Saturday, 12 May 2018

பஜகோவிந்தம்


🍀#ஆதிசங்கர்_பகவத்_பாதரால் #இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை #தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  30
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம்
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம்
குர்வவதானம் மஹதவதானம்

🍀#ஸாரம்:🍀
*************
ப்ராணாயமம் செய்தல், இந்திரிய அடக்கம் கொள்தல், நித்திய அனித்திய வஸ்துக்களை வகைதிரித்து ஆறிதல், ஜபம்செய்து மனதை அடக்குதல்  இத்யாதிகளை மிக கவனமாக செய்.

🍀#விளக்கம்:🍀
****************
நல்லது கெட்டதுகளை சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும் தந்து, ஆத்ம விசாரம் செய்து கடைத்தேறு என்று சொன்னால் மட்டும் போதுமா?  ஆத்மவிசரம் எப்படி செய்யவேண்டும்?  ஆத்விசரத்திர்க்கு க்குன்னோடியாக நாம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாதன் விஷயங்களை அடுத்துரைத்ததொடு நில்லாமல், ஆத்கஞாந்த்திர்க்கு என்ன வழி என்றும் தெள்ள தெளிய தருகிறார்.

 ப்ராணாயமத்தால் விசாங்களை அடக்குவதும் (மனோ நியந்த்றணம்), ப்ரத்யாகாரத்தால் இந்திரியங்களை அட்க்குவதும் (உடலுருப்புகளை), நல்லது கெட்டது என வகைதிரித்தறிவதினால் விவேகம்டைவதும் (புத்தி ஸுக்ஷ்மதை), ஜபம் மூலம் ஏகாக்ரசித்த்த்துடன் இருப்பதும் (தியானம்) கடைசியில் ஆத்மஸாக்ஷாத்க்காரம் எனும் ஸமாதி நிலையில் கொண்டு சேர்க்கும்.  தியானம் நிலையாக எப்பொழுதும் இருப்பது ஸமாதி நிலை.  இந்த வழியை மிக கவனமாகவும் கருத்துடனும் செய்யவேண்டும்

🍀#தொகுப்பு  :  #🍀
திருமதி_லதா #வெங்கடேஷ்வரன் 🍀

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜகோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம்🍀 :  29
******************
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

🍀#ஸாரம்:🍀
**********
ஸொத்து (இருப்பது) நல்லதல்ல. இதை எப்பொழுதும் நினை. அதிலிருந்து ஸுகம் கிடைப்பதில்லை, இதுதான் சத்தியம்.   தன்வான்கள் தங்கள்புத்திரர்களால் பீதி அடைகிறார்கள். இதுதான் உலகத்தில் உள்ள நியதி.

🍀#விளக்கம்🍀:
**************
என்ன ஒரு ங்க்னகான சத்தியம்!  ஸொத்திருந்தால் குடவே பயம் வரும்.  அதை கட்டிக்காக்க வேண்டும்.  யாரும் திருடக்கூடாது.  அது குறையாமல் இருக்க வேண்டும் என்ற பேராசை வரும்.  அதிலிருந்து ஏக்கம், பயம், அனுமித்தனம் முதலிய குணங்கள் வந்து சேரும். 

மன நிம்மதி இராது.  ஸொத்திருந்தால் ஸுகம் வரும் என்று இப்போ சொல்ல முடியுமா?  இல்லை.  துக்கம் தான் வரும் இல்லயா?  தன்வான்கள் தங்கள் பிள்ளைகளையே பயப்பட வேண்டியதாகும். ஏனென்றால் அவர்களுக்கு தனம் தரவில்ல்யேல் அவ்ர்கள் தொல்லை செய்வார்கள், சண்டை சச்சரவு எழும்.  அவர்களுக்குள் மோதல் வரும்.   கூடாது அவர்களிடமிருந்து தன்வான்களுக்கு மரணபயம் கூட வரும். 

