் ஒரு அம்பு நுனியில் பொருத்தினான்.

கடல் நீரில் கரைந்த பொடிகள், கரையில் இரும்பு கோரைப் புற்களாக வளர்ந்து இருந்தன. ஒரு சமயத்தில் பெரும் போதை மயக்கத்தில் இருந்த யாதவர்கள் கோரைகளை பிடுங்கி தமக்கிடையே சண்டை இட்டு இறந்து போயினர். பலராமனும் அக்கடற்கரையினில் அமர்ந்து தன் சரீரத்தினை விடுத்தது வைகுண்டம் சென்றார்.

வேடன் மிருகம் ஒன்றுக்காக எய்த அம்பு பட்டு கிருஷ்ணன் தனது அவதாரப் பணியை முடித்து வைகுண்டம் சென்றார்...

இது தான் பெருமாளின் 9 வது அவதாரமான கிருஷ்ண அவதாரம் பற்றியது...

திருமாலின் 10 வது அவதாரம்... கல்கி அவதாரம்...  நாளை தொடரும்...........

தசாவதாரம்

☘#தசாவதாரம்☘

☘8 வது அவதாரம்
பலராமன் அவதாரம்..☘

பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்:

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார்.

அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர்.

 சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான்.

ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான்.

 அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர் பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டான்.
தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும்..நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர்.

நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான்.

அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான்.

 இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான். இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாடினார்கள். எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் பாடுவான். எல்லாரும் வில்வப்பழம் பறித்துப் பந்தாடுவார்கள். இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டான். கண்ணன் தன் சகாக்களை அழைத்துச் சொன்னான். நண்பர்களே! நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். ஒரு பந்தயம் கட்டி விளையாடுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். எல்லாரும் ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் ஓடிப் பிடித்த விளையாடினர். ஓடி விளையாடிய ஓட்டப் பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். அப்படி ஓடியவன், ஓர் எல்லைக்குள் வந்து அவனை இறக்கிவிட வேண்டியவன், பலராமனைக் கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் தொப் என்று கீழே போட்டான். தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். உடனே பலராமன் எகிறிக் குதித்து விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் நச் என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான். ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

மகாபாரதத்தில் பலராமன்: பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும், இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான்.

இந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி துவராரகைக்கு வரும் வழியில் துர்சகுனங்கள் தோன்றின. அவைகளைப் பொருட்படுத்தாமல் அவன் பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் இது பற்றித் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். அத்துடன், வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்றும் பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான். அப்போது கிருஷ்ணன், அண்ணா! தர்மத்தைப் பரிபாலிக்க சிம்மாசனமும் செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தைப் பரிபாலிக்காமல் கைவிட்டால் தர்மம் எப்படித் தழைத்து ஓங்கும்? நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்குக் கொண்டு வர வேண்டியவனாக இருக்கிறேன்.

முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நாம் எல்லோரும் அன்று அந்தி சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தைச் சுற்றி வந்தோம். அப்போது அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கண்ட சுபத்திரை அவர்கள் விளையாட்டின் விந்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். அப்போது நீ என்ன சொன்னாய்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ ஒன்றிரண்டு ஞாபத்திற்கு வருகிறது. இருந்தாலும் நான் என்ன சொன்னேன் என்பதை இப்போது நீதான் நினைவுபடுத்துவதில் என்ன தவறு? சும்மா சொல் என்றான் பலராமன். கிருஷ்ணன் தொடர்ந்து சொன்னான்,

அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்குக் கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.

அதைக் கேட்ட பலராமன், கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான். உடனே கிருஷ்ணன் சொன்னான்: அண்ணா! இனி உங்கள் இஷ்டம். அண்ணியும் இதற்கு சம்பதிக்கிறாள் என்னும் போது நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் பயன் இல்லை. எல்லாம் பகவத் சங்கற்பம் போல் நடக்கும் என்பதை மறந்துவிடாதே! என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் அந்தப்புரத்திற்குப் போய்விட்டான்.

சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அஸ்தினாபுரத்திற்குத் திரும்பி, நடந்த விவரங்களை துரியோதனிடம் சொன்னான் சகுனி. முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான்.

செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர். செல்லும் வழியில் கடோத்கஜன் அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் பராசக்தியின் கருணையால் கிடைத்த அமுத கலசத்தினால் அபிமன்யு உயிர் பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! நீங்கள் இரண்டு பேரும் என் அரிய பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி அபிமன்யூ-வத்ஸலா திருமணம் நடைபெற்றுவிடும். எனினும் அதை நீங்கள் தான் முன்னின்று செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்றார்.

 அவர்கள் தங்கள் கட்டளையை சிரம்மேல் தாங்கி செய்கிறோம்! என்று சொன்னார்கள். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் அருமைக் குழந்தை வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அண்ணா அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம் போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார்.

வாசுதேவர் கூறியபடி காரியங்களை நிறை வேற்றி விட முனைந்தனர். துரியோதனன் அவன் பட்ட மகிஷி பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் தாதியரைக் கண்டு, அவர்களைப் போல மாற்றுருக் கொண்டு நேரே பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அங்கு அவளைத் தட்டி எழுப்பினார்கள்.

அம்மா எஜமானி! நாங்கள் கௌரவ பட்டத்தரசி பானுமதி தேவியின் தாதிகள். அம்மா இதோ ஒரு சில நகைகளைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இதை பெண்ணுக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச் செய்து கல்யாண சாபக் கிரியத் திரவியத்திற்கும் தேவ துந்துபி முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார்.

அங்கே தன் தங்கை சுபத்திரா, மருமகன் அபிமன்யூ மற்றும் புதுப்பெண் வத்ஸலாவையும் கண்டு குசலம் விசாரித்தான் பகவான். பின்பு ஒரு சில நொடிகளில் வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார்.

பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமரிசையாக அழைத்து வந்தான். இவ்வாறு பலராமன் மகள் வத்ஸலா திருமணம் இனிதே நிறைவேறியது. இந்த வத்ஸலா திருமணக் கதையை கேட்போர், படிப்போர் அனைவருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும் சர்வமங்களமும் கிடைக்கும்.

சாம்பன்-லட்சுமளை திருமணம்: துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன். துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் படையுடன் அவனைத் துரத்தி வந்தார்கள். பின் அவனுடன் யுத்தம் செய்தனர்.

சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனைச் சிறைப் படுத்தினார்கள். இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் உத்தரவோடு அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! என்ன காரியம் செய்தாய்? தனி ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? நமக்குள் விரோதம் வேண்டாம் என்று நான் எத்தனையோ தடவை எடுத்து சொல்லியும் நீ பகைமைபாராட்டுகிறாய். ஆக நீ சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்து கொடு! என்று பலராமன் சொன்னான்.

அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களோடு சண்டை போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதோ பார் க்ஷண நேரத்தில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் பார்! என்று சொல்லித் தான். நொடிப் பொழுதில் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நகரம் மூழ்கிப் போகும் என்ற பயம் தோன்றியது.

உடனே துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படிவேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான். அவ்வாறு துரியோதனன் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்ததும் தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமன் நிலைப்படுத்தினான்.

இது தான் பெருமாளின் 8 வது அவதாரமான பலராமன் அவதாரம் பற்றியது...

திருமாலின் 9 வது அவதாரம்... கிருஷ்ண அவதாரம்... நாளை தொடரும்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...