இதை நாம் பத்திரிகை வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொண்டுள்ளோம்.  "பணம் ஆளை கொல்லும்" என்ற பழமொழி சரியாகிவிட்டது.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்..................🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் 🍀

பஜகோவிந்தம்


🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்_பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம்🍀 :  28
*******************
ஸுகத: க்ரியதே ராமாபோக:
பச்சாத்தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
தத்பி ந முஞ்ஞ்தி பாபா சரணம்

🍀#ஸாரம்:🍀
***********
இந்திரிய ஸுகத்தை நாடுகிறோம்.  அதன் விளைவாக உடல் ரோகத்தில் தத்த்ளிக்கிறது, மரணம்தான் எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி என்று அறிந்தும், (மனிதன்) பாப செயக்ளிலிருந்து விலகுவதில்லை.

#🍀விளக்கம்🍀:
**************
அஹோ என்ன பரிதாபநிலை! மனிதன் இந்திரியத்தால் கிடைக்கும் ஸுகங்களை அனுபவிக்கிறான்.  அதன் விளைவாக உடல் நலமற்று வியாதியில் உழலுகிறான்.  மரணம் இந்த உலக வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி என தெரிந்தும், தான்செய்யும் பாபச்செயல்களிலிருந்து  விலகுவதில்லை. 

இதை என்னவென்று சொல்வது.  அஞ்ஞானம் என்றல்லாமல் வேறென்ன? ஒருபுறம் ஆத்மஞாந்த்திர்க்கு வழிகாட்டி இன்னொருபுறம் உலக் வாழ்க்கை தரத்தை சுட்டிக்காட்டுவதிலிருந்து ந்மக்கு நல்வஷி ஏது, ஆபத்தான வழி ஏது என்று இரண்டையும் எடுத்துரைக்கிறார் குருநாதர். 

மனித இயல்பு என்ன, அதை எப்படி ந்ல்வழியில் திருப்பவேண்டும் என இரண்டு பக்கத்தையும் புரட்டி பார்த்த பலன் கிடைக்கிறது.

#பஜகோவிந்தம் #தொடரும்...............

#தொகுப்பு :  #திருமதி_லதாவெங்கடேஷ்வரன்.

பஜகோவிந்தம்


🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜகோவிந்தம்🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :   27
*******************
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

🍀#ஸாரம்:🍀
***********
(பகவத்) கீதையை படி, (கீதாசார்யனின்) 1000 நாமத்தை சொல், லக்ஷ்மீபதியிலன் (விஷ்ணுவின்) ரூபத்தை மனதில் தியான்ம் செய், ஸத்துக்களுடன் (ஸஜ்ஜனங்களுட்ன்) கூட்டுறவு கொள், தீனஜன்ங்களூக்கு தனத்தை தானம் செய்.

🍀#விளக்கம்:🍀
**************
நம் ஆசாபாசத்தையும் துர்குணங்களையும் விட்டால் மட்டும் போதாது, ந்ல்ல காரியத்தில் ஈடுபடவேண்டும்.  அவை ஏவை? கீதை என்பதை ஸகல சாஸ்திரங்கள் என கொண்டு சாஸ்த்ர படனம் என இதர்க்கு அர்த்தம் கோள்ளவேண்டும்.  பகவான் நாமாவை உச்சரிப்பது.

பூசை செய்தல் என விஸ்தாரமாக எடுத்து கொள்ளவேண்டும். மந்தில் இறைவன் ஸ்வரூபம் காணுதல் தியானம் என கொள்ளவேண்டும். பிறகு ஸத்ஸ்ஸங்கம், தான தர்மாதிகள் செய்வது என இப்படி உட்ல், மனம், புத்தி மூன்றையும் நல் வழியில் செலுத்தல் வேண்டும். 

அதர்க்கு, பாராயணம், ஜபம், சத்ஸ்சங்கம், தந்தர்மாதிகள் என அழி வகுத்திருக்கிறார்கள் பெர்டியோர்கள்.  இப்படி செய்யும்போது, அஹ்ம்காரம், மமாகாரம் போய், எல்லொரும் ஒன்றே என்ற பாவம் வரும்.  இது ஆத்ம சிந்தனைக்கு உதவியாக அமையும்.

🍀#பஜகோவிந்தம்_
#தொடரும் .............  🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன். 🍀

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்.🍀

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம் 🍀 :   26
**************
காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா த்மானம் பாவய கோSஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே ந்ரக நிகூடா:

🍀#ஸாரம்:🍀
*********
காமம், க்ரோதம், லோபம், மோஹம் முதலிய (துர்குணங்களை) குணங்களை விட்டு உன்னுள் "நான் யார்" என்று விசரம் கொள். ஆத்மஞானம் இல்லாதவர்க்ள் மூடர்கள், அவர்க்ள் இவ் வுலகிலேயே ந்ரகவேதனைக்குள்ளாவார்கள்.

🍀#விளக்கம்:🍀
**************
ந்ம்மை ந்யிப்பது காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யம் என்ற 6 துர்குணங்கள்.  காமம் என்பது கீழ்த்தர ஆசை (EGOCENTRIC DESIRE), க்ரோதம் என்றால் கோபம் (ANGER), லோபம் என்பது கஞ்சத்தனம் (GREED),  மோஹம் என்பது அஞ்ஞானம் (DELUSION), மதம் என்றால் கர்வம் (SELF CONCEIT), மாத்ஸர்யம் என்பது விரோதம் (ENMITY)/ இப்படிப்பட்ட் துகுணங்கள் நம்மை ஆட்டி படைப்பதால் நாம் நம் சுய நிலையை மறந்து உலகத்தில் ஸுக துக்கதிகளில் நலிந்து நரகவேதனை படுகிறோம். 

இதிலிருந்து விமுக்தி வேண்டுமானால், இந்த குணங்களை விட்டு, முதலில் நான் யார் என்|ற் ய்ண்மையை அறியவேண்டும்.  அப்படி ஆத்ம ஞானம் அடையாதவர்கள் இந்த் உலகிலேயே ந்ரகவேதனை பட்டு உழ்லுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறார்.

 இப்படி அஞ்ஞானத்தில் மூழ்கி இந்த ஸமஸார ஸாகரத்தில் பல கஷ்டங்களும் படுபவர்கள் ஞனம் பெ|றாதவர்கள்.  இதிலிருந்து தப்ப, நம்முள் நான் யார் என்ற சிந்தனையில் மூழ்கி ஆத்மஸ்வரூப ஞானம் பெறவேண்டும்.. இதை ஸ்ரீ ரமண மஹருஷி "உன்னை நீயே உணர்ந்துகொள்" என சொல்லியிருக்கிறார்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்............🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன். 🍀

Friday, 11 May 2018

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்🍀 -

🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀

🍀#காவியம் : 🍀  25
*******************
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மாகுரு யத்னம் விக்ரஹஸந்தௌ
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ஞஸ்ய சிராததி விஷ்ணுத்வம்

🍀#ஸாரம்:🍀
***********
சத்ருக்களுடனும் மித்ரர்களிடமும், புத்திரனிடமும் பந்துக்களிடமும் (மற்றெல்லாரிடமும்) சத்ருதயோ, சினேகமோ கொள்ளாதே.  (உனக்கு) அதிவேகம் விஷ்ணுபதம் (ப்ரஹ்மதவம் அல்லது ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்) கிடைக்க வேண்டுமானால், எல்லவற்றிலும் இறைவனை காணும் ஸமபாவனை நிலையை அடைவாயாக.

🍀#விளக்கம்:🍀
**************
ஸத்திய நிலை பெற, ஆசாபாசத்தை விட்டால் மட்டும் போதாது, ஈல்லாற்றிலும் ஏக சக்தியாக விளங்கும் அந்த பரமாதம தத்துவத்தை உணரவேண்டும்.  இதற்க்கு சத்ருத்வம், மைத்ரி, ஸுகம், துக்கம், நான், நீ முதலிய த்வந்த்வ பாவம் போய எல்லாம் ப்ரஹ்ம மயம் என்ற ஸமபாவம் வரவேண்டும்.

அதத்தான் இங்கு வலியுறுத்துகிறார்.  இங்கு சத்ருக்கள், மித்ரர், புத்திரன், பந்துக்கள் என்று மட்டும் சொல்லவில்லை.  இப்படி சொல்வதிலிருந்து, எல்லா ஜீவராசிகளும் உள்படும்.  உதாரணத்திர்க்காக  இவை நாலை மட்டும் குறிப்பிடுகிறார்.  இதில் எல்லா வித பந்தங்களும் அடங்கிவிட்டன.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்...............🍀

🍀#தொகுப்பு :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் 🍀

பஜகோவிந்தம்

Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀

🍀#வாழ்க்கை_தத்துவம்🍀

🍀#காவியம்🍀 :  24
*******************
த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணூ:
ஸர்வஸ்மின் அபி ப்ச்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்

🍀#ஸாரம்:🍀
**********
உன்னிலும், என்னிலும், எலலாற்றிலும் ஒரே சக்தியாக விஷ்ணு (இறைவன்) வீற்றிருக்கிறார்.  பொறுமையிழந்து நீ எனனிடம் கோபம் கொள்கிறாய். எல்லாற்றிலும், எல்லோரிலும் நீ அந்த இறைவனை (SELF).பாற்.  வ்ய்கதி பேதங்களை உருவக்கும் அந்த அஞ்ஞானத்தை துற

#🍀விளக்கம்:🍀
**************
ஸமபாவனை வருவத்ர்க்கு வஷி காட்டுகிறார்.  நாம் எல்லோரிலும், உலகிலுள்ளா எல்லா வஸ்துக்களிலும் உயிராக ஓர்சக்தி திகழ்கிறது. அதைத்தான் இறைவன் என கூறுகிறோம்.  அப்ப்டியானால் ஒருவன் மற்றொருவன் பால் காண்பிக்கும் க்ரோதம் (கோப்ம்) சரியல்லவே.  கோபம் ஏன் வருகிறது?  பொறுமை இல்லாததால்.  பொறுமை ஏன் இல்லாதாகிறது? நான் வேறு, நீ வேறு, மற்றவைகள் தனிதனி என அஞ்ஞானத்தால் உண்டாகும் வ்யக்தி பேதமே.

 உலகில் எல்லா வஸ்துக்களிலும்  திகழும் சக்தி (இறைவன்) ஒன்றேதான்.  அப்ப்டியானால் இந்த வ்யக்தி பேதம் ஏன் மருகிறது?  அதுதான் அஞ்ஞானம் (அறிவீனம்) எனப்படுவது.  இந்த அஞ்ஞானம் அக்ன்றால் இந்த வ்யக்தி பேதமும் அகலும்.  மேலே சொன்ன உண்மை புரியும்.  அப்படி புரிந்தால் எல்லாற்றிலும் இறைவனை காண்முடியும்.  இந்த நிலைக்கு ஸமபாவனை என பேர். 

இந்த நிலையயைத்தான் ஸ்ரீ கிருஷ்னன் யுத்த்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஞானக்கண் தந்து தன் விஸ்வரூப  தரிசனத்தில் கண்கூடாக காண்பித்தாற்.  அங்கு அர்ஜுனன் இந்த உலகம் முழுவதும், அதிலுள்ள சராசரங்கள், தான், கிருஷ்னன், ய்த்த்க்களம், அதில் நிரந்ததுநிற்க்கும் வீரர்கள் எல்லாவற்றையும் கண்டான்.  பிறகு அவனுக்கு ஞானோதயம் வந்தது.

ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்ம்மேந்த்ர ஸ்வாமிகள் தான் இயற்றிய ப்ஜனை பாடல்கள் ஒன்றில் இதை "ஸ்ர்வம் ப்ரஹ்ம மயம்" என எடுத்துரரைத்திருக்கிறார்.

அவர் பெரிய ஞானி. ஸ்ரீ தியாகராஜ ஸ்வமிகள் தன் க்ருதிகளில் இதைத்தான் "எல்லாம் ரமமயம்" என பாடினார்.  அவர் பக்திமான்.  எல்லாவற்றிலும் அவர் இறைவன் ராமனையே கண்டார். ஞான மார்கம் பக்தி மார்கம் இரண்டிலும் இதைத்தான் தந்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

🍀#பஜகோவிந்தம் #தொடரும்............🍀

🍀#தொகுப்பு  : #திருமதி #லதாவெங்கடேஷ்வரன் 🍀

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